மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
"தேசத்தின் குரல்" கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் நினைவுவணக்க நிகழ்வும், அரசியல் ஆய்வரங்கமும் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வு லண்டன் Northwick Park மருத்துவமனைக்கு அண்மையில் WATFORD ROAD, HARROW, MIDDLESEX, HA1 3TP எனும் முகவரியில் அமைந்துள்ள "WESTMINISTER UNIVERCITY HALL" இல் "தேசத்தின் குரல்" கலாநிதி அன்ரன் பாலசிங்கம் மற்றும் இம் மாதத்தில் வீரச்சாவைத் தழுவிய அனைத்து மாவீரர்களையும் நினைவுகொள்ளும் நினைவுவணக்க நிகழ்வும் நடைபெறவுள்ளது. http://youtu.be/tj7ASCYiUpQ எதிர்வரும் 18-12-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 3:00 மணிமுதல் மாலை 8:00 மணிவரை நடைபெறவுள்ள இந்த ந…
-
-
- 9 replies
- 1.1k views
-
-
கேணல் ராயூ அண்ணாவுக்கு வீர வணக்கம் 🙏 / தமிழீழ போராட்டத்தில் கேணல் ராயூ அண்ணாவின் திறமை எம் போராட்டத்துக்கு மிகவும் பலம் சேர்த்தது , ஏழாலை எனும் அழகான ஊரில் பிறந்து வளந்து போராட்ட களம் நோக்கி சென்ற தளபதி எங்கள் ராயூ அண்ணா 🙏🤞/ தமிழீழ தேசிய தலைவரின் அன்பு தம்பி , தலைவர் அருகில் கூடவே இருந்து வளந்த திறமையான அறிவான தளபதி ராயூ அண்ணா 🙏 / எம் போராட்டத்துக்காக இரவு பகல் என்று பாராமல் அயராது பாடு பட்ட தளபதி ராயூ அண்ணா 🙏/ புற்றுநோய் வந்த போதும் உயிரை பற்றி யோசிக்காம போராட்டத்தை நேசித்த தளபதி ராயூ அண்ணா 😓 ராயூ அண்ணாவை நேரில் பார்க்கும் சர்ந்தப்பம் எனக்கு கிடைக்கல , ராயூ அண்ணா அருகில் நி…
-
-
- 9 replies
- 1.6k views
- 1 follower
-
-
சென்ற 16.09.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் இரு டோறா பீரங்கிக் கடற் கலங்களை மூழ்கடித்து மேலும் சில கடற்கலங்களை தேசமாக்கி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்புலிகளின் துணைத்தளபதி லெப்.கேணல் இரும்பொறை மாஸ்ரர், லெப்.கேணல் குமுதன் உட்பட்ட….. ….கடற் கரும்புலிகள் லெப்.கேணல் அனோசன், மேஜர் அருணா, மேஜர் நித்தியா, மேஜர் காந்தி மற்றும் – 10 மாவீரர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் கப்பற் தொடரணியை பருத்தித்துறைக் கடற்பரப்பில் வழிமறித்து கடற்புலிகளின் துணைத்தளபதி லெப்.கேணல் இரும்பொறை மாஸ்டர் தலைமையிலான கடற் புலிகளும், கடற் கரும்புலிகளும் சிறிலங்கா…
-
- 9 replies
- 1.7k views
-
-
18.07.1996 அன்று முல்லைத்தீவு படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட “ஓயாத அலைகள் - 1” படை நடவடிக்கையில் முதலாம் நாள் சமரில் வீரகாவியமான லெப்.கேணல் சுதர்சன் உட்பட்ட 158 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஓயாத அலைகள் - 1 என்ற குறியீட்டுப் பெயருடன் தொடங்கப்பட்ட இந்த படை நடவடிக்கையில் முல்லைத்தீவு சிறிலங்கா படைத்தளம் முற்றாகத் தாக்கியழிக்கப்பட்டது. இதன்போது ஆயிரத்திற்கும் அதிகமான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். ஆட்டிலறிப் பீரங்கள் இரண்டு உட்பட பலகோடி ரூபா பெறுமதியான போர் கருவிகள் மீட்கப்பட்டன. இந்த நகர்வை முறியடிக்கும் நோக்கில் அலம்பில் பகுதியில் தரையிறக்கப்பட்ட சிறிலங்கா படையினரின் நகர்வும் முறியடிக்கப்பட்டு சிறிலங்கா படைத்தரப்பிற்கு பேரிழப்பு ஏற்படுத்தப்பட…
-
- 9 replies
- 1.1k views
-
-
28.06.1995 அன்று மண்டைதீவு படைத்தளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சூட்டி உட்பட்ட 8 மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தேசியத் தலைவரின் நேரடி நெறிப்படுத்தலில் கடற்புலிகளின் துணையுடன் மண்டைதீவில் தரையிறங்கிய விடுதலைப் புலிகளின் படையணிகள் அங்கிருந்த சிறிலங்கா படைத்தளத்தைத் குறுகிய நேரத்தில் தாக்கியழித்து சிறிலங்கா படையினருக்கு பேரிழப்பை ஏற்படுத்தினர். 300ற்கும் மேற்பட்ட சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதுடன் பல நூறு படையினர் படுகாயமடைந்த இத்தாக்குதலின்போது பெருமளவான ஆயுத தளபாடங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. இவ்வெற்றிகரத் தாக்குதலின்போது லெப்.கேணல் சூட்டி (தம்பிமுத்து கோவிந்தராஜன் - அம்பாறை) மேஜர் தமி…
-
- 9 replies
- 969 views
-
-
[size=4]04.11.1999 அன்று முல்லைக் கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட படகுவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் முத்துமணியின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.[/size] [size=6]கரும்புலிகள் உயிராயுதம்[/size]
-
- 9 replies
- 1.3k views
-
-
கடற்கரும்புலி மேஜர் பாலன் உட்பட்ட ஏழு மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு 28.06.1997 அன்று திருமலைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் தாக்குதலைத் தொடர்ந்து இடம்பெற்ற படகு விபத்தின்போது வீரச்சாவைத் தழுவிய ஆறு மாவீரர்களினதும் இதன்போது படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் தனது நாக்கினை தறித்து தலையை கட்டிலுடன் மோதி தற்கொடை செய்த கடற்கரும்புலி மேஜர் பாலனினதும் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தென்தமிழீழத்திலிருந்து போராளிகள் படகுகள் மூலம் வன்னிக்கு வந்து கொண்டிருந்தபோது சிறிலங்கா கடற்படையினரால் தாக்கப்பட்டது. இதன்போது ஒரு விபத்திற்குள்ளாது. படகு விபத்தைத் தொடர்ந்து நீந்திக் கரையையடைந்த கடற்கரும்புலி மேஜர் பாலன் மயங்கிய நிலையில் படையினரால் கைது செய்யப்பட்டார். படையினரி…
-
- 9 replies
- 2k views
-
-
[size=4]கடற்கரும்புலிகள் மேஜர் நளினன் - கப்டன் ஜெயராஜ் நினைவு தொடர்பாக நாம் ஏற்கனவே அனுப்பிய செய்தி முழுமைப் படுத்தப்படவில்லை எனவே முழுமைப் படுத்பதப்ட்ட இச்செய்தியைப் பயன்படுத்தவும். திருகோணமலை துறைமுகத்தில் காவியமான கடற்கரும்புலிகள் மேஜர் நளினன், கப்டன் ஜெயராஜ் மற்றும் கடற்புலி 2ம் லெப்.மதன், வவுனியாவில் காவியமான மேஜர் திருமகன் ஆகியோரின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 25.10.1996 அன்று திருகோணமலை துறைமுக நுழைவாயிலில் வைத்து சிறிலங்கா கடற்படைக்குச் சொந்தமான “டோறா” அதிவேக பீரங்கிப் படகினைத் தகர்த்து மூழகடித்து கடற்கரும்புலி மேஜர் தில்லையன் (நளினன்) (தெய்வேந்திரன் யோகேஸ்வரன் - மூதூர், திருகோணமலை) கடற்கரும்புலி கப்டன் ஜெயராஜ் (பெரியதம்பி) (கந்தசாம…
-
- 9 replies
- 744 views
-
-
பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் தாயகத்திற்கான பயணத்தினை நிறைவு செய்து தமிழகம் திரும்பும்வேளை அவரை மன்னார் வரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று விட்டு தளம் திரும்பும்வேளை வவுனியாவில் இடம்பெற்ற மோதலில் காவியமான நான்கு மாவீரர்களின் 27ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். [size=2][size=4]தாயகத்திற்கு வருகை தந்திருந்த தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் திரு. நெடுமாறன் ஐயா அவர்கள் தனது பயணத்தினை நிறைவு செய்து வன்னித் தளத்திலிருந்து தமிழகம் திரும்பியவேளை அவரை பாதுகாப்பாக மன்னாருக்கு அழைத்துச் சென்று தளபதி விக்ரர் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு தளம் திரும்பி வரும் வழியில் வவுனியா மாவட்டம் ஓமந்தை கொக்குவெளியில் சிறிலங்கா படையினர் மறைந்திருந்து மேற்கொண்ட தாக்குதலில் நான்கு போராளிகள் வீரச்சாவைத் தழுவ…
-
- 9 replies
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை பயிற்சியில் பயிற்சி வல்லுனராக விளங்கியவர் வசந்தன் மாஸ்ரர் . தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் வித்தகனாக செயற்பட்ட வசந்தன் மாஸ்ரர் என்று அழைக்கப்படும், மன்னார் மாவட்டத்தை நிலையான முகாவரியாக கொண்ட ஆறுமுகம் அன்பழகன் தொடக்க காலத்தில் விடுதலைப்புலிகளின் படைத்துறைபள்ளியின் ஆசானாக செயற்பட்டு பின்னர் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் பாதுகாப்பு அணியின் செயற்பாட்டாளனாகவும் பாதுகப்பு அணியின் தற்காப்பு பயிற்சி ஆசானாகவும் விளங்கினார். தோழா ! … தோழா ! …. என் தோழா !…. பின்னர் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் திட்டமிடல் செயற்பாடுகளுடன் அருகில் இருந்து செயற்பட்ட வசந்தன் அவர்கள் தலைவர் அவர்களின் பல திட்டமிடல்களுக்கு வல்லுனனாக விளங்கினார். தமிழீழ விடுதலை…
-
- 9 replies
- 1.2k views
-
-
மரணித்தது மரணமே கௌசல்யன் அல்ல.! Last updated Feb 6, 2020 கௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. 2005 பெப்ரவரி 7 சிங்களப் பேரினவாதமானது தமிழினத்தின் தேசிய ஆன்மாவில் விழுத்திய ஆழமான வடுக்கள் ஒருபோதும் மாறப்போதில்லை. ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது. – தமிழீழத் தேசியத் தலைவர…
-
-
- 9 replies
- 1.8k views
- 1 follower
-
-
[size=4]“ரணகோச - 5” முன்னகர்வு முறியடிப்பின்போது காவியமான 23 மாவீரர்கள், நல்லூரில் காவியமான லெப்.கேணல் செந்தமிழ்ச்செல்வன் உட்பட 12.09.1999 அன்று வீரச்சாவைத் தழுவிய 28 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 12.09.1999 அன்று “ரணகோச -5” நடவடிக்கை மூலம் மன்னார் மாவட்டத்தின் சிராட்டிக்குளம், பள்ளமடு மற்றும் பெரியமடுப் பகுதிகளை வல்வளைக்கும் நோக்குடன் சிறிலங்கா படைகளால் முன்னெடுக்கப்பட்ட பாரிய படை நகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இதன்போது 50ற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன் 700ற்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்தனர். இந்த வெற்றிகர முறியடிப்புச் சமரின்போது 23 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். அவர்களின் விபரம் வருமாறு பள்…
-
- 9 replies
- 1.3k views
-
-
05.11.1999 அன்று ஓயாத அலைகள் - 3 படை நடவடிக்கையில் மணலாற்றில் அமைந்திருந்த பராக்கிரமபுர படைத்தளத்தினைத் தாக்கியழிப்பதற்காக நகர்ந்து கொண்டிருந்தவேளை நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலிகள் மேஜர் அருளன், மேஜர் சசி ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். படங்களைப் பெரிதாய் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் இக்கரும்புலிகள் பற்றிய குறிப்பு உயிராயுதங்களிலிருந்து...
-
- 9 replies
- 2.9k views
-
-
[size=4]தமிழீழக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலில் காவியமான லெப்.கேணல் கலாத்தன் மற்றும் கடற்கரும்புலிகள் மேஜர் றோசா, கப்டன் இளங்குயிலன் உட்பட்ட 23 மாவீரர்களினதும் முல்லைத்தீவில் காவியமான 2ம் லெப்.இயூயின் என்ற மாவீரரினதும் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 21.10.2001 அன்று பன்னாட்டுக் கடற்பரப்பினூடாக மேற்கொள்ளப்பட்ட வழங்கல் நடவடிக்கைக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது சிறிலங்கா கடற்படையினருடன் இடம்பெற்ற மோதல் மற்றும் முல்லைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படைக் கலங்களை வழி மறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலென இரு வேறு நிகழ்வுகளில் கடற்கரும்புலி மேஜர் றோசா (கணேசன் கற்புக்கரசி - காரைநகர், யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி கப்டன் இளங்க…
-
- 9 replies
- 1.2k views
-
-
உங்களுக்கு எழுத்துருவிலான பதிவா அல்லது இவ்வகையான பதிவா இலகுவானது என மனம் திறந்து கூறுங்கள் என பணிவன்புடன் கேட்கின்றோம். நன்றி தேசக்காற்று நிர்வாகம்
-
- 9 replies
- 826 views
-
-
வீரமங்கை செங்கொடியின் 5ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாவு ஒறுப்பு அளிக்கப்பட்ட சாந்தன்,முருகன் மற்றும் வேரறிவாளன் ஆகியோரின் உயிர்காக்க தன்னுயிரை ஈகம் செய்த "வீரமங்கை" செங்கொடியின் 5ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் சாவு ஒறுப்பை நிறைவேற்ற இந்திய அரசு முயன்றவேளை அம்மூவரையும் காப்பாற்றும் நோக்குடன் 28.08.2011 அன்று காஞ்சிபுரம் தாலுகா பணிமனையின் முன்பு தன்னுடலில் தீமூட்டி வீரமங்கை செங்கொடி ஈகைச்சாவடைந்தார். தன் இன உறவுகள் மூவரின் உயிர்காக்க தன்னுயிரை ஆகுதியாக்கிய இந்த வீரமங்கைக்கு சீரம் தாழ்ந்த இதய அஞ்சலிகள்.
-
- 9 replies
- 2.3k views
- 1 follower
-
-
|| சர்வதேசக் கடற்பரப்பில் காவியமான 4 கடற்கரும்புலிகளின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். || சர்வதேசக் கடற்பரப்பில் நடவடிக்கை ஒன்றில் எதிர்பாராமல் ஏற்பட்ட படகு விமத்து ஒன்றில் காவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் முருகேசன், மேஜர் இசைநிலவன், மேஜர் புகழினி மற்றும் மேஜர் தனிச்சுடர் ஆகியோரின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். கடலன்னை மடிதன்னில் தாய்மண்ணின் நினைவுடன் கலந்த உயிராயுதங்களுக்கு எம் வீரவணக்கம். [உயிரில் உறவில் புதுவிடியலின் …. ] தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் - தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! || புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||
-
- 9 replies
- 1k views
-
-
பதிந்தவர்: தம்பியன் வியாழன், 25 ஆகஸ்ட், 2011 கேணல் ராயு [குயிலன்] (அம்பலவாணர் நேமிநாதன்) ஏழாலை, யாழ். வீரப்பிறப்பு: 30.05.1961 வீரமரணம்: 25.08.2002 தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுடன் உடனிருந்து தலைவரின் போரியல் நுட்பங்களுக்கு செயல் வடிவம் கொடுத்தவர் கேணல் ராயு. முதலாவது சிறப்புக் கொமாண்டோ படையணியை உருவாக்கியவர். விடுதலைப் புலிகளின் பொறியியல் பிரிவின் பொறுப்பாளராகக் கடமையாற்றியவர். விடுதலைப் போரின் முதலாவது கனரக ஆட்லறிப் பீரங்கிப் படையணியின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர் மாவீரன் கேணல் ராயு. அன்று சுகயீனம் காரணமாக சாவைத் தழுவிக்கொண்டார். கேணல் ராயுவின் இறுதி வ…
-
- 9 replies
- 1.4k views
-
-
[size=5]யார் இந்த மாவீரர்கள்?. எதற்காக களமாடினார்கள் ?. [/size] [size=5]உயிர்ப்பூவை உதிர்க்கும் அளவிற்கு மனவலிமையை அவர்களுக்கு கொடுத்த சக்தி எது?. [/size] [size=5]சிரித்துக் கொண்டே கந்தகக் காற்றில் கலக்கும் வல்லமையைக் கொடுத்தது யார்?. விடைகாணமுடியாத வினாக்கள் அல்ல இவை . ஒரு ஒடுக்கப்படும் இனம் தனது இருப்பிற்காகப் போராடும்போது இது புரியப்படும். போராடியோர் நினைவினைச் சுமந்து , மீண்டெழும் உணர்வினை ஊட்டும் நாளே மாவீரர்தினம்.[/size] [size=5]ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்படலாம்..ஆனால் விடுதலைக்கான போராட்டம் நிறுத்தப்படக்கூடாது என்பதனை நினைவுறுத்தும் நாள்தான் இந்த மாவீரர்தினம். எமை அழிக்கும் சிங்களமும், போர்க்குற்றத் தடியேந்தும் வல்லரசாளர்கள…
-
-
- 9 replies
- 1.7k views
-
-
19.06.1997 நெடுங்கேணிப் பகுதியில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மேற்கொண்ட எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் முகுந்தா அவர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள். தமிழீழ தாய் மண்ணின் விடிலுக்காய் தன்னுயிரை ஈகம் செய்த இந்த மாவீரருக்கு எமது வீரவணக்கங்கள்.
-
- 8 replies
- 1k views
-
-
ஜெயசிக்குறு படை நடவடிக்கைக்கு எதிராக ஒமந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்புத் தாக்குதலில் வீரகாவியமான தமிழீழத்தின் புகழ்பூத்த பாடகர் மேஜர் சிட்டு உட்பட்ட 137 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். வன்னி மண்ணை ஊடறுத்து யாழில் நிலை கொண்டிருந்த படையினருடன் இணைப்பை ஏற்படுத்த ஜெயசிக்குறு என்ற குறியீட்டுப் பெயருடன் மேற்கொள்ளப்பட்ட பாரிய நடவடிக்கை மூலம் முன்னகர்ந்து நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீது 01.08.1997 அன்று வவுனியா மாவட்டம் ஒமந்தைப் பகுதியில் விடுதலைப் புலிகளால் ஊடறுப்புத் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டது. ஏற்கனவே தாண்டிக்குளம், மற்றும் பெரியமடுப் பகுதியில்களில் மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்புத் தாக்குதல்களைத் தொடர்ந்து உச்சவழிப்பு நிலையில் படையினர்…
-
-
- 8 replies
- 1.7k views
-
-
பரந்தன் பகுதியில் சத்ஜய நடவடிக்கைக்கு எதிரான சமரின்போது காவியமான 67 மாவீரர்களினதும், இதன்போது கிளிநொச்சிப் பகுதி மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணை வீச்சு மற்றும் வான் தாக்குதல்களில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் வெண்நிலவன், கப்டன் உத்தமன் ஆகியோரினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். || ஆனையிறவு படைத்தளத்திலிருந்து 04.08.1996 அன்று பரந்தன் பகுதி நோக்கி “சத்ஜய” என்ருபெருமெடுப்பில் பெயர் சூட்டபப்ட்டு முன்னகர்ந்த சிறிலங்கா படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகளினால் நடாத்தப்பட்ட முறியடிப்புத் தாக்குதலின்போது சிறிலங்கா படைத்தரப்பிற்கு பாரிய இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன.|| இந்த முறியடிப்புத் தாக்குதலில் 67 வரையான போராளிகள் வெற்றிக்கு வித்திட்ட தாய்மண்ணின் விடியலுக்காக கல்லறையி…
-
- 8 replies
- 1.2k views
-
-
[size=3][size=4]11.11.1996 அன்று யாழ். கரைநகர் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகின் மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் மேஜர் பாரதி - கப்டன் இன்னிசை ஆகியோரின் நினைவு நாளும், யாழ். தச்சன்தோப்புப் பகுதியில் சிறிலங்கா கடற்படையினருடனான எதிர்பாராத மோதில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் கேணல் சிவநேசன், கப்டன் பருதியப்பன், கப்டன் தூயோன் ஆகிய மாவீரர்களின் நினைவு நாளும் இன்றாகும்.[/size] [/size] [size=4][size=4][size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாள…
-
- 8 replies
- 1.1k views
- 1 follower
-
-
01.11.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் நெடுங்கீரன்(நவம்) அவர்களின் மூன்றாம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தன்னை அர்ப்பணித்து வீரச்சாவைத் தழுவிக் கொண்ட இந்த மாவீரனுக்கும் இதேநாளில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.
-
- 8 replies
- 2.1k views
-
-
[size=3][size=4]“ஓயாத அலைகள் - 4” படைநடவடிக்கையின்போது 02.10.2000ம் அன்று முகமாலை, எழுதுமட்டுவாள், இத்தாவில் மற்றும் கிளாலி பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களின்போது[/size] [size=4]லெப்.கேணல் தில்லையழகன் (தில்லை) (கபிரியேல் அருந்தவராஜன் - முருங்கன், மன்னார்) கப்டன் ஆரதி (நாராயணன் ராணி - கந்தர்மடம், யாழ்ப்பாணம்) கப்டன் நேசமலர் (வெள்ளையன் கலா - கல்மடு, வவுனியா) கப்டன் பவநீதன் (செபஸ்ரியான் சந்தான்குரூஸ் - தாழ்வுபாடு, மன்னார்) வீரவேங்கை சிவா (புவனேந்திரன் சசிக்குமார் - உரும்பிராய், யாழ்ப்பாணம்) வீரவேங்கை மணிமாறன் (மரியநாயகம் மரியபிறவுன்சன் - மாந்தை, மன்னார்) வீரவேங்கை கருவேங்கை (விஜயன் சுரேந்திரன் - கச்சாய், யாழ்ப்பாணம்) வீரவேங்கை…
-
- 8 replies
- 939 views
-