தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10248 topics in this forum
-
சென்னை: பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும்,பத்தாண்டு நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளையும் தமிழக அரசு விடுதலை செய்யவேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழகத்திலுள்ள 9 மத்திய சிறைகளில் 800-க்கும் அதிகமான ஆயுள் தண்டனை கைதிகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இராஜிவ் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் 25 ஆண்டு தண்டனை அனுபவித்தும் இன்னும் சிறைக்கொட்டடியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள்…
-
- 0 replies
- 203 views
-
-
சட்டமன்றத்தில் இருந்து தி.மு.க உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ததற்கு அரசியல் கட்சிகள் தரப்பில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. ' எதிர்க்கட்சிகளே இல்லாமல் காலி இருக்கையைப் பார்த்து அ.தி.மு.க.வினர் பேசிக் கொள்கிறார்கள்' எனக் கலாய்க்கிறார் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் கொறடா விஜயதரணி எம்.எல்.ஏ. தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடத்திய 'நமக்கு நாமே' பயணத்தை, அ.தி.மு.க உறுப்பினர் குணசேகரன் விமர்சனம் செய்ததையடுத்து, சபாநாயகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் தி.மு.க உறுப்பினர்கள். இதையடுத்து, ' ஒருவார காலம் தி.மு.க உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்வதாக' அறிவித்தார் சபாநாயகர் தனபால். இன்று சட்டசபைக்குள் நுழைந்த ஸ்டாலின், 'எதிர்க்கட்சித் தலைவரின் அறைக்குள் செல்லவிடாமல் தடுப்பதாக'க் கூறி தர்ண…
-
- 0 replies
- 262 views
-
-
சுவாதி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, அவரை நான் கொலை செய்யவில்லை என்றும், போலீசார் தன் மீது பொய் வழக்கு தொடர்ந்துள்ளனர் என்றும் ராம்குமார் நீதிமன்றத்தில் கூறியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளைமேட்டை சேர்ந்த சுவாதி என்ற இளம்பெண் கடந்த ஜீன் மாதம் 24ஆம் தேதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். அந்த கொலை தொடர்பாக, திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். கைது முயற்சியின் போது அவர் தனது கழுத்தை அறுத்துக் கொண்டதால், அப்போது வாக்குமூலம் பெறமுடியவில்லை. அதன்பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரின் உடல் நிலை தேறிய பின் அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத…
-
- 0 replies
- 285 views
-
-
தமிழகத்தின் தலைநகர்,தென் இந்தியாவின் நுழைவு வாயில் என்று பல்வேறு, நிலைத்த பெருமையை உடைய சென்னை பெருமாநகராட்சி, கோடி மக்கள் வாழும் பெரு நகரமாக வளர்ந்துள்ளது. உலகின் எந்த முக்கிய நகரத்தோடும் ஒப்பிடும் அளவிற்கு கலை, கலாசாரம்,வரலாறு என்று நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ள நகரமாக உள்ளது சென்னை. இதன் வயது 377 என்றும், அதற்கான 'சென்னை டே' கொண்டாட்டம் வரும் 22ம் தேதி கொண்டாடப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், " சென்னைக்கு வயது 377 இல்லை, உண்மையான வயது 2,000 ஆண்டுகளுக்கும் மேலானது" என்று கூறி, அதற்கு ஆதரவு கேட்டு ஆன்லைன் மூலம் வாக்கெடுப்பு நடத்துகிறார் Chennai 2000 Plus Trust -ன் தலைவர் ஆர்.ரங்கராஜ். இது குறித்து அவரிடம் விசாரித்தோம். ரங்கராஜ் நம்மிடம் கூறு…
-
- 2 replies
- 394 views
-
-
சர்வதேச போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்ட இலங்கை பிரஜை ஒருவர் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதை பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து 12.8 கோடி பெறுமதியான ஹரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற போதை பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். இவர் படகு மூலம் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் போதை பொருள் கடத்தலில் ஈடுப்பட்டு வந்துள்ளார். சரவண குமார் என்று அழைக்கப்படும் 38 வயதுடைய இவர் இராமநாதபுரம் முகாமில் தங்கியிருந்த இலங்கை அகதி எனவும் விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது. பின்னர் இவர் இலங்கைக்கு தப்பி வந்து பொய்யான கடவுச் சீட்டு ஒன்றை தயார் செ…
-
- 0 replies
- 275 views
-
-
சட்டமன்றத்தில் இருந்து ஒருவார காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள் தி.மு.க உறுப்பினர்கள் . ' அ.தி.மு.க உறுப்பினர்களை மட்டும் வைத்துக் கொண்டு அவர்கள் சபையை நடத்திக் கொள்ளட்டும்' எனக் கொந்தளிக்கிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி. சட்டசபை தேர்தலுக்கு முன்னர், தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட 'நமக்கு நாமே' பயணம் குறித்து, அ.தி.மு.க உறுப்பினர் குணசேகரன் விமர்சித்ததால் சட்டப்பேரவையில் கொதித்தனர் தி.மு.க உறுப்பினர்கள். இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை சபையில் இருந்து குண்டுக்கட்டாக வெளியே கொண்டு வந்தனர் அவைக் காவலர்கள். 'ஒருவாரம் தி.மு.க உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக' அறிவித்தார் சபாநாயகர் தனபால். அதேநேரத்தில், சபையில் இருந்து காங்கிரஸ் …
-
- 0 replies
- 246 views
-
-
பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் மரணம் திரையுலகை உலுக்கிப் போட்டுள்ளது. யாராலும் அவரது மரணத்தை நம்ப முடியவில்லை. முத்துக்குமார் இறந்து விட்டாரா என்றுதான் அத்தனை பேரும் அதிர்ச்சியுடன் உள்ளனர். நா. முத்துக்குமாரின் மரணச் செய்தி பரவிய வேகத்தில் அவரது மரணத்திற்கு இரங்கல்கள் குவிந்து வருகின்றன. திரையுலகினர் பலரும் டிவிட்டர், பேஸ்புக்கில் தங்களது சோகத்தையும், அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அவருடன் பணிபுரிந்த பலரும் அவரது மரணத்தால் பெரும் சோகமாகியுள்ளனர். அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் உள்ளனர். Can't believe this #namuthukumar is no more ...He's written more than 200 songs in my films A huge loss May god give strength to his family இசையமைப்பாள…
-
- 1 reply
- 735 views
-
-
-
தமிழகத்தில் முதன் முறையாக பசியால் வாடுபவர்களுக்கு உதவும் வகையில் சாலையோரத்தில் உணவுப் பொருட்கள் அடங்கிய ஃபிரிட்ஜ் வைக்கும் திட்டம் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோவையை மையமாக கொண்டு இயங்கி வரும் 'நோ ஃபுட் வேஸ்ட்' தொண்டு நிறுவனமும் கோலிவுட் கபே உணவகமும் சேர்ந்து இந்த திட்டத்தை தமிழகத்தில் முதன் முறையாக ஏற்படுத்தியுள்ளன. அதன்படி, ஆர்.எஸ் புரத்தில் பசியில் வாடுபவர்களுக்கு உதவும் வகையில் உணவுப் பொருட்கள் அடங்கிய 'சைடு வாக் ஃபிரிட்ஜ்' அமைக்கப்பட்டுள்ளது. வீட்டில் மிஞ்சும் உணவுப் பொருட்களை இந்த ஃபிரிட்ஜில் வைத்து விடும்படி அந்த பகுதி மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உணவுத் தேவைப்படுபவர்கள் இந்த ஃபிரிட்ஜில் இருந்து எடுத்து பசியாறிக் கொள்ளலாம். இந்த திட்டம்…
-
- 4 replies
- 711 views
-
-
கடந்த சில மாதங்களாக ராமேசுவரம் கடல் பகுதிகளில் ஜெல்லி மீன்களின் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ராமேசுவரம் கடற்கரையை கண்டு ரசிக்க தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ராமேசுவரம், பாம்பன் மற்றும் தனுஷ்கோடி கடல் அலைகளின் சுழல்கள் மிகவும் ஆபத்தானவை. மணல் படுகைகள், சகதி, பாறைகள் மற்றும் ஆழமான பள்ளங்கள் அமைந்துள்ளதால் இங்கு கடலில் குளிப்பவர்கள் நீரில் மூழ்கும் அபாயங்கள் அதிகமாக உள்ளன. ராமேசுவரம் கடல் பகுதியில் ஜெல்லி மீன்கள் அதிகமாக காணப்படுவதால் அங்கு கடலில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ராமேசுவரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தீவுகளுக்கு ஜெல்லி மீன்கள் இனப் பெருக்க…
-
- 5 replies
- 905 views
-
-
சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கு இன்று வந்த திமுக தலைவர் கருணாநிதி, வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு திரும்பினார். 2006ல் ஆட்சியில் இருந்த திமுக, 2011ல் தோல்வியைத் தழுவியது. அந்தத் தேர்தலிலும் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அப்போது, பேரவைத் தலைவராக இருந்த ஜெயக்குமாரின் அறையில் தனியாக சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டார். அதன் பிறகு சட்டப்பேரவை லாபிக்கு மட்டும் கருணாநிதி அவ்வப்போது வந்து கையெழுத்திட்டுச் சென்றார். சட்டப்பேரவைக்குள் வந்தது இல்லை. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கடந்த மே 26ஆம் தேதி நடந்த எம்.எல்.ஏ.க்கள் பதவிப்பிரமாணம் நிகழ்ச்சியில் திமுக தலைவர் கருணாநிதி பங்க…
-
- 0 replies
- 517 views
-
-
சேலத்திலிருந்து 342 கோடி ரூபாய் கிழிந்த ரூபாய் நோட்டுகளை ஏற்றிக் கொண்டு சென்னை வந்த ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க 3 ஆய்வாளர் தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வங்கிகளில் இருந்து பெறப்பட்ட 342 கோடி ரூபாய் கிழிந்த ரூபாய் நோட்டுகள் சேலம் பேர்லேண்ட்ஸ் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டது. இந்த பணத்துடன் சேலத்திலிருந்து விரைவு ரயில் புறப்பட்டது. ரயில் கண்டெய்னரில் 226 மரப்பெட்டிகளில் அந்தப் பணம் கொண்டுவரப்பட்டது. சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைந்த ரயில், சேத்துபட்டு பகுதியில் உள்ள ரய…
-
- 7 replies
- 2.4k views
-
-
வியட்நாம் வீடு சுந்தரம், பஞ்சு அருணாச்சலம், ஜோதிலட்சுமி ஆகிய திரையுலக பிரமுகர்கள் மறைவு அடுத்தடுத்து நடந்ததால் அந்த அதிர்ச்சியில் இன்னும் மீளாத கோலிவூட் திரையுலகினர்களுக்கு இன்று காலை மேலும் ஒரு அதிர்ச்சியாக இளம் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மரணம் அடைந்ததாக வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய விருது பெற்ற நா.முத்துக்குமாருக்கு இன்று கடுமையான காய்ச்சல் இருந்ததாகவும், அதன் காரணமாக அவர் மரணம் அடைந்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது. 41 வயதே ஆன கவிஞர் நா.முத்துகுமார் தங்க மீன்கள் திரைப்படத்துக்காக எழுதிய 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்' என்ற பாடலுக்கும், 'சைவம்' திரைப்படத்துக்காக எழுதிய 'அழகே அழகே எதுவும் அழகே' என்ற பாடலுக்கும் தேசிய விருது கிடைத்துள்…
-
- 2 replies
- 3.1k views
-
-
தொலைபேசி தொடர்பை ஊக்கு விக்கும் வகையில் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் லேண்ட்லைன் வாயிலாக செய்யப்படும் உள்நாட்டு அழைப்புகளுக்கு கட்டணம் கிடையாது என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, டெல்லியில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: லேன்ட்லைன் வாயிலாக மற்ற தொலைத்தொடர்பு இணைப்புகளுக்கு இரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 7 மணிவரை செய்யும் அனைத்து அழைப்புகளுக்கு கட்டணமில்லா சேவையை வழங்கி வருகிறது. தற்போது மேலும் வாடிக்கை யாளர்களுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் சுதந்திர தினமான வரும் 15-ம் தேதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் லேன்ட்லைன் இணைப்பு வாயிலாக செய்யப்படும் அனைத்து அழைப்புகளும் இலவச அழைப்புகளாக கருதப…
-
- 0 replies
- 454 views
-
-
'ஈஷா யோகா மையத்தில் இருக்கும் மகள்களை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்; இல்லறம் சிறந்ததா, துறவறம் சிறந்ததா என பட்டிமன்றம் வைக்க முடியாது' என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மகள்களை மீட்கக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது. கோவை மாவட்டம், வடவள்ளியைச் சேர்ந்த காமராஜ்- சத்திய ஜோதி தம்பதியின் மகள்கள் கீதா (34), லதா (31). இவர்களது தந்தை காமராஜ், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மகள்கள் இரண்டு பேரும் ஈஷா யோகா மையத்தில் உள்ளனர். இந்த நிலையில், ஈஷா யோகா மையம் சட்டவிரோதமாக தனது மகள்கள் இரண்டு பேரையும் சிறை வைத்துள்ளதாகவும், அவர்களை மீட்டுத்தர வேண்டும் என்றும் கோரி, சென…
-
- 0 replies
- 471 views
-
-
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி கொலை வழக்கில் தினமும் பரபரப்பு தகவல்கள் வந்தவாறு உள்ளன. ஃபேஸ்புக்கில் சுவாதியின் கொலை தொடர்பாக தொடர்ந்து பல தகவல்களை வெளியிட்டு வரும் தமிழச்சி என்பவர், தற்போது ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். உண்மை குற்றவாளி ராம்குமார் இல்லை எனவும், கொலையாளி முத்துக்குமார் சுவாதியின் சித்தப்பாவின் பாதுகாப்பில் வசதியாக உள்ளான் எனவும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார். அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இவர் ஏற்கனவே சுவாதியின் தந்தை அவரின் உண்மையான தந்தை இல்லை என பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இது குறித்து தமிழச்சி பதிவிட்டுள்ள …
-
- 0 replies
- 831 views
-
-
ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ.2 கோடி பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கொள்கை விளக்க குறிப்பில் கூறியிருப்பதாவது - சர்வதேச மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையினையும் தமிழக அரசு கணிசமாக உயர்த்தியுள்ளது. எனவே, ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு ரூ.2 கோடி மாநில அரசால் வழங்கப்படும். ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கான தகுதியினைக் கொண்ட தடகளம், மேசைப்பந்து, நீச்சல், வாள் சண்டை மற்றும் பாய்மரப் படகோட்டுதல் ஆகிய விளையாட்டுகள…
-
- 0 replies
- 589 views
-
-
மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. தூத்துக்குடியில் அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டம் திசையன்விளையை அடுத்த ஆணைக்குடியை சேர்ந்த இளம்பெண் பானுமதியும், அவரது சகோதரி ஜான்சிராணியும், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த திங்கட்கிழமை புகார் மனு ஒன்றை அளித்திருந்தனர். அதில் தாங்கள் சசிகலா புஷ்பா வீட்டில் வேலை பார்த்து வந்தபோது அவரது கணவர் லிங்கேஸ்வரர், மகன் பிரதீப் ஆகியோர் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிவித்திருந்தனர். மேலும் சசிகலா புஷ்பாவும், அவரது தாயார் கௌரியும் தகாத வார்த்தைகளால் பேசி, அடித்து துன்…
-
- 0 replies
- 678 views
-
-
சமாதான வளையத்தில் சசிகலா புஷ்பா! -கார்டனுக்காக களமிறங்கிய சீனியர் எம்.பிக்கள் பாலியல் புகார், பணமோசடிப் புகார் என தொடர் வழக்குகளால் கடும் நெருக்கடியில் இருக்கிறார் அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பா. ' பதவியை ராஜினாமா செய்துவிட்டு மன்னிப்புக் கடிதம் கொடுத்தால், கட்சிக்குள் அம்மா சேர்த்துக் கொள்வார்' என சமாதானப்படலத்தைத் தொடங்கியுள்ளனர் அ.தி.மு.க எம்.பிக்கள். டெல்லி விமான நிலையத்தில் தி.மு.க எம்.பி திருச்சி சிவாவுடன் நடந்த மோதல் தொடர்பாக, கார்டன் விசாரணைக்கு அழைக்கப்பட்டார் சசிகலா புஷ்பா. இதன்பின்னர் ராஜ்யசபையில் பேசிய சசிகலா, ' என் தலைவர் என்னை அறைந்தார்' என பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். ' அ.தி.மு.கவினரால் என் உயிருக்கு ஆபத்து. பாதுகாப்பு வழங்குங்கள்…
-
- 0 replies
- 614 views
-
-
இந்த தமிழர்களுக்காகவும் பேசுவோம்...! '2016 , ஆகஸ்ட் ஒன்றாம் தேதி, அகதிகள் முகாமில் இருக்கும் இலங்கை தமிழர்கள், தங்களுக்கு குடியுரிமை வேண்டி, சென்னை எழும்பூரில் போராட்டம் நடத்தினர்' என்கிற செய்தியை இணையத்தில் வாசித்தபோது எனக்கு வேடர் காலனி நினைவிற்கு வந்தது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஒன்றரை மணி நேர பயணம் வேடர் காலனி. தமிழகத்தில் இருக்கும் 107 அகதிகள் முகாம்களில் ஒன்றுதான் வேடர் காலனி. ஒரு குக்கிராமத்தை போல தோற்றம் அளிக்கும் இவ்விடம், ஒரு திறந்த வெளி சிறைக்கூடம். மொத்தம் அறுபது குடும்பங்கள் இருக்கும். எனவே அறுபது வீடுகள். எல்லாம் அலுமினிய தகரத்தால் ஆனவை. அனைத்தும் ஐந்து ஆறு தெருக்களில் இறுக்கமாக அமைக்கப்பட்டு, அதற்குள்ளாகவே அந்த கிராமத்தின் எல்…
-
- 1 reply
- 757 views
-
-
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும், பார்வையாளர்களுக்கு வருகின்ற 20-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது.வருகின்ற 15-ம் தேதி, நாடு முழுவதும் சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக விமான நிலையம் உள்பட முக்கியமான பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.மேலும், விமான நிலைய போலீசார், மத்திய தொழிற்படையினர், பாதுகாப்பு படையினர் கொண்ட கூட்டு பாதுகாப்பு…
-
- 1 reply
- 421 views
-
-
ரூ.570 கோடி சிக்கிய விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு கோப்புப் படம். திருப்பூரில் 3 கன்டெய்னர் லாரிகளில் ரூ.570 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக அதாவது கடந்த மே 13-ம் தேதி திருப்பூர் அருகே 3 கன்டெய்னர் லாரிகளில் ரூ. 570 கோடி பணம் பிடிபட்டது. கைப்பற்றப்பட்ட ரூ. 570 கோடி பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) சொந்தமானது என அதன் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பான ஆவணங்கள் காட்டப்பட்டதால் பிடிபட்ட பணம் ரிசர்வ் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டது. இதனிடையே ரூ.570 கோடி பிடிபட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக எம்.பி. டி.கே.…
-
- 2 replies
- 855 views
-
-
பா.ம.கவின் அங்கீகாரம் ரத்து?! மரக்காணம் கலவர வழக்கில் அதிரடி தீர்ப்பு! மாமல்லபுரத்தில் கடந்த 2013ல் நடந்த சித்திரைப் பெருவிழாவில், இருசமூகத்தினருக்கு இடையே எழுந்த மோதல் தொடர்பாக, பா.ம.கவிற்கு எதிராக வாராகி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கவுல் மற்றும் மகாதேவன் ஆகியோர் அடங்கிய டிவிஷனல் பெஞ்ச், 'மோசடி செய்து பா.ம.க அங்கீகாரம் பெற்றது தெரியவந்தால், தேர்தல் கமிஷனே பா.ம.க மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று' தீர்ப்பு அளித்துள்ளது. மாமல்லபுரம் வன்னியர் சித்திரை பெருவிழா; ஒரு பிளாஷ் பேக்! ஆண்டுதோறும் மாமல்லபுரத்தில், சித்திரை மாதம், பௌர்ணமி தினத்தன்று வன்னியர் சங்கம் சார்பில் 'முழுநிலவு சித்திரை பெரு…
-
- 0 replies
- 1k views
-
-
“நானே கடவுள்” ஜக்கி பெண்களைத் தவறாகப் பயன்படுத்துகிறார்.! (காணொளி இணைப்பு ) ஜக்கி வாசுதேவ்வின் மாய வலையில் சிக்கியுள்ள எனது இரு மகள்களையும் மீட்டுத் தாருங்கள் என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரான முனைவர் காமராஜ் கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார். கோயம்புத்தூர் – செம்மேடு, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் உள்ளது. 150 ஏக்கர் நிலப்பரப்பில் விரிந்துள்ள இந்த மையமானது, உள்நிலை மாற்றத்திற்கான சக்தி வாய்ந்த இடம் என்று சொல்லப்படுகிறது. இங்கு தியானலிங்கத் திருக்கோவில், ஸ்பந்தா ஹால், ஈஷா புத்துணர்வு மையம், ஈஷா இ…
-
- 2 replies
- 4.3k views
-
-
சொத்துக்குவிப்பு வழக்கில் வாதாடிய ஜெயலலிதா வழக்கறிஞர்களுக்கு மேலும் முக்கிய பொறுப்புகள்: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்காக வாதாடிய வழக்கறிஞர்களுடன் கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி. தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் வாதாடிய வழக்கறிஞர்கள், கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கி, உயர் நீதிமன்றம், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர் நீதி மன்றம், உச்ச நீதிமன்றம் என கடந்த 20 ஆண்டுகளாக பயணிக்கிறது…
-
- 0 replies
- 446 views
-