இலக்கியமும் இசையும்
இலக்கிய கட்டுரைகள் | நேர்காணல்கள் | கர்நாடக இசை | நவீன இசை
இலக்கியமும் இசையும் பகுதியில் இலக்கிய கட்டுரைகள், நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை சம்பந்தமான தரமானதும் அவசியமானதுமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இலக்கியக் கட்டுரைகள், படைப்பாளிகளின் நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை பற்றிய தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
204 topics in this forum
-
மஜ்னு முதல் மாமாக்குட்டி வரை சி.சரவணகார்த்திகேயன் காதல் - எத்தனை இனிமை ததும்பும் ஒரு சொல்! எவ்வளவு இன்ப மயமான ஒரு செயல்! காதலின் ஆதார குணம் பரஸ்பரத் தன்மை. ஆனால் காதல் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரி அனுபவத்தை அளிக்கிறதா? ஆணின் காதலும் பெண்ணின் காதலும் ஒன்று போலவேதான் நமது சமூகத்தால் அணுகப்படுகிறதா? காதலில் இருக்கிறதா சமத்துவம்? வரலாறு நெடுகிலும், புராணப் பக்கங்களிலும், இலக்கிய இடுக்குகளிலும் ஆண்களின் காதலானது கொண்டாடப்படாதது மட்டுமின்றி கண்டுகொள்ளப்படாதது மட்டுமல்லாது, கேலிக்கும் கிண்டலுக்கும் வசைக்கும் வெறுப்புக்கும் உள்ளாகியேதான் வந்திருக்கிறது. ஆணின் காதல் என்பது அவனது இதர வெற்றிகளைக் காட்டி அடையும் ஒரு பரிசாகவே காலங்காலமாகவே இ…
-
-
- 1 reply
- 376 views
-
-
மனிதர்கள் எண்ணிக்கை விட கதைகள் அதிகம்: எஸ்.ராமகிருஷ்ணன் மின்னம்பலம் மழைக்காலங்களின் காலை நேரங்கள் அலாதியானவை. அந்தக் கதகதப்பையும் விநோத மனநிலையையும் தனக்குள் பொதித்து வைத்திருப்பவை எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துகள். விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணற்றைச் சேர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள், 80களில் தனது எழுத்துப் பயணத்தைத் தொடங்கியவர். இவரது முதல் கதை ‘பழைய தண்டவாளம்’ கணையாழியில் வெளியானது. அதைத் தொடர்ந்து, தீவிரமாக எழுதத் தொடங்கிய இவர், புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான ஆக்கங்கள், பயணம், உலக சினிமா குறித்த அறிமுகம், திரைக்கதை எனப் பல தளங்களிலும் தனது எழுத்தை விஸ்தரித்துக்கொண்டே இருப்பவர். கரிசல் இலக்கியத்தின் மரபில் வந்தவரான எஸ்.ராம…
-
- 0 replies
- 1.8k views
-
-
மயங்குகிறாள் ஒரு மாது – சி.சரவணகார்த்திகேயன் கடந்த காலங்களில் ரமணிசந்திரன் எழுத்துகள் பற்றி நான் சமூக வலைதளங்களில் விமர்சனக் கருத்துகள் சொல்லி கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்து இருக்கிறேன். அவரது வாசக பலம் அப்படி. கிட்டத்தட்ட ஒரு தற்கொலைப் படை மாதிரியான விசுவாசமான வாசகிகள் திரள். நான் முன்வைத்த கருத்துகள் பெரும்பான்மை பகடியானவை என்பதால் இது பற்றிய என் எண்ணங்களைக் கொஞ்சம் சீரியஸாக எழுதிப் பார்க்கலாம் எனத் தோன்றியது. அவ்வகையில் இது ஒரு சுயபரிசீலனை. ரமணிசந்திரன் 1970லிருந்து எழுதிக் கொண்டிருக்கிறார். படைப்புலகில் அவருக்கு இது பொன்விழா ஆண்டு. அதற்கு முதலில் அவருக்கு வாழ்த்துகள். 2014ல் அவள் விகடன் பேட்டியில் அது வரை 157 நாவல்கள் எழுதியிருப்பதாகச் சொல்கிறா…
-
- 2 replies
- 1.8k views
-
-
மஹாகவியின் கிராமம் ஜூன் 27, 2021 –எம்.ஏ.நுஃமான் இக்கட்டுரை செங்கதிரோனை ஆசிரியராக் கொண்டு கொழும்பு தமிழ் சங்க மாதாந்த ஏடாக வெளிவந்த ‘ஓலை’ சஞ்சிகையின் 17வது இதழில் (2003) வெளிவந்தது. மஹாகவியின் 50 வது நினைவு தினத்தையொட்டி (ஜுன் 20) இக்கட்டுரை வெளியிடப்படுகின்றது. மஹாகவியின் பெரும்பாலான கவிதைகள் யாழ்ப்பாணக் கிராமிய வாழ்வைக் கருப்பொருளாகக் கொண்டவை. கிராமியத்தை மஹாகவிபோல் தமிழ்க் கவிதையில் கொண்டுவந்த பிறிதொரு கவிஞன் இல்லை எனலாம். இந்த வகையில் இவருக்கு அண்மையில் நிற்கக்கூடியவர் நீலாவணன் ஒருவர்தான். ஆனால், கிராமியத்தைப் பொறுத்தவரை அளவிலும் தன்மையிலும் மஹாகவி அவரை மிஞ்சி நிற்கிறார். மஹாகவியின் முக்கியமான பெரும்பாலான கவிதைகளில் யாழ்ப்பாணக் கிராமப்புற வாழ…
-
- 0 replies
- 886 views
-
-
மாற்றம் என்பது தனிமனித மாற்றம் மட்டுமே தான் – வா.மணிகண்டன் (நேர்காணல்) June 5, 2020 நேர் கண்டவர் : ஜீவ கரிகாலன் ‘கண்ணாடியில் நகரும் வெயில், என்னை கடவுளாக்கிய தவிட்டுக்குருவி’ என்கிற கவிதைத் தொகுப்புகளும், ‘சைபர் சாத்தான்கள், ரோபோ ஜாலம்’ என்கிற தொழில்நுட்ப நூல்கள், லிண்ட்சே லோஹன் S/o மாரியப்பன் எனும் சிறுகதைத் தொகுப்பு, மசால் தோசை 38 ரூபாய் என்கிற அனுபவக் கதைகள் தொகுப்பு மற்றும் மூன்றாம் நதி ஆகிய நாவல் வெளிவந்துள்ளன. இவரது வலைப்பூ நிசப்தம்.காம் தமிழில் அதிகம் வாசிக்கப்படும் வலைப்பூக்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அவரது அறக்கட்டளைப் பணிகள் அவரது வெளிப்படைத்தன்மையால் (தணிக்கைசெய்யப்பட்ட அறப்பணிகளை பொதுவில் வைப்பது) அதிகம் கவனிக்கப்பட்டவை. கல்வி மற்றும் மருத்துவத்…
-
- 0 replies
- 645 views
-
-
-
- 3 replies
- 996 views
-
-
முப்பட்டைக்கண்ணாடியினூடே jeyamohanDecember 17, 2024 (1) அண்மையில் எகிப்து சென்றிருந்தபோது அங்கிருக்கும் பிரம்மாண்டமான ஆலயங்களினூடாக நடக்கும் நேரத்தில் எண்ணிக்கொண்டேன். அவை வெறும் ஆலயங்கள் மட்டும் அல்ல. மாபெரும் நூல்களும் கூட. காவியங்கள் என்றே சொல்லத்தக்க அளவுக்கு பிரம்மாண்டமானவை. அவற்றின் சித்திர எழுத்துக்கள் முழுமையாகவே படிக்கப்பட்டுவிட்ட நிலையில், இன்று மானுடத்தின் தொல்வரலாறு குறித்து நமக்கிருக்கும் விரிந்த சித்திரமே அங்கிருந்து உருவாகி வந்ததுதான். ‘அழியாத சொல்’ எனும் சொற்சேர்க்கை எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. அவை கல்லில் பொறிக்கப்பட்டமையால் அழிவற்றதாகின்றனவா? இல்லை. எந்த நூலிலும், எங்கும் எழுதப்படாததனாலேயே கூட இந்திய வேதங்கள் அழிவின்மையை அடைந்து இன்…
-
- 3 replies
- 480 views
-
-
மேடைவதைகள், சில நெறிகள். ஜெயமோகன் February 19, 2022 (Peter Saul ) இலக்கிய கூட்டங்கள் பற்றிய ஒரு செய்தியை அண்மையில் வாசித்தேன். மறைந்த குமுதம் நிறுவனர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை பற்றி அமுதசுரபி ஆசிரியரும் எழுத்தாளர் சங்கத்தலைவருமாக இருந்த விக்ரமன் ( வேம்பு) ஒரு கட்டுரையில் குறிப்பிடும்போது அவர் தமிழின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவர் என்றார். பிறரும் அதை பதிவு செய்திருக்கிறார்கள். கல்கி மறைந்தபோது எஸ்.ஏ.பி. ஆற்றிய உரை தமிழின் தலைசிறந்த உரைகளில் ஒன்று என்று அவருடைய மகன் ராஜேந்திரன் தன் குறிப்பொன்றில் பதிவு செய்திருக்கிறார். விவேகானந்தர், பகவத் கீதை இரண்டிலும் பெரும் ஈடுபாடு கொண்டவராகிய எஸ்.ஏ.பி. விவேகானந்தர் நூற்றாண்டின்போது தமிழகத்தின் பல ஊர்களுக்குச் சென்…
-
- 0 replies
- 545 views
-
-
மேட்டிமைவாதமா? jeyamohanDecember 26, 2023 அன்புள்ள ஜெ உங்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அடிக்கடி சமூகவலைத்தளங்களில் பயன்படுத்தப்படும் சொல் ’மேட்டிமைவாதம்’ என்பது. அதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். உண்மையில் என்னைப்போன்ற சாமானியர்களுக்கே இந்தப்பிரச்சினை உள்ளது. சமூகத்தையோ அல்லது சுற்றியிருக்கும் நண்பர்களையோ எதாவது குறைசொன்னால் உடனே மேட்டிமைவாதம் என்கிறார்கள். வரும் ஜனவரி 1 அன்று மெரினாவில் குடித்துவிட்டு பைக் ஓட்டி கூச்சல்போட திட்டம்போட்டு பட்ஜெட் போடுகிறார்கள். அது ஒரு வகை கேனத்தனம் என்று சொன்னால் உடனே மேட்டிமைவாதம் என்று சொல்லிவிடுகிறார்கள். இதைச் சொல்பவர்கள் ஒன்றரை லட்சம் ரூ கொடுத்து ஐஃபோன் வாங்குபவர்கள். முப்பதாயிரம் ரூபாய்க்கு ஷூ வாங்குபவர்கள். ஆனால் ஒரு பு…
-
-
- 13 replies
- 1.5k views
-
-
யாரும் நிரந்தரமாகத் தோற்பதுமில்லை, தோற்கடிக்கப்படுவதுமில்லை – கருணாகரன் May 17, 2020 நேர்கண்டவர்: அகர முதல்வன் ஈழத்து கவிஞர்களுள் கருணாகரனுக்கு ஒரு தனித்துவ இடமுண்டு. போர்நிலத்துள் தன்னுடைய வாழ்வையும் எழுத்தையும் தகவமைத்துக்கொண்டவர்களுள் ஒருவர்.ஆயுதப் போராட்ட காலத்தில் வெளியான “வெளிச்சம்” கலை இலக்கிய பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தவர். “ஒரு பொழுதுக்காக காத்திருத்தல்”, “பலி ஆடு”, “ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள்” போன்ற கவிதைத் தொகுப்புக்கள் மூலம் அறியப்பட்டவர். இவரின் “வேட்டைத் தோப்பு” சிறுகதை தொகுப்பு வெளியாகியிருக்கிறது.கவிஞர் எஸ்.போஸ் படைப்புக்களை தொகுத்தவர்களுள் இவரும் ஒருவர். சமீபத்தில் புலம் பதிப்பகம்,புது எழுத்து பதிப்பகம் வாயிலாக “உலகின் முதல் ர…
-
- 2 replies
- 710 views
-
-
யாழ்ப்பாணச் செலவு பெருமாள்முருகன் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கை சென்று திரும்பிய திரு.வி.க. தம் பயண அனுபவத்தை ‘எனது இலங்கைச் செலவு’ என்னும் தலைப்பில் விரிவாக எழுதினார். தமிழ்ப் பயண இலக்கியத்தில் முக்கிய இடம்பெறும் கட்டுரை அது. அதில் ‘ஈண்டுச் செலவு என்னுஞ் சொல்லைப் பொருட் செலவென்னும் பொருளில் பெய்தேனில்லை. தரை – நீர்ச் – செலவு என்னும் பொருளில் அச்சொல்லைப் பெய்தேன்’ (ப.57) என்கிறார். செலவு என்னும் சொல் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் பயின்றுவருகிறது. செல்லுதல் – பயணம் என்னும் பொருளுடையது. தலைவன் பொருள் தேடிப் பிரிந்து செல்லுதலைச் ‘செலவு’ என்றும் தலைவியின் துயர் கண்டு அவன் தம் பயணத்தை நிறுத்திவிடுதலைச் ‘செலவழுங்குதல்’ என்றும் அகப்பொருள் இ…
-
- 12 replies
- 1.6k views
- 1 follower
-
-
யுத்தம் கதைகளை உருவாக்கி இரகசியமாக வைத்திருக்கிறது March 2, 2023 ஷோபாசக்தி படைப்பு தகவு பிப்ரவரி -2023 இதழில் சுருக்கப்பட்டு வெளியாகியுள்ள நேர்காணலின் முழுமையான வடிவம் இங்கே. நேர்கண்டவர் :அம்மு ராகவ் -சினிமா, இலக்கியம், போராளி இவற்றில் எந்தவொன்றில் ஷோபாசக்தி நிறைவு பெறுகிறார்? முதலில், நான் போராளி இல்லை என்பதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். என்னுடைய பதின்ம வயதுகளில் நான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆயுதப் பயிற்சி பெற்ற உறுப்பினனாக இருந்தேன். ஆனால், சனநாயக மத்தியத்துவமற்ற, இறுக்கமான அந்த அமைப்பில் தலைமையின் எண்ணங்களையும் கட்டளைகளையும் நிறைவேற்றும் ஆயிரக்கணக்கானோரில் நானும் ஒருவன் மட்டுமே. விசுவாசத்தாலும் இயக்கக் கட்டுப்பாடு என்ற கா…
-
- 1 reply
- 945 views
-
-
ராஜன் குறை என்பவர் யார்? | ஜெயமோகன் July 4, 2020 உங்கள் கடிதத்துக்கு நன்றி.நானே யோசித்த விஷயங்கள்தான் என்றாலும் அதை ஆணித்தரமாக ஒருவர் சொல்லும்போது ஒரு நிறைவு வருகிறது. இன்னொன்றையும் கேட்க விரும்புகிறேன். ராஜன் குறை என்பவர் தொடர்ச்சியாக உங்களைப்பற்றி எழுதிவருகிறார். ஒரு அப்செஷன் கொண்டவர் போல. அவரைப்பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன? ஏன் நீங்கள் அவரை பொருட்படுத்துவதே இல்லை? எம்.ராஜேந்திரன் *** அன்புள்ள ராஜேந்திரன், எழுதவேகூடாது என நினைத்திருந்தேன், ஆனால் எழுதியாகவேண்டும் என்ற நிலை. 1988 என நினைக்கிறேன், கோணங்கியின் கல்குதிரையில் நான் நக்சலைட் கவிதைகள் என்ற தொகுதியிலிருந்து சில கவிதைகளை மொழியாக்கம் செய்து பிரசுரித்தேன். அப்போதுதான் ராஜன்குற…
-
- 1 reply
- 1.1k views
-
-
ரி.எம். கிருஷ்ணா: கர்நாடக இசையின் கலகக்குரல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ உலகளாவிய ரீதியில் சிந்தனைகளை மாற்றி, மாற்றங்களைக் கொண்டு வந்த அனைத்துக்கும் கலகக்குரல்களே காரணம் ஆகும். அச்சமூட்டுவனவாயும் சங்கடத்தை ஏற்படுத்துவனவாயும் உள்ள குரல்களே, காலப்போக்கில் மாபெரும் மாற்றங்களின் அச்சாணியாகி உள்ளன. அவ்வகையில் கலகக்குரல்கள் வரவேற்கப்பட வேண்டியவை. அவை மாற்றத்துக்கான குரல்கள்; அடக்கப்பட்டவர்களின் குரல்கள்; கவனத்தை வேண்டிநிற்போரின் குரல்கள்; எல்லாவற்றுக்கும் மேலாக, நியாயத்துக்கான குரல்கள் என ஓங்கி ஒலிக்கின்றன. இக்குரல்கள் …
-
- 0 replies
- 423 views
-
-
சீனக்கவிதைகள் குறித்த விரிவான உரை ஒன்றை மொழிபெயர்ப்பாளர் ரெட் பைன் நிகழ்த்தியிருக்கிறார். இவரது இயற்பெயர் பில் போர்ட்டர். (Bill Porter/Red Pine,) அமெரிக்கரான இவர் ஜென் குருவாகச் செயல்பட்டு வருகிறார். இவரது உரை தற்போது இணையத்தில் காணக்கிடைக்கிறது. பண்டைய சீனக்கவிதைகள் மற்றும் ஞானநூல்களின் மொழிபெயர்ப்பாளரான இவர் வரலாற்றில் சீனக்கவிதைகளின் இடம் குறித்த சிறந்த அறிமுகத்தைத் தருகிறார். Burton Watson மொழியாக்கம் செய்த சீனக்கவிதைகளை வாசித்திருக்கிறேன். அவரது தொடர்ச்சியை போலவே ரெட் பைனும் செயல்படுகிறார். இந்த உரையில் சீனவரலாற்றுக்கும் கவிதை மரபுக்குமான தொடர்பு, சீனாவில் விவசாயிகள் எவ்வாறு கவிஞர்களைக் கொண்டாடினார்கள். கவிஞர்களுக்கான நினைவிடத்தை உருவாக்கினார்கள். ஆயிரம…
-
- 0 replies
- 996 views
-
-
லண்டன் தமிழ் இலக்கியக் குழுமம் அன்புள்ள ஜெ, இங்கிலாந்தில் வசிக்கும் , தமிழ் இலக்கிய வாசிப்பில் ஆர்வம் உள்ள நண்பர்கள் இணைந்து ‘லண்டன் தமிழ் இலக்கிய குழுமம் ‘ என்ற அமைப்பை ஜுன் ஒன்றாம் தேதி தொடங்குகிறோம். இந்த அமைப்பின் நோக்கம் வாசிப்பில் ஆர்வமிருக்கும் நண்பர்கள் ஆர்வம் உள்ள மற்ற நண்பர்களுடன் கலந்துரையாட வாய்ப்புகளை ஏற்படுத்துவதும், சில புத்தகங்களை தேர்ந்தெடுத்து அவற்றை பற்றிய உரையாடல்கள் மற்றும் விமர்சன கூட்டங்களை ஒருங்கிணைப்பதுமாகும். தொடக்க விழாவன்று விமர்சனம் மற்றும் கலந்துரையாடலுக்கு லண்டனில் வசிக்கும் மூன்று எழுத்தாளர்களின் புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவை: சிறுகதை தொகுப்பு அனோஜன் பாலகிருஷ்ணன் – பச்சை நரம்பு சிவா…
-
- 0 replies
- 909 views
-
-
நாம் எல்லோரும் ஒவ்வொரு வகையில், வாழ்க்கையில் என்றோ நம்வசம் இருந்து நாம் இழந்துபோன சில விடயங்களை தேடிக்கொண்டே இருப்போம் என நினைக்கிறேன். அப்படி நான் பல பத்து வருடங்களாக (1991 இல் இருந்து) தேடிக்கொண்டிருக்கும் விடயம் ஒரு காலத்தில் ஈழத்தில் மிக பெரும் ஞனரஞ்சக நகைச்சுவை படைப்பாக ஒவ்வொரு தேத்தண்ணி கடையிலும் கேட்ட “லூஸ் மாஸ்டர்” நகைச்சுவை ஒளிநாடா பதிவு. 2015 வாக்கில் யாழிலும் எழுதினேன். இன்றுவரை இந்த நாடகத்தின் ஆடியோ கசட்டை யாரும் எங்கும் தரவேற்றியுள்ளதாக தெரியவில்லை. ஆனால் பின்னர் தேடிப்பார்த்ததில் - 2014 இலேயே இதை எழுதி, நடித்த நாவாலியூர் ஐசக் இன்பராஜா ஜேர்மனியில் வசித்து காலாமாகினார் என்ற சோழியன்( 🙏) அண்ணாவின் பதிவும், அந்த திரியில் பொயட் ஐயா உட்பட பலர…
-
- 11 replies
- 1.5k views
- 1 follower
-
-
வட்டார மொழிகளின் அரசியலை எதிர்கொள்ளுதல் by vithaiAugust 1, 2021 பன்னிரண்டு வயது வரை யாழ்ப்பாணத் தமிழைப் பேசக்கூடிய கிராமச்சூழலில் வளர்ந்தோம். ‘கெற்றப்போல்கள்’ எனப்படும் கவண்களால் குருவிகளை அடிப்பது விளையாட்டு, பொழுதுபோக்கு. ஊரில் வாய்மொழியாக வந்து சேர்ந்த நம்பிக்கை ஒன்றிருந்தது. ‘தோட்டக்காட்டான் குருவியடிச்சு ரத்தத்தை கெற்றப்போலில் தடவினால் நல்லா அடிக்கும்’. அந்தக் குருவி கத்தும் ஓசை ஒருவகை இரட்டைச் சந்தத்தைக் கொண்டிருக்கும் நாங்கள் அதன் சத்தத்தைப் பின்பற்றி அவ் இரட்டைச் சத்தத்தை ’தோட்டக்காட்டான் – வாடா பாப்பம்’ என்று கூவிக்கொண்டே குருவியைத்தேடி அடிப்போம். இது வட்டாரப் பேச்சு மொழியின் மொழியிலும் மன அமைப்பிலும் பிள்ளைகளுக்கு சமூகம் வழங்கியிருக்க கூடிய மொழி…
-
- 0 replies
- 461 views
-
-
இனப்படுகொலையைச் சந்தித்த இனத்தைச் சார்ந்த ஒருவனின் கண்களிற்கு குருதிச் சிவப்புநிற மாலைச் சூரியனை பார்க்க நேர்கையில் எத்தகையை காட்சிகளை அது தோற்றுவிக்கும்? என்பதனை வரிகளில் நான் எழுதி இருக்கிறேன், மகாகலைஞன் சித்தன் ஜெயமூர்த்தி இசையமைத்து பாடியிருக்கிறார், நந்திக்கடற்கரையில் மெளனித்துப் போன வீரயுகவரலாற்றை மாலைச் சூரியனின் சிவப்பு நிறத்திற்குள்ளால் பார்க்கிறேன்..
-
- 6 replies
- 875 views
- 1 follower
-
-
வரலாற்றை மீட்டுருவாக்கும் நாவல்கள் 2019 - ந.முருகேசபாண்டியன் · கட்டுரை பூமியில் மனித இருப்பு, கடந்த காலம் என்ற நினைவுகளின் தொகுப்பாக விரிந்து தொடர்கிறது. தலைமுறைகள்தோறும் செவிவழிக் கதைகளாகச் சொல்லப்படுகிற சம்பவங்கள், கடந்த காலத்தைப் பதிவாக்கிட முயலுகின்றன. நினைவுகள் ஒருபோதும் அழியாதவை என்ற நம்பிக்கையுடன், மனிதர்கள், சமகாலம் குறித்த பேச்சுகளை உருவாக்குகின்றனர். மனிதனைச் சமூகத்துடன் இணைக்கிற கண்ணியான மொழி, நினைவுவெளியில் பேச்சுகளையும், நடந்து முடிந்த நிகழ்வுககளின் வழியாகக் காத்திரமான அரசியலையும் சமூகத் தொடர்ச்சியையும் கட்டமைக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித வாழ்க்கையின் வரையறையையும் சமகாலத்தின் போக்குகளையும் கண்டறிந்து ஆட்சி செய்த அதிகார வர்க்கத…
-
- 4 replies
- 1.9k views
-
-
வளர்கலை: வயலின்(Violin) – பிடில்(Fiddle) June 17, 2025 — மங்கள கௌரி விராஹநாதன் (இசைப்பட்டதாரி ஆசிரியை)— ஐரோப்பிய சங்கீதத்திலிருந்து நமக்கு கிடைத்துளள ஒரு இசைக்கருவியே வயலினாகும். இதற்கு பிடில் என்று பெயருண்டு. பண்டைக் காலத்தில் தனூர் வீணை என்ற பெயருடன் விளங்கியது எனவும் பின் வயலின் என்ற உருவில் அமைந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேல் நாட்டுக்கும் கீழைத்தேயத்தும் பொருத்தமான நரம்புக் கருவியாகும். ஓர் இடத்திலிருந்து இன்னோரிடத்திற்கு இலகுவாக எடுத்துச் செல்லக்கூடிய தந்தி வாத்தியமாகும். வயலின், வயலின் செலோ, வயோலா ஆகியன மேல்நாட்டு இசைக்கருவிகளென பொதுவாகக் கூறப்பட்டு வந்துள்ளது. (1786 – 1858) ஆண்டுகளில் கீழ்நாட்டில் வாசிக்கப்பட்டது. பழைய காலத்து பிடில்கள் பல்வேறு வடிவ…
-
- 1 reply
- 250 views
-
-
புலம்பெயர்ந்த எங்களின் அடுத்த தலைமுறைப் பிள்ளைகளின் கலைப்பயணம். Chumma Podcast Tkay & Agash ஆகியோருடனான வுனீத்தாவின் இசைப்பயணம் பற்றிய தமிழ் நேர்காணல்.
-
- 6 replies
- 1.2k views
-
-
வாசிப்பின் வலிமை: -வேர்ஜீனியா மாநில நீதிமன்றத்தில் ஒரு வித்தியாசமான தீர்ப்பு June 12, 2019 என். செல்வராஜா – நூலகவியலாளர், இலண்டன் அமெரிக்காவின் வடக்கு வெர்ஜீனியா (Northern Verginia) மாநிலத்தில் ஒரு அமைதியான கிராமம் ஆஷ்பேர்ண். இங்குள்ள கறுப்பினத்தவர்களுக்கான சிறிய பள்ளியொன்றின் சுவர்களில் செப்டெம்பர் 2016இல், சில விஷமிகளால் இனவாத சுலோகங்கள் இரவோடிரவாக எழுதப்பட்டிருந்தன. இச்செயலானது அங்கு தலைதூக்கியிருந்த கறுப்பினத்தவருக்கு எதிரான KKK இனவாத இயக்கத்தின் கைவரிசையெனவே ஆரம்பத்தில் அம்மக்கள் நம்பினர். ஆனால் அந்தக் கிறுக்கல்களுக்கிடையே டைனோசர்களினதும் வேறு சில்லறைத்தனமான அடையாளங்களையும் கூர்ந்து அவதானித்த பாதுகாப்புத்துறையினர், இலகுவில் உண்மைக் குற்றவாளி…
-
- 2 replies
- 761 views
-
-
எந்த ஒரு வார்த்தையை வாசிக்கும் பொழுதும் வலமிருந்து இடமாகவோ அல்லது இடம் இருந்து வலமாகவோ எப்படி வாசித்தாலும் எழுத்துக்கள் மாறாமல் ஒன்றுபோல் வார்த்தைகளை அமைத்துப் பாட்டை இயற்றியுள்ளார் ஒரு பாடலாசிரியர்.
-
- 0 replies
- 592 views
-
-
விதி சமைப்பவர்கள்தான் இலக்கியத்தில் இயங்க முடியும்: காலம் செல்வம் அருளானந்தம் - நேர்கண்டவர்: அனோஜன் பாலகிருஷ்ணன் காலம் செல்வம் அருளானந்தம் அவர்களுடனான இந்த நேர்காணல் தொலைபேசி வழியாக உரையாடிப் பெறப்பட்டது. செல்வம் அருளானந்தம் பகிடி உங்களது எழுத்துகளில் மட்டுமல்ல உங்களது பேச்சிலும் உள்ளது. துயரம் நிறைந்த அகதிவாழ்க்கை இதனைக் கற்றுத் தந்ததா? அல்லது இளம் பருவத்திலிருந்து உங்களோடு வருவதா? இதிலிருந்து நேர்காணலை ஆரம்பிப்போம். அது இயல்பானது என்று தான் நான் நினைக்கின்றேன். நான் ஒரு இடத்திலும் கற்றுக்கொள்ளவில்லை. அப்படி கதைக்கிற ஆட்களும் மிகக் குறைவு. எவ்வளவு பிரச்சினையான விடயத்தையும், எவ்வளவு துயரமான விடயத்தையும் கொஞ்சம் நகைச்சுவையாகச் சொன்னால் நல்லது என்று த…
-
- 1 reply
- 836 views
-