Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசித்தவை

 

Kitty.jpg

  1. எங்களைப் பொறுத்தவரை 'இந்தியர்கள்' என்றால் அது தமிழர்கள்தான், 'இந்திய மொழி' என்றால் அது தமிழ் மொழிதான்! - சிங்கப்பூர் அரசு அதிரடி..!! சிங்கப்பூரில் தமிழும் ஒரு ஆட்சி மொழியாக இருப்பது அனைவரும் அறிந்ததே. இது அங்கு வாழும் வட இந்தியர்களுக்கு வயித்தெரிச்சலையும், நமைச்சலையும் கொடுக்க, சிங்கப்பூர் வாழ் வட இந்தியர்கள் அமைப்பு மூலம் சிங்கப்பூர் அரசிற்கு, இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி இந்திமொழி. இந்திய அலுவல் மொழியும் இந்திதான், இங்கு இந்தி பேசும் மக்களும் நிறையபேர் வாழ்கிறார்கள். எனவே இங்கு ஆட்சி மொழியாக உள்ள தமிழை நீக்கிவிட்டு இந்தியா சார்பில் இந்தியை ஆட்சி மொழியாக ஆக்கவேண்டும்னு கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு சிங்கப்பூர் அமைச்சகம் கொடுத்த மூக்…

  2. இந்த காணொளியில் வரும் தம்பி யாரென தெரியாது..! ஆனால், இவர் யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்நாட்டின் சென்னையில் இறங்கி, விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து, தமிழ் தாய்நாட்டின் பூமியை தொட்டு வணங்கியபோது நேசத்தில் கண்கள் கலங்கியது உண்மை. 💔 வாழ்க வளமுடன்..! 🙌 வெகுளி மனதோடு செங்கல்பட்டு அருகேயிருக்கும் கிராமத்து கடைகளிலும், வீதியோரம் செல்பவர்களோடும் ஈழத்து தமிழில் பேச முயலும்போது அவர் அனுபவித்த சுகமான சிரமங்கள் அலாதியானது. (சில வருடங்களுக்கு முன் துபை வந்த பாஞ் மற்றும் அவரின் துணைவியாரிடமும் நான் தமிழக தமிழில் பேச, அவர்கள் ஈழத்து தமிழில் பேச, நாங்கள் தடுமாறிய நொடிகளின் இனிமையான தருணங்களை நினைத்து இன்னமும் ரசிக்கிறேன்..!) காணொளி முடிவில், ஒரு அம்மா "என்னையும…

  3. சென்னை மாமல்லபுரத்தில், உலகின் 188 நாடுகளிலிருந்து பல்வேறு வீரர்கள் கலந்துகொள்ளும் 44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மிக பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சதுரங்க விளையாட்டினை கற்பித்து மாநில அளவிலும், தேசிய அளவிலும், உலக அளவிலும் நம் தமிழக மாணவர்கள் வெற்றி பெற்று பதக்கங்களை வெல்லும் நோக்கத்துடன் சதுரங்கம் தொடர்பான பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்கான வரவேற்பு காணொளி தற்பொழுது வெளியாகியுள்ளது.

  4. 'நானும் பாட்டுப் பாடுறேன் பேர்வழி'யென அஸ்ட கோணலாய் ஆடி பந்தா காட்டும் சில தன்னார்வ பாடகர்களுக்கிடையே இந்தக் காணொளியில் வருபவர் எளிமையாக ஆர்ப்பாட்டமில்லாமல் நன்றாக பாடியுள்ளார். முகச்சாயலில், இவர்கள் ஈழத்தை சார்ந்தவராக இருக்கலாமென தோன்றுகிறது..!

  5. பென்சனர் குரூப்..! நகரங்களில், கிராமங்களில் இம்மாதிரியான 'பெருசு'கள், உதார் விட்டுக்கொண்டு, வெட்டியாக பொழுதைக் கழிப்பதைக் காணலாம்.. இக்காணொளியும் அம்மாதிரியான மனிதர்களை பிரதிபலிக்கிறது..!

  6. தமிழ்நாடு அரசின் நிதி அமைச்சர் திரு.பழனிவேல் தியாகராஜன் அவர்களின் இந்த பேட்டி, வட இந்திய அதிகார வர்க்கத்தை, பிராமணிய குழுவை அசைத்துப்பார்த்து எரிச்சலடைய வைத்துள்ளது. பேட்டி ஆங்கிலத்தில் இருந்தாலும், தமிழ் நாட்டின் சுயநிர்ணய, சுயமரியாதைக்கான தேவையை, விட்டுக்கொடுக்க முடியாது என்பதை நுணுக்கமாக எடுத்துரைத்துள்ளார். பொறுமையாக பார்த்தால், இக்காணொளியை நிச்சயம் ரசிக்கலாம். 👌 நேர்காணலின் முடிவில் 'பல்வேறு கலாச்சாரம், மொழிகள், இனங்கள் கொண்ட இந்தியா ஒரு நாடாக இருப்பது அதிசயம், அது இன்னும் 25 கழித்தும் அது தொடருமா? என்பதை காலம்தான் சொல்லும்' என முத்தாய்ப்பாக முடித்துள்ளது சிறப்பு..!

  7. முகத்தை சவரம் செய்ய சலூன் அல்லது பிளேடு கிடைக்காமல் குஷ்டம் வந்தது போல 'ட்ரிம்' செய்த தாடியுடன் அல்லது பரட்டை தலையில் 'கோடு போட்டு' திரிப்பவர்களை கண்டால் காத தூரம் விலகி நடப்பதுண்டு. அதில் இக்கால புள்ளீங்களும் அடக்கம்..! இவ்வகை 'புள்ளீங்களுக்கு' செமத்தியாக 'வச்சு செய்த' சிதம்பரம் நகர காவல் துறையினருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்..! 😛

  8. யாரு பார்த்த வேலையப்பு..? நகல் இருக்கலாம், ஆனால் நகலுக்கும் அசலுக்கும் வித்தியாசமே இல்லாமல் நடிப்பது சாதாரண காரியம் அல்ல.. நம்ப முடியவில்லை..!

  9. ஓய்வு நேரத்தில் IBC-யில் வரும் இந்த "Tea கடை" நிகழ்ச்சியை அடிக்கடி பார்ப்பதுண்டு..! இவ்வாரநிகழச்சியில் "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.." என்பதற்கு, பொன்னம்பலம் ஈஸ்வரன் (அம்மான்)சொல்லும் விளக்கம் ரசிக்கும்படி இருந்தது. டிஸ்கி: இம்மாதிரி சீரியல்களை நாங்கள் பார்க்க வெளிக்கிட்டமென்டால், நாங்களும் ஈழத்தமிழில் கதைச்சுடுவோமென்ட அச்சம் வருதுடாப்பா, கடவுளே..! 😝

  10. திரைப்படங்களில் சில சாதாரண, எளிமையான காட்சிகள். நம் மனதைவிட்டு அகலாமல் நிரந்தரமாக நின்றுவிடும்.. அவற்றில் சில காட்சிகள் கீழே.. சமீபத்தில் வெளியான 'வெற்றிவேல்' படத்திலிருந்து..

  11. வழக்கமான திருமண காணொளிகளை பார்த்திருப்போம்.. "அடச் சே..! இவ்வளவுதானா..?" என அலுத்திருப்போம்..! சிலர் வித்தியாசமான முறையில் முயற்சித்திருப்பர்... அவ்வகையில் இந்தக் காணொளி தெலுங்கில் இருந்தாலும் சற்று ரசிக்கக் கூடியதுதான்..!! (கீழேயுள்ளது திருமணக் காணொளிதானா? என்ற ஐயப்பாடும் உண்டு..)

  12. இந்த தெலுகு நாட்டுப்புற பாடல், இணையத்தில் பிரபலமாகி வருகிறது.. இந்த பாடலை காப்பியடித்து பலர் ரீல்ஸ் வெளியிட்டும் வருகின்றனர். நேரமிருக்கும்போது கேட்டுப் பாருங்கள்..

  13. "நிழல் வேண்டும் போது மரம் ஒன்று உண்டு.. பகை வந்த போது துணை ஒன்று உண்டு.. இருள் வந்த போது விளக்கொன்று உண்டு.. எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு.. உண்மை என்பது எங்கும் உள்ளது தெய்வத்தின் மொழியாகும்.. நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்..!" கவிஞர் வாலியின் பாடல் வரிகளில் பிடித்த ஒன்று.. இந்தக் காணொளியை யூ டுயூபில் காண நேர்ந்தது.. பாடகர் நன்றாகவே பாடியுள்ளார்..!

  14. ஓய்வு நேரங்களில் தொலைக்காட்சியின் யூடியூபில் பழைய தமிழ்ப் பாடல்களை பார்ப்பது வழக்கம். அப்படி உலாவரும் பொழுது, இந்த இசைக்குழுவின் வாத்திய இசை மிகவும் கவர்ந்தது. நீங்களும் கேட்டுப் பாருங்களேன், நிச்சயம் ரசிப்பீர்கள்..!

  15. பெண்டாட்டி வீட்டில் இல்லையெனில் ஆண்களுக்கு சில நாட்கள் கொண்டாட்டம்தான்.. அப்புறம் சலித்து, வெறுமையாகி மனம் ஏங்க ஆரம்பித்துவிடும்.. இந்த உணர்வுகள் எல்லோருக்கும் இருப்பதுதான்.. இந்தக் காணொளியும் அதையே பிரதிபலிக்கிறது..

  16. சில பாடல்களில், பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர் இருவரும் இணைந்து பாடலை உருவாக்க அவர்கள் பட்ட கடின உழைப்பை நடிகர்கள் உணர்வுகளை திரையில் பிரதிபலித்து மக்களின் அங்கீகாரத்தை பெற்று வெற்றி பெறுவது மிக அரிதாக அமையும்..! சில நேரம் சிவாஜி கணேசனின் மிகைப்படுத்தபட்ட நடிப்பு நம்மை சோதித்தாலும், இந்தப் பாடல் காட்சியில் சிவாஜியின் பாடலுக்கேற்ற உடல் மொழிகளும், உதட்டசைவும், சிகரட்டை அனாசயமாக ஊதித் தள்ளிக்கொண்டே அலட்சியமாக நடந்து சென்று பாடியிருப்பதும் மிக அருமை.. இந்தப்பாடலுக்கு பாடகர், இசையமைப்பாளர், நடிகர் ஆகிய மூவரின் பங்களிப்பும் ஒரு புள்ளியில் சேர்ந்து சிறப்பாக மிளிர்கிறது. என்னை மிகவும் கவர்ந்த டி.எம்.எஸ் பாடல்களில், இப்பாடல் மிக முக்கியமானது.

  17. எழுபதுகளின் ஆரம்பத்தில் கல்லூரியில் படிக்கும்போது இப்பாடல் மிகவும் பிரபலம்..! இப்பொழுது புது வடிவில்..

  18. 2016-ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இசைக் கச்சேரியில் குறைவான இசைக்கருவிகளைக் கொண்டு எஸ்.பி.பி பாடிய பாடல் இது..! 🌺

  19. இன்று(02-04-2023) "விடுதலை - பாகம் 1" படம் பார்த்து முடிந்து வெளியே வந்தவுடன் காதில் ரீங்காரமிடும் பாடல்கள்.. பல நாட்கள் கழித்து இளையராசாவின் இசையில் பிடித்த பாடல்கள்..

  20. மனைவியை சமாளிப்பது எப்படி..?

  21. இண்டிகோ - அடிங்கோ..! இண்டிகோ விமான ஊழியர்கள், அதில் பயணம் செய்த பயணியை அடித்து வீழ்த்தி கழுத்தை நெரித்த காணொளி இணையத்தில் வைரலாக உலா வரும் இவ்வேளையில், அந்நிறுவனத்தின் வியாபார சின்னத்தை(Logo) மாற்றியமைத்து நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.. 'இண்டிகோ' என்பது 'அடிங்கோ'வாக மாறியுள்ளது..! சின்னத்திலுள்ள விமான படத்தையும் எட்டி உதைக்கும் விதமாக மாற்றியுள்ளனர். சின்னத்தின் கீழே அருமையான வாசகத்தையும் பொறித்துள்ளனர்.. "நம்பி வாங்க.. அடி வாங்கிட்டுப் போங்க..!"

  22. டிஸ்கி: இன்று 2020 புது வருடத்தில் முதல் வாரத்தின் வெள்ளிக்கிழமை வார விடுமுறை நாள்..! பொழுது போகாமல் தொலைகாட்சியின் "டென்ட் கொட்டா" அப்.பில் உயர்தர HD ப்ரிண்டில் வெளிவந்துள்ள படங்களை அசிரத்தையாக முதல் சில காட்சிகளை மட்டும் ஓடவிட்டு ப்ரிவியூ பார்க்க ஆரம்பித்தேன். அதில் காளிதாஸ் என்ற இப்படத்தினை பார்க்க ஆரம்பிக்கையில், முதல் சில நிமிடங்களிலேயே ஒரு பெண்ணின் துர்மரணம்.. அதை விசாரிக்க வரும் காவல் அதிகாரி, சில கோணங்களில் விசாரணையை ஆரம்பிக்க, எனக்கும் 'இந்த மரணம் எப்படி நடந்திருக்கும்..?' என ஊகிக்க ஆரம்பித்து படத்தோடு ஒன்றி விட்டேன்..! சில 'லாகிக்' சறுக்கல்களை தவிர, கடைசி வரை விறுவிறுப்பாகவே படம் இருந்தது. இயக்குநருக்கு இதுதான் முதல் படம் என்பதை நம்ப மு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.