கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
648 topics in this forum
-
"என்னுயிர் தோழியே!" பழமை வாய்ந்த, அத்தியடி ஸ்ரீ சிதம்பர நடராஜா வீரகத்திப் பிள்ளையார் கோவிலும் அதனுடன் அமைந்த வாசிக சாலையும், நான் பிறந்து வளர்ந்த, எனக்கு மிகவும் பிடித்த ஊரான, அத்தியடிக்கு, யாழ் நகரில் உள்ள சிறு இடத்திற்கு, முக்கிய அடையாளமாக அன்று இருந்தன. அங்கு தான் எங்கள் வீடு அத்தியடி புது வீதியில் அமைந்து இருந்தது. எங்கள் வீட்டில் பனை, தென்னை, கமுகு, மா, பலா என சில மரங்களும், செவ்வரத்தை, ரோசா, மல்லிகை என பூ மரங்களும் நிறைந்து இருந்தன. நான் சிறுவனாக இருந்த அந்தக் காலத்தில், எம் பக்கத்து வீட்டில் இருந்தவள் தான் அவள். அவள் பெயர் செவ்வரத்தை, அந்த பெயருக்கு ஏற்ற அழகுடன், எந்த நேரமும் புன்னகை சிந்தும் முகத்துடனும் என்னுடன் வந்து, ஓய்வு நேரங்களில் …
-
- 0 replies
- 260 views
-
-
"ஒரு தாயின் கண்ணீர்" [உண்மைக்கதை] தமிழருக்கு எதிராக அரசின் பார்வை இருந்த காலம் அது. தமிழர் செய்த குற்றம், படிப்பில் கூட கவனம் செலுத்தி, தமது விகிதாசாரத்துக்கும் மிக அதிகமாக, தேர்வில் சித்திபெற்று பல்கலைக்கழகம் நுழைந்ததும், அதனால் திறமையின் அடிப்படையில் கூடுதலான அரச உத்தியோகம் பெற்றதும் தான். இதற்கு மாற்றுவழி, தமிழர் அல்லாதோரை மற்றும் கிராமப்புறங்களில் வாழும் இளைய தலைமுறையினரை ஊக்கிவிப்பதும் அவர்களுக்கு வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதும் தான் உண்மையான சிறந்த வழியென்றாலும், அரசு தமது சமய தலைவர்களின் மற்றும் தம்மை சூழ்ந்து உள்ள அரசியல் தலைவர்களின் இனத்துவேச ஆலோசனையை கேட்டு, தரப்படுத்தல் என்ற கொடிய முறையை அறிமுகப் படுத்தியது. உண்மையில் அரசின் இந்த நடவடிக்கைதான், தமிழர்களி…
-
- 0 replies
- 581 views
-
-
"ஏமாற்றும் காதல்" ஒரு காலத்தில் இலங்கையின் ஒரு அழகிய கடற்கரை நகரத்தில் ராஜ் என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு அன்பான மற்றும் பாரம்பரிய குடும்பத்தின் ஒரே குழந்தை. ராஜ் தனது வசீகரம், புத்திசாலித்தனம் கடலின் மீது ஆழ்ந்த அன்பு, தாராள மனப்பான்மை மற்றும் அன்பான புன்னகைக்காக அவனது கிராமம் முழுவதும் அறியப்பட்டான். ராஜ் உள்ளூர் புத்தகக் கடையில் சுமாரான வேலையில் இருந்தான், அங்கு அவன் தனது நாட்களை புத்தகங்களில் மூழ்கி, வாடிக்கையாளர்களுக்கு சரியான வாசிப்பைக் கண்டறிய உதவினான். சமீபத்தில் அவனது கிராமத்திற்குச் சென்ற அழகிய பெண்ணான மாயாவை சந்தித்த ராஜின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. மாயாவை சுற்றி ஒரு மர்மம் இருப்பது அவனுக்…
-
- 0 replies
- 365 views
-
-
நான் கண்ட கனவொன்றை (உண்மையிலை கனவு தானோ எண்டு கேக்கப்படாது) உங்களோடை பகிர்ந்து கொள்ளுறன். (கீறிட்ட இடங்களை நிரப்பி வாசியுங்கோ.) …. யில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின் நாட்டின் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையை நாட்டின் தலைவர் …. தற்போதும் … மாளிகையிலேயெ தங்கியிருப்பதாகவும் அவரைக் கைது செய்வதற்கு இராணுவம் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் எனினும் ஜனாதிபதிக்கு விசுவாசமான ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினருக்குத் இராணுவத்திற்கும் இடையில் சண்டை இடம்பெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. பிந்திக் கிடைத்த செய்தியொன்றின் படி ஜனாதிபதி … காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனின…
-
- 0 replies
- 798 views
-
-
ஆடி மாத பின்னிரவு ,அந்த நாள் ஏறித்த கோரவெய்யிலை சற்று தணித்து அதிகாலையை வரவேற்க பச்சை வயல்களை தழுவிய படி மெல்லிய இளங்காற்று தஞ்சாவூரை வருடுகின்றது . உரத்தநாட்டு கிராமம் - தஞ்சாவூர் புதுக்கோட்டை நெடுஞ்சாலையின் ஓரம் ஒரு கீற்றுக்கொட்டகையில் பெற்றோமக்ஸ் விளக்கு ஒளியின் உதவியுடன் சிற்பிகள் சிலர் உளியால் கருங்கற்களை செதுக்கிக்கொண்டு இருக்கின்றார்கள். பல்லவர் காலத்தில் இருந்து இன்று வரை இந்த உளிஓசை இங்கு கேட்டுக்குகொண்டுதான் இருக்கு . கொட்டகையை சுற்றி எங்கும் பெரிய பெரிய கருங்கற்கள் தீட்டபடாமல் நீண்டுகிடக்கின்றன. அங்கிருக்கும் ஒரு பெரிய கருகங்கல்லில் தலைக்கு கையை கொடுத்தபடி சாய்ந்திருகின்றான் சாரங்கன், அவனருகில் இருந்து இடது கைவிரலை ஆட்டிய படி எதையோ அழுத்திசொல்லும்…
-
- 0 replies
- 1k views
-
-
"ரதியின் கனவு" [போதை பொருள் மற்றும் பாலியல் விழிப்புணர்வு] வடக்கே கிளிநொச்சியையும் கிழக்கே இந்துசமுத்திரத்தையும், மேற்கே மன்னாரையும், தெற்கே திருகோணமலை மற்றும் வவுனியாவையும் எல்லைகளாக கொண்ட, சங்க கால நிலக்கூறுகளின் பண்பை ஒத்த நானிலத்தன்மை கொண்டதாகவும் உள்ள முல்லைத்தீவில் தனது சிறு வீட்டில் பெற்றோர் சகோதரர்களுடன் வாழும் இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி இரண்டு அகவை மதிக்கத்தக்க, எழுத்தாளரும் சமூக தொண்டாளருமான இளம் பெண் ரதி, காலை தேநீரை அருந்திக் கொண்டு, ஹால் இல் இருந்த தொலைக்காட்சியில் அன்றைய செய்திகள் கேட்டுக் கொண்டு இருந்தார். கிழக்கு வானம் சிவந்து சூரியன் மெல்ல மெல்ல கீழ்வானில் இருந்து மேலே ஏறிக் கொண்டு இருந்தது. பறவைகள் தமது கூட்…
-
- 0 replies
- 148 views
-
-
இலங்கையில் ஜேபி (justice of peace) என்று பதவி ஒன்று இருக்கிறது. சுத்த தமிழில் சமாதான நீதிவான் என்று சொல்வார்கள். கையொப்பம் போடுவது அவர்களின் வேலை. சில ஜேபிகள் காசு பார்க்காமல் கையெழுத்து போடுவார்கள். "இப்ப சரியான பிசி " பிறகு வரும்படி சொல்லி படம் காட்ட மாட்டார்கள். அவர்களை பொதுவாக நல்ல ஜேபி என்று சொல்வதுண்டு. ஜேபியாக என்ன படிக்க வேண்டும் என்பது மட்டும் இன்றைவரைக்கும் யாருக்கும் தெரியாத பரம இரகசியம். எங்கள் ஊரில் ஒரு ஜேபி இருந்தார். பகலில் பாடசாலையில் வேலை செய்வார். பின்னேரத்தில் ஜேபி வேலை பார்ப்பார். இருட்ட முன்னம் போனால் எல்லா படிவத்தையும் படித்து பார்த்து தேவையான இடத்தில் சீலை குத்தி முத்து போன்ற எழுத்தில் கையொப்பம் வைப்பார். கொஞ்சம் நேரம் செல…
-
- 0 replies
- 1.9k views
-
-
காலக்கடனும் கடமையும். 27. 12. 2019 காலை 10மணிக்கு வவுனீத்தாவும் நானும் பார்த்திபனிடம் போய்க்கொண்டிருந்தோம். மழைத்தூறலுடன் கூடிய மெல்லிய காற்று வீசிக்கொண்டிருந்தது. 4மாதங்களின் பிறகு அவளும் நானும் சேர்ந்த பயணமது. இம்முறை நத்தார் விடுமுறைக்கு பார்த்தி எங்களிடம் வரவில்லை. அவன் விடுமுறையிலும் வேலை செய்து கொண்டிருக்கிறான். சப்பாத்தைக் கழற்றிவிட்டு காலை மடித்து சப்பாணி கட்டியிருந்தபடி கதைத்துக் கொண்டிருந்தாள். சிறுவயது ஞாபகங்கள் முதல் இன்று வரையான அவளது கதைகள் கேட்டபடி காரோடிக் கொண்டிருக்கிறேன். வெளிவரவிருக்கும் அவளது பாடல்களைத் தனது மொபைலில் இருந்து காருக்கு மாற்றிப் போட்டாள். எனக்குள் இன்னும் குழந்தையாகவே இருக்கும் அவளது எண்ணங்கள் சிந்தனைகள் எப்…
-
- 0 replies
- 1.8k views
-
-
பெரியத்தார் வைத்தியசாலையில் அனுமதீக்கப்பட்டிருப்பதாக அறிந்து அவரைப்பார்க்க சென்றிருந்தேன். அவருடைய அறை இரு கட்டில்களைக்கொண்டது அறைக்குள் போனதுமே இருவர் தமிழில் வணக்கம் சொன்னார்கள் அத்தாருடன் பேசிக்கொண்டிருந்தபோது பக்கத்திலிருந்தவரும் சேர்ந்து கொண்டார் இவர் வயோதிபர் இல்லத்திலிருந்து இங்கு வந்துள்ளார் என அத்தார் அறிமுகப்படுத்தியதால் கொஞ்சம் அவரைக்கவனிக்கத்தொடங்கினேன் எனக்கு இது புது அனுபவம். நீங்கள் இன்னாரின் மகனல்லவா என என்னைக்கேட்டு எனது தகப்பனாரது பெயரைச்சொல்லி என்னை அதிசயிக்க வைத்தார் அவரை எப்படித்தெரியும் என்பதற்கு அவரைத்தெரியாமல் இருக்கமுடியுமா என்றார். இத்தனைக்கும் அவர் யாழ்ப்பாணத்தில் வேறு ஒரு ஊரைச்சேர்ந்தவர். பிரான்சிலுள்ள ஒரு பெர…
-
- 0 replies
- 1k views
-
-
"காத்திருப்பேன் உனக்காக" படை படையாக ஒன்றின் பின் ஒன்றாக பொங்கி எழுந்து வரும் கடல் அலைகளின் அசைவிலே, அவ்வற்றின் அசைவிற்கு தாளம் போடுவது போல, அங்கு கடற்கரையில் ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த பனை மரங்கள், தம் பனை ஓலைகளை அசைத்தன. அது மாலை நேரம், பகல் முழுவதும் உழைத்து சோர்வு அடைந்த தொழிலாளியின் பெரு மூச்சு போல, கதிரவனும் ஓடிக் களைத்து பிரியா விடை பெற்றுக் கொண்டு இருந்தான். வீசி வந்த கடற்கரை காற்று, அள்ளி வந்த வெண் மணலையும் சருகுகளையும், கவிதாவின் மேல் கொட்டி. அது எதோ ரகசியங்களை கவிதாவிடம் கிசுகிசுத்தது போல் இருந்தது. காலத்தின் ஆழத்தில் தொலைந்து போன காதலின் எதிரொலிகளை அலைகளும் அவளுக்கு நினைப்பூட்டிக்கொண்டு இருந்தன. …
-
- 0 replies
- 295 views
-
-
"நானே வருவேன்" "பரதவம்சத்தில் பிறந்தவனே, எப்பொழுதெல்லாம் தர்மத்திற்கு வீழ்ச்சியும், அதர்மத்திற்கு எழுச்சியும் உண்டாகிறதோ, அப்பொழுதெல்லாம் நான் என்னை பிறப்பித்துக்கொள்கிறேன்" [பகவத்கீதை 4.7] உண்மையான பக்தி எவரிடம் உள்ளதோ அவரைத் தேடி, 'நானே வருவேன்!’ என்று கீதையில் பகவான் கிருஷ்ணர் சொல்லி இருக்கிறார் என்று என் அம்மா சொன்னது ஞாபகம் வருகிறது ஆனால் இவை எல்லாம் புராணத்தில் தான் காண்கிறோம். இந்த புராணங்கள் வாய் மொழிமூலம் சில நூற்றாண்டுகள் புழக்கத்தில் இருந்து, கி பி இரண்டாம் ஆண்டளவில் அல்லது அதற்குப் பின் எழுத்தில் எழுதப் பட்டவையாகும். நான் ஒரு கிழமைக்கு முன் தான் திருமணம் செய்து, என் மனைவியை, அவளின் சொந்த கிராமத்தில் இருந்து வெளியே, தலை நகரத்துக்கு கூட்டி வந்துள்ளேன். இங்கு, …
-
- 0 replies
- 232 views
-
-
"அவளோடு என் நினைவுகள்…" "உன் நினைவு மழையாய் பொழிய என் விழியோரம் கண்ணீர் நனைக்க மென்மை இதயம் அன்பால் துடிக்க அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது " "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய மண்ணை விட்டு நானும் விலக மங்கள அரிசியும் கை மாறியதே!" நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை] …
-
- 0 replies
- 500 views
-
-
"யுத்த வடுகளுக்கு மத்தியில் ஒரு காதல்" 25 ஆண்டுகால இனவாத யுத்தத்தின் போது, வடக்கு மற்றும் கிழக்கில் வைத்தியசாலை கட்டமைப்புகள் உட்பட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் நாசமாக்கப்பட்டுள்ளதோடு அவை இன்றைய தேவைகளுக்கு ஏற்ப அபிவிருத்தி செய்யப்படவில்லை. அது மட்டும் அல்ல, 2009 இல் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போரின் இறுதிக் கட்டத்தில் இராணுவத்தின் குண்டுத் தாக்குதல்களால் வன்னி பிரதேசத்தின் முழு உட்கட்டமைப்பும் தரைமட்டமாக்கப்பட்டு இரண்டரை இலட்சத்துக்கும் மேலானவர்கள் இராணுவம் நடத்திய முகாம்களில் அடைக்கப்பட்டதுடன் 40,000க்கும் அதிகமான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்த சூழலில் தான், போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா நகரில், குழப்பம் …
-
- 0 replies
- 534 views
-
-
அன்புள்ள கடவுளுக்கு தம்மா துண்டு தமிழ்நாட்டை ஆளுகின்ற தலைவர்களே நிக்க நேரமில்லை, உட்கார பொழுதில்லை என்று லொங்கு லொங்குயென வேலையிருக்கோ இல்லையோ ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள். நீ ரொம்ப பாவம் இவ்வளவு பெரிய உலக்கத்தை ஒத்த ஆளா ஆட்சி நடத்தற, உனக்கு எம்புட்டு வேலையிருக்கும். கண்ணுக்கே தெரியாம நிறைய உசுரு இருக்காமே. அதுங்க தொடங்கி வயிறு பெருத்த மனுஷன் வரைக்கும் தினசரி நீ சோறு போட்டாகனும். கோடம்பாக்கத்துல மழை வந்துதா? கோவில்பட்டியில வெயில் அடிக்கிறதா? என்பதையும் பார்த்தாகனும். செத்தது எத்தனை பேரு, புதுசா பொறந்தது எத்தனை பேரு, அவனுக்கு என்ன கதை, என்ன பாத்திரம் என்று பிரிச்சு கொடுத்தாகனும். ரெண்டு செகண்டு கண் மூடி உன் வேலையை பற்றி யோசிச்சா தலையே கிறுகிற…
-
- 0 replies
- 1.6k views
-
-
"தேவதை" யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இளம் பொறியாளர் ரவி, கொழும்பில் இருந்து லண்டன் செல்லும் விமானத்தில், பல வருட கடின உழைப்புக்குப் பிறகு ஒரு மைல்கல்லாக உணர்ந்த ஒரு பயணத்தைத் தொடங்கினான். அவன் தனது இருக்கையில் அமர்ந்ததும், பயணிகளுக்கு உதவி செய்யும் விமானப் பணிப்பெண்ணை அவனால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. விமான அறையின் வரம்புகளை மீறியதாகத் தோன்றும் ஒரு அழகிய அழகை அவள் பெற்றிருந்தாள். அவளது அழகும் வசீகரமும் ரவியை வசீகரித்தது, உண்மையிலேயே அசாதாரணமான ஒருவளை தான் சந்தித்த உணர்வை அவனால் அசைக்க முடியவில்லை. அவளைச் சுற்றி எதோ ஒரு அமைதியும் இனம் தெரியாத அரவணைப்பும் இருந்தது, அது அவனை உள்ளே இழுத்து, அவனை மயக்கியது. ஆனால் எனோ இது கண்டவுடன் ஏற்பட்டது அல…
-
- 0 replies
- 290 views
-
-
மண்டபம் முட்டை வடிவில் இருந்தது. வயதான மண்டபமாகவிருந்தது. ஒரு வழிபாட்டு நிலையம் போன்ற அடையாளத்தை அது கொண்டிருந்தது. அதற்கென நிரந்தர இருக்கைகள் பொருத்தப்பட்டிருக்கவில்லை. நிகழ்விற்கேற்றபடி வெளியே இருந்து ஆசனங்களை எடுத்துவந்து போட்டுக்கொள்கிறார்கள் என்பது தெரிந்தது. இருநூறு பேர்வரையான மக்கள் போடப்பட்ட இருக்கைகளில் இருந்தார்கள். ஏறத்தாள அனைவரும் பெண்கள். பதின்மம் தொட்டு பழுத்த வயதுவரை அவர்கள் பரந்திருந்தார்கள். ஆண்கள் மண்டபத்தின் வாயிலை அண்மித்து நெருக்கமாய் நின்றிருந்தார்கள். இருபத்தைந்து பேர்வரை தான் ஆண்கள் இருந்தார்கள். பல்வேறுவகையான ஒலிகள் அங்கு கேட்டுக்கொண்டிருந்தபோதும் மண்டபத்துள் ஒரு மயான அமைதி நிலவியது. அந்த அமைதி, காதுகளைத் தாண்டியதாக, உள்ளுர உணரப்பட்டதாக, நிசப்த்…
-
- 0 replies
- 1.9k views
-
-
"உறவு சொல்ல ஒருத்தி" இலங்கை உள்நாட்டுப் போர் 27 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு கடும் துன்பத்தையும், சூழல், பொருளாதார ரீதியாக நாட்டிற்கு இழப்பையும் ஏற்படுத்தி 80,000–100,000 க்கு மேற்பட்ட மக்கள் இறப்புக்கும் காரணமாகியது. இரு தசாப்தங்களாக போர் மற்றும் தோல்வியுற்ற நான்கு சமாதானப் பேச்சு வார்த்தைகள், மற்றும் 1987 - 1990 காலப்பகுதியில் இலங்கையில் நிலை கொண்ட இந்தியப் படைகளின் தோல்வியில் முடிந்த நிகழ்வு என்பவற்றின் பின் 2005 பிற்பகுதியில் முரண்பாடு ஆரம்பமாகி, யூலை 2006 இல் மீண்டும் வெடித்தது. புளியங்குளத்திலும் முகமாலையிலும் மணலாறிலும் அதன் நாலாபுறமும் அனல்பறக்கும் சண்டைகள் அடிக்கடி நடந்தன. வன்னி முழுவதிலும் இப்படியான நிகழ்வுகள் நாளாந்தம் நடக்கத்…
-
- 0 replies
- 241 views
-
-
"ஆசையில் ஓர் காதல்" மலை அடிவாரத்தில் உஷா என்ற அழகிய இளம் பெண், தன் பெற்றோருடன் வாழ்ந்துவந்தாள். அவள் நீண்ட கருங்கூந்தலையும் பிரகாசிக்கும் அழகிய கண்களையும் கொண்டு இருந்தாள். அவள் ஒரு உண்மையான காதல் தனக்கு கிடைக்கவேண்டும் என்று பத்தாம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்து ஏங்கிவந்தாள். ஆனால் இப்ப அவள் பல்கலைக்கழகம் போன பின்பும், இன்னும் அப்படியான ஒரு காதலை அவளால் அடைய முடியவில்லை. ஒரு நாள், பல்கலைக்கழக விடுமுறை நாளில், தன்னந்தனிய சிறு பத்தைகள் நிறைந்த காட்டுப்பகுதியில், இயற்கையின் அழகையும் அங்கு பறந்து திரியும் பறவைகளையும் ரசித்தபடி நடந்துசென்றாள். அப்பொழுது அவளுக்கு எதிராக நல்ல உயரமும் அழகிய வலிமை பொருந்திய உடல் அமைப்பும் கொண்ட அவன் நடந்து சென்றான். "அடிபுனை தொடுகழல், மை…
-
- 0 replies
- 209 views
-
-
பார்த்திபனின் வரவு - பாகம் 2 16. 07. 1996 காலை..., எனது அறையில் மேலும் இருவர் குழந்தைகளைப் பெற்றவர்கள் இருந்தார்கள். அவர்கள் அருகில் தொட்டில்களில் குழந்தைகளை வளர்த்தியிருந்தார்கள். எனக்கருகில் தொட்டில் இல்லை. ஒன்பது மணிக்கு பிறகு மருத்துவர்கள் பரிசோதனைக்கு வந்தார்கள். இரத்த அழுத்தம் உடல் வெப்பநிலை யாவும் எழுதினார்கள். வலிக்கிறதா? வயிற்றை அழுத்திய மருத்துவர் கேட்டார். இல்லை..., ஒற்றைக்கையைத் தந்து கட்டிலில் இருந்து நிலத்தில் நிற்கச் சொன்னார். எழுந்து நின்றது மட்டுமே நினைவில் தெரியும். அதன் பின்னர் 2மணிநேரம் கழித்து விழித்த போது வேறொரு அறையில் கிடந்தேன். துளித்துளியாய் மருந்து ஏறிக்கொண்டிருந்தது. அருகில் இரு…
-
- 0 replies
- 2.4k views
-
-
மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் 100 இக்கும் அதிகமான மனித எலும்புக்கூடுகள் கொண்ட பாரிய மனிதப்புதைகுழி!!!!! தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்....(செய்தி) 1.கொலைசெய்து புதைத்தவனே அதை மீண்டும் தோண்டி எடுத்துக்காட்டும் வினோதம்... 2.மண்டை ஓடுகளில் "தமிழன்" என்று எழுதப்படவில்லை... 3.ஐ.நா என்ற ஒரு மனித உ(எ)ரிமை அமைப்புக்கு கண் தெரியாமல் போய் 5 வருடம்!!!! 4.இதில் யாரும் படுகொலை செய்யப்படவில்லை எனவும் அவர்களே தாங்களாக கிடங்கு கிண்டி தங்களை தாங்களாகவே புதைத்திருக்கலாம் என ஐ.நா நிபுணர் குழு(?) கண்டுபிடிப்பு. புதைகுழிக்குள் புதைக்கப்பட்டார்களா? இல்லை அவர்களாகவே புதைந்துபோனார்களா என்பது புரியாத புதிராக ஐ.நா மனித உ(எ)ருமை அமைப்புக்கு இருப்பதாக அதன் முக்கிய பேச்சாளர் தெரிவிப்பு. 5.இலங்க…
-
- 0 replies
- 748 views
-
-
தமிழ்க்கிழவன் புறுபுறுப்பு-4 ----------------------------------- சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி கொழும்பில நடக்காமல் போன பிரச்சினை பெரிய பிரச்சினையா கிடக்கு.யானைப்போருக்குள்ள பூனைப்போராக்கிடக்கு உந்தப்பிரச்சினை. இந்த மாதம் ஜெனிவா மாநாட்டில இலங்கைக்கு எதிரான "போர்க்குற்ற பிரேரணை" வாற நேரம் உது தேவையோ எண்டது நியாயமான கேள்விதான். ஏனெண்டா தமிழனுக்கு ஏதோ கொஞ்ச நஞ்ச நீதி கிடைக்கும் நேரத்தில ... அங்க சனமெல்லாம் வலு சந்தோசமா சோக்கா இருக்குது எண்டு காட்ட உப்பிடியான களியாட்ட நிகழ்வுகள் உதவும் எண்டுகினம் கனபேர். இன்னோரு பக்கத்தால "வெளிநாட்டில உள்ளவை மட்டும் கூத்தடிச்சு கும்மாளம் அடிக்கலாம்,இங்க நாங்கள் கொஞ்ச சந்தோசமா இருக்குறது உங்களுக்கு பிடிக்க இல்லையோ" எண்டுகினம் ஒரு சிலர். இத…
-
- 0 replies
- 853 views
-
-
"உள்ளம் கவர்ந்த கள்வன்" நான் உயர்தரம் முடித்து, அரசாங்கம் அறிமுகப் படுத்திய தரம் அற்ற, இனரீதியான தரப்படுத்தல் மூலம், பல்கலைக்கழக நுழைவை இழந்து, தனியார் நிலையம் ஒன்றில் தொழில் சார்ந்த கல்வி ஒன்றில் அன்று பயின்று கொண்டு இருந்தேன். பொழுது போக்காக சில பேனா நண்பர்களை உள்வாங்கி, எனது ஓய்வை பயன் படுத்திய காலம் அது. நாளடைவில், அதில் ஒரு பேனா நண்பன் முன்னிலை வகுக்க தொடங்கினார். அரசியல் தொடங்கி சமயம் வரை எமக்குள் கருத்து பரிமாற்றங்கள் நடந்தன. இருவருக்கும் சில உடன்பாடுகளும் மாறுபட்ட கருத்துக்களும் இருந்தாலும் நட்பு வலுவாகிக் கொண்டே போனது. நம்பிக்கை வளர, இயல்பாகவே, எந்தவித தயக்கமும் இன்றி கடிதங்கள் பரிமாற தொடங்கினேன். அவனை பற்றிய தனி விபரங்களையும் …
-
- 0 replies
- 144 views
-
-
"எங்கள் பள்ளிக்கூடம்" [இடைக்காடு மகாவித்தியாலயம்] இலங்கையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அழகிய ஒரு யாழ்ப்பாணக் கிராமமான அச்சுவேலி பிரதேசத்தில் உள்ள இடைக்காட்டில் எங்கள் பள்ளிக்கூடம் முதலில் ஒரு திண்ணைப் பாடசாலையாக 1925 இல் முப்பது பிள்ளைகளுடன் பண்டிதர் திரு சுவாமிநாதர் இராமசாமி அவர்களைத் தலைமை ஆசிரியராகக் கொண்டு, தேற்றாவடி திரு சுப்பர் முருகுப்பிள்ளை ஆசிரியரின் இல்லத்தில் உருவானது. பின் ஓலைக்கொட்டிலில் அமரர் பண்டிதர் திரு க இராமசாமி அவர்களைத் தலைமை ஆசிரியராகக் கொண்டு இன்று எங்கள் பாடசாலை அமைந்து உள்ள இடத்தில் நூறு பிள்ளைகளுடன் இடைக்காடு புவனேஸ்வரி ஆரம்ப பாடசாலையாக உருவானது. அப்பொழுது அது ஓரளவு பின்தங்கிய நிலையில், ஆனால் அறிவின் கலங்கர…
-
- 0 replies
- 225 views
-
-
"வெளிச்சத்துக்கு வராதவள்" பௌத்தர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய அனைத்து மக்களும் வசிக்கும் இடங்களில் மிகவும் முக்கியமானதும் இலங்கையின் வணிக தலைநகரமும், இலங்கையின் ஆகப்பெரிய நகரமுமான கொழும்பு ஒரு பரபரப்பான நகரமாகும். அங்கே இந்தியப் பெருங்கடலின் சத்தமும், போக்குவரத்து நெரிசலும், தெருவோர வியாபாரிகளின் சலசலப்பும் கலந்த வெள்ளவத்தை என்ற இடத்தில், முல்லை என்ற இளம் தமிழ்ப் பெண் வாழ்ந்து வாழ்ந்தாள். பரபரப்பான அந்த நகரத்தைப் போலல்லாமல், முல்லை அமைதியாகவும், கிட்டத்தட்ட கூச்ச சுபாவமுள்ளவராகவும், வெளிச்சத்துக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாள். அவள் கொழும்பின் மையத்தில் வசித்தாலும், அவளுடைய வாழ்க்கை அமைதி, நெகிழ்ச்சி மற்றும் உ…
-
- 0 replies
- 249 views
-
-
"என் மூச்சு நீயடி" இந்தியப் பெருங்கடலின் எல்லையற்ற விரிவை உற்றுப் பார்த்துக் கொண்டு சிவகுமார் யாழ்ப்பாணக் கடற்கரையில் நின்று கொண்டிருந்தான். கதிரவன் மறைந்து கொண்டிருந்தது, அப்பொழுது தண்ணீரின் மேல் ஒரு சூடான தங்க நிறத்தை வீசியது, ஆனால் காட்சியின் அழகு அவனைக் கவரவில்லை. அவன் சுவாசித்த காற்றாக மாறிய மீராவின் நினைவுகளால் அவன் மனம் மூழ்கி இருந்தது. அவன் வாய் "என் மூச்சு நீயடி" என முணுமுணுத்துக்கொண்டு இருந்தது. யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த சிவகுமார் அமைதியான அதே நேரம் மதிப்பீட்டுத் திறனையும் மற்றும் சுயபரிசோதனை அல்லது அகநோக்குப் பார்வை அல்லது சிந்தனை கொண்ட இளைஞன் ஆவான். அவனது பெற்றோர் எப்போதும் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர், அதை, அவர்களின் வார்த்தைகளை…
-
- 0 replies
- 114 views
-