Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா வீடு மீது அமைச்சர் கே.என். நேருவின் ஆதரவாளர்கள் தாக்குதல் - நடந்தது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் தி.மு.கவின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் வீடு, கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமைச்சர் கே.என். நேருவின் ஆதரவாளர்களுக்கும் திருச்சி சிவாவின் ஆதரவாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் விளைவாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திட்டமிடப்பட்டுள்ள பணிகளைத் துவங்கி வைத்ததோடு, ஏற்கனவே திட்டமிடப்பட்டு பணிகள் முடிவடைந்த திட்டங்களைத் நகராட்சி நிர்வாக துறை அமைச்ச…

  2. கூடங்குளம் அணு உலையின் 4 வால்வுகளில் பழுது என்றும், எனவே மின் உற்பத்தி தாமதமாகும் என்றும், தேசிய அணுமின் கழகம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. கூடங்குளம் அணுமின் நிலையம் வேண்டாம் என்றும், உடனடியாக அதை மூடியே ஆகவேண்டும் என்றும், கூடங்குளம் சுற்றியுள்ள அணு உலைக்கு எதிரான மக்கள் பல கட்ட போராட்டங்களை இன்று வரை நடத்திக் கொண்டே இருக்கின்றனர். போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உதிரி பாகங்கள் தரமற்றவையாக ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அதனால் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் உயிரிழந்து உள்ளனர். இது மர்மமான முறையில் மறைத்து வைக்கப்படுகிறது. இது போன்ற மர்மங்கள் நீடிப்பதால் கூடங்குளம் அணுமின் நிலையத்தின…

  3. ஆர்.கே நகரில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா வீடியோ! #VikatanExclusive இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 12 ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திமுக மற்றும் அதிமுகவின் 3 அணிகள், பாஜக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் களம் காணும் இத்தொகுதியில் வேட்பாளர்கள் பரபரப்பாக பிரசாரம் மேற்கொண்டுவருகிறார்கள். இந்நிலையில் அதிமுக (அம்மா ) அணி சார்பில் போட்டியிடும் டி.டி.வி. தினகரன் அணி நேற்றுமுதல் வாக்காளர்களுக்கு பண வினியோகம் செய்யத்துவங்கியிருப்பதாக புகார் எழுந்துள்ளது. அந்தந்த பகுதிகளைப்பொறுத்து வாக்காளர்களுக்கு தலா 2000 முதல் 4000 வரை பணம் தரப்படுவதாக சொல்லப்படுகிறது. அந்தப் பகுதிக்கென ஒதுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் அதிகாலையில் வீடுவிட…

  4. திய வரைபடத்தில் இருந்து தமிழ் நாட்டை பிரித்து மணவர்கள் போராட்டம் தற்போது தமிழ் நாடு திருச்சியில் பல ஆயிரம் மாணவர்கள் அணிதிரண்டு நடத்திவரும் மாபெரும் போராட்டத்தின் போது இந்திய அரசின் அலுவலகங்கள் முற்றுகையிட்டு அங்கு உள்ள மத்திய அரசுக்கு உரித்தான பதாகைகள் அடித்து நொறுக்கப்பட்டு அங்கு ஒரு அலுவலகத்தில் இருந்த இந்தியாவின் வரைபடத்திலிருந்து தமிழ் நாட்டை பிரித்தெடுத்துவிட்டு இந்தியாவின் வரைபடத்தை தீயிட்டு கொளுத்தியுள்ளனர் மாணவர்கள். இதே போன்றே இந்திய அரசுக்கு சொந்தமான வங்கிகளும் முற்றுகையிடப்பட்டுள்ளதோடு வங்கிகளின் கதவுகளுக்கு பூட்டு போடுவதற்கு மாணவர்கள் முயன்ற போது வங்கியின் காவலர்களே வங்கியின் கதவுகளை அடைத்துவிட்டு உள்ளே பதுங்கியுள்ளதாக அங்கிருந்து ஈழதேசம் நிருபர் தெ…

    • 0 replies
    • 552 views
  5. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் சென்னையில் வீட்டில் எலி மருந்து வாயு பரவி இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவன ஊழியர்களின் அலட்சியத்தால் இந்தச் சம்பவம் நடந்ததாக, காவல்துறை கூறுகிறது. மூடிய அறைக்குள் எலி மருந்து வாயுவின் வீரியம் அதிகரித்து உயிரிழப்பை ஏற்படுத்தும் என்கின்றனர், மருத்துவர்கள். எலிகளைக் கொல்வதற்காக வைக்கப்படும் மருந்து மனித உயிரைப் பறிக்குமா? இதுபோன்ற மருந்துகளைப் பொதுமக்கள் எவ்வாறு கையாள வேண்டும்? என்ன நடந்தது…

  6. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் ஆசையில் உள்ள, அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், சுப்ரீம் கோர்ட், இன்று காலை, 10:30 மணிக்கு தீர்ப்பு அளிக்க உள்ளது. 20 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கின் தீர்ப்பு, சசிகலாவுக்கு சிறையா; முதல்வர் பதவியா என்பதை தீர்மானிக்க உள்ளதால், மன்னார்குடி கூட்டமும், அவருக்கு ஜால்ரா அடிக்கும் அமைச்சர்களும் பீதியில் உறைந்துள்ளனர். இதற்கிடையில், கூவத்துாரில் அடைத்து வைக்கப்பட்டுள்ள, எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் பன்னீர்செல்வம் பக்கம் ஓடிவிடக் கூடாது என்பதற்காக, சசிகலா நேற்று அங்கேயே தங்கினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தோழி சசிகலா, அவரது அண்ணி இளவரசி, ஜெ.,யின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோர், வரு…

  7. இன்றைக்கு தமிழகமெங்கும் நடைபெற்றுக் கொண்டுள்ள மாணவர் போராட்டங்களின் ஒரு பகுதியை இது! (-) சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து காலவரையற்ற உண்ணாப் போராட்டத்தை 10 மாணவர்கள் அடையாறில் நடத்திக் கொண்டுள்ளனர். (-) சென்னை செங்கல்பட்டு சட்டக் கல்லூரியில் மாணவர்கள் தனஞ்செழியன், சுதன், கிங்ஸ்லி பால்ராஜ், கோபி, சதீஷ்குமார், ராஜா, மகேஸ்வரகுமார், ஜான்சன் உள்பட 18 பேர் நேற்று மதியம் 1 மணி முதல் தொடர்ந்து காலவரையற்ற உண்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி முன்பு அமைக்கப்பட்டுள்­ள சாமியான பந்தலில் அனைவரும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று அவர்களது போராட்டம் 2-வது நாளாக நீடிக்கிறது. பூந்தமல்லி - செங்கல்பட்டு சிறப்பு முகாம்களை இழு…

    • 0 replies
    • 552 views
  8. மரக்காணம் கலவரம் தொடர்பாக விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த வழக்கில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி உள்பட ஏராளமானோரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கு, ரஜினி ரசிகர்கள் தாக்கப்பட்ட வழக்கு உள்பட 5 வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாசுக்கு ஏற்கனவே நான்கு வழக்குகளில் ஜாமீன் கிடைத்துவிட்ட நிலையில் இன்று மற்றொரு வழக்கிலும் நெல்லை மாவட்டம் வள்ளியூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதற்கான கோர்ட்டு உத்தரவு இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் திருச்சி மத்திய சிறையில் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது மகன் அ…

    • 0 replies
    • 552 views
  9. வைகோவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் சென்னை : தேச துரோக வழக்கில் வைகோவை 15 நாள் சிறைக்காவலில் வைக்குமாறு எழும்பூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009 ல் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக பேசியதாக தேச துரோக வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் இன்று வைகோ கோர்ட்டில் ஆஜரானார். இவரை 15 நாள் நீதிமன்றகாவலில் வைக்குமாறு 13 வது குற்றவியல் நடுவர் மன்ற கோர்ட் மாஜிஸ்திரேட் கோபிநாத் உத்தரவிட்டார். இதனையடுத்து வைகோ இன்று புழல் சிறையில் அடைக்கப்டுகிறார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1744242

  10. இது உள்கட்சி விவகாரம் அல்ல ஜெயலலிதா இல்லாமல் ஆகிவிட்ட சூழலில் அதிமுகவின் பொதுச் செயலாளரைத் தேர்வு செய்ய, முழுமையான உள்கட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் தமிழக முதல்வராகவும் அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் இருந்துவந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சி பற்றியும் ஆட்சி பற்றியும் ஒவ்வொரு நாளும் பல வதந்திகள் முளைத்துவருகின்றன. ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவை மையமாகக் கொண்டு எழும் வதந்திகளுக்கு வலு சேர்க்கும் விதமாகப் பல்வேறு காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. கட்சியின் பொதுச் செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்னும் யூகம் கிட்டத்தட்ட உறுதியான சாத்தியமாகப் பரவலாக நம்பப்பட்டுவரும் நிலையில் …

  11. கட்டுரை தகவல் எழுதியவர்,சுதாகர் பதவி,பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் உல்லாசப் படகு கவிழ்ந்ததில் 22 பேர் பலியானார்கள். 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். , அதில் 6 பேருக்கு பெரியளவில் பாதிப்பு இல்லை. மற்றவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஓட்டும்புறம், தூவல் தீரம் என்ற இடத்தில் சுற்றுலா பயணிகள் கடலில் உல்லாச பயணம் செய்து வருவது வாடிக்கையானது. அவ்வாறு சுற்றுலா வந்த இடத்தில் ஈரடுக்கு உல்லாசப் படகில் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்கச் சென்ற போது இந்த விபத்து நேரிட்டுள்ளது. விபத்து நேர…

  12. சென்னை: "மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள தருணத்தையும், கருணாநிதியின் குடும்பத்தில் நடக்கும் குழப்பத்தையும் ஒப்பிடுகையில் மு.க.அழகிரியின் மூலம் ஆபத்து என்பது மறைமுகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று ஜெயலலிதா கூறியுள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதில் அளித்து ஜெயலலிதா பேசுகையில், "மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து சில குற்றச்சாட்டுகளை எதிர்கட்சியினர் தெரிவித்து வருகிறார்கள். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரிவர பராமரிக்கப்படுவது இல்லை, குற்றங்கள் அதிகரித்துள்ளன என்று உண்மைக்கு மாறான ஒரு தொடர் பிரச்சாரம் தி.மு.க.வினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்த எ…

  13. சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியுடனான சந்திப்பு குறித்து கேலி செய்த பத்திரிகைகள் மீது லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் கடுமையாக சாடினார். தி.மு.க. தலைவர் கருணாநிதியை அண்மையில் டி.ராஜேந்தர் சந்தித்து பேசினார். கருணாநிதியை சந்தித்து விட்டு வந்ததை, "வாசமில்லா மலர் இது.. வசந்ததைத் தேடுது..." என்று டி.ராஜேந்தர் அவரது 'ஒருதலை ராகம்' படப்பாடலையே பாடுவது போல் பத்திரிகை ஒன்று கேலி செய்திருந்தது. இந்நிலையில் சென்னை தி.நகரில் உள்ள தனது வீட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "நான் வாசமில்லாத மலரா...வசந்ததைத் தேடி அலைகிறேனா?" என்று காட்டமாக கேட்டவர், "கருணாநிதியின் சந்தி்ப்பு அரங்கேறியது ஒரு காட்சி. அதற்கு பிறகு நடக்கப்போவதை பற்றியெல்லாம் உங்களுக்கு சொல்வே…

  14. நிரஞ்சன் மார்டி நியமனத்துக்குப் பின்னால்... உளவுத்துறையின் உள்விவகாரங்கள் #VikatanExclusive ஜெயலலிதாவால் இடமாற்றப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி நிரஞ்சன் மார்டிக்கு, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மீண்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்குப் பின்னணியில் பல உள்விவகாரங்கள் இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. அதிரடி இடமாற்றம் தமிழக உள்துறை முதன்மைச் செயலாளராக அபூர்வ வர்மா இருந்தார். இது தவிர, இவர் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆகியவற்றையும் கவனித்துவந்தார். இந்நிலையில், அபூர்வ வர்மாவை அந்தப் பதவியிலிருந்து நேற்று (மார்ச் 3) தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இடமாற்றி உத்தரவிட்டுள்ளார். உள்துறை முதன்மைச் செயலாளராக நிரஞ்சன் மார…

  15. பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் நீக்கம்..! அதிரடி காட்டிய அண்ணாமலை..!! மயிலாடுதுறை, திருவாரூர் பாஜக மாவட்ட தலைவர்கள் பொறுப்பில் இருந்த விடுவிக்கப்படுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இருப்பினும் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. பாஜகவின் தோல்வியை தொடர்ந்து கட்சிக்குள்ளேயே பல்வேறு கருத்து மோதல்கள் ஏற்பட்டன. இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பலர் மீதும் அதிரடி நடவடிக்கை பாய்ந்து வருகிறது. சமீபத்தில் சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளர் க…

  16. நடிகையை தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டுகிறார்கள்! நடிகர், நடிகையை தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கும், அதிமுக நிர்வாகி ஒருவர் கோயில் கட்டுகிறார். அரக்கோணம்- சோளிங்கர் நெடுஞ்சாலையில் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடக்கிறது. தமிழகத்தில் நடிகர், நடிகைகளுக்கு கும்பாபிஷேசம், பாலாபிஷேகம் செய்து வருகின்றனர் அவர்களது ரசிகர்கள். இதற்கு ஒருபடி மேலேபோய், நடிகை குஷ்பு, நடிகர் விஜய் ஆகியோருக்கு ரசிகர்கள் கோயில் கட்டி அசத்தி விட்டனர். இந்தநிலையில், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி, முகவூர் பகுதிகளில் உள்ள அ.தி.மு.க. தொண்டர்கள், மற்றவர்களை மிஞ்சும் வகையில் ஜெயலலிதாவை அம்மன், சரஸ்வதி, கிருஷ்ணர் போன்ற இந்…

  17. எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் 160 தொகுதிகளின் வெற்றி - தோல்விகளுக்கு, சமூக வலைத்தளங்களின் தாக்கம் மிக முக்கியக் காரணமாக இருக்கக் கூடும் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதில், தமிழகத்தில் உள்ள 12 நாடாளுமன்றத் தொகுதிகளும் அடங்கும். மக்களவைத் தேர்தலில் சமூக வலைத்தளங்களின் பங்கு தொடர்பாக, ஐ.ஆர்.ஐ.எஸ். நாலெட்ஜ் ஃபவுண்டேஷன் மற்றும் இன்டர்நெட் அண்ட் மொபைல் அசோசிஷியேஷன் ஆஃப் இந்தியா ஆகியவை இணைந்து ஓர் ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவில், மொத்தமுள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் 160 தொகுதிகளில் வெற்றி - தோல்விகளை நிர்ணயிக்கும் அளவுக்கு சமூக வலைத்தளங்களின் தாக்கம் இருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் 21 தொகுதிகளிலும்…

    • 0 replies
    • 551 views
  18. தமிழ்நாடு விவசாயம்: அதிக வருவாய் தரும் விதைப்பண்ணை அமைப்பது எப்படி? ஏ.எம்.சுதாகர் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் விதைப் பண்ணைகள் மூலம் விவசாயிகள் மேம்பட்ட வருவாய் ஈட்ட முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டாக நாமக்கல் மாவட்டம் உருவாகியிருக்கிறது. கூடுதல் வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கை மட்டுமல்லாமல், பருவநிலையும் அவர்கள் விதைப் பண்ணைகளை தேர்வு செய்ய காரணமாக உள்ளது. நெல், நிலக்கடலை, துவரை, பாசிப்பயறு, ஆமணக்கு உள்ளிட்ட அனைத்து பயிர்களின் விதைகளையும் உற்பத்தி செய்து, ஆண்டு மு…

  19. புதுச்சேரி: முதல்வர் பதவி யாருக்கு? மூன்று வியூகங்கள்! மின்னம்பலம் தமிழகத்தைப் போலவே புதுச்சேரி சட்டமன்றமும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தலைச் சந்தித்து விட்டு முடிவுகளுக்காகக் காத்திருக்கிறது. புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தேர்தலுக்கு முந்தைய கடைசி ஒரு மாதத்தில் அதிரடியாகப் பல மாற்றங்கள் அரங்கேறின. திமுக காங்கிரஸ் கூட்டணியாக காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த நிலையில் முதல்வர் நாராயணசாமிக்கு எதிராக திடீரென பொங்கியது திமுக. தற்போதைய அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன் புதுச்சேரிக்கு வந்து திமுகவின் ஆட்சி அமைப்போம் என்று நிர்வாகிகள் கூட்டத்தைப் பிரமாண்டமாக நடத்திப் பேசினார். இந்த நிலையில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், திமுக எம்.எல்.ஏ ராஜினாமா செய…

  20. ‘ஆன்டி ஹ்யூமனாக’ இருப்பது சரியா ஹெச்.ராஜா அவர்களே..! - ஒரு சாமானியனின் கடிதம் Chennai: மரியாதைக்குரிய, மரியாதை தெரியாத ஹெச்.ராஜா அவர்களுக்கு, வணக்கம். ‘என்னடா இது, எடுத்தவுடனே இப்படிச் சொல்லிவிட்டார்களே' என்று நீங்கள் வருத்தப்பட மாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால், அடுத்தவர் மனம் புண்படுமோ என்று அளந்து அளந்து பேசுபவர்கள்தான் தன் மனம் புண்படுவது பற்றிக் கவலைப்படுவார்கள். ஆனால், வெந்த புண்ணில் வெந்நீரையும் விஷத்தையும் ஊற்றுவதுதான் உங்கள் இயல்பு என்பதைச் சமீபகாலமாகப் பார்த்துவருகிறோம். ‘வெந்த புண்' என்று சொல்லும்போதுதான் சமீபத்தில் நீங்கள் தெரிவித்த கருத்து நினைவுக்குவருகிறது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் நீங்கள் உதிர்க்கும…

  21. சுற்றுலா பயணிகளுக்கு மீனவர்கள் அறிவுறுத்தல் இராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியதால் மீன்பிடி தொழல் பாதிப்படைந்துள்ளதோடு, கடல் பூச்சிகள் கரைக்கு வருவதால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பிராந்தியங்களில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் கரையோர மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் அவதியுற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை முதல் ஓலைக்குடா, சங்குமால் தெற்குவாடி, வடகாடு உள்ளிட்ட கடலோரப்பகுதிகளில் கடல் சுமார் 600 மீட்டர் தூரம் வரை உள் வாங்கியுள்ளது. இதனால் கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நாட்டுபடகுகள் …

  22. தமிழகத்தில்... கொரோனா கட்டுப்பாடுகள், நீக்கம்! தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைவடைந்துள்ள நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டொக்டர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பில், முகக் கவசங்களை அணிதல், கைகளை கழுவுதல் உள்ளிட்டவை தொடர்ந்து நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனா தடுப்பூசி போடுவது குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியானவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்ட…

  23. சஞ்சய் தத் விடுதலை விவரம்: பேரறிவாளன் கோரிய ஆர்டிஐ தகவலுக்கு பதில் அளிக்க மறுப்பு பேரறிவாளன் | கோப்புப் படம் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், ஆர்டிஐ மனு ஒன்றில் நடிகர் சஞ்சய் தத் தண்டனைக் காலம் முடியும் முன்பாகவே விடுதலை செய்யப்பட்டதன் காரணம் குறித்து கேட்டிருந்தார். ஆனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அதாவது 3-வது நபர் ஒருவரின் விடுதலை விவரங்களை கோர முடியாது என்ற அடிப்படையில் மனுவை தகவல் அலுவலர் / சிறை அதிகாரி நிராகரித்தார். ஏற்கெனவே இதே தகவலைக் கோரியிருந்த போது, எரவாடா சிறை அதிகாரிகள், மனுவுடன் அனுப்பப்பட்டிருந்த ரூ.10-ற்கான போஸ்டல் ஆர்டரில் 2011-ம் ஆண்டு என்று குறிப்பிடப்பட்டிர…

  24. மகளின் திருமணத்திற்காக 6 மாதம் விடுப்பில் செல்ல பரோல் கேட்டு நளினி வழக்கு மகளின் திருமணத்திற்காக 6 மாதம் விடுப்பில் செல்ல பரோல் கேட்டு நாளை சென்னை உயர்நீதிமன்றில் நளினி தரப்பில் வழக்கு தொடரப்பட உள்ளதாக அவரது சட்டதரணி புகழேந்தி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மத்திய பெண்கள் சிறையில் உள்ளார். : 26வயதான மகள் லண்டனில் உள்ள நிலையில் அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பரோல் கேட்டு நளினி, தமிழக அரசுக்கு மனு அனுப்பிய போதும் பரோல் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில், மகளின் திருமணத்திற்காக 6 மாதம் விடுப்பில் செல்ல பரோல…

  25. விடுதலைப் புலிகளை மீண்டும் கட்டியெழுப்ப போதை மருந்துக் கடத்தல்: என்.ஐ.ஏ. Jul 21, 2022 07:24AM IST இந்தியா,இலங்கையில் போதை மருந்துக் கடத்தல் கும்பல் செயல்பட்டு வருவதாக தானாக முன் வந்து பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. நேற்று (ஜூலை 20) தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது. சென்னை, திருப்பூர், செங்கல்பட்டு, திருச்சி மாவட்டங்களில் குற்றம் சாட்டப்பட்ட மற்றும் சந்தேகத்துக்குரியவர்கள் தொடர்பான 22 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். முகாமில் உள்ள சந்தேகத்திற்கிடமான சிலரிடம் தேசிய புலனாய்வு முகமை அதி…

    • 3 replies
    • 551 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.