தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10260 topics in this forum
-
கொரோனா வைரஸ் குறித்து வாட்ஸப் மூலம் வதந்தி பரப்பியதாக 'ஹீலர் பாஸ்கர்' என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் மூன்றாம் தேதிவரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்தூர் குனியாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹீலர் பாஸ்கர். நிஷ்டை என்ற பெயரில் அமைப்பு ஒன்றை நடத்திவரும் ஹீலர் பாஸ்கர், மருந்தில்லா மருத்துவம், இயற்கை மருத்துவம் என்ற பெயரில் மருத்துவம் செய்துவந்தார். யூ டியூபிலும் இது தொடர்பாக அவர் பேசி வந்தார். இந்த நிலையில், கடந்த மார்ச் 17ஆம் தேதியன்று கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பாக செய்தி ஒன்றை சமூக வலைதளங்கள் மூலம் ஹீலர் பாஸ்கர்…
-
- 3 replies
- 688 views
-
-
வேள்வியும் கேள்வியும்: யார் இந்த விஜயபாஸ்கர்? அமைச்சர் விஜயபாஸ்கர் படம்: க.ஸ்ரீபரத். அவ்வளவு தத்ரூபமாக ஜெயலலிதாவின் படத்தை அதற்கு முன் யாரும் வரைந்திருக்க முடியாது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் வரையப்பட்டிருந்த அந்த கோலமாவு ஓவியத்தை பார்த்து மகிழ்ந்த ஜெயலலிதா அப்போது அதிமுகவில் முக்கிய இடத்தில் இருந்த முன்னாள் அமைச்சர் ரகுபதியிடம் யார் இந்த ஏற்பாட்டையெல்லாம் செய்தது என்று கேட்கிறார், அதற்கு இந்த ஏற்பாடுகளை மருத்துவ மாணவரான தனது மகன் அண்ணாமலையும், அவரது நண்பரும் மருத்துவ மாணவரான விஜயபாஸ்கரும் ஏற்பாடு செய்ததாக கூறுகிறார். அப்போது தொடங்கியது, விஜயபாஸ்கரின் அரசியல் அத்தியாயம். …
-
- 0 replies
- 688 views
-
-
ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், கால்நடைகள், பொதுமக்கள் குடிநீரின்றி பரிதவித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பெரிதும் நம்பியுள்ள வடகிழக்கு பருவமழை, கடந்த சில ஆண்டுகளாக சிறிதளவு கூட பெய்யவில்லை. முன்மழை, பின்மழை, மத்திய மழை என்றெல்லாம் அழைக்கப்பட்டு வந்த வடகிழக்கு பருவமழை கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த மாவட்டத்தில் பெய்யாமல் போய் விட்டது. கடும் புயல் காலங்களிலும் இந்த பகுதியில் மட்டும் சொட்டு தண்ணீர் கூட மழையாகப் பெய்யவில்லை. வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது என்று கூறும் அளவிற்கு ஒரு நாள் பெய்த மழையும் கடல்பகுதியில் பெய்து வீணாகி போனது. …
-
- 0 replies
- 688 views
-
-
ஞாயிறு அரங்கம்: ஜெயலலிதாவாதல்! திமுகவின் ‘முதல்வரை ஸ்டிக்கர்ல பாத்திருப்பீங்க, பேனர்ல பாத்திருப்பீங்க, ஏன் டிவியில பாத்திருப்பீங்க.. நேர்ல பாத்திருக்கீங்களா? என்னம்ம்ம்மா இப்படிப் பண்றீங்களேம்மா!' விளம்பரமும் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாள் களேபரங்களும் தேசியக் கவனம் பெற்றிருக்கின்றன. இந்த 5 ஆண்டுகளில் சென்னையிலிருந்து கொடநாடு, பெங்களூருவைத் தாண்டி ஜெயலலிதா சென்ற இடங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மக்கள் - அரசியல்வாதிகள் இடையேயான தொலைவுக்கான குறியீடு ஜெயலலிதாவின் அரசியல். இந்திய அரசியலில் கேலிக்கூத்துகளுக்கு எந்தக் காலத்திலும் பஞ்சம் இருந்ததில்லை. எனினும், ஜெயலலிதாவையும் அதிமுகவினரையும் அந்தப் பட்டியலில் சேர்க்…
-
- 0 replies
- 688 views
-
-
தேமுதிக திடீர் போராட்டம்.. துரைமுருகன் வீடு முற்றுகை லோக்சபா தேர்தலையொட்டி கூட்டணிகள் இறுதி செய்யப்படுவதால், தமிழக அரசியல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இன்று அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி உறுதியாகலாம் என தகவல்கள் கூறுகின்றன. மற்றொரு பக்கம், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில், பிரபல நடிகை கோவை சரளா இணைந்துள்ளார். அதிமுகவுடன் கூட்டணி வைத்தால்தான் வாழ்வு என பிற கட்சிகள் எண்ணுகின்றன என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளது கூட்டணி கட்சிகள் நடுவே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டை தேமுதிகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Read more at: https://tamil.oneindia.com/news/chennai/stay-with-this-l…
-
- 0 replies
- 688 views
-
-
`ஓரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே தேர்தல், ஒரே சட்டம் என்று ஒற்றைமயமாக்கல் பேசும் பா.ஜ.க, ஒரே நாட்டுக்குள் இருக்கும் கர்நாடகத்திடமிருந்து காவிரி நீரைப் பெற்றுத் தராதது ஏன்?' - சீமான் காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக கர்நாடகம் - தமிழ்நாடு இடையே மோதல்போக்கு நீடித்து வருகிறது. இதற்கிடையில், உச்ச நீதிமன்றம், "தினமும் வினாடிக்கு 5,000 கனஅடி வீதம் 15 நாள்களுக்கு தண்ணீர் திறக்க, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை அமல்படுத்த வேண்டும்" என கடந்த 21-ம் தேதி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப…
-
- 0 replies
- 687 views
-
-
ஆயிரங்கண் போதாது வண்ணக் கிளியே குற்றால அழகை நான் காண்பதற்கு வண்ணக்கிளியே" என்பது வெறும் திரைப்படப்பாடல் மட்டுமன்று. திருக்குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடராசப்ப கவிராயர் இந்த மலையின் வளத்தை வியந்து பாடியுள்ளார். "வானரங்கள் கனி கொடுத்து..." என்னும் வரிகளோடு தொடங்கும் அந்தப் பாடல் நீர்நிலைகள், பாறையிடுக்குகளில் பொதிந்திருக்கும் தேன்கூடுகள், புள்ளினங்கள், தாவரங்கள், விலங்குகள் என மலையில் காணும் இயற்கையின் பல்லுயிர்களையும், காலந்தோறும் தொடரும் இதமான சாரலையும் அதன் எழிலையும் பாடி... திருகூடமலை எங்கள் மலையே" என்று அவர் பெருமிதம் கொள்கிறார். அவர் இயற்றிய திருக்குற்றாலக் குறவஞ்சி நாட்டிய நாடகம் இன்றைக்கும் அரங்கேறுகிறது. மஞ்சள் கடம்பு, கரையான் அரிக்காத விடத்தேரை போன்ற மர வகைகளும்,…
-
- 0 replies
- 687 views
-
-
முதுகெலும்பை பற்றி திமுக பேசலாமா?! on August 8, 2019 காஷ்மீர் பிரச்சனை விவாதத்தில் குறுக்கிட்டு பதிலளிக்க முயன்ற அதிமுக MP ரவீந்திரநாத்தை “மக்களவை என்பது முதுகெலும்பு உள்ளவர்கள் பேசும் இடம். உங்களுக்கு முதுகெலும்பே கிடையாது, உட்காருங்கள்” என்று கூறி இருக்கிறார் TR பாலு. முதுகெலும்பு பற்றி யாரெல்லாம் பேசுவது என்று விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது. எனக்கு இது குறித்துக் கடுமையான கோபம் வரக்காரணமே “முதுகெலும்பு” வார்த்தை தான். வேறு ஏதாவது கூறியிருந்தால், பத்தோடு பதினோராவது விமர்சனமாகக் கடந்து சென்று இருப்பேன். Image Credit – Mobile Journalist இவர்கள் 2009 ல் 40 MP பதவிகளை வைத்துக்கொண்டு காங் அரசுக்கு எதிரா…
-
- 0 replies
- 687 views
-
-
பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் வடசென்னை ஆர்.கே.நகர் பகுதியைச் சேர்ந்த திருநங்கை சுதா, ஏப்ரல் மாதம் நடைபெற…
-
- 0 replies
- 687 views
-
-
மக்கள் நலக்கூட்டணியிலிருந்து விலகுகிறது தேமுதிக: அறிவிப்பு விரைவில் வெளியாகிறது மக்கள் நலக்கூட்டணியிலிருந்து தேமுதிக விலகவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக 104 இடங்களில் போட்டியிட்டது. கட்சியின் தலைவர் விஜயகாந்த் உட்பட 104 பேரும் படுதோல்வி அடைந்தனர். தேமுதிகவின் இந்த தோல்விக்கு மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி அமைத்ததுதான் காரணம் என்று நிர்வாகிகள் பலரும் விஜயகாந்திடம் எடுத்துக் கூறினர். சமீபத்தில் நடந்த மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தேமுதிக நிர்வாகிகளின் வலியுறுத்தல் பற்றி பேசிய வைகோ, ‘‘தேமுதிகவும், தமாகாவும் கூட்டணியை விட்டுச் சென்றால் எந்த…
-
- 6 replies
- 687 views
-
-
அ.தி.மு.க., பொதுக் கூட்டம் மற்றும் இலக்கியப் பேரவை சார்பில் நடந்த பட்டிமன்ற நிகழ்ச்சியில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டபோது ம.தி.மு.க., கூட்ட நிகழ்வு தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாறு குறித்த வீடியோ இறுவெட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டன. சேலம் புறநகர் மாவட்ட, அ.தி.மு.க., சார்பில் ஆத்தூரில் கடந்த, ஜூலை 30ம் திகதி தமிழக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் நடந்தது. அடுத்த நாள் ஆத்தூர் இலக்கியப் பேரவை சார்பில் நகராட்சி அண்ணா கலையரங்கில் பட்டி மன்ற நிகழ்ச்சி நடந்தது. இதில், ம.தி.மு.க.,வில் இருந்து, அ.தி.மு.க.,வில் இணைந்த, நாஞ்சில் சம்பத் பேசினார். அ.தி.மு.க., பொதுக் கூட்டம் மற்றும் பட்டி மன்ற நிகழ்ச்சி நடந்த இடத்தில், ஆடியோ மற்றும் வீடியோ, இறுவெட்டுக்கள் விற்பனை …
-
- 2 replies
- 687 views
-
-
மீண்டும் காலில் விழும் கலாசாரமா முதல்வர் மீது அமைச்சர்கள் கோபம் முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலா காலில் விழுந்து வணங்கியது, அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம், கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை காணும் போதெல்லாம், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகி கள், அவரது காலில் விழுந்து வணங்குவர். எதிர்க்கட்சியினர் கிண்டலடித் தாலும், காலில் விழும் பழக்கத்தை, அ.தி.மு.க.,வினர் கைவிடவில்லை. ஜெ., மறைவை அடுத்து, பன்னீர்செல்வம் முதல்வரானார்.பொதுசெயலர் பதவிக்கு அவர் போட்டியிடுவார் என, கட்சியினர் எதிர்பார்த்தனர்; ஆனால், அவர் சசிகலாவை முன்னிறுத்தினார். மற்ற அமைச்சர்களும்,…
-
- 1 reply
- 687 views
-
-
#BREAKING அ.தி.மு.க அலுவலகத்தில் கைகலப்பு சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கே காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிமுக பொது செயலாளருக்கான வேட்பு மனுக்கள் வழங்கப்பட்டு வருகிறது. அப்போது, சசிகலா புஷ்பாவின் வழக்கறிஞர்கள் அதிமுக அலுவலகம் வந்த போது கைகலப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. http://www.vikatan.com/news/tamilnadu/76156-quarrel-in-between-admk-head-office.art
-
- 3 replies
- 687 views
-
-
தனிமனித கோபங்களை தவிர்த்து செயல்பட வேண்டிய பேரிடர் காலம்: கமல்ஹாசன் உருக்கம் நான் கட்டிய வரிப்பணம் என்னவாயிற்று என்று நான் சொன்னதாக சொல்லப்பட்ட வார்த்தைகள் யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், இந்த நேரம் கட்சிகளுக்கு அப்பாற்பட வேண்டிய நேரம், மதங்கள் தனிமனிதக் கோபங்களையும் தவிர்த்துச் செயல்பட வேண்டிய பேரிடர் காலம் என்று உருக்கமாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் கட்டிய வரிப்பணம் என்னவாயிற்று என்று நான் கேள்வி எழுப்பியது போல் சில ஊடகங்களில் சற்று நாட்களுக்கு முன் வந்த செய்தி நான் அந்த ஊடகங்களுக்கு அளித்த பிரத்தியேக பேட்டி அல்ல. மின் அ…
-
- 0 replies
- 687 views
-
-
சசிகலா இன்று விடுதலை: இன்னும் எத்தனை நாட்கள் பெங்களூருவில்? மின்னம்பலம் சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலாவின் தண்டனைக் காலம் இன்றோடு (ஜனவரி 27) முடிவடைகிறது. இன்று காலை 9.30 முதல் 10 மணிக்குள் அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட இருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக ஜனவரி 20 ஆம் தேதி சசிகலா உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று பாதிப்பும் ஏற்பட்டு தற்போது பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நலம் தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், இன்று (ஜனவரி 27) சசிகலா …
-
- 1 reply
- 687 views
-
-
அனைத்துலக ரீதியிலான தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 27வது நினைவு வணக்கம் நாளை நடை பெறுகிறது. அந்தவைகையில் நாளை (26-09-2014) கலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணி வரை சென்னை செங்கொடி அரங்கம் கோயம்பேட்டில் தமிழக மாணவர்களால் அடையாள உண்ணா நோன்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/34094/57//d,article_full.aspx
-
- 1 reply
- 687 views
-
-
ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆளுநரின் நம்பிக்கை! - எம்.பிக்கள் கூட்டத்தில் உறைந்த சசிகலா பிரதமருக்குத் தொடர் கடிதம், அரசியல் கட்சித் தலைவர்கள் சந்திப்பு என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உற்சாகத்தோடு வலம் வரத் தொடங்கிவிட்டார். 'குடியரசு தினத்தில் ஓ.பி.எஸ் கொடியேற்றுவார் என ஆளுநர் அலுவலகம் கொடுத்த உத்தரவும் ஜெயலலிதா மரணம் குறித்து அளிக்கப்பட்ட மனுவை பணியாளர் நலத்துறைக்கு ஒப்படைத்ததையும் அதிர்ச்சியோடு கவனிக்கிறார் சசிகலா' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக பதவியேற்ற சசிகலா, 'ஜனவரி 2-ம் தேதி முதல்வராக பதவியேற்பார்' என நிர்வாகிகள் பேசி வந்தனர். அதன்பிறகு, 'ஜனவரி 12-ம் தேதி முதல்வர் ஆவார்' என்றனர். அதையொட்டி, அமைச்சர்கள் …
-
- 2 replies
- 687 views
-
-
கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா: எடப்பாடி,அண்ணாமலைக்கு அழைப்பு. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியிடும் நிகழ்ச்சி தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத்சிங் பங்கேற்று கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகினறது. இந்த விழாவில் கூட்டணி கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோரும் பங்கேற்க முதலமைச்சர் விரும்புகிறார். அதன் அடிப்படையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர…
-
-
- 7 replies
- 686 views
- 2 followers
-
-
'இப்படியொரு அவமானத்தைப் பார்த்ததில்லை!' - மெரினா வன்முறைக்கு விதைபோட்டாரா அமைச்சர்? சென்னை, மெரினா கடற்கரையில் அறவழியில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் போலீஸ் நடத்திய அராஜகத்திற்கு எதிராக கொந்தளித்து வருகின்றனர் மாணவர்கள். ‘அ.தி.மு.கவின் முக்கிய அமைச்சருக்கு சொந்த ஊரில் நேர்ந்த அவமானத்தின் காரணமாகவே, போலீஸாரால் உச்சகட்ட வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது' என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தில். தமிழக சட்டப் பேரவையில் ஜல்லிக்கட்டுக்கான அவசர முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. 'இதுவே நிரந்தரத் தீர்வுதான்' என ஆளும்கட்சி தரப்பில் பேசி வருகின்றனர். உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் அரி பரந்தாமன் உள்ளிட்…
-
- 0 replies
- 686 views
-
-
சென்னை: தி.மு.க.வில் இருந்து விலகிய நடிகை குஷ்பு, விரைவில் நல்ல முடிவு எடுக்கப் போகிறேன் என்று அறிவித்துள்ளார். அ.தி.மு.க.வில் குஷ்பு சேரப் போகிறார் என்றும் கூறப்படுகிறது. நடிகை குஷ்பு தி.மு.க.வில் இருந்தபோது கட்சித் தலைவர் பதவி தொடர்பாக மு.க.ஸ்டாலின் மீது விமர்சனம் செய்ததாக கூறிய திமுகவினர் அரை கடுமையாக விமர்சித்து பேசியதோடு, அவர் மீது செருப்பு வீச்சும் நடந்தது. அதோடு, கட்சி கூட்டம், போராட்டம் உள்ளிட்டவற்றில் குஷ்பு ஓரம் கட்டப்பட்டார். இதனால், கடும் அதிருப்தியில் இருந்தார். இதனிடையே, திடீரென திமுகவில் இருந்து விலகுவதாக கூறிய கட்சித் தலைவர் கருணாநிதிக்கு கடிதம் எழுதினார். இதனையும் கருணாநிதி ஏற்றுக் கொண்டார். இந்நிலையில், அதிமுகவில் குஷ்பு சேரப்போவதாக தகவல…
-
- 4 replies
- 686 views
-
-
ஸ்டெர்லைட்: இந்தியாவில் வேதாந்தாவின் சர்ச்சைக்குரிய 4 திட்டங்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழ்நாடு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிரான போராட்டங்களும், அதனை தொடர்ந்து போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதற்கு பிறகு வேதாந்தா நிறுவனம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES பிரிட்டன் நிறுவனமான வேதாந்தா சர்ச்சையில்…
-
- 0 replies
- 686 views
-
-
சென்னை: சென்னையில் ஓட்டல் ஊழியர் ஒருவர் 16 வயது சிறுவனால் தெருவில் குத்திக் கொலை செய்யப்பட்டார். இருவருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. குற்றவாளியான சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை ஆயிரம்விளக்கு, அஜ்முல் தெருவைச் சேர்ந்த வினோத் (வயது 32), பாண்டிபஜாரில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பெயர் பாரதி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, சீட்டு விளையாட்டில் கிடைத்த ரூ.30 ஆயிரத்தைக் கொண்டு நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார் வினோத். பின்னர், ஆயிரம்விளக்கு அண்ணாசாலை-பத்தாரி சாலை சந்திப்பில், நண்பர்களுடன் போதை உற்சாகத்தில் அவர் பேசிக்கொண்டிருந்த வினோத்தையும், அவரது நண்பர் தபேலா பாஸ் எ…
-
- 0 replies
- 686 views
-
-
கச்சத்தீவுக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவ்வாறு, 4 விசைப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 29 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காரை நகர் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று பின் கொரோனா தடுப்பு முகாமில் தனிமைபடுத்தப்பட்டனர். குறித்த சம்பவம், கடந்த திங்கள் கிழமை(14.12.2020) காலை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 29 மீனவர்களையும் 4 விசைப்படகுகளையும் கைது செய்ததை கண்டித்து, இன்றுமுதல் மீனவர்களையும் படகுகளையும் இலங்கை அரசு விடுதலை செய்ய வேண்டுமெனக்கோரி, ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்…
-
- 0 replies
- 686 views
-
-
வேலூரில் அரை நிர்வாண ராகிங்: சஸ்பெண்ட் ஆன ஏழு பேர் மீது போலீஸில் புகார் - முழு விவரம் பட மூலாதாரம்,PTI படக்குறிப்பு, கோப்புப்படம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி விடுதியில் புதிதாகச் சேர்ந்த மாணவர்களை, ஏற்கெனவே இருந்த மாணவர்கள் 'ராகிங்' செய்தபோது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ வைரலான நிலையில், ஏழு மாணவர்களை கல்லூரி நிர்வாகம் இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டம் பாகாயத்தில் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி இயங்கிவருகிறது. இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 400 மாணவர்கள் படித்துவருகின்றனர். இவர்களில் பலர் இங்குள்ள விடுதியில் …
-
- 0 replies
- 686 views
- 1 follower
-
-
டெல்டாவில் சீமான் தலைமையில் கஜா நிவாரண பணிகள்.. அகதிகள் முகாமில் உதவி.. பெரும் வரவேற்பு ! தஞ்சாவூர்: கஜா புயலால் பாதிக்கப்பட்டு இருக்கும் டெல்டா மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரிய அளவில் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார். கஜா புயலால் டெல்டா பகுதிகள் பெரும் சேதத்திற்கு உள்ளாகி உள்ளது. அங்கு அரசு பெரிய அளவில் இன்னும் நிவாரண பணிகளை செய்யவில்லை.இந்த நிலையில் அங்கு நிவாரண பணிகளை சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி செய்து வருகிறது. மூன்று நாட்கள் நாம் தமிழர் கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மூன்று நாட்கள் இந்த நிவாரண பணிகள் திட்டமிடப்பட்டு இருக்கிறது. நேற்று காலை தொடங்கிய இந்த நிவாரண உதவி வழங்கும் பணிகள் நாளை இ…
-
- 1 reply
- 686 views
-