பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
புலம்பெயர்த் தமிழ்க் குழந்தைகள் தமிழ் கற்கும்போது பல சவால்களைச் சந்திப்பதாகவே உணர்கின்றேன். அவர்களுக்கு இலகுவான வகையில் சொற்களை அடையாளம் செய்யும் வகையில் எந்தவித வகையும் செய்வதாகத் தோன்றவில்லை. ஊரில் உள்ளது போல இலக்கணப் புத்தகங்களைக் கடினமாக்கியே வைத்துள்ளனர். ஏன் சாதாரணதரப் பரீட்சை எடுக்கும்வரையும் எனக்கும் தமிழ் இலக்கணம் என்பது மிகவும் வெறுப்புக்குரிய பாடமாகவே இருந்தது.... இத்தலைப்பின் நோக்கம். உங்களின் குழந்தைகள் எதைக் கற்கக் கடினப்படுகின்றார்கள் என்பதும், அதை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்பது பற்றி ஆராய்வதுமாகும்... --------------------------- எல்லாக் குழந்தைகளும் சொல்வது ல,ள,ழ அத்தோடு ர,த,ற உச்சரிப்பது,அடையாளம் செய்வது என்பது மிகப் பெரிய பிரச்சனை. ழ- நா…
-
- 4 replies
- 1.1k views
-
-
-
- 19 replies
- 2k views
-
-
ஆங்கிலம் மட்டுமே போதும் என்ற நிலைக்கு இன்று பெரும்பான்மையானவர்கள் கருதுகிற நிலையில் தமிழில் என்ன இருக்கிறது என்ற சிறப்பு அடுத்த சந்ததிக்குத் தெரியாமலே போகிறது.தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்கு தமிழின் சிறப்புகளை இங்கே ஒவ்வொரு பகுதியாக சுட்டிக்காட்டுகிறோம். இன்றைக்கு நம் வீட்டில் நமது குழந்தைகளுடன் சின்னஞ்சிறு வயதிலேயே ஆங்கிலத்தில் பேசத் துவங்குகிறோம். தமிழ் குறித்த அறிவையும் ஞானத்தையும் போதிப்பதை விட்டுவிட்டு நம் சொந்த அடையாளங்களைத் தொலைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று ஆங்கில மொழி உலக மொழியாக உருவெடுத்துள்ளதால் சமுதாயத்தில் தன்னை தக்க வைத்துக்கொள்ள ஆங்கிலம் தேவை என்றாலும் அவசியம் ஒரு போதும் அடையாளம் ஆகிவிடாது என்பதை உணர வேண்டும். தமிழை முழுமையாக தெரிஉந்து கொண…
-
- 0 replies
- 3.4k views
-
-
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்து வடிவங்களுள் சிந்து சமவெளி எழுத்துக்களே மிகப் பழமையானவை. ஏறக்குறைய கிமு 3000 -2500 காலகட்டத்தைச் சேர்ந்தவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சிந்துவெளி எழுத்துக்களை நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஆராய்ந்த டாக்டர் ஆஸ்கோ பர்போலா (Asko parpola) மற்றும் திரு ஐராவதம் மகாதேவன் முதலான அறிஞர்கள் இது தமிழின் தொன்மையான வடிவமாக இருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். என்றாலும் இதனை ஒரு ஊகமாக வெளியிடமுடிந்ததே தவிர ஆதாரபூர்வமாக நிரூபிக்க சான்றுகளில்லை. சிந்துவெளிக்குப் பிறகு இந்திய எழுத்துத் தடயங்களில் ஒரு நீண்ட இடைவெளி காணப்படுகிறது.நால்வேதங்களும் உபநிடதங்களும் இக்காலகட்டத்தில் இயற்றப்பட்டிருந்தாலும் அவை எழுத்து வடிவம் பெறவில்லையோ என்று நினைக்கத்…
-
- 3 replies
- 3.1k views
-
-
-
- 3 replies
- 1.2k views
-
-
தமிழின் பன்மைத்துவம் கட்டுரை எம்.ஏ.நுஃமான் தமிழ்ப் பற்றாளர்கள் தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டைச் சிரத்தையோடு கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில், தமிழின் பன்மைத்துவம் பற்றிப் பேசுவது அவர்களைச் சீண்டுவதற்கான முயற்சி என்று சிலர் கருதக் கூடும். எனது நோக்கம் அது அல்ல. தமிழின் பெருமைகள் பற்றிப் பலரும் பேசுவதுபோல அதன் தொன்மை, தூய்மை, இனிமை, இளமை, கன்னிமை பற்றியெல்லாம் நானும் பேசவேண்டியதில்லை. இவைபற்றி ஏற்கனவே நிறையப் பேசியாகிவிட்டது. அவ்வாறு பேசுவதற்கான கற்பனை வளமும் என்னிடம் இல்லை. அதற்கு வேண்டிய அளவு மொழி உணர்வு, பற்று, பாசம் என்பனவும் என்னிடம் இல்லை. எனது அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் எட்டியவகையில் தமிழின் முக்கியமான பெரு…
-
- 3 replies
- 2.3k views
-
-
தமிழின் பிற சிறப்புகள்◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘ - தமிழ் இலக்கியம் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பெரும் வரலாறு கொண்டது. – கி.மு. முதலாம் நூற்றாண்டு மற்றும் கி.மு. 2ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டுக்கள் எகிப்திலும், தாய்லாந்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. - யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பதிவேட்டில் கடந்த 1997 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு ஓலைச் சுவடிகள் அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டன. அந்த இரண்டுமே தமிழ் சுவடிகள் என்பது பெருமைக்குரியதாகும். – இந்திய தொல்பொருள் துறை இந்தியாவில் இதுவரை கண்டுபிடித்துள்ள கல்வெட்டுக்களில் 55 சதவீதத்திற்கும் மேற்பட்டவை தமிழ் கல்வெட்டுக்கள் ஆகும். அதாவது 55,000 கல்வெட்டுக்கள் தமிழ் கல…
-
- 1 reply
- 2.6k views
-
-
தமிழின் பொருள் தற்போது உலகத்தில் 6800 மொழிகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மொழிகளுள் சில தொன்மையானவை. சில புதியவை. சிலவற்றுக்கு இலக்கிய வளம் உண்டு. சிலவற்றுக்கு எழுத்துகூட கிடையாது. சில மொழிகள் நெடுங்காலம் வாழக்கூடிய நலமான நிலையைப் பெற்றுள்ளன. ஒரு சில மொழிகள் அழிவின் விளிம்பில் நிலை தடுமாறிக்கொண்டிருக்கின்றன. உலக மொழிகள் எதற்கும் இல்லாத தனிச்சிறப்புகள் தமிழ்மொழிக்கு உண்டு. கிரேக்க நாட்டு மொழி கிரேக்கம். இங்கிலாந்து நாட்டின் மொழி இங்கிலீசு(ஆங்கிலம்). கிரேக்கம், இங்கிலீசு என்ற சொற்கள் மொழியை மட்டுமே சுட்டிக் காட்டுகின்றன. ஆனால் தமிழ் என்ற சொல், மொழி என்பதோடு சேர்த்துப் பதினொரு பொருளைத் தருகிறது. இப்படிப்பட்ட சிறப்பு உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லவே இல்…
-
- 0 replies
- 6k views
-
-
தமிழரின் இழந்த பெருமைகளையும், அதை மீட்டெடுக்கும் வழிமுறைகளையும்ஆராயும் ஒரு அற்புதமான கட்டுரை. ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் படிக்கவேண்டிய கட்டுரை. Prashanth Munuswamy தமிழின் வயது 2000 ஆண்டு 3000 ஆண்டு என ஏலம் போட்டு வருகின்றனர். பல சுனாமிகள் தோன்றி குமரிக் கண்டத்தைச் சிறிது சிறிதாகச் சிதைத்து வந்தன. ஒவ்வொரு 10,000 ஆண்டுகளிலும் ஒரு பெரிய சுனாமி தோன்றியதாக ஆய்வறிஞர்கள் கூறி வருகின்றனர். இதனால் சில இலட்சம் மக்கள் மடிந்தனர். ஆனால், மிகச் சிறிதளவு நிலப்பகுதியே அழிந்தது.ஆனால் கடற்கோள் என்பது கி.மு.10,000 அளவில் தோன்றி கி.மு. 8,000 அளவு நீண்ட காலம் நடந்தது. இதனை மேலை நாட்டு ஆய்வாளர்கள் பெரும்பனிக்காலம் ( THE GREAT ICE-AGE ) என்கின்றனர்.இதன் காரணமாகவே குமரிக் கண்டம் முற…
-
- 0 replies
- 2.1k views
-
-
சுமார் 12 வது நூற்றாண்டில் தான் அதாவது 800 வருடங்களுக்கு முன்னர் தான் 'கன்னடம்' என்கிற மொழி தமிழில் இருந்து தனியாக பிரிந்தது. தமிழில் இருந்து பிரிந்த மொழிகள் பலபல . அதில் நமக்கு நெருக்கமானவையாக இன்னும் இருப்பது 3 மொழிகள் . அவை நம்மை சுற்றியுள்ள மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகியவை. இதில் மலையாளம் என்பது 75% தமிழும், 25% சமஸ்கிருதமும் கலவையாக கொண்ட மொழி . தெலுங்கு மொழியாவது 50% தமிழும், 50% சதவிகிதம் சமஸ்கிருதமும் கலந்தது. கன்னடமானது. 25 % தமிழும், 75% சமஸ்கிருதமும் கலந்தது. இந்த கன்னடம் 800 வருடங்களுக்கு முன்பு நம்மிடம் இருந்து பிரிந்தது. மூவேந்தர்களில் ஒருவரான சோழர்களால் ஆளப்பட்ட நிலம் தான் கர்நாடகம் என்பது இங்கே இருக்கும் நூற்றுக்கணக்கான சோழ வம்சத்து கோயில்களை பார்த…
-
- 1 reply
- 4.2k views
-
-
கமல்ஹாசன் சொல்வது போல் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததா? மொழியியலாளர்கள் சொல்வது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 4 ஜூன் 2025, 01:58 GMT புதுப்பிக்கப்பட்டது 52 நிமிடங்களுக்கு முன்னர் தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என்ற கமல்ஹாசனின் கருத்துக்கு கர்நாடக மாநிலத்தில் கடுமையான எதிர்வினைகள் எழுந்துள்ளன. ஆனால், எந்த மொழியில் இருந்து எந்த மொழி பிறந்தது எனக் கூறுவது சிக்கலானது என்கிறார்கள் மொழியியலாளர்கள். மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து விரைவில் வெளியாகவுள்ள 'தக் லைஃப்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தபோது, அந்த விழாவில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் பங்கேற்றிருந்தார். கமல்ஹாச…
-
- 1 reply
- 325 views
- 1 follower
-
-
தமிழராகிய அனைவரும் படிக்கவேண்டிய பதிவு படியுங்கள்!! பகிருங்கள் !! தமிழில் ஏன் பெயர் வைக்க வேண்டும்? முழுக்கப் படியுங்கள்...- தமிழில் ஏன் பெயர் வைக்க வேண்டும்? மொழி தான் ஒருவருடைய அடையாளமாகும். தத்தம் மொழியில் பெயரை வைத்துக்கொள்வது என்பது அடையாளப்படுத்துவ�� �ற்கு உதவும். இன்னொரு மொழியில் பெயர் வைப்பதில் என்ன தவறு? இன்னொரு மொழியில் பெயர் வைப்பது என்பது, ‘ஒருவர் தம்முடைய மொழியை விட இன்னொரு மொழியை உயர்வாகக் கருதும்போது’ மட்டுமே நிகழும். இன்னொரு மொழி நம்முடைய மொழியை விட உயர்வானது என்று கருதக் கூடாதா? இன்னொரு மொழியைச் சிறப்பாகக் கருதலாமே தவிர நம்முடைய மொழியை விட உயர்வானது எனக் கருதுவது கூடாது. ஏன்? ஒவ்வொரு மொழிக்கும் சில தனிச் சிறப்புகள் உள்ளன. எ.கா. தமிழில…
-
- 0 replies
- 1k views
-
-
-
தமிழில் மொழிபெயர்க்கும் சாப்ட்வேர் : அமிர்தா பல்கலை குழு உருவாக்கம் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் இலக்கணத்துடன் மொழிப்பெயர்க்கும் "சாப்ட்வேர்' உருவாக்கியுள்ளனர் கோவை, அமிர்தா பல்கலை ஆராய்ச்சிக் குழுவினர். சர்வதேச அளவில் ஆங்கில மொழிக்கு "மவுசு' அதிகம் என்பதால், கட்டாயமாக கற்க வேண்டியுள்ளது. ஆங்கிலத்தை அந்தந்த மாநில மொழிகளில் மொழிப்பெயர்க்கும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் இருந்தாலும், முழுமையான பயன் கிடைப்பதில்லை. இந்நிலையில், தமிழ் மொழி இலக்கணத்துடன், செயல், பால்விகுதி, காலத்துக்கேற்ப மொழிப்பெயர்ப்பு செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர், கோவை அமிர்தா பல்கலை கணிப்பொறியியல் மற்றும் செய்வலை அமைப்பியல் மேம்பாட்டு மையத்தினர் (சென்). மொழிபெயர்ப்பு சாப்ட்வேர் குற…
-
- 1 reply
- 1.6k views
-
-
-
- 1 reply
- 498 views
-
-
-
- 0 replies
- 418 views
-
-
-
- 1 reply
- 967 views
-
-
தமிழில்லாமல் ஆங்கிலமில்லை!- சில சொற்களும் விளக்கமும்.. http://youtu.be/Z9Ws-DG_HgA
-
- 0 replies
- 969 views
-
-
-
வணக்கம் அனைவருக்கும் என்னுடைய இந்த தகவல் மிகவும் பிந்திய செய்திதான் இருந்தாலும் உங்களுடன் பகிர்ந்துகொள்விரும்புகிறே
-
- 5 replies
- 1.9k views
-
-
-
இன்று எமது விடுதலை(போராட்டம்) இயக்கம் பதிணெண்ணாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளின் தியாகத்தின் காரணமாக ஒரு புதிய பரிமாணத்துடன் உலக அரங்கில் சிறந்த(போராட்டமாகவும்) இயக்கமாகவும் மற்ற உலக விடுதலை இயக்கங்களிற்கு ஒரு அகராதியாகவும் தலை நிமிர்ந்து நிற்கிறது என்பதில் உலக தமிழினமே மகிழ்சியடையவேண்டிய ஒரு விடயமாகும். முக்கியமாக உலக அரங்கில் இயங்கிக்கொண்டிருக்கும் விடுதலை இயக்கங்களின் பின்புலங்களை அவதானித்தீர்கள் என்றால் ஏதாவது ஒரு நாடு உறுதுணையாக இருப்பதை அவதாணிக்கக்கூடியதாக இருக்கும். ஆனால் எங்களுடைய போராட்டத்தை இவர்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் ஆதரவானவர்கள் என்று எந்த நாட்டையும் குறிப்பிட்டுக்கூறமுடியாது. அதே நேரத்தில் எமது போராட்டத்திற்கு எதிரானவர்கள் மிக அதிகம் என்பதைத்தான் குற…
-
- 11 replies
- 2.7k views
-
-
தமிழீழத்தின் அதி உயரிய விருது :மாமனிதர் தமிழ்மக்களின் வாழ்நிலை மேம்பாட்டுக்காக-உரிமை விடுதலைக்காக விடுதலைப் போராட்டத்துக்காக அரும்பாடுபடும் தமிழருக்கு மாமனிதர் என்ற இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது. ஈழத்தமிழரின் விடிவுக்காக பாடுபடுபவர்களின் பெயரை தேர்ந்தெடுத்து விடுதலைப்புலிகளின் உயர்மட்டக்குழு தேசியத்தலைவர் பிரபாகரனுக்கு சிபார்சு செய்யும். தேசியத்தலைவர் தலைமையில் கூடும் அம்முக்கிய குழு தேர்வு செய்யப்பட்டவர் குறித்து பரிசீலித்து பின்னர் முடிவெடுத்து அவரை விருதுக்கு உரியவராக அறிவிக்கும். மாமனிதர் குறித்த விவரங்கள் விளக்கங்களை தந்திருக்கும். இந்த விருதுக்கு அரசியல் சாயம் எதுவும் இல்லை. விசேட அளவுகோல்களும் இல்லை. இந்தியாவில் வழங்கப்படும் பாரத ரத்னா பத்…
-
- 9 replies
- 2.1k views
-
-
[size=4][/size] ஒரு நாட்டின் தேசிய இனங்கள் நாட்டு மக்களின் பண்புகள்,ஆட்சி,இறைமை என்பவை உட்பட அந்த நாட்டைக் குறிக்கின்ற ஒட்டுமொத்தமான பொதுச் சின்னமாகத் தேசியக் கொடி விளங்குகின்றது . ஒவ்வொரு நாட்டின் இயல்புகள் நிலைமைகள் ,எண்ணங்களின் வெளிப்பாடாக அந்தந்த நாட்டுக் தேசிய கொடிகளின் சின்னம் நிறம் அளவு என்பன வேறுபட்டிருக்கும் .தேசியக் கொடியின் அளவு பெரும்பாலும் 3:2 என்ற அளவினதாகவே இருக்கின்றது. சில நாடுகளின் தேசியக் கொடிகள் 2:1, 1:1 என்ற அளவினைக் கொண்டதாகவும் இருக்கின்றது நாம் போற்றி வணங்குதற்கூடாக தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தப்படுகின்றது . தேசியக்கொடியை வணங்குவது நாட்டை வணங்குவது போலாகும். நாட்டை போற்றி வணங்குவதற்…
-
- 0 replies
- 807 views
-
-
தமிழீழம் வரலாற்றுத்தேவை வாழ்க்கையின் கட்டளை (நூல் விமர்சனம்) தோழர் தியாகு அவர்கள் எழுதி வெளி வந்த சில கட்டுரைத் தொகுப்புகளுடன் தலைப்புக்குரிய கட்டுரையையும் புதிதாக எழுதிச் சேர்த்து வாசகர்களாகிய நமக்கு அளித்துள்ள நூல்தான் தமிழீழம் - வரலாற்றுத் தேவை வாழ்க்கையின் கட்டளை: இந்தப் புத்தகத்தில் வரும் 17 கட்டுரைகளும் கடந்த நாட்களில் நடந்த பேச்சுவார்த்தைகளை, வீரப்போர்களை, அதன் தியாகங்களை நினைவுப் படுத்துவதுடன், நிகழ்கால தேவைகளை, எதிர்கால எதிர்பார்ப்புகளை உள்ளடக்கிய கட்டுரைத் தொகுப்பாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விடுதலைப் புலிகளையானாலும், வேறு உண்மையான தேசிய விடுதலை இயக்கங்களையானாலும் உலக அரசுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து எதிர்த்தாலும் முறியடிக்க முடியாது. வி…
-
- 1 reply
- 823 views
-