பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
வெட்டிவேலை அன்றாடம் பேசும் போது நமது சொல்லாடலில் அடிக்கடி பயன்படுத்துவது வெட்டிவேலை. சோழர்கள் கால கல்வெட்டுகளில் அவர்களது வரி வகைகள் பற்றி படிக்கும் போது அதற்கானஅடிப்படை அங்கிருந்து வந்திருக்குமோ என்று எண்ன தோன்றுகிறது. சோழர்கள் காலத்தில் வெட்டி வரி என்று ஒரு வரி இருந்திருக்கிறது. எந்த ஒரு ஊதியமும் பெற்றுக்கொள்ளாமல் அரசுக்கு அல்லது ஊருக்கு செய்யும் ஊழியமே வெட்டி எனப்படுவதாகும். ஊழியமாக தரபட்டாலும் இதை வரி இனாமாக எடுத்து கொள்ளபடுவதே முறை. நீர் கிடைக்காத காலங்களில் ஆற்றுக்கு குறுக்கே அணை கட்டி ஊற்று நீரை தேக்கி செய்யும் ஊழியத்தை செய்நீர் வெட்டி என்று குறித்தனர். வெள்ளாமை சார்ந்த பணிகளுக்கு செய்யும் வேலைகளை வெள்ளான் வெட்டி என்று கூறுகின்றனர். குடும்பத்தக்கு ஒருவர் கோடை…
-
- 0 replies
- 312 views
- 1 follower
-
-
17 ஜூலை 2023 விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள வெம்பக்கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட அரிய வகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெரியவந்துள்ளது. சுடுமண்ணால் செய்யப்பட்ட பொம்மை, யானை தந்தத்தான் ஆன பதக்கங்கள், சூதுபவள மணிகள் போன்ற பல்வேறு பொருட்கள் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன. கீழடியில் தொழிற்சாலை இருந்ததற்கான சான்று பொருட்கள் கிடைத்துள்ளது போன்று வெம்பக்கோட்டையிலும் சங்கு தொழிற்சாலை இருந்ததற்கான சான்றுகள் உள்ளன என்று கூறுகிறார் வெம்பக்கோட்டை அகழாய்வு இயக்குநரான பாஸ்கர். தங்கம், செப்பு நாணயங்கள் போன்றவையும் கண்டறியப்பட்டுள்ளதாக கூறும் அவர், இதுவரை எழுத்து…
-
-
- 1 reply
- 747 views
- 1 follower
-
-
சங்க இலக்கியத்தில் வெறியாட்டு என்ற வார்த்தையை அதிகம் கேள்விப் பட்டிருப்பீர்கள். இதைப்பற்றி இணையத்தில் பல கட்டுரைகளை காணலாம். அதைப் பற்றி விரிவாக யாழில் ஒரு திரி இடலாம் என்ற உந்துதலே இது. வெறியாடுதல் என்பதற்கு இரண்டு வகையான விளக்கம் கொடுக்கப்படுகிறது. -> வேலைக் கையிற்கொண்டு ஆவேசம் கொண்டு ஆடுதல். -> பருவ மகளிருக்கு காதல் கொண்ட காதலனை அடைய வேண்டும் என்ற அவாவும், அடைய முடியுமோ என்ற அச்சத்தினாலும் உண்டாகும் ஒருவகை மன நோய். இந்த எண்ணம் முற்றுபெற்று ஊண் உறக்கமின்றி உடல் நலிந்து பேய் பிடித்து போன்ற ஒரு நிலையை வெறி என்றும் அழைப்பர். சங்க இலக்கியத்தில் வரும் ஒரு வீரக் காட்சி....... தம்முடைய கணவன்மாராகிய வெட்சி மறவர்கள் போருக்குப் புறப்படுமுன், அந்தப் போரில் வ…
-
- 0 replies
- 5.6k views
-
-
வெற்றி வீரன் ஒண்டிப் பகடை ஒண்டிவீரன் அருந்ததியர்குலத்தில் பிறந்தவன். அவன்ஒற்றர்படைக்குத் தலைவன்.பூலித்தேவன் ஒற்றர் படையும்வைத்திருந்தார்.அப்பொழுதுதான் தகவல்வருகிறது. தென்மலையில்வெள்ளைக்காரன் முகாம்அமைத்து இருக்கிறான்.தென்மலை முகாமில் இருந்துகும்பினிப் படைத்தலைவன் சவால்விடுகிறான். அவனுக்குத்தகவல் சொல்கிறார். இந்தத் தென்மலை முகாமுக்குள்எவனாவது நுழைந்து எங்கள் பட்டத்துக் குதிரையைக்கொண்டுபோய்விட்டால் நாங்கள் தோற்றதாக ஒத்துக் கொண்டுபோய்விடுவதாக சவால் விடுகிறான். இந்தச் செய்தி அரண்மனைக்கு வருகிறது. அரசர் பூலித்தேவனின்காதுக்கு வருகிறது. கலகலவென்று சிரிக்கிறான், அப்பொழுதுபக்கத்தில் நிற்கிறான் ஒண்டிவீரன். அரசனே, நான் போய் முடித்துவருகிறேன். இந்தச் சபதத்தை நிறைவேற்ற…
-
- 0 replies
- 1.3k views
-
-
வெற்றிப்பறை !பறை, போர் முரசு, மத்தளம், மகுடம்,தமுக்கு, கஞ்சிரா, கிடிக்கட்டி, பம்பை மேளம், புல்லாங்குழல், கட்டைக் குழல், மாயக்குழல், தாளம், திருச்சின்னம், தாரை, சங்கு, கொக்கறை, எக்காளம், உடல் (தக்கை), உடுக்கை, உறுமி மேளம், கொம்பு, வர்ணனை உடுக்கை, கைலாய வாத்தியங்கள் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட தமிழிசை கருவிகள் ஒருசேர நிகழ்வு .....
-
- 5 replies
- 1.3k views
-
-
வெளி நாட்டு தமிழர்களுக்கு பர்மா நிலை எப்பவும் நமக்கு வரலாம். எமக்கு என்று ஒரு நாடு அமைக்க உழைத்திடுவீர்... மியன்மாரில் தமிழர் – இருப்பிடம் மியன்மாரின் பழைய பெயர் பர்மா 6,76552 சதுர மைல்கள் கொண்டது. பர்மா நாட்டின் வடமேற்கு எல்லையில் இந்தியாவும், பங்களாதேசும் இருக்கின்றன. வடகிழக்கு எல்லையில் žனாவும் லாவோசும் இருக்கின்றன. தென் கிழக்கு எல்லையில் தாய்லாந்து இருக்கிறது. பர்மா ஆங்கில ஆட்சியில் 1936 வரை இந்தியாவுடன் ஒரு மாநிலமாக இருந்தது. அரிசி, தேக்கு, நவரத்தினம், முத்து போன்றவை அதன் பாரம்பரியச் சொத்து. தமிழர் குடியேறிய வரலாறு : கிறிஸ்து தோன்றுவதற்கு முன்பே தமிழகத்திற்கும் பர்மாவுக்கும் தொடர்பு இருந்து வந்தது. அத்தொடர்பு வணிகத்தை நோக்கமாகக் கொண்டது. …
-
- 1 reply
- 1.6k views
-
-
வெளிநாடு வாழ் தமிழ்ச் சங்க நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் இணைப்பு பாலமாக தினமலர் வெப்சைட் விளங்கி வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதை மேலும் வலுப்படுத்தும் வகையில் வெளிநாடுகளில் உள்ள அனைத்து தமிழ்ச்சங்கங்கள் தொடர்பான தகவல்களையும் இந்த பகுதியில் தர விரும்புகிறோம். அதற்கு உங்களுடைய முழு ஒத்துழைப்பு தேவை. நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள தமிழ்ச் சங்கங்களின் பெயர்கள்இ அதன் நிர்வாகிகள்இ அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான டெலிபோன் எண் மற்றும் இமெயில் முகவரி ஆகியவற்றை எங்களுக்கு அனுப்பி வைத்தால் அவை இந்த பகுதியில் நிரந்தரமாக இடம் பெறச்செய்கிறோம். அதன் மூலம் மற்றவர்கள் உங்களுடன் தொடர்பு கொள்ளவும் உங்கள் பணி மேலும் சிறக்கவும் உதவும். மேலும் உங்கள்…
-
- 25 replies
- 5k views
-
-
வெளிநாடுகளில் தமிழை வளர்க்க எடுக்கப்படும் முயற்சி கூட தமிழகத்தில் எடுப்பதில்லை: உயர் நீதிமன்றம் வேதனை Published : 06 Mar 2019 16:06 IST Updated : 06 Mar 2019 16:06 IST கி.மகாராஜன் மதுரை கோப்புப்படம் தமிழ் வளர்ச்சிக்காக தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தினமும் 10 நிமிடம் ஒதுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை யோசனை தெரிவித்துள்ளது. மதுரை உலக தமிழ்ச்சங்கத்தில் உள்ள நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து தமிழ் நூல்கள், தமிழ் ஆராய்ச்சி நூல்கள், தமிழ் மொழி வளர்ச்சியுடன் தொடர்புடைய பிற மொழி நூல்களை வைக்கவும், நூலகத்தில் புதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் பி.ஸ்டாலின் உயர் நீதிமன்ற மதுர…
-
- 0 replies
- 546 views
- 1 follower
-
-
இங்கிலாந்திலிருந்து ஐயா சூரியசேகரம் எமது மண்ணுக்கும் மக்களுக்குமாக செய்யும் சேவை. 80-81 வயதிலும் ஓடியாடி வேலை செய்கிறார்.மிகவும் பெருமையாக உள்ளது. முன்பள்ளியின் முக்கியத்தை மிகவும் தெளிவாக விளக்குகிறார். யாராவது ஆர்வமிருந்தால் 53 நிமிட காணொளியை பாருங்கள்.
-
- 0 replies
- 1.1k views
- 1 follower
-
-
இவர்கள் தான் இலங்கையின் பூர்வ குடிகள். "நாகரீகமடைந்த" சமுதாயத்தால் "வேடுவர்கள்" என்று அழைக்கப் படும் பழங்குடி இனம். தென்னிலங்கையில் ஊவா மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்தில் தொப்பிக்கல, வாகரை போன்ற பிரதேசங்களிலும் அதிகளவில் வாழ்கின்றனர். பெயர் மட்டுமே வேடுவர்கள். ஆனால், அந்த மக்கள் வேட்டையாடுவதுடன், விவசாயமும் செய்கின்றனர். இவர்களுக்கென்று தனியான மொழி உண்டு. "நாகரீகமடைந்த" சிங்களவர்களும், தமிழர்களும், மண்ணுக்காக உரிமைப் போரில் ஈடுபட்டமை, உலகம் முழுவதும் தெரிந்த விடயம். ஆனால், இலங்கையில் மூன்றாவதாக வேடுவ மொழி பேசும் மக்கள் வாழ்வதும், அவர்களது இனமும், மொழியும் அழிந்து கொண்டு வருவதும், வெளியுலகத்திற்கு தெரியாது. சிங்களப் பகுதிகளில் வாழும் வேடுவர்களின் மொழியில், ஆதிக்க மொழியான ச…
-
- 5 replies
- 6k views
-
-
வேருக்கு நீர் வார்த்தவர்கள்: தமிழ்மொழியின் தொன்மையும் மாண்பும்! By வித்துவான் பாலூர் து.கண்ணப்ப முதலியார் தமிழ்மொழி தொன்மையானது என்பது வான்மீக ராமாயணமும், வியாசர் மகாபாரதமும் கூறுமாற்றால் அறியலாம். பாரதத்தில் பாண்டிய நாட்டைப் பற்றிய குறிப்பு வருகிறது. வானரங்களுக்குச் சுக்ரீவன், ""நீங்கள் மலைய மலையின் சிகரத்தில் அகத்தியரைக் காண்பீர்கள். அவர் ஆணை பெற்றுப் பாண்டியர்க்கு உரித்தான கபாடபுரத்தைக் காண்பீர்கள்'' என்று கூறிய குறிப்பு வான்மீக ராமாயணத்தில் வருதல் காண்க. பாண்டியர்களைப் பற்றிய குறிப்பு அந்நூலில் காணப்படுதலின், அவர்களின் மொழியாகிய தமிழின் பழமையும் இதன் வழி அறியவருகிறது. பாண்டியநாடு தமிழ் வளர்த்த நாடு என்பது, ""சந்தனப் பொதியச் செந்தமிழ் முனியும…
-
- 0 replies
- 1.3k views
-
-
பெயர்ச் சிறப்பு மது தாய்மொழியின் பெயர் "தமிழ்' என்பது. தமிழை ""உயர்தனிச் செம்மொழி'' என்பர் அறிஞர். தமிழ் உயர்ந்த மொழி, தனித்த மொழி, செம்மையான மொழி என்பது இதன் பொருள். "தமிழ்' என்பதற்கு "அழகு' எனவும் பொருள் உண்டு. இவ்வுண்மையைத் ""தமிழ் தழுவிய சாயல்'' என்பதால் நன்கறியலாம். தமிழுக்கு "இனிமை' எனவும் பொருள் உண்டு. இதைத் தேன்தமிழ், தீந்தமிழ் என்ற அடைமொழிகளே மெய்ப்பிக்கும். தமிழ் என்பதை தம்-இழ் எனப் பிரித்து, தம்மிடத்தில் "ழ்'ழை உடையது "தமிழ்' எனப் பொருள் கூறுவதும் உண்டு. தமிழுக்கு இனம் மூன்று. அவை வல்லினம், மெல்லினம், இடையினம், என்பவை. நமது மொழிக்குப் பெயர் வைக்க எண்ணிய தமிழ்ச் சான்றோர்கள், அக் காலத்திலேயே இனத்திற்கு ஓர் எழுத்தாக எடுத்து மூன்று இனங்களுக்கும் "பிரதிநிதித்துவ…
-
- 0 replies
- 780 views
-
-
ஹார்வர்டை தொடர்ந்து லண்டனில் தமிழ் இருக்கை; மக்களுக்கு என்ன பயன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைFACEBOOK ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து லண்டன் பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கையை அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாகவே உலகம் முழுவதுமுள்ள தமிழர்களிடையே தமிழ் மொழி சார்ந்த எழுச்சி அதிகரித்துள்ளதாக பரவலாக …
-
- 0 replies
- 385 views
-
-
தமிழ் இருக்கை என்றால் என்ன ? Posted on January 14, 2018 AuthorComments Offon தமிழ் இருக்கை என்றால் என்ன ? தமிழ் என்றால் நம்ம எல்லோருக்கும் தெரியும்.அதென்ன தமிழ் இருக்கை ? பல்கலைகழகங்களில் ஒரு துறை தொடர்பான விடயத்தை கற்பிக்க பீடங்களை அமைப்பார்கள் அல்லவா ? அது போன்ற ஒரு ஒதுக்கீடு தான் இந்த இருக்கை.வெறும் கற்றல் கற்பித்தலுக்கு மட்டுமல்ல அதையும் தாண்டி குறித்த துறை தொடபான ஆய்வுகள் ,மாநாடுகளை இவிருக்கை முன்னெடுக்கும்.இதற்கான விதை இடப்பட்டு அததற்கான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. ஏன் தமிழுக்கு இப்படியொருமுன்னெடுப்பு தேவை தானா ? தமிழ் ஏற்றகனவே பிரபலயமான மொழி தானே ? இதற்க்கு எதற்கு என்று கேட்டு ஒதுக்கி விட முடியாது.காரணம் இன்றைய த…
-
- 11 replies
- 2.8k views
-