மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
[size=3]பலவீனமான எம் இனத்தின் பலமான ஆயுதமாக விளங்கிய கரும்புலிகளை, அவர்களது தியாகத்தை நினைவுகூரும் தினம் இன்று. தமிழீழத்தின் புனிதமானதும் வணக்கத்துக்குரியதுமான நாட்களில் உன்னதமானது கரும்புலிகள் நாள். காரணம், உயிரை ஆயுதமாக்கியவர்கள் கரும்புலிகள். விடுதலைப்புலிகளின் பரிணாம எழுச்சிக்கு கரும்புலிகள் படையணியின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது என்பதுடன் விடுதலைப் போராட்டத்தின் முன்நகர்விற்கு வலுவான தளத்தையும் வழங்கியிருந்தது. இலங்கைத்தீவில் ஈழத்தமிழினம் எண்ணிக்கையில் குறைந்த இனமாக இருந்தாலும் தனது சுயபலத்தின் அடித்தளத்தில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தது. எதிரி பல்வேறு தடைகளையும் நெருக்குவாரங்களையும் கொடுத்து, போரியல் ரீதியாகத் தோற்கடிப்பதனூடாக விடுதலைப் போராட்டத்தை அழிக்க மு…
-
- 1 reply
- 1.3k views
-
-
நாங்கள் எமது மண்ணில் வாழவேண்டும் என்பதற்காக தங்களையே அர்ப்பணித்தவர்கள். இவர்களிற்காக நாம் என்ன செய்யப்போகிறோம்? ம்ம்ம்... : / காலங்கள் மாறலாம்... ஏன் எண்ணங்கள் கூட மாறலாம், ஆனால் எமது இலட்சியம் மாறலாமா? தேசம் விட்டு தேசம் தாண்டிப் போனாலும், இறுதி உயிர்மூச்சு உள்ளவரை ஈழமே எமது குறிக்கோளாக இதையத்தில் பதிந்திருக்க வேண்டும்! http://youtu.be/wxMW1ZRPL98
-
- 10 replies
- 2.7k views
-
-
03.07.2000ம் அன்று தமிழீழக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையினர் மீதான தாக்குதல் முயற்சி ஒன்றில் வீரச்சவைத் தழுவிய கடற்கரும்புலி கப்டன் ஜெயாஞ்சலியின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தாய் மண்ணின் விடியலுக்காய் தன்னை ஆகுதியாக்கிய இந்த வீரவேங்கையை இன்றைய நாளில் நினைவு கூருகிறோம்.
-
- 9 replies
- 1.1k views
- 1 follower
-
-
29.06.2001 அன்று கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்புலிகளின் முதன்மைத் தளபதியான லெப்.கேணல் கங்கையமரன் மற்றும் மேஜர் தசரதன் ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். கடற்புலிகளின் தொடக்க காலம் முதலே கடற்புலிகள் அணியில் பணியாற்றி வந்த லெப்.கேணல் கங்கையமரன் அவர்கள் கடற்புலிகளின் நீரடி நீச்சற்பிரிவை உருவாக்கி அதன் பொறுப்பாளராகக் கடமையாற்றியவர். சிறிலங்கா கடற்படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல வெற்றிகரத் தாக்குதல்களை வழிநடாத்தியவர். மன்னார் மாவட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த லெப்.கேணல் கங்கையமரன் 29.06.2001 அன்று கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியூடாகப் பயணித்துக் கொண்டிருந்த பொழுத…
-
- 13 replies
- 1.4k views
-
-
28.06.1995 அன்று மண்டைதீவு படைத்தளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சூட்டி உட்பட்ட 8 மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தேசியத் தலைவரின் நேரடி நெறிப்படுத்தலில் கடற்புலிகளின் துணையுடன் மண்டைதீவில் தரையிறங்கிய விடுதலைப் புலிகளின் படையணிகள் அங்கிருந்த சிறிலங்கா படைத்தளத்தைத் குறுகிய நேரத்தில் தாக்கியழித்து சிறிலங்கா படையினருக்கு பேரிழப்பை ஏற்படுத்தினர். 300ற்கும் மேற்பட்ட சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதுடன் பல நூறு படையினர் படுகாயமடைந்த இத்தாக்குதலின்போது பெருமளவான ஆயுத தளபாடங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. இவ்வெற்றிகரத் தாக்குதலின்போது லெப்.கேணல் சூட்டி (தம்பிமுத்து கோவிந்தராஜன் - அம்பாறை) மேஜர் தமி…
-
- 9 replies
- 968 views
-
-
28.06.1995 அன்று திருகோணமலை மாவட்டத்தில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் காந்தன்(கில்மன்) உட்பட்ட மூன்று மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். திருகோணமலை மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் ஆளுகையை வலுப்படுத்தும் நோக்கில் 1995ம் ஆண்டில் சாள்ஸ் அன்ரனி படையணி லெப்.கேணல் கில்மன் தலைமையில் தேசியத் தலைவர் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டது. பல்வேறு நெருக்கடிகளிற்கு மத்தியில் காட்டுப்பகுதிகளில் வலுவான தளங்களையமைத்துடன் சிறிலங்கா படையினர் மீதும் பல அதிடித் தாக்குதல்கள் நடாத்தப்பட்டு சிறிலங்கா படையினருக்கு பலத்த இழப்புக்கள் சாள்ஸ் அன்ரனி படையினரால் ஏற்படுத்தப்பட்டது. காட்ட…
-
- 13 replies
- 1.8k views
-
-
26.06.2000ம் அன்று இரணைமடுக்குளத்தில் மூழ்கி சாவினை அணைத்துக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் ராஜசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தன்னை உவப்பீகை செய்த இந்த வீரமறவனை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
-
- 8 replies
- 1.7k views
- 1 follower
-
-
26 .06 .1999 ம் ஆண்டு மன்னார் பள்ளமடுப் பகுதியில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய வல்வளைப்பு நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது வீரச்சாவினை தழுவிக்கொண்டார். தமிழீழ தாய் மண்ணின் விடிவிற்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவற்கு எமது வீரவணக்கத்தைச் செலுத்துகின்றோம். http://thaaitamil.com/2-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5/
-
- 11 replies
- 1.4k views
- 1 follower
-
-
26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் “ரணகோச” நடவடிக்கை மூலம் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முற்றுகைக்கு எதிரான முறியடிப்புச் சமரின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் ஐயன் மற்றும் லெப்.கேணல் தணிகைச்செல்வி உட்பட்ட 75 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தம்மைச் சுற்றிவளைத்து சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த பாரிய முற்றுகை நடவடிக்கையை எதிர்த்து தீரமுடன் களமாடிய விடுதலைப் புலிகளின் படையணிகள் பல மணிநேரச் சமரின் பின் படை முற்றுகையை முறியடித்தனர். இதன்போது நூற்றுக்கும் மேற்பட்ட சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதுடன் பலநூறுபேர் படுகாயமடைந்தனர். சிறிலங்கா படையினரின் இந்த வல்வளைப்பு முயற்சிக்கு எதிராக தீரமுடன் களமாடி 75 போராளிகள் …
-
- 10 replies
- 1.2k views
-
-
24.06.1997 அன்று பெரியமடுப் பகுதியில் ஜெயசிக்குறு நடடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட 2வது ஊடறுப்புத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் தனம்(ஐங்கரன்) உட்பட்ட 84 மாவீரர்களினதும் இதேநாளில் ஜெயசிக்குறு படையினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலில்களில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 9 மாவீரர்களினதும் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஜெயசிக்குறு படைநடவடிக்கை மூலம் முன்னேறி பெரியமடுப் பகுதியில் நிலைகொண்டிருந்த படையினரால் அமைக்கப்பட்டிருந்த ஆட்டிலறி - மோட்டார் ஏவுதளங்களை இலக்கு வைத்து விடுதலைப் புலிகளின் படையணிகளால் 24.06.1997 அன்று ஊடறுப்புத் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டது. இத்தாக்குதலில் பல நூற்றுக் கணக்கான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதுடன்…
-
-
- 15 replies
- 1.6k views
- 1 follower
-
-
தமிழீழ தாயக விடுதலைப் போரில் 1990ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 15 920 மாவீரர்களின் பெயர் விபரங்கள் வீரவேங்கைகள் இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளன. தமிழீழ மாவீரர் பணிமனையினால் உருவாக்கப்பட்ட மாவீரர் விபரக்கோவை ஒன்றிலிருந்து பெறப்பட்ட விபரங்களே இணைக்கப்பட்டுள்ளன. இணைக்கப்பட்டுள்ள மாவீரர்களின் விபரங்களில் தவறுகள் இருந்தால் தயவு செய்து info@veeravengaikal.com என்ற மின்னஞ்சலுக்கு அறியத் தரவும். விபரங்களைப் பார்க்க கீழுள்ள இணைப்பில் அழுத்தவும். http://veeravengaika...t=20&start=1610
-
- 7 replies
- 5.1k views
-
-
கண்டிவீதியைக் கைப்பற்றவென ‘வெற்றி நிச்சயம்” (ஜெயசிக்குறு) என்று பெயரிட்டுத் தொடங்கப்பட்ட படைநடவடிக்கைக்கு எதிராக புலிகளால் 10.06.1997 அன்று நடத்தப்பட்ட ஓர் அதிரடித் தாக்குதலே இது. 13.05.1997 அன்று சிறிலங்கா படைத்தரப்பால் இந்நடவடிக்கை தொடங்கப்பட்டது. படையினரின் கட்டுப்பாட்டிலிருக்கும் வவுனியாவிலிருந்து ஏற்கனவே அவர்களால் கைப்பற்றப்பட்ட கிளிநொச்சி வரையான வன்னி நெடுஞ்சாலையை (A-9)க் கைப்பற்றுவதே இந்நடவடிக்கையின் நோக்கம். படைத்தரப்பால் நடவடிக்கை தொடங்கப்பட்ட கையோடு தாண்டிக்குளம் என்ற புலிகளின் முன்னணி எல்லைப்பகுதி படையினரால் கைப்பற்றப்பட்டது. பின் சிலநாட்களில் அதற்கு அடுத்த பகுதியான ஓமந்தையும் படையிரால் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில் நடவடிக்கை தொடங்கிய ஒருமாத காலத்துள…
-
- 14 replies
- 2.7k views
- 1 follower
-
-
திருமலை மாவட்டம் புல்மோட்டைப் பகுதியில் இருந்து 13ம் கட்டைப் பகுதி நோக்கி வந்த சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் மாதவன் அவர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தாய் மண்ணின் விடிவிற்காக தன்னுயிரை ஈகம் செய்த இம்மாவீரருக்கு எமது வீரவணக்கங்கள்
-
- 14 replies
- 1.9k views
-
-
19.06.1997 நெடுங்கேணிப் பகுதியில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மேற்கொண்ட எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் முகுந்தா அவர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள். தமிழீழ தாய் மண்ணின் விடிலுக்காய் தன்னுயிரை ஈகம் செய்த இந்த மாவீரருக்கு எமது வீரவணக்கங்கள்.
-
- 8 replies
- 1k views
-
-
10.06.1998 அன்று வன்னியில் தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள சுதந்திரபுரம் என்ற கிராமத்தின்மீது சிங்களப்படையால் தாக்குதல் நடத்தப்பட்டது. அதுவரை அக்கிராமம் எவ்வித தாக்குதலுக்கும் ஆளாகவில்லை . யுத்த முனையிலிருந்து நன்கு பின்னுக்குத் தள்ளியிருந்த அழகிய அமைதியான கிராமம். அன்று காலை சிங்கள வான்படைக்குச் சொந்தமான இரு கிபிர் விமானங்கள் அக்கிராமத்தில் குறிப்பிட்ட இடத்தின்மீது குண்டுகள் போட்டன. அவை தாண்டவமாடி முடிந்து போனதும் அம்பகாமத்தில் நிலைகொண்டிருந்த ஜெயசிக்குறு இராணுவம் ஏற்கனவே தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தின்மேல் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலை நடத்தின. இத்தாக்குதலில் சிறுவர்கள் உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்ப…
-
- 4 replies
- 1.4k views
-
-
லெப் கேணல் அன்பு 11.05.2006 அன்று வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில் ஈடுபடிருந்த போது சிறீலங்கா கடற்படையுடனான மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் . கடற்கரும்புலி லெப். கேணல் கவியழகியின் வீரவணக்க நாள். லெப். கேணல் கவியழகி குடத்தனை – யாழ்ப்பாணம். 11.05.2006 அன்று வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில் ஈடுபடிருந்த போது சிறீலங்கா கடற்படையுடனான மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் . தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள். http://thaaitamil.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B2%E0%AF%86%E0%…
-
- 16 replies
- 2.2k views
- 1 follower
-
-
பொன். சிவகுமாரன் (ஆகஸ்ட் 26, 1950 – ஜூன் 5, 1974) ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே. சிங்கள இனவாதத்தால் தமிழ் மக்களுக்கெதிரான கொடுமைகளும் படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு, தமிழ் மக்களின் சுதந்திர இருப்பு சிதைக்கப்பட்டது. இந்நிலையில் தான் அன்று மாணவனாகவிருந்த தியாகி பொன்.சிவகுமாரன், தமிழ் மக்களின் உரிமைகள் மீட்கப்படுவதற்கும் சுதந்திர இருப்பை உறுதிசெய்வதற்கும் ஆயுதப் போராட்டமே சரியான மார்க்கம் என்பதை உணர்ந்து சிங்கள இனவாதத்திற்கெதிராக ஆயுதமேந்திய போராட்டத்தை முன்னெடுத்தார். தமிழீழ மக்கள் மனங்கள…
-
- 15 replies
- 1.7k views
- 1 follower
-
-
2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் நாள் மட்டக்களப்பில் தனது வீட்டில் இருந்து காலை பணிக்குச் சென்றுகொண்டிருந்தபோது இவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் படுகொலை செய்யப்பட்டபோது அகவை 50 ஆகும். யாழ்ப்பாணம் நெல்லியடியில் பிறந்து வளர்ந்த ஜி.நடேசன் மட்டக்களப்பில் பல ஆண்டுகள் வாழ்ந்ததுடன், தென் தமிழீழ மக்கள் மீதும், அந்த மண் மீதும் அளப்பரிய பற்றுக்கொண்டிருந்தார். நீண்ட காலம் ஊடகப் பணி செய்து அனுபவம் பெற்றிருந்த இவர், ஊடகத்துறையில் முழு நேரமாகப் பணியாற்றாது விட்டாலும், ஒரு முழுநேர ஊடகவியலாளன் ஆற்றும் பணிக்கு ஈடாக, அல்லது அதற்கு மேலாகவும் தனது ஊடப்பணியை செவ்வனே ஆற்றி வந்தவர். இவரது பணிக்கு சாகித்திய விருது, சிறந்த ஊடகவியலாளர் விருது (2000), ஆளுநர் விர…
-
- 11 replies
- 1.2k views
- 1 follower
-
-
கேணல் ரமணன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவில்... தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரமணன் அண்ணா வவுணதீவு போராளிகளின் காவலரணைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை எதிரியின் சதிச் சூட்டில் வீரச்சாவடைந்தார். இயற் பெயர் – கந்தையா உலகநாதன் இயக்கப் பெயர் – ரமணன் தாய் மடியில் – 14.10.1965 தாயக மடியில் – 21.05.2006 பாடசாலைக் கட்டிடத்திற்குள் இருந்த புழுக்கத்தை ஆற்றங்கரைக் காற்று கழுவிக் கொண்டிருந்தது. அது வகுப்புக்களுக்கான நேரம் அல்ல. வகுப்பறைகள் வெறிச்சோடிப் போய்க் கிடந்தன. காவலாளியும் காணப்படவில்லை. முற்றிலும் ஆளரவமற்றிருந்தது அந்தப் பாடசாலை, மதிலோரமும் தொருவோரக் கட்டிடத்திற்குள்ளும் பதுங்கியிருந்த சிலரைத் தவிர. பச்சைக்கரைப் பாவாடையைப்…
-
- 10 replies
- 1.3k views
- 1 follower
-
-
லெப்.கேணல் ராதா கனகசபாபதி ஹரிச்சந்திரா வண்ணார்பண்ணை மேற்கு, யாழ்ப்பாணம். பொறுப்பு: யாழ் மாவட்ட தளபதி நிலை: லெப்.கேணல் இயக்கப் பெயர்: ராதா இயற்பெயர்: கனகசபாபதி ஹரிச்சந்திரா பால்: ஆண் ஊர்: வண்ணார்பண்ணை மேற்கு, யாழ்ப்பாணம். மாவட்டம்: யாழ்ப்பாணம் …
-
- 24 replies
- 4.4k views
- 1 follower
-
-
சுப்பரமணியம் வடிவேல் வவுனியா தாயின் மடியில் - 12.7.1975 மண்ணின் மடியில் - 24.5.2006 சிங்கள இராணுவத்தின் போர்முனைத் தளங்களில் அதிகம் உயரமில்லாத மிகமிக மெலிந்த ஓரல் முகமும், மினுங்கும் கண்ணும் கொண்ட சிற்றுருவம் ஒன்று நடுநிசியில் உலாவித் திரியும். கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லிருக்கும். ஒருமுறை கண்டு விட்டு மறுகணம் பார்த்தால் மறைந்து விடும். சுட்டால் சூடு பிடிக்காது. வருவது போல் தெரிந்தால் பின் எப்படிப் போனதென்று தெரியாது. ஆயிரம்பேர் வைத்துத் தேடினாலும் கண்ணுக்குள் புலனாகாது. இப்படியொரு பிசாசு சிங்கள இராணுவத் தளத்தில் உலவுவதாகக் கதையிருந்தால் அதுதான் வீரமணி. வீரமணியிடம் தலைமுறை தலைமுறையாக சலிக்காது கேட்கக் கூடிய வீரக்கதை இருந்தது. கற்பனைக் கதையல்ல. அவனே நாயகனாயி…
-
- 20 replies
- 2.9k views
-
-
விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் மகுடம் சேர்த்த, உலகப் போரியல் வரலாற்றில் தனியிடம் பெற்ற, தென்னாசியாவின் சிறந்த தரையிறக்கச் சண்டையாகப் பதியப்படக்கூடிய வகையில் தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படும் இத்தாவில் பெட்டிச்சமரை வழிநடாத்திய தலைமைத் தளபதி பால்ராஜ் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுதினம் இன்று. தளபதி பால்ராஜ் அவர்களின் போராற்றலை எடுத்தியம்புவதற்கு பல தாக்குதல்கள், சண்டைகள், சமர்கள் இருந்தாலும் சிறப்பு வாய்ந்ததாக அமைவது இத்தாவில் பெட்டிச்சமர். சிங்களப்படைகளின் முதன்மைத் தளபதிகள் வகுத்த திட்டங்கள், தந்திரோபாயங்கள் மட்டுமன்றி சர்வதேச இராணுவ வல்லுனர்களின் ஆலோசனைகளையும் தவிடுபொடியாக்கிய சண்டை. புலிகளின் இராணுவ வல்லமையை உலகறிய வைத்த அந்த வரலாற்றுச் சமரின் நாயகன் பிரிகேடிய…
-
- 14 replies
- 3.5k views
- 1 follower
-
-
-
- 3 replies
- 1.3k views
-
-
செல்லப்பெருமாள்அருமைராசா கொக்குத்தொடுவாய்முல்லை 2.2.1961-15.5.1989 இராணுவப் பரிசோதனை ஒன்றின் போது கையை இழந்துஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றான். ஒரு போராளி.வருவோர் போவோர் எல்லாம் அவனுக்கு ஆறுதலும், அனுதாபமும் தெரிவிக்கின்றனர். அது அவனுக்கு சினத்தை மூட்டுகின்றது. இறுதியாக அவனது தாய் வருகின்றாள். நீபோராடியது போதும். இனி உனக்கு ஒரு கையில்லை வீட்டிலேயே இரு. பாசத்தின்மேலீட்டால் இப்படியோரு கோரிக்கை விடுகின்றாள் தாய். அது அவனது மனக்கொதிப்பைஅதிகரிக்கினறது. தனக்கு அனுதாபம் கூறவந்தவர்களுக்கு சொல்ல வேண்டியதைச்சொல்ல இதுதான் தருணம் எனத் தீர்மானிக்கின்றான். எனக்கு இன்னொரு கை இருக்கு. உறுதியுடன் தெளிவாக ஒலிக்கின்றது அவனதுவார்த்தைகள். அவனுக்கு ஆறுதல் கூற முனை…
-
- 11 replies
- 2k views
-
-
தங்கத் தலைவனின் அடிச்சுவட்டில் உன் பாதம்பதித்து,கந்தகத் தீயினில் கரைந்த செந்தமிழ் வீரனே! இன்று உன் வீரவணக்க நாள். மூத்த புலியொன்றின் மூச்சடங்கிய நாள். அண்ணை அண்ணை என உச்சரித்த உன் நாவின் பேச்சிழந்த நாள். இன்று தமிழீழ மக்கள் நாம்,கண்ணீர் சிந்திக் காணிக்கைசெலுத்தி, வண்ணமலர் கொண்டுவந்து உன்பாதம் பணிகின்றோம். புல்லர்கள் அழிந்திடப் புனிதப்போர் புரிந்தவனே,வல்ல உன் துணிவுதனை வரலாறு சொல்லும். நாம் பெறும் வெற்றியின் வேரே,வீரத்தின் விளைநிலமே, வீழ்ந்தாலும் நீ விதையாகிப்போனாய். ஈழதேசத்தின் தூணாய் நிமிர்ந்து நின்றவனே உன் உயிரின் துடிப்பு அடங்கும்போதும்,எங்கள் உரிமைகேட்டல்லவோ அடங்கியது. சோதனை பல சந்தித்து சாதனை படைத்தவனே,துணிவு உன் காலடியில் துவண்டுகிடந்தது. அச்சத்திற்கு …
-
- 17 replies
- 3.4k views
-