Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. நண்பர்களுடன் கடலில் படகு சவாரி செய்த இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கை சேர்ந்த கெனடி பிரின்ஸரன் (வயது 24) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். செம்பியன்பற்று கடலில் நண்பர்களுடன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை படகு சவாரி சென்றுள்ளார். அதன் போது படகில் இருந்து தவறி கடலினுள் விழுந்துள்ளார். அதன் போது படகின் இயந்திரத்தின் விசிறி வெட்டியுள்ளது. அத்துடன் குறித்த இளைஞன் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். சுழியோடிகள் துணையுடன் சுமார் இரண்டு மணி நேர தேடுதலின் பின்னர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட இளைஞன் மருதங்கேணி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்திய…

  2. வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் நேற்றுமாலை கரைவலை சம்மாட்டியான டொன்ஸ் என்பவரின் வலையில் பாரிய கோமராசி மீன் பிடிபட்டுள்ளது. சுமார் 8 அடி நீளம் கொண்ட குறித்த மீனை இயந்திரம் மூலம் கரைக்கு மீனவர்கள் கட்டியிழுத்தனர். கோமராசி அல்லது புள்ளிச் சுறா என அழைக்கப்படும் குறித்த மீனை வலையில் இருந்து அகற்றி மீனவர்களால் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது. வலைகளுக்கு நடுவே அதிகளவான மீன்கள் வந்த போதிலும் கோமராசி மீனின் வருகையால் மீன்கள் எதுவும் பிடிபடவில்லை சில நாட்களுக்கு முன்பு மேலும் ஒரு கோமராசி மீன் குறித்த சம்மாட்டியின் வலையில் அகப்பட்டதோடு நேற்று இரண்டாவது முறையாகவும் பிடிபட்டுள்ளது. ஆழ்கடலில் வசிக்கும் இம் மீன்கள் சில நாட்களாக கரைக்கு வந்து போவதாக…

  3. வடமராட்சியில்... வீதியில் மயங்கி விழுந்த சிறுவன், உயிரிழப்பு! யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் சிறுவன் ஒருவன் வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளான். துன்னாலை பகுதியை சேர்ந்த மகிந்தன் நிரோஜன் (வயது 08) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான். குறித்த சிறுவன் நேற்றைய தினம்(செவ்வாய்க்கிழமை) காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில், வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயம் ஒன்றின் அருகில் வீதியில் மயங்கி விழுந்துள்ளான். அதனை அவதானித்தவர்கள் சிறுவனை மீட்டு, பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதித்த போதிலும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டான் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். உடல் கூற்று பரிசோதனைக்காக சிறுவனின் சடலம் வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்…

  4. வட்டக்கச்சியில் நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டிச் சவாரி! கிளிநொச்சி மாவட்ட சவாரிச் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலில் வட்டக்கச்சி, இராமநாதபுரம், கல்மடு வர்த்தக சங்கத்தினரின் ஏற்பாட்டில் நேற்று முன் தினம் (06) வட்டக்கச்சி கலைவாணி சவாரித்திடலில் மாபெரும் சவாரிப்போட்டி நடைபெற்றது. இதன்போது 100 சோடி மாடுகள் பங்குபற்ற சவாரி போட்டியும் விறுவிறுப்பாக நடைபெற்றது. https://newuthayan.com/வட்டக்கச்சியில்-நடைபெற்/

  5. வட்டமாகச் சப்பாத்தி சுடாததால், கர்ப்பிணி மனைவியை... வயிற்றில் எட்டி உதைத்துக் கொன்ற கணவன்! வட்டமாகச் சப்பாத்தி சுடாத கர்ப்பிணி மனைவிfயை வயிற்றில் எட்டி உதைத்தும் கழுத்தை நெரித்தும் கணவன் கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு டில்லியின் ஜகன்கிர்புரி பகுதியைச் சேர்ந்தவர் சிம்ரன். 22 வயதான இவர் தனது கணவர் மற்றும் 4 வயது மகளுடன் வசித்து வந்தார். இவர் தனது கணவருடன் 5 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொள்ளாமல் ஓராண்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சிம்ரன் தற்போது மீண்டும் இரண்டாவது குழந்தைக்காக 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.வட்டமாக வராத சப்பாத்தி: இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு சிம்ரன் சப்பாத்தி செய்துள்ளார். வழக்கமாக சிம்ரனுக்கு …

  6. வட்டுக்கோட்டையில் ஐம்பொன் சிலைகள் மீட்பு 36 Views வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானை ஓடக்கரை நாகதம்பிரான் ஆலயத்துக்கு அண்மையாக உள்ள குளத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் அந்த இடத்துக்கு வந்த இராணுவத்தினர், குளத்துக்குள்ளிலிருந்து சிலைகளை மீட்டெடுத்தனர். சுமார் 68 வருடங்களுக்கு முற்பட்ட முருகன், 3 மயில்கள், கலசம் ஆகிய ஐம்பொன் சிலைகளே மீட்கப்பட்டன. அந்தக் காலப்பகுதியில் தங்கம் அதிகளவு சேர்க்கப்படுவதால் அவற்றின் தற்போதைய பெறுமதி ஒன்றரைக் கோடி ரூபாய் வரும் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. நீண்டகாலத்துக்கு முன்பு அவை புதைத்து வை…

  7. வட்டுக்கோட்டையில் வீடு உடைத்து கவரிங் நகைகளை திருடிய திருடர்கள்! யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீடொன்றினை உடைத்து உட்புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த கவரிங் நகைகளை களவாடி சென்றுள்ளனர். வீட்டில் வசிக்கும் கணவனும் மனைவியும் தமது தொழில் நிமிர்த்தம் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற சமயம் வீட்டின் கதவினை உடைத்து உட்புகுந்த திருடர்கள் வீட்டில் சல்லடை போட்டு தேடி வீட்டில் இருந்த ஒரு தொகை கவரிங் நகைகளை திருடி சென்றுள்ளனர். தமது வேலை முடிந்து வீடு திரும்பியவர்கள் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தமையை அவதனித்து உள்ளே சென்று பார்த்த போது , தமது கவரிங் நகைகள் அனைத்தும் திருட்டு போயுள்ளமையை அறிந்துள்ளனர். வீடு உடைக்…

  8. வட்டுக்கோட்டையில்... அம்பியூலன்ஸ் சாரதியை தாக்கிய, குற்றத்தில்... கைதானவருக்கு விளக்கமறியல் ! அம்பியூலன்ஸ் வண்டி சாரதியை தாக்கியவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் திடீரென சுகவீனமுற்ற நிலையில் அம்பியூலன்ஸ் வண்டி மூலம் வைத்திய சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார். அதன் போது வீதியில் அம்பியூலன்ஸ் வண்டியை இடைமறித்த அதே பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் சாரதியை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்று இருந்தார். சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதன் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இளைஞன் ஒருவரை…

  9. வட்டுக்கோட்டையில்... பசுவின் காலை துண்டாடிய, விஷமிகள். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேய்ச்சலுக்கு கட்டப்பட்டு இருந்த பசு மாடொன்றின் கால் ஒன்றினை விஷமிகள் துண்டாடியதுடன், மற்றுமொரு காலிலும் காயத்தை ஏற்படுத்தியுள்ளனர். மூளாய் , முன்கோடை பகுதியில் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தனது வாழ்வாதாரத்திற்காக பசு மாடுகளை வளர்த்து வருகின்றார். அந்நிலையில் வழமை போன்று தனது பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் பசுவை மேய்ச்சலுக்காக கட்டியுள்ளார். மாடுகளை அவிழ்க்க சென்ற போது பசுவின் கால் ஒன்று துண்டாடப்பட்ட நிலையில் மற்றுமொரு காலில் காயம் ஏற்படும் வகையில் த…

  10. வட்டுக்கோட்டையில்... வயோதிபப் பெண்ணை, வன்புணர முற்பட்ட... சிறுவன் கைது! யாழ. வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வயோதிப பெண்ணை வன்புணர முற்பட்ட குற்றத்தில் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். பொன்னாலை பகுதியை சேர்ந்த 63 வயதுடைய வயோதிப பெண்ணை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி சைக்கிளில் ஏற்றி சென்ற அப்பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் பொன்னாலை காட்டு பகுதிக்குள் குறித்த வயோதிப பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று, வன்புணர முற்பட்டுள்ளான். அதனை அடுத்து குறித்த பெண் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்ற நிலையில், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் அது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் ச…

  11. வட்டுவாகலில் தாயின் மூன்றாவது கணவரால் சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகம்! October 16, 2021 முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் உள்ள குடும்பம் ஒன்றில், தாயின் மூன்றாவது கணவரால் இரண்டு சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இச்சம்பவம் குறித்து வெளியாகிய தகவலில், வட்டுவாகல் கிராமத்தில் தாயின் மூன்றாவது கணவரால் மகள்கள் தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்துள்ளமை தொடர்பில் கிராமத்தவர்களால் சிறுவர் துஸ்பிரயோக தடுப்பு பிரிவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் காவற்துறையினர் தாயினையும் தாயின் மூன்றாவது கணவரையும் கைது செய்துள்ளார்கள். ஏற்கனவே இரண்டு கணவர்களுக்கு பிறந்த இரண்டு …

    • 2 replies
    • 618 views
  12. சீனாவின் அதிகாரி ஒருவர் தனது வீட்டின் முன்னால் உள்ள புத்தர் சிலையில் ஆபாச திரைப்பட சீடிக்களையும், பணத்தையும் பதுக்கிவைத்துள்ளார். சீனாவின் பிரதமர் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் மீது கடுமையாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் சீனாவின் மங்கோலியா உள் பகுதியை சேர்ந்த அரசு அதிகாரி வு ஷிஷோங் (63)என்ற கம்யூனிஸ்டு தலைவருக்கு 34 சொசுகு பங்காளாக்கள் இருப்பதும், அதில் ஒன்று கனடாவில் வாங்கபட்டு உள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவரை கைது செய்த பொலிசார் நடத்திய விசாரணையில், இவர் தினமும் வீட்டின் முன் பிரார்த்தனை செய்யும் புத்தர் சிலையின் அடியில் ரகசிய அறை ஒன்று அமைத்துள்ளார் என்றும் அதில் தான் ஊழல் செய்து சேர்த்த 2,000 பணக்கட்டுகள், தங்க கட்டிகள்,…

  13. வந்தாரை வாழவைக்கும் தமிழகம் மண்ணின் மைந்தர்களை வாழவைப்பது எப்போது? தொல் தமிழர்களை தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என்ற கொடுமையின் தொடர்ச்சியாக ... ... இன்று தொல் தமிழர்கள் நகரத்திற்குள் வாழ்ந்தாலே தீட்டு என்ற புதிய தீண்டாமையை புகுத்துவதா? என்று கொதிக்கும் நெஞ்சோடு தமிழர் எழுச்சி இயக்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தியது. தொல் தமிழர்கள் மீதான புதிய தீண்டாமையை உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ் மக்களிடம் பரப்பி, ஒன்றுபட்ட தமிழர் போராட்டத்தை முன்னெடுக்க உருவானதுதான் எங்கள் மண் என்ற இந்த நாடக ஆவணப்படம். இப்படம் தமிழக வரலாற்றில் மக்கள் முதலீட்டில் மக்களே நடித்து வெளியிடும் முதல் படம் என்ற சிறப்புப் பெற்றுள்ளது. இப்படம் 15-04-…

  14. வனத்துறை அதிகாரிகளைப் புலிக் கூண்டில் அடைத்த கிராம மக்கள்! கர்நாடக மாநிலத்திலுள்ள சாமராஜநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து வனத்துறை அதிகாரிகளை புலி கூண்டில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியைச் ஒட்டிய விவசாய நிலங்களில் புலிகள் நடமாட்டம் உள்ளதாகவும், கால்நடைகளை கொன்று வருவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். ஆனால் வனத்துறையினர் புலியை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்காமல், பெயளரவுக்கு கூண்டு வைத்துவிட்டு மட்டும் சென்றுவிடுவதாக தெரிவித்தனர். இந்நிலையில் அங்கு ஆய்வுக்கு சென்ற வனத்துறையினரை, கிராம மக்கள் முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர். அப்போது முறையாக பதில் அளிக்கவில்லை என தெரிவித்து, வனத்துறை அதிகாரிகள்…

  15. கனடாவில் வனவிலங்கு உயிரினங்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் வருடாந்தம் நடைபெறும் CN Tower ஏறும் நிகழ்வில் ஆயிரக்கணக்கானவர்கள் இன்று பங்கெடுத்தார்கள்.உலக வனவிலங்கு நிதியத்தின் ஏற்பாட்டில் 25வது வருடமாக நடைபெற்ற நிகழ்வில், இன்று சுமார் 6000 பேர் கலந்துகொண்டார்கள். காலை ஆறு மணிக்கு சி.என்.டவரை படிகள் மூலம் ஏறும் இந்த விழிப்புணர்வு நிகழ்வு ஆரம்பமாகியது . சி.என்.டவரின் 1776 படிகளை இவர்கள் ஏறினார்கள்.இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் சேகரித்த நிதி, வனவிலங்குகளைப் பேணும் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் எனவும், சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்பும் ஒரு செயற்பாட்டிற்காக, இன்றைய நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் பங்களிப்பதாக, வனவிலங்கியல் நிதியத்தின் தலைவரும் டொரன்டோ நகரின் முன்னாள் ம…

    • 0 replies
    • 312 views
  16. மாதுரு ஓயா தேசிய பூங்காவில் மயில் ஒன்றை வேட்டையாடி கொன்று சமைத்து உணவாக உட்கொண்ட காட்சி சமூக ஊடகங்களில் ஒன்றான யூடியூப் தளத்தில் பகிரப்பட்ட காணொளி தொடர்பில் வெளிநாட்டு பிரஜை மற்றும் நான்கு வேடுவச் சமூகத்தினர் மீது வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த காணொளி ‘கோ வித் அலி’ (Go With Ali) என்ற யூடியூப் சேனலில் பகிரப்பட்டுள்ளது. அதில் தேசிய பூங்காவிற்குள் ஒரு குழுவினர் மயில் ஒன்றை வேட்டையாடி விறகு அடுப்பில் சமைத்து உட்கொள்ளும் காட்சி காணொளியாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெளிநாட்டு பிரஜை மற்றும் நான்கு வேடுவச் சமூகத்தினர் அடங்கிய குழுவினர் தேசிய பூங்காவிற்குள் சட்டவிரோதமாக உட்பிரவேசித்தமை தொடர்பில் முதல்…

  17. யு.எஸ்.-மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும் அல்லது மலிவானதாக இருந்தாலும் ஒருவருக்கு பேக்கிங் பொருட்கள் மிகுந்த குடிபோதையை ஏற்படுத்தும் என்பதை நியு யோர்க்கை சேர்ந்த பெண் ஒருவர் தெளிவாக நிரூபித்துள்ளார். இந்த வார இறுதிநாட்களில் வனிலா சாறின் தாக்கத்துடன் வண்டியோட்டியதால் பொலிசாரால் இவர் கைது செய்யப்பட்டு இதனை நிரூபித்துள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு நியுயோர்க் பொலிசார் வால்மார்ட் வாகனம் நிறுத்தும் இடத்தில் ஒழுங்கற்ற முறையில் வாகனம் செலுத்திய பெண் ஒருவரை நிறுத்தியுள்ளனர். பெண் வண்டியை சாலை ஒரத்தில் நிறுத்தி விட்டு வீட்டிற்கு போகும் பாதையை தவறவிட்டு விட்டதாக தெரிவித்தார். ஆனால் அதிகாரி மூச்சில் மதுவின் அளவை சோதிக்கும் கருவியை கொடுத்து பரிசோதித்த போது இரத்தத்தி…

  18. வன்னிப் போரில் 146,679 தமிழர்கள் கொல்லப்பட்டு அல்லது காணாமல் போயிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. நான்காம் கட்ட ஈழப்போரில் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் நிமித்தம் செயலாளர் நாயகம் பான் கீ-மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட உள்ளக ஆய்வுக் குழுவால் புதன்கிழமை அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்தது. அவ்வறிக்கையின் இரண்டாவது பின்னிணைப்பில் (பக்கம் 38: சரத்து 5) வன்னிப் போரில் காணால்போன 146,679 தமிழர்களின் கதி குறித்து கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள், மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணையத்தின் முன் கிளிநொச்சி – முல்லைத்தீவு மாவட்ட செயலர்களால் சமர்ப்பிக்கப்பட்ட எழுத…

  19. வன்னியில் உள்ள சின்னங்கள் தொடர்பில் தொல்பொருளியல் திணைக்களம் கருத்து வன்னி பெரு நிலப்பரப்பில் அமைந்துள்ள மாவட்டங்களான வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தொல்பொருளியல் திணைக்களத்தின் வசம் தற்போது 121 சின்னங்கள் உள்ளபோதிலும் 43 சின்னங்களிற்கு மட்டுமே அரச இதழ் உள்ளதாக குறித்த திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. தொல்பொருளியல் திணைக்களத்திற்கு தகவல் அறியும் சட்டத்தின் கீழ், விண்ணப்பித்த விண்ணப்பத்திற்கு அளித்த பதிலிலேயே மேற்படி தகவல் உறுதி செய்யப்பட்டபோதும், தமிழ் அல்லது ஆங்கில மொழியில் கோரிய விண்ணப்பத்திற்கும் சிங்கள மொழியில் மட்டும் பதிலளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட பதிலின் அடிப்படையில், வவுனியா மாவட்டத்தில் 43 இடங்களும் மன்னா…

  20. வன்னியில் இறுதி யுத்தத்தில் காவுகொள்ளப்பட்ட ஆண்களின் துணையில்லாத வீடுகளுள் அத்துமீறிப் நுழையும் இராணுவத்தினரின் தொல்லை அதிகரித்திருப்பதாக பிரதேச மக்கள் அச்சங்கொண்டுள்ளனர். நேற்றிரவும் அப்பகுதியில் இத்தகைய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாண்டியன்குளம்- நெட்டாங்கண்டல் பிரதேசங்களிலிருந்து சுமார் ஆறு கிலோமீற்றர் தூரம் காட்டுப்பகுதிக்கு அப்பாலுள்ள சறாட்டிகுளம் கிராமத்தில் சுமார் 70 குடும்பங்கள் மீள்குடியேறி வாழ்ந்து வருகின்றன. அடிப்படை வசதிகள் மற்றும் வெளித்தொடர்புகள் அதிகமில்லாத இந்தக் கிராமத்தில் அண்மைக்காலமாக படையினரின் அடாவடித்தனங்கள் அதிகமாக இடம்பெற்று வருவதாக விசம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கிராமத்திலுள்ள கணவனை இழந்த இளம் பெண்னொர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.