தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
-
- 0 replies
- 1.1k views
-
-
விவேக சிந்தாமணி - நல்ல தமிழ் அறிவோம் அழியும் ஆறு "மூப்பில்லாக் குமரி வாழ்க்கை முனை இல்லா அரசன் வீரம் காப்பில்லா விளைந்த பூமி கரையிலாது இருந்த ஏரி கோப்பிலான் கொண்ட கோலம் குருஇலான் கொண்ட ஞானம் ஆப்பில்லா சகடு போலே அழியுமென்று உரைக்கலாமே " பருவமடையாத பெண்ணின் வாழ்க்கை, விவேகம் இல்லாத அரசனின் வீரம் காவல்காரன் இல்லாமல் விளைந்து நிற்கும் பூமி, கரை இல்லாத ஏரி வசதி இல்லாதவன் செய்யும் ஆடம்பரம், குரு இல்லாமல் கற்கும் அறிவு அச்சாணி இல்லாத சக்கரம் போல், ஒரு சில நாட்கள் சுழலுமே தவிர நிலையாக நில்லாமல் அழிந்து போகும் ஆறு விஷயங்கள் ஆகும் +++++++++++++++ பயன் இல்லாத ஏழு "ஆபத்துக்கு உதவாத பிள்ளை அரும்பசிக்கு உதவாத அன்னம் தாகத்தைத் த…
-
- 0 replies
- 570 views
-
-
ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்! பாண்டிய மன்னனின் மகளைக் குலோத்துங்க சோழனுக்கு பெண்கேட்டு வந்த ஒட்டக்கூத்தருக்கும், பாண்டியமன்னன் மகளின் குருவான புகழேந்திப்புலவருக்கும் தந்தம் நாட்டுப்பற்றால் மோதல் ஏற்பட்டது. இருவரும் புலவர்கள் ஆதலால் கவிதைத் திறத்தால் மோதிக்கொண்டனர். புலவர்கள் இருவரும் தத்தம் அரசுகளைப் புகழ்ந்து பாடியதை பாண்டிய மன்னன் இரசித்துக் கேட்டான். எனினும் அந்நாளில் தமிழகத்தை ஆண்ட மன்னர்களுக்குள் தன் மகளுக்கு ஏற்ற கணவனாக வரும் தகுதி குலோத்துங்க சோழனுக்கு இருந்ததை பாண்டிய மன்னன் அறிந்திருந்ததாலும், அரசியல் காரணங்களுகக்காகவும் அத்திருமணத்திற்கு உடன்பட்டான். திருமணம் முடித்து குலோத்துங்கனுடன் செ…
-
- 0 replies
- 632 views
-
-
தமிழில் சிலேடைகள் கம்பருக்கும் ஒட்டக் கூத்தருக்கும் நிரந்தரமாகப் புலமைக் காய்ச்சல் உண்டு என்று கர்ண பரம்பரைக் கதைகள் சொல்கின்றன. இருவருமே இராமாயணம் எழுதினார்கள் என்றும் கம்பர் காவியத்திற்கு இணையாக தனது காவியம் இல்லை என்பதால் ஒட்டக் கூத்தர் தாம் எழுதிய காவியத்தை எரித்து விட்டார் என்றும் சொல்வதுண்டு. கம்பராமாயணத்தை ஒவ்வொரு பாடலாக வாசித்து அரங்கேற்றிக் கொண்டிருந்தாராம் கம்பர். ஒட்டக்கூத்தர் உள்பட ஏராளமான புலவர்கள் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு பாடலில் அருமையான கற்பனை ஒன்றை, கம்பர் உவமையாக வைத்திருந்தார்.மலர்ந்து கொண்டிருக்கும் மல்லிகை மொட்டுக்கள் வடிவத்திலும் நிறத்திலும் சங்கு போன்றவை என்றும் அந்த மொக்குகளின் மேல் வண்…
-
- 0 replies
- 943 views
-
-
’இலக்கியம்’ என்ற பதம் எதனைக் குறிக்கும் என்பதற்கு விடையளிக்க ஏ.ஜே.கனகரட்னா அவர்களை விடவும் சிறந்தவர் இருக்கமுடியாது. அவர் எதனைக் கூறுகிறார் என்றுபார்ப்போம். “இலக்கியம் என்றபதம் ஆங்கிலத்தில் எதனைக் குறிக்கின்றது என்பதனை ஆராய்தல் தெளிவை ஏற்படுத்தும். ‘‘Literature’’ (இலக்கியம்) - என்றபதம் ,14ஆம் நூற்றாண்டளவில் ஆங்கிலத்தில் புழக்கத்திற்கு வந்தது. அதன் இலத்தீன் வேர்ச்சொல் ‘எழுத்து’ (Letter of the alphabet) எனப் பொருள்படும். இவ்வாறு நோக்கின் எழுத்தில் அல்லது அச்சிலுள்ள சகலதையுமே ‘Literature’ என்ற பதத்துள் அடக்கிவிடலாம். எப்பொருளைப் பற்றியும் அச்சிலுள்ளது ‘Literature’ -இலக்கியம்தான். 14ஆம் நூற்றாண்டில்,பிரஞ்சுமொழியின் பாதிப்பின் ஊடாக ஆங்கிலத்தில் புழக்கத்திற்கு வந்த ‘Literatu…
-
- 0 replies
- 917 views
-
-
பண்பாட்டு அசை பண்ணொடு இசை சுப. சோமசுந்தரம் தொ.ப.வின் பண்பாட்டு அசைவுகள் படித்துப் பிரமித்துப் போயிருக்கிறேன். அது ஆங்கிலத்தில் cultural movements பற்றியது எனச் சொல்லலாம். நான் இங்கு பதிய நினைப்பது பண்பாடு சார்ந்த விடயங்களை இலக்கிய உலகில் சான்றோர் பெருமக்கள் அசை போடுதல் (chewing the cud) பற்றியது. விலங்கினங்கள் தாம் உட்கொண்டவற்றை வெளிக்கொணர்ந்து நிதானமாக அசை போடுவதற்கும் மனிதர்கள் தாம் உள்வாங்கியவற்றை நினைவுகளில் வெளிக்கொணர்ந்து அசை போடுவதற்கும் எவ்வாறு தமிழில் 'அசை போடுதல்' என்ற ஒரே சொல்லாடல் அமைந்ததோ, அவ்வாறே ஆங்கிலத்திலும் இவை இரண்டிற்கும்…
-
- 0 replies
- 1.8k views
- 1 follower
-
-
மோதலால் பிறந்த தமிழ்க் கவிதை! சோழ மன்னன் குலோத்துங்கனின் அரசவையில் தலைமைப் புலவராக இருந்தவர் ஒட்டக்கூத்தர். பாண்டிய மன்னனின் தலைமைப் புலவராக இருந்தவர் புகழேந்தி. இருவரும் சமகாலத்தவர்கள். ஒட்டக்கூத்தர், தம் புலமையில் மிகுந்த செருக்குக் கொண்டவர். பிற புலவர்களின் கவிதையில் குற்றம் கண்டுபிடிப்பதில் வல்லவர். சோழ மன்னன், பாண்டிய மன்னன் மகளைத் திருமணம் செய்ய விரும்பினான். அக்காலத்தில் மன்னர்களின் குடும்பத்தில் திருமணம் நடைபெறுவதற்கு - பெண் கேட்கச் செல்வதற்கு மன்னரின் சார்பாக அவைக்களப் புலவரை அனுப்பும் அளவுக்கு அவர்கள் செல்வாக்கு பெற்றிருந்தனர். அதனால் சோழ மன்னன், ஒட்டக்கூத்தரைத் தன் தந்தைபோல் கருதிப் பாண்டிய மன்னனிடம் பெண்கேட்க அனுப்பினான். ÷ஒட்டக்கூத்தர், பாண்டிய …
-
- 0 replies
- 770 views
-
-
[size=3] வணக்கம் [/size] [size=3] அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது [/size] [size=3] [size="4"]தமிழியல் - கடலியல் ஆய்வு[/size][/size] [size=3] திரு. ஒரிசா பாலு ஐயா அவர்களின் நேர்காணல் நிகழ்வின் மூன்றாம் பகுதி இது. [/size] [size=3] இதுவரை வெளியாகியுள்ள விழியங்கள் : 92 இதுவரை விழியங்களை நேரிடையாக You Tube வலைத்தளத்தில் பதிவுசெய்து பெற விழைந்தோர் : 64 இதுவரை இந்த விழியங்கள் மொத்தமாக பெற்றுள்ள பார்வை : 8042 அடுத்த இருபது வருடங்களில் இந்த தளம் பெற விரும்பும் அறிவியல் தமிழ் விழியங்களின் எண்ணிக்கை : 99908[/size] [size=3] காலத்திற்கு வேண்டியதை, வேண்டிய நேரத்தில் பெற்று தன்னை புதுப்பித்துக்கொள்ளும் திறன் அறிவியலுக்கு உண்டு - காலத்தை கடந்து பயண…
-
- 0 replies
- 693 views
-
-
கம்பனும் கண்ணதாசனும் வளவ.துரையன் இந்த இரண்டு மகாகவிகளும் காலத்தால் அழிக்க முடியாத மாபெரும் காவியம் தரவல்லவர்கள். ஒருவர் கவிச்சக்கரவர்த்தி, மற்றொருவர் கவியரசர். தேரழுந்தூரில் தோன்றி, சடையப்ப வள்ளலால் திருவெண்ணை நல்லூரிலே ஆதரிக்கப்பட்டு ”ஒரு பூனை பாற்கடலைக் குடிப்பதுபோல மாபெரும் இராமகாதை இயற்ற வந்தேன்” என்ற கம்பனும், சிட்டுக்குருவிகள் கூட கூடுகட்டப் பயப்படும், பொட்டல்வெளியான சிறுகூடற்பட்டியிலே பிறந்து, “போற்றுபவர் போற்றட்டும், புழுதிவாரித் தூற்றுபவர் தூற்றட்டும்; ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன், எவர் வரினும் நில்லேன், அஞ்சேன்” என்று ஐம்பத்திரண்டு வயதுவரை வாழ்ந்து சிகாகோ நகரில் தம் வாழ்வை முடித்த முத்தையாவான கண்ணதாசனும் தமிழன்னையின் இரு கண்களைப் ப…
-
- 0 replies
- 3.7k views
-
-
திருக்குறளுக்குக் கிடைத்த பெருமை! ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் தான், சென்னைக்கு முதன் முறையாக அச்சு எந்திரம் வந்தது. இந்த எந்திரத்தின் மூலம் முதலில் எதை அச்சிடுவது என்று ஆங்கிலேயர்களுக்குக் குழப்பம்! அப்போது தஞ்சை மன்னரின் அரசவைக் கவிஞராக இருந்தவர் புலவர் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர். 'இவரிடம் கேட்டால், நல்ல நூலைத் தேர்வு செய்து தருவார்' என்று பலரும் ஆலோசனை வழங்கினர். உடனே, சிவக்கொழுந்து தேசிகரை வரவழைத்து அவரிடம் இதுகுறித்துக் கேட்டனர் ஆங்கிலேய அதிகாரிகள். சிவக்கொழுந்து தேசிகர் கொஞ்சமும் யோசிக்காமல், ''திருக்குறளை வெளியிடலாம்'' என்று சொன்னார். இதைக் கேட்ட ஆங்கிலேய துரைக்கு ஆச்சரியம்! ''திருக்குறளில் அப்படி என்ன உள்ளது?'' என்று கேட்டார். அதற்கு தேச…
-
- 0 replies
- 1.7k views
-
-
நூல்: நற்றிணை (308) பாடியவர்: எயினந்தை மகன் இளங்கீரனார் சூழல்: பாலைத் திணை செல விரைவு உற்ற அரவம் போற்றி மலர் ஏர் உண் கண் பனி வர, ஆய் இழை யாம் தற் கரையவும், நாணினள் வருவோள், வேண்டாமையின் மென்மெல வந்து, வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி, வெறிகமழ் துறு முடி தயங்க, நல் வினைப் பொறி அழி பாவையின் கலங்கி, நெடிது நினைந்து, ஆகம் அடைதந்தோளே, அது கண்டு ஈர் மண் செய்கை நீர் படு பசுங்கலம் பெருமழைப் பெயற்கு ஏற்றாங்கு, எம் பொருள்மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே! பொருள் விளக்கு கவிதை: காடுமலை மேடுபள்ளம் கடந்(து) எங்காலும் காண்பதற்காய் பொருட்செல்வம் - நெஞ்சம் நாட. ஒடியுடன் புறப்படற்காய் விரைகின்றேன் யான் ஒரே சத்தம் வீடெங்கும் - மனையாள்தன்னை தேடுகிறேன் குவளை …
-
- 0 replies
- 1.7k views
-
-
விடுபூக்கள் : கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள் கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள் கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள் போன்றவர்களின் ஆதரவுடன் 2001-ம் ஆண்டு டொராண்டோவில் கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம் ஓர் அறக்கட்டளையாகத் தொடங்கப்பட்டது. ஆண்டுதோறும் வாழ்நாள் சாதனையாளர் விருது (இயல் விருது) உள்ளிட்ட பல விருதுகளை கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கிவருகிறது. 2015-ம் ஆண்டுக்கான, 17-வது இயல் விருது, தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையதளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தைத் தொடங்கி வெற்றிகரமாக இயக்கிவரும் இ.மயூரநாதனுக்கு வழங்கப்படுகிறது. சுந்தர ராமசாமி, அம்பை, நாஞ்சில் நாடன், தியடோர் பாஸ்கரன் உள்ளிட்ட ப…
-
- 0 replies
- 588 views
-
-
சமர்க்களங்களில் பயன்படுத்தப்படும் ஊர்திகளுக்கான தமிழ்ச்சொற்கள் : ஏவுகணை காவி - missile carriers உந்துகணை காவி - rocket carriers (weapon) உந்துகணை சேணேவி- rocket artillery சேணேவி - Artillery | ஆக்கியோன்: திரு. திருத்தம் பொன் சரவணன் உந்துருளி - motorbike கவசச் சண்டை ஊர்தி - Armoured fighting vehicle சண்டை - இருவர்/இரண்டு செய்யும் போர்.. குதிரையிழு சுடுகலன் - Tachanka போரூர்தி- war wagon காப்பூர்தி - protected vehicle இள பேரரையர் சரா ஆனையிறவில் செலுத்திய ஊர்தி இவ்வகையே. பொநோவகம் - jeep பொது நோக்க வகம் என்பதன் சுருக்கம் தண்டவாளச் சுடுகலன் - railway…
-
- 0 replies
- 719 views
- 1 follower
-
-
'ஆரியம் இறந்த கதை'யைச் சொல்லும் ஆங்கிலம்! மொழிகளின் இயற்கை புரிந்துவிடு! மனிதர்க்குத் தமிழே ஆதிமொழி!-4 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் "ஆரிய மொழிக்குடும்பத்தில், ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மொழிகளெல்லாம் இன்னும் செழிப்புடன் பேசப்பட்டு, உலகவழக்கில் இருக்கிறாப்ல! இந்திய ஆரியமொழியான சமற்கிருதத்தை ஏன் மக்கள் மறந்துவிட்டார்கள்?", என்று வருத்தத்துடன் கேட்டபடியே வந்தார் நண்பர். சமற்கிருதம் எக்காலத்தும் பேசப்படாத மொழியே! "சமற்கிருதம் எக்காலத்திலும் மக்களால் பேசப்படாத மொழி; சமயம், இலக்கியம், அறிவு நூற்கள் ஆகியன இந்தி…
-
- 0 replies
- 2.7k views
-
-
உதயணகுமார காவியம் வத்தவ நாட்டரசன் சதானிகனுக்கும் அவன் மனைவி மிருகாவதிக்கும் பிறந்த உதயணனின் கதையை விளம்புவது இக்காவியம். 6 காண்டங்களில், 369 விருத்தப்பாக்களால் ஆனது இந்நூல். கந்தியார் (சமணப் பெண்துறவி) ஒருவரால் இயற்றப்பட்டது. இந்நூலில் உதயணன் நான்கு மனைவியரை மணந்து இறுதியில் துறவு நிலையை மேற்கொண்டதை அறிய முடிகிறது. கதையமைப்பு சிக்கலானதாகவும், இரு கதைத் தலைவர்களைக் கொண்டும் உள்ளது. பெயர் தான் காவியமே தவிர காவிய இயல்போ ஏற்றமோ நடை நலமோ சிறிதும் இல்லாதது. பெருங்கதை என்கிற நூலின் சுருக்கம் என்று கூட இதனைச் சொல்லலாம். இதன் காலம் கி.பி.15 ஆம் நூற்றாண்டு. நாககுமார காவியம் இதன் ஆசிரியரும் ஒரு சமணப் பெண்துறவியே. பெயர் அறியக் கிடைக்கவில்லை. 5 சருக்கங்கள…
-
- 0 replies
- 748 views
-
-
தமிழர் புலமை மரபு: ஏற்றமும் இறக்கமும் பேரா. கி. நாச்சிமுத்து, தலைவர், இந்திய மொழிகள் புலம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புது டெல்லி தமிழர் புலமை மரபு என்று சொல்லும்போது மொழி இலக்கியம் சார்ந்த துறைகளில் மட்டுமல்லாமல் பொதுவாக எல்லா அறிவுத்துறைப் புலமை மரபைப் பற்றிய விரிந்த பொருளை மனதில் கொண்டே இங்கு சிந்திக்கப் புகுகின்றோம். அறிவுத்துறைகளுள் இயல் பிரிவில் மொழிக்கும் இலக்கியத்திற்கும் தொல்காப்பியரின் இலக்கண நூல் ஒர் அரிய சாதனை. இது போன்றே இசை நாடகம் போன்ற துறைகளுக்கும் அறிவியல் நூல்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் சிலவே தப்பி வந்திருக்கின்றன. கணக்கு தர்க்கம் தத்துவம் மருத்துவம் சிற்பம் சோதிடம் போன்ற துறைகளில் ஒரு சிலவே நமக்குக் கிடைக்கின்றன. கணக்கு போன்ற துறைகளில…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழ் எழுத்துக்கள் 247 என்றுதான் பள்ளியிலே படிக்கிறோம். ஆனாலும், எழுதும்போது வடமொழி எழுத்துக்களான ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ, ஸ்ரீ எனப்படும் கிரந்த எழுத்துக்களையும் சேர்த்தே எழுதவேண்டிய சூழலுக்கு ஆளாகிறோம். இந்த வடமொழி கிரந்த எழுத்துக்கள் எந்தக் காலகட்டத்தில், எப்படி தமிழ் எழுத்துகளுக்குள் நுழைந்தன? என்பது பற்றி தமிழ் மொழி ஆராய்ச்சியாளரும், தமிழ்ப் பண்பாட்டு தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் மு.இளங்கோவனிடம் பேசினோம். அவர் தந்த கருத்தினை இங்கு தருகிறோம். தமிழ்மொழி பிற மொழிகளின் துணையின்றித் தனித்து இயங்கும் பேராற்றல் பெற்றது. உலகில் பிறமொழிகளுக்கு இல்லாத தனித் தன்மை இதுவாகும். தமிழ்மொழி பன்னெடுங்கால வரலாறு உடையது. அரசியல், தன்னலம் காரணமாகத் தமிழ்மொழியின் சிறப்பு சில பொழுது குறைத்துக…
-
- 0 replies
- 1k views
-
-
இன்னும் எத்தனை சொற்களின் ‘சோலியை முடி’ப்பார்கள்? மின்னம்பலம் -இலக்குவனார் திருவள்ளுவன் ஒரு சொல்லுக்கான பொருள் என்பது அதனை மற்றவர் புரிந்து கொள்வதன் அடிப்படையில்தான் அமைகிறது. இதனால், சொல்லின் பொருள் இடத்திற்கேற்ப மாறும் நிலையும் ஏற்படுகிறது. அதே நேரம், சொல் அல்லது சொல்லின் தொடரான சொற்றொடர் வெளிப்படையாக உணர்த்தும் பொருள் ஒன்றாக இருக்கும். பயன்படுத்தும் இடத்தில் உணர்த்தும் பொருள் வேறாக இருக்கும். இவ்வாறான தொடரை மரபுத் தொடர் என்கிறோம். சில நேரங்களில் சொலவடை, மொழி மரபு, வட்டார வழக்கு, இலக்கணத் தொடர் என்றெல்லாம் குறிப்பிடுகிறோம். இவ்வாறு மரபுத் தொடர் பயன்படுத்தப்படும் பொழுது அச்சொல்லின் வெளிப்படையான பொருளுக்கு முதன்மை அளிக்காமல் சொல்ல வரும் உண்மைப் பொருளையே நா…
-
- 0 replies
- 1.3k views
-
-
'மேதகு’ என்னும் சங்கச் சொல் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்னும் மன்னன் உலகத்து இன்ப மாகிய இல்லறத்தோடு இருத்தலை மறந்து போர் ஒன்றையே இன்பப் பொருளாகக் கருதி வாழ்ந்தான் என்னும் பொருள்பட நக்கீரரால் நெடுநல்வாடை என்னும் நூல் இயற்றப்பட்டது. காதலும் வீரமும் சங்க காலத் தமிழர் வாழ்க்கையின் இரண்டு கூறு களாக இருந்தன என்பதைச் சங்க இலக்கியங்கள் வழி அறிகிறோம். இந்த இரண்டுள் போர் ஒன்றையே தொழிலாகக் கருதிப் பெருவீரனாக விளங்கிய பாண்டிய மன்னனை நோக்கிக் காதல் இன்பத் தையும் கண்டு வாழுமாறு நெடுநல்வாடையில் நக்கீரர் அறிவுறுத்தியுள்ளார். காதல் இன்பத்தைக் காணுமாறு கூறும் இந்நூற்பொருளின் தொடர்ச்சி யாகவே மதுரைக்காஞ்சி நூல் பாடப்பட்டுள்ளது. கா…
-
- 0 replies
- 664 views
-
-
-
வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன? இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை? - மங்காத சீரகத்தைத் தந்தீரேல், தேடேன் பெருங்காயம்! ஏரகத்துச் செட்டியாரே! இது சித்தர்களின் பரிபாஷையில் எழுதப்பட்டதொரு பாடல். புலவர்களில் சிலர், மறைமுகச்சித்தர்களாக விளங்கினார்கள். சித்தர்கள், ரிஷிகளில் பல மாதிரியான மனப்பான்மை,குறிக்கோள்கள்,நடைமுறை,சித்தாந்தம் முதலியவற்றைக் கொண்டவர்களாக விளங்கினர். சிற்சில அடிப்படைகளில் அவர்களை வகைப்படுத்திப் பிரித்து விடமுடியும். சிலர், உடலைப்பக்குவப்படுத்தி மூப்பு, நரை, நோய், நொடி,இல்லாமல் நீண்டகாலம் இருக்கப் பார்ப்பார்கள். சிலரோ இறக்காமலேயே இருந்து விடவேண்டும் என்று எண்ணுவர். பலவகையான உணவுக்கட்டுப்பாடுகள், ஹடயோக, ராஜயோகப் பயிற்சிகள், சமாதிநிலைகள், ம…
-
- 0 replies
- 761 views
-
-
அனைவருக்கும் வணக்கம்.. மருத்துவமும் சிங்கைநாடும் என்னும் காணொளியை பார்த்தேன். மிகவும் பிரயோசனமாக இருந்தது. பேரறிஞர் டாக்டர்.கே. பாலசுப்ரமணியம் அவர்கள் சில விடயங்களைக் கூறியிருக்கிறார்.. அகத்தியர் இலங்கையில் பிறந்தவர். பழைமையான தமிழர் பிரதேசமான மகேந்திரமலையே தற்கால மிகிந்தலை.. இது போல பல.. நீங்களும் பாருங்கள்..
-
- 0 replies
- 996 views
-
-
-
திருவள்ளுவர் திருநாளும், தொல்காப்பியர் திருநாளும் தமிழ்ச் சங்க இலக்கியங்களையும், அவை மருவிய காலச் சூழலையும், கல்வெட்டுக்களையும் ஆராயும் தமிழறிஞர்கள் திருக்குறள் சங்கம் மருவிய காலமாகிய கி.பி. நான்காம் நூற்றாண்டு வாக்கில் உருவாகிய நூலெனவும், வள்ளுவர் சமண சமயம் சார்ந்தவர் என்பது துறவு, புலால் உண்ணாமை போன்றவற்றை வலியுறுத்துவதாலும், கடவுள் வாழ்த்து அதிகாரத்தாலும் சான்று காட்டியுள்ளனர். சமணர்கள் என்றைக்குமே வள்ளுவதேவர் அருளிய தமிழ்மறையை “எம் ஓத்து” என்று கொண்டாடுகின்றனர். களப்பிரர் காலத்தில் தமிழில் சிரமண சமயங்களின் கொடை மிகுதியானது. அப்போதைய சமணக் காப்பியம் சிலப்பதிகாரமும், பெளத்தர்களின் காப்பியம் மணிமேகலையும் சிறந்த ஆதாரங்கள். பதினெண் கீழ்க்கணக்கில் சிறந்த குறளும், நாலடியா…
-
- 0 replies
- 2.1k views
-
-
குறளோடு கவிபாடு - "குறள்: 413" & "குறள்: 628" "குறள்: 413" "அறிவு பரந்து கிடக்கும் உலகில் அயராது அதைத் தேடி சுவைக்க அக்கம் பக்கம் யார் நின்றாலும் அச்சம் துறந்து கேள்வி கேட்டு அமுது ஞானத்தை செவி உண்ணட்டும்!" "குறைந்த உணவை நிறைவாக அருந்தி குற்றமில்லா உயர்ந்த அறிவு கொண்ட குறைகள் அற்ற ஆன்றோர் போல் குமிழி வாழ்வில் நிறைவு அடைய குன்றாய் நிலைக்க கேட்டு அறிவாய்!!" "குறள்: 628" "இன்பம் கண்டும் துள்ளிக் குதிக்காதவன் துன்பம் வருகினும் துவண்டு விடான்! வண்ணவண்ணக் கனவில் மகிழ்ந்து உறங்குபவன் சின்னசின்ன தோல்வியிலும் தன்னை இழப்பானே கூனிக்குறுகி மூலையில் ஒதுங்கி விடுவானே!" "எண்ணம் நல்லதாய் வாழ்வை நோக்…
-
- 0 replies
- 1.2k views
-