மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் 19 ம் ஆண்டு வீரவணக்க நாள். மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது 28.07.1995 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான போராளிகளின் வீரவணக நாள் இன்றாகும். தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த ஐந்து படைத் தளங்களையும் அழித்தொழிப்பதற்காக 28.07.1995 அன்று விடுதலைப் புலிகளால் கடும் தாக்குதல் நடாத்தப்பட்டது. எனினும் சில காட்டிக்கொடுப்புகளால் இத்திட்டம் வெற்றியளிக்காதபோதும் படைத்தளத்திற்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகள் சிறிலங்கா படைகளின் இர…
-
- 1 reply
- 616 views
-
-
தமிழீழ விடுதலை போரின் போது சிங்கள படைகளுக்கு எதிராக களமாடி 09.09 அன்று வீரகாவியமாகிவிட்ட மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும். தானைத் தலைவனின் வழியில் நின்று மண் மீட்பு போரில் இந்த நாளில் வீரமரணமடைந்துவிட்ட மாவீரர்களுக்கு ஈழதேசம் தனது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது. http://www.eeladhesam.com/index.php?option=com_joomgallery&func=watermark&catid=14&id=4338&Itemid=53 http://www.eeladhesa...=4337&Itemid=53 http://www.eeladhesa...=4339&Itemid=53 http://www.eeladhesa...=4340&Itemid=53 http://www.eeladhesa...=4341&Itemid=53 http://www.eeladhesa...=4343&Itemid=53 http://www.eeladhe…
-
- 0 replies
- 613 views
-
-
மாவீரர் நினைவுகள் - உதிரம் கொடுத்து உயிர்காத்தவன் - மித்யா கானவி கப்டன் மணிமாறன்(சிலம்பரசன்) பூ விரியும் ஓசையைவிட மென்மையானது அவனது மனம். எத்தனை சவால்களைக் கடந்து இந்தப் போராட்ட வாழ்வில் வழி நெடுக நடந்திருப்பான். எத்தனை இரவுகள் தூக்கங்களைத் தொலைத்து காயமடைந்த தோழர்களின் காயத்திற்கு மருந்திடுவது மட்டுமன்றி கூடவே ஒரு தாயாகி, கண்ணீர் துடைத்து தலைகோதி, ஆறுதல் தந்திருப்பான். கப்டன் மணிமாறன் (சிலம்பரசன்) நாங்கள் அவனை மணி என்று தான் அழைப்போம். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப்பகுதியின் எல்லா நுழைவாயிலிலும் முட்டி மோதி யாழ் கண்டி நெடுஞ்சாலையை கைப்பற்றி வன்னியின் பூகோள ஒருமைப்பாட்டை சிதைத்து போராட்டத்தை கூறுபோடுவதற்காக தொடங்கப்பட்ட இராணுவ …
-
- 0 replies
- 611 views
-
-
கிருமிச்சையில் காவியமான லெப்.கேணல் முரளி உட்பட்ட 14 மாவீரர்களினதும் ஓயாத அலைகள் 3 நடவடிக்கையில் காவியமான நான்கு மாவீரர்களினதும் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் 14.12.1999 அன்று மட்டக்களப்பு மாவட்டம் கிருமிச்சை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது லெப்.கேணல் முரளி (நல்லரட்ணம் சுவீந்திரராசா - முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு) மேஜர் சோழவளவன் (சோழன்) (சின்னத்தம்பி கோபாலப்பிள்ளை - மண்டூர், மட்டக்களப்பு) மேஜர் நிர்மல் (முருகேஸ் ராதா - வைக்கலை, மட்டக்களப்பு) மேஜர் தர்மினி (சுந்தரலிங்கம் ராஜினி - தும்பங்கேணி, மட்டக்களப்பு) கப்டன் காந்தகுமாரன் (சாதாசிவம் ஏகாம்பரமூர்த்தி - அக்கரைப்பற்று, அம்பாறை) லெப்டினன்ட் மனோச்சந…
-
- 2 replies
- 610 views
-
-
1984 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 02 ஆம் நாள் முல்லைத்தீவு மாவட்டத்தின் தென்மேற்கு எல்லைக் கிராமமான ஒதியமலைக்குள் நுழைந்த இலங்கை இராணுவத்தினர், அக்கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் 32 பேரை வெட்டியும் சுட்டும் படுகொலை செய்தது. எல்லைக் கிராமங்களில் இருந்து தமிழர்களை வெளியேற்றும் நோக்குடன் நடத்தப்பட்ட இந்தப் படுகொலைக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை.
-
- 0 replies
- 604 views
-
-
கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் காலவிதை: கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன். வீட்டிற்குமுன் வாகனம் வந்து நின்ற போது செங்கதிர்வாணன் தான் வருகின்றான் என்று நினைத்துக் கொண்டாள் தண்ணீரூற்று அம்மா. அவனின் அம்மா திருமலையில் என்பதால் இப்போது உறவுகள் எல்லாம் அந்த வீடுதான். அம்மா தலையை இழுத்து முடிந்தபடி விளக்கையும் எடுத்துக் கொண்டு வாசலுக்கு ஓடிவந்தாள். அக்கம் பக்கத்து வீட்டுச்சிறுமிகள் எல்லாம் “குட்டான் மாமா வந்திட்டார்” என்ற மகிழ்ச்சியுடன் பாடப்புத்தகங்களை மூடிவிட்டு ஆரவாரித்து நின்றனர். அவர்களுக்கு ஒருபுறம் அச்சமும் இருந்தது. பாடப்புத்தகத்தில் கேள்வி கேட்பார். தேர்வு அறிக்கை பார்ப்பார். என்றாலும் குட்டான் மாமா எவ்வளவு நல்லவர். சிறுமிகளு…
-
- 3 replies
- 601 views
-
-
வவுணதீவில் வரலாறு எழுதியவள்-சிறப்புத் தளபதி லெப். கேணல் மதனா. மட்டக்களப்பில் போராட்டத்துக்கு மேன்மேலும் ஆளணியைச் சேர்ப்பதில் ஈடுபட்டு, பயிற்சி வழங்கி, படையணியைக் கட்டி வளர்த்ததில் அவள் பங்கு குறிப்பிடத்தக்கது. இக்காலகட்டம் இவர்களுக்கு மிகவும் வேதனையும், சோதனையும் நிறைந்த காலமாகவே இருந்தது. மட்டுநகர் காடுகளை சிறிலங்கா இராணுவத்தினர் முற்றுமுழுதாக ஆக்கிரமித்திருந்த காலமது. அடிப்படை வசதிகள் கூட இன்றிய நிலையில், நம்பிக்கையும் மனவுறுதியும் மட்டும் பலமாகக் கொண்ட தருணங்களில் மதனா ஒருபோதும் சோர்வடைந்ததில்லை. தனது தோழிகளுக்குத் தெம்பூட்டி உற்சாகப்படுத்துவாள். இதன் பின்னர் படையணியைத் திரட்டி, அப்படையணிகள் சிறிலங்கா இராணுவத்திற்கு எதிரான தாக்குதலிகளில் பங்குபற்ற வகைசெய்தாள். …
-
- 0 replies
- 598 views
-
-
வன்னி மண்ணை சூறையாட முயன்ற பேரினவாதத்திற்கு சிம்மசொப்பனாக விளங்கிய லெப்.கேணல் ரவி குமாரவேல் ரவீந்திரகுமார் விசுவமடு – முல்லைத்தீவு வன்னிமண்ணில் திரு.திருமதி குமாரவேல் இணையருக்கு அன்பு மகனாய்ப் பிறந்த லெப்.கேணல் ரவி 1986ம் ஆண்டு தம்மை முழுமையாக விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டார். விடுதலைப் புலிகள் அமைப்போடு இணைந்து கொண்ட தொடக்க காலங்களில் லெப்.கேணல் ரவி அவர்கள் வன்னியின் மூத்த தளபதி மாவீரர் மேஜர் பசிலனுடன் இணைந்து சிறிலங்கா படைகளிற்கு எதிராக முனைப்பான தாக்குதல்களை மேற்கொண்டு, வன்னி மண்ணை சூறையாட முயன்ற பேரினவாதத்திற்கு சிம்மசொப்பனாக விளங்கினார். அமைதி காக்கவென வந்து எம்மண்ணில் அவலத்தை விதைத்த இந்தியப் படைகளுக்கு எதிராக உறுதியான எத…
-
- 0 replies
- 597 views
-
-
தேசியத் தலைவரின் கைக்கு இறுக்கமாக வலுவூட்டிய குடும்பத்தில் பிறந்த கப்டன்அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று வாழ்ந்த நாம் 'விடுதலை இயக்கம்' என்ற விரிந்த பரப்புக்குள் வந்ததால் , எத்தனை விதமான உள்ளங்களை , சந்தோசங்களை, பிரிவுத்துயரங்களை வாழ்வின்உண்மைகளைக் கண்டுகொண்டிருக்கிறோம். எமது போராட்ட வாழ்வில் உன்னதமான உள்ளங்களோடு பழகும்போது சந்தோசப்படும் நாங்கள், பிரிவு என்று வருகின்ற போது அதிகமாகத்தாக்கப்படுவதென்னவோ உண்மைதான். கப்டன் அக்கினோவின் உள்ளம் கூட அந்த உன்னதமான உள்ளங்களில் ஒன்றுதான். மிகவும் வசதியான குடும்பம். வாழ்வில் பொ…
-
- 1 reply
- 597 views
-
-
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சின் மூத்த செயற்பாட்டாளரும் எமது தேசத்தின் விடுதலையை ஆழமாக இறுதிவரை நேசித்தவருமான அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களுக்கான நாட்டுப்பற்றாளர் மதிப்பளித்தல் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள்
-
- 4 replies
- 596 views
-
-
“தயவு செய்து என்னை எரிக்காதீங்கோ. என் அண்ணாக்குப் பக்கத்தில கொண்டு போய் தாட்டு விடுங்கோ அது மட்டும் எனக்குப் போதும். “ என்று தனது மருமகனுக்கு சொல்லி விட்டு தன் மூச்சை நிறுத்திவிட்டார் அந்த உயரமான பருமனான உடலமைப்புக் கொண்ட அந்த விடுதலை விரும்பி. அவரை கோமகன் என்று அறிந்தவர்களை விட சிங்கண்ண என்று அறிமுகம் கண்டவர்கள் தான் அதிகம். சாதாரண போராளிகள் முதல் மூத்த தளபதிகள் வரை சிங்கண்ண என்றால் அறிமுகம் அற்றவர்கள் இருக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர் அவ்வாறான புனிதமான பணியில் இருந்தார். மாவீரர்கள் தமிழ்த் தேசத்துக்காக தமது இன்னுயிர்களை ஆகுதி ஆக்கி விசுவமடு துயிலும் இல்லம் வரும்போது இந்த மனிதனை சந்திக்காமல் குழிக்குள் போவதில்லை. விசுவமடு துயிலும் இல்லத்தில் தனது இறுதிக்கால பணியைச்…
-
- 7 replies
- 595 views
-
-
தாண்டிக்குளம் பகுதியில் அமைந்திருந்த விநியோக மையம் மீதான கரும்புலித் தாக்குதல் ஒரு பார்வை 10.06.1997 அன்று வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் அமைந்திருந்த ‘ஜெயசிக்குறு’ நடவடிக்கைப் படைகளின் விநியோக மையம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 25ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்…. கரும்புலி கப்டன் சாதுரியன் நடராசா அரசரட்ணம் மட்டக்களப்பு கரும்புலி மேஜர் யாழினி சிவசுப்ரமணியம் ராகினி யாழ்ப்பாணம் கரும்புலி மேஜர் நிதன் (பர்வதன்) மாணிக்கம் அருள்ராசா மட்டக்களப்பு தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர…
-
- 0 replies
- 594 views
-
-
மேகத்தில் முடியும் ஆழத்தில் அடியும் கொண்டு தாகத்தில் திரியும் கோபங்கள்! நெஞ்சினிலே பஞ்சுவைத்து எண்ணையிட்ட நெருப்பு நில்லெனவே சொல்வதற்கு யாருமில்லை எமக்கு சாகவென்று தேதிசொல்லிப் போகும்புயல் கறுப்பு நாளைபகை மீதினிலே கேட்குமெங்கள் சிரிப்பு புதிய திசையொன்றின் புலர்வு தினம். ஆதிக்கக் கதிரைகள் அச்சத்தில் உறையும் நாள். நெல்லியடியில் மில்லர் தொடக்கி வைத்த சொல்லியடிக்கும் திருநாள். “கரும்புலிகள்” மேகத்தில் முடியும் ஆழத்தில் அடியும் கொண்டு தாகத்தில் திரியும் கோபங்கள். தேகத்தில் தீமூட்டும் போதும் சோகத்தின் திரைமூடாத திருமுகங்கள். ஆழத்திற் கிடக்கும் இவரின் அனல்வேர்களை எந்த ஆய்வாளர்களாலும் அளவெடுக்க முடிவதில்லை. அழுதழுது வரு…
-
- 2 replies
- 593 views
-
-
முள்ளிவாய்கால் மண்ணில் தமிழினத்தின் விடிவிற்காய் விதையானார் லெப்.கேணல் அன்பழகன். லெப்.கேணல் அன்பழகன் கைலாயபிள்ளை ஜெயகாந்தன் பலாலி வீரப்பிறப்பு: 18.08.1972 வீரச்சாவு: 05.05.2009 05.05.2009 அன்று முல்லைத்தீவு பகுதியில் இறுதி யுத்தத்தின் போது சிறிலங்காப் படையினருடன் களமாடி வீரச்சாவு ஈழமணித் திருநாட்டின் வடமாகாணத்தில் உள்ள யாழ்குடா நாட்டில் வலிகாமம் கிழக்குப் பகுதியிலே செம்மண் கனிவளத்துடனும் தென்னந் தோப்புக்களும் பனை வெளிகளும் வேளாண் நிலங்களும் மேய்ச்சல் நிலப்பரப்புகளும் கடல் வளங்களும் நிறைந்த எழில்மிகு ஊர் பலாலி ஆகும். இவ்வூரானது பல உழவர் பெருமக்கள், கல்விமான்கள், மக்கள் விடுதலை போராட்ட வீரர்களை பெற்றெடு…
-
- 1 reply
- 591 views
-
-
வன்னி கிழக்கு விசுவமடுப் பகுதியிலே பூக்கள் பூத்துக் குலுங்கும் பூஞ்சோலை மற்றும் மாக்கள் கனிந்து கொட்டும் மாஞ்சோலையுடன் கூடிய அழகிய தென்னஞ்சோலையும் இதமாக தெம்மாங்கு பாட அன்புடன் புன்னகைக்கும் கணக்காய்வுப் பகுதி ஆண் போராளிச் சகோதரர்களுடன் நடுநாயகமாக கம்பீரமாக வீற்றிருக்கும் எமது விசுவமடு #அன்பகம் எனும் கணக்காய்வுப்பகுதி நடுவப் பணியகம்.அங்கே அன்பு எனும் வானிலே ஒளிரும் துருவ நட்சத்திரமாக எங்கள் சேரலாதன் அண்ணாவைக் காணலாம்.கனிவு மற்றும் பண்பு கலந்த ஒரு நிமிர்வான ஆளுமையுடன் கூடிய பொறுமையான ஒரு போராளியாக அவர் காணப்பட்டார்.அந்த முகாமின் ஒழுங்கான நிர்வாக நடவடிக்கைகளுக்கும்,தூய்மைக்கும் அழகுக்கும் அவரே காரணம்.அங்கு பூத்துக் குலுங்கும் பூஞ்சோலையின் அழகில் அவரின் கைவண்ணம் தெரியும். …
-
- 1 reply
- 590 views
- 1 follower
-
-
தூரத்தே கேட்ட சத்தம் வரவர அதிகரித்துக் கொண்டிருந்தது, அமைதியான அன்றைய சூழலை இடை விடாத அந்த இரைச்சல் ஓசை பயங்கரமானதாக மாற்றியது. அவர்களுக்கு அது வழமையானதுதான். எனினும், அன்று ஏதோ ஓர் அசாதாரணமான சூழல் இருப்பதாக அவர்களுக்குப்பட்டது. எதிரி விளக்குவைத்தகுளம்வரை முன்னேறிவிட்டான். அது வன்னியின் ஒரு காட்டுக்கிராமம். வவுனியா விலிருந்து வடக்காகக் கண்டிப் பிரதான வீதியிலிருந்தது. முன்னேறும் இராணுவத்தைப் புளியங்குளம் வரை கட்டம் கட்டமாகத் தடுத்துத் தாமதப்படுத்துவதே திட்டம். முன்னேறும் இராணுவத்தைத் தாக்கித் தடுத்துத் தேவையானபோது நகரவிட்டு, மீண்டும் தாக்கி, புளியங்குளத்தில் அமைக்கப்பட்ட ‘கொலைப் பொறி’ வரை கவர்வதற்காகத் தாக்குதல்கள் தொடர்ந்தன. 06.06.1997, விளக்குவைத்தகுளம் முன்னர…
-
- 0 replies
- 589 views
-
-
கடற்கரும்புலி கப்டன் இன்னிசை நவம்பர் 11, 2020/தேசக்காற்று/கடற் கரும்புலிகள்/0 கருத்து என்னினிய தமிழீழ மக்களுக்கு, நான் இறுதியாக எழுதும் உறுதிமொழி, தமிழீழ மக்களாகிய நீங்கள் எமது தலைவனின் காலத்தில் தமிழீழம் கிடைப்பது உறுதி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். தமிழீழத்தில் எமது தலைவன் ஒரு கொடை. மக்களாகிய நீங்கள் கிளர்ந்தெழுந்து எமது தலைவனுடன் தோளோடு தோள் நின்று போராடுங்கள். நிச்சயம் தமிழீழம் கிடைக்கும். எமக்கென்று ஒரு நாட்டை உருவாக்க வெகு விரைவாக உங்கள் பணிகளைச் செய்யுங்கள். இப்படிக்கு போராளி இன்னிசை 1996.05.16 ஆனையிறவு இராணுவத்தினரின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்களால் இன்னிசையின் குடும்பம் வெற்றிலைக்கேணியிலிருந்து பருத்தித்துறைக்கு இடம்…
-
- 1 reply
- 589 views
-
-
கப்டன் கஜன் கப்டன் கஜன் ஒரு எழுதுலகப் போராளி. ஒரு முற்போக்கு கவிஞன். 1988ஆம் ஆண்டு இந்திய இராணுவம் அமைதி பணி புரிந்த காலகட்டம். சிங்கள பேரினவாத அரசு குதூகலித்து நிற்க அகில பாரதம் எம்மீது போர் தொடுத்த காலம் அவை அப்போது எமது மக்களின் இந்திய எதிர்பார்ப்புகள் மெல்ல மெல்ல நொருங்கி தமிழர்கள் தம் சொந்த கால்களில் நின்றே விடுதலையை வென்றெடுக்க வேண்டுமென்ற புவிசார் அரசியல் கோட்பாடுகள் புலப்படத் தொடங்கிய நேரம் அவ்வேளையில் எமது விடுதலை இயக்கத்தின் பிரெஞ்சுப் பணியகம் விடுதலை மாலை என்னும் உணர்வுமிக்க கலைநிகழ்வை மக்கள் மத்தியில் அரங்கேற்றியது. அந்த விடுதலை விழாவில் மக்களின் சமகால கேள்விகளையும் சந்தேகங்களையும் உள்வாங்கி இலக்கியம் என்பது நிகழ்வுகளின் பிரதிபலிப்பு …
-
- 0 replies
- 587 views
-
-
பண்டாரவன்னியனின் பொற்கால்கள் களையாற நடந்த கரையோரம் பண்டாரவன்னியன் பொற்கால்கள் களையாற நடந்த கரையோரக் கடலில் கரும்புலித் தாக்குதல் 03.09.1995 கடற்கரும்புலிகள் மேஜர் நகுலன், மேஜர் கண்ணாளன் பண்டாரவன்னியனின் பொற்கால்கள் களையாற நடந்த கரையோரம். கடல் தரையோடு கைகோர்க்கும் ஒரு நெய்தற் கிராமம். புரட்டாசி 3ம் நாளின் கருக்கல் பொழுது. நிலவற்ற வான் எதுவும் மின்னுதலற்ற ‘றாடார்‘ திரை. அலைகடல் கடந்து அரசாட்சி படர்ந்த சோழப் பேரரசனின் கொள்ளுப் பேரர்கள் நீலவரிப் படகுகளை நீருக்குள் இறக்கினர். சுடுநீர்ச் சுரப்பிகளை முடியில் தரித்து தேசத்திற்கு மகிமையளிக்கும் தலைநகர் கடந்து….. மீன்பாடுகின்ற ஒரு கரையோரக் கிராமத்தில் தரையேறும் பயணம். ‘கண்ணாளனின்’ தோள்களில் தட்டி ‘நகுலன…
-
- 2 replies
- 581 views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நடந்த சில சரித்திர சம்பவங்களின் பின்னணி மிகவும் சுவாரசியமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும். வரலாற்றில் நின்று நிலைத்து விட்ட இந்த சம்பவங்கள் போராட்டத்தில் பங்கெடுத்த ஆளுமை மிக்க இளைஞர்கள் அந்த முக்கியமான கணங்களில், அந்தந்த இடத்தில் எடுத்த உடனடி முடிவுகள் தான் என்று பின்னர் அறிய வரும்போது மெய்சிலிர்க்கும். 12 ஒக்டோபர் 1986ல் அடம்பனில் இலங்கை ராணுவத்துடன் நடந்த நேரடி மோதலில் விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்டத் தளபதி லெப்டினன்ட் கேணல் விக்டர் வீரமரணம் அடைகிறார். அந்தச் சமரில் விடுதலைப் போராட்டத்தில் முதல் முறையாக விடுதலைப் புலிகள் இரண்டு சிங்கள ராணுவத்தினரை சிறைபிடிக்கிறார்கள். அத்தோடு சமரில் இறந்த ஒன்பது சிங்கள இராணுவத்தினரின் சடலங்…
-
-
- 1 reply
- 581 views
-
-
|| மட்டக்களப்பு மாவட்டம் சித்தாண்டிப் பகுதியில் 21.07.1997 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 32 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு வீரவணக்க நாள் இன்றாகும் || சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற எதிர்பாராத மோதலில் தீரத்துடன் களத்திடை புலி மறவர்களாக பாய்ந்த வேங்கைகள்… மேஜர் ஜெயநீதன் (சதா) (வடிவேல் விமலன் – பெரிபுல்லுமலை, மட்டக்களப்பு) கப்டன் குலேந்திரன் (வனவேல் சுந்தரலிங்கம் – உன்னிச்சை, மட்டக்களப்பு) கப்டன் கார்முகிலன் (கோபு) (வெள்ளைச்சாமி கர்ணன் – நுணுகலை, மட்டக்களப்பு) கப்டன் தேரு (தம்பிரத்தினம் ஜெயாபரன் – ம்பிலுவில், அம்பாறை) லெப்டினன்ட் வன்னி (சின்னத்தம்பி புஸ்பராஜா – அக்கரைப்பற்று, அம்பாறை) லெப்டினன்ட் சபேசன் (செலலத்தம்பி கணேஸ் – சித்தாண்டி, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன…
-
- 1 reply
- 580 views
-
-
11.09.2007 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் புதியதொரு வரலாற்றை படைத்துச் சென்ற ஆழக்கடலோடிகள் உலக வல்லரசுகள் இலங்கைக்கு வழங்கிய செய்மதித் தகவல்களின் அடிப்படையில். 10.09.2007அன்று இலங்கையிலிருந்து ஆயிரத்து ஐநூறு கடல்(1500NM )மைல்களுக்கப்பால் அதாவது சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழத்திற்க்குப் பலம் சேர்க்கின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் இரு வணிகக் கப்பல்களும் அவைகளுக்கு எரிபொருள் வழங்குவதற்காக வந்த எண்ணெய்க் கப்பலும் தமது வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் கடற்படையின் கப்பல் வருவதை (எந்த நாட்டுக் கடற்படையென்று அவருக்குத் தெரியாது )அவதானித்த வணிகக் கப்பலொன்றின் தலைவரான எழில்வேந்தன் கப்பல்களை பிரிந்து வெவ்வேறு திசைகளில் செல்லப் பணித்ததுடன் …
-
- 1 reply
- 579 views
-
-
பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான தாக்குதல் 1993 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11,12,13 ஆகிய திகதிளில் இடம்பெற்றன. பூநகரி வெற்றி நாள்! ஒபரேசன் தவளைப் பாய்ச்சல் என்ற வெற்றிகரமான இராணுவ நடவடிக்கை ஊடாக நிலத்திலும் நீரிலும் பாய்ந்து பூநகரி இராணுவத்தளத்தை அழித்து நிர்மூலமாக்கி பெரும் சாதனை படைத்த விடுதலைப் புலிகளின் பூநகரித் தள வெற்றிச் சமரின் வெற்றி நாள் இன்றாகும்...!
-
- 0 replies
- 578 views
-
-
மேஜர் சுமி டிசம்பர் 8, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள்/0 கருத்து வரலாற்று நாயகி மேஜர் சுமி / இசையரசி நாடு இருளுமுன்பே காடு இருட்டிவிட்டது; ஆளையாள் தெரியாத கும் இருட்டில் தான் அந்த இடத்திற்கு சுமி அக்காவுடன் நானும் மதிப்பிரியாவும் களமருத்துவப் பொருட்களுடன் போய்ச்சேர்ந்தோம். வழமையாக களமருத்துவத்தில், உபமெடிசின் (sub medicine) நிலையை அமைப்பதென்றால் அந்தப்பகுதி பொறுப்பாளர்களுடனும் ஏனைய கொம்பனிப் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடி பொருத்தமான இடத்தை தெரிவு செய்து, சண்டைப்படையணிகள் நிலையெடுக்கும் நேரத்திற்குள் எமக்கான மருத்துவ நிலைகளையும் அமைத்து விடுவோம். ஆனால் இன்று அப்படிச் செய்ய காலம் இடம் தரவில்லை. வவுனியாவிலிருந்து புறப்பட்ட வெற்றி …
-
- 0 replies
- 578 views
-
-
முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையில் 21.07.1996 அன்று வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் மிதுபாலன் மற்றும் கப்டன் சயந்தன் உட்பட்ட 12 மாவீரர்களின் 17 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். முல்லைத்தீவு படைத்தளம் மீதான || ஓயாத அலைகள் – 01 || நடவடிக்கை18.07.1996 அன்று தொடங்கப்பட்டு படைத்தளத்தின் பெரும்பகுதி மீட்கப்பட்ட நிலையில் இந்நடவடிக்கையை முறியடிக்கவும், இழந்த தளத்தை மீளக் கைப்பற்றவும் சிறிலங்கா கடற்படையினரால் அலம்பில் பகுதியில் தரையிறக்கப்பட்ட படையினரால் முல்லைத்தீவு தளம் நோக்கி பாரிய முன்னகர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்க மேலதிக தரையிறக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ச…
-
- 1 reply
- 577 views
-