Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய, `தமிழ்த் தெய்வ வணக்கம்' என்ற பாடலின் ஒரு பகுதியையே தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக தமிழக அரசு கொண்டுள்ளது. ஆனால், இந்த தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய முழுப் பாடல் அல்ல, 1970-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மு.கருணாநிதியால் சில வரிகளை நீக்கி திருத்தம் செய்யப்பட்ட பாடலாகும். இந்த திருத்தம் செய்யப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசின் மாநிலத் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கும் என்று கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். இந்த நிலையில், கடந்த 2007-ம் ஆண்டு மோகன்ராஜ் என்பவரால், மு.கருணாநிதி திருத்திய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து, தமிழ்த்தாய் வாழ்த்துப் ப…

  2. சென்னை: உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றியதால் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை, கலியுக மணிமேகலை என திமுக தலைவர் கருணாநிதி சொன்னாலும் சொன்னார், ஃபேஸ்புக், டுவிட்டரில் கமெண்ட் போட்டு தாக்குகின்றனர். சிலப்பதிகார காப்பியத்தில் கோவலன்- மாதவிக்கு பிறந்தவர் மணி மேகலை. துறவரம் பூண்டு மக்களின் பசியை போக்க ஆண்டனை வேண்டிய காரணத்தால் மக்களின் பசியை போக்கும் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் அமுதசுரபி மணிமேகலைக்கு கிடைத்தது. அதன் மூலம் அனைவருக்கும் உணவு அளித்ததாக சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கோடிட்டு காட்டியுள்ளார். இத்தாலியில் பிறந்த சோனியா காந்தியை மணிமேகலையோடு ஒப்பிட்டு பாராட்டுவதா என்று கொதித்த இணைய போராளிகள் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் தோராணங்களால் கட்டி தொங்க விடுகின்றனர் சாம…

    • 2 replies
    • 3k views
  3. கருணாநிதியின் 100ஆவது நினைவுநாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் அஞ்சலி! முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் 100ஆவது நினைவு நாளை முன்னிட்டு அவருடைய சமாதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி, பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கிவைத்தார். 100ஆவது நினைவு நாளை முன்னிட்டு முன்னாள் மத்திய அமைச்சர்களான டி.ஆர்.பாலு, ஆ.ராசா, முன்னாள் அமைச்சர்கள்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். மேலும் அவரது சமாதி, பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, சமாதியின் மீது கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையாருடன் அவர் இருப்பது போன்ற ஓவியமும் பூக்களால் உருவாக்கப்பட்டிருந்தது. சமாதியில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படம் அலங்கார வளைவு போன்று வடிவம…

  4. சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 90வது பிறந்த நாள் விழா தென் சென்னை மாவட்ட திமுக சென்னையில் பொதுக் கூட்டத்துடன் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்து வருகிறது. திமுக தலைவர் கருணாநிதிக்கு 90வது வயது ஜூன் 3ம் தேதி பிறக்கிறது. இதையொட்டி ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை தாங்குகிறார். கட்சி பொதுச்செயலாளர் க.அன்பழகன் பாராட்டுரை வழங்குகிறார். கருணாநிதி கலந்து கொண்டு ஏற்புரை வழங்கி பேசுகிறார். இதில் திமுக முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசுகிறார்கள். மேலும், கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி ஐந்தாம் பாகம் மற்றும் சிறுகதைப் பூங்கா நூல்கள் வெளியீட்டு விழா வருகிற 2-ந்தே…

    • 7 replies
    • 809 views
  5. கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்: ராகுல் காந்தி மகிழ்ச்சி..! கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தி.மு.க தலைவர் கருணாநியின் 94-வது பிறந்தநாள் விழா நேற்று வைரவிழாவாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு இந்திய அளவில் முக்கியமான அரசியல் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்றார். இன்று காலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடித்த பின்னர் சென்னை கோபாலபுரத்தில் கருணாநிதியை நேரில் சென்று சந்தித்தார். ராகுல் காந்தியை தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாயிலில் சென…

    • 3 replies
    • 610 views
  6. கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு கல்லீரல் செயல்பாட்டில் திருப்தி இல்லாததால் கருணாநிதிக்கு நேற்று முதல் மஞ்சள் காமாலை ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது ரத்தத்தில் உள்ள தட்டணுக்களிலும் (ப்ளெட்லெட்ஸ்) குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளை தீர்க்க டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சைகளை அளித்து வருகிறது.இந்த நிலையில் இன்று காலை அவரது நாடி துடிப்பிலும் சற்று தொய்வு ஏற்பட்டதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலை உறுதி செய்ய இயலவில்லை. நோய் எதிர்ப்பு சக்தியை தரும் தட்டணுக்கள் குறைந்து வருவதால் கருணாநிதி உடலில் செலுத்தப்படும் மருந்துகள் மிக மெதுவாகவே வேலை செய்கின்றன. இதனால் அவர் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக இன்று மதியம் தகவல்கள் வெள…

    • 3 replies
    • 884 views
  7. கருணாநிதியின் உருவச் சிலை திறப்புத் திகதி அறிவிப்பு! மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் உருவச் சிலை எரிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி திறக்கப்படுமென, அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தி.மு.க தலைமைக்கழகம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “மறைந்த தலைவர் கருணாநிதியின் உருவச் சிலையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி அகில இந்திய தலைவர்கள் பங்கேற்று சிறப்பாக திறந்து வைக்கவிருக்கிறார்கள். ஐந்து முறை முதல்வராக இருந்து தமிழகத்திற்கு எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி, தமிழகத்தில் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் உன்னதமாக கொலுவீற்றிருக்கும் தலைவரின் உருவச் சிலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழ…

  8. கருணாநிதியின் கபட நாடகம்! -பழ. நெடுமாறன்- தமிழீழம் உருவாக வேண்டும். அதை விரைவில் காண வேண்டும். அதற்காகவே வாழ விரும்புகிறேன். அதைக் கண்டபின் உயிரைவிடவும், காண்பதற்காக உயிரை விடவும் விரும்புகிறேன்'' என தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி திருவாரூரில் 9-6-12 அன்று நடைபெற்ற தனது 89-வது பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் உருக்கமாகப் பேசியுள்ளார். தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதம் ஏந்தியப் போராட்டமாக நடைபெற்ற, கடந்த 30 ஆண்டுகாலத்தில் மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்தவர் மு.கருணாநிதி. இவருடைய பதவிக் காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு இவர் எந்த அளவுக்கு உதவி செய்தார், துணை நின்றார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும். அ.தி.மு.க. தலைவர் எம்.ஜி.ஆர். இதே காலகட்டத்த…

  9. கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழா: தி.மு.க. - பா.ஜ.க. இடையே மோதல் கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழாவை மிக பிரம்மாண்டமான முறையில் நடத்துவதற்கு திமுக ஏற்பாடுகளைச் செய்துவரும் நிலையில், இந்த விழாவுக்கு அழைப்பது தொடர்பாக திமுக - பாரதீய ஜனதா கட்சிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி 1957-இல் குளித்தலை தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். அதற்குப் பிறகு நடந்த எந்த சட்டமன்றத் தேர்தலிலும் அவர் தோல்வியடையாமல், மீண்டும் மீண்டும் சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டு வருகிறார். கருணாநிதி சட்டமன்றத்தில் நுழைந்து அறுபதாண்டுகள் நிறைவடையும் நிலையில், அதனை பெரிய அளவில் கொண்டாடுவதற…

  10. கருணாநிதியின் சிலை திறப்பு விழா இன்று அண்ணா அறிவாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் சிலையை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்துவைக்கவுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. நிர்வாகிகள் ஆகியோரின் அழைப்பின் பேரில் குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்காக சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று சென்னைக்கு பயணிக்கவுள்ளனர். அந்தவகையில் கருணாநிதியின் சிலையுடன் அறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட சிலையையும் திறந்துவைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இச்சிலை திறப்புவிழா மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் இடம்பெறவுள்ளமையால் அப்பகுதி …

  11. கருணாநிதியின் சிலை திறப்பும் தேசிய அளவிலான கூட்டணியும் எம். காசிநாதன் / 2018 டிசெம்பர் 03 திங்கட்கிழமை, மு.ப. 11:39 Comments - 0 திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதியின் சிலையை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்கச் சம்மதம் தெரிவித்திருப்பது, அரசியல் வியூகங்களுக்கு தமிழகத்தில் ஒரு தளத்தை உருவாக்கியிருக்கிறது. தி.மு.கவும் காங்கிரஸும் கூட்டணிக் கட்சிகளாக இருந்தாலும் “ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை தி.மு.க” என்ற முணுமுணுப்பு காங்கிரஸ்காரர்களிடம் இருக்கிறது. ஆனால், டிசெம்பர் 16ஆம் திகதியன்று, கருணாநிதியின் சிலையை சோனியா காந்தி திறந்து வைக்கிறார். காங்கிரஸ்- தி.மு.க உறவை, முன்னெடுத்துச் செல்லும் முக்கிய…

  12. கருணாநிதியின் சிலையை... இன்று திறந்து வைக்கிறார், வெங்கையா நாயுடு..! சென்னையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று திறந்து வைக்கிறார். ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அவருக்கு சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்ததைத் தொடர்ந்து சிலை அமைக்கும் பணிகள் இடம்பெற்றன. இந்நிலையில் இதற்கான பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று மாலை கருணாநிதி சிலையை குவெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1284249

  13. கருணாநிதியின் பிறந்தநாள்... அரசு விழாவாக, கொண்டாடப்படும் – ஸ்டாலின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) 110ஆவது விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். இதன்போதே அவர் மேற்படி அறிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதியின் சிலை நிறுவப்படும் எனவும் கூறினார். அவருடைய பிறந்த தினமான ஜுன் மாதம் 3 ஆம் திகதி இனி அரசு விழாவாக கொண்டாப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். https://athavannews.com/2022/1278696

  14. FILE குட்கா பான்மசாலாவை தடை செய்த அரசு டாஸ்மாக்கை ஏன் தடை செய்யவில்லை என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கருணாநிதியின் பெருந்தன்மை முதல்வருக்கு வர வேண்டும் என்றும் கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது, வரும் 2014 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக மண்ணைக் கவ்வும். என் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் பொய்யாக ஜோடிக்கப்பட்டவை. வரவுள்ள மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என இதுவரை முடிவு செய்யவில்லை. திமுக ஆட்சி காலத்தில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா, திமுக மற்றும் கருணாநிதி குடும்பத்தைப் பற்றி அவதூறாகப் பேசினார். ஆனால் கருணாநிதி அந்த விவகாரத்தில் பெருந்தன்மையுடன் நடந்துகொண்டார். கருணாநிதியின் பெருந்தன்மை முதல்வருக்கு வர வேண்டும். அவையில் இ…

  15. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர் ஆகுமாறு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தயாளு அம்மாளின் மகள் செல்வி செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், 82 வயதாகும் தயாளு அம்மாளின் உடல்நிலை சென்னையில் இருந்து டெல்லிக்கு பயணம் செய்யும் நிலையில் இல்லை. அவரது உடல் நிலையை மருத்துவ குழு ஆய்வு செய்து முடிவு செய்ய வேண்டும். கடந்த ஆண்டு முதல் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். ஞாபக மறதி நோய் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, கே.எஸ்.ராதா கிருஷ்ணன் கொண்ட பெஞ்ச், ‘‘தயாளு அம்மாள் உடல் நிலை குறித்து டெல்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமன…

  16. 2ஜி ஸ்பெக்ட்ரம்' முறைகேடு தொடர்பாக, 200 கோடி ரூபாய் அளவுக்கு, பணம் பரிவர்த்தனை நடந்த விவகாரத்தில், அமலாக்கப் பிரிவு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கிலிருந்து, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளுவை விடுவிக்க வேண்டும் என, அவரது மகள் செல்வி தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம், நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது. இதனால், கருணாநிதி மற்றும் குடும்பத்தினர் 'அப்செட்' அடைந்து உள்ளனர். 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், பல்வேறு தொலை தொடர்பு நிறுவனங்களிடமிருந்து, கலைஞர் 'டிவி' நிறுவனத்திற்கு, 200 கோடி ரூபாய் அளவுக்கு பணம் வழங்கப்பட்டதில், முறைகேடு இருப்பதாக சொல்லி, டில்லியில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது. 10 பேர் குற…

  17. கருணாநிதியின் மருத்துவமனை நிமிடங்கள்! - கோபாலபுரத்தில் கொந்தளித்த அழகிரி அப்போலோ மருத்துவமனையைப் போலவே, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையும் தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து இன்று காலை அறிக்கை வெளியிட்டுள்ளது. ' நோய்த் தாக்கம் காரணமாக இரவு முழுவதும் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார் கலைஞர். இன்னும் ஒருவாரம் அவர் சிகிச்சையில் இருப்பார்' என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில். தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு கடந்த மாதம் 25-ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட தி.மு.க தலைமைக் கழகம், ' வழக்கமாக அவர் உட்கொள்ளும் மருந்துகளில் ஒன்று ஒத்துக் கொள்ளாத நிலையில் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. அவர் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறு…

  18. சென்னை: கருணாநிதியின் தத்துப்பிள்ளை, கனிமொழியின் தம்பி மு.க. மணி எங்கே என்று அதிமுக செயற்குழு உறுப்பினர் பரிதி இளம்வழுதி கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் வளர்மதி தலைமையில் நடந்த கூட்டத்தில் முன்னாள் திமுக அமைச்சரும் தற்போதைய அதிமுக செயற்குழு உறுப்பினருமான பரிதி இளம்வழுதி கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது, திமுகவில் இருப்பதோ கும்பல். ஆனால் அதிமுகவில் இருப்பதோ கூட்டம். கும்பல் கூடி கலைந்துவிடும். கூட்டமோ நிலையாக நிற்கும். நானும் உங்களுடன் நிலையாக நிற்பேன். தமிழக அரசியலில் குழப்பம் ஏற்படும் தேர்தலில் தான் திமுக எளிதில் வெற்றி பெறும். ஆரோக்கியமாக தேர்தல் நடந்தால் திமுக வெ…

    • 0 replies
    • 578 views
  19. கருணாநிதியின் வழியிலேயே ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்தேன் – மு.க.ஸ்டாலின் கருணாநிதி கற்றுத்தந்த வழியிலேயே ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்தேன் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தஞ்சையில் தி.மு.க. வேட்பாளர்களை இன்று (புதன்கிழமை) அறிமுகம் செய்து வைத்து, அங்கு இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எனக்கு எவ்வளவு பொறுப்புகள், பதவிகள் கிடைத்தாலும் கருணாநிதியின் மகன் என்பதற்கு எதுவுமே ஈடாகாது. கருணாநிதி கற்றுத்தந்த வழியில் நின்றே ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்தேன். தஞ்சை மண் என்பது கருணாநிதியின் மண். அதனால் தான் இங்கு வந்து நான் வா…

  20. கருணாநிதியுடன் மு.க அழகிரி திடீர் சந்திப்பு: மீண்டும் கண்கள் பனிக்குமா... இதயம் இனிக்குமா? சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியை மு.க அழகிரி இன்று திடீரென சந்தித்து பேசினார். இது, தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் அழகிரி பிறந்த நாளுக்கு அவரது ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்கள் தி.மு.க.வில் சலசப்பை ஏற்படுத்தியது அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல்கள் மற்றும் பேட்டிகளை தொடர்ந்து தி.மு.க. தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரியை, அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்தார். கட்சிக்கு எதிராக துரோக செயல்களில…

  21. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பாராளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விவாதிக்க தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 15–ந் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும், பொதுச்செயலாளர் அன்பழகனுக்கும் வழங்கப்பட்டது. இந்த பொதுக்குழுவில் தென்மண்டல தி.மு.க. செயலாளர் மு.க.அழகிரி கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் தி.மு.க. நிர்வாகிகள் பெயருடன் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. தி.மு.க. பொதுக்குழு மீண்டும் நடக்க இருப்பதாக மு.க.அழகிரி படத்துடன் அந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதற்கு தி.மு.…

  22. கருணாநிதியுடன் மு.க.அழகிரி திடீர் சந்திப்பு! சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியை, மு.க.அழகிரி திடீரென சந்தித்து பேசினார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது தே.மு.தி.க.வை, தி.மு.க தலைவர் கருணாநிதி கூட்டணிக்கு அழைத்தார். இதனை கடுமையாக விமர்சித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு மு.க.அழகிரி பேட்டி கொடுத்தார். இதைத் தொடர்ந்து, தி.மு.க.வில் இருந்து அழகிரி தற்காலிகமாக நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி தெரிவித்த கருத்து தி.மு.க தலைமையை கலங்கடித்தது. இதனால் அழகிரி தி.மு.க.வில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். 2014ம் ஆண்டு, மார்ச் 25ம் தேதி இந்த அதிரடியை முடிவை தி.மு.க தலைமை எடுத்…

    • 3 replies
    • 634 views
  23. கருணாநிதியுடன் வைகோ சந்திப்பு: 2004 மக்களவைத் தேர்தல் போல மெகா கூட்டணி அமைக்க ஸ்டாலின் வியூகம் கோப்புப் படம்: ஸ்டாலின் கடந்த 2004 மக்களவைத் தேர்தலைப் போல திமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்க அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வியூகம் அமைத்து வருகிறார். 2011 சட்டப்பேரவைத் தேர்தல், 2014 மக்களவைத் தேர்தல், 2016 பேரவைத் தேர்தல் என தொடர்ந்து 3 தேர்தல்களில் திமுக தோல்வி அடைந்தது. கடந்த 2016 தேர்தலில் நூலிழையில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை திமுக இழந்தது. இது திமுக தொண்டர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அசாதாரண சூழல் ஜெயலலிதா மறைவால் அதிமுகவிலும்…

  24. தி.மு.க. தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் வீட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று காலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து தெரிவித்தேன். இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை பேச்சுவார்த்தைக்கு முன்பாக விடுவிக்க முடியாது என்று கூறிய இலங்கை மந்திரியின் பேச்சு இந்திய அரசுக்கு விடுக்கும் சவாலாகும். இந்த கருத்தால் தமிழக மீனவர்களிடையே கருத்து மோதல் ஏற்படும் சூழல் ஏற்படும். மதவாத சக்திகள் வென்றுவிட கூடாது என்பதற்காக பா.ஜனதா கூட்டணியில் சேரக்கூடாது என்று விஜயகாந்திடம் கூறியிருந்தேன். அவர் தனது நிலைப்பாட்டை பிப்ரவர…

  25. கருணாநிதியை அடித்தாரா அழகிரி முன்னதாக நேற்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரியிடம், துரைமுருகனை சந்தித்தது ஏன்? என்று கேட்கப்பட்டது. இதற்கு தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலர் என்ற முறையில், அவரை சந்தித்தேன். காரணமில்லாமல் என் ஆதரவாளர்களை நீக்கியது குறித்து விளக்கினேன் என்றார். மேலும் உங்க அப்பாவை (கருணாநிதியை) அடித்ததாக சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு "யாராவது அப்பாவை அடிப்பாங்களா? உங்க அப்பாவை நீங்க அடிப்பீங்களா? என்று கேட்டிருந்தார். இந்நிலையில்தான் இன்று அழகிரி உரத்த குரலில் தம்மை வெறுக்கத்தக்க வார்த்தைகளில் பேசியதாக கருணாநிதி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. - See more at: http://m.oneindia.in/tamil/news/tamilnadu/azhagiri-deny-karunanidhi-s-upset-stateme…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.