Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலக்கியமும் இசையும்

இலக்கிய கட்டுரைகள் | நேர்காணல்கள் | கர்நாடக இசை | நவீன இசை

பதிவாளர் கவனத்திற்கு!

இலக்கியமும் இசையும் பகுதியில் இலக்கிய கட்டுரைகள், நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை சம்பந்தமான தரமானதும் அவசியமானதுமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இலக்கியக் கட்டுரைகள், படைப்பாளிகளின் நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை பற்றிய தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தஸ்தயெவ்ஸ்கி - மனங்களின் வித்தகர் | கனலி ’’உலக இலக்கியத்தில் தலை சிறந்த நாவல் டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’என்றுகூறப்பட்டாலும் கூட உலக இலக்கியத்தில் தலை சிறந்த நாவலாசிரியர் யார் என்றுகேட்டால் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கிதான் என்று விமர்சகர்கள் சந்தேகத்துக்கிடமின்றிசொல்லி விடுவார்கள்’’ என்கிறார் எம்.ஏ.அப்பாஸ் [என்றென்றும் வாழும்படைப்புகளும்,படைப்பாளர்களும்]. ரஷ்ய சமூகத்தில் 19 ஆம் நூற்றாண்டில் நிலவிய சமூக பொருளாதார ஆன்மீகப்பின்புலச் சூழலை மனதில் கொண்டு மனித மன அமைப்பை, அதன் வினோதங்களைக்கண்டறிய முயன்ற ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி உலக இலக்கியத் தளத்தில் மிகச்சிறந்த ஒரு மனோதத்துவ அறிஞராக விமரிசகர்களால் அங்கீகரிக்கப்பட்டவர். தானும்கூடக் கற்றுக் கொள்வதற்கான உளவியல் …

  2. காலம் இல்லாமல் ஒரு கதையை எழுத முடியுமா? ஆர். அபிலாஷ் இதென்ன கேள்வி என உங்களுக்குத் தோன்றலாம். ஆனால்கதையின் ஆன்மா காலத்தினுள் புதைந்திருக்கிறது என்றுஅரிஸ்டாட்டில் துவங்கி இன்றைய விமர்சகர்கள் பலர்கருதுகிறார்கள். தமிழ் நாவல்கள், சிறுகதைகளின் வடிவத்தைபுரிந்து கொள்ளவும் இந்த கேள்வி மிகவும் உதவும். நாம்காலத்தைப் பற்றி பேசும் முன்பு காரண-விளைவு தர்க்கம் நம்வாழ்வில் எப்படி செயல்படுகிறது எனப் பார்ப்போம். பேருந்தில் நின்று கொண்டு வரும் போது பக்கத்தில் நிற்பவர்என் காலை மிதித்து விடுகிறார். நான் கோபமாக திரும்பிப்பார்க்கும் முன்பே அவர் “சாரி சார், தெரியாம மிதிச்சிட்டேன்” என்கிறார். “பரவயில்லை”, நான் அமைதியாக…

  3. இலத்திரனியல் சாதனங்கள்,இணையம்,தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களின் வருகையாலும் ஆக்கிரமிப்பாலும் வாசிப்பு இன்று எம்மை விட்டு தொலைவாகிக்கொண்டு இருக்கிறது…. இயந்திரமாய் ஓடும் வாழ்க்கையில் கிடைக்கும் சிறிது நேரத்தையும் தொலைக்காட்சிக்கும் தொலைபேசிக்கும் கொடுத்துவிடுகிறோம்… எழுத்தாளர்கள் அதிக நூல்களை வாசிப்பவர்கள்.. அவர்களின் உரையை கேட்கும்போது அவர்கள் வாசித்த பலநூல்களின் அனுபவங்கள் எமக்கு கிடைக்கும்… புத்தகங்களை வாசிக்க நேரமில்லாதவர்கள் ஆர்வத்தையும் சிந்தனையையும் தூண்டும் எழுத்தாளர்களின் உரையை கேட்கும்போது நம்மை அறியாமலே பல்வேறு புத்தகங்களை நாம் படித்துவிடுகிறோம் அவர்களின் உரைகளினூடு… எஸ் ராவின் அருமையான இந்த பேச்சை நேரம் ஒதுக்கி கேட்பவர்கள் நிச்சயமாக இனி நான் தொடர்ந்து இங…

  4. “கலை என்பது அதுசார்ந்த சமூகத்தின் பிரதிபலிப்பாகவே இருத்தல் வேண்டும்” ஷாலினி சார்ல்ஸ் ஷாலினி சார்ல்ஸ் ஈழத்தின் வடபுலத்தில் உள்ள சாவகச்சேரியைப் பிறப்பிடமாக கொண்டு யாழ்நகரில் வசித்துவரும் ஷாலினி சார்ல்ஸ், வளர்ந்துவருகின்ற இளைய தலைமுறைப் படைப்பாளிகளில் மிகவும் குறிப்பிடத்தக்க பன்முக ஆளுமையுடையவராக எம்மிடையே அடையாளப்படுத்தப்பட்டவர். திரைப்பட நெறியாட்கை, குறும்படத்தயாரிப்பு, சமூக சேவை, யாழ் என்ரர்ரெயிமென்ற், மற்றும் யாழ் அறக்கட்டளை ஸ்தாபகர் என்று பலதுறைகளில் தனி முத்திரை பதித்து இருக்கின்றார் இவரே ஈழத்தின் முதல் பெண் இயக்குனர் என்ற தகமையையும் பெறுகின்றார். இவரது “உயிர்வலி” குறும்படம் விருதை தட்டிச்சென்றது குறிப்பிடத்தக்கது. திரைப்படம், சமூகம், அரசியல் என்று தனது …

    • 3 replies
    • 1.4k views
  5. இவ்வருடம் என் வாசிப்பு - ஆர். அபிலாஷ் என் வாசிப்பு நாய் வாயை வைத்ததைப் போன்றது. தினமும் ஏதாவது ஒரு புதுப்புத்தகத்தில் சில பக்கங்கள் மேய்ந்து விட்டு அதை மறந்து வேறொரு விசயத்துக்குள் போய் விடுவேன். இவ்வருடமும் அப்படித்தான். Storytel ஆப் ஒரு பெரிய கொடுப்பினை - இரவு சில மணிநேரங்களில் அதில் ஒலிப்புத்தகங்களைக் கேட்டு விட்டு தூங்கி விடுவேன். அந்த புத்தகங்களிலும் நான்கைந்து மட்டுமே முழுதாய் முடித்திருப்பேன். நேற்று மைக் பிரெயர்லியின் Art of Captaincy நூலில் சில அத்தியாயங்களைக் கேட்டேன். அதற்கு முந்தின நாள் சக் பலானுயிக்கின் Snuff. அதற்கு முந்தின தினம் வி.எஸ் நைப்பாலில் Enigma of Arrival. அதற்கு முந்தின நாட்கள் “ஜெ.ஜெ சில குறிப்புகள்” நாவலை 80% கேட்டு மு…

  6. சயந்தன் – நேர்காணல் May 4, 2020 நேர்கண்டவர் : அகர முதல்வன் சமகால ஈழ எழுத்தாளர்களுள் சயந்தன் குறிப்பிடத்தகுந்தவர்.”ஆறாவடு” நாவலின் மூலம் வெகுவாக அறியப்பட்ட இவரின் இரண்டாவது நாவலான “ஆதிரை“(தமிழினி பதிப்பகம்) ஈழப்படைப்புக்களில் முக்கியமான வருகை. நாவல்களை மட்டுமல்லாது சிறுகதைகளையும் எழுதும் சயந்தனின் மிக அண்மைய சிறுகதையான “பூரணம்” விவாதத்திற்கு உள்ளானது. ஆதிரைஎன்கிற பெயரில் பதிப்பகம் ஒன்றையும் தொடங்கியுள்ளார். இப்போது தன்னுடைய மூன்றாவது நாவல் எழுதும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். புலம்பெயர் தமிழர்கள் ஓர் அரசியல் சக்தியே கிடையாது நாம் மீண்டும் மீண்டும் தமிழ் (தமிழக) அறிவுலகச் சூழலை மட்டுமே சுழன்று வருவதாக எனக்குத் தோன்றுகிறது. புலம்பெயர்ந்து நீங்கள் வச…

  7. நாம் எதனால் வாசிப்பதில்லை? written by செல்வேந்திரன்June 24, 2021 வாசிப்பதன் பயன்களைப் பற்றி பள்ளியிலும் கல்லூரியிலும் தொடர்ச்சியாக அறிவுரைகள் வழங்கப்பட்டாலும் நம்மால் ஏன் வாசிக்க முடியவில்லை? விரிவான ஆய்வுகள் வாசிப்பைத் தடை செய்யும் சில காரணிகளைப் பட்டியலிடுகின்றன. குடும்பச் சூழல் – உண்மையில் பல குடும்பங்களில் வாசிப்பதற்கான சூழலே இருப்பதில்லை. வறுமை அல்லது எந்நேரமும் பூசலிடுவது அல்லது குடும்பத் தொழில் காரணமாக வாசிப்பதற்கான உளநிலைகள் அமையாமல் இருப்பது. தமிழகத்தில் இருபது சதவீத மாணவர்கள் கல்லூரிக்கு வருவதே கடுமையான வறுமைக்கு மத்தியில்தான். சில மாணவர்கள் பகுதி நேரமாக வேலை பார்த்தால்தான் கல்வியைத் தொடர முடியும் நிலையில் உள்ளார்கள். அவர்களால், உள்ளபடியே வாசிக்க இயல…

    • 28 replies
    • 2.8k views
  8. மாற்றம் என்பது தனிமனித மாற்றம் மட்டுமே தான் – வா.மணிகண்டன் (நேர்காணல்) June 5, 2020 நேர் கண்டவர் : ஜீவ கரிகாலன் ‘கண்ணாடியில் நகரும் வெயில், என்னை கடவுளாக்கிய தவிட்டுக்குருவி’ என்கிற கவிதைத் தொகுப்புகளும், ‘சைபர் சாத்தான்கள், ரோபோ ஜாலம்’ என்கிற தொழில்நுட்ப நூல்கள், லிண்ட்சே லோஹன் S/o மாரியப்பன் எனும் சிறுகதைத் தொகுப்பு, மசால் தோசை 38 ரூபாய் என்கிற அனுபவக் கதைகள் தொகுப்பு மற்றும் மூன்றாம் நதி ஆகிய நாவல் வெளிவந்துள்ளன. இவரது வலைப்பூ நிசப்தம்.காம் தமிழில் அதிகம் வாசிக்கப்படும் வலைப்பூக்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அவரது அறக்கட்டளைப் பணிகள் அவரது வெளிப்படைத்தன்மையால் (தணிக்கைசெய்யப்பட்ட அறப்பணிகளை பொதுவில் வைப்பது) அதிகம் கவனிக்கப்பட்டவை. கல்வி மற்றும் மருத்துவத்…

  9. அரபு ஈச்சை மரங்கள் காத்தான்குடியில் பெரிதாக வளர்ந்துவிட்டன: சக்கரவர்த்தி நேர்கண்டவர்: அனோஜன் பாலகிருஷ்ணன் சக்கரவர்த்தி கிழக்கிலங்கையில் -------த்தீவில் பிறந்தவர். ஆயுதப்போராட்டம் வலுவடைந்த காலத்தில் குழந்தைப் போராளியாக டெலோ இயக்கத்தில் இணைந்து பின்னர் வெளியேறியவர். கனடாவுக்கு புலம்பெயர்ந்த பின்னர் மும்மரமாக எழுத்துச் செயற்பாட்டில் ஈடுபட்டார். யுத்தம் மீதான எதிர்ப்பே அவரது கதைகளில் மண்டிக்கிடக்கிறது. யுத்தத்தின் நேரடி சிதைவான மானுட அழிவு கொடுக்கும் வாழ்க்கை மீதான விரக்தி அவரது கவிதைகள் முழுவதும் விரவியிருக்கிறது. சக்கரவர்த்தி முஸ்லீம் தமிழ் சமூக உறவுப் பிளவின் மீது தீராத கவலை கொண்டவர். இவருடைய ‘என்ட அல்லாஹ்’ கதையை ஈழத்தின் தலைசிறந்த அரசியல் கதைகளில் ஒன்றாகத் தயக்கம…

  10. ஐரோப்பிய கலாச்சாரத்தில், இசை, செழிப்பு மிகுந்த, மற்றும் பாரம்பரிய ரீதியிலான சிறப்புகள் அடங்கியதான ஒரு முக்கியமான இடத்தை வகிக்கின்றது. இது பாரம்பரியமான சாஸ்திரிய இசை ( classical music ), மற்றும் மக்கள் இசை ( modern pop music ) என வகைப்படுத்தப்படுகின்றது. ஐக்கிய இராச்சியம் முழுவதிலுமே, இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு வசதியாக ஏராளமான இசை அரங்குகள் அமைந்திருப்பதுடன், அவற்றில் வருடம் முழுவதும் இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. பல நூற்றாண்டுகளாகவே, பாரம்பரியமான சாஸ்திரிய இசை, ஐக்கிய இராச்சியத்தில் பிரபலம் மிக்கதாக விளங்குகின்றது. ஹென்றி புர்செல் (1659 - 95 ) ( Henry Purcell ) வெஸ்ட் மினிஸ்டர் அபேயில் ( Westminster Abbey ) ஆர்கன் இசைக்கருவியை ( organ ) வாசிப்பவர…

  11. பேய்ச்சி நாவலுக்குத் தடை: ஒரு முழுமையான விளக்கம் by ம.நவீன் • January 1, 2021 http://vallinam.com.my/version2/wp-content/uploads/2020/06/peychi-10015359-550x550h.jpeg 19.12.2020 அதிகாலை நான்கு மணிக்கு எழுந்தபோதுதான் ‘பேய்ச்சி’ நாவல் தடை செய்யப்பட்டதை அறிந்துகொண்டேன். சில இணையத்தளங்களில் செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் இந்த கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரம் வரை பேய்ச்சி நாவல் தடை குறித்த எந்த அறிவிப்பும் உள்துறை அமைச்சிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக எனக்கு கிடைக்கவில்லை. ஊடகச்செய்திகள் வாயிலாகத்தான் நானும் அறிந்துகொண்டிருக்கிறேன். அப்போது நான் ஈப்போவில் உள்ள என் மாமா வீட்டில் இருந்தேன். உடன் போப்பியும் இருந்தான். என்னை விட்டுப் பிரிந்திருப…

  12. உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை உன்ன நெனச்சு நெனச்சு உருகிப் போனேன் மெழுகா நெஞ்ச உதச்சி உதச்சி பறந்து போனா அழகா? யாரோ அவளோ? தாலாட்டும் தாயின் குரலோ ராஜா ஆரம்பமே ராஜாவோட ஸ்டைலிஷ் ஆரம்பமா இருக்கு. சித் ஸ்ரீராமோட குரல் இந்தக் காலகட்டத்துக்கான காற்றா வருடுது. கபிலன் கூச்சலற்ற வார்த்தைகளால இசை பேச வேண்டிய இடத்துல சொற்களை மௌனிச்சு அதனூடா சொற்களைப் பேசவைக்கிற லாவகத்தோட எழுதிருக்கார். அதுவும் ராஜாவோட தனித்துவம் எப்பவுமே ஒரு பாட்டை ஆரம்பிக்கும் போது ஆர்ப்பாட்டம் இருக்கவே இருக்காது. ஒவ்வொரு கதவாத் திறந்துகிட்டே போய் ஒரு பழக்கமான மூலையில் லைட் ஸ்விட்ச்சை ஆன் செய்ததும் அது வரைக்குமா…

    • 0 replies
    • 1.6k views
  13. இளையராஜாவும் சினிமாவுக்குப் போன சித்தாளும் "எனது எழுத்துக்கள் எல்லாமே எவர் எவர் மனத்தையோ உறுத்தும். அந்த உறுத்தல் நல்லது. அதற்கு நானா பொறுப்பு? 'பொழுதுபோக்கு, கொஞ்சம் நேரம் மகிழ்ந்திருத்தல்' என்ற ஓட்டை வாதங்களையே இவர்கள் ஓயாமல் பதிலாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நம் 'பொழுதுபோக்கும்' 'கொஞ்சம் நேரம் மகிழ்ந்திருத்தலும்' ஏன் இப்படிச் சீரழிந்து கிடக்கிறது என்றும் இதில் சிக்காமல் உயர்வு காண வேண்டும் என்றும் ஒரு சிலருக்கேனும் தோன்றுகிறபோது அதற்காவது மரியாதை தர வேண்டாமா?" தமிழகமே எம்ஜியார் எனும் மந்திரத்தால் கட்டுண்டு கிடந்த போது சமூகத்தின் மீது பேரன்பு கொண்ட கலைஞனாக ஞானாவேசத்தோடு, ஆனால் மிகக் குன்றிய இலக்கியத் தரத்தோடு, ஜெயகாந்தன் எழுதிய 'சினிமாவுக்குப் போன சித்தாளு' கத…

  14. தமிழ் சமூகத்தால் இளையராஜா பெற்றதென்ன? தந்ததென்ன? -சாவித்திரி கண்ணன் மேல்தட்டு வர்க்கத்தின் நலனுக்கான ஐ.ஐ.டியில் இசைப் பயிற்சிகள் தரவுள்ளாராம் இளையராஜா! இளையராஜா என்ற இசைஞானி உருவானது எப்படி? அவரது வளர்ச்சியின் முழுமையான பின்னணி என்ன? இன்றைக்கு அவரைப் பயன்படுத்திக் கொள்ளத் துடிப்பவர்கள் யார்? என்ன நடந்து கொண்டிருக்கிறது..? ‘மேஸ்ட்ரோ இளையராஜா இசை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்’ அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், சென்னை ஐஐடி மற்றும் இளையராஜா மியூசிக் மற்றும் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இடையே கையெழுத்தாகியுள்ளது. மிகப் பிரம்மாண்டமாக கட்டி எழுப்பப்படவுள்ள இந்த சிறப்பு மையம், ஒரு ஆண்டில் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் …

    • 2 replies
    • 524 views
  15. போரும் வாழ்வும் – அகரமுதல்வன் கதைகளை முன்வைத்து: ஆர். காளிப்பிரஸாத் அகரமுதல்வனின் காதல் விவரிப்புகள் சுவாரசியமானவை. ஒரு காலத்திற்குப் பிறகு தமிழில் காதல் கதைகள் எழுதுவது நின்றே விட்டது. காதல் அனுபவங்களை கவிஞர்கள் தங்கள் மிகைக் கூற்றுகளுக்கென எடுத்துக்கொள்ள இயல்பான காதல் வர்ணனைகள் உரைநடையில் குறைந்து போயின. காதலும் வீரமும் தமிழரின் பண்பு என்று பள்ளிக்கூடத்தில் படித்திருந்தாலும் இலக்கியத்தில் அவை பாரதிதாசன் காலத்தோடு நின்றுவிட்டன. காதல் வீரம் தியாகம் துரோகம் ஏதும் சமகால இலக்கியங்களில் பெரிதும் இடம்பெறுவதில்லை. வணிக இலக்கியம் அதற்கான ஊடகமாக ஆகியது. அடுத்து திரைப்படங்களிலும் அவை மேலும் நுண்மையாக்கப்பட்டன. தீர அலசப்பட்டன. அவ்வாறே ஒருகட்டத்தில் கேலியாகவும் ஆயின. விடுதலைப் ப…

  16. பூவாக என் காதல் தேனூருதோ தேனாக தேனாக வானூருதோ கண்ணம்மா கண்ணம்மா கண்ணிலே என்னம்மா ஆகாயம் சாயாம தூவானமேது ஆறாம ஆறாம காயங்கள் ஏது கண்ணம்மா கண்ணம்மா கண்ணிலே என்னம்மா உன் காதல் வாசம் என் தேகம் பூசும் காலங்கள் பொய்யானதே தீராத காதல் தீயாக மோத தூரங்கள் மடை மாறுமோ வான் பார்த்து ஏங்கும் சிறு புல்லின் தாகம் கானல்கள் நிறைவேற்றுமோ நீரின்றி மீனும் சேறுண்டு வாழும் வாழ்விங்கு வாழ்வாகுமோ கண்ணம்மா கண்ணம்மா கண்ணிலே என்னம்மா ஆகாயம் சாயாம தூவானமேது ஆறாம ஆறாம காயங்கள் ஏது மீட்டாத வீணை தருகின்ற ராகம் கேட்காது பூங்கான்தலே ஊட்டாத தாயின் கணக்கின்ற பால் போல் என் காதல் கிடக்கின்றதே காயங்கள் ஆற்றும் தலைக்கோதி தேற்றும் காலங்கள் கைகூடுதே தொடுவானம் இன்று ந…

    • 2 replies
    • 627 views
  17. 🎶 🎵சிம்பொனி என்றால் என்ன? 🎵 🎶 🎵 ஒரு கதை அல்லது ஒரு சம்பவம் அல்லது ஒரு நிகழ்ச்சியை இசை வடிவத்தில் நான்கு பகுதிகளாக சொல்வதற்கு பெயர்தான் சிம்பொனி எளிமையாக சொல்லவேண்டும் என்றால் சிம்பொனி என்பது ஒரு ஆர்கஸ்ட்ரா (Orchestra) அவ்வளவுதான். 🎵 உலகில் பல வகையான ஆர்கஸ்ட்ரா இருக்கிறது. அதில் முக்கியமானவை: 1. சேம்பர் ஆர்கஸ்ட்ரா (Chamber Orchestra) 2. சிம்பொனி ஆர்கஸ்ட்ரா (Symphony Orchestra). 🎵 16ம் நூற்றாண்டு வரை இசையும் பாடலும் ஒன்றாக கலந்தே இருந்தது. இசையை மட்டும் தனியாக கேட்க முடியவில்லை. அதனால் இசையின் ஆழத்தை அறிந்து கொள்வதற்காக பாடல் இல்லாமல் இசையை மட்டும் கேட்பதற்காக உருவாக்கப்பட்டது. 🎵 அது தான் சிம்பொனி! இதற்கு சரியான வடிவத்தைக் கொண்டுவந்து இதை புகழ் பெற வைத்தவர் Father of Sy…

  18. ஆயிரத்தொரு சொற்கள் June 14, 2019 ஷோபாசக்தி நான் ஒன்றரை வயதிலேயே நன்றாகப் பேசத் தொடங்கிவிட்டதை, எனது அம்மா சரியாக ஞாபகம் வைத்திருக்கிறார். ஆனால் நான் எத்தனை வயதில் எழுதத் தொடங்கினேன் என்பது அவருக்கோ எனக்கோ சரியாக ஞாபகமில்லை. பள்ளிப் பருவத்திலிருந்தே எழுதிக்கொண்டிருக்கிறேன். பாடசாலையில் நாங்களே நடிக்கும் ஓரங்க நாடகங்களைத்தான் முதலில் எழுதினேன். 1981 இனவன்முறையில், எங்கள் கிராமத்திலிருந்து நான்கு கிலோ மீற்றர்கள் தூரத்திலிருந்த யாழ்ப்பாணப் பொது நூலகம் இலங்கை அமைச்சர்களின் உத்தரவின்பேரில் போலிஸாரால் முற்றாக எரியூட்டப்பட்டபோது எனக்குப் பதின்மூன்று வயது. 90 000 நூல்களும் பழந்தமிழ் ஓலைச் சுவடிகளும் வானம் நோக்கி எரியும் சுவாலையை, அந்த இரவில் எங்கள் கிராமத்தின் கட…

  19. எழுத்தாளர் இளங்கோவின் மெக்சிகோ நாவல் வாசிப்பு அனுபவம். காதலும் நம்பிக்கையும் நிறைய வாழ்வை நேசித்த அவனின் அவளின் கதை. வாசித்து முடித்த பிறகும் மனசுக்குள் துயர் நிறைய மெக்சிகோ அலைகிறது.

    • 0 replies
    • 557 views
  20. கண்டராதித்தனின் கவிதைகள்: ஒரு பார்வை சுயாந்தன் June 10, 2018 தமிழில் நவீன கவிதையின் தற்கால முகத்தை எழுத்து என்ற சிற்றிதழ் மூலம் அழுத்தமாக உருவாக்கியவர்கள் கா.நா.சு மற்றும் சி.சு.செல்லப்பா ஆகிய இருவரும்தான். பிரமிள், நகுலன், பசுவையா (சுரா), கா.நா.சு முதலியவர்கள் எழுதிய கவிதைகளே இன்றைய நவீன கவிஞர்களுக்கும் கவிதைகளுக்கும் முன்னோடியாகவும் இருந்துள்ளது. இருந்து வருகிறது. 'புத்தியால் எழுதப்படுபவைதான் புதுக்கவிதை' என்று ஜெயகாந்தனும் 'புத்தியாலும் எழுதப்படுபவையே புதுக்கவிதை' என ஜெயமோகனும் ஒரு இடத்தில் கூறியிருந்தனர். ஜெயகாந்தன் அறிவார்ந்த தன்மையே நவீன கவிதைக்குப் போதும் என முன்வைக்க ஜெயமோகன் அதுவும் தேவை என்று குறிப்பிட்டுள்ளார். கவிதை பற்றிய ஜெயமோகனின் இந்தக் கருத்த…

  21. பாலுணர்வை அறிதலும் எழுதுதலும் - ஜெயமோகன் ஹாவ்லக் எல்லிஸ் சமீபத்தில் ஓர் இளம் எழுத்தாளர் எழுதிய நாவலை வாசித்தேன். பாலியல் நிகழ்ச்சிகளை விரிவாக எழுதியிருந்தார். ‘துணிந்து’ எழுதியிருப்பதாக அவர் எண்ணிக்கொண்டிருந்திருக்கலாம். இதற்குமுன் இல்லாதவகையில் எழுதியிருப்பதாக பெருமிதம் கொண்டிருக்கவும்கூடும். இளம்வாசகர்கள் சிலர் அதை வாசித்து “ஆகா!” போட்டிருக்கலாம். அப்படி ஒருவர் கவனம் பெற்றுவிட்டால் பலர் உருவாகி வருகிறார்கள். தமிழ்நாட்டில் பாலியல்வரட்சி மிகுதி. ஆகவே என்றுமே பாலியலெழுத்துக்கு வாசகர்கள் அதிகம். அத்துடன் பெரும்பாலான வாசகர்கள் பாலுறவு மட்டுமே வாழ்க்கை என எண்ணிக்கொண்டிருக்கும் முதிரா இளமையில் வாசிக்க வருகிறார்கள். அவர்கள் இவ்வகை எழுத்துக்களையே தெரிவுசெய்கி…

  22. யாழ் களத்தில் ஒருகாலத்தில் அதிகம் கருத்துக்கள் எழுதிய கருத்தாளர் இரா. சேகர் (யாழ் இணையம் தமிழ்ச்சூரியன்) ஒரு சிறந்த இசையமைப்பாளர். அவர் பற்றிய நிகழ்ச்சி. கேட்டு பாருங்கள்.

  23. குணா கவியழகனை வாசித்தலும், புரிந்துகொள்ளுதலும் வாசன் குணா கவியழகன் இப்போது அதிகம் எழுதுகிறார். அவரது படைப்புக்கள் குறித்த ஆரவாரங்களும் இப்போது கொஞ்சம் அதிகமாகிவிட்டன. இப்போது அவரது 5 வது நாவலினையும் அவர் எழுதி முடித்துவிட்ட நிலையில் அவர் குறித்த சர்ச்சைகளும் அவர் மீதான விமர்சனங்களும் கூட இன்னும் கொஞ்சம் அதிகமாகிவிட்டன. ஒரு படைப்பாளிக்கு செய்யப்படும் அநீதிகளிலேயே மிகப்பெரியது அவனை ஒற்றை வரியில் ஒரு படிமத்திற்குள் அடக்கி அவன் மீதான ஒரு ஆழமான முத்திரையை பதித்து விடுவதுதான். அவன் எத்தனை ஆயிரம் படைப்புகளை வெவ்வேறு தளங்களில் படைத்திருந்தாலும் இத்தகைய ஒற்றை வரிப் படிமத்தில் அவனைக் கூண்டில் அடைக்கும் செயலானது உலகளாவிய ரீதியில் காலாகாலமாக நடக்கின்ற ஒரு செயற்பாடு.…

  24. “ஈழத்து இலக்கியவெளியில் காத்திரமான இலக்கிய மரபு இருந்ததில்லை.“ எனச்சொல்பவர்கள் யார் ..?நேர்காணல் -லெ முருகபூபதி உலகமகாயுத்த காலங்களில் வெடிக்காத, மண்ணில் ஆழப்புதையுண்ட குண்டுகளை வெடிக்கச்செய்வதும் அல்லது வலுவிழக்கசெய்வதும் அவ்வப்பொழுது நாம் பத்திரிகைகளில் படிக்கின்ற விடயங்கள். அது போலவே ஒரு நிகழ்வில் எழுத்தாளர் ஜெயமோகன் சொல்லிய கருத்தொன்று சரியாக மாதம் ஆறைக் கடந்த நிலையில், ஈழத்துக்கவிஞர் கோ நாதன் அந்த உரையினை சமூக வலைத்தளங்களில் பகிர, ஜெயமோகனது கருத்துக்கு எதிராக சமுமுகவலைத்தளங்கள் அனல்கக்கின. ஆனால் அவரது உரையினைக் கூட்டிக்கழித்து விட்டு உரையின் மையச்சரடைப் பார்த்தல் அவர் சொல்ல வந்த கருத்தில் தவறுகள் இருப்பதாகத் தெரியவில்லை. முப்பதாண்டுகளுக்கு மேலாக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.