தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10331 topics in this forum
-
இந்தியாவில் அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி? பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN படக்குறிப்பு,சுருட்டை விரியன் கட்டுரை தகவல் க.சுபகுணம் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பாம்புக்கடி சம்பவங்கள் அதிகம் நிகழும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவில் பாம்புக்கடி நிகழ்வுகளால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மரணங்கள் நிகழ்கின்றன. "தமிழ்நாட்டில் நிகழும் பாம்புக்கடிகளில் கிட்டத்தட்ட 95% நஞ்சற்ற பாம்புகளால்தான் நிகழ்கின்றன. மீதமுள்ள 5% சம்பவங்களில் பெரும்பாலும் கண்ணாடி விரியன், நாகம், சுருட்டை விரியன், கட்டு வரியன் ஆகிய நான்கு வகை நச்சுப் பாம்புகளே காரணமாக இருக்கின்றன," என்று கூறுகிறார் யுனிவர்சல் பாம்புக்கடி ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனரும் …
-
-
- 18 replies
- 1.1k views
- 1 follower
-
-
இந்தியாவில் பறவைக்காய்ச்சல் ; தமிழ்நாடு, பீகார் மாநிலங்களில் 1,500க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழப்பு Published By: Digital Desk 3 08 Feb, 2026 | 02:08 PM இந்தியா முழுவதும் H5N1 பறவைக் காய்ச்சல் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, அடையார், காந்தி நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, திருவான்மியூர், இ.சி.ஆர் சாலை மற்றும் ஓ.எம்.ஆர் சாலை உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து 1,500க்கும் மேற்பட்ட காகங்கள் தொடர்ந்து உயிரிழந்துள்ளன. இதனையடுத்து உயிரிழந்த காகங்களின் மாதிரிகளை சோதனை செய்ததில் பறவைகளுக்கு H5N1 வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து சென்னையில் பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளாக அரசு விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்ட…
-
- 0 replies
- 135 views
- 1 follower
-
-
தாயின் நஞ்சுக் கொடியில் பிளாஸ்டிக் துகள் - பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் காரணமா? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 7 பிப்ரவரி 2026 பாலித்தீன் உறைகளில் அடைத்து விற்கப்படும் உப்பு, சர்க்கரை மற்றும் குடிநீர் பாட்டில்களில் நுண் நெகிழி என அழைக்கப்படும் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. எதிர்கால சந்ததியினருக்கு இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கவலை தெரிவித்த நீதிபதிகள், அவற்றில் எச்சரிக்கை வாசகங்களைப் பொறிப்பதற்கு அறிவுறுத்துமாறு மத்திய அரசுக்கு வெள்ளிக்கிழமையன்று உத்தரவிட்டனர். முன்னதாக, தாயின் நஞ்சுக் கொடியில் (Placenta) மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் பரவியிருப்…
-
- 1 reply
- 196 views
- 2 followers
-
-
எம்.பி.கமல்ஹாசன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி நடந்து வருகிறது. அதில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி-யுமான கமல்ஹாசன் உரையாற்றினார். மாநிலங்களவையில் அவர் ஆற்றும் முதல் உரை இது என்பதால் கூடுதல் கவனம் பெற்றது. ஆங்கிலத்தில் பேசிய அவர், ``இங்கு வரமுடியாமல் போன எம் தமிழர் தலைவர்களுக்கும், என் நண்பர் ஸ்டாலினுக்கும் நன்றி. உயர்ந்த உங்கள் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்ற ஒரு சாமானியனின் ஆர்வத்தை மன்னித்துவிடுங்கள். ஆனால், வரலாற்றின் போக்கை மாற்றியதும், ஏகாதிபத்திய சர்வாதிகாரிகளை வீழ்த்தியதும் இந்தச் சாமானியர்கள்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தண்டி யாத்திரையை நினைவுகூருங்கள். கமல்ஹாசன் இப்போது நாம் நிக…
-
-
- 8 replies
- 813 views
-
-
தேனி அருகே நாதக - தவெக கட்சியினர் மோதல் - பதற்றம் தேனி பங்களாமேடு பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார். த.வெ.க தலைவர் விஜய் குறித்தும் அவர் சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார். துரைமுருகன் மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது அவ்வப்போது இரு சக்கர வாகனங்களில் விஜய் கட்சியினர் கூச்சலிட்டவாறே சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சாட்டை துரைமுருகன் பேசிவிட்டு புறப்பட்டு சென்றதும் அப்பகுதியில் ஐந்து கார்களில் வந்த தமிழக வெற்றிக் கழகத்தினரை நாம் தமிழர் கட்சியினர் சிறை பிடித்தனர். இதில் த.வெ.க நிர்வாகியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. தகவல் அறிந்…
-
- 0 replies
- 190 views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பான வழக்கை ஒத்திவைத்த சென்னை நீதிமன்றம்! இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி நீண்ட காலமாக தொடரப்பட்ட மனு மீதான விசாரணையை சென்னை மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நீதியரசர்கள் குழாம் முன்னிலையிலான விசாரணையின் போது மத்திய அரசின் சட்டத்தரணி மேலதிக அவகாசம் கோரியதை அடுத்து, 2026 வழக்கு பெப்ரவரி 16 வரை ஒத்திவைக்கப்பட்டது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (MDMK) பொதுச் செயலாளர் வைகோ இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார். மத்திய அரசு 1991 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்தது. அதன் பின்னர் இந்தத் தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் பின்னர் ஒவ்வொரு ஐ…
-
-
- 2 replies
- 259 views
-
-
'விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்தது செல்லத்தக்கது' - உயர் நீதிமன்றம் கூறியது என்ன? பட மூலாதாரம்,TVK படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 6 பிப்ரவரி 2026, 06:55 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் வருமான வரித் துறையால் தனக்கு விதிக்கப்பட்ட ஒன்றரைக் கோடி ரூபாய் அபராதத்தை ரத்துசெய்ய வேண்டுமென தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. நிவாரணம் கோரி தீர்ப்பாயத்தை அணுகலாம் எனவும் கூறியுள்ளது. நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், 2015 -16ஆம் நிதியாண்டில் தனக்குக் கிடைத்த கூடுதல் வருவாயான 15 கோடி ரூபாய் குறித்த விவரத்தை…
-
- 1 reply
- 239 views
- 1 follower
-
-
’’45 பவுனைவிட நேர்மைதான் முக்கியம்” பத்மாவுக்கு மலேசிய அமைச்சர் பாராட்டு சென்னையில் குப்பையில் கிடந்த 45 சவரன் நகையை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை மலேசிய அரசு கவுரவித்துள்ளது. அவருக்கு தங்க மோதிரத்தையும் பரிசாக அனுப்பியுள்ளது. குப்பையில் கிடந்த 45 பவுன் தங்கத்தை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவுக்கு அன்றாடம் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் தற்போது கடல் கடந்தும் அவருக்கு கவுரவம் தேடி வருகிறது. பத்மாவின் செயலால் நெகிழ்ந்து போன மலேசிய அரசின் சட்டத் துறை அமைச்சர் குலசேகரன், தனது உதவியாளர் வடிவுக்கரசியை சென்னை அனுப்பியிருந்தார். அவரிடம் பத்மாவுக்கு அணிவிக்குமாறு கூறி மோதிரத்தையும் பரிசாக கொடுத்துள்ளார். இதையடுத்து சென்னை வந்த வடிவுக்கரசி, நேராக ப…
-
- 1 reply
- 355 views
- 1 follower
-
-
'எம்ஜிஆரை முன்வைத்து திமுகவை விமர்சனம்' - விஜய் பேச்சு உணர்த்தும் செய்தி என்ன? பட மூலாதாரம்,@TVKHQITWingOffl கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் மூத்த செய்தியாளர், பிபிசி தமிழ் 7 நிமிடங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாவது ஆண்டின் துவக்க விழாவில் பேசிய விஜய், எம்.ஜி.ஆரை முன்வைத்து தி.மு.கவைக் கடுமையாக விமர்சித்துள்ளார். கட்சி துவங்கியதிலிருந்தே தி.மு.கவை கடுமையாக விமர்சித்துவரும் விஜய், இதற்கு முன்பும் இதேபோல, எம்.ஜி.ஆரை முன்வைத்து தி.மு.கவை விமர்சித்திருக்கிறார். அவரது இந்த வியூகத்திற்குப் பலன் கிடைக்குமா? தமிழக வெற்றிக் கழகம் துவங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்து, மூன்றாம் ஆண்டு துவங்கும் நிலையில், சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை நிலையத்தில்…
-
- 2 replies
- 324 views
- 1 follower
-
-
துணைவேந்தர்கள் நியமனம்: இடைக்கால தடையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் - அடுத்து என்ன நடக்கும்? பட மூலாதாரம்,LokBhavanTamilNadu/Facebook படக்குறிப்பு,ஆளுநர் ஆர்.என்.ரவி (கோப்புப் படம்) கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 5 பிப்ரவரி 2026, 03:19 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் பல்கலைக்கழகங்களில் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 சட்டத்திருத்தங்களின் செயல்பாட்டுக்கு கடந்த ஆண்டு மே மாதம் சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை புதன்கிழமையன்று (பிப்ரவரி 4) உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. நீதிமன்றத்தின் விடுமுறைக் கால அமர்வில், 'இந்த வழக்கு அவசர அவசரமாக விசாரிக்கப்பட்டது ஏன்?' எனவும் உச்ச நீதிமன்ற…
-
- 0 replies
- 216 views
- 1 follower
-
-
கொலையான அஜித்குமார் | கோப்புப் படம் கி.மகாராஜன் Updated on: 04 Feb 2026, 3:55 am மதுரை: ‘மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் வழக்கில், நகை திருட்டுப் புகாரில் உண்மை இல்லை. அஜித்குமாரின் மரணம் என்பது காவல் மரணமே என உறுதியாகியுள்ளது’ என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். இவரை கடந்த ஆண்டு ஜூன் 27-ம் தேதி நகை காணாமல் போனது தொடர்பாக நிகிதா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் தனிப்படை காவலர்கள் விசாரித்தனர். அதில் கடுமையாக தாக்கப்பட்ட அஜித்குமார் ஜூன் 28-ம் தேதி உயிரிழந்தார். இந்த கொலை வழக்கில் 5 தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு,…
-
- 0 replies
- 158 views
-
-
"சென்னை குடிநீருக்காக வாழ்வாதாரத்தை பறிப்பதா?" - மாமல்லன் நீர்த்தேக்கத்தை எதிர்க்கும் மீனவர்கள் படக்குறிப்பு, சென்னைக்கு அருகே அமையுள்ள புதிய மாமல்லன் நீர்த்தேக்கத்தால் தங்களுக்கு பாதிப்பு என மீனவர்கள் கூறுகின்றனர். கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் "டேமை எங்க வேணும்னாலும் கட்டலாம். 5,000 குடும்பங்கள் பாதிக்கற மாதிரி இங்க தான் கட்டணுமா?" "கடல் தொழில் எனக்குத் தெரியும், போனாலும் அதுல அதிகமாக வருமானம் கிடைக்காது. 10 ஆயிரம் கிடைத்தாலும் அதை வைச்சு குடும்பத்தை நடத்த முடியுமா?" சென்னைக்கு அருகே அமையுள்ள புதிய மாமல்லன் நீர்த்தேக்கத்தால் தங்களுக்கு பாதிப்பு வரும் என்று அஞ்சும் மீனவர்கள் எழுப்பும் கேள்விகள் இவை. சென்னை மாநகரின் அதிகரித்து வரும் குடிநீர…
-
- 0 replies
- 233 views
- 1 follower
-
-
இலங்கை மக்களுக்கு தமிழக மறுவாழ்வு முகாம் வாழ் தமிழர்களின் பேருதவி! Jan 31, 2026 - 06:57 PM டித்வா புயலைத் தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தமிழ்நாட்டில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையர்கள் இரண்டு கொள்கலன் நிவாரணப் பொருட்களையும், நிதி உதவியையும் வழங்கியுள்ளனர். இலங்கை மக்களுடன் தங்களின் வலுவான ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, தமிழ்நாட்டில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் மீள்குடியேற்றப்பட்ட இலங்கையர்கள், தித்வா புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு, இரண்டு 20 அடி கொள்கலன் அளவிற்கு அத்தியாவசிய நிவாரணப் பொருட்களையும், கணிசமான நிதி உதவியையும் நன்கொடையாக வழங்கியுள்ளனர். இந்த நிவாரண …
-
- 0 replies
- 177 views
- 1 follower
-
-
காலணி உற்பத்தியில் உலகளாவிய மையமாக தமிழகத்தை மாற்ற திட்டம். தமிழகத்தை உலகளாவிய காலணி உற்பத்தியின் மிக முக்கிய மையமாக மாற்றும் நோக்கில், இத்தாலி பல்கலைக்கழகத்துடன் கோத்தாரி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. காலணி உற்பத்தியில் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் இத்தாலியின் புகழ்பெற்ற ‘இத்தாலியன் யுனிவர்சிட்டி ஆஃப் ஆர்ட் அண்ட் டிசைன்’ பல்கலைக்கழகத்துடன், கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் தலைவர் ஜின்னா ரஃபீக் அகமது செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா இடையே கையெழுத்தாகியுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மிகவும் முக்கியமானதாகும். இதன்…
-
- 0 replies
- 175 views
-
-
'இது தெய்வ குற்றம்' - கள்ளழகர் கோவில் வழக்கில் நீதிமன்ற உத்தரவு பற்றி சேகர்பாபு கூறுவது என்ன? பட மூலாதாரம்,alagarkoilkallalagar படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 29 ஜனவரி 2026, 03:21 GMT "கடந்த 2023ஆம் ஆண்டில் ரூ.107 கோடியாக இருந்த கோவிலின் உபரி நிதி, 2024ஆம் ஆண்டில் ரூ.62 கோடியாக சரிந்துள்ளது. சட்ட அதிகாரமின்றி (authority of law) இந்த நிதி செலவிடப்பட்டுள்ளது. இது தெய்வ குற்றம். வேலியே பயிரை மேய்வதற்கு இது தெளிவான உதாரணம்." மதுரை கள்ளழகர் கோவில் வளாகத்தில் புதிய கட்டுமானங்களை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பில் நீதிபதிகள் கூறிய வார்த்தைகள் இவை. கோவிலில் வணிக கட்டடங்கள் கட்டுவதற்கான அரசாணையை ரத்து செய்…
-
- 0 replies
- 200 views
- 1 follower
-
-
'20 ஆண்டு தீரா பகையில் 17 கொலைகள்' - போலீஸ் என்கவுன்டரில் பலியான அழகுராஜா யார்? கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 27 ஜனவரி 2026 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பெரம்பலூர் அருகே போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய அழகுராஜா உயிரிழந்துவிட்டதாக, ஜனவரி 27-ஆம் தேதியன்று திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். முன்னதாக, நீதிமன்ற விசாரணை முடிந்து சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வெள்ளைக்காளி என்ற நபர் மீது சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதில் காவலர் ஒருவர் படுகாயம் அடைந்தார். அதன் தொடர்ச்சியாக இந்த என்கவுன்டர் நடந்துள்ளது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளைக்காளி மீது கொலை, கொலை முயற்சி, போதைப்பொருள் கடத…
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
'முதல்வர் வேட்பாளராக பழனிசாமி பெயரை குறிப்பிடாத மோதி' - மதுராந்தகம் பொதுக் கூட்டத்தில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,@EPSTamilNadu கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 24 ஜனவரி 2026, 02:52 GMT தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோதி கலந்துகொண்ட மிகப் பெரிய கூட்டத்தை சென்னைக்கு அருகில் உள்ள மதுராந்தகத்தில் நடத்தியிருக்கிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி. தி.மு.க. மீது கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ள பிரதமர் மோதி, இரட்டை என்ஜின் அரசு பற்றியும் பேசியிருக்கிறார். ஆனால், முதலமைச்சராக எடப்பாடி கே. பழனிசாமியை குறிப்பிடவில்லை. பிரதமர் கலந்துகொண்ட இந்தக் கூட்டம் தே.ஜ.கூட்டணிக்கு உற்சாகமூட்டியிருக்கிறதா? எதிரும் புத…
-
- 0 replies
- 210 views
- 1 follower
-
-
சென்னையில் இயல்புக்கு மாறான குளிர் நிலவுகிறதா? நிபுணர்கள் விளக்கம் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் சாலைகளில் தற்போது பகல் வேளையிலும் பலர் ஸ்வெட்டர் அணிந்துகொண்டு செல்வதை பார்க்க முடிகிறது. அதேபோன்று, ஊட்டி போன்ற மலைப்பகுதிகளில் புல்வெளிகளில் பனி போர்த்தியது போன்று உறைபனியை காண முடிகிறது. ஜனவரி மாதம் முடிய இன்னும் 8 தினங்களே உள்ள நிலையில், சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் குளிர் வழக்கத்தை விட சற்று அதிகமாக இருப்பதை உணர முடிகிறது. ஜனவரி 18ம் தேதி சென்னை விமான நிலையத்தில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸ். இது கடந்த சில தினங்களில் சென்னையில் பதிவான மிகக் குறைந்த வெப்பந…
-
- 0 replies
- 223 views
- 1 follower
-
-
உடல் எடையைக் குறைக்க வெண்காரம் சாப்பிட்ட மாணவி மரணம் – நிபுணர்கள் சொல்வது என்ன? கட்டுரை தகவல் சேவியர் செல்வக்குமார் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் உடல் எடையைக் குறைப்பதற்காக, யூட்யூப் சேனலில் கூறிய தகவலை வைத்து, நாட்டு மருந்துக் கடையில் வெண்காரம் (போராக்ஸ்) வாங்கிச் சாப்பிட்ட மதுரையைச் சேர்ந்த கல்லுாரி மாணவி உயிரிழந்துள்ளார். ஆனால், வெண்காரம் என்பது நச்சுத்தன்மையுடைய பொருள் என்றும், அது நாட்டு மருந்துகளைத் தயாரிப்பதற்கு மிக மிகச் சிறிய அளவில் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும் சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். போராக்ஸ் என்று அழைக்கப்படும் சோடியம் போரேட் என்பது, பூச்சிக் கொல்லியைப் போன்ற நச்சுத்தன்மையைக் கொண்ட ஒரு ரசாயனப் பொருள் என்று வேதியியல் பேராசிர…
-
- 0 replies
- 230 views
- 1 follower
-
-
'விஜய் அறிவிப்பு தமிழக அரசியலில் மாற்றத்திற்கான தொடக்கம்' - பிபிசி தமிழுக்கு கிருஷ்ணசாமி பேட்டி பட மூலாதாரம்,Krishnasamy கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் "ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கம்பளிப்பூச்சி போலப் பார்க்கின்றன. கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று விஜய் கூறியிருப்பது, தமிழகத்தில் நடக்கவிருக்கின்ற அரசியல் மாற்றத்துக்கான ஆரம்பம் என்று நான் கருதுகிறேன்.'' என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். பிபிசி தமிழுக்கு அவர் அளித்த பேட்டி: கடந்த சில தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த புதிய தமிழகம், இப்போதும் அந்…
-
- 0 replies
- 595 views
- 1 follower
-
-
ஜல்லிக்கட்டு களத்தில் வீரர்களை பதறச் செய்யும் இந்த 6 காளைகள் பற்றி தெரியுமா? பட மூலாதாரம்,shyam படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் இரா.சிவா பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. புகழ் பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் போட்டிகளும் நெருங்கிவிட்டன. ஜல்லிக்கட்டு என்பதென்ன? வீரர்களுக்கும் மாடுகளுக்கும் இடையே களத்தில் நடக்கும் 'நீயா… நானா என்ற போட்டி தானே. அந்த மாடுபிடி வீரர்கள் காளையை பற்றி மனம் திறந்து பேசினால் எப்படி இருக்கும்? ஜல்லிக்கட்டு களத்தில் தாங்கள் வியந்து பார்த்த காளைகளை பற்றி சில வீரர்கள் பிபிசியிடம் பகிர்ந்து கொண்டனர். தோட்டா பட மூலாதாரம்,Selvakumar படக்குறிப்பு,'தோட…
-
- 8 replies
- 727 views
- 1 follower
-
-
சிறைப்பிடிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களின் விசைப்படகு விடுவிக்கப்படும் - கடற்றொழில் சங்க பிரதிநிதி சிறைப்பிடிக்கப்பட்ட காரைக்கால் கடற்றொழிலாளர்களின் விசைப்படகு விடுவிக்கப்படுமென ராமேஸ்வரம் விசைப்படகு கடற்றொழில் சங்க பிரதிநிதி எமரால்ட் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்து இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருகின்றனர். குறிப்பாக தனுஷ்கோடி கடற்பரப்பில் இரவு பகலாக தங்கி மீன்பிடிக்கும் காரைக்கால் பகுதி கடற்றொழிலாளர்களை நடுக்கடலில் சிறைபிடித்த ராமேஸ்வரம் விசைப்படகு கடற்றொழிலாளர்கள் படகுடன் கடற்றொழிலாளர்களை மீன் பிடித்துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். நடுக்கடலில் வைத்து சிறைபிடித்து ராமநாதபுரம், தஞ்சை, புது…
-
- 0 replies
- 198 views
- 1 follower
-
-
கரூர் சம்பவம் குறித்த டெல்லியில் விஜயிடம் சிபிஐ விசாரணை - என்ன நிலவரம்? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,சென்னையில் இருந்து விஜய் கிளம்பியபோது 36 நிமிடங்களுக்கு முன்னர் கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பான வழக்கின் விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் ஆஜராகியுள்ளார். விசாரணைக்காக விஜய் தனி விமானத்தில் டெல்லி வந்தடைந்தார். அவரிடம் காலை சுமார் 11.30 மணி முதல் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மதியம் 3 மணியைத் தாண்டி தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கூட்டத்துக்குத் தாமதமாக வருகை தந்த குற்றச்சாட்டு, கூட்ட மேலாண்மை, மேலும் கரூர் நிகழ்வுடன் தொடர்புடைய அமைப்புசார்ந்த பொறுப்புகள் ஆகியவை தொடர்பாக இந்த விசாரணையின்போது சிபிஐ கவனம் செலுத்துவதாக ஏ.என்.ஐ…
-
- 0 replies
- 255 views
- 1 follower
-
-
இலங்கைத் தமிழர்களுக்காக மோடிக்கு கடிதம் அனுப்பிய ஸ்டாலின் Jan 11, 2026 - 07:16 PM இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை களைந்திட வேண்டுமென்றும், தமிழ் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையிலான ஒரு அரசியலமைப்புச் செயல்முறையினைக் கொண்டுவருவதற்கு, இந்திய அரசு இலங்கை அதிகாரிகளுடன் உயர்மட்ட அளவில் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் கோரி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், இலங்கையில் உள்ள தமிழ்ச் சமூகத்தின் நலன் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான ஆழ்ந்த கவலைக்குரிய ஒரு விஷயம் குறித்து இந்தியப் பிரதமரின்…
-
- 0 replies
- 229 views
- 1 follower
-
-
காவல் மரணத்தில் கணவரை இழந்து 27 ஆண்டுகளாக நீதிக்குப் போராடும் மதுரை பெண் கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் மூத்த செய்தியாளர், பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் கால் நூற்றாண்டிற்கு முன்பு மதுரை மாவட்டத்தில் ஒரு காவல் நிலையத்தில் உசிலம்பட்டியைச் சேர்ந்த ஒரு தம்பதி கடுமையான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதில் கணவர் உயிரிழந்தார். அந்தச் சம்பவம் நடந்தபோது பள்ளி மாணவராக இருந்த அவரது மகன் இப்போது வழக்கறிஞர். இந்த விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டுமென தாயும் மகனும் இன்னமும் விரும்புகின்றனர். 27 ஆண்டுகளைத் தாண்டித் தொடரும் ஒரு போராட்டத்தின் கதை இது. Play video, "போலீஸ் காவலில் உயிரிழந்த கணவர் - 27 ஆண்டுகளாக நீதிக்குப் போராடும் தாயும் மகனும்", கால அளவு 10,36 10:36 காணொளிக் …
-
- 0 replies
- 276 views
- 1 follower
-