கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
779 topics in this forum
-
கவிதையோடு வாழ்பவனும்.... கவிதையாக வாழ்பவனும்.... கவிஞன்........! கண்டதை எழுதுவதும்.... கண்டபடி எழுதுவதும்.... கவிதையில்லை....... கண்ணியமாய் எழுதுபவன்..... கவிஞன்........! காதலால் ............. கவிதை வரும் என்பதை.... காட்டிலும்........... காதலோடு கவிதை...... எழுதுபவன் உண்மை..... கவிஞன்..........! சமூக ...... சீர்திருத்தத்துக்காய்..... கவிதை எழுதுவதைவிட.... சமூகத்திலிருந்து...... சீர்திருந்தி வாழ கவிதை..... கவிதை எழுதுபவன்..... கவிஞன்...........! …
-
- 5 replies
- 4k views
-
-
ஆபாசமென தமிழ்நாட்டு சஞ்சிகைகள் சில எனது “பாவைக் கூத்து” கவிதையை பிரசுரிக்க முடியாது என்றார்கள். தயவு செய்து இக்கவிதையை வாசித்து உங்கள் கருத்தை எழுதுங்கள்.பத்திரிகையாளர்கள் துணிச்சலுடன் பிரசுரிக்க விரும்பினால் பிரசுரியுங்கள். , பாவைக் கூத்து - வ.ஐ.ச.ஜெயபாலன் * அம்ம வாழிய தோழி, யார் அவன் என்று வினாக்குறியானாய் அறிந்திலையோடி? * வீட்டுக் காவல் மறந்து சந்து பொந்து மரங்களில் எல்லாம் காலைத் தூக்கி நின்றாடி பெட்டை நாய்களுக்கு மூத்திரக் குறுஞ்சேதி எழுதி அலையுமே அந்த சீமை நாயின் பேர் இல்லத்து வம்பனடி அவன். போயும் போயும் அவனையா கேட்டாய்? * பொம்மலாட்டப் பாவையைபோல் ஒருவர் சொல்லுக்கு ஒருவர் ஆடிய இனிய நம் நாட்கள் போய்விடும் தோழி. உன் மழலை அ…
-
- 2 replies
- 1.6k views
-
-
ஒரு முறை பிறந்து பல முறை இறந்து பட்டப் பகலில் பார்வை இழந்து பசியோடு அலைகிறோம் பார்பவன் யாரும் இல்லை போர் ஒன்று வந்து புயல் போல் வீச அங்கும் இங்குமாக அலைகிறோம் ஆற்றில் கிடக்கும் ஆல இலைபோல மனிதப் பிறவியை மதிக்காத இந் நாட்டில் மனிதப் பிறவியே வேண்டாமையா என்று மனது உறுத்துகிறது மறுயென்மம் இருந்தால் பிறப்போம் நல்ல மனிதர்களாக …
-
- 32 replies
- 5.2k views
-
-
எல்லா இரவுகளையும் போல சில இரவுகள் இருப்பதில்லை வானில் அலையும் ஒற்றைக் குருவியின் துயர் அப்பிய குரலை போல சில இரவுகள் காரணமின்றி துயரால் நிரம்புகின்றன எங்கோ அறுந்து போன ஒரு இழை ஞாபகத்தில் வந்திருக்கலாம் என்றோ காணாமல் போன நண்பனின் குரல் மீண்டும் கேட்டு இருக்கலாம் அல்லது எப்போதோ எவருமற்று தனித்து விடப்பட்டதின் துயரம் தீண்டி இருக்கலாம் புரண்டு படுக்கையில் நிரடிப் போகும் ஒரு நொடி நினைவுத் துளியால் சில இரவுகள் காரணமின்றி துயரத்தில் மூழ்கி விடுகின்றன ரயில் பயணங்களில் இரா வேளையில் குளிர் காற்றிடை பாடும் விழியற்ற பாடகனின் குரலில் வழியும் வேதனையைப் போல இருக்கின்றன இந்த இரவுகள் பின்னிரவொன்றில் விளக்கற்ற வீதி ஒன்றில் விற்று முடிந்து செ…
-
- 12 replies
- 3.5k views
-