சுற்றமும் சூழலும்
சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்
சுற்றமும் சூழலும் பகுதியில் சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
515 topics in this forum
-
பட மூலாதாரம்,SRIRAM MURALI/WPY 54 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு வினோதமான மற்றும் குதிரைலாட நண்டின் படம், லாரன்ட் பாலேஸ்டாவுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த வனஉயிர் புகைப்படக் கலைஞர் (WPY) என்ற விருதைப் பெற்றுத்தந்துள்ளது. தங்க நிறத்தில் உள்ள இந்த நண்டு பிலிப்பைன்ஸ் நாட்டின் பங்கடாலன் தீவில் தண்ணீருக்குக் கீழ் பகுதியில் அடிமட்ட சேற்றுக்கு மிக அருகில் தவழ்ந்துகொண்டிருப்பதை நாம் காணலாம். இந்த நண்டுக்கு அருகே சிறிய மீன்கள் நீந்திக் கொண்டிருக்கின்றன. நண்டின் அசைவுகள் காரணமாக வண்டலில் உள்ள மண் அசைவதன் மூலம் ஏதாவது உணவு வெளிப்படலாம் என்ற எண்ணத்தில் அந்த மீன்கள் அங்கே காத்திருக்கின்றன. இந்தப் புகைப்பட விருது வழங்கும் நிறுவனத்தின் 59 ஆண்ட…
-
- 4 replies
- 444 views
- 1 follower
-
-
கொரோனா முடக்கத்தால் உலகின் பாதியாகக் குறைந்துள்ள ஒலி அதிர்வு: தோமஸ் லெகோக் ! உலகில் பொதுவாக எழும் ஒலி அதிர்வின் அளவு 50 சதவீதம் வரை குறைந்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கொரோனாவால் மனிதர்களின் இயல்பான நடமாட்டம் மட்டுமின்றி சுற்றுலா, போக்குவரத்து சேவைகள் உள்ளிட்டவை முற்றிலும் முடங்கியுள்ளதால் உலகில் ஒலி அதிர்வுகளின் அளவு குறைந்துள்ளதாக ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆய்வில் 70க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பங்கேற்றனர். உலகின் 300 வெவ்வேறு இடங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவை எட்டியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். சீனா தொடங்கி இத்தாலி வரை உலகின் பல்வேறு நாடுகளில் அமுல்படுத்தப்பட்ட முடக்க ந…
-
- 0 replies
- 444 views
-
-
அதிகரிக்கும் கார்பன் உமிழ்வு காலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்.! ஒக்ஸ்பாம் மற்றும் ஸ்டாக்ஹோம் சுற்றுச்சூழல் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், பணக்கார நாடுகளால் அதிகரித்த கார்பன் உமிழ்வு உலகத்தை காலநிலை பேரழிவின் விளிம்பிற்கு கொண்டு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் உலகின் பணக்கார நாடுகளால் வளிமண்டலத்தில் வெளியிடப்பட்ட கார்பன் உமிழ்வு 60% அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் தீர்க்க முடியாத சிக்கலாக உருமாறி வருகிறது. நாளுக்குநாள் வளிமண்டலத்தில் வெளியிடப்படும் அதிகப்படியான கார்பன் வாயுவின் அளவு பூதாகரமாக உயர்ந்துள்ளது. உலகில் கடந்த 1990 முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வளிமண்டலத்தில் கார்பன் வாயுவின…
-
- 0 replies
- 443 views
-
-
கதற வைக்கும் காட்டுத் தீ; 25 பேர் உயிரிழப்பு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் கடந்த சில காலமாக பெஜாயா, பௌய்ரா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகின்றது. இந்நிலையில் இத்தீயைக் கட்டுபடுத்த முயன்ற தீயணைப்புப் படைவீரர்கள் 10 பேர் உட்பட 25 பேர் காட்டுத் தீயினால் உயிரிழந்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் இதனால் 47 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் 1000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்காட்டுத் தீயினால் வனப்பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://atha…
-
- 1 reply
- 441 views
-
-
டைனோசர்களில் கடைசி இன எலும்பு கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினாவில் 70மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர் எலும்பு கூடுகளை பல்லுயிரியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வகை டைனோசர்கள் பூமியில் வசித்த டைனோசர்களில் கடைசி இனத்தை சேர்ந்தவை என்றும் கருதப்படுகிறது. தெற்கு மாகாணமான சாந்தாகுரூசில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த டைனோசர் 32 அடி உயரம் கொண்டவையாகும். இந்த மெகராப்டர் இன டைனோசர் மெலிதான உடலமைப்பு , நீண்ட வால்கள் உடையதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் அவற்றின் கட்டை விரல்கள் 40சென்டிமீட்டர் நீளத்திற்கு இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த எலும்புக்கூடுகளை ஆராய்ச்சி செய…
-
- 0 replies
- 440 views
-
-
பருவநிலை மாற்றம்: 2020இல் உலகம் சந்தித்த பேரிழப்புகள் மாட் மெக்ராத் சுற்றுச்சூழல் செய்தியாளர், பிபிசி 29 டிசம்பர் 2020 பட மூலாதாரம், BABU கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ஒருபுறமிருக்க, தீவிர வானிலை சார்ந்த பாதிப்புகளின் காரணமாக 2020ஆம் ஆண்டில் பேரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கிறிஸ்டியன் எய்டு என்ற தொண்டு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்டுள்ளதாக கருதப்படும் இந்த ஆண்டின் 10 பேரிழப்புகளை பட்டியலிட்டுள்ள அந்த அமைப்பு, இதன் காரணமாக கோடிக்கணக்கான பணம் மட்டுமின்றி, பல்லாயிரக்கணக்கான உயிர்களும் பறிபோயுள்ளதாக தெரிவித்…
-
- 0 replies
- 437 views
-
-
விதையே தேவையில்லங்க வெறும் இலை மட்டும் போதும் - மரம் வளர்ப்பில் வியக்க வைக்கும் கோயம்புத்தூர் விவசாயி
-
- 2 replies
- 437 views
-
-
இறந்து கல்லாக மாறிய ராட்சத பாம்பு.! நாகா குகைகள், புவெங் கான் மாகாணத்தின் புவெங் காங் லாங் மாவட்டத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு குகை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் இணைய பயனர்கள் இந்த மர்மமான குகையின் படங்களை பிரம்மாண்டமான பாம்பு தலை வடிவை ஒத்த மற்றொரு மேற்பரப்புடன் இணைத்து பதிவிட்டுள்ளது பலரை வியக்க வைத்துள்ளது. இந்த குகை “நாகா குகை” என்று கண்டுபிடிக்கப்பட்டு பெயரிடப்பட்டுள்ளது. ஆர்ட் தனவானிஜ் என்ற பேஸ்புக் பயனர் இந்த குகையின் படத்தை வெளியிட்டார். இது பாறை மேற்பரப்பைக் கொண்டுள்ள இது ஒரு பாம்பின் சுருண்ட உடல் ஒரு பெரிய பாம்பின் செதில்களாக தோற்றமளிக்கிறது. குறித்த புகைப்படத்தில் பாம்பு செதில்களைப் போலவோ அல்லது கல்லாக மாறிய மாபெரு…
-
- 0 replies
- 436 views
-
-
நம்மாழ்வாரும் சித்த மருத்துவமும்: கதிர்நம்பி இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார், சித்த மருத்துவம் குறித்துப் பேசவில்லையா ? சித்த மருத்துவத்தை முன்னெடுக்கவில்லையா ? * தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை/சூழலியல் செயல்பாடுகள் அரும்பிய காலத்தில் இருந்து செயல்பட்டு வந்தவர் நம்மாழ்வார். புழுதியில் உழல்கின்ற உழவர்களை ஒரு படி மேல் ஏற்றுவது தன் வாழ்நாள் இலட்சியம் என்று ஓடித் திரிந்தவர். வேளாண்மையை முழுமையாகக் (wholistic approach) காண வேண்டும் என்பார். மொத்தம் /எண்ணிக்கை (Total/count) என்பதை விட முழுமை (wholesome) என்பதனைக் கணக்கிட வேண்டும் என்பார். அந்த முழுமை என்பதற்குள் நுண்ணுயிர் முதல் பேருயிர் வரை அடங்கு…
-
- 0 replies
- 435 views
- 1 follower
-
-
தமிழகத்தில் விரிவாக்க பணிகளுக்காக வெட்டப்பட இருந்த 120 வயது ஆலமரம், தனியார் அமைப்பின் முயற்சியால் வேருடன் இடமாற்றம் செய்யப்பட்டது. தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஜனப்பசத்திரம் கூட்டுசாலை அருகே, சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வீதி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விரிவாக்க பணிகளுக்காக அங்கிருந்த 120 ஆண்டு பழமையான ஆலமரத்தை வெட்ட அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அந்த ஆலமரத்தை வேருடன் பெயர்த்து, வேறு இடத்தில் நடுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு, கோவையைச் சேர்ந்த 'ஓசை' சுற்றுச்சூழல் அமைப்பினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், ஆலமரத்தின் …
-
- 1 reply
- 435 views
-
-
ணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டகாசியின் கடைசி தினங்களில் ரேஞ்சர் பவுமாவுடன், டகாசி என்ற மலைவாழ் கொரில்லாவை உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆம் ரேஞ்சருடன் இயல்பாக செல்ஃபிக்கு போஸ் கொடுத்த கொரில்லாவின் பெயர்தான் டகாசி. அப்போது கொரில்லாவின் அந்த செல்ஃபி புகைப்படம் வைரலானது. ஆனால் இப்போது அந்த கொரில்லா தனது 14 வயதில் நீண்ட உடல்நலக் குறைவுக்கு பிறகு உயிரிழந்துள்ளது. அதுவும் குழந்தையாக தன்னை மீட்ட அண்ட்ரே பவுமா என்ற அந்த ரேஞ்சரின் மடியில். காங்கோ ஜனநாயக குடியரசில் உள்ள ஆப்ரிக்காவின் பழமையான தேசிய பூங்காவான, விருங்கா கொரில்லா காப்பகத்தில்தான் அந்த 14 வயது …
-
- 0 replies
- 435 views
-
-
விஞ்ஞானத் திரித்தல் – தார் மண்ணிலிருந்து பெட்ரோல் கனடாவின் மிகப் பெரிய தொழில் எது? கோதுமை, கனோலா எண்ணெய் ஏற்றுமதி மரங்கள் மற்றும் காட்டுப் பொருட்கள் (forestry products) கனிமப் பொருளகள் (minerals) மாட்டிறைச்சி (beef) திராட்சை மது (wine) எஃகு (steel) இதில் எதுவுமே கனடாவின் மிகப் பெரிய தொழில் அன்று. இவை யாவும் பெரிய தொழில்கள்தான். ஆனால், கனடாவின் மிகப் பெரிய தொழில், வட ஆல்பர்டாவில் காடுகளை அழித்துத் தார் மண்ணிலிருந்து கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்வது. கனடா, உலகின் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் நான்காம் இடம் வகிக்கிறது. வளைகுடா நாடுகளைப்போல, எண்ணெய்யை நம்பியே காலம் தள்ளும் நாடு இல்லை கனடா. ஆனால், அதன் பொருளாதாரத்தி…
-
- 0 replies
- 433 views
-
-
காலநிலை மாற்றத்தினால் ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்து உறுப்பு நாடுகளிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் நாங்கள் எங்கள் எதிர்காலத்தை எரித்துக்கொண்டிருக்கின்றோம் என தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐநா மனித உரிமை பேரவையின் அமர்வில் தொடக்கவுரை ஆற்றுகையி;ல் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். காலநிலை மாற்றத்தினால் உலகின் அனைத்து நாடுகளும் பாதிப்பை எதிர்கொள்ளப்போகின்றன என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். காலநிலை மாற்றம் என்பது தற்போது உலகின் அனைத்து பகுதிகளையும் பாதிக்கும் யதார்த்தம் என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது எதிர்வு கூறப்படும் வெப்பநிலை அதிகரித்தல் காரணமாக மனிதர்கள் பேரழிவை எதிர்கொள்…
-
- 0 replies
- 433 views
-
-
அதிக மழைப்பொழிவு தான் எரிமலைகள் வெடிக்க காரணமா.? ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ஆம் நாள் பூமி தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பூமி தினத்திற்கு வயது 50. அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிகள், புதிய கண்டுபிடிப்புகள், கட்டுரைகள், கள ஆய்வுகள் என பல்வேறு அறிவியல் தொடர்பான செய்திகளை வெளியிடும் Journal Nature இதழில் எரிமலைகள் தொடர்பாக வெளிவந்திருக்கும் ஓர் அறிக்கை (case study) நம்மை சிந்திக்க வைக்கும் விதமாக இருக்கிறது. kilauea eruptionவழக்கத்திற்கு மாறாக அதிகரித்து வரும் காலநிலை மாற்றத்தின் விளைவாக பூமியின் வெவ்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. வெப்ப மண்டலப் பகுதிகளில் அதிகப்படியான வெப்பச் சலனம், காட்டுத் தீ போன்றவைகள் என்றால், ஆர்டிக், அ…
-
- 0 replies
- 430 views
-
-
உடல் முழுக்க கொம்பு முளைத்த அங்கிலோசர்: 16.8 கோடி ஆண்டு பழைய முள் எலும்பு அதிசயம் ஜோனாத்தன் அமோஸ் அறிவியல் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அங்கிலோசர்: கவசம் பூட்டிய காஃபி டேபிள் நகர்ந்து வந்தால் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்குமோ? குட்டையான, அகலமான காபி டேபிளுக்கு உடம்பெல்லாம் கொம்பு முளைத்து உங்களை நோக்கி நகர்ந்து வருவதாக கற்பனை செய்து பாருங்கள். அதுதான் அங்கிலோசர். டைனோசர் போல அழிந்துபோன ஒரு தொல் பழங்கால விலங்கு. இது போன்ற அங்கிலோசர் ஒன்றின் உடலில் இருந்த முள் முள்ளாய் நீட்டிக்கொண்டிருக்…
-
- 0 replies
- 429 views
- 1 follower
-
-
ஃபின்லாந்து கடற்கரையை அலங்கரித்த “பனி முட்டைகள்” அரிய வானிலை நிகழ்வு! ஃபின்லாந்தின் கடற்கரைப் பகுதியில் நிலவிய அரிய வானிலையால் அங்கு, ஆயிரக்கணக்கான முட்டை வடிவ பனிக்கட்டிகள் தோன்றியுள்ளன. பின்லாந்துக்கும் ஸ்வீடனுக்கும் இடையிலான போத்னியா வளைகுடாவில் உள்ள ஹைலூட்டோ தீவில் காணப்பட்ட “பனி முட்டைகளை” அவதானித்தவர்களில் ஔிப்படக் கலைஞர் ரிஸ்டோ மட்டிலாவும் ஒருவராவார். காற்றாலும், நீராலும் சிறிய பனிக்கட்டி துண்டுகள் உருண்டு செல்லும் அரியதொரு வழிமுறையின் போது பனிக்கட்டிகள் வட்டவடிவில் உருவாவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது போன்ற இயற்கை வடிவமைப்பை அதற்கு முன்னர் பார்த்ததே இல்லை என்று ஒலு நகரை சோந்த மாட்டிலா என்பவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் “நான்…
-
- 0 replies
- 428 views
-
-
2 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு 1 கிலோ அரிசி இலவசம்! பிலிப்பைன்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய திட்டம் ஒன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. தலைநகர் மணிலா அருகே உள்ள பேயனான் கிராமத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்கும் நோக்கிலும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் பசியை போக்கும் நோக்கிலும் இந்த திட்டம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த திட்டத்தின் படி 2 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் மக்களுக்கு ஒரு கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. பிலிப்பைன்சில் ஒரு கிலோ அரிசி இலங்கை மதிப்பில் 150 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், அதனை வாங்க சிரமப்படும் ஏழை மக்களுக்கு அரசின் இந்த திட்டம் நன்மை பயக்கும…
-
- 0 replies
- 427 views
-
-
எவரெஸ்ட் சிகரம்: 'அதிவேகத்தில் உருகும் பனிப்பாறைகள்; 100 கோடி பேருக்கு பாதிப்பு' - அறிவியல் ஆய்வு 5 பிப்ரவரி 2022 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES எவரெஸ்ட் சிகரத்தில் உள்ள உயரமான பனிப்பாறை பருவநிலை மாற்றம் காரணமாக மிக வேகமாக உருகி வருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மையின் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் கடந்த 25 வருடங்களில் அந்த பனிப்பாறை இதுவரை 54 மீட்டர் வரையில் அகலத்தில் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. அந்த பனிப்பாறை கடல் மட்டத்திலிருந்து 25 ஆயிரத்து 938 அடி உயரத்தில் உள்ளது. இது பனியாக மாறி…
-
- 2 replies
- 427 views
- 1 follower
-
-
கடல் நீரை குடி நீராக்குவது மிகக் கேடானது! -சாவித்திரி கண்ணன் தமிழ்நாடு நன்கு மழை பொழியும் இடமாகும்! இது செளதி இல்லை.ஆனால், பெய்யும் மழை நீரை எல்லாம் கடலுக்கு அனுப்பி மீண்டும், மீண்டும் கடல் நீரைக் குடிநீராக்க பல ஆயிரம் கோடிகளை விரயமக்குகிறார்கள்! கடல் நீரைக் குடிப்பது உடலுக்கு கேடு! சூழலுக்கும் கேடு.ஒரு விரிவான அலசல்; ஆசியாவிலேயே மிகப் பெரிய குடிநீர் திட்டமாக நெம்மேலியில் ரூ.4,276.44 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். 2026 ல் இந்த திட்டத்தை முடிக்க திட்டமிட்டு உள்ளனர். 40 கோடி லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் இந்த கடல் குடிநீர் சுத்திகரிப்பு திட்டத்தின் மூலம் தாம்பரம் மாநகர மக்க…
-
- 0 replies
- 427 views
-
-
உலகின் மிக 'அழகான கொசு' இதுதானா? இந்த படம் அதிகம் பாராட்டப்படுவது ஏன்? ஜோனதன் அமோஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GIL WIZEN/WPY இது ஒரு பெண் கொசு. அதன் அழகைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது. உரோமங்களைக் கொண்ட அவற்றின் கால்கள், அதன் பளபளப்பு ஆகியவற்றைக் கண்டால் திகைப்பூட்டும். இது மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் காணப்படும் சபேதெஸ் இனத்தைச் சேர்ந்தது. பார்ப்பதற்கு இவ்வளவு அழகு கொண்டிருக்கும் இந்தக் கொசுதான் வெப்பமண்டலப் பிராந்தியத்தின் மிகக் கொடூரமான நோய்களுக்கு காரணமாக இருக்கிறது என்பது அவமானகரமானது. இந்தப் புகைப்ப…
-
- 0 replies
- 426 views
- 1 follower
-
-
அழிந்து வரும் தேனீக்களை பாதுகாப்பதற்காக, அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த நபர் ஒருவர் அவற்றை இயற்கை முறையில் வளர்த்து வருகிறார். அழிந்து வரும் வனப்பரப்புகள், பருவநிலை மாற்றம், அதிகளவிலான பூச்சி மருந்துகள் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதனை தடுத்து தேனீக்களை பாதுகாக்கும் பொருட்டு கலிபோர்னியாவில் வசித்து வரும் தீயல் ((Thiele)) என்பவர், தனது வீட்டிலேயே கூடுகள் அமைத்து தேனீக்களை வளர்த்து வருகிறார். வர்த்தகப் பயன்பாட்டுக்காக தேனீக்கள் வளர்க்கப்படுவதை போல் அல்லாமல், வனப்பகுதியில் அவை வாழும் முறையிலேயே மரங்களில் கூடுகள் அமைத்து, தேனீக்களை பராமரித்து வருகிறார். https://www.polimernews.com/dnews/86341/மரங்களில்-…
-
- 0 replies
- 426 views
-
-
பருவநிலை மாற்றம்: தீவிர வெப்பநிலையால் ஆண்டுதோறும் அதிகரிக்கும் ஆபத்து - பிபிசி ஆய்வு பெக்கி டேல் மற்றும் நாஸ்ஸோஸ் ஸ்டீலியானூ தரவுகள் ஆய்வு செய்தியாளர்கள் 14 செப்டெம்பர் 2021, 05:40 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் 1980களில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் பூமி 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டும் போது, அந்தந்த ஆண்டுகளில் மிகவும் அதிகமான வெப்பம் பதிவான நாட்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாக பிபிசி ஆய்வு கண்டறிந்துள்ளது. அந்த வெப்பநிலை முன்பை விட மேலதிக இடங்களில் உண்டாவதாகவும் அந்த ஆய்வில் அறியப்பட்டுள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகளில் 50 டிகிரி வெப்பநிலையை கடந்த நாட்களி…
-
- 0 replies
- 422 views
- 1 follower
-
-
கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் பக்தர்களால் வழங்கப்படும் பூக்களும், மாலைகளும் குப்பைகளாக ஆறுகளிலும், குளங்களிலும், நீர்நிலைகளிலும் கொட்டப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இதனை தடுக்க குஜராத் மாநிலம் சூரத் மாநகராட்சி ஒரு புதுமையான முயற்சியை கையாண்டு வருகிறது. மாநகராட்சியே நேரடியாக கோவில்கள் மற்றும் தர்க்காக்களுக்கு வண்டிகளை அனுப்பி குப்பைகளை சேகரிக்கிறது. அவை முறையே தரம் பிரிக்கப்படுகிறது. பிறகு மண்புழு உர ஆலைகளுக்கு அனுப்பி அங்கே அது மண்புழு உரமாக மாற்றப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 70 டன் உரத்தை தயாரித்துள்ளது சூரத் மாநகராட்சி. இவ்வாறு தயாரிக்கப்பட்ட உரத்தை சூரத்தின் தோட்டக்கலை துறை அங்குள்ள பூங்காக்கள், சாலையோர பூங்காக்களில் பயன…
-
-
- 1 reply
- 421 views
- 1 follower
-
-
எலிசபெத் கோல்பர்ட்: உலகம் ஒருவகையில் உயிரியல் பூங்காவாக மாறிக் கொண்டிருக்கிறது | கனலி அமெரிக்கச் சூழலியல் இதழாளரான எலிசபெத் கோல்பர்ட் (Elizabeth Kolbert) மனிதகுலம் சக உயிரினங்களை எப்படி அழித்தொழிக்கிறது என்றும், அழிவிலிருந்து தான் மீண்டும் கொண்டுவர விரும்பும் ஓர் உயிரினம் பற்றியும் பேசுகிறார். The Sixth Extinction என்ற நூலின் ஆசிரியர் எலிசபெத் கோல்பர்ட்; டைனோசர்களை அழித்தொழித்த பேரழிவை ஒத்த ஒரு பேரழிவு இப்போது நம்மை நெருங்கிக்கொண்டிருப்பதாக இந்நூலில் வாதிடுகிறார். இதற்கு முன்பு ஏற்பட்ட ஐந்து ஊழிப் பேரழிவுகளும் (Mass extinction) இயற்கைச் சூழலால் நிகழ்ந்தவை. ஆனால் இப்போது நிகழ்ந்துகொண்டிருப்பது மனிதனால் உருவாக்கப்பட்டது என்று அவர் நமக்குக் காட்டுகிறார…
-
- 0 replies
- 420 views
-
-
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை செயல்படுத்த இறுதி உடன்படிக்கை ஏற்கப்பட்டது… December 16, 2018 பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை 2020ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்த போலாந்தில் கூடிய பேச்சுவார்த்தையாளர்கள், பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இறுதி உடன்படிக்கையை எட்டியுள்ளனர். முன்னர் கரியமில வெளியேற்றத்தைச் சார்ந்துள்ள பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படும் எனவும் கார்பன் சந்தையின் எதிர்காலம் குறித்த அச்சுறுத்தல்கள் ஏற்படும் எனவும் தெரிவித்தமையினால் கூட்டம் மேற்கொண்டு தொடருமா எனக் காணப்பட்ட நிலையில் இறுதி உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட புதிய விதிகள், உலக நாடுகள் உறுதியேற்றுள்ள கார்பன் வெளியேற்ற கட்டுப்பாட்டை நிச்சயப்படுத்தும்…
-
- 0 replies
- 418 views
-