Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நினைவு

மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.

  1. சிறுத்தையணியில் சீற்றமுடன் பகையளித்து நின்ற லெப்.கேணல் வானதி.! Last updated Mar 20, 2020 விடுதலைப் போராட்ட வரலாறுகளில் முதன்மையான தமிழீழ விடுதலை போராட்டமானது தன்னகத்தே பெரும் போராளிகள் மக்களின் தியாகங்களை சுமந்த வலராறுகள் நாம் அறிவோம். ஆனாலும் மறைமுக கரும்புலிகள் போராளிகளிகளின் உள்ளுணர்வுகளும் தியாகங்களும் பலரது மனங்களுள்ளே மறைந்து போகிறது ஆனாலும் அவர்களின் வாழ்வும் மண்ணிற்க்காய் தம்மை அர்ப்பணித்த தற்க்கொடையும் எம்மையெல்லாம் எம் இலக்கு நோக்கிய பயணத்தில் உந்தி தள்ளும் விசையாக செயற்பட ஏதுவாகிறது. தாயக களங்களில் சமர்களிலெல்லாம் போராளிகளின் தன்னலமற்ற செயற்பாடுகளே வெற்றிகளை எமதாக்கியது. குடும்ப வாழ்வில் இணைந்த பெண் போராளிகளாயினும் போராட்ட வாழ்வின் முன்னுத…

  2. பல களமுனைகளில் வெற்றியை அள்ளித்தந்த கேணல் இளங்கீரனின்.! On Mar 19, 2020 கேணல் இளங்கீரன் அவர்களின் 11 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் வன்னியில் நடைபெற்று வரும் சமரில் 19.03.2009 அன்று விடுதலைப்புலிகளின் சமர்க்களத் தளபதிகளில் ஒருவரான கேணல் இளங்கீரன் வீரச்சாவடைந்தார். சேட்டன் என அழைக்கப்படும் கேணல் இளங்கீரன் மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். நீண்டகாலம் இம்ரான்-பாண்டியன் படையணியில் பணியாற்றியவர். நிறையச் சமர்க்களங்களைச் சந்தித்தவர். லெப்.கேணல் அக்பரின் தலைமையில் லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்பு அணி செயற்பட்ட காலத்தில் அவ்வணியின் தாக்குதற் தளபதிகளுள் ஒருவராகப் பணியாற்றியவர். ஓயாத அலைகள் – 3 இன்போது குடாரப்பில் தரையிறங்கிய புலியணிகள் இத்தாவிலில் ப…

  3. உயிர் கூட்டிலிருந்து பிரிந்தபறவை கடற்கரும்புலி லெப்.கேணல் சிலம்பரசன் Last updated Mar 9, 2020 ” ஜெயரஞ்சன் A/L சோதினையில் பாஸ் பண்ணிட்டானாம். அவனுக்கு பி.கொம் கிடைச்சிருக்காம் ” என்ற செய்தி அப்பாவின் காதுக்கெட்டியது. வீட்டில் எல்லோருக்கும் அவனை நினைக்கப் பெருமிதமாயிருன்தது. அப்பா அந்தச் செய்தியையும் காவிக்கொண்டு ரஞ்சனிடம் போனார். ஆனால் அந்தச் செய்தி அவன் காதுகளுக்கு எட்டமுன்பே அவன் தன திறமைகளை இந்த தேசத்திற்க்கா அர்ப்பணிக்கத் தயாராகியிருந்தான். அப்பாவினால் அவன் முன்வைத்த வினாவிற்கு பதிலளிக்க முடியவில்லை. ஏனென்றால் அவை மறுக்கப்பட முடியாததாயிருந்தது. அப்போது அவன் பல்கலைக்கழகப் படிப்பிர்க்குள் முடங்கிபோகாமல் அவன் எடுத்த முடிவு எங்கள் கடற்செனையில்ன் ஒரு கடற்தளபதி என்ற ந…

  4. சூரியனும் சந்திரனுமாய் தலைவரைத் தாங்கிய சிகரங்கள்.! Last updated Mar 2, 2020 யாழ் மாவட்டம் காரைநகர் பகுதியில் 09.01.1988 அன்று இந்தியப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டவேளை எதியியிடம் பிடிபடாமல் தன்னைத் தானே சுட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட யாழ். மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் பாண்டியன் அவர்களின் 32ம் ஆண்டு வீரவணக்க நாள் சூரியனும் சந்திரனுமாய் தேசியத் தலைவரைத் தாங்கிய தோழமையின் சிகரங்கள் இம்ரான் – பாண்டியன். விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவரான பாண்டியன் யாழ் மாவட்டத் தளபதியாக பணியாற்றியவர். இம்ரான் – பாண்டியன் இருவரும் உற்ற நண்பர்கள். அவர்கள் யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பிரம்படி என்ற இடத்தில் பிறந்து பக்கத்துப் பக்கத்து வீட்டில் வாழ்ந்த …

  5. தேசத்தின் விடிவிற்காய் தன் உயிரை ஆயுதமாக்கி புறப்பட்ட மேஜர் விடுதலை.! “தேசத்தின் விடிவிற்காய் தன் உயிரை ஆயுதமாக்கி ஆழியவளை மண்ணிலிருந்து விடுதலைக்குப் போராடப் புறப்பட்ட கரும்புலி மேஜர் விடுதலை” கந்தையா இந்திராணி என்ற இயற்பெயரைக் கொண்ட இவள் வடமராட்சி கிழக்கு ஆழியவளை மண்ணில் பிறந்து வளர்ந்தவள். இந்த மண்ணும் தேசவிடுதலைக்குப் போராட பல போராளிகளை உகந்தளித்த மண். அந்த வகையில் இவளும் போராட்டத்தின் தேவையை உணர்ந்து இனவாத அடக்குமுறைக்கு எதிராக 1992ம் ஆண்டு பிற்பகுதியில் தன்னை விடுதலைப் புலிகளில் முழுமையாக இணைத்துக் கொண்டாள். கடற்புலிகள் மகளிர் படையணியின் முதலாவது பயிற்சி முகாமில் தனது அடிப்படைப் பயிற்சிகளை முடித்துக்கொண்டு தொடர்ந்து ஏனைய பயிற்சிகளையும் முடித…

  6. பவதா, வலம்புரி கப்பல்கள் முழ்கடிப்பில் வீரகாவியமான 11 கடற்கரும்புலிகள் வீரவணக்க நாள்.! பவதா, வலம்புரி கப்பல்கள் முழ்கடிப்பில் வீரகாவியமான 11 கடற்கரும்புலிகள் வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமலைத் துறைமுகத்திலிருந்து 22.02.1998 அன்று காங்கேசன்துறை துறைமுகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் ”வலம்புரி” கப்பல், மற்றும் ”பபதா” படைக்காவிக் (தரையிறக்கம்) கப்பல் தொடரணியை பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் கரன், கடற்கரும்புலி மேஜர் சுலோஜன், கடற்கரும்புலி மேஜர் வள்ளுவன், கடற்கரும்புலி மேஜர் தமிழினியன், கடற்கரும்புலி மேஜர் குமரேஸ், கடற்கரும்புலி மேஜர் தமிழ்மங்கை, கடற்…

  7. வான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க நாள் இன்றாகும். வான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்காவின் தலைநகரில் அமைந்துள்ள சிறிலங்கா வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் 20.02.2009 அன்று மேற்கொள்ளப்பட்ட வான்கரும்புலி வெற்றிகரத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் ஆகிய தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் வான்கரும்புலி மறவர்களின் 11 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான் படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வான்…

  8. எதிரியின் பல முன்னேற்றங்களை தடுத்து நிறுத்தி கடுஞ்சமர் புரிந்த லெப். கேணல் வீரமைந்தன் On Feb 13, 2020 லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தாக்குதல் தளபதி லெப்டினன்ட் கேணல் வீரமைந்தன். கிளிநொச்சி மாவட்டம் கோணாவில் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மங்களேஸ்வரன் என்ற இளம் மாணவன் தாயக விடுதலையில் வேட்கை கொண்டு, 1998 ம் ஆண்டு துவக்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தான். அடிப்படைப் பயிற்சிகளை முடித்துக் கொண்டு வீரமைந்தன் என்ற இளம் போராளியாக கடற்புலிகளில் இணைக்கப்பட்டான். விசேட பயிற்சிகளை பெற்றுக் கொண்ட வீரமைந்தன் , புங்குடுதீவு சிறிலங்கா கடற்படை மீதான தாக்குதலில் தனது கன்னிச் சமரை தொடங்கி திறமுடன் செயற்பட்டான். தொடர்ந்து எமது கடற்பரப்பில் பாதுகாப்பு…

  9. மரணித்தது மரணமே கௌசல்யன் அல்ல.! Last updated Feb 6, 2020 கௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. 2005 பெப்ரவரி 7 சிங்களப் பேரினவாதமானது தமிழினத்தின் தேசிய ஆன்மாவில் விழுத்திய ஆழமான வடுக்கள் ஒருபோதும் மாறப்போதில்லை. ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது. – தமிழீழத் தேசியத் தலைவர…

  10. செயற்திறன் மிக்க தளபதி லெப் கேணல் விநாயகம் On Feb 4, 2020 இரண்டு தசாப்தகாலமாக தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் வெற்றிநடைபோட்டு விழிமூடிக்கொண்ட கடற்புலிகளின் துணைத் தளபதி லெப். கேணல் விநாயகம். நிலையுடன் பெயர்: லெப். கேணல் விநாயகம். சொந்தப்பெயர்: தங்கவேலு சுதரதன். சொந்த முகவரி: மருதங்கேணி வடக்கு தாளையடி. (யாழ் மாவட்டம்) வீரச்சாவுத்திகதி: 04.02.2009 வீரச்சாவுச் சம்பவம்: சுண்டிக்குளம், பேப்பாரைப்பிட்டிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட வழிமறிப்புத் தாக்குதலில். விநாயகம் அண்ண வீரச்சாவு என்ற செய்தி எனது காதுகளை எட்டியபோது ஒருமுறை எனது இதயம் உறைந்து போனது. விடுதலைப் போராட்டத்தில் இழப்புக்கள் ஒன்றும் புதியவை அல்ல. இழப்ப…

  11. உளப்பலத்தால் உழைத்தவன் கரும்புலி மேஜர் குமுதன். Last updated Feb 1, 2020 அந்த நிகழ்வுகளில் இருந்து குமுதனின் நினைவுகளை பிரிக்க முடியாததாய் இருந்தது. இப்போதெல்லாம் அவனது சுவாசம் அந்த நினைவுகளைத் தழுவியதாகவே வந்து போனது. அதே நினைவுகள் தான் குமுதனின் கண்களையும் நெஞ்சையும் நினைத்துக் கொண்டிருந்தன. வெட்டையும் திட்டுத்திட்டாக வளர்ந்திருக்கும் சிறு பற்றைகளும் நிறைந்து பரந்து விரிந்த அந்தப் பிரதேசத்தின் நெஞ்சைக் கிழிப்பதைப்போல் கிளிநொச்சி நகரினை நோக்கி இராணுவம் முன்னேறிக்கொண்டிருந்தது. பெரிய இராணுவ நகர்வை எதிர்த்து நேருக்குநேர் சமரிட்டுக் கொண்டிருந்த எமது தாக்குதல் அணியின் ஒரு பிளட்டூன் அணித்தலைவனாக குமுதனும் நின்று சமதிட்டுக் கொண்டிருந்தான். ஒவ்…

  12. வெளித்தெரியா வேர்கள் கரும்புலி லெப். கேணல் சுபேசன்…! Last updated Feb 1, 2020 இவனின் குடும்ப விருட்சம்; ஒரு அண்ணனும் மூன்று அக்காவும் , நான்கு தம்பியும் , ஒரு தங்கையும் . நேரம் நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது. அந்த இரவின் அமைதி குலைந்து நீண்ட நேரமாகிவிட்டது. கருமை பூசியிருந்த இருளினை இடையிடை முழங்கிய துப்பாக்கி , குண்டுகளின் வெளிச்சம் சீர்குலைத்துக்கொண்டிருந்தது. எதிரியின் பலமான தடைகளை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த எமது கரும்புலி அணிகள் தாக்குதல்களை வேகப்படுத்தின. நாங்கள் தேடிச்சென்ற இலக்குகள் குறித்த நேரத்திற்குள் தகர்த்தெறியப்பட்டன. இலக்குகளை அழித்தும் கரும்புலி மேஜர் குமுதனிடம் இருந்து பின்வாங்கும்படி கட்டளை கிடைத்தது. நாங்கள் பின்வாங்குவதர்க்கான வி…

  13. உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய உத்தம வீரன் கேணல் சாள்ஸ்.! Last updated Jan 5, 2020 தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதியுச்ச நிலையை உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய உத்தம வீரன் தான் கேணல் சாள்ஸ் சாள்ஸ் உண்மையில் எல்லோருக்கும் தெரியாத ஒருவர். ஆனால் எதிரிக்கு இவரை நன்கு தெரியும். கடந்த காலங்களில் பல வரலாற்றுத் திருப்பங்களை ஏற்படுத்திய பல வெற்றிகரமான தாக்குதல்களை தெற்கில் தளம் அமைத்து வழிநடத்திய தளபதி. யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கேணல் கிட்டண்ணாவின் நிர்வாகத்தின் கீழ் குடாநாட்டுப் படையினர் முகாம்களுக்கு முடக்கம் காண வைக்கப்பட்ட போது பாடசாலையயில் கல்வி பயின்று கொண்டு பகுதி நேரமாக பருத்தித்துறை காவலரணில் காவலிற்காக வந்து நின்றவர் தான் சாள்…

  14. போராட்ட வரலாற்றில் பல புகழ்பூத்த படையணி பூநகரிப் படையணி! Last updated Dec 31, 2019 தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல புகழ்பூத்த படையணிகள் பற்றியும் அவற்றின் நீண்ட போரியல் வரலாறு பற்றியும் நாமறிவோம். ஆயினும் பல்வேறு காலகட்டங்களிலும் தேவைகருதி உருவாக்கப்பட்டு பின்னாளில் வேறு படையணிகளுடன் அல்லது பிரிவுகளுடன் இணைக்கப்பட்ட படையணிகள், பிரிவுகள் இப்போராட்ட வரலாற்றில் இருந்தன என்பது நம்மில் பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. அடுத்த தலைமுறைக்கு அவைபற்றி எதுவுமே தெரியாமல் போகலாம். அந்தந்த காலகட்டங்களில் அவ்வப் படையணிகள், பிரிவுகள் ஆற்றிய போராட்டப் பங்களிப்புகள் வரலாற்றில் பதியப்படவேண்டிய மிகவும் தார்மீகக் கடமையாகும். அந்தவகையில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் …

  15. எல்லோருக்கும் கடைசிப்பிள்ளை லெப். கேணல் ஈழப்பிரியன்.! Last updated Dec 31, 2019 பிரியா என் அன்பு நண்பனே…! உனக்கு…… என் வீரவணக்கங்கள்..! ஈழப்பிரியன், ஆரம்பத்தில் இருந்தே அரசியல் துறைப்பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ் செல்வன் அவர்களின் வளர்ப்பில் வளர்ந்தவன். மெய்ப்பாதுகாவலனாக, தனிப்பட்ட உதவியாளனாக, கிலோ வண் முகாம் பொறுப்பாளனாக, அரசியல் துறைக்கு ஆயுத அறிக்கை பரிசோதனாக, பயிற்சியாளனாக, துப்பாக்கி சூட்டு பயிற்சியாளனாக, வினியோக அணி பொறுப்பாளனாக, முகாம்கள் கட்டுமான பணிப்பாளனாக, இறுதியாக படையணிப்பொறுப்பாளனாக….. எவ்வளவு பணிகள்? எவ்வளவு பொறுப்புக்கள்.. சிறிய வயதிற்குள்.. மிகப்பெரிய பொறுப்புக்கள்… கிளிநொச்சி உருத்திரபுரம் தான் அவனது பெற…

  16. இலக்குத்தவறாத இலட்சியப்பயணத்தில் மேஜர் வேணுதாஸ் 28வது ஆண்டு நினைவு ( 11.12.2019 ) மீள் பதிவு பொன் . வேணுதாஸ் அவர்களைப்பற்றி நாம் எழுதமுனையும் பொழுது மட்டக்களப்புப்பற்றியும் மாவட்ட அரசியல்பற்றியும் எழுதுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். அன்னியர் ஆதிக்கத்தால் இழந்துபோன ஈழத்தமிழருக்கான இறமையுள்ள தாயகத்தை இலங்கையின் வடகிழக்கே நிறுவவேண்டுமென்ற இலட்சியத்தை சொல், செயல், சிந்தனை மூலம் பள்ளிப்பருவத்திலிருந்து ஆரம்பித்த இவருடையபணி எமது தேசிய விடுதலை இயக்கத்திற்கு நீண்டகால ஆதரவாளராக செயல்பட்டவர்கள் என்றவரிசையிலும் உள்ளடக்கப்படுகின்றது. கிழக்கு மாகாணம் என்றழைக்கப்படுகின்ற தென்தமிழீழம் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழர்நிலமாகும். 1948 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிங்க…

  17. பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லம் 2019 நினைவேந்தல் நிகழ்வு

  18. நினைவழியா நிகழ்வுகள்..மாவீரர் நாளும் பாடலும் (நவ. 27 மாவீரவர் நாள். மாவீரர் நாள் என்றதுமே, தமிழர் தாயகம் எங்கும் உணர்ச்சி பெருக்கெடுத்துப் பாயும். அந்த உணர்ச்சியை கட்டுக்குள் வைத்து, மனதைக் கனக்க வைப்பதாக ஒலிக்கும், “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய...” மாவீரர்நாள் பாடல். மாவீரர்களை நினைவுகூருவது தொடர்பில் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் இவ்வாறான பாடல் ஒன்றின் தேவையை, அப்போதைய மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் ஜெயா முன்வைத்திருந்தார். 1992 மாவீரர் நாள் நினைவேந்தலின்போது கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் வர்ணராமேஸ்வரன் இப்பாடலைப் பாடினர். அச்சமயம் அங்கு நின்ற போராளி ஒருவர், இப்பாடல் குறித்து “வெளிச்சம் இதழில்” இக்கட்டுரையை எழுதியிருந்தார். அக்கட்டுரை மீள்பிரசுரமாகிறது…

  19. நினைவழியா நினைவுகள் ! மட்டுநேசன் ம் 1990 இல் இரண்டாம் கட்ட ஈழப்போர் மட்டக்களப்பில் ஆரம்பித்தது. பொத்துவில் தொடக்கம் வாழைச்சேனை வரையான சகல பொலிஸ் நிலையங்களும் தாக்குதலுக்குஇலக்காகின . வடக்கில் இராணுவ முகாம்கள் முற்றுகைக்குள்ளாகின. யாழ். கோட்டை முகாமும் அவற்றில் ஒன்று. தொடராக நிகழ்ந்த தாக்குதல்களில் இம்முகாம் மீது 1990. 08. 05 ஆம் நாளன்று நடத்தப்பட்ட முயற்சி வெற்றியளிக்கவில்லை. இதில் 31 போராளிகள் மாவீரர்களாகினர். ஒரே இயக்கப் பெயரைக் கொண்ட இரு போராளிகள் இத்தாக்குதல் முயற்சியில் பங்குபற்றினர். இந்த இருவரில் ஒருவர் வீரச்சாவடைந்தார். அவரது வித்துடலை மீட்க முடியவில்லை. மற்றவர் படுகாயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக தமிழகத்துக்கு அனுப்பப்பட்டார். தாக்குதலின் முடிவ…

  20. தமிழீழ படைப்பிரிவுச் சீருடைகள் - விக்கிபீடியா.

  21. நிமிர்ந்த பனை சிலந்திவலைப்பின்னலாகிப் படர்ந்திருந்த இந்தியர்களின் கையில், தமிழீழம் சிக்கிப் போயிருந்தது ஒரு காலம். மறக்க முடியாத அந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் நின்று பிடித்து புலிகளின் சுவடுகளைப் பேணிக்காத்து நிலைநிறுத்தி வைத்திருந்த வீரர்கள், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிலபேர்தான். அந்தச் சில பேருக்குள் நேற்றுவரையும் எஞ்சியிருந்தவன் தான் சூட். அவனை விளங்கிக்கொள்ள அந்த நேரத்து ‘இராணுவச்சூழ்நிலை’ யைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்தச் சூழ்நிலையைப் புரிந்து கொள்ள வலிகாமத்தின் தரையமைப்பைத் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழீழத்தில் வேறெங்கும் இல்லாதவிதமாக முற்றுமுழுதான நகரச்சூழலை பெரிய அளவில் கொண்ட புவியியல் அமைப்பையும், குறைந்தளவு நிலத்தில் கூடியளவ…

  22. கிட்டண்ணை எண்ண ஓட்டங்களுக்கு ஈடு கொடுப்பது கடினம் இயக்கத்தின் எந்த ஒரு பணியானாலும் புதிய புதிய எண்ணங்களை வெளிப்படுத்துவார்.ஒவ்வொரு துறையும் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி நீண்டவிரிவுரை நிகழ்த்தும் அளவிற்கு ஒவ்வொன்றையும் பற்றியும் ஆழ்ந்து சிந்தித்து வைத்திருந்தார். வெறுமனே சிந்தித்துவிட்டு, சொல்லிவிட்டு, எழுதிவிட்டு,அதனை மறந்துவிடும் அல்லது கைவிடும் சாதாரணமனிதர் அல்ல கிட்டண்ணை.அவரது எல்லா சிந்தனைகளும் செயல்வடிம் பெறவேண்டும் என்பதில் விடாபிடியானவர்.கிட்டண்ணையின் நிர்வாகத்திறன் வித்தியாசமானது தன்கீழ் பணியாற்றும் எல்லோரையும் தன் வசப்படுத்தும் தான்நினைத்ததைச் செய்ய வைக்கும் திறன் அவரதுதனித்துவமான வெற்றிகளுக்கு காரணமாக அமைந்தது. ஒவ்வொரு வேலைகளையும் தானே திட்டமிட்டு…

  23. த‌மிழ் செல்வ‌ன் அண்ணாவுக்கும் அவ‌ருட‌ன் வீர‌காவிய‌மான‌ ச‌க‌ தோழ‌ர்க‌ளுக்கும் வீர‌ வ‌ண‌க்க‌ம் 🙏 த‌மிழின‌த்தின் அழ‌கான‌ சிரிப்பின் குர‌ல் மெள‌வுன‌மாகி 12 ஆண்டுக‌ள் ஆகி விட்ட‌து 😓

  24. 13ம் ஆண்டு நினைவு லெப்.கேணல் வரதா (ஆதி) பாலசேகரம் சந்திரகுமாரி வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.10.2006

  25. லெப்.கேணல் அகிலா - லெப்.கேணல் பௌத்திரன் நினைவு சூரியக்கதிர் நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் அகிலா மற்றும் லெப்.கேணல் பௌத்திரன் உட்பட்ட மாவீரர்களின் 24ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 30.10.1995 அன்று சூரியக்கதிர் நடவடிக்கைக்கு எதிரான சமரில் லெப்.கேணல் உருத்திரன் (உருத்திரா) சிதம்பரநாதன் கருணாகரன் சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு லெப்.கேணல் அகிலா சோமசேகரம் சத்தியதேவி கோப்பாய் வடக்கு, யாழ்ப்பாணம் ஆகியோர் உட்பட்ட போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் எமது நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.