Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பணமிருக்கும் மனிதரிடம் மனமிருக்கவில்லை!- கரோனா நிவாரணப் பணியில் இருக்கும் எழுத்தாளர் வேதனை எங்கள் வேலை எழுதுவதோடு முடிவதல்ல, செயல்பாட்டிலும் இருக்க வேண்டும் என்று எண்ணும் எழுத்தாளர்களில் ஒருவர் அ.முத்துகிருஷ்ணன். மதுரை யானைமலையை உடைப்பதற்கென்றே அரசு ஒரு திட்டம் கொண்டுவந்தபோது, அதற்கு எதிராக 'பசுமை நடை' என்ற அமைப்பை ஏற்படுத்தி அப்பணியைத் தடுத்து நிறுத்தியவர். வாரந்தோறும் 'பசுமை நடை' எனும் பெயரில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்துக்கு மக்களை அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இவர், தொல்லியல் குறித்த விழிப்புணர்வையும், தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்கும் பணியையும் செவ்வனே செய்து வருபவர். இந்த பொதுமுடக்கக் காலத்தில் அடித்தட்டு மக்கள் படும் …

  2. பணம் இருந்தால் பக்கத்தில் வந்து நில்லு... பெரியார் வழியில் வைகோ! 'கட்சிக்கு நிதியளிப்பவர்கள் மட்டுமே இனி தன்னுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளவேண்டும்' என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்திருப்பது, கட்சியினரிடையே ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஒரு சேர ஏற்படுத்தியுள்ளது. தென்சென்னை, கிழக்கு மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகச் செயல்வீரர்கள் கூட்டம், சென்னை, தரமணியையொட்டியுள்ள வேளச்சேரி மெயின் ரோட்டில் உள்ள ஹேமா மஹாலில் நடைபெற்றது. மாவட்டப் பொறுப்பாளர் கே. கழககுமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் சிறப்புரையாற்றினர். கூட்டத்திற்குப்பின் கட்சி நிர்வாகிகள் பலர், வைகோவுடன் புகைப்படம் எடுத்து…

  3. பணம் மாற்றும் பக்கா கேங்க்! - எடப்பாடி சர்ச்சை 1 பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன்... இவர்களுடன் இன்னொரு வி.ஐ.பி இருக்கிறார். அவர்தான், சந்திரகாந்த். தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் இவர்! ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கான்ட்ராக்டர் ராமலிங்கத்தின் மகன்தான் இந்த சந்திரகாந்த். பெருந்துறை சுப்பிரமணியம் என்பவர் வீட்டில் பெண் எடுத்தவகையில் ராமலிங்கமும் எடப்பாடி பழனிசாமியும் நெருங்கிய உறவினர்கள். கடந்த ஆண்டு டிசம்பரில் திடீரென வருமானவரித் துறையினர் பெங்களூரு, ஈரோடு ஆகிய ஊர்களில் ராமலிங்கத்தை மையமாக வைத்து ரெய்டு நடத்தினர். பணத்தட்டுப்பாடு நிலவிய நேரத்தில், 5.40 கோடி ரூபாய் புதிய …

  4. மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. தூத்துக்குடியில் அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டம் திசையன்விளையை அடுத்த ஆணைக்குடியை சேர்ந்த இளம்பெண் பானுமதியும், அவரது சகோதரி ஜான்சிராணியும், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த திங்கட்கிழமை புகார் மனு ஒன்றை அளித்திருந்தனர். அதில் தாங்கள் சசிகலா புஷ்பா வீட்டில் வேலை பார்த்து வந்தபோது அவரது கணவர் லிங்கேஸ்வரர், மகன் பிரதீப் ஆகியோர் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிவித்திருந்தனர். மேலும் சசிகலா புஷ்பாவும், அவரது தாயார் கௌரியும் தகாத வார்த்தைகளால் பேசி, அடித்து துன்…

  5. பண்ருட்டியைச் சேர்ந்த மாணவி ஐஏஎஸ் தேர்வில் தமிழக அளவில் 3-ம் இடம் பிரியங்கா கடலூர் பண்ருட்டியைச் சேர்ந்த மாணவி ஒருவர், ஐஏஎஸ் தேர்வில் தமிழக அளவில் 3-ம் இடம் பெற்றுள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பண்டரக்கோட்டையில் வசிக்கும் மருங்கூர் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் சிவப்பிரகாசத்தின் மகள் பிரியங்கா, இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் தமிழக அளவில் 3-ம் இடத்தையும், அகில இந்திய அளவில் 68-வது இடத்தையும் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார். சிவப்பிரகாசத்தின் மனைவி ஏ.பரிமளா ஆனத்தூர் அஞ்சல் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக பணிபுரிந்துவரும் நிலையில், அவரது இளைய மகன் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படிப்பு படித்து வருகிறார். …

  6. பதநீர் விற்று பள்ளிக்கூடம் நடத்தும் கிராம மக்கள் பகிர்க அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகின்ற நிலையில், தூத்துக்குடி அருகே கடந்த 15 ஆண்டுகளாக கல்வி வளர்ச்சிக்காக பதநீர் விற்று வருகின்றனர் ஒரு கிராம மக்கள். தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் தூத்துக்குடியில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அந்தோணியார்புரம் கிராமம். சுற்றிலும் பனைமரங்கள் மிகுதியாக காணப்படும் இந்த கிராமத்தில் பனை தொழிலாளர்கள் அதிகம். ஒரு காலத்தில் பதநீரை காய்ச்சி கருப்பட்டி தயாரித்து விற்பனை செய்து வந்த இந்த கிராம மக்கள், அதில் போதுமான வருமானம் கிடைக்காததால் தற்போது பதநீராகவே விற்பனை …

  7. பதவி இருந்தவரை ஜெயலலிதா மரண மர்மம் பற்றி வாய்திறக்காத ஓ.பி.எஸ் திடீர் விசுவாச அரசியல் காட்டுவது ஏன்? - ஸ்டாலின் கேள்வி “பதவி இருந்தவரை ஜெயலலிதா மரண மர்மம் பற்றி வாய்திறக்காத ஓ.பி.எஸ் திடீர் விசுவாச அரசியல் காட்டுவது ஏன்?” என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: குற்றவாளி என்ற தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு, மரணமடைந்த காரணத்தினால் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, அபராதத் தொகையான 100 கோடி ரூபாயைக் கட்டியாக வேண்டும் என்பதுதான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. இந்தியாவின…

  8. பதவி இறங்க மறுக்கிறாரா பன்னீர் செல்வம்? - Exclusive தமிழகம் இதுவரை பார்த்திராத பல அரசியல் கேவலங்களைப் பார்க்க ஆரம்பித்துள்ளது. 'முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் தோழி.. ' என்ற ஒரே தகுதி போதும், கோடிக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பெரும் கட்சியை நிர்வகிக்கவும், ஏழரை கோடி தமிழர்களைக் கொண்ட தமிழ் நாட்டை ஆளவும் என்ற நிலையை உருவாக்கியுள்ளனர் அதிமுக நிர்வாகிகள். வெளியிலிருந்து பார்த்தால் கட்சி நிர்வாகிகள் எல்லாம் சசிகலாவை 'சீக்கிரம் சிஎம் ஆகுங்க... அப்பதான் எங்க ஜென்மம் சாபல்யமடையும்' என்று வற்புறுத்துவது போலத் தெரிந்தாலும், உண்மை நிலவரம் வேறு என்கிறார்கள். சசிகலா மற்றும் அவரது குடும்ப கேங்கின் வற்புறுத்தல் மற்றும் மிரட்டல் காரணமாகவே கட்சியினர் சசிகலாவுக்கு வேண்டுகோள் …

  9. பதவி சண்டை: மதுரை ஆதீனத்திற்கு எதிராக இளைய ஆதீனம் உண்ணாவிரத போராட்டம் 31 Aug 2025, 2:27 PM மதுரை ஆதீனத்திற்கு எதிராக இளைய ஆதீனம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்தியாவில் உள்ள பழமையான சைவ மடங்களில் ஒன்று மதுரை ஆதீனம்.மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள், பொறுப்பேற்றார். இவர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை முன் வைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் மதுரை ஆதீனத்திற்கு எதிராக மறைந்த அருணகிரிநாதரின் நினைவிடத்தில் இளைய ஆதீனம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அடுத்த ஆதீனத்தை தேர்ந்தெடுப்பதில் தற்போதைய ஆதீனம் தன்னிச்சையாகச்…

  10. மிஸ்டர் கழுகு: பதவி பறிக்கும் குட்கா? ‘சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கிறேன். மதியத்துக்குள் வந்துவிடுவேன்’ என மெசேஜ் அனுப்பியிருந்தார் கழுகார். மதிய வெயிலில் வியர்வையோடு வந்த அவரிடம், ‘‘காவிரிப் பிரச்னை, கவர்னர் விவகாரத்தால் பின்னுக்குப் போனது. கவர்னர் விவகாரம், தினகரன்-திவாகரன் மோதலில் அடிபட்டுப் போனது. இப்போது குட்கா விவகாரம் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டதே’’ என்றோம். ‘‘தினகரனுக்கும் பி.ஜே.பி-க்கும் இடையில் நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளது. மோடியின் ஆலோசகராக உள்ள அதிகாரி ஒருவர் தினகரனை சென்னையில் வந்து சந்தித்துவிட்டுப் போனார் என பல வாரங்களுக்கு முன்பே நமது நிருபர் எழுதியிருந்தார். அதற்கும், நீர் மேலே சொல்லி இருக்கிற எல்லா வ…

  11. தமிழக சட்டசபையில் தே.மு.தி.க.வின் பலம் 29 ஆக இருந்தது. இதில் மாபா பாண்டியராஜன், மைக்கேல் ராயப்பன், தமிழழகன், சுந்தரராஜன், அருண் பாண்டியன், சுரேஷ்குமார், சாந்தி ஆகிய 7 பேரும் பிரிந்து சென்று அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் அனைவரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்கள். அப்போது தொகுதி மேம்பாடு குறித்து பேசியதாக விளக்கம் அளித்தார்கள். நடந்து முடிந்த டெல்லி மேல்சபை தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். இதையடுத்து 7 பேரையும் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி விஜயகாந்த் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீசில் ‘தங்களை ஏன் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்க கூடாது என்பத…

    • 0 replies
    • 414 views
  12. பதவிக்கு வர மாட்டேன்; ஆனால்... நடராஜன் திடீர் சபதம் அ.தி.மு.க.வில் எந்த பதவிக்கும் நான் வர மாட்டேன் என்று சசிகலாவின் கணவர் நடராஜன் உறுதியளித்துள்ளார். மறைந்த ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாள் விழா அதிமுகவினரால் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாப்பட்டு வருகிறது. தஞ்சாவூரில் நடைபெற்ற பிறந்தநாளில் விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அ.தி.மு.க.வில் எந்த பதவிக்கும் நான் வர மாட்டேன். ஆனால் செய்ய வேண்டியதை சரியான நேரத்தில் செய்து முடிப்பேன். பதவிக்கு வராமலேயே அ.தி.மு.க.வை பாதுகாப்பேன். ஜெயலலிதா புகழ் இருக்கும் வரை யாராலும் எதுவும் செய்ய முடியாது. தம்பி தினகரன் சொல்வதை போல் பிரிந்து சென்றவர்க…

  13. சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்ற நிகழ்ச்சியில் வைகோ. உண்ணாவிரதப் பந்தலில் சந்திரபாபு நாயுடுவுடன் வைகோ. சீமாந்திரா முதல்வராக பதவி யேற்றுக்கொண்ட விழாவில் தனது நீண்டகால நண்பரும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோவுக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து கவுரவித்திருக்கிறார் சந்திரபாபு நாயுடு. சீமாந்திரா முதல்வராக சந்திர பாபு நாயுடு கடந்த 8-ம் தேதி பதவியேற்றுக்கொண்டார். இந்த விழாவுக்கு பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்களோடு தனது நண்பர் வைகோவையும் சந்திரபாபு நாயுடு அழைத்திருந்தார். இதை ஏற்று, பதவியேற்பு விழாவில் வைகோவும் கலந்துகொண்டார். போராட்டத்திலும் கைகோத்தவர் இவர்கள் இருவரும் நீண்ட கா…

    • 0 replies
    • 602 views
  14. பதவியை இராஜினாமா செய்தார் குஷ்பு! நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு, தான் வகித்து வந்த தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் குஷ்புவின் இராஜினாமாக் கடிதத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு காலகட்டத்தில் குஷ்பு, தி.மு.கவில் இணைந்து பணியாற்றினார். இதனையடுத்து அக்கட்சியில் இருந்து விலகி 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொக…

  15. பதில் சொல்லுங்கள் பன்னீர்செல்வம்! இந்தியர்களை இந்தியர்களே ஆண்டுகொள்ளும் ஜனநாயக முறைக்கான ஆரம்பக் கட்டுமானங்களில் ஒன்று இன்றைய தமிழகச் சட்டப்பேரவையும் தலைமைச் செயலகமும். தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் வளாகத்திலுள்ள தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் அறையில், அவர் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கும் சந்தேகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையிட்ட நாள் தமிழ்நாட்டின் அரசியல் - அரசு நிர்வாக வரலாற்றின் கறுப்பு நாட்களில் ஒன்று. இப்படியொரு நாளும் வரும் என்று நம் முன்னோர் எண்ணியிருப்பார்களா? தமிழ்ச் சமூகம் நவீன ஆட்சி நிர்வாகத்தின் விளைவாக இன்று அடைந்திருக்கும் நலன்கள் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், காமராஜர்…

  16. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: தமிழ்ப் பாடத்தில் 47,000 பேர் தோல்வியடைந்தது ஏன்? - அதிர்ச்சியளிக்கும் பின்னணி 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. இதில், "பத்தாம் வகுப்புத் தமிழ் மொழிப்பாடத்தில் 47,000 பேர் தேர்ச்சி பெறவில்லை" என்ற விவரம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது? தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை திங்கள்கிழமையன்று வெளியிட்டது. இதில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக, …

  17. பத்திரிகைகாரங்களா நீங்க...த்தூ...செய்தியாளர்கள் முகத்தில் காறித் துப்பிய விஜயகாந்த் -பரபரப்பு வீடியோ சென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், "பத்திரிகைகாரங்களா நீங்க....தூ....... என முகத்தில் காறித்துப்பிய சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் ரத்த தான முகாமை இன்று விஜயகாந்த் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களை அவர் சந்தித்தார். இச்சந்திப்பின் போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார் விஜயகாந்த். அப்போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துக் கொண்டிருந்த விஜயகாந்த், 2016 ஆம் ஆண்டு அ.தி.மு.க, …

  18. பத்திரிகையாளர் ஞாநி பத்மஸ்ரீ கமலுக்கு எழுதிய பகிரங்க கடிதம் இது நீங்கள் அரசியலில் குதிப்பீர்களா? மாட்டீர்களா? என்று ஒரு பெட்டிங்கே நடந்துகொண்டிருக்கும் நேரம் இது. நான் நீண்ட நாட்களாகவே அரசியலில் இருந்து கொண்டுதான் இருக்கிறேன் என்று நீங்கள் மீண்டும் மீண்டும் சொல்கிறீர்கள். அதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். சமூக நிகழ்வுகள் பற்றிப் பொதுவெளியில் கருத்துச் சொல்லும் எவரும் அரசியலில் இருக்கிறார்கள் என்பதே நிஜம். அப்படிக் கருத்துச் சொல்பவராக நீங்கள் தொடர்ந்து இருந்து வருகிறீர்கள். அப்படியானால் இதைப் பற்றி ஏன் கருத்துச் சொல்லவில்லை, அதைப் பற்றி ஏன் கருத்துச் சொல்லவில்லை என்று சிலர் கேட்பது அசட்டுத்தனம்தான். கருத்துச் சொல்லாமல் இருப்பதும் அரசியல்தான் என்பது புரியாதவ…

    • 3 replies
    • 627 views
  19. பத்து நாட்களாக அப்போலோ அறிக்கை ஏன் இல்லை? #ApolloUpdates அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த மருத்துவமனை அறிக்கை வெளிவந்து 10 நாட்கள் ஆகிவிட்டது. அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டதும், சாதாரண காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவு என்று மருத்துவமனை சார்பில் முதல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதோடு ஓரிரு நாளில் முதல்வர் வீடு திரும்புவார் என்றும் அதில் சொல்லப்பட்டு இருந்தது. அவர்கள் சொல்லி இருந்த இரண்டு நாட்கள் கடந்த நிலையில், முதல்வர் வீட்டிற்கு சென்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த நிலையில் மீண்டும் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், இன்னும் இரண்டு நாட்கள் முதல்வருக்கு ஓய்வு தேவை என்று கு…

  20. பத்ம விருதுகள்: தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்! மின்னம்பலம் இந்தியா முழுவதும் 141 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்துக்கு முந்தைய நாள் பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், பொறியியல், தொழில்- வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய உயரிய விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் பெர்னாண்டஸ், அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ், உடுப்பி பெஜாவர் மடாதிபதி, குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் உள்ளிட்ட 7 பேருக்கு பத்மவிபூஷ…

  21. டாக்டர் மகேந்திரன் திமுக-வில் இணைந்ததை அடுத்து தற்போது பத்மப்ரியாவும் திமுக-வில் இணைந்திருக்கிறார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அந்தக் கட்சியிலிருந்து அதிரடியாக விலகினார்கள். அதில் சுற்றுச்சூழல் ஆர்வலராக இருந்து, மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மப்ரியாவும் ஒருவர். மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகி மாற்றுக் கட்சிகளில் இணையாமல் இருந்துவந்த பத்மப்ரியா, தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்திருக்கிறார்.டாக்டர் மகேந்திரன் திமுக-வில் இணைந்ததை அடுத்து தற்போது பத்மப்ரியாவும் திமுக-வில் இணைந்திருக்கிறார். …

    • 4 replies
    • 989 views
  22. பந்தளம் அரண்மனை அடூர் நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பந்தளம் எனும் சிறிய நகரத்தில், அச்சன்கோயில் ஆற்றங்கரையோரத்தில் அமைந்திருக்கிறது. Image source:commons.wikimedia.org இந்த அரண்மனையில் மதுரை பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றல்களாக கருதப்படும் பந்தளம் அரச பரம்பரையினர் வாழ்ந்து வந்தனர். இதன் வரலாற்று பெருமையை பற்றி பேசும் அதேவேளையில் நாம் இதன் மதச் சிறப்பை பற்றியும் பேசியாக வேண்டும். பந்தளம் அரச பரம்பரையில் பிறந்தவராகவே சுவாமி ஐயப்பன் புராணங்களில் போற்றப்படுகிறார். அதோடு அச்சன்கோயில் நதியோரத்தில் ஐயப்பன் கோயில் ஒன்றும் உள்ளது. இந்த கோயிலுக்கு நீங்கள் வரும்பொழுது இதற்கும் சபரி மலை கோயிலுக்கும் உள்ள குறிப்பிடத்தக்க ஒற்றுமையை கண்டுணர்வீர்கள். இங்கு ஆண்டுதோற…

  23. மிஸ்டர் கழுகு: பன்னீரின் டெல்லி பன்ச் டயலாக்! எருதுப் புரட்சி! வாடிவாசல் திறக்கும்வரை வீடு வாசல் போகமாட்டோம்’ என்ற வாசகம் பொறித்த பனியனோடு அலுவலகம் வந்து சேர்ந்த கழுகாரிடம், ஜல்லிக்கட்டிலிருந்தே கேள்விகளை ஆரம்பித்தோம். ‘‘மத்திய அரசு நினைத்திருந்தால்... தமிழக எம்.பி-க்கள் போராடி இருந்தால்... ஜல்லிக்கட்டு திருத்தச் சட்டம் கொண்டுவந்திருக்கலாம் என முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு சாட்டையடி கொடுத்திருக்கிறாரே?’’ ‘‘உண்மைதான். அவர் இதற்கு தெளிவான முன்னுதாரணமும் கொடுத்திருந்தார். ‘இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என கடந்த 75-ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு தந்தது. இதனால் அவர் பிரதமராகத் தொடர முடியாத நிலைமை ஏற்பட்டது. …

  24. பன்னீரின் தயக்கமும்.. பழனிச்சாமியின் பாய்ச்சலும்! “மூன்று முறை முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் செய்யத் துணியாத செயலை, முதல்முறையாகப் பதவியேற்ற பழனிசாமி செய்துவிட்டார்” என்று சிலாகித்துப் பேசுகிறார்கள் அ.தி.மு.க-வின் முன்னணியினர். பெரியகுளம் தொகுதியின் வேட்பாளராக 2001-ம் ஆண்டு அறிமுகமாகி, தேர்தலில் வெற்றியும் பெற்று வருவாய்த் துறை அமைச்சராக ஜெயலலிதாவினால் தமிழகத்துக்கு அறிமுகம் செய்யப்பட்டார் பன்னீர்செல்வம். ஆனால், ஜெயலலிதா மீதான வழக்கைச் சுட்டிக்காட்டி அப்போது அவரின் முதல்வர் பதவி பறிக்கபட்டது. இதைச் சற்றும் எதிர்பாராத ஜெயலலிதா, அடுத்து என்ன செய்வது, யாரை பொறுப்புக்கு நியமிப்பது என்ற நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டார். சசிகலாவின் அக்கா மகனாகவும் அன்றை…

  25. பன்னீருக்கு 35 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு? சென்னை: முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு, ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ., சண்முகநாதன், கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி உள்ளிட்ட 5 எம்.எல்.ஏ.,க்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருந்தனர். மேலும் பல எம்.எல்.ஏ.,க்கள் பன்னீருக்கு ஆதரவு தெரிவித்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் கூவத்தூர் அருகே தனியார் ரிசார்ட்டில் எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ரிசார்ட்டில் உள்ள எம்.எல்.ஏ.,க்களில் 30 பேர் முதல்வர் பன்னீருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், மேலும் 15 பேர் தி.மு.க.,வை தொடர்பு கொண்டுள்ளதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் பன்னீர் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 35 ஆக அதிகரித்துள்ளது. இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.