மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
957 topics in this forum
-
லெப். கேணல் ஞானி அக்டோபர் 31, 2020/தேசக்காற்று/வெஞ்சமரின் நாயகிகள்/0 கருத்து வெல்வோமெனச் சென்று வென்றவள்: கப்டன் அன்பரசி படையணி துணைத் தளபதி லெப். கேணல் ஞானி சகல ஆயத்தங்களோடும் தயாராவிட்ட ஒரு போர்ப்பயணத்திற்கு இறுதிக்கணங்கள் அவை, கூட்டங்கூட்டமாக கூடிநின்று ஆடியும், பாடியும், பேசிக்களித்துக் கொண்டும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார்கள் போராளிகள். ஒரு திசையிலிருந்து பல குரல்கள் ராகத்தோடு எழுகின்றன. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்றே நீ கூறு வேங்கைகள் ஆனவர் நாங்கள் எந்த வேளையும் சாகலாம் போங்கள்” என்று ஒலித்த அந்தக் குரல்களையும் மீறி, “வேங்கைகள் ஆனவர் நாங்கள் எந்த வேளையும் வெல்லுவோம் போங்கள்” எ…
-
- 1 reply
- 1.2k views
-
-
வெற்றிக்கு வித்திட்ட வேங்கைகள் நவம்பர் 7, 2020/தேசக்காற்று/சமர்க்களங்கள், வழித்தடங்கள்/0 கருத்து பூநகரி வெற்றி விடுதலைப் போரின் பரிமாணத்தை முற்றிலும் மாற்றியமைத்த வெற்றி. “தனது பூநகரி முகாமை நாம் தாக்க எண்ணியது எதிரிக்குத் தெரிந்து விட்டது.” “எமது எண்ணம் எதிரிக்குத் தெரிந்துவிட்டதென்பதும் எமக்குத் தெரியும்” “தனக்குத் தெரிந்தது தெரிந்ததும், நாம் ஏற்பாடுகளைத் தொடர்வதைக் கண்ட எதிரி, தனது நிலைகளை மேலும் பலப்படுத்திய போதும், நாம் எம் திட்டத்தில் சிறு மாற்றங்கள் செய்தோமே தவிர கைவிட்டுவிடவில்லை. எல்லாக் கவசமும் அணிந்த “கோலியாத்” ஆக பூநகரி முகாம் போர்க்கோலம் பூண்டு நின்ற போதும், இறுமாந்திருந்த அரக்கனும் சிறுவனும் போலான போது…
-
- 1 reply
- 1.2k views
-
-
லெப். கேணல் சாந்தகுமாரி எமது விடுதலைப் போராட்டத்தில் மாபெரும் பணியாற்றிய லெப். கேணல் சாந்தகுமாரி. எல்லோருடனும் சிரித்துக் கதைக்கின்ற சாந்தகுமாரி இன்று எங்களோடு இல்லை. ஆனால் எதிரியைச் சிதறடிக்கின்ற சாந்தகுமாரிகள் எங்களோடேயே களமுனையில் நிற்கிறார்கள். சாந்தகுமாரியின் பெயரில் தயாரிக்கப்பட்ட கண்ணி வெடிகள் எதிரிகளின் கால்களோடு கதைபேசிக் கொண்டிருக்கின்றன. புயலுக்கு முந்திய அமைதியோடு புலிகள் இருந்த காலப்பகுதியது. எதிரியானவன் எமது மண்ணை வல்வளைக்கும் நோக்குடன் ஜெயசிக்குறு, ரணகோச, வோட்டஜெற் என பெயரிட்டபடி படை நடவடிக்கைகளை மாறி மாறி மேற்கொண்டு எமது வளங்களை அழிவுக்குள்ளாக்கியதுடன், எம்மக்களையும் பெரிதும் துன்பப்படுத்திக் கொண்டிருந்தான். எவரும் எதிர்பாராத பெரு…
-
- 3 replies
- 1.1k views
-
-
[size=3][size=4]17.11.1994 அன்று நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் மல்லி(அமுதன்) அவர்களின் நினைவு வணக்க நாள் இன்றாகும். சிறிலங்காவில் சந்திரிகா தலைமையில் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி தமிழீழ விடுதலைப் புலிகள் நல்லெண்ண நடவடிக்கையாக அறிவித்த தன்னிச்சையான போர்நிறுத்த காலப்பகுதியிலேயே சிறிலங்கா படையினரால் லெப்.கேணல் மல்லி மீதான தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.[/size][/size] [size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். [/size] [size=5]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்…
-
- 8 replies
- 1.1k views
-
-
சம்பூர் என்கிற விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஊரில் நான் நிற்கின்றேன். எனக்கு முன் ஒரு கப்பல் சிவப்பு மஞ்சல் நிறங்களால் அலங்கரிக்கப்பட்டு கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது. அருகில் சென்று பார்க்கலாம் என சென்றேன். என்னையறியாமல் ஒரு கரும்புலியின் படத்திற்கு முன்னால் நின்றுகொண்டேன். கரும்புலி திருமாறன் என எழுதப்பட்டிருந்தது. எந்த ஊர், விபரங்கள் என எதையுமே வாசிக்காமல் அடுத்த படத்தின் பக்கம் பார்வையை திருப்பினேன். பத்தொடு பதினென்றாக அதையும் பார்த்துவிட்டு சென்றாலும் திருமாறன் என்ற அந்த பெயர் மனதில் பதிந்துவிட்டது. ஏதாவது குறும்புகள் செய்துவிட்டு கோபக்கார தந்தையிடம் மாட்டிக்கொள்ளாமல் எதிர் வீட்டு வேலிகளை பிய்த்துகொண்டு ஓடி , அந்த வீட்டின் முன் நின்று, துரத்திய தந்த…
-
- 7 replies
- 1.1k views
-
-
லெப். கேணல் மனோஜ் டிசம்பர் 11, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள்/0 கருத்து சொல்லு வான்நிலாவே! உனக்குத்தான் தெரியும் அவனது வீரநடை. திருமலை மாவட்ட தாக்குதல் படையணித் தளபதி லெப். கேணல் மனோஜ் தலைநகர் ஊற்றெடுத்த உப்பாற்றிலே 1971.02.05 தினத்திலே மண்ணாகி காப்பதற்கு மட்டுமல்லாமல் தமிழீழ மன்னைப் பாதுகாப்பதற்காக ஆண் மகன் ஒருவனை நொந்து சுமந்து ஈன்றெடுத்தாள் அன்னை. தாய் தந்தையருக்கு மூன்றாவது இளம்பிறையாக தோன்றியவனுக்கு வசந்தன் என்று செல்லப் பெயரிட்டார்கள். ஆனால் தன் சமுதாயம் அடக்கி ஒழிக்கப்படுவதைக் கண்ட கண்களும் உடலும் தீப்பிழம்புகள் போல சீறிப்பாய்ந்தன. என் இனிய உள்ளங்களுக்கா இந்த நிலை? இதை மாற்றியமைப்பேன் என்று தன்னுள் ஆணையிட்டான். தன் வீட…
-
- 1 reply
- 1.1k views
-
-
22.04.1987 அன்று விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட காபர்வியூ படைமுகாம் மீதான தாக்குதல் ஒரு பார்வை. 22.04.1987 அன்று விடுதலைப்புலிகளால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட யாழ்மாவட்டம் காங்கேசன்துறை பகுதியில் அமைந்திருந்த காபர்வியூ தங்கக(விடுதி)படைமுகாம் மீதான தாக்குதல் ஒரு பார்வை. யாழ்மாவட்டம் காங்கேசன்துறை பகுதியில் இருந்த துறைமுகமானது காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குத் தேவையான பொருட்களை கடல்வழிமூலம் கொண்டுவருவதற்காக அமைக்கப்பட்டது.முதலாம் ஈழப்போர் ஆரம்பிக்கப்பட்டவுடன் பெரும்பாலும் படையினருக்குத்தேவையான பொருட்களை கொண்டுவருவதற்காகப் பயண்படுத்தப்பட்டதுடன் .துறைமுகப்பகுதிக்கு சீமெந்துத் தொழிற்சாலைக்கு தேவையான பொருட்களை எடுத்துவர மற்றும் சீமெந்துகளை கொழும…
-
-
- 15 replies
- 1.1k views
-
-
[size=4]திருமலை பள்ளித்தோட்டம் பகுதியில் இராணுவத்துடன் ஏற்ப்பட்ட நேரடி மோதலின் போது வீரசவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் அன்புக்கினியன் மற்றும் மட்டக்களப்பு நகர் பகுதியில் சிறீலங்கா படைகளுடன் இணைந்து செயல்ப்பட்ட தேசத்துரோகிகள் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் உதயகீதன் ஆகிய மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும் [/size] [size=4]தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்[/size] http://www.facebook.com/karumpulimaveerarkal
-
- 12 replies
- 1.1k views
- 1 follower
-
-
தமிழீழ வரலாற்றில் அழியா பெயர் லெப்.கேணல் புலேந்திரன்... லெப்.கேணல் புலேந்திரன்(திருமலை மாவட்ட தளபதியும் மத்தியகுழு உறுப்பினரும்) குணநாயகம் தருமராசா பாலையூற்று, திருகோணமலை. வீரப்பிறப்பு:07.06.1961 வீரச்சாவு:05.10.1987 நிகழ்வு:யாழ்ப்பாணம் பலாலி படை முகாமில் இந்திய – சிறிலங்கா கூட்டுச்சதியை அம்பலப்படுத்துவதற்காக சயனைட் உட்கொண்டு வீரச்சாவு அன்பின் புலேந்திரன், தமிழ் மக்களின் பாதுகாப்புக்குத் தானே உத்தரவாதம் என்று எமது ஆயுதங்களைப் பெற்ற இந்தியா, நீ திருமலைக்குப் போவதற்குப் பாதுகாப்புக் கேட்டபோது இந்திய இராணுவத்திலுள்ள மேஜர் கருப்பசாமி உனக்குச் சொன்னார், “இன்றும் இல்லை, இனி எப்போதும் இல்லை” என்று. விடுதலைக்காகப் போரிடும் ஓரினம் தன்னைத் தான…
-
-
- 2 replies
- 1.1k views
-
-
லெப். கேணல் அக்பர் விடுதலை வீரியம்: லெப். கேணல் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி சிறப்புத் தளபதி லெப். கேணல் அக்பர் / வழுதி. வட போர்முனையின் கட்டளைப் பணியகம். தொலைத்தொடர்புக் கருவி அக்பரைத் தேடுகிறது. தொடர்பு இல்லை. காலையில்தான் முன்னணி நிலைகளைப் பார்த்துவிட்டு, அணித் தலைவர்களைத் தயார்படுத்துவதற்காக பின் தளத்திற்குப் போய் வருவதாகத் தளபதி தீபனிடம் கூறிச்சென்றவன். இன்னமும் வரவில்லை. மாலை 3.00 மணி அக்பரின் தொடர்பில்லை. மாலை 5.00 மணி தொடர்பில்லை. இரவு 8.00 மணி தொடர்பில்லை. தளபதியின் மனதில் ஐயம் தோன்றுகின்றது. நாளை விடிந்தால் எதிரி முன்னேறக்கூடிய நிலையில் அக்பர் ஒருபோதும் இத்தனை மணிநேரம் தொடர்பில்லாமல் நிற்கமாட்டான். நேரம் செல்லச் செல்ல தளபதியிடமும் ஏன…
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
சமர்கள நாயகனுக்கு வீர வணக்கம் 🙏/ ஆனையிறவில் வீசும் காற்றும் சொல்லும் பால்ராஜ் அண்ணாவின் வீரத்தை 💪/ என்றும் உங்கள் நினைவுடன் எங்கள் தமிழீழ பயணம் தொடர்கிறது 🙏
-
-
- 10 replies
- 1.1k views
- 1 follower
-
-
லெப். கேணல் சரா நினைவில்...! அவனது முகத்தைக் கடைசியாக ஒரு தரம் பார்க்க வேண்டும். எனக்கு இதயம் வெடித்து விடும்போல இருந்தது. எங்கள் போராளிகளின் உடல்கள் துப்பரவு செய்யும் இடம். ” சராவின் உடல் வந்துவிட்டதா ? ” என்னை மாதிரிப் பலர் கேட்டுக்கொண்டு நின்றார்கள். உள்ளே போனேன். வீரமரணமடைந்த எமது போராளிகள் , அங்கொன்றும் , இங்கொன்றுமாகக் கிடந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் முகங்களாக நான் தடவினேன். எனக்கு பழக்கமான சராவின் முகத்தைக் காணவே இல்லை. ஆனால் அந்தத் தோழர்களின் முகங்களும் எனக்குப் பல கதைகளைச் சொல்லின. பதினைந்து வயதிருக்கும். சற்று நிறமான , சுருள் சுருளான தலைமயிருடன் ஒரு போராளி முகம் வாடிக்கிடந்தான் அவனது உயிரை அழைத்துச் சென்ற விமானக் க…
-
- 3 replies
- 1.1k views
-
-
[size=4]நவம்பர் 21 தொடக்கம் 27![/size] [size=4]தேசவிடுதலைக்காக தமது இன்னுயிரை நீத்த உத்தமவீரர்களை நினைவுகூரும் புனித வாரம் . இலட்சியக்கனவுடன் துயில்கொள்ளும்அந்த தெய்வங்களை பூஜிப்பதற்கு எமக்கு கிடைத்துள்ள அற்புத தருணம். தமது இனத்தின் அடிமைச்சங்கிலியை தகர்த்தெறிவதற்காக உயிரையே காணிக்கையாக்கிய அந்த தியாக செம்மல்களை வணங்குவதற்கு கிடைத்துள்ள தூய வாரம்.[/size] [size=4]ஆண்டாண்டு காலமாக அடக்குமுறைக்குள்ளும் ஆக்கிரமிப்புக்குள்ளும் சிக்கிச்சீரழிந்து உரிமைகள் பறிக்கப்பட்ட வெறும் உடலங்களாக சிஙகளதேசத்தின் அடிமைகளாக வாழ்ந்த தமிழினத்தின் விடிவுக்காக ஆயுதம் தரித்து தாய்மண்ணுக்காக உயிர்துறந்த அஞ்சா நெஞ்சங்களையே இவ்வாரத்தில் நாம் நினைவு கூருகிறோம். தமது இனத்தின் விடிவே தமது …
-
- 8 replies
- 1.1k views
-
-
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் முதலாம் நாள்…! AdminSeptember 15, 2021 செப்.15 – 1987 🔴தியாக பயணத்தின் முதலாவது நாள்! காலை ஒன்பது மணியிருக்கும் பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனை சந்தித்து விடை பெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாக பேசுகிறார். வாக்கி டோக்கியில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற வாகனத்தை நோக்கி நடக்கிறார். எல்லோரும் பின் தொடர்ந்தோம். ஆம் அவரது தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது. மிக மிடுக்காக நடந்து முன் ஆசனத்தில் போய் ஏறினார். அவரது பக்கத்தில் சொர்ணம், அன்ரன் மாஸ்ரர், முரளி. பின் ஆசனத்தில் காசி ஆனந்தன், ராஜன், நான் வேறும் சிலர்.வாகனம் நல்லூர் கந்தசாமி கோவிலை நோக…
-
- 1 reply
- 1.1k views
-
-
18.07.1996 அன்று முல்லைத்தீவு படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட “ஓயாத அலைகள் - 1” படை நடவடிக்கையில் முதலாம் நாள் சமரில் வீரகாவியமான லெப்.கேணல் சுதர்சன் உட்பட்ட 158 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஓயாத அலைகள் - 1 என்ற குறியீட்டுப் பெயருடன் தொடங்கப்பட்ட இந்த படை நடவடிக்கையில் முல்லைத்தீவு சிறிலங்கா படைத்தளம் முற்றாகத் தாக்கியழிக்கப்பட்டது. இதன்போது ஆயிரத்திற்கும் அதிகமான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். ஆட்டிலறிப் பீரங்கள் இரண்டு உட்பட பலகோடி ரூபா பெறுமதியான போர் கருவிகள் மீட்கப்பட்டன. இந்த நகர்வை முறியடிக்கும் நோக்கில் அலம்பில் பகுதியில் தரையிறக்கப்பட்ட சிறிலங்கா படையினரின் நகர்வும் முறியடிக்கப்பட்டு சிறிலங்கா படைத்தரப்பிற்கு பேரிழப்பு ஏற்படுத்தப்பட…
-
- 9 replies
- 1.1k views
-
-
எத்தடை வரினும் எம்படை நகரும் கப்டன் அன்பரசி படையணி எத்தடை வரினும் எம்படை நகரும் அன்பரசி படையணியின் வீரம்கண்டு எதிரி அதிர்ந்தான். 29.07.1995ம் ஆண்டு அம்பாறை மாவட்டம் 4 ஆம் முச்சந்தி சிறிலங்கா படை முகாம் தாக்குதலின்போது கப்டன் அன்பரசி வீரச்சாவடைந்தாள். அன்பரசி ஒரு சுறுசுறுப்பான விவேகமான போராளி. இவளது ஞாபகமாகவே மட்டு – அம்பாறை மகளிர் படையணிக்கு அன்பரசி படையணி என்று பெயர் சூட்டப்பட்டது. லெப். கேணல் மதனாவினது சுறுசுறுப்பையும், துணிவையும், புத்துணர்வையும், களங்களில் படைநடத்தும் திறமையையும் கண்ணுற்ற மட்டு அம்பாறை மாவட்ட சிறப்புத்தளபதி அவர்கள் படையணியின் முதல் சிறப்புத் தளபதியாக லெப். கேணல் மதனாவை அன்பரசி படையணியின் சிறப்புத்தளபதியாக நியமித்தார்.…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 16 அக்டோபர் 2011 11:06 | இன்று கடற்கரும்புலி லெப்.கேணல் வளவன் வீரவணக்க நாள் 15.10.2006 அன்று தமிழீழக் கடற்பரப்பில் வீரகாவியமான கடற்கரும்புலி லெப்.கேணல்வளவன் அவர்களின் 4ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=10273:2011-10-16-11-06-51&catid=1:aktuelle-nachrichten&Itemid=50
-
- 12 replies
- 1.1k views
-
-
‘பல கரும்புலி வீரர்கள் இன்று பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்கிய போதும் அவர்களது அற்புதமான சாதனைகள் வாரலாற்றுக் காவியங்களாக என்றும் அழியாப் புகழ் பெற்றுவாழும்.” தமிழீழத் தேசியத் தலைவர் திரு. வே.பிரபாகரன். எழுத முடியாத காவியங்கள் எப்படி இவர்களுக்கு முகங்களில்லையோ, முகவரியில்லையோ அதேபோலத்தான் எத்தைகைய அறிவாலும், எத்தகையஞானத்தாலும் கணிப்பீடு செய்யக்கூடிய வகையில் இவர்களது உள்ளகமும் இல்லை. இங்கே எடுதப்பட்;டுள்ளவை எல்லாம் இவர்களோடிணைந்த சில சம்பவங்கள் மட்டுமே. அந்தச் சம்பவங்களினூடு, உங்களால் முடிந்தால் அவர்களது மனவுணர்வுகளை மதிப்பீடு செய்து கொள்ளுங்கள். அவர்களது சிந்தனைப் போக்கின் தன்மைகளைஉய்தறிந்து கொள்ளுங்கள் தனிமனித அபிலாசைகளுக்கு அப்பால் சுயத்தின் சிறைக…
-
- 1 reply
- 1.1k views
-
-
[size=4]18.10.1997 அன்று திருமலை புல்மோட்டை கடற்பரப்பில் சிறீலங்கா கடற்ப்படையின் அதிவேக டோறாப் படகினை மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலின் போது வீரசவத் தழுவிக்கொண்ட[/size] [size=4]கடற்கரும்புலி மேஜர் சிறி (திருமாறன்) [/size] [size=4]கடற்கரும்புலி கப்டன் சின்னவன் [/size] [size=4]ஆகியோரின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.[/size] [size=4]தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.[/size] http://www.facebook.com/karumpulimaveerarkal
-
- 15 replies
- 1.1k views
-
-
கரும்புலி லெப்டினன்ட் கண்ணன் நவம்பர் 12, 2020/தேசக்காற்று/தேசத்தின் புயல்கள்/0 கருத்து கனவை நனவாக்கியவன் கரும்புலி லெப்டினன்ட் கண்ணன் / சத்துருக்கன். 1991ம் ஆண்டு 9ம் மாதம் மணலாற்றில் ‘மின்னல்’ இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. அப்போது அனைத்துப் போராளிகளும் சண்டைக்கத் தங்களை தயார்ப்படுத்திக்கொண்டு இருந்தார்கள. சத்துருக்கன் சின்னவன் என்ற காரணத்தால் பொறுப்பாளர் அவனைச் சண்டைக்கு அனுப்பவில்லை. உடனே அவரிடம் சென்ற, “நீங்கள் ஏன் என்னைக் கழித்துவிட்டீர்கள்? ஏன் நான் சண்டை பிடிக்காமாட்டேனோ? இப்படித்தான் நீங்கள் என்னைப் பலமுறை ஏமாற்றி விட்டுச் சண்டைக்கு சென்றீர்கள் ஆனால் இந்த முறை என்னையும் கூட்டிக்கொண்டு போகவேணும்” என்று அடம் பிடித்து சண்டைக்குச்…
-
-
- 2 replies
- 1.1k views
-
-
சாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு சிங்கள படைகளின் போர்முனைத் தளங்களில் அதிகம் உயரமில்லாத மிகமிக மெலிந்த ஓரல்முகமும் மினுங்கும் கண்ணும் கொண்ட சிற்றுருவம் ஒன்று நடுநிசியில் உலாவித் திரியும். கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லிருக்கும். ஒருமுறை கண்டுவிட்டு மறுவேளை பார்த்தால் மறைந்துவிடும். சுட்டால் சூடுபிடிக்காது. வருவதுபோல் தெரிந்தால் பின் எப்படிப் போனதென்று தெரியாது. ஆயிரம்பேர் வைத்துத் தேடினாலும் கண்ணுக்குள் புலனாகாது. இப்படியொரு பிசாசு சிங்கள இராணுவத் தளத்தில் உலவுவதாகக் கதையிருந்தால் அதுதான் வீரமணி. வீரமணியிடம் தலைமுறை தலைமுறையாக சலிக்காது கேட்கக்கூடிய வீரக்கதையிருந்தது. கற்பனைக் கதையல்ல. அவனே நாயகனாயிருந்த கதைகள். விகடம் தொனிக்க அவன் அவிட்டுவிடும் கதைகள். பச்சைப் புளு…
-
-
- 5 replies
- 1.1k views
-
-
லெப். கேணல் விக்கீஸ்வரன் ஆளுமை, பணிவு, வேகம், செயற்றிறன், துணிவு குறிப்பறிந்து பணி செய்யும் ஆற்றல் மிக்க ஒரு விடுதலை வீரன். லெப். கேணல் விக்கீஸ்வரனின் வீரவணக்க நிகழ்வில் செ.யோ.யோகி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து… இவர் 1991 இன் இறுதிப் பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தார். 1992, 1993 ஆம் ஆண்டுகளில் பயிற்சி ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1994 இல் இருந்து 1996 வரை எதிரி பற்றிய தகவல் சேகரிப்பில் ஈடுபட்டார். இவர் பெரும்பாலும் களநிர்வாகப் பொறுப்பாளராகவும் பின்னணி ஒழுங்கிணைப்பாளருமாக இருந்தார். 2000 ஆம் ஆண்டு மீள இணைந்தோரின் (4.1) படையணிக்குப் பொறுப்பாக இருந்தார். இதேயாண்டு உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற 21 காப்பரண்கள் மீதான தாக்…
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழீழ தாயக விடியலுக்காய் தங்களது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மானமா வீரர்களுக்கு எமது வீர வணக்கம். http://www.eeladhesa...=3944&Itemid=53 http://www.eeladhesa...=3943&Itemid=53 http://www.eeladhesa...ndex.php?option தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்துக்காக தம்மை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.
-
- 4 replies
- 1.1k views
-
-
[size=5]நண்பா ! யாருக்கும் தெரியா மனது [/size] [size=5]சதா கவலையில் மூழ்கிக்கிடக்கிறது[/size]
-
- 7 replies
- 1.1k views
-
-
பச்சைப் பசேல் என்ற குளிர்மைக்காடு அது. அதுதான் எங்கள் மணலாறு. பசுமை மரங்களின் நடுவே நாம் போராளிகளாக நிமிர்ந்த நாட்கள், போராளிகள் என்ற நிமிர்வு ஒருபுறம். அண்ணனுடன் இருக்கின்றோம் என்ற… தலைக்கிரீடம் ஒருபுறம்.. நிச்சயமாக… நிச்சயமாக என்னால் எம்மால் மறக்க முடியாத நாட்களாகிவிட்டன. இந்திய இராணுவக் காலப்பகுதி, ஓ! அதுதான் மேஜர் சோதியாக்காவை நாம் கண்டு பழகி, வழிநடந்த, நேசித்த காலம். நெடிதுயர்ந்த பெண், வெள்ளையான நிமிர் தோற்றமான பெண். பல்வரிசை முழுமையாகக் காட்டிச் சிரிக்கும் மனந்திறந்த சிரிப்புடன் எம்மைப் பார்வையிட்ட அந்த இனியவர் அப்போ தலைமை மருத்துவராகக் காட்டில் வலம் வந்தவர். சோதியாக்கா வயித்துக்குத்து… சோதியக்கா கால்நோ… சோதியாக்கா காய்ச்சல்… சோதியாக்கா…. சோதியாக்கா…
-
- 6 replies
- 1.1k views
-