Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழும் நயமும்

இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 'கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருசன்' : வேந்தன் சரவணன் on 01-07-2009 06:23 Published in : சிறப்புக்கட்டுரை, சிறப்புக்கட்டுரை தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற பழமொழி இது. இப் பழமொழியின் தாக்கம் பெண்களிடையே மிகுதி என்றால் அது மிகையாகாது. இந்தப் பழமொழியின் தவறான பொருள் விளக்கத்தால் நேர்ந்த விளைவுதான் இது. இந்தத் தவறுக்குக் காரணம் ஒரே ஒரு எழுத்துப் பிழைதான். அந்தப் பிழை என்ன என்று அறிந்து கொள்ளும் முன்னர் இப்பழமொழிக்கு தற்போது கூறப்படும் பொருள் என்ன என்று காண்போம். 'கல்நெஞ்சன் (முரடன்) ஆக இருந்தாலும் அவன் உன் கணவனே; புல்நெஞ்சன் (கெட்டவன்) ஆக இருந்தாலும் அவன் உன் புருசனே' ஆண்-பெண் இணைந்து வாழ்க்கை நடத்தும் இல்லறத்தில் மணமான ஒரு…

  2. Started by seeman,

    அருமையான தமிழ்இலக்கிய நூல்களையும் கவிதைகளையும் வாசித்து இன்புற்று உங்கள் தமிழ் ஆர்வம் மிக்க நண்பர்களுக்கு தெரிவிக்கவும். உங்கள் கருத்துகளை இணைக்கவும். http://noolaham.net/wiki/index.php/??????? மெல்ல தமிழ் இனி சாகும் அந்த மேற்கு மொழிகள் புவிமிசை மேவும் என்றந்த பேதை உரைத்தான் ஆ அந்த வசை எனக்கெய்திடலாமோ? என்கடன் தமிழ்ப்பணி செய்து கிடப்பதே உங்கள் உடன் பிறப்பு அக்கினி புயல் சீமான்

  3. நான் கல்லூரியில், பட்டிமன்றத்தில் கேட்டு ரசித்த கவிதை. இப்போது ஏனோ நினைவுக்கு வருகிறது: ஒருவன் பாரதியிடம் அவர் யாரென்று தெரியாமல் பீடி பற்றவைக்க தீப்பெட்டி இருக்கறதா என்று கேட்பதும், அதற்கு பாரதியின் பதிலுமே கவிதை : "தீப்பெட்டி உண்டா பீடி பற்ற வைக்க?" "தீப்பெட்டியில்லை, ஆனால் தீ உண்டு நெஞ்சில், உலகின் தீமைகளை பற்றவைக்க"

  4. நாலு கோடியா? ...........காசில்லப்பா, பாடல்! - ஒளவையின் புலமை. சோழமன்னன் ஒருநாள் தனது ஆஸ்தான கவிஞர்களை அழைத்து, நாளை விடிவதற்குள் நாலு கோடிக்குப் பாடல் பாடி வரவேண்டும் என கட்டளை இட்டான்.இந்தக் கவிஞர்கள் அரண்மனையிலே சும்மா தினமும் சாப்பிட்டுக் கொண்டிருக்கலாமா?; அவர்களுக்குச் செய்ய ஒரு வேலை கொடுக்க வேண்டாமா என சோழமன்னன் நினைத்தானோ என்னவோ, இதை ஒரு வீட்டு வேலையாகச்(Homework) செய்து வர, பணித்திருந்திருக்கலாம். அதை கேட்ட கவிஞர்கள், "நாலு கோடிக்கு எங்கே போவது?", எனக் கவலையுடன் வீடு திரும்பினார்கள். அன்று அவ்வழியாக வந்த ஒளவையார் அந்தக் கவிஞர்கள் கவலையுடன் இருப்பதைக் கண்டு, " ஏன் கவலையோடு இருக்கிறீர்கள்?" என்று கேட்டார். " ஒளவையே, எம்மை சோழ மன்னன் நாளை சூரிய உதயத்திற்கும…

  5. நன்பர்களே இங்கு நாம் நிறையவே தமிழில் தான் எழுதுகிறோம். என்றாலும் கூடுதலான ஆங்கில (புதிய) சொற்களின் தமிழ்மொழிபெயர்ப்பு கடினமாக உள்ளது. ஆகவே நாம் எம்மால் முடிந்த அளவிற்க்கு ஆங்கில சொற்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளை களத்தில் வைக்கலாமே.மற்றவர்களுக்கும் உதவியாகவிருக்கும். உதாரணத்திற்கு சில.. Automatic.....தானியங்கி Optional.......தேவைஏற்படின் Player...........சுழற்றி நன்றி. அன்புடன். …

    • 13 replies
    • 6.9k views
  6. Started by sangilian,

    தமிழர்களிடம் ஒற்றுமைஇல்லை இல்லை என்று கூறிக்கொண்டுஆக்கபூர்வமானசெ

    • 0 replies
    • 924 views
  7. ஈழத்துக் கதைகள் - காசி ஆனந்தன் கடலோரத்தில் நண்டு நடந்துகொண்டிருந்தது. மணலில் பதிந்த நண்டின் கால்தடத்தை அலை அழித்துக் கொண்டே இருந்தது. நண்டுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருநாள் நரி கடற்கரை ஓரம் நண்டின் கால்தடம் இருக்கிறதா என்று தேடி அலைந்தது. வளைக்குள் இருந்த ஓரக்கண்ணால் எட்டிப் பார்த்த நண்டுக்கு அலை தன் கால் தடத்தை அழித்த காரணம் இப்போதுதான் தெளிவானது. அலையின் நட்பை அடிமனத்தால் போற்றியது நண்டு. தனக்குள்ளேயே அது சொல்லிக்கொண்டது:- 'முன்பே காப்பான் அன்பே நட்பு" நெருஞ்சிப்புல் வருகிறவர் போகிறவர் கால்களையெல்லாம் தன் முள்ளினால் குத்திப் புண்ணாக்கிக் கொண்டிருந்தது. 'மனிதர்களின் காலைக் குத்தி அவர்களுக்குச் சினத்தை உண்டாக்குகிறா…

    • 4 replies
    • 2k views
  8. ஈழநூல் 70 நூல் மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள் ஆசிரியர் சு.வித்தியானந்தன் (பதிப்பாசிரியர்) மின்னூலாக்கம் இ. பத்மநாப ஐயர் மின்பதிப்பு ஈழநூல் மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள் பதிப்பாசிரியர் கலாநிதி சு.வித்தியானந்தன் இலங்கைக் கலைக்கழகத் தமிழ் நாடகக்குழு வெளியீடு ---------------------------------------------------. ARTS COUNCIL TAMIL DRAMA PANEL SERIES Published under the authority of the Arts Council of Ceylon GENRAL EDITOR S.VITHIANANTHAN, M. A. ph. D. Chairman, Tamil Drama Panel, Arts Council of Ceylon SECOND EDITION 1962 Price Re. 1.00 --------------------------------------…

    • 5 replies
    • 7.7k views
  9. நவராத்திரி பூசையின் போது, சகலகலாவல்லி மாலை பாடப்படும் என்பதை அறியாத சிலருக்கும், அது கிடைக்காமல் இருப்பவர்களுக்குமான தேடலில் கிடைத்தது. இதுகளைக் கொஞ்சம் பாடி புண்ணியத்தைச் சேருங்கள் பாடல் 1 வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என் வெள்ளை உள்ளத் தண்தாமரைக்குத் தகாது கொலோ? சகம் ஏழும் அளித்து உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே! பாடல் 2 நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியில் பணித்தருள்வாய் பங்கயாசனத்தில் கூடும் பசும்பொற் கொடியே கனதனக்குன்றும் ஐம்பால் காடும் சுமக்கும் கரும்பே சகலகலாவல்லியே பாடல் 3 அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து உன் அருட்கடலில்…

    • 32 replies
    • 12.7k views
  10. தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில் அ.முத்துலிங்கம் [ கம்புயூட்டர் பற்றி ஒரு கட்டுரை வேண்டும் என்று காலச்சுவடு கேட்டதும் நான் உடனேயே சம்மதித்தேன். காரணம் கம்புயூட்டர் பற்றிய என்னுடைய அறிவு ஒரு ஆமையினுடையதற்கு சமம்; அல்லது அதற்கும் கொஞ்சம் கீழே. இதனிலும் பார்க்க சிறந்த தகுதி வேறென்ன வேண்டும். கணினி நிபுணர்களையும், ஆர்வலர்களையும் கேட்டால் அவர்கள் சொல்லித்தருவார்கள். அப்படி நினைத்தேன். உண்மையில் அது அவ்வளவு சுலபமானதாக இல்லை. ஒரு கணினி பயனாளர் என்ற முறையில் நான் படும் இன்னல்களையும், கணிதமிழ் படும் இன்னல்களையும், கணினி ஆர்வலர்கள் படும் இன்னல்களையும் தொகுத்தாலே போதும் என்று பட்டது. தன்னலம் பாராது, ஒரு சதம் ஊதியம் பெறாமல், ஒருவித ஆதாயமும் எதிர்பாராமல், இருந்த காசையும்…

  11. 1 = ஒன்று ONDRU -one 10 = பத்து PATTU -ten 100 = நூறு NOORU -hundred 1000 = ஆயிரம் AAYIRAM -thousand 10000 = பத்தாயிரம் PATTAYIRAM -ten thousand 100000 = நூறாயிரம் NOORAYIRAM -hundred thousand 1000000 = பத்து நூறாயிரம் PATTU NOORAYIRAM - one million 10000000 = கோடி KODI -ten million 100000000 = அற்புதம் ARPUTHAM -hundred million 1000000000 = நிகர்புதம் NIGARPUTAM - one billion 10000000000 = கும்பம் KUMBAM -ten billion 100000000000 = கனம் KANAM -hundred billion 1000000000000 = கர்பம் KARPAM -one trillion 10000000000000 = நிகர்பம் NIKARPAM -ten trillion 100000000000000 = பதுமம் PATHUMAM -hundred trillion 1000000000000000 = சங்கம் SANGGAM -one z…

  12. உலகின் எல்லா நாடுகளிலும் இப்போது தமிழர்கள் வாழ்கின்றார்கள். முன்பெல்லாம் தமிழர்கள் அதிகமாக வாழும் நாடாக தமிழகத்தை அடுத்து இலங்கையையும், மலேசியா சிங்கப்பூரையுமே நாம் உதாரணம் சொல்லிக் கொண்டிருந்தோம். ஆனால் தற்பொழுது உலகின் எல்லா மூலைகளிலும் தமிழர்கள் பரந்து விரிந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பல்வேறு காரணங்களுக்காகத் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்று வெவ்வேறு நாடுகளில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் சூழ்நிலை. இப்படி புலம்பெயர்ந்து செல்லும் போது, இருக்கின்ற நாட்டின் தேவைக்கேற்ப புதிய மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. இது தவிர்க்கப்படமுடியாத ஒன்றே. ஆகினும் தமிழ் மக்கள் தாய் மொழியை மறந்து விடாமல் தங்களது அடுத்த சந்ததியினருக்கும் இ…

    • 8 replies
    • 8.6k views
  13. யாழ்ப்பாணத் தமிழ்: சொல் ஒக்கும் பொருள் ஒவ்வாது பூனை புலியினத்தைச் சேர்ந்ததே என்றாலும் பூனைக்கும் புலிக்கும் எத்துணை வேறுபாடுள்ளது! நெல் என்பது ஒரு வகையான புல் என்று கூறினால் அற்பமான புல்லுக்கும், உயிர்காக்கும் நெல்லுக்கும் எத்துணை வேறுபாடு! ''உருவுகண்டு எள்ளாமை வேண்டும்'' என்றார் வள்ளுவர். ஒரு மொழியின் வளர்ச்சியில் பண்டு வெவ்வேறு வடிவங்களைப் பெற்றிருந்த சொற்கள் காலப்போக்கில் ஒரே வடிவத்தை ஏற்றுக்கொள்ளுதல் உண்டு. எடுத்துக்காட்டாக ''அத்தம்'' என்ற சொல் சங்க காலத்தில் ''வழி'' என்ற பொருளைப் பெற்றிருந்தது. பிற்காலத்தில் வடசொற்கள் வடவெழுத்து ஒரீஇத் தமிழில் அளவின்றிப் புகுந்தபோது ஹஸ்தம் (கை), அர்த்த (பாதி), அருத்தம் (பொருள்) என்ற மூன்று வடசொற்கள் தமிழில் ''அத்தம்'' என்…

  14. கள நண்பர்களே, நான் தமிழில் எழுதி பல வருடங்கள் ஆகிறது, அதனால் எழுதும் போது எழுத்துப் பிழைகளுடன் எழுத நேரிடுகிறது. என்னுடைய எழுத்துப் பிழைகளை சுட்டிக்காட்டுவீர்களா? அதுபோல் கள நண்பர்களின் பிழைகளை ( எனக்குத் தெரிந்ததை ) சுட்டிக் காட்டினால் கோபப்படுவீர்களா?

  15. மருத்துவர்களே திருமூலர் சொல்லும் கல்வி உண்மைதானா! திருமந்திரத்தில் நம் வாழ்வியலுக்குத் தேவையான பல உண்மைகள் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அதில் கலவி பற்றி அவர் சொல்கின்ற சில செய்திகளில் உண்மை இருப்பது போன்று தோன்றவே மருத்துவப் பதிவர்களிடமே கேட்டு விடலாம் என்ற எண்ணம் தோன்றியது. குழந்தையின் பாலை நிர்ணயம் செய்யும் செயலைக் குறித்துச் சொல்லுகையில் - குழவியும் ஆணாம் வலத்தது வாகில் குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில் குழவியும் இரெண்டாம் அபான னெதிர்க்கில் குழவியும் அலியாகும் கொண்டகால் ஒக்கிலே என்கிறார். அதாவது கலவியின் போது ஆணினுடைய மூச்சு…

  16. கிரேக்கச் சிந்தனை - எஸ்.வி. ராஜதுரை (`எக்ஸிஸ்டென்ஷியலிசம்' என்ற நூலிலிருந்து ) பண்டைய கிரேக்க - ரோமானிய ஞானத்தின் அடிப்படைப் பண்பு மனிதனை ஒரு முழுமைக்குள் வைத்து அவனைப் பற்றிய வரையறுப்பை வழங்கியது தான். இம்முழுமையுடன் மனிதனுக்குள்ள உறவு, அதில் அவன் வசிக்கும் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதன் பற்றி விளக்கத்தை இந்த ஞானம் வழங்கியது. இந்த முழுமை பேரண்டமாக இருக்கலாம். நகர-அரசாக இருக்கலாம். இயற்கையாக இருக்கலாம். அல்லது ஒரு கருத்தாக்க அமைப்பாகவும் இருக்கலாம். இதில் எதுவாயினும் அதில் மனிதனுக்குரிய இடம் இன்னது தான் என வரையறுத்துக் கூறப்பட்டது. பண்டையக் கிரேக்கனின் பேரண்டத்தில் ஒவ்வொன்றுக்கும் நிலையான இடம் உண்டு; கதிரவன், நிலா, விண்மீன் ஆகியவை போலவே, மனிதனுக…

    • 2 replies
    • 2.3k views
  17. பழமொ‌‌ழிகளு‌ம் அத‌ன் அ‌ர்‌த்த‌ங்களு‌ம் கல்லைக் கண்டால் நாயைக் காணோம்... நமது நா‌ட்டி‌ல் பல்வேறு பழமொழிகளை நமது முன்னோர்கள் கூறக் கேட்டுள்ளோம். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் உள்ளன. அவற்றை நாம் உச்சரிக்கும் வகையிலேயே எடுத்துக் கொள்ளக் கூடாது என்பத‌ற்கு சில பழமொழிகளை இங்கே உதாரணத்திற்கு கூறுகிறோம். அதாவது, நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்ற பழமொழியை நாம் நகைச்சுவைக்காக அல்லவா பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இது தவறு, ஓர் அரண்மனை வாயிலில் நாயைக் கட்டி வைக்க வேண்டும் என்று மன்னன் விரும்பினான். அது கொஞ்சம் சிரமம் என்பதால் அதற்கு மாறாக நாயை தத்ரூபமாக கல்லில் செதுக்கி அரண்மணை வாயிலில் அமைத்தனர். அதனை சற்றுத் தொ…

    • 0 replies
    • 7.4k views
  18. தமிழழைப் பேசும் பொழுதும் எழுதும் பொழுதும் நாம் விடும் தவறுகள் பற்றி இதில் எழுதலாம் என்று நினைக்கின்றேன். இதை என்னால் மட்டும் செய்ய முடியாது. தமிழறிவு உள்ள கள உறவுகளும் கை கொடுத்தால்தான் முடியும். இன்றைக்கு தைத் திருநாள். இதற்கு "வாழ்த்துகள்" சொன்னவர்களை விட "வாழ்த்துக்கள்" சொன்னவர்கள் அதிகம். இது நாள் வரை நானும் "வாழ்த்துக்கள்" என்றே சொல்லி வந்தேன். ஆனால் அண்மையில் கலைஞர் அவர்கள் "வாழ்த்துக்கள்" என்ற திரைப்பட விழாவில், "வாழ்த்துக்கள்" என்ற பெயர் தவறு என்றும் அதில் "க்" வரக்கூடாது என்றும் சொன்னார். இப்பொழுது அப் படத்தின் பெயர் "வாழ்த்துகள்" என்று மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இதை எம்மில் பெரும்பாலானோர் கவனிப்பது இல்லை. வானொலி, தொலைக்காட்சி, மேட…

  19. "கேக்" இதற்கு சரியான தமிழ்சொல் என்ன? (நாளைக்கு பரீட்ச்சை உடனே சொல்லுங்கோ )

  20. நான் அறிந்த ஒரு சில தூய தமிழ்ச் சொற்களை இப் பகுதிக்கு எடுத்து வந்துள்ளேன். மேலதிகமான தூய தமிழ்ச் சொற்களை அறிந்தவர்கள் இப்பகுதிக்கு எடுத்து வந்தால் மிகவும் பயனுள்ளதாக அமையும். நன்றி சைக்கிள் - மிதியுந்து அலாரம் - துயிலெழுப்பி மோட்டார்ச்சைக்கிள் - உந்துருளி லொறி - பாரஊந்து பேக்கரி - வெதுப்பகம் ஜிவலரி - பொற்தொழிலகம் ஐஸ்கிறீம் - குளிர்கழி கூல்பார் - குளிர்பருகை நிலையம் எயிட்ஸ் - எசகு நோய் (எதிர்ப்பு சக்தி குறைவு) புகையிரதம் - தொடருந்து சந்தோசம் - மகிழ்ச்சி

    • 39 replies
    • 29.3k views
  21. http://www.musicwebtown.com/kural/4855/

  22. கவியரசு கண்ணதாசனின் கற்பனையில் உருவாகிய பாடல்கள் சிறந்ததா, காலத்தினால் அழிக்கமுடியாதவையா அல்லது... கவிஞர் வைரமுத்துவின் பாடல்கள் சிறந்தனவையா.... என்னைப்பொருத்து கவிப்பேரரசு என்ற பெயர் கவிஞர் கண்ணதாசன் ஒருவருக்கு மட்டுமே சேரவேண்டும். காரணம் அவரின் பாடல்கள் இன்றும் எம் நினைவுகளில் நிற்கின்றன. ஆனால் கவிஞர் வைரமுத்துவினதோ நினைவில் இல்லவே இல்லை.... உதாரணத்துக்கு ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன? கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன...? வீடுவரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ? ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம் கூடிவரும் கூட்டம் கொள்ளிவரை வருமா? (வீடு) தொட்டிலுக்க…

    • 3 replies
    • 11.6k views
  23. புறம் கூறுதல்! வேறொரு பகுதியில் "புறம் கூறுதல்" என்ற சொல்லில் வருகின்ற "புறம்" என்ற சொல் எதைக் குறிக்கும் என்பதில் எனக்கும் நண்பர் நெடுக்காலபோவானிற்கும் ஒரு விவாதம் ஏற்பட்டுள்ளது. புறம் கூறுதல் என்பது ஒருவரிடம் நேரடியாக குறைகளை சொல்லாது அவர் இல்லாத நேரத்தில் குறையை கூறுவது ஆகும். இந்த விடயத்தில் இருவரும் ஒத்துப் போகிறோம். ஆனால் பிரச்சனை இங்கே "புறம்" என்ற சொல் எதைக் குறிக்கிறது என்பதாகும் நெடுக்காலபோவன் "புறம்" என்ற சொல் "குறை" என்ற அர்த்தத்தைக் குறிக்கும் என்று கூறுகிறார். நான் "புறம்" என்ற சொல் குறை கூறும் இடத்தை (அதவாது நேராக இன்றி புறமாக) குறிக்கும் என்கிறேன். இந்தச் சொல் கூறப்படுகின்ற விடயத்தை (குறையை) அடிப்படையாக இல்லாது, குறை கூறப்படுக…

    • 94 replies
    • 28.3k views
  24. Started by nunavilan,

    விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி. (மழை பெய்யாமல் பொய் படுமானால் கடல் சூழ அகன்ற உலகமாக இருந்தும் உள்ளே பசி நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.) திருவள்ளுவர் துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய து¡உம் மழை. (உண்பவர்க்கு தக்க உணவுப் பொருட்களை விளைத்துத் தருவதோடு பருகுவார்க்கு தானும் ஒர் உணவாக இருப்பது மழையாகும்.) திருவள்ளுவர் வான்சிறப்பு வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. (மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால் மழையானது உலகத்து வாழும் உயிரிகளுக்கு அமிழ்தம் என்று உணரத் தக்கதாகும்.) திருவள்ளுவர் சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினு¡உங்கு ஆக்கம் எவனோ உயிர்…

    • 15 replies
    • 4.3k views
  25. பழமொழியில் இந்துமதம் - சுவாமிநாதன் தமிழ் ஒரு வளமான மொழி. இதில் இருபதாயிரத்துக்கும் மேலான பழமொழிகள் உள்ளன. பழமொழிகள் ஆழமான கருத்துடைய சிறிய சொற்றொடர்கள் ஆகும். எழுத்தறிவில்லாத பாமர மக்களும் கூட இவைகளைச் சரளமாகப் பயன்படுத்துகிறார்கள். தமிழ் மொழியைப் போல வேறு எந்த மொழியிலாவது இவ்வளவு பழமொழிகள் இருக்குமா என்பது கேள்விக்குறியே. பதினென்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான பழமொழியில் 400 பாடல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொறு பழமொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்பர் பெருமான் ஒரு பதிகம் முழுவதையும் பழமொழிகளை வைத்தே பாடியுள்ளார். இந்த மாதிரி நூலோ பதிகமோ வேறு எந்த மொழியிலும் இல்லை. கம்பரும் இராமாயணத்தில் நிறைய பழமொழிகளைப் பயன்படுத்தியுள்ளார். பழமொழி என்றால் என்ன? ஆயிரக் கணக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.