Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழும் நயமும்

இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழ் மாதங்கள் வழக்குச் சொல் தூயதமிழ் தை _ சுறவம் மாசி _ கும்பம் பங்குனி _ மீனம் சித்திரை _ மேழம் வைகாசி _ விடை ஆனி _ இரட்டை ஆடி _ கடகம் ஆவணி _ மடங்கல் புரட்டாசி _ கன்னி ஐப்பசி _ துலை கார்த்திகை _ நளி மாரகழி _ சிலை தமிழ் கிழமைகள் ஞாயிறு _ ஞாயிறு திங்கள் _ …

  2. படைத்தலைவன் என்னும் சொல்லைக் குறிக்கும் வேறு தமிழ்ப் பெயர்கள்: பொருநன் - நன்கு சண்டையிடும் படைத் தலைவன் சேனையர்கோன்/ சேனைக்குடையார்(சேனைக்கு உடையவர்) - அத்துனை சேனைகளிற்கும் தலைவன் . இளவரசர் போன்றோரே இப்பதவிகளில் இருப்பர். சேனைமுதலி/ பெரும் படைத் தலைவன் - ஒவ்வொரு சேனைக்குமான தலைவன் இவன் மறுபெயர் மாசாமந்தன் என்பதாகும் சேனாதிபதி - Tamil + Sanskrit சேனாதிராயன் - (சேனை + அதி + அரையன்) - பல சேனாவரையர்களிற்கு தலைமையானவன் சேனாதிராயன் ஆவான். சேனாவரையன் - (சேனை + அரையன்) - அரையர் என்போர் உள்ளக தலைவர்களாகவே இருந்து வந்துள்ளனர் என்கிறார் ஒய் சுப்புராயலு. எனவே சேனாவரையர் என்பது சேனையின் …

  3. ஆற்றுப்படை காட்டும் தமிழர் பழக்க வழக்கங்கள்.. தமிழரின் மரபையும் தொன்மையையும் அறிவதற்கான வரலாற்றுச் சான்றாகச் சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. அவற்றுள் ஆற்றுப்படை இலக்கியங்கள், ‘யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்ற பரந்துபட்ட மனத்துடன் வாழ்ந்த பழந்தமிழனை அடையாளம் காட்டுவதாய் உள்ளன. அறிவியல் வளர்ச்சி, பொருளாதார ஏற்றத்தாழ்வு, மேற்கத்தியத் தாக்கம் போன்றவற்றால் தமிழரின் தனித்துவமான அடையாளங்களை இழந்தும், மறந்தும், தவிர்த்தும் வரும் நிலையில் சங்க இலக்கியங்களில் தமிழர் பழக்க வழக்கங்கள் அன்றும் இன்றும் என்ற பொருண்மையிலான சிந்தனை ‘காலத்தின் கட்டாயம்’ என்றே கூறலாம். ஆற்றுப்படை இலக்கியம் பத்துப்பாட்டில் பெரும்பான்மை பெற்றதாக ‘ஆற்றுப்படை’ இலக்கியங்கள் உள்ளன. ‘பகிர…

  4. தமிழர்களிடம் அக்காலத்தில் பல்வகையான படைகள் இருந்ததாக அறியக் கிடைக்கின்றது. → சேனையின் உட்பிரிவே ஒவ்வொரு விதமான படைகளாகும். ஆனால் பொதுவாக சொல்லும்போது படையென்னும் பெயரே ஆய்தம் தாங்கிய அரச ஆணைபெற்ற படைகளைக் குறிக்கின்றன.. முதலில் படைகளை அதன் நிலை அடிப்படையைக் கொண்டு அகப்படை - Internal Defensive Force மறப்படை - Expeditionary Force - என்று இரண்டு படைகளாகப் பகுத்துள்ளனர். கோட்டைப் போரின் போது பொருதும் படைகள் உழிஞைப்படை - பகை அரசனுடைய கோட்டையைத் தாக்கும் படை. நொச்சிப்படை - தங்கள் கோட்டையைக் காத்துக் கொள்ளப் போரிடும் படை. என்று அழைக்கபட்டன. இப்படைகள், அவை பெற்ற பயிற்சியின் அடிப்படையில் இரண்ட…

  5. வீரன் - ஆண்பால். வீரி / வீராங்கனை - பெண்பால் போராளி - ஒரு நாட்டில் ஓர் இனத்தின் மீது மேற்கொள்ளப்படும் அடக்கு முறைகளை எதிர்த்து அந்தினத்தின் விடுதலைக்காக போராடும் வீரனையோ (அ) வீராங்கனையோ குறிக்கும் சொல். பண்டைய காலத்தில் தமிழகத்தில் இருந்த படைவீரர்களுக்கான ஒத்த சொற்கள்: வீரர்களைக்(soldier) குறிக்கும் பொதுச் சொற்கள் :- 'கலிங்க வீரர்கள்' SHIELD BEARER: பரிசைக்காரன் தேவன் வெட்டுப்படை வீரர்கள் :- வாளினை படைக்கலமாகக் கொண்டவன் - வாளி, வாள்வீரன், வாளேந்தி, வாளாளன் வாளுழவன் - வாளை உடைய உழவன்(மக்கள் படை) கொங்கவாளர் - கொங்கவெள்ளம் என்னும் ஒருவகை கொடுவாளினைப் பயன்படுத்துவோர் சொட்டையாளன் - …

  6. பிழைகள் நீக்க ஒரே வழி இதுதான்

    • 0 replies
    • 2.4k views
  7. 'படிமப்புரவு: பிரசன்ன வீரக்கொடி | பட விளக்கம்: தமிழரின் பண்டைய வீரர்களைக் குறிக்கும் படங்கள் ஏதும் கடந்த வருடங்களாக உருவாக்கப்படாதலால் சிங்களவரின் பண்டைய வீரர்களை சித்தரிக்கும் படங்களை பயன்படுத்தலானேன். ' வீரன் - ஆண்பால். வீரி / வீராங்கனை - பெண்பால் போராளி - ஒரு நாட்டில் ஓர் இனத்தின் மீது மேற்கொள்ளப்படும் அடக்கு முறைகளை எதிர்த்து அந்தினத்தின் விடுதலைக்காக போராடும் வீரனையோ (அ) வீராங்கனையோ குறிக்கும் சொல். பெடியள் - ஈழத்தில் இவ்வாறு போராடியவர்களை இச்சொல் குறித்து நின்றது. படைவீரன்/ வீரன் = Soldier | மேலதிக விளக்கங்களிற்கு: போரியல். அன்றும் இன்றும் - வீரர்கள் வகை: 2.5 படைவெறியர் - இது ஈழத்தில் மட்டுமே …

  8. அதிகூடிய பல்லின மாணவரைக் கொண்ட கல்விச் சபைகளில் ஒன்றுமான ரொறன்ரோ கல்விச் சபையானது ஜனவரித் திங்களை தமிழ் மரபுத் திங்களாக பிரகடனம் செய்துள்ளது. இப்பிரகடனமானது ரொறன்ரோ கல்விச் சபையில் உள்ள பாடசாலைகளில் தமிழர் மரபு, பண்பாடு, மொழி, வரலாற்றைத் தமிழ் மாணவரோடு மட்டுமல்லாது வேற்றின மாணவருடனும் கொண்டாடும் வாய்ப்பை நல்கி உள்ளது. ரொறன்ரோ கல்விச் சபையானது ரொறன்ரோவின் பல்வேறு பாகங்களிலும் உள்ள 595 பாடசாலைகளில் கல்வி கற்கும் 246,000 மாணவர்களுக்கு தனது சேவைகளை வழங்குகிறது. இதில் 12,272 மாணவர்கள், அதாவது மொத்த மாணவர் தொகையில் ஏறத்தாழ 5.5% தமிழ் மாணவர்கள். தமிழ் மொழியானது ரொறன்ரோ கல்விச் சபையில் இரண்டாவது பெரும் மொழி குழுவாகவும், இரண்டாவது அதிகம் கற்பிக்கப்படும்…

  9. சுஜாதாவின் நினைவு நாளில்( feb 27) எழுத்தாளர் சுஜாதாவுடன் ஒரு சந்திப்பு சுஜாதா என்கிற எழுபது வயது இளைஞர் சுஜாதா, கணையாழியின் கடைசிப் பக்கங்களில் எழுதும் போது, தன்னை வந்து சந்திக்கும் வாசகர்களைப் பற்றி குறிப்பிட்டு விட்டு இவ்வாறு எழுதினார்: 'எனது உண்மையான வாசகர்கள் என்னை வந்து சந்திப்பதில்லை'. எனக்கு இதில் உடனே உடனே உடன்பாடு ஏற்பட்டது. ஏனெனில், ஒரு சிறந்த படைப்பாளி தன்னுடைய படைப்புகளிலேயே தாம் தீவிரமாக நம்புகிற கருத்துக்களையும், எண்ணங்களையும் முழுமையாக எந்த வித உபகேள்விகளுக்கும் இடமில்லாமல் மிக நேர்மையாக எழுதி விடுகிறார். ஆக அந்தப் படைப்பாளி எழுதியதையே நாம் முழுவதையும் உள்வாங்கிக் கொண்டால் அது போதுமானதாக இருக்கும். அதை விட்டு…

  10. தொல்காப்பியம் http://tawp.in/r/2wz கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல் தொல்காப்பியம் எழுதப்பட்ட ஓலைச்சுவடி தமிழ் இலக்கியம் சங்க இலக்கியம் அகத்தியம் தொல்காப்பியம் பதினெண் மேற்கணக்கு எட்டுத்தொகை ஐங்குறுநூறு அகநானூறு புறநானூறு கலித்தொகை குறுந்தொகை நற்றிணை பரிபாடல் பதிற்றுப்பத்து பத்துப்பாட்டு திருமுருகாற்றுப்படை குறிஞ்சிப் பாட்டு மலைபடுகடாம் மதுரைக் காஞ்சி முல்லைப்பாட்டு நெடுநல்வாடை பட்டினப் பாலை பெரும்பாணாற்றுப…

  11. உயர்விலும் உயர்வுநவிற்சி - சுப.சோமசுந்தரம் பொதுவாக உயர்வுநவிற்சி என்பது இலக்கிய இன்பத்திற்கான ஒரு மரபு; இலக்கியச் சுவை கூட்டும் முயற்சி. எடுத்துக்காட்டாக, பிரிவாற்றாமையில் வாடும் தலைவிக்குத் தோலில் ஏற்படும் ஒரு மாற்றம் அல்லது தாக்கம் பசலை எனப்படுவது. அச்சூழலில் உள்ளத்தின் பிரதிபலிப்பாய் உடல் இயங்கும் இயற்கை நிகழ்வாகப் பசலை இருக்கலாம். அவ்வாறெனில் அதனை உயர்வுநவிற்சி எனச் சொல்வதற்கில்லை. இயற்கை நிகழ்வெனில் இக்காலத்திலும் அது பிரிவாற்றாமையின் வெளிப்பாடாக அமைதல் வேண்டும். அவ்வாறான வெளிப்பாடு இன்றைய அறிவியல் உலகில் பதிவு செய்யப்படவில்லை. எனவே பசலையை ஒரு இலக்கிய மரபாகவே கொண்டு அதனை உயர்வுநவிற்சியாய் வகைப்படுத்துதல் நம் பகுத்தறிவுக்கு எட்டுகின்ற பொருளாய் இப்போதைக்குத் தோன்றுகிறத…

  12. விண்வெளியில் உள்ள ஒரு நிலவினையோ அ ஒரு கோளினையோ சுற்றி தகவல் சேகரிப்பதற்காக மனிதனால் ஏவப்பட்ட இயந்திரமே இந்த செய்மதி அ செயற்கைக்கோள் ஆகும். ஆனால் இதைக் குறிப்பதற்கான சொல்லாக நமது தமிழ் மொழியில் நில அடிப்படியிலான இரு பெரும் எழுத்து வழக்குகளில் இரு வேறு சொற்கள் கையாளப்படுகின்றன. அவற்றுள் எது பொருள் அடிப்படியில் சரியானது என தற்போது பார்ப்போம். (எனக்குப் பட்டதை நான் எழுதிவைக்கிறேன்.) செய்மதி = செயற்கை நிலவு → ஈழம் செயற்கைக்கோள் = செயற்கை கோள்மீன் → இந்தியா ————————————————— முதலில் ஈழத் தமிழின் செய்மதி விளக்கத்தினை பார்ப்போம். விண்ணில் உள்ள செயற்கைக்கோளானது மனிதர்களால் செய்து அனுப்பப்பட்ட ஒரு செயற்கையான புவியை மையமாகக் கொண்டு சுழலும…

  13. கபிலர் பாடல்களில் அகப்புற மரபுகள் முன்னுரை எல்லாவற்றிலும் புதுமையை விரும்புவது மனித இயல்பு. இருப்பினும், பழமையை சுலபமாக விட்டுவிட முடிவதில்லை. அத்தகைய பழமை பாராட்டுவதே மரபின் அடிப்படை. கலை, இலக்கியங்கள் மரபைப் பின்பற்றியதால்தான் இன்றும் நிலைத்து நிற்கின்றன. அகத்திணைப் பாடல்கள் அனைத்தும் மரபின் அடிப்படையிலேயேயாக்கப் பெற்றுள்ளன. இவ்வகத்திணைப் பாடல்கள் மிகப் பழமையனவாக இருப்பினும், இன்றும் அவை ஆளுமைத்தன்மை மிக்கதாக விளங்குவதைக் காணலாம். சங்க அகப்பாடல் உருவாக்கத்தில் திணை, துறை அமைப்புகள் வழி நின்று கபிலர் எத்தகைய மரபைப் பின்பற்றியுள்ளார் என்பதை சிந்திப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அகமும் புறமும் சங்கப்பாடல்களை அகம், புறம் என்ற இரு பெரும்பிரிவுகளுள்…

  14. நாட்டுப்புறப்பாடல்கள் வாய்மொழியாகவே மக்களிடத்தில் வழங்கி வருகின்றன. இவ்வாய்மொழி இலக்கியங்கள் தற்காலத்தில் பெருமுயற்சிகள் எடுத்து எழுத்துவடிவில் பதிவாக்கம் செய்யப்படுகின்றன. குறிப்பாக நாட்டுப்புற இலக்கிய வகைகளுள் ஒன்றான, சிறுவர் பாடல்கள் தற்காலத்தில் தேய்ந்து அருகி வருகின்றன. இதற்குக் காரணம் சிறுவர்கள் தம்விளையாட்டு எண்ணம் மறக்கப்பெற்று அவற்றிக்கு நேரமும் வாய்ப்பும் இல்லாமல் போனது என்பதே ஆகும். சிறுவர்கள்தம் விளையாட்டு எண்ணம் தொலைக்காட்சி, கணினி விளையாட்டு ஆகியவற்றால் கவரப்பெற்று விளையாட்டு, ஆடல், பாடல், விடுகதை போன்றவற்றிற்கு நேரம் இல்லாமல் போயிற்று. விளையாட்டைக் காண்பவர்களாக மட்டுமே இக்காலக் குழந்தைகள் வளர்ந்து வரும் இவ்வகை குறைவதற்கான காரணம் ஆகும். மேலும் பள்ளிகளில…

  15. Started by Kalamaran,

    எமது வாழ்வியலில் அம்மை அப்பனே வாழ்வின் முழு முதல் ஆரம்பம். ஆகவே தமிழ்த் தாய் ஒருவரின் வீரத்தினை எடுத்து இயம்பி நிற்கும் புற நானூற்றுப் பாடலைக் கொண்டு தமிழர் வீரத்தை நாமும் அறிந்து போற்றுவோமாக. "மீனுண் கொக்கின் தூவியன்ன, வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன், களிறெறிந்து பட்டனன் எனும் உவகை, ஈன்ற ஞான்றினும் பெரிதே" மூலம்: புற நானூறு பாடியவர்: பூங்கண் உத்தரையார் தூவி - இறகு, வால் - வெண்மை (நிறம்) களிறு - ஆண்யானை படுதல் - மாய்தல் (போரில் வீரமரணம்) உவகை - மகிழ்ச்சி சங்கத் தமிழ்த் தாயானவள், போர்க்களத்திலே தன் மகன் யானையைக் கொன்று இறந்தான் என்று மற்றோர் சொல்லக் கேட்ட செய்தியால், தான் அவனைப் (ஆண் மகவு) பெற்றெடுத்த கணத்தில் மகிழ…

    • 0 replies
    • 4.2k views
  16. இலக்கணம் - யாப்பெருங்கலக் காரிகை யாப்பருங்கலக்காரிகை - ஒரு அறிமுகம் நெறிபடுத்தப்பட்ட மொழியாகிய தமிழில் இலக்கிய வளர்ச்சியுடன் இலக்கண வளர்ச்சியும் இணைந்தே நடந்து வந்திருக்கிறது. உலகின் தொன்மையான இலக்கண நூல்களில் தொல்காப்பியமும் ஒன்று. இதின் இலக்கண விதிகள் இன்றைக்கும் பொருந்திவருவது உலகில் வேறேந்த மொழிக்கும் இல்லாத சிறப்பாகும். இந்த நெடிய இலக்கண மரபில் முக்கிய இடம் வகிக்கும் ஆக்கம் யாப்பருங்கலக்காரிகை; இது செய்யுளுக்கு இலக்கணம் கூறுகின்றது. இந்நூல் உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் எனும் மூன்று பகுதிகளைக் கொண்டது. பாவின் அடிப்படை உறுப்புகளாகிய, எழுத்து, அசை, சீர், தளை முதலியனவற்றை முதல் பகுதியாகிய உறுப்பியல் விளக்குகின்றது. இது தொடர்ந்து செய்யுளியலில் பாவிற்குரிய…

  17. முற்காலத் தமிழகத்தில், போர்களின்போது முதுகிலே புண்பட்டவர்கள், அதை அவமானமாகக் கருதுவர். இதனால், அப் போர்க்களத்திலேயே வடக்கு நோக்கியபடி பட்டினி கிடந்து தமது உயிரைப் போக்கிக் கொள்வது உண்டு. இவ்வழக்கமேபழங்காலத் தமிழகத்திலே போர்களுக்குக் குறைவு இருக்கவில்லை, முடியுடை மூவேந்தர்கள் எனக் குறிப்பிடப்படும் சேரர், சோழர், பாண்டியர் என்போரும், அவர்களுக்கு அடங்கிய குறுநில மன்னரும், ஒருவருடன் ஒருவர் போரில் ஈடுபட்டனர். வீரம் என்பது ஆண்களுக்கு இருக்க வேண்டிய சிறந்த பண்புகளில் ஒன்றாகக் கருதப்பட்டது. புகழ் பெற்ற மன்னர்கள் பெரும் வீரர்களாக இருந்தார்கள். இத்தகைய வீரர்கள் பற்றிப் புலவர்கள் புகழ்ந்து பாடினர். போர் வரும்போது புறமுதுகிடாமல் (பயந்து ஓடாமல்) முன் நின்று போர் செய்வது வீரர்களுக்கும் …

  18. இருபதாம் நூற்றாண்டில் மூன்று இயக்கங்கள் தமிழ்நாட்டில் முதன்மைபெற்றன. அவை தமிழக இலக்கியப்போக்குகளையும் தீர்மானித்தன. தேசியம்-காந் தியம் என்பது முக்கியமான ஓர் இயக்கமாகச் சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் அமைந்தது. பாரதி, வ.வே.சு.ஐயர் முதற்கொண்டு பல எழுத்தாளர்கள் தேசிய இயக்கத்தில் ஈடுபட்டவர்கள். அதற்குப் பின் திராவிட இயக்கம் மதிப்புப் பெற்றது. கடைசியாகத் தமிழகத்தில் வந்த இயக்கம் மார்க்சியம். காந்திய இயக்கத்தினர் நாவல், சிறுகதை, கவிதைத் துறைகளில் ஓரளவு ஆக்கம் புரிந்தபோதிலும் திறனாய்வுத்துறையில் அவ்வளவாக ஈடுபடவில்லை. இருபதாம் நூற்றாண்டில் காந்தியவாதிகளாகவும் திறனாய்வாளர்களாகவும் எஞ்சியவர்கள் நாமக் கல் கவிஞரும் சி.சு. செல்லப்பாவும் மட்டுமே. ஆங்கிலேயர்கள் ஏறத்தாழ இந்…

  19. தமிழ் அறிவுலகில் தொடர்ச்சியாக நிகழ்ந்து வரக்கூடிய சிந்தனைப்போக்குகள் என சில உண்டு. 1. சங்க இலக்கிய ஆராய்ச்சியும் ரசனையும் 2. கம்பராமாயண ஆராய்ச்சி 3. குறள் ஆய்வு 4. சித்தர் மரபு மீதான ஆய்வு 5. வள்ளலார் ஆய்வுகள் 6. பாரதி ஆய்வுகள். சைவ வைணவ இலக்கியங்களைப்பற்றிய ஆய்வுகள் உண்டென்றாலும் அவை மரபார்ந்த ஒரு பார்வையை மட்டுமே கொண்டவை. சீரான ஒரு வளர்ச்சிப்போக்கு அவற்றில் இல்லை. மேலே சொன்ன ஆறு சரடுகளில் சங்க இலக்கிய ஆய்வுகளின் பொற்காலம் என்பது ஐம்பது அறுபதுகள்தான். மெல்ல மெல்ல சாராம்ச வல்லமை கொண்ட ஆய்வுகள் அருகி விட்டன. அதற்கான காரணங்கள் பல. முக்கியமானது, சங்க இலக்கியத்தில் தகவல்கள் சார்ந்து செய்யப்படவேண்டிய ஆய்வுகள் எல்லாமே செய்யப்பட்டுவிட்டன என்பதுதான். சங்க இலக்கி…

    • 0 replies
    • 939 views
  20. வில்லுப்பாட்டு கச்சேரி என்பது, கீழ்கண்ட கருத்தில் இருக்க வேண்டும். மக்களுக்கும் புரிய வேண்டும். வில்லுப்பாட்டுக்கான கதைகள் பல்வேறு வகையில் அமைகின்றன. மரபு வழிக்கதைகள் முதல் தற்கால நிகழ்வுகள் வரை எதையும் வில்லுப்பாட்டுக்கான கதையாகக் கொள்ளலாம். ஆனால் கட்டமைப்பு நிலையில் அவை பொதுவான வடிவத்தைக் கொண்டு விளங்குவதைக் காணலாம். வில்லுப்பாட்டில் வரும் கதைகள் பொதுவாகப் பின்வருமாறு அமையும், அவை அ) தொன்மைக் கதைகள் ஆ) நாட்டுப்புறக் கதைகள் இ) தெய்வக் கதைகள் ஈ) சமுதாயக் கதைகள் உ) வரலாற்று வீரர் கதைகள் ஊ) நடப்பியல் நிகழ்வுகள் போன்றனவாகும். இவ்வகையில் அய்யன் கதை, வள்ளியம்மன் கதை, பார்வதியம்மாள் கதை, மார்க்கண்டன் தவசு, அரிச்சந்திரன் கதை, கிருட்டிணசாமி கதை, பெருமாள்சாமி கதை, மாகாளியம்மன் கதை…

  21. சேதுபதி மன்னரின் அவைப் புலவர்களில் ஒருவராக இருந்தவர் மதுரகவிராயர் . ராமநாதபுரத்துக்கு அருகில் வசித்து வந்தார். ஒரு நாள் அவரைப் பாம்பு கடித்துவிட்டது. அதனால் அவரது உயிர்நிலை அடங்கிப்போய்விட்டது. ஆனால் உறவினர்கள் அவர் இறந்துவிட்டார் என்று எண்ணி விட்டனர். ஆகையால் எல்லா இடங்களுக்கும் செய்தி சொல்லிவிட்டனர். சேதுபதி மன்னரும் தம்முடைய ஆஸ்தானப்புலவர் இறந்துவிட்டார் என்பதால் வரிசைகள் அனுப்பியிருந்தார். உடலை மயானத்திற்கு எடுத்துச் சென்றனர். அப்போது ராமேஸ்வரம் சென்றுகொண்டிருந்த வடநாட்டு பைராகிகள் கவிராயரின் உயிர்நிலை மட்டுமேஅடங்கியுள்ளதை அறிந்துகொண்டனர். கவிராயருக்கு காருட மந்திரப ்பிரயோகம், விஷ வைத்தியமெல்லாம் செய்து அவரை எழுப்பினர். சில பரிகாரங்களுடன் வீட்டில் சேர்த்துக்கொள்…

  22. இவ்விடுகை அடிபாட்டியலில்(hopology) விருப்பம்/நாட்டம் உள்ளோரிற்கு நல்ல விருந்தாக அமையும். இங்கே தெறுவேயங்களில் இருக்கும் உறுப்புகளை பட்டியலிட்டு அவற்றின் செயல்களையும் விளக்கியுள்ளேன். குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு உறுப்பினையும் கீழே உள்ள படிமத்தில் கண்டுகொள்ளவும். பீரங்கி என்பது தமிழல்ல. சரியான தமிழ்ச் சொல் தெறுவேயம் என்பதாகும். → தெறுவேயம் - Cannon எதிர்மறை வெளி(Negative space):- துளை(Bore): மூட்டுப்படை(Ordance) (நொய்யகோ(wad), குளிகை(pellets) போன்றவை) நிரப்பப்படும் துளையின் தளம் அல்லது துளையின் அடி எனப்படும் துளைக்கு அருகிலுள்ள முடிவு உட்பட அனைத்தும் உள்ளீடற்ற உருளை போன்று தெறுவேயத்தின் மையத்தின் கீழ் வரை துளைக்கப்பட்டுள்ளது. இதில் தெர…

  23. தவறவிடாதீங்க.. பிறகு வருத்தப்படுவீங்க.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! சென்னை: தமிழ் நூல்களை மொழியாக்கம் செய்ய தமிழ்நாடு அரசால் மொழிபெயர்ப்பு மானியமாக 3 கோடி ரூபாய் Translation grant வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். எழுத்தாளர்களுக்கு - பதிப்பாளர்களுக்கு - மொழிபெயர்ப்பாளர்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு என்றும் இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது; மொழிபெயர்ப்பு மானியம் தமிழ் மொழியை உலகெங்கும் எடுத்துச் செல்லும் வகையில் தமிழ் மொழியின் சிறந்த படைப்புகளை உலக மொழிகளிலும் இந்திய மொழிகளிலும் மொழியாக்கம் செய்ய …

  24. எளிய முறையில் தமிழ் எழுத்துக்களை கற்றுக்கொள்ளல்-Easy and simple method

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.