Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்த நீங்கள் தேசபக்தி பாடம் எடுக்க வேண்டாம்

    • 0 replies
    • 540 views
  2. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை கிடையாது என அறிவிப்பு! வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கு இனி கட்டாய கொரோனா பரிசோதனை கிடையாது என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதேவேளை, விமானங்களில் வரும் பயணிகளில் 2 சதவீதம் பேரை எழுமாறாகத் தெரிவு செய்து பரிசோதனை மேற்கொள்ளும் நடைமுறை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் அமுலாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் மூன்றாம் அலை தீவிரமடைந்தபோது, மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவரையும் விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.…

  3. “என் ஓவியங்களைப் பற்றி பிரபாகரன் அழைத்து பேசினார்!” - ஓவியர் புகழேந்தி உலகின் ஒரு முக்கியமான பிரச்னைக்காக தனிநபர் ஒருவர் பல ஓவியங்கள் வரைந்து ஆவணப்படுத்துவது என்பது மிகவும் அரிதான விஷயம். ஆனால், உலகில் பலரின் கவனத்தைத் திசைதிருப்பிய தமிழ் ஈழப் பிரச்னைக்காக, 100 ஓவியங்களை வரைந்து ஆவணப்படுத்தி இருக்கிறார் ஓவியர் புகழேந்தி. தஞ்சாவூர் மாவட்டம் தும்பதிக்கோட்டை கிராமத்தில் 1967-ம் ஆண்டு பிறந்த புகழேந்தி இளம் வயதிலேயே ஓவியத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். ஓவியக்கல்லூரியில் படித்து பட்டம்பெற்றார். தமிழ் ஈழத்திற்காக 100 ஓவியங்கள் மற்றும் சமூகத்தின் முக்கியப் பிரச்சனைகளான மதக் கலவரம், சாதி ரீதியான, மத ரீதியான, நிற ரீதியான தாக்குதல் என அ…

  4. கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜுக்கு மூன்று ஆயுள் தண்டனை கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட யுவராஜுக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவரை ஆயுள் முழுவதும் சிறையில் அடைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் கோகுல்ராஜ் என்ற பொறியியல் கல்லூரி மாணவர் 2015ல் சாதி ஆணவக் கொலை செய்யப்பட்டகாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட பத்து பேர் குற்றவாளிகள் என மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் மார்ச் 5ஆம் தேதி தீர்ப்பளித்தது. இவர்களுக்கான தண்டனை விவரம் மார்ச் 8ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி இன்று வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்…

  5. சந்தியா, எம்.ஜி.ஆர், சோ, ஜெயலலிதா... இது போயஸ் கார்டன் வீட்டின் கதை! தமிழகத்தில் கடந்த சில நாள்களாக நடந்துவரும் வருமானவரித்துறை ரெய்டு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது. சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள் இல்லங்களில் நடத்தப்பட்ட வருமானவரிச் சோதனை, அதிர்ச்சிகரமாக இப்போது ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த போயஸ் கார்டன் இல்லத்தையும் தொட்டிருக்கிறது. மனிதர்கள் வாழ்வில் வீடு என்பது மனித உறவுகளுக்கு ஈடான ஓர் பந்தம் கொண்டது. ரத்தமும் சதையுமாக மனிதர்கள் எப்படி உணர்வுபூர்வமானவர்களோ அப்படி செங்கற்கள், சிமென்டினால் கட்டப்பட்ட வீடுகளுக்கும் அந்த மனிதர்களோடு அவர்கள் வாழும் காலத்திலும் அதன்பின்னும் நெருக்கமான ஒரு பந்தம் இருப்பதுண்…

  6. ஜனாதிபதி ஆட்சியை நோக்கி மெல்ல மெல்ல நகரும் தமிழகம்! தமிழகம், ஜனாதிபதி ஆட்சியை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து வருவதாகவே தெரிகிறது நடக்கிற நிகழ்வுகளைப் பார்த்தால். தமிழக அரசு நிர்வாகத்தின் தலைமையிடமான, சென்னையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆளுநருக்கு என்று ஒரு தனி அறை இருக்கிறது. இந்த அறையானது முதலமைச்சரின் அறைக்கு பக்கத்திலேயே இருக்கிறது. இது வெளியுலகில் உள்ள பலருக்கும், ஏன் அரசியல் வாதிகளிலேயே பலருக்கும் தெரியாத ஒரு விஷயம். இதற்கு முக்கிய காரணம் அந்த அறைக்கு தமிழகத்தின் ஆளுநர்களாக இருப்பவர்கள் வருவது என்பது அரிதினும் அரிதானதாகவே இருந்திருக்கிறது. இந்த கட்டுரையாளரின் நினைவுகள் சரியாக இருக்குமானால், கடைசியாக அந்த ஆளுநர் அறைக்கு வந்தவர் ஆளுநர் …

  7. நிச்சயம் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் - அற்புதம்மாள் மே 18-க்கு பிறகு சிறைவாசிகளின் நிலை மாறியுள்ளதாகவும், நிச்சயம் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் எனவும், இரண்டொரு மாதத்தில் அரசு இதனை கவனிக்கும் எனவும் பேரறிவாளனின் தாயார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை புழல் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார். ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைதாகி புழல் சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலையாகி சென்ற நிலையில், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் புழல் சிறையில் உள்ளனர். இந்த நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், அவர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ’’ராபர்ட் பயாஸுக்கு உடல்நலம் சரியில்லை என்பதால் பார்க்க வந்த…

  8. புதுடெல்லி, மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் புதிய மந்திரிசபை கடந்த மாதம் 26–ந் தேதி பதவியேற்றது. புதிய மந்திரி சபையில் 3–ல் ஒருவர் சட்டம் பயின்றவர் (வக்கீல்கள்) என்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் கேபினட் மந்திரிகளான சுஷ்மா சுவராஜ் (வெளியுறவு), அருண் ஜெட்லி (நிதி), வெங்கையா நாயுடு (ஊரக மேம்பாடு), நிதின் கட்காரி (நெடுஞ்சாலை, போக்குவரத்து), சதானந்த கவுடா (ரெயில்வே), ராம்விலாஸ் பஸ்வான் (நுகர்வோர் நலன்) உள்ளிட்ட 15 பேர் சட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளனர். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஹர்சவர்தன் மற்றும் பிரதமர் அலுவலக விவகாரம், பென்சன் துறைக்கான இணை மந்திரி ஜிதேந்திர சிங் ஆகியோர் மருத்துவப்படிப்பை நிறைவு செய்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங் …

    • 2 replies
    • 613 views
  9. கவிஞர் வைரமுத்துவை விமர்சித்த பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜாவுக்கு இயக்குநர் பாரதிராஜா கடும் கண்டனம்

    • 0 replies
    • 340 views
  10. `ஆறு மாதத்தில் தேர்தல் வந்தாலும் ரெடி!' - ரஜினி பளீச் நேரடி அரசியலில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் குதித்துள்ளனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் இருவரும் போட்டியிடுவர் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், `கமலுடன் கூட்டணி வைப்பீர்களா' என்று ரஜினியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, `காலம்தான் பதில் சொல்லும்' என்று பதிலளித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் பேசிய கமல்ஹாசன், `ஜனவரி 26-ம் தேதி முதல் களத்தில் இறங்கப்போகிறேன். பயணத்தை எங்கிருந்து, எப்படி தொடங்குகிறேன் என்பதை வருகிற 18-ம் தேதி வெளியாகும் ஆனந்த விகடனில் எழுதியிருக்கிறேன்' என்று அறிவித்து அ…

  11. தமிழகத்தை அதிரவைக்கும் நித்தியானந்தா – மௌனித்திருக்கும் அதிகார வர்க்கம் – அச்சத்தில் மக்கள்… “கஞ்சா கொடுத்து என் மகளை நித்தியானந்தா மாற்றி விட்டார்” என தந்தை ஒருவர் முறையிட்டுள்ளார். “தை்தியருக்கு படித்த தம் மகனை கஞ்சா கொடுத்து மயக்கி நித்தியானந்தா சாமியார் அணி கடத்தி விட்டதே இதை கேட்பார் யாருமே இல்லையா?” என பெரியகுளம் நீதிமன்ற வளாகத்தில் பெற்றோர் கதறி அழுதனர். வைத்தியருக்கு படித்த மகன் மனோஜ்குமார் மற்றும் சிறுமி நிவேதா ஆகியோரை, சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவின் பெங்களூர் பிடதி ஆசிரமத்தில் இருந்து மீட்க வேண்டும் என பெரியகுளம் வடகரை சுப்பிரமணிய சாவடிதெரு பகுதியைச் சார்ந்த காந்தி என்பவர் காவற்துறையில் முறையிட்டனர். இதன் அடிப்படையி…

  12. எடப்பாடி அரசைக் காப்பாற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்! - ஸ்லீப்பர் செல்களால் உறைந்த மேலிடம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்திறப்பு விழாவை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு உருவாகியுள்ளது. `அ.தி.மு.க-வின் விசுவாசியாகவே மாறிவிட்டார் விஜயதரணி. உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அவர் பேசியது எந்தவகையிலும் சரியானது அல்ல. இதற்காக அவர் ராகுல்காந்தியைத் துணைக்கு அழைத்திருப்பது ஏற்புடையதல்ல' எனக் கொதிக்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள். தமிழக சட்டமன்றத்தில் நேற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'மறைந்த முதல்வர…

  13. 2019ல் கட்சி! - விஷால் அதிரடி! கல்யாணத்துக்கு ரெடி... பொண்ணு இன்னும் முடிவாகலை!கமலைப் பார்த்தாச்சு, ரஜினியையும் சந்திப்பேன்நடிகர்களுக்குச் சம்பளத்தைத் தூக்கிக் கொடுக்காதீங்க!ம.கா.செந்தில்குமார், படங்கள்: கே.ராஜசேகரன் ‘‘நூறு ரூபாய் செலவுல விவசாயி விதைக்கிறான். அதைவிட நூறு மடங்கு விலையில் அந்த விளைபொருளை நுகர்வோர் வாங்குறான். ஆனா, விவசாயிக்கு அசல்கூட மிஞ்சுறது இல்லை. இன்னைக்கு உள்ள தயாரிப்பாளர்களுக்கும் அந்த விவசாயிகளோட நிலைமைதான். தயாரிப்பாளர்கள் தயாரிக்கிற சினிமா, அவங்களைத்தவிர இன்னைக்கு மற்ற எல்லாருக்கும் பயன்தருது. அந்தப் பலன் தயாரிப்பாளருக்கும் கிடைக்க வழிவகை செய்றதுக்காக நாங்க எடுத்துவைக்கிற கடைசி அடிதான் இந்த வேலைநிறுத்தம்” - விஷா…

  14. சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க கர்நாடக உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேவேளையில், தீர்ப்பு விவரம் முழுமையாக வெளிவருவதற்கு முன்பே ஊடகங்களில் 'ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன்' என செய்திகள் வெளியானது. இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் நிராகரித்தது தொடர்பான அதிகாரப்பூர்வ செய்தி வெளியானது. நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வாதத்தின்போது, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் முதலில் வாதிட்டார். பிற்பகலில் தொடர்ந்த வாதத்தின்போது, ந…

  15. நீட் தேர்வில் தோல்வி- விழுப்புரம் மாணவி பிரதீபா விஷம் குடித்து தற்கொலை. நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் விழுப்புரம் மாணவி பிரதீபா எலி மருந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவபடிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் தமிழக மாணவர்கள் 60 பேர் தேர்ச்சி பெற முடியவில்லை.இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பெருவலூரைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி நீட் தேர்வு தோல்வியால் மனமுடைந்து எலி மருந்தை குடித்தார். 10-ம் வகுப்பில் 495 மதிப்பெண்களும் 12-ம் வகுப்பில் 1125 மதிப்பெண்களும் பெற்றவர் பிரதீபா. விஷம் குடித்த நிலையில் ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பிரத…

  16. இராமேஸ்வரத்தில் வெடிபொருட்கள் மீட்பு ; விடுதலைப் புலிகளுடையதாக இருக்கலாம் என சந்தேகம் இராமேஸ்வரம் தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் பகுதியில் கழிவு நீர் கிணறு தோண்டும் போது மர்மமான முறையில் 20க்கும் மேற்ப்பட்ட பெட்டிகள் பொலிஸாரால் மீட்புகப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட பெட்டிகளில் துருப்பிடித்த நிலையில் துப்பாக்கி குண்டுகள் இருப்பதாகவும் இவற்றை விடுதலைபுலிகள் அமைப்பைப் சேர்ந்தவர்கள் பயன்படுத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் பகுதியில் மீனவர் எடிசன் என்பவர் இன்று மாலை அவரது வீட்டில் கழிவு நீர் கிணறு தோண்டியுள்ளார். அப்போது சிதைந்த நிலையில் சுமார் 22 பெட்டிகள் கிடைத்…

  17. அழுக்கேறிய காங்கிரஸ் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருக்கும் இச்சூழலில்,அக்கால காங்கிரஸை எதித்து பேரறிஞர் அண்ணா அவர்கள் 1962 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசியது என்ன? எப்படி? என்பதை இங்கே கேளுங்கள். காங்கிரஸ் என்பது இன்றுமட்டுமல்ல,என்றைக்கும் அழுக்கேறியதுதான் என்பதை அண்ணா கூறுகிறார்.

  18. படத்தின் காப்புரிமை NATHAN G Image caption கௌசல்யா சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக, ஆணவப்படுகொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் சங்கரின் மனைவி கெளசல்யாவிற்கு கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் மறுமணம் நடைபெற்றது. பறை இசை முழங்கும் சமயத்தில் கௌசல்யா - சக்தி ஆகியோர் திருமண உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். சங்கரின் தந்தை வேலுச்சாமி, சங்கரின் இரு இளைய சகோதரர்கள் விக்னேஷ் மற்றும் யுவராஜ் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு தம்பதியை வாழ்த்தினர். சங்கரின் பாட்டி மாரியாயி தம்பதிக்கு மாலை எடுத்து கொடுத்தார். …

    • 8 replies
    • 2.7k views
  19. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது - இந்தாண்டு புதிய மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 44 நிமிடங்களுக்கு முன்னர் தைத்திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டு தென் தமிழகத்தில் பெரும்பாலான கிராமங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இதில், குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடி, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். தைத்திருநாளான இன்று (ஜன. 15) அவனியாபுரத்திலும், நாளை (ஜன.16), பாலமேட்டிலும் நாளை மறுநாள் (ஜன. 17) உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரிலும…

  20. லதா ரஜினிகாந்த் | கோப்புப் படம்: ஆர்.ரகு 'கோச்சடையான்' படத்துக்காக வாங்கிய கடன் தொடர்பான விவகாரத்தில் லதா ரஜினிகாந்த் மீது பெங்களூரு காவல்துறையினர் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்த 'கோச்சடையான்' திரைப்படம் கடந்த 2014-ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை தயாரிப்பதற்காக 'ஆட் பீரோ' நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்த் நஹார் என்பவரிடம் படத்தின் இணை தயாரிப்பாளர் முரளி மனோகர் என்பவர் ரூ.14.9 கோடி கடன் பெற்றுள்ளார். இதற்கு முரளி தாக்கல் செய்த ஆவணங்களுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாத கையொப்பம் போட்டார். இந்நிலையில் அபிர்சந்த் நஹார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முரளி மீதும், லதா ரஜினிகாந்த் மீதும் நிதி மோசடி புகார் தெரிவித்தார்.…

  21. தமிழ்நாட்டில் நாடற்றவர்களாக வாழும் ஈழத்தமிழர்கள்Jun 18, 2015 | சிறிலங்காவுக்கான இந்தியப் பிரதமர் மோடியின் சுற்றுப்பயணமானது ‘திருப்புமுனையாக’ உள்ள போதிலும் உறுதியாக எதையும் சாதிக்கவில்லை. சிறிலங்காவில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெறும் வெற்று வாக்குறுதிகளாகவே காணப்படுகின்றன. இவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இவ்வாறு புதுடெல்லியில் இருந்து வெளியாகும் the statesman நாளிதழில், சாம் ராஜப்பா எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. இன்னமும் சூழல் மாறவில்லை. தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்திலுள்ள அரசலூர் அகதி முகாமிலேயே நந்தினி பிறந்தார். இவரது பெற்றோர்கள் சிறிலங்காத் தீவின் வடக்கு மாகாணத்தில் போர் மேகம் சூழப்பட்ட 1990 …

  22. மக்களுக்கு சேவையாற்ற நமீதா அரசியலில் குதிப்பு 2015-09-03 18:13:16 | General மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசியலுக்கு வர விரும்புகிறேன் என்று நடிகை நமீதா கூறியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த நடிகை நமீதா தற்போது உடல் எடையை 18 கிலோ குறைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் நிருபர்களிடம் கூறியதாவது; தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்துவிட்டேன். தமிழில் வெளிவந்த இளைஞன் படத்துக்கு பிறகு நான் நடிக்கவில்லை. இடைப்பட்ட காலத்தில் வாய்ப்பு வராமல் இருந்ததற்கு காரணம் என் உடல் எடை கூடியதுதான். தற்போது என் உடல் எடையை 18 கிலோ வரை குறைத்துவிட்டேன். மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க விரும்புகிறேன். அரசியலில் இறங்க வேண்டும் என்ற ஆசை எனக்கு ந…

  23. கடல் மட்டம் உயர்வு – நீாில் மூழ்கப் போகும் சென்னையின் ஒரு பகுதி! 2040 ஆம் ஆண்டளவில் கடல் மட்டத்தின் உயர்வு காரணமாக சென்னை மாநகரின் 7 சதவிகித நிலப்பரப்பு கடல் நீரில் அமிழும் எனத் தெரியவந்துள்ளது. இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கடலோர நகரங்களுக்கான கடல் மட்ட உயர்வு மற்றும் கடல்நீர் புகுவது பற்றிய வரைபட அறிக்கையை அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்விற்காக இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரையிலிருந்து 15 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், இவற்றில் சென்னை மற்றும் மும்பை நகரங்களே முதன்மை நகரங்களாக பரிசீலிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 2040 ஆம் ஆண்டில் சென்னை பெருநகரப் பகுதியின் குறிப்பிட்ட பகுதிகள் 7.29 சதவிகிதம…

  24. ஒரு தலித் எப்போதுமே முதலமைச்சர் ஆக முடியாது என்ற திருமாவளவனின் கருத்தை ஏற்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றத்தின் உள் இட ஒதுக்கீடு தீர்ப்பை கண்டித்து சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பேசிய தொல். திருமாவளவன், உச்சநீதிமன்ற தீர்ப்பு பட்டியலின மக்களின் இட ஒதுக்கிட்டு உரிமையை நசுக்கும் விதமாக இருக்கிறது என்று தெரிவித்தார். இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் திரும்ப பெற மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகள் ஆட்சிக்கு வரும் போகும் என்றும் ஆனா…

  25. இலங்கை தூதரகம் முன் முற்றுகைப் போராட்டம் இலங்கை சிறைகளில் வாடும் 162 மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் விடுதலை செய்ய வேண்டும்; இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 192 படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று இலங்கை அரசையும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்க மத்திய, மாநில அரசுகளையும் வலியுறுத்தி அக்டோபர் 8-ஆம் தேதி செவ்வாய்க் கிழமை சென்னையில் பாமக சார்பில் இலங்கை துணைத்தூதரக முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களின் மீதான சிங்களக் கடற்படையினரின் அத்துமீறலும், அடக்குமுறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பாரம்பரி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.