Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நினைவு

மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.

  1. கப்டன் றோய் டிசம்பர் 31, 2020/தேசக்காற்று/அணையாத தீபங்கள்/0 கருத்து எங்களோடும் எங்கள் ஊரோடும் நினைவாகிப்போன கப்டன் றோயண்ணா…! “ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே….இசைநெஞ்சே”…… இதுவொரு சினிமாப்பாடல். இந்தப்பாடல் போல பலரது நினைவுகளை பல பாடல்களும் அவர்கள் விரும்பிக் கேட்ட அல்லது விரும்பிப் பாடியவையும் நினைவுகளாய் தந்த ஞாபகங்கள் எல்லோருக்குமே இருக்கும். அந்த நினைவுகள் பலரது இழப்புகளை அவர்களது தியாகங்களை வரலாற்றில் பதித்து விட்டுச் சென்ற கதைகள் ஆயிரம். அத்தகையதொரு நினைவைத் தந்து சென்ற ஒரு மாவீரனை நினைவு தருகிற பாடல் :- “வானுயர்ந்த காட்டிடையே நான் இருந்து பாடுகின்றேன் வயல் வெளிகள் மீது கேட்குமா-இது …

  2. தமிழீழ போராட்ட வரலாற்றில் ஒருபுரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி தமிழீழ தேசிய ஆன்மாவை தட்டிஎழுப்பிய நிகழ்ச்சி பாரத நாட்டை தலைகுனிய வைத்த நிகழ்ச்சி உலகத்தின் மனட்சாட்சியை தீண்டிவிட்ட நிகழ்ச்சி என்று தீர்க்க தரிசனமாக தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் அன்று தெரிவித்துள்ளார். ஈகைச்சுடர் லெப்ரினன் கேணல் திலீபனின் 26ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் இந்திய அமைதிப்படைக்கு எதிராக ஜந்தம்ச கோரிக்கையினை முன்வைத்து சாகும்வரை உண்ணா நோன்பிருந்து காந்திதேசத்தின் முகத்தில் கரியை பூசிய இராசையா பார்த்தீபன் என்று அழைக்கப்படும் லெப்பரினன் கேணல் திலீபனின் 26ஆம் ஆண்டு நீங்கா நினைவுகளை எங்கள் மனதில் நிறுத்தி விடுதலை பயணத்தினை தொடர்வோம்.. அதேவேளை தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் வான்…

  3. போர்க்குற்ற ஆதாரங்கள்

  4. 28.06.1995 அன்று திருகோணமலை மாவட்டத்தில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் காந்தன்(கில்மன்) உட்பட்ட மூன்று மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். திருகோணமலை மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் ஆளுகையை வலுப்படுத்தும் நோக்கில் 1995ம் ஆண்டில் சாள்ஸ் அன்ரனி படையணி லெப்.கேணல் கில்மன் தலைமையில் தேசியத் தலைவர் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டது. பல்வேறு நெருக்கடிகளிற்கு மத்தியில் காட்டுப்பகுதிகளில் வலுவான தளங்களையமைத்துடன் சிறிலங்கா படையினர் மீதும் பல அதிடித் தாக்குதல்கள் நடாத்தப்பட்டு சிறிலங்கா படையினருக்கு பலத்த இழப்புக்கள் சாள்ஸ் அன்ரனி படையினரால் ஏற்படுத்தப்பட்டது. காட்ட…

  5. அம்பாறையில் காவியமான அம்பாறை மாவட்டத் தளபதி லெப்.கேணல் ரஞ்சன் உட்பட்ட 8 மாவீரர்களினதும், யாழ். மாவட்டத்தில் வீரச்சாவைத் தழுவிய இரு மாவீரர்களினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 27.08.1995 அன்று அம்பாறை மாவட்டம் வம்மியடிக்குளம் பகுதியில் சிறலங்கா சிறப்பு அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிய அம்பாறை மாவட்டத் தளபதி லெப்.கேணல் மாருதியன் (ரஞ்சன்) (செல்லத்துரை பிரபாகரன் - தம்புலுவில், அம்பாறை) கப்டன் கமால் (கந்தையா செல்வராசா - அம்பாறை) கப்டன் மதனமோகன் (கிறிஸ்ரி) (செல்லத்துரை நாகேந்திரன் - கோமாரி, அம்பாறை) லெப்டினன்ட் நவரங்கன் (நிசாந்தன்) (கிருஸ்ணபிள்ளை ராஜமோகன் - தம்புலுவில், அம்பாறை) 2ம் லெப்டினன்ட் அறிவொளி (…

  6. [size=4]கடற்கரும்புலி லெப்.கேணல் அனோசன் (மாதவன்),கடற்கரும்புலி மேஜர்[/size] [size=4]அருணா (சுதா), கடற்கரும்புலி மேஜர்[/size] [size=4]நித்தியா, கடற்கரும்புலி மேஜர்[/size] [size=4]காந்தி (வேங்கை), ஆகிய கரும்புலி மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு வணக்கம்[/size]

  7. [size=4]04.11.1999 அன்று முல்லைக் கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட படகுவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் முத்துமணியின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.[/size] [size=6]கரும்புலிகள் உயிராயுதம்[/size]

  8. எங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன் லெப். கேணல் மல்லி.! எங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன் மல்லி.! லெப். கேணல் மல்லி, விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவன். இவன் விடுதலைப்போராட்ட காலத்தில் பல களங்களில் தன் முத்திரையைப் பதித்தவன்.இரு தேசங்களின் ஆக்கிரமிப்பு இராணுவங்களுடன் இவன் போராடினான். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு என்னும் இடத்தில் பிறந்தான். நீண்ட போராட்ட வாழ்வில் ஒயாது கடுமையாக உழைத்தவன். தனைவருத்தி தன்னொளி பார்த்தவன். அமைதிப் போர்வையுடன் வந்த இந்தியப் படைகள் முள்ளியவளையில் முகாம் இட்டிருந்தன. 1990ம் ஆண்டில் இம்முகாம் மீதான தாக்குதலில் பங்கேற்று நின்றான். இந்தக் காலப்பகுதியிலேயே அவர்களோடு கூட்டாக நின்ற கும்பல்கள், கிளிநொச்சி 18ம் போர் எனும் இடத்…

  9. கப்டன் லோலோ டிசம்பர் 31, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள்/0 கருத்து கப்டன் லோலா ஈரநினைவாய்…..! நெடிய தோற்றம். தேவையின்றிக் கதைக்காத சுபாவம். ஆனால் விழிகள் எப்போதும் ஆக்கிரமிப்பாளனின் நடமாட்டத்தை அவதானித்தபடியிருக்கும்.கழுத்தில் சயனைட்டோடு ஒரு சிலுவை அவன் கழுத்தில் எப்போதுமே இருந்தது. குப்பிளான் கேணியடியிலிருக்கும் எங்கள் கடைக்கு அடிக்கடி வருவான். தன் தோழர்களுக்கு உணவுப்பொருட்கள் வாங்குவான். வசாவிளானில் சென்றியிருக்கும் போராளிகளுக்கு அம்மாவிடம் பாணும் சம்பலும் வாங்கிக் கொண்டு போவான். சிலசமயம் ஏதாவது கிறுக்கு வேலை செய்து அம்மாவிடம் பேச்சும் வாங்குவான். என்னுடன் ஏதாவது கொழுவுவான். வைரமுத்து வளவுப்பனங்கள்ளை அடித்தபடி இஞ்சை வாடாப்பா …

  10. [size=3] [size=4]11.09.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் எழில்வேந்தன், லெப்.கேணல் வேங்கை, லெப்.கேணல் திருவருள் உட்பட்ட கடற்புலிகள் மற்றும் லெப்.கேணல் தமிழ்மாறன்(கஜேந்திரன்) ஆகியோரினதும் நினைவு நாள் இன்றாகும்[/size] [size=4][/size][/size] [size=4]http://www.eeladhesa...chten&Itemid=50[/size] [size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். [/size] [size=5]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size][size=4] [/size]

  11. "முல்லை மாவட்டம் ஆனந்தபுரம் பகுதியில் வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள படைகள் வீசிய இரசாயன நச்சுக்குண்டுத் தாக்குதலில் 04.04.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் ஆதவன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா, கேணல் நாகேஸ், கேணல் தமிழ்ச்செல்வி, கேணல் அமுதா உட்பட ஆனந்தபுரத்தில் உயிர்நீத்த 700 மாவீரர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் ,04.04.2020" முல்லை மாவட்டம் ஆனந்தபுரம் பகுதியில் வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள படைகள் வீசிய இரசாயன நச்சுக்குண்டுத் தாக்குதலில் 04.04.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் மணி…

  12. தமிழீழ விடுதலைப் போரில் ஓராண்டுக்குள் தம்மை ஆகுதியாக்கிய லெப்டினன்ட் இன்பமுதன், லெப்.கேணல் தேவநேயன், கப்டன் வளவன் ஆகிய உடன்பிறப்புக்களில் முதலாவதாக வீரச்சாவை அணைத்துக் கொண்ட லெப்டினன்ட் இன்பமுதனின் 14ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். [size=2][size=4]தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு மாவீரர்கள் கணிசமானோர் வீரச்சாவைத் தழுவியுள்ளனர். இரண்டிற்கும் மேற்பட்ட மாவீரர்களைக் கொண்ட குடும்பங்கள் மிகச் சிறிய எண்ணிக்கையே. இவர்களில் வடமராட்சி கிழக்கு, ஆழியவளைச் சேர்ந்த லெப்டினன்ட் இன்பமுதன், லெப்.கேணல் தர்சன் மற்றும் கப்டன் வளவன் ஆகியோரின் குடும்பமும் அடங்கும் இவ் உடன்பிறப்புக்கள் மூவரும் ஓராண்டிற்குள்ளாகவே தாயக விடுதலைக்கான கடமையின்போது தம்மை ஆகு…

  13. வித்தாக வீழ்ந்த கிரான் மண்ணின் வீரமறவன் கப்டன் ஜிம்கலி On Jun 27, 2020 விடுதலைக்கான வீரமிகு போராட்டம். விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் போராடி, இழந்த தமது தாய் நாட்டை மீட்டெடுத்து தம்மைத்தாமே ஆட்சி செய்த வெற்றிமிகு போராட்டம் ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக் கொண்டிருக்கின்ற எமது மக்கள் விடுதலை பெற வேண்டும் என்ற உயரிய குறிக்கோள் ஒன்றைத்தவிர வேறு எவ்விதமான ஆசையும் எமது மாவீரர்களுக்கு இருந்ததில்லை. இவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கத்தையும் நாம் படிக்க வேண்டும் அதனுடாக விடுதலைப் பயணத்தில் எம்மையும் இணைத்துக் கொள்ள வேண்டும். என்பதுதான் பற்றோடு வாழ்கின்ற அனைத்து தமிழர்களின் பெரு விருப்பாகும்…

  14. லெப். கேணல் தர்சன் நவம்பர் 4, 2020/தேசக்காற்று/வீரத் தளபதிகள்/0 கருத்து களத்திலெங்கும் ஒலித்த குரல்: கேணல் கிட்டு பீரங்கிப் படையணி பளை – நாகர்கோவில் ஒருங்கிணைப்புத் தளபதி லெப். கேணல் தர்சன் இடைவிடாத எதிரியின் எறிகணை வீச்சுக்கும், காதைப் பிளக்கும் போர் விமானங்களின் குண்டு வீச்சுக்கும் வடமுனைப் போர் அரங்கு முகம் கொடுத்த வண்ணமிருந்தது. அது நீண்ட பல நாட்களாக சிறிலங்கா படையின் பிடியிலிருந்த பளைப் பிரதேசம். ஓயாத அலைகள் – 03 என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க போர் நடவடிக்கை மூலம் ஆனையிறவுத்தளத்தை உடைத்தெறிந்த போது அதனை நாம் வெற்றிகரமாக மீட்டுக்கொண்டோம். ஓயாத அலைகள் தனது தேவை கருதி ஓய்வுக்குத் திரும்பிய காலம், சிறிலங்காப் படைகள்…

  15. கப்டன் துளசிராம் நவம்பர் 11, 2020/தேசக்காற்று/வெஞ்சமரின் நாயகிகள்/0 கருத்து கப்டன் துளசிரா! மீண்டும் உன்னுடன் பகிர்வதற்காய் நிறைய… இருள் மௌனமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தது. ஆனால் அவர்களுக்கு அது ஒரு பொருட்டல்ல. நுளம்புச் சனியன் கை, கால் மூஞ்சி…… ஆ… ச்சீ குத்திக்குத்தி மனுசற்றை உயிரை எடுக்கும். கை அடிக்க…… பற்கள் குளிரில் கிட்டிக் கொள்ளும். வயிற்றுக்குள் குளிர் பந்தாகச் சுருட்டி உள்ளுறுப்புகள் நடுங்கும் குளிர். ஆனால்……? ஆ……ச்…… ஐயோ தும்மல் வாய்பிளந்து மூக்குளைஞ்சு…… ஆ… ச்… தும்மக்கூடாது; இல்லை நிச்சயம் அடிக்கியபடி…… பாம்பு ஒன்று நொளுநொளெண்டு வளுவளுத்தபடி முதுகாலை வழிய…… ஆட்டி விழுத்தலாம்……? உடல்கூசி…… ஐயோ அசையக்கூடாதே! அசைஞ்ச…

  16. லெப். கேணல் ஈழப்பிரியன் டிசம்பர் 31, 2020/தேசக்காற்று/அணையாத தீபங்கள்/0 கருத்து பிரியா என் அன்பு நண்பனே…! உனக்கு…… என் வீரவணக்கங்கள்..! ஈழப்பிரியன், ஆரம்பத்தில் இருந்தே அரசியல் துறைப்பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ் செல்வன் அவர்களின் வளர்ப்பில் வளர்ந்தவன். மெய்ப்பாதுகாவலனாக, தனிப்பட்ட உதவியாளனாக, கிலோ வண் முகாம் பொறுப்பாளனாக, அரசியல் துறைக்கு ஆயுத அறிக்கை பரிசோதனாக, பயிற்சியாளனாக, துப்பாக்கி சூட்டு பயிற்சியாளனாக, வினியோக அணி பொறுப்பாளனாக, முகாம்கள் கட்டுமான பணிப்பாளனாக, இறுதியாக படையணிப்பொறுப்பாளனாக….. எவ்வளவு பணிகள்? எவ்வளவு பொறுப்புக்கள்.. சிறிய வயதிற்குள்.. மிகப்பெரிய பொறுப்புக்கள்… கிளிநொச்சி உருத்திரபுரம் தான்…

  17. முள்ளிவாய்க்கால் வரை எதிர்நின்று சமராடிய லெப்.கேணல் தமிழ்மாறன்….! 22.10.2007 அன்றைய நாளை தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களும் ஏன் உலக இராணுவ வல்லுனர்களும் இலகுவில் மறந்து விடமாட்டார்கள். எல்லாளனைத் தோற்கடித்ததாகப் பெருமைகொண்ட சிங்கள இனத்திற்கு, யார் எல்லாளன் என்பதை தமிழீழ தேசியத் தலைவர் காண்பித்த நாள் அது. ஏன் இந்த உலகமும் எல்லாளனை அறிந்துகொண்டது அந்த நாளில்தான். இந்த எல்லாளன் நடவடிக்கை ஒரு சில மணி நேரங்களுக்குள் நடந்து முடிந்துவிட்டபோதும், இதற்கான திட்டமிடல்களும், பயிற்சிகளும், வேவுகளும் மிக நீண்ட காலமாக இடம்பெற்றன. இந்த வெற்றிக்காக கொடுக்கப்பட்ட விலையும் மிகவும் அதிகம். இந்த வெற்றிக்காக 21 அற்புதமான போராளிகள் தங்கள் உயிர்களை விலையாகக் …

  18. நீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.!.! On Jun 26, 2020 கண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை 10.2000 விடுதலைப் போர்களத்திற் புலிகள் இயக்கம் தீக்குளித்த நாட்களுள் அன்றைய நாளும் ஒன்று. ஆனையிறவை முற்றுகையிட்டிருந்த புலிகளின் இத்தாவிற் போர்க்களம் அது. அமைதியாகவே விடிந்திருந்த அந்தப் போர்க்களத்தைச் சிறிது நேரத்திலேயே பெரும் எரிமலைபோல் வெடிக்கச் செய்தான் எதிரி. புலிகளை மட்டுமல்ல, தமிழனின் வீரம்பேசி எழுந்துநின்ற அந்தச் சின்னஞ்சிறு பிரதேசத்தையே பூ…

  19. 2ம் லெப்டினன்ட் சுரேந்தினி வலிகாமத்தின் வடபகுதியில் அமைந்த அழகிய கிராமம்தான் இளவாலை. விவசாயிகளின் கை வண்ணத்ததில் பசுமை குறையாது செழிப்புடன் விளங்கியது. தமிழீழ சுதந்திரப் போராட்டத்திற்கு பெரும் உறுதுணையாக பல ஆண், பெண் போராளிகளைத் தந்து புகழிபூத்த மண்ணது. அந்த மண்ணில் பிறந்ததாலோ என்னவோ ஜனந்தினியும் அச்சம் சிறிதும் இன்றி ஆயுதம் கரத்தில் ஏந்தி களம் பல கண்டு வீரச்சாவை புகழுடன் தழுவிக் கொணடவள். இளவாலையைச் சேர்ந்த பரமானந்தம் தம்பதிகளுக்கு மூன்று சகோதரர்களுக்கு ஒரே ஒரு அன்புச் சகோதரியாக ஜனந்தினி மலர்ந்தாள். ஒரேயோரு பெண் குழந்தை என்று பெற்றோரும் இனத்தவர்களும் மிகச் செல்லமாக ஜனந்தினியை வளர்த்தார்கள். அவளை நல்ல முறையில் கற்பித்து ஆளாக்க வேண்டுமென பெற்றோர் பெருவிருப்புக…

  20. லெப். கேணல் மணிவண்ணன் நவம்பர் 4, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள்/0 கருத்து வெல்வோம் அல்லது வெற்றிக்காக வீழ்வோம்: இம்ரான் – பாண்டியன் லெப். கேணல் மணிவண்ணன். அடர்ந்த காடு அதற்குள்ளால் நடைபயணம். கடக்க வேண்டிய தூரம் நினைத்துப் பார்க்க முடியாதது. ஆனால் கடந்தாக வேண்டும். நினைத்தவுடன் தண்ணீர் குடித்தவன் பசித்தவுடன் வயிறு நிரப்பிக் கொண்டவன். இந்தப் பயணம் முடியுமட்டும் இவை கிடைக்குமா இல்லையா என்றும் தெரியாமல் எப்படித்தான் பயணிப்பது? அவனது கால்கள் இந்தப்பயணத்திற்கு ஒத்துழைக்குமா என்பதற்கு எந்த ஆதாரங்களுமில்லை. அவன் எப்படித்தான் அடியெடுத்து வைப்பது? இப்போதுதானே அவன் போராளியாகியிருந்தான். பயிற்சிகளை இனித்தான் பெறவேண்டும். அந்தப் பய…

  21. கப்டன் ஈழமாறன் நவம்பர் 11, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள்/0 கருத்து “டேய் மச்சான் என்னைக் கொண்டுபோய் விடுறா…. என்ர பொடியள் என்ன மாதிரியோ…. விடடா மச்சான்….” வைத்தியசாலையின் கட்டிலில் இருந்தபடி, காலில்குத்திய திருக்கைமுள்ளைப் பற்றிப் பெரிதும் கவலைப்படாதவனாய், வேதனைகளை மறைத்தபடி, தன் அருகில் இருந்த போராளியிடம் கூறிக்கொண்டிருந்தான் ஈழமாறன். அவனின் நச்சரிப்பினைத் தாங்காது வைத்தியரிடம் சொல்லும் அவர்களுக்கு, அவரின் வார்த்தைகள் ஏமாற்றத்தையே கொடுக்கும். “விசம் உடனே இறங்காது தம்பி, இதால ஆக்கள் செத்துப்போய் இருக்கினம்: ஒரு இரண்டு நாள் பொறும், பிறகு போகலாம்” எனப் புன்னகைதனை முகத்தில் தவழவிட்டவாறு சொல்வதை, ஏமாற்றத்துடன் பார்ப்பான் அவன். அதனை…

  22. மேஜர் செங்கோல் டிசம்பர் 24, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள்/0 கருத்து பெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற தனது பெயரைக் காப்பாற்றிய ஒரு காவியம் இன்று எங்களுடன் இல்லை. மணலாற்றில் களவரலாற்றில் இவனது நிதிப்பணியை நினைத்துப் பார்க்கிறேன்…. நிதிப்பொறுப்பாளனாய், தோளில் பணப்பையைத் தொங்கவிட்டபடி ஓடி ஓடிக் கடமையைச் சரிவரச் செய்த நாட்கள் தான் எத்தனை.? நிதி இருக்குமிடத்தில் நீதியிருப்பதில்லை. நீதியிருக்குமிடத்தில் நிதியிருப்பதில்லை. ஆனால் செங்கோலிடம் நிதியும், நீதியும் இணைந்திருந்தன. ச…

  23. கடற்கரும்புலி கப்டன் அறிவரசன் டிசம்பர் 30, 2020/தேசக்காற்று/கடற் கரும்புலிகள்/0 கருத்து கடற்கரும்புலி கப்டன் அறிவரசன்: “தக்க நேரத்தில்” “ஓயாத அலைகள் 03” சூடுபிடித்து நகர்ந்து கொண்டிருந்த நேரம். ஆனையிறவுப் பெருந்தளத்தை அழிப்பதற்கான நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தன. இந்த நாட்களில் ஒருநாள் 30-12-1999ம் அன்று கிளாலியிலிருந்து ஆனையிறவை நோக்கி எதிரியின் 3 நீருந்து விசைப்படகுகள், 4 கூவக் கிறாப் 7 – 8 புளுஸ்ரார் என்பன நகர்ந்து கொண்டிருந்தன. இந்த எதிரியின் நகர்வை முறியடிக்க, கடற்புலிகளின் சிறிய ரகப் படகுகள் இரண்டுடன் ஒரு கரும்புலி படகும் அணியமாகியது. இந்நிலையில் கடற்புலிகள் எதிரியின் கலன்களை வழிமறித்து தாக்குதல் செய்ய கரும்புலிப் படகின் ப…

  24. கடற்கரும்புலி மேஜர் பாலன் உட்பட்ட ஏழு மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு 28.06.1997 அன்று திருமலைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் தாக்குதலைத் தொடர்ந்து இடம்பெற்ற படகு விபத்தின்போது வீரச்சாவைத் தழுவிய ஆறு மாவீரர்களினதும் இதன்போது படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் தனது நாக்கினை தறித்து தலையை கட்டிலுடன் மோதி தற்கொடை செய்த கடற்கரும்புலி மேஜர் பாலனினதும் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தென்தமிழீழத்திலிருந்து போராளிகள் படகுகள் மூலம் வன்னிக்கு வந்து கொண்டிருந்தபோது சிறிலங்கா கடற்படையினரால் தாக்கப்பட்டது. இதன்போது ஒரு விபத்திற்குள்ளாது. படகு விபத்தைத் தொடர்ந்து நீந்திக் கரையையடைந்த கடற்கரும்புலி மேஜர் பாலன் மயங்கிய நிலையில் படையினரால் கைது செய்யப்பட்டார். படையினரி…

  25. அதிகாலை 5.00 மணிக்கே திலீபன் உறக்கத்தை விட்டு எழுந்து விட்டார். முகம் கழுவித் தலைவாரிக் கொண்டார். சிறுநீர் கழித்தார், ஆனால் மலம் இன்னும் போகவில்லை. அவர் முகம் சோர்வாகக் காணப்பட்டாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் எல்லோருடனும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். சகல தினசரிப் பத்திரிகைகளையும் ஒன்றுவிடாமல் படித்து முடித்தார். பத்து மணியளவில் பக்கத்து மேடையிலே நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. நிகழ்ச்சிகளுக்குத் “தேவர்” தலைமைதாங்கிக் கொண்டிருந்தார். கவிதைகளை படிப்பதற்காக இளம் சந்ததியினர் முண்டியடித்துத் தம் பெயர்களைப் பதிவு செய்து கொண்டிருந்தனர். “நிதர்சனம்” ஒளிபரப்பாளர்களின் வீடியோ கமெரா, நாலா பக்கங்களிலும் சுழன்று படம் பிடித்துக் கொண்டிருந்தது. மேடையில் கவிதைகள் முழங்கி கொண்டிருந்தப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.