Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாவீரர் நினைவு

மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.

  1. 28.12.1994 அன்று மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு - அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் 17 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். லெப்.கேணல் லக்ஸ்மன் - பொம்பர் (வேலாயுதம்பிள்ளை ஜெயக்குமார் - வாழைச்சேனை, மட்டக்களப்பு) மேஜர் துவாரகன் - பிரதீப் (சிவஞானம் முத்துலிங்கம் - முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு) மேஜர் நிதர்சராஜா (நிவேசன் (மயில்வாகனம் - ஏரம்பமூர்த்தி மட்டக்களப்பு) மேஜர் சத்தியா (அருச்சுனப்பிள்ளை மோகன்பிள்ளை - பதுளை) கப்டன் இதயராஜன் (இராமகுட்டி பேரின்பராஜா - கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு) கப்டன் வித்துவான் (இரத்தினசிங்கம் மோகனரெத்தினம் - க…

    • 12 replies
    • 2.1k views
  2. தமிழீழ தாயக விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கிய வீரவேங்கைகளில் 17 ஆயிரம் வரையான மாவீரர்களின் பெயர் விபரங்கள், மற்றும் ஒளிப்படங்கள், வீரவரலாறுகள் உட்பட்ட பல்வேறு விடயங்களுடன் வீரவேங்கைகள் இணையம் இன்று முதல் இணைய வலையில் கால் பதிக்கிறது. www.veeravengaikal.com

  3. பண்டாரவன்னியன் அரசாண்ட மண்ணில் லெப். கேணல் சுடரன்பன் அவதரித்தான்! முல்லை நிலமும், மருத நிலமும் ஒருங்கே அடி கொளிரும் மாவீரன் பண்டாரவன்னியன் அரசாண்ட மண்ணில் லெப். கேணல் சுடரன்பன் (ஆனந்தன்) அவதரித்தான். முல்லைத்தீவு பாண்டியன் குளம் பிரதேசத்தில் கரும்புள்ளியான் எனும் கிராமத்தில் சுப்பிரமணியம் வள்ளியம்மை தம்பதிகளுக்கு எட்டாவது மகனாக பிறந்தான் கிருசாகரன் ஆரம்பக்கல்வியை பாண்டியன்குளம் மகாவித்தியாலயத்திலும், உயர் கல்வியை யாழ்/ தெல்லிப்பழை மகாஜன கல்லூரியிலும் கல்விக்களம் கண்டான். கல்வி கற்கும் காலங்களில் இலங்கை இராணுவத்தின் கெடுபிடிகளை கண்ணெதிரே கண்டு வருந்தினான். 15 வயதினில் 1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் போது தென்பகுதியிலிருந்து இந்திய வாழ் மலையகத் தமிழ்மக்களை சிங்களவ…

  4. 13ம் ஆண்டு நினைவு லெப்.கேணல் வரதா (ஆதி) பாலசேகரம் சந்திரகுமாரி வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.10.2006

  5. லெப். கேணல் ஜஸ்ரின் எல்லையில் நின்று எதிரியை விரட்டியவன்: சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின். போர்முனைக்குச் சென்றவர்கள் வென்றதுண்டு வந்ததில்லை என்பார்கள். இதை ஜஸ்ரினும் படித்திருந்ததினாலோ என்னவோ இறுதியாக மணலாற்றுச் சண்டைக்குச் செல்வதற்கு முன்னர் தனது தாயை அவன் சந்தித்தபோது “அம்மா, நான் சண்டைக்குப் போறேன். ஆனால் நான் உயிரோடை திரும்பி வர மாட்டன்” என்று கூறிவிட்டுச் சென்றான். கண் தெரியாத அந்தத் தாயிடம் அதனைத் தெரிவித்துவிடவேண்டும் என்று அவனது உள்ளுணர்வு அவனைத் தூண்டியுள்ளது. தாக்கு மகனாகச் செய்ய வேண்டிய கடமையைவிட மண்ணின் மகனாக அவன் ஆற்றவேண்டிய கடமை அவனுக்குப் பெரிதாகத் தெரிந்தது. 1984ம் ஆண்டு காலத்திலிர…

  6. தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை பயிற்சியில் பயிற்சி வல்லுனராக விளங்கியவர் வசந்தன் மாஸ்ரர் . தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் வித்தகனாக செயற்பட்ட வசந்தன் மாஸ்ரர் என்று அழைக்கப்படும், மன்னார் மாவட்டத்தை நிலையான முகாவரியாக கொண்ட ஆறுமுகம் அன்பழகன் தொடக்க காலத்தில் விடுதலைப்புலிகளின் படைத்துறைபள்ளியின் ஆசானாக செயற்பட்டு பின்னர் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் பாதுகாப்பு அணியின் செயற்பாட்டாளனாகவும் பாதுகப்பு அணியின் தற்காப்பு பயிற்சி ஆசானாகவும் விளங்கினார். தோழா ! … தோழா ! …. என் தோழா !…. பின்னர் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் திட்டமிடல் செயற்பாடுகளுடன் அருகில் இருந்து செயற்பட்ட வசந்தன் அவர்கள் தலைவர் அவர்களின் பல திட்டமிடல்களுக்கு வல்லுனனாக விளங்கினார். தமிழீழ விடுதலை…

  7. தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 41ஆம் வீரவணக்க நாள் இன்றாகும் [Friday 2015-06-05 07:00] தமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த வேளை சிறிலங்கா காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்ட தருணத்தில் சயனைட் அருந்தி 05.06.1974ம் ஆண்டு அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட முதற் தற்கொடையாளர் தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 41ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். "தமிழீன ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்டு கல்வி தரப்படுத்தலை வீசியபொழுது அதை எதிர்த்து தமிழினப் புரட்சிக்கு வித்திட்டவர்" தியாகி பொன் சிவகுமாரன் மறைந்த நாளாகிய ஆனி 5ற்கு மறுநாள் ஆனி 6ஆம் நாள் தமிழீழ மாணவர் எழுச்சி நாளாக பிரகடனப்படுத்தி தாயகம் அடங்கலாக தமிழீழ மக்கள் வாழும் தேசங…

  8. தமிழீழ தாயக விடுதலைப் போரில் 1996ம் ஆண்டு வீரச்சாவை அணைத்துக் கொண்ட மாவீரர்களில் 1300ற்கும் மேற்பட்ட மாவீரர்களின் ஒளிப்படங்கள் வீரவேங்கைகள் தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன. கீழுள்ள இணைப்பில் சென்று படங்களைப் பார்க்கலாம். http://veeravengaikal.com/index.php/heroes-details/maaveerarlist?start=7783

  9. கடற்கரும்புலி மேஜர் அன்பு கண்ணீரைக்கடந்து… ‘அம்மா…. இன்பருட்டி வானுக்க நிக்கிற சக்கை வண்டியில அண்ணா நிக்கிறானம்மா…..’ மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வேர்த்து விறுவிறுத்தபடி ஓடி வந்த அம்மாவின் சின்னமகன் சொன்னபோது, அம்மாவின் அடிவயிற்றில் தீமூண்டது. வீட்டில் நின்ற கோலத்தோடே செய்த வேலையைப் போட்டுவிட்டு அம்மா கடற்கரைக்கு ஓடினாள். கூடவே அன்புவின் அன்பு உறவுகளும்…… இன்பருட்டி ‘வான்” அன்புவின் உறவுகளால் முற்றுகை இடப்பட்டதோடு, ஒப்பாரியும், ஓலமுமாய் அந்த ‘வான்” அதிர்ந்து கொண்டிருந்தது. அன்புவின் அம்மாவையும், உறவுகளையும், கூட நின்ற போராளிகள் தேற்ற முயன்று தோற்றுப்போய் நின்றார்கள். நிலைமையைச் சமாளிக்க வேண்டிய பொறுப்பு பொறுப்பாளரின் தலை…

  10. || மட்டக்களப்பு மாவட்டம் சித்தாண்டிப் பகுதியில் 21.07.1997 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 32 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு வீரவணக்க நாள் இன்றாகும் || சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற எதிர்பாராத மோதலில் தீரத்துடன் களத்திடை புலி மறவர்களாக பாய்ந்த வேங்கைகள்… மேஜர் ஜெயநீதன் (சதா) (வடிவேல் விமலன் – பெரிபுல்லுமலை, மட்டக்களப்பு) கப்டன் குலேந்திரன் (வனவேல் சுந்தரலிங்கம் – உன்னிச்சை, மட்டக்களப்பு) கப்டன் கார்முகிலன் (கோபு) (வெள்ளைச்சாமி கர்ணன் – நுணுகலை, மட்டக்களப்பு) கப்டன் தேரு (தம்பிரத்தினம் ஜெயாபரன் – ம்பிலுவில், அம்பாறை) லெப்டினன்ட் வன்னி (சின்னத்தம்பி புஸ்பராஜா – அக்கரைப்பற்று, அம்பாறை) லெப்டினன்ட் சபேசன் (செலலத்தம்பி கணேஸ் – சித்தாண்டி, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன…

  11. 29.10.1995 அன்று அளவெட்டியில் அமைந்திருந்த சிறிலங்கா படை நிலைகளிற்குள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 11 கரும்புலி வீரர்களின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் தாயக விடுதலைக்காய் தம்மை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். http://meenakam.com/historical/மாவீரர்கள்/2011/10/29 தமிழ் ஈழம் என்ற உயரிய இலட்சியத்துக்காக தம் இனிய உயிர்களை ஈகம் செய்த இந்த மாவீரர்களுக்கும், மற்றும் இன்றையநாளில் வீரசாவினைத்தளுவிய ஏனைய வீரமறவர்களுக்கும் எனது வீரவ…

  12. லெப். கேணல் தியாகன் தமிழீழ போரியல் வரலாற்றில் அதிகளவான கடற் சமர்களின் கதாநாயகனாக விளங்கிய ‘கடற்புலிகளின் சாள்ஸ் படையணி பொறுப்பாளன்’ லெப். கேணல் தியாகன். 1991ம் ஆண்டின் பிற்பகுதியில் தொடர்ச்சியாக மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவ ஆக்கிரமிப்புக்கள் இராணுவத் தாக்குதல்கள் காரணமாக விடுதலைப் புலிகளமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட தியாகன். கடற்புலிகளின் இரண்டாவது பயிற்சி முகாமான மாவீரரான மேஜர் யப்பான் நினைவாக அவரது பெயரில் உருவான ‘யப்பான் 02’ல் தனது ஆரம்பப் பயிற்சியை முடித்து; மேலதிக பயிற்சிக்காக கடற்புலிகளின் படைத்துறைப் பள்ளிக்கு செல்கிறான். அங்கு படிப்பிலும் விளையாட்டிலும் குறிப்பாக தொலைத்தொடர்பு சம்பந்தப்பட்ட வகுப்பிலும் சிறந்து விளங்கினான். அத்தோடு தொலைத்த…

  13. எனது அன்புத் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் தலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழம். மே.21.2008. எனது அன்பிற்கும் மதிப்பிற்குரிய தமிழீழ மக்களே! விடுதலைக்கான நீண்ட பயணத்திலே எமது சுதந்திர இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைப் புரிந்துருக்கிறது. எத்தனையோ வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. மகத்தான இராணுவ வெற்றிகளைக் குவித்திருக்கிறது. இந்த இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று, எமது சண்டையணிகளையும் மரபுப்படையணிகளையும் வழிப்படுத்தி, நெறிப்படுத்திச் சமராடிய எமது வீரத்தளபதி இன்று எம்முடன் இல்லை. இவரது இழப்பால் எமது தேசம் ஆற்றமுடியாத துயரத்திலும் ஆழ்ந்த வேதனையிலும் இன்று மூழ்கிக்கிடக்கி…

  14. முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையில் 21.07.1996 அன்று வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் மிதுபாலன் மற்றும் கப்டன் சயந்தன் உட்பட்ட 12 மாவீரர்களின் 17 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். முல்லைத்தீவு படைத்தளம் மீதான || ஓயாத அலைகள் – 01 || நடவடிக்கை18.07.1996 அன்று தொடங்கப்பட்டு படைத்தளத்தின் பெரும்பகுதி மீட்கப்பட்ட நிலையில் இந்நடவடிக்கையை முறியடிக்கவும், இழந்த தளத்தை மீளக் கைப்பற்றவும் சிறிலங்கா கடற்படையினரால் அலம்பில் பகுதியில் தரையிறக்கப்பட்ட படையினரால் முல்லைத்தீவு தளம் நோக்கி பாரிய முன்னகர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்க மேலதிக தரையிறக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ச…

  15. இன்று குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 24 வது நினைவு நாள் (Video & Photo in) Wednesday, October 5, 2011, 8:46 இலங்கை – இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் மற்றும் அப்துல்லா, ரகு, நளன், பழனி, மிரேஸ், றெஜினோல்ட், தவக்குமார், அன்பழகன், கரன், ஆனந்தக்குமார் ஆகியோரின் 24ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 1987ம் ஆண்டு இதே காலப்பகுதியில் தமிழீழக் கடற்பரப்பிலே பயணித்துக் கொண்டிருந்த லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளைக் கைதுசெய்து அவர்களின் சாவுகளுக்கு இலங்கை – இந்திய அரசுகள் காரணமாகின. அது அனைத்து மக்களையும் இன்னுமோர் சோகத்தில் ஆழ்த்தியது. 198…

  16. தமிழீழ தாயக விடியலுக்காய் தங்களது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மானமா வீரர்களுக்கு எமது வீர வணக்கம். http://www.eeladhesa...=3944&Itemid=53 http://www.eeladhesa...=3943&Itemid=53 http://www.eeladhesa...ndex.php?option தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்துக்காக தம்மை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.

  17. 2001ம் ஆண்டு க‌ட்டு நாய‌க்கா விமான‌த் த‌ள‌ம் மீதான‌ தாக்குத‌லில் வீர‌காவிய‌மான‌ 14 ம‌றைமுக‌ க‌ரும்புலிக‌ளுக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏/ சாள்ஸ் அண்ணாவின் வ‌ழி ந‌ட‌த்த‌லில் வெற்றி கொண்ட‌ மிக‌ பெரிய‌ தாக்குத‌லில் வீர‌ காவிய‌மான‌ 14 ம‌றைமுக‌ க‌ரும்புலிக‌ளுக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம் 😓 , ஆண்டு 18 க‌ட‌ந்தாலும் ம‌ற‌க்க‌ முடியாத‌ நாள் இந்த‌ நாள் 😓/ க‌ண் ம‌ணிக‌ள் உற‌ங்கினாலும் அவ‌ர்க‌ளின் தியாக‌ம் ஒரு போதும் உற‌ங்காது 🙏😓 / வீர‌ வ‌ண‌க்க‌ம் 🙏😓

  18. தமிழீழ தாயக விடுதலைப் போரில் 1990ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 15 920 மாவீரர்களின் பெயர் விபரங்கள் வீரவேங்கைகள் இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளன. தமிழீழ மாவீரர் பணிமனையினால் உருவாக்கப்பட்ட மாவீரர் விபரக்கோவை ஒன்றிலிருந்து பெறப்பட்ட விபரங்களே இணைக்கப்பட்டுள்ளன. இணைக்கப்பட்டுள்ள மாவீரர்களின் விபரங்களில் தவறுகள் இருந்தால் தயவு செய்து info@veeravengaikal.com என்ற மின்னஞ்சலுக்கு அறியத் தரவும். விபரங்களைப் பார்க்க கீழுள்ள இணைப்பில் அழுத்தவும். http://veeravengaika...t=20&start=1610

  19. புல்மோட்டைக் கடலில் காவியமான ஆறு கடற்கரும்புலிகள் உட்பட்ட ஏழு மாவீரர்களினதும், அம்பகாமத்தில் காவியமான 64 மாவீரர்களினதும், ஏனைய பகுதிகளில் காவியமான 4 மாவீரர்களினதும் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 14.10.1999 அன்று புல்மோட்டைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிக் படகுகள் கடற்புலிகளால் வழிமறிக்கப்பட்டு தாக்கப்பட்டுக் கொண்டிருந்தவேளை கடற்படைப் படகுகளை இலக்கு வைத்து நகர்ந்து கொண்டிருந்த கடற்கரும்புலிகளின் இரு படகுகள் எதிர்பாராதவிதமாக ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்தபோது ஆறு கடற்கரும்புலிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். கடற்கரும்புலி லெப்.கேணல் அருந்தவம் (கிருஸ்ணபிள்ளை உதயகுமார் - மட்டக்களப்பு) கடற்கரும்புலி லெப்.கேணல் பழனியப்பன் (…

  20. லெப். கேணல் நாகதேவன் பன்முகத் திறன்கள் கொண்ட லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தாக்குதல் தளபதி லெப். கேணல் நாகதேவன். “நவம்பர்” என்று போராளிகளால் அன்போடு அழைக்கப்பட்ட நாகதேவன், யாழ். மாவட்டம் மானிப்பாய், கட்டுடை கிராமத்தில் பிறந்தார். கெங்காரட்ணம் ரமேஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகதேவன் தனது ஆரம்பக் கல்வியை கட்டுடை சைவ வித்தியாலயத்தில் பயின்றார். தொடர்ந்து மானிப்பாய் இந்து கல்லூரியில் கல்வி கற்றார். பின்னர் தமிழீழ விடுதலைக்காகப் போராடும் உயரிய நோக்குடன் 1993ம் ஆண்டு ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். க.பொ.த. சாதாரண தர கல்வியை முடித்துக் கொண்டு இயக்கத்தில் இணைந்த கெங்காரட்ணம் ரமேஸ் படைய தொடக்கப் பள்ளியில் தனது ஆரம்பப் ப…

  21. லெப். கேணல் வீரன் தமிழீழ விடுதலையில் உறுதியான பற்றுக் கொண்ட லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தாக்குதல் தளபதி லெப். கேணல் வீரன் / கோபிதன். கிளிநொச்சி மாவட்டம் கந்தபுரம் தான் வீரனினசொந்த ஊர். க.பொ.த.சாதாரண தர கல்வியை 1995ல் முடித்த சோமசுந்தரம் மோகனசுந்தரம் என்ற பதினாறு வயது மாணவன் விடுதலைப் போராட்டத்தின்பால் கவரப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டான். “சரத்பாபு – 10” பயிற்சித் தளங்களில் அடிப்படை பயிற்சியை முடித்த வீரன் யாழ். மாவட்ட படையணியில் இணைக்கப்பட்டான். யாழ் குடா நாட்டின் பல்வேறு பகுதிகளில் தனது களச் செயற்பாடுகளைத் துவங்கிய இளம் போராளி வீரன் தொடர்ந்து வன்னிக் காடுகளில் கடமையாற்றினான். 1996ம் ஆணடு லெப். சாள்ஸ் அ…

  22. லெப்டினன்ட் மாமா (பாலையா) வின் 25ம் ஆண்டு நினைவு வீரவணக்க நாள் இன்றாகும். 21.07.1988 அன்று யாழ்மாவட்டம் காரைநகர்ப் பகுதியில் இந்திய இராணுவத்தின் சுற்றிவளைப்பில் எதிரியிடம் பிடிபடாமல் விடுதலைப் புலிகளின் கோட்பாட்டுக்கு அமைவாக சயனைற் விலையை உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிய லெப்டினன்ட் மாமா (பாலையா) அவர்களின் 25ம் ஆண்டு நினைவு வீரவணக்க நாள். தமிழீழத்தின் தங்கமண் அன்னியநெருபில் அழிந்துகொண்டிருக்கிறது. பேரினவாதிகளுக்கு எதிராக நாங்கள் நடத்திய தர்மயுத்தம் வெற்றியின் எல்லைகளை தொட்ட போதுதான் புதிதொரு அன்னியப்புயல் நம்மை ஆக்கிரமித்து அழிக்க வந்தது. எங்கள் தாயகத்தின் பிறப்பிற்காகவே புலிகளின் இறப்புக்கள் தொடர்கின்றன. தர்மம் எத்தனை நிர்ப்பந்தங்கள் ஏற்ப்பட்டாலும் சரணாகதி அடையமாட்ட…

  23. மரணித்தது மரணமே கௌசல்யன் அல்ல.! Last updated Feb 6, 2020 கௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. 2005 பெப்ரவரி 7 சிங்களப் பேரினவாதமானது தமிழினத்தின் தேசிய ஆன்மாவில் விழுத்திய ஆழமான வடுக்கள் ஒருபோதும் மாறப்போதில்லை. ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது. – தமிழீழத் தேசியத் தலைவர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.