Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பின் வாங்குகிறாரா சசிகலா? #OPSVsSasikala அ.தி.மு.க சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவுக்குப் பதில், மன்னார்குடி குடும்பத்தினரில் வேறுநபர் ஒருவரை முன்னிறுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் தியானத்துக்குப் பின்னர், கடந்த 5-ம் தேதி, சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்துகளை, சசிகலா தரப்பு தொடர்ந்து மறுத்து வந்த போதிலும், முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் கீழ்மட்டத் தொண்டர்களிடையே ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு பெருகி வருவதைத் தடுக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் சென்னை வந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா இர…

  2. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: களத்தில் 945 காளைகள் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக தொடங்கியுள்ளன. ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்குமுன் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் முன்னிலையில் மாடுப்பிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறும் இந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 945 அதிகமான காளைகள் பங்கேற்றுள்ளன. இதில் கலந்துக்கொண்ட அவனியாபுரத்தைச் சேர்ந்த ராமரின் காளை பத்து நிமிட்ங்களுக்கு மேல் களத்தில் நின்று வென்றுள்ளது. …

  3. சன் நெட்வொர்க் நிறுவனத்தின் சி.ஓ.ஓ.-வாக பணியாற்றி வரும் பிரவீண் சதங்கதோடி இன்று சென்னையில் மத்திய குற்றப் பிரிவு காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சூர்யா தொலைக்காட்சி நிர்வாகத்தையும் கவனித்து வரும் பிரவீணுக்கு வயது 52 என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்த பெண் ஊழியரை 5 மாதங்களுக்கு முன்பு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சம்பந்தப்பட்ட ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில் பிரவீண் இன்று அவரது அண்ணா நகர் இல்லத்தில் கைது செய்யப்பட்டார். பெண் நிகழ்ச்சித் தயாரிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, கொச்சிக்கு அவரை பணியிட மாற்றம் செய்துள்ளார். இதனையடுத்து அந்தப் பெண் ஊழியர் தனது பணியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து தன்னை பாலியல் ரீதியாக தொந்தர…

  4. ஸ்பீக்கர் உதவியுடன் பேசும் ஜெயலலிதா : அப்பலோ மருத்துவமனை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 'ட்ராக்யோஸ்டமி' செய்யப்பட்டிருப்பதால், சிறிய ஸ்பீக்கர் உதவியுடன் பேசுவதாக அப்பலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்திருக்கிறார். சென்னைக்கு அருகில் இன்று நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய பிரதாப் ரெட்டி, "ட்ராக்யோஸ்டமி செய்யப்பட்டவர்கள் பொதுவாகப் பேச முடியாது. ஆனால், ஜெயலலிதாவுக்கு சிறிய ஸ்பீக்கர் பொருத்தப்பட்டிருக்கிறது. இருந்தாலும் பேசுவது எளிதல்ல. மூச்சைப் பிடித்துக்கொண்டு பேசவேண்டும். சில நொடிகளோ, நிமிடங்களோ அப்படிப் பேசுகிறார்" என்று கூறியிருக்கிறார். உடல் நலம் பாதிக்கப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை அப்பல்லோ ம…

  5. ``தமிழ்நாடு முதலமைச்சரும், அமைச்சர்களும் இப்படித்தான் பேச வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது" என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இது சம்பந்தமான வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. உயர் நீதிமன்ற மதுரைக்கிளை திண்டுக்கல்லைச் சேர்ந்த ராமசாமி என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ``புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசாங்கம், இந்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறிவருகிறது. மேலும் இவ்வாறு அழைப்பதை ஊக்கப்படுத்துகிறது. ஒன்றியம் என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறானது. இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். மேலும் இதுபோன்ற வார்த்தையை பயன்படுத்த பின்புலத்தில் தீவிரவாத சக்தியின் உந்துத…

  6. ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு தி.மு.க சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி..! ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்குத் தி.மு.க சார்பில் ஒரு கோடி ரூபாய் அளிக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று தனி இருக்கை அமைப்பதற்கு 40 கோடி ரூபாய் நிதி தேவைப்பட்டது. அதற்கு, உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் நிதி திரட்டி வந்தனர். தமிழக அரசு சார்பில், ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் ஒரு கோடி ரூபாய் தேவைப்பட்ட நிலையில், தி.மு.க சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொ…

  7. நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும் கலைஞர் கருணாநிதியின் கொள்ளுபேரனும், கெவின் நிறுவன இயக்குனர் சி.கே.ரங்கநாதன்-தேன்மொழி தம்பதிகள் மகனுமான மனு ரஞ்சித்துக்கும் பெரியவர்கள் திருமணம் பேசி முடித்திருந்தனர். இந்த திருமண நிச்சயதார்த்த விழா, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள 7 நட்சத்திர ஓட்டலில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட விக்ரமுக்கு மிக நெருக்கமான நண்பர்களும், மற்றும் இரு குடும்பத்தைச் சேர்ந்த நெருக்கமான உறவினர்களும், மணமகள் அக்ஷிதாவின் தோழிகளும், மணமகன் மனு ரஞ்சித்தின் நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டனர். திருமண திகதி பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. என்றாலும் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடக்கும் என்று தெரிகிறது. திருமணத்தை தி.மு.கழக தலைவர் கருணா…

  8. கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை- 3 சூட்கேஸ்களில் இருந்தது என்ன?: சசிகலாவிடம் விசாரிக்க திட்டம் கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா அறையில் 3 சூட்கேஸ்களில் இருந்த பொருட்களை மர்ம கும்பல் கொள்ளையடித்தது. அதில் என்ன இருந்தது தொடர்பாக சசிகலாவிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். கொடநாடு எஸ்டேட்டுக்குள் கடந்த 24-ந் தேதி அதிகாலை புகுந்த கும்பல் ஜெயலலிதா அறையில் இருந்த 3 சூட்கேஸ்களில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.இதை தடுத்த காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூரை தாக்கி விட்டு கும்பல் தப்பி ஓடியது. தகவல் அறிந்து போலீசார்…

  9. “இதுதான் கரெக்ட் டைம்!” - ரஜினிக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் பிரமுகர்கள் “நான் வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்” என்று டயலாக் பேசிய ரஜினியிடம், ‘அரசியலில் கால் பதிக்க இதுதான் கரெக்ட் டைம்’ என வரிசையாகச் சென்று ‘நேரம்’ குறித்துவிட்டு வருகிறார்கள் சில பிரபலங்கள். ரசிகர்கள் சந்திப்பு, சஸ்பென்ஸ் பேச்சு என ரஜினி மீண்டும் ஒருமுறை பரபரப்பை ஏற்படுத்தியது முதலே, அரசியல் பிரமுகர்களும் திரையுலக நண்பர்களும் ரஜினியுடன் தனிப்பட்ட முறையில் சந்திப்பை நடத்தி வருகின்றனர். காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன்தான் இந்தச் சந்திப்புகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டவர். “50 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளின் பிடியிலிருக்கும் தமிழகத்தை மீட்க, ரஜினி அரசியலுக்கு வரவேண…

  10. ராஜீவ்காந்தி கொலை விவகாரம்: வாகனப் பேரணி நடத்த பரிசீலனை முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி இரு சக்கர வாகனப்பேரணி நடத்த அனுமதி கோரும் மனுவை 3 வாரங்களுக்குள் பரிசீலித்து உரிய உத்தரவிடுமாறு டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்ற நேற்று உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவென்றை தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு நேற்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, நீதிபதி மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக டிஜிபியிடம் புதிதாக மனு அளிக்க வேண்டுமென்றும், அந்த மனுவை டிஜிபி மூன்று வாரங்களுக்குள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்ற…

  11. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக, விசாரணை நடத்தும், பார்லிமென்ட் கூட்டுக் குழு முன் ஆஜராகி,பல உண்மைகளை வெளிச்சமிட்டு காட்டுவேன் என, முன்னாள் அமைச்சர் ராஜா, குட்டையை குழப்பியுள்ளார். ராஜாவின் இந்த மிரட்டல் கோரிக்கை குறித்து, ஐ.மு.கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பேசுவோம் என, தி.மு.க.,வும், மத்திய அரசுக்கு நெருக்கடி தர தயாராகிவிட்டது . 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக, பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இதன் அறிக்கையை, நடப்பு பார்லிமென்ட் தொடருக்குள் தாக்கல் செய்யும் வகையில், இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் இக்குழு, முன் ஆஜராகி விளக்கம் அளித்த, அட்டர்ஜி ஜெனரல் வாகன்வதி, மத்திய தொலைத்தொடர்பு துறையின் முன்னாள்அமைச்சர், ராஜாவின் செயல்பாடுக…

    • 2 replies
    • 606 views
  12. EVM குளறுபடிகள்? ஐயநாதன்

  13. மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இருந்து இருவர் தப்பியோட்டம்! மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கி இருந்த இரண்டு இலங்கை தமிழர்கள் சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பி சென்றுள்ளதாக தமிழக உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த வாசுதன் மற்றும் புஷ்பராஜ் ஆகிய இருவரும் இலங்கையில் ஏற்பட்ட இறுதி கட்ட போரின் போது தமிழகத்திற்கு அகதியாக சென்று ராமேஸ்வரம் அடுத்துள்ள மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். வாசுதன் மீது குற்ற வழக்குகள் சில நிலுவையில் இருந்து வந்த நிலையில் இவர்கள் இருவரும் கடந்த இர…

  14. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வக்குமார் பதவி, பிபிசி தமிழ் 4 ஜனவரி 2025 தமிழகத்தில் தேங்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது; கடந்த கோடையில் நிலவிய கடும் வெப்பத்தால் தேங்காய் உற்பத்தி குறைந்ததே இதற்குக் காரணம் என்று விவசாயிகள் கூறுகின்றனர். தற்போது விலை உயர்ந்தாலும் தங்களுக்கு எந்த வகையிலும் பயன் இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர். பதுக்கலும் மற்றொரு முக்கியக் காரணமென்று இவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் அதுபோன்ற எந்தப் புகாரும் தங்களுக்கு வரவில்லை என்று தமிழக அரசின் வேளாண் துறை செயலர் அபூர்வா மறுத்துள்ளார். உற்பத்தி குறைவா? பது…

  15. எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகன் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் வளர்ப்பு மகள் சுதாவின் கணவர் விஜயன் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டிருந்த 7 பேருக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. எம்.ஜி.ஆர் மற்றும் அவரது மனைவியுடன் விஜயன் குடும்பத்தினர் ஆயுள் தண்டனை பெற்றுள்ள 7 பேருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், அதை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2008ல் நடந்த இந்த கொலை சம்பவத்தில் விஜயன் ம…

  16. பெங்களூரு: எனக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து இருப்பது, என் மீது விரோதமும், கடும் வெறுப்பையும் நீதிபதி கொண்டிருப்பதையே காட்டுவதாக மேல்முறையீட்டு மனுவில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ரூ.66 கோடி சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மேல் முறையீடு செய்துள்ளார். அந்த மனுவில், என் மீதான குற்றச்சாட்டுக்களில் தீர்ப்பளித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எனக்கு 100 கோடி ரூபாய் அபராதமாக விதித்துள்ளார். இது ஒரு அசாதாரணமான தீர்ப்பாகும். இதுவரை நடைமுறையில் இல்லாதது. மற்றொரு வகையில் பார்த்தால் எனக்கு விதிக்கப்பட்டுள்ள 100 …

    • 2 replies
    • 606 views
  17. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு – மதுரை சிறையில் இருந்து விடுதலையானார் ரவிச்சந்திரன் Posted on November 13, 2022 by தென்னவள் 9 0 முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வந்த பேரறிவாளன் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 32 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த கடந்த கடந்த மே 18ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இதேபோல் மற்ற 6 பேரையும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். உச்சநீதிமன்ற உத்…

    • 0 replies
    • 606 views
  18. மு.க.ஸ்டாலின் சொன்ன 'சின்னம்மா' கதைகள்! திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ராமஜெயம்-லதா தம்பதியரின் மகள் ஸ்ரீஜனனியின் திருமணம், திருச்சியில் உள்ள கேர் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இத்திருமணத்தை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்டோர் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்கள். திருமண விழாவில் மணமக்களை வாழ்த்திப் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், "தமிழகத்தில் மூன்று முக்கியமான விஷயங்கள் தற்போது பரவி வருகின்றன. அதை உங்களிடம் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். ஒரு ஓட்டுக்கு 3 முதல்வரைப் பார்த்த மாநிலம் என்ற தகவல் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. இதைப் படித்துவிட்டு, பலரும் சிரிக்கிறார்கள். சிலர் வேதனைப்படுக…

  19. ஆலந்தூர், சென்னை விமான நிலையத்தில் 65–வது முறையாக கண்ணாடி கதவு உடைந்து விழுந்தது. இதில் பெண் போலீஸ் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர். உள்நாட்டு – பன்னாட்டு முனையங்கள் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக புதிய முனையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த முனையங்களில் உள்ள மேற்கூரைகள், கண்ணாடி கதவுகள் உள்ளிட்டவை அடிக்கடி உடைந்து விழுகின்றன. இதுவரை 15 முறை மேற்கூரைகளும், 22 முறை தானியங்கி கண்ணாடி கதவுகளும், 20 முறை தடுப்பு கண்ணாடிகளும், 5 முறை சுவற்றில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்களும், ஒரு முறை விளக்கு கண்ணாடி, ஒரு முறை பயண அறிவிப…

    • 6 replies
    • 606 views
  20. பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் விசைப்படகுகள் சுருக்குமடி வலை கொண்டு மீன் பிடிப்பதால், கரையோரங்களில் மீன்பிடிக்கும் நாட்டுப்படகு மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிப்படுவதாக கூறுகின்றனர். குறிப்பாக கடற்கரையில் இருந்து 5 நாட்டிகல் தொலைவுக்குள் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ள பகுதியில் இது நடப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால், இப்படி நடக்கவில்லை என்கிறார்கள் விசைப்படகு மீனவர்கள். இந்த சிக்கலால், நடுக்கடலில் இரு தரப்பு மீனவர்களிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காண, தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை முறையாக ந…

  21. நடுக்கத்தையளிக்கும் விடியல்கள் - பேரறிவாளனை எண்ணி ஏங்கும் தாய் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மரண தண்டனை கைதிகளுல் ஒருவர் பேரறிவாளன். இவரை மீட்க அவரது தாய் அற்புதம்மாள் (66) பல்வேறு வகைகளில் போராடி வருகிறார். இந்தநிலையில் தனக்கு ஒவ்வொரு விடியலும் பயம் கலந்த நடுக்கத்தை அளிப்பதாகவும், ஒரு தாய்க்குதான் தனது துயரங்கள் புரியுமெனவும் உருக்கமாக கூறியுள்ளார் அற்புதம்மாள். தீவிரவாத தாக்குதல்களில் ஈடுப்பட்ட அஜ்மல் கசாப் மற்றும் அப்சல் குருவின் தூக்கு தண்டனை இரகசியமாக நிறைவேற்றப்பட்டதை அடுத்து தனக்கு ஏற்கனவே இருந்த பயம் பன்மடங்கு அதிகரித்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். …

  22. பொள்ளாச்சி பண்ணை வீட்டில் சிறைவைக்கப்பட்ட ஓ.பி.எஸ்?! -ஜெயலலிதாவின் அதிரடி மூவ் இன்றைக்குக் காலையில் பொள்ளாச்சியில்தான் பொழுது விடியும் என்று ஓ.பி.எஸ் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். சட்டமன்ற சீட் பேரத்தின் பின்னணியில் சமீபநாட்களாக நடக்கும் அதிரடி வேட்டைகள் ஓ.பி.எஸ் கூடாரத்தை கலங்கடித்துவிட்டது. தற்போது பொள்ளாச்சியில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் ஓ.பி.எஸ் சிறை வைக்கப்பட்டிருக்கிறாராம்! சமீபநாட்களாக, நிதியமைச்சர் ஓ.பி.எஸ்ஸின் நெருங்கிய வட்டாரங்களை தேடித் தேடி வேட்டையாடி வருகிறது மத்திய குற்றப் பிரிவு காவல்துறை. இதுவரையில், ஓ.பி.எஸ்ஸுக்கு நெருக்கமான நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓ.பி.எஸ்ஸுன் நெருங்கிய நண்பர் சீனி கந்தசாமியை ஏற்கெனவே மத்திய குற்றப்பிரிவு …

  23. தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய சிப்காட் நிறுவனம் மூலம் ₹634 கோடி செலவில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கூறினார். பேரவையில் நேற்று பேரவை விதி 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படித்த அறிக்கை: உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள், தமிழ் சங்கங்கள், தொழில் அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தி முதலீடுகளை ஈர்க்க `யாதும் ஊரே’’ என்ற தனி சிறப்பு பிரிவு மற்றும் வலைதளம் ரூ.60 லட்சம் செலவில் உருவாக்கப்படும். தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கிட ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா, சீனா, தைவான், பிரான்சு, இஸ்ரேல் மற்றும…

    • 0 replies
    • 605 views
  24. பட மூலாதாரம்,ARCHAEOLOGICAL SURVEY OF INDIA படக்குறிப்பு,கீழடி கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் இந்தியத் தொல்லியல் துறையின் சார்பில் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட இரண்டு அகழாய்வுகள் தொடர்பான ஆய்வறிக்கையை அவர் தாக்கல் செய்திருக்கும் நிலையில், சில விளக்கங்களைக் கோரி அந்த ஆய்வறிக்கை திருப்பி அனுப்பப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி என்ன? 982 பக்க அறிக்கை தாக்கல் மதுரையில் இருந்து 13 கி.மீ. தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடி தொல்லியல் தளத்தை 2014-ஆம் ஆண்டுவாக்கில் இந்தியத் தொல்லியல் துறையின் (ஏஎஸ்ஐ) கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் …

  25. இரட்டை இலை சின்னம் வழக்கு: விரைவில் கைதாகிறாரா டிடிவி?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.