கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
773 topics in this forum
-
-
- 0 replies
- 1.1k views
-
-
-
-
- 4 replies
- 1.1k views
-
-
உயிர்த்த தினம் அன்று சிலுவையில் சிதறி கிடந்த சிவப்பு இரத்தத்தில் எதுகுமே தெரியவில்லை எவன் முஸ்லீம் எவன் கிறிஸ்தவன் எவன் இந்து எவன் கறுப்பு எவன் வெள்ளை என்று எல்லாமே ஒரே நிறமாக இருந்தது . பா .உதயகுமார் .
-
- 0 replies
- 1.1k views
-
-
யுத்தமும் அழிவும் அநீதியும் அவலமும் ஆக்கிரமிப்பும் பசியும் பட்டினியுமாக மனிதம் மறைந்துபோன உலகத்தின் மேனி சீழ் பிடித்து ஒழுகிக்கொண்டிருக்கும் போது உண்மைகளையும் சத்தியங்களையும் எழுதுங்கள் உலகத்தின் ஒரு மூலையில் ஒரு ஒரமாக நின்று அழும் குழந்தை எப்படியாவது வாழ்ந்து தான் ஆகவேண்டும் என்ற ஒரு சிறு நம்பிக்கையுடன் .
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈழத்து சிறுமியின் டயறி மே 18ம் நாள் மே 18 ம் நாள் காலை பொழுது ஒன்றில் கையில் இரத்தங்களுடன் கடந்து போகின்றன பேரிரைச்சலோடு இராணுவ வண்டிகள் சாம்பல் மேடுகளை தாண்டியபடி அந்த ஊழியின் கடைசி தினம் அன்று பாதி பாண் துண்டை என் தம்பியின் கையில் கொடுத்து விட்டு நானும் தம்பியுமாக அம்மாவை பார்த்தபடி அந்த பதுங்கு குழியில் என்று தொடங்கும் அவளது டயரி குறிப்பு அன்று ஒரு நாள் அந்த நாசி படைகளுக்கு அஞ்சியபடி அந்த அவுஸ்வைஸ் சிறையில் இருந்து எழுதிய சிறுமி அன்னா பிராங்கின் யுத்த கால டயரி குறிப்புகள் போலவே இருந்தன .
-
- 0 replies
- 1.1k views
-
-
"தாய்மை" "காதல் உணர்வில் இருவரும் இணைய காதோரம் மூன்றெழுத்து வார்த்தை கூற காதலன் காதலி இல்லம் அமைக்க காமப் பசியை மகிழ்ந்து உண்ண காலம் கனிந்து கருணை கட்டிட காணிக்கை கொடுத்தாள் 'தாய்மை' அடைந்து!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 1.1k views
-
-
தாலாட்டுப் பாடிய தாயும் எங்கே? தானாக வந்த உறவுகள் எங்கே? தயவு படைத்த நெஞ்சமும் எங்கே? தாண்டி வந்த இளமை,செழுமை,இன்பம் போனது எங்கே? திரும்பி பார்த்தேன் எல்லாம் எங்கே? எங்கே? சென்றது என்றே!!!! மார்பில் சுமந்த செல்வங்கள் எங்கே? மாய்ந்து தேடிய செல்வங்கள் எங்கே? மாட்டைப் போல ஓடியோடி உழைத்தவையெல்லாம் எங்கே? எங்கே? காணவே இல்லை தேடியும் பார்த்தேன் எல்லாம் எங்கே?எங்கே? சென்றது என்றே!!!!! ஆடியடங்கிடும் வாழ்க்கையினிலே ஆழ்ந்த அன்பு,பாசம் அனைத்தும் போனது எங்கே? அருகே இருந்த சுற்றமும் நட்பும் அழிகை இடத்துக்கு முற்றும் துறந்து போனதை அதிர்ந்து பார்த்தேன் எல்லாம் எங்கே? எங்கே? சென்றது என்றே!!!!! நாட்பட நாட்பட மனம் நல்லவை நாடும் மெய்ப் பொருள…
-
- 6 replies
- 1.1k views
-
-
தேவைகளுக்கு என்றும் இல்லை முற்றுப்புள்ளி தேடல்கள் அதிகமாகும் போது தேவைகள் அதிகமாகுகின்றன தேவைக்கதிகமாக தேடியதெல்லாம் தேவையில்லையெனத் தூக்கி எறியப்பட்ட பின்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது இந்தத் தேவைகள்...! நேற்று பணத்தின் தேவைக்காக அலைந்தவன் இன்று பிணமாகக் கிடக்கின்றான் நேற்று சுகத்தின் தேவைக்காக அலைந்தவன் இன்று சுமையாகக் கிடக்கின்றான் நிம்மதிக்கான தேவையே இங்கு தேவைப்படுகின்றது ஆனால் நிம்மதி மட்டும் நிற்காமல் செல்கின்றது...! எதற்காக இந்தத் தேவை...? எவருக்காக இந்தத் தேவை...? புரியாத இந்தத் தேவை முடியாதோ இந்தத் தேவை...? முடிந்து விடும் ஒரு நாளில்... மனிதனைத் தேடும் அந்த மண்ணறையின் தேவை ஒரு நாள் தீர்ந்து விடும…
-
- 8 replies
- 1.1k views
-
-
வெறுப்பு! *********** அரசமரக் கன்றுகளை அழித்துக்கொண்டிருந்தான் அந்தத்தேசத்து மனிதனொருவன் எத்தனையாண்டுகள் வாழும் மரத்தை ஏன்.. அழிக்கிறாய்யென்றான் வழிப்போக்கன். எனக்கும் கவலைதான் என்னசெய்வது வருங்காலப் பிள்ளைகளும் வாழவேண்டுமே என்று பெரு மூச்சுவிட்டான் அந்த மனிதன். அன்புடன் -பசுவூர்க்கோபி.
-
-
- 8 replies
- 1.1k views
-
-
இன்றைய நாள்(31.05.2020) 39 ஆண்டுகளுக்கு முன் கல்வி ஒளி தந்த யாழ் நூலகத்தின் கடசிநாள். எரியூட்டி எரித்த எதிரிகளும் வெட்கப்படும் நாள். உயிரோடு எரிந்த யாழ் நூலகம்..! 1959இல் ஆலமரமாய் யாழ்நகர் நடுவில் ஆயிரக்கணக்கில் ஓலைச்சுவடிகள் கோப்புக்களோடு.. தொண்நூற்றி ஏழாயிரம். தமிழ்,ஆங்கில.. தொன்மைநிறைந்த புத்தகக் குவியல்கள் எங்களின்.. கல்விக்கண்ணை திறந்த கோயிலாய் காலம் முழுதும்-அந்த ஒளியில் வாழ்ந்தோம். ஏசியாவின் முதல்தரப் படிப்பகம் என்ற பெருமையும் எமக்குக் கிடைத்தது. தமிழனின் உயிரோ கல்விதான் என்று கண்டான் அன்றைய ஆட்சியின் கொடிய…
-
- 2 replies
- 1.1k views
-
-
BLACK JULY 1983. கறுப்பு ஜூலை 1983 BLACK JULY 1983. கறுப்பு ஜூலை 1983 . 1983ம் ஆண்டு கலவரம் தொடங்குவதற்கு ஒரு சில நாட்களின் முன்னம்தான் எனது யப்பானியத் தோழி ஆரி யுடன் தமிழகத்தில் இருந்து கொழும்பு திரும்பியிருந்தேன். கொழும்பில் சி.ஐ.டி தொல்லை இருந்தது. அதிஸ்டவசமாக கலவரத்துக்கு முதன்நாள் முஸ்லிம் கிராமமான மல்வானைக்குப் போயிருந்ததால் உயிர் தப்பியது. 1983ம் ஆண்டுக் கலவரத்தைப் பதிவுபண்ணிய இக் கவிதை வெளிவந்த நாட்களில் பேராசிரியர் பெரியார்தாசன் 100க்கும் அதிகமாக பிரதி பண்ணி தமிழகத்தில் பலருக்கு கிடைக்கச் செய்திருக்கிறார். இது அதிகமாக வாசிக்கப் பட்ட எனது கவிதைகளில் ஒன்று. உங்கள் கருத்துக்களை வரவேற்க்கிறேன். ஜெயபாலன் உய…
-
- 1 reply
- 1.1k views
-
-
படம் சொல்லும் வரிகள் (உயிப்பு) **************************** கல்லறையில் மாண்டாலும் கனிதருவோம் கயவர் எமையழித்தாலும் துளிர் விடுவோம். நல்லவர்கள் ஒருபோதும் இறப்பதில்லை-இந்த நானிலத்தில் அவர் புகழோ குறைவதில்லை. -பசுவூர்க்கோபி.
-
- 4 replies
- 1.1k views
-
-
"C:\Users\Karu\OneDrive\Desktop\Queen Elisabeth.jpg" அன்னை எலிசபெத் இன்னுயிர் நீத்தனள் அன்னை இரண்டாம் எலிசபத் தன்னைக் கவர்ந்தனன் காலன் ஐக்கிய ராச்சிய அரசியாக ஆண்டுகள் எழுபதைக் கடந்து முக்கிய உலகத் தலைவியாக முடியுடன் வாழ்ந்தவள் அன்னை அநீதிகள் நிறைந்த உலகினில் தன்றன் ஆற்றலால், அன்பினால் பலத்தால் தனிப்பெரும் சிறந்த தலைவியாய் மிளிர்ந்த தாயவள் எலிசபத் அரசி இனியொரு தலைமை இங்கிலாந்திற்கு இப்படியமையுமா அறியோம் இறைவனின் தயவால் இவ்வுலகிருந்த இனியதாய் மறைந்தனள் அந்தோ பொதுநலவாயத் தலைமையை ஏற்று பொறுப்புடன் கடமைகள் ஆற்றி அதிகரித்திட்ட அகதிகட்குதவி ஆற்றிய சேவைகள் பலதாம் …
-
- 9 replies
- 1.1k views
-
-
"இரு கவிதைகள்" [1] "கடவுள் கேட்கிறார்" "பாலை ஊற்றி என்னை குளிப்பாட்டுகிறாய் காலை மாலை எனக்கு படைக்கிறாய் சாலை ஓரத்தில் என் மகன் மாலை வரை இருக்க தவிக்கிறான் !" "பட்டும் பகட்டும் எனக்கு எதற்கடா? தட்டும் படையலும் எனக்கு எதற்கடா? கொட்டும் பாலை அவன் குடிக்கட்டும் சொட்டும் தேன் வயிற்றை நிரப்பட்டும்!" "தடல் புடலாக என்னை பூசிக்கிறாய் கடல் கடந்து யாத்திரை போகிறாய் குடல் வற்றி அவன் சாகிறான் உடல் சிதறி அவன் வாடுகிறான்!" "எங்கும் என்னை தேடி அலையாதே இங்கு கொட்டும் கறந்த பாலை அங்கு வறியவன் வாயில் கொட்டு அங்கு அவன் சிரிப்பில் நானே !" [2] "பிள்ளையார் கோவிலில் ஒரு திருவிழா" "பிள்ளையார் கோவிலில் ஒரு திரு…
-
- 0 replies
- 1.1k views
-
-
"ஒதுங்கி மூலையில் மலர்ந்த ரோசா" "ஒதுங்கி மூலையில் மலர்ந்த ரோசா ஒளியில் மிளிர்ந்து அழகைக் காட்டி ஒலி எழுப்பும் வண்டைப் பார்த்து ஒய்யாரி கேட்குது நீ யார் ?" "துள்ளி பாயும் காட்டு மான் துணையுடன் மறைவில் ஒளிந்து இருந்து துரத்தி வந்த புலியைப் பார்த்து துணிந்து கேட்குது நீ யார் ?" "வாமச் சொரூப கோழிக் குஞ்சு வாட்டம் கொண்டு நிழலில் பதுங்கி வானத்தில் வட்டமிடும் கழுகைப் பார்த்து வாக்குவாதம் செய்யுது நீ யார் ?" "மாணவி ஒருவள் கண்ணீர் வடிய மாதா வாக்கிய குருவை நொந்து மாழை மடபெண் வெட்கத்தை விட்டு மாசுபடுத்தியவனைக் கேட்குது ந…
-
- 0 replies
- 1.1k views
-
-
கலைந்த ஆடையை உடுத்திக் கொள்ள மறுக்கிறது அப்பால்... சற்று தாமதமாக வந்தால் பொங்கி வழிகிறது முழு ஆடை... தெரியாதுபோல் சில நேரம் தெரிந்ததே தெரியாமல் போகிறது பலநேரம். .. சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 1.1k views
-
-
கன்னத்தில் முத்தமிட்டு ஈழ அவலத்தை குறைத்திரையில் இட்டு 'மணி' பார்த்த மணியருக்கு கல்கிக் கடலில் மூழ்கி முத்தெடுக்க ஈழத்திட்டின் வன்னிக் கோடியின் அனுராதபுரம் கரைதட்டி இருக்கு. அண்மைக் காலத்தே புலிக் கொடி ஒன்று உயிராயுதமாய் அனுராதபுரம் புகுந்து நிஜக் கதை படைத்த போது தூசி மண்டிக்கிடந்த தமிழகத் திரைக் கண்கள்.. கல்கிக் கிழவனின் கற்பனையில் வந்த பொன்னியின் செல்வனால் வன்னிச் செல்வன் முன் திறந்து கிடக்குது..!! மகிந்தனை வீழ்த்திய மகிமையை பேசுது சோழ வாரிசுகள்... அனுராதபுரமோ தமிழனை வீழ்த்திய மகிந்தவின் கதை பேசி சிங்கள வீரம் காட்டுது. …
-
- 1 reply
- 1.1k views
-
-
கில்லாடி நாடு கெட்டுப் போனாலும் நமக்கென்ன என்றே தன் வீடு மட்டும் வாழ விதிவகுத்த கில்லாடி தொண்ணூறைத் தாண்டி தொண்டு கிழமானாலும் மண்ணாசை மாறாதெம் வாழ்வழிக்கும் கில்லாடி ஈழத்தமிழர்களை இனக்கொலைக்கு ஆளாக்கி வாழத்தன் சொந்தம், வழிவகுத்த கில்லாடி. மந்திரிகளாக்க மகள் மகன்மார் பேரர்களை செந்தமிழ் ஈழத்தைச் சிதைத்திட்ட கில்லாடி …
-
- 2 replies
- 1.1k views
-
-
History Repeats Itself வரலாறுகள் சுழண்டு கொண்டு தான் இருகின்றன அன்று ஒரு நாள் ஈழத்து கிழவன் ஒருவன் சமஸ்டி கேட்டான் இதே காவி உடை கண்டியில் இருந்து வந்த ஊர்வலத்தால் கடைசி வரை துன்பம் தொடர்ந்தது இன்று ஒரு நாள் இன்னும் ஒரு கண்டி ஊர்வலம் இது முஸ்லிமுக்கு மட்டுமல்ல ஈழ தமிழனுக்கும் இது ஒரு எச்சரிக்கை இந்துவும் முஸ்லிமும் இனி இணைந்தால் ஒழிய இலங்கை பெரும் தேசியம் எப்பவும் அடங்காது இரண்டு மாநிலமும் இணைந்த தீர்வு ஒன்று தான் இந்துவுக்கு முஸ்லிமுக்கும் பாதுகாப்பாகும் .
-
- 0 replies
- 1.1k views
-
-
Sri Lanka has withdrawn from a UN resolution that would allow war crimes allegedly committed during the country's civil war to be investigated. கண்ணை மூடி பால் குடித்த பூனை அத்தனை பொய்களையும் ஐ நா மனித உரிமை மன்றில் பேசிய அமைச்சரின் உரை பூனை கண்ணை மூடியபடி பால் குடிப்பது போல் இருந்தது அழகான ராஜதந்திர வார்த்தைகளும் அபிவிருத்தி என்றும் அரசியல் சாணக்கியத்தில் ஒளித்து இருந்தபடி இனவாதி பேராசிரியர் பீரிஸ் எழுதிக் கொடுத்ததை பெருமையாக வந்து வாசித்துப்போனார் அமைச்சர் அறம் அன்பு அடுத்தவர் துன்பம் எதையுமே அறியாதவர் இறுதியில் அந்த புத்தனின் தத்துவத்தை சாட்சிக்கு அழைத்து அந்த புத்தரையும் ஐ நா சபையையும் அவமதித்தது போல்…
-
- 4 replies
- 1.1k views
-
-
புயல்களும், உழவனும்..! ****************** உழுதவன் விதைக்கும் காலம் உணர்விலே மகிழ்ச்சி பொங்கும் அழுதவன் வறுமையெல்லாம் அடங்குமே என நினைத்தான். வரம்பு நீர் உயற்ச்சி கண்டு வளர்கின்ற நெற்பயிரின் அருகிலே.. அதிகாலை தொட்டு ஆதவன் மறையும் மட்டும் உடலது உயிராயெண்ணி ஒன்றியே வாழ்ந்தான் வயலில். கடலலை அடித்தாற் போல காற்றிலே பயிர்கள் ஆட உளமது நிறைந்துழவன் உச்சத்தில் மகிழ்ச்சி கண்டான். நிறைமாத கெற்பனி போல் நெற்பயிர் குடலை தள்ள வறுமையும் கடனும் நீங்கி-நல் வாழ்கையை கனவில் கண்டான். மனைவிக்கு சாறியோடு மகளுக்கு வரனும்தேடி மகனுக்கு கல்வியூட்ட மனதினில் எண்னி வாழ்ந்தான். அடை மழை கட்டி வானம்-புரவி அடித்தது புயலாய் நாட்டில் பெர…
-
- 9 replies
- 1.1k views
-
-
எச்சரிக்கைக் காட்சிகளால், சிறகுகள் வெட்டப்பட்டு, நசுக்கப்பட்டபோதும், எங்களை அடக்கவென்று, வெறுப்பின் மேலாதிக்க விஷ வன்மங்கள் கொட்டி வரையப்பட்ட, சட்ட மூலங்கள் நிறைவேற்றப்பட்ட போதும், நித மரணத்தால் மட்டுமே ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய், குற்றமேதுமின்றி இன்றுவரை பலர், சிறைவாயிலை நிறைத்துக்கொண்ட போதும், எங்களுக்கு எதிராக அவர்களின் கதவுகள், இன்னும் மூடப்பட்டே இருக்கின்றன. தொலைந்துபோன தன் பிள்ளையை, கைதுசெய்யப்பட்ட தன் தந்தையை, கையளிக்கப்பட்ட தன் தமையனை, இன்னும் தேடியபடி, நீதிக்காக, அவர்தம் விடுதலை வேண்டி, எத்தனை நாட்கள் தவம் கிடக்கிற…
-
- 6 replies
- 1.1k views
-
-
வரும் “காலத்தை” வரவேற்போம்! **************************** எழுபது ஆண்டுகளாக இருள் மூடிக்கிடந்த எம் தேசத்தில்-ஒரு சிவப்புச் சூரியனின் வெண்மைக் கதிர்களின் வருகையின் வேகம். இது.. பழமைகள் பொசுக்கி புதுமைகளின் பொற்கால விடிவின் ஆரம்பக்காலம். விலை மதிப்பில்லாத உயிகளை விழுங்கிய இராட்சத முதளைகளின் முடிவுக்காலம். மக்களின் உதிரத்தை உறிஞ்சி அவர்களின் வரி பணத்தில் கோட்டை கட்டி கொடி உயர்த்திய கோமான்கள் குடிசை வாழ்வுக்கு திரும்பப் போகும் எதிர் காலம். பழய.. ஆட்சியாளர்களின் வயல்கள் எல்லாம் மறைத்து விதைக்கப்பட்ட தங்க மூட்டைகளு…
-
-
- 4 replies
- 1.1k views
-
-
வெடிசுமந்தோரே! -------------------- நீங்கள் தமிழ் ஈழத்தை மடிசுமந்தீர் ஆதலினால் வெடிசுமந்தீர்! நாம் உம்மை எம் மனம் சுமந்தோம்! தமிழ் ஈழத்தை அடைவதற்கு உங்கள் பெயர் சொல்லி உறுதி கொள்வோம்! அன்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
- 0 replies
- 1.1k views
-
-
இன்றும் அன்றும்..! ************** இன்டர் நெட்டை திறந்தாலே ஏதோ ஒரு விளம்பரம் இடை குறைப்பா எழில் அழகா.. தொந்தியா, வயிற்றில் தொல்லையா தூக்கமா-அது இல்லையா சுகரா,கொழுப்பா, சூம்பலா,வீங்கலா இதுபோன்று எத்தனை எத்தனை.. அத்தனைக்கும் மருந்து அவரவர் சொல்லி அதைசெய்,இதைசெய் அப்படிச் செய் இப்படிச்செய்-என ஆயிரம் அறிவுரை இந்தபழத்தை இதுக்கு சாப்பிடு என்றொருவர் இதைசாப்பிடதே இந்த நோய்க்கு என்றொருவர்.. படுக்கும் முறை நடக்கும் முறை பச்சிளம் குழந்தைக்கு பாலூட்டும் முறை சொல்லிச் சொல்லியே சுகநலம் உள்ளவரும் ச…
-
- 2 replies
- 1.1k views
-