தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10263 topics in this forum
-
மதுரையில் கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு MAR 12, 2015by அ.எழிலரசன்in செய்திகள் மறைந்த கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு தமிழ்நாட்டில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. கி.பி.அரவிந்தன் நினைவுக் குழுவின் ஏற்பாட்டில், வரும் 14ம் நாள் சனிக்கிழமை மாலை 5 மணியளவில், மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும். இரா.திரவியம் தலைமையில் நடைபெறும் இந்த நினைவேந்தல் நிகழ்வில், கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் உருவப்படத்தை திறந்து வைத்து, ஓவியர் வீர.சந்தனம் உரையாற்றுவார். நினைவுரையை எழுத்தாளர்கள் பாமரன் மற்றும் ஜெயப்பிரகாசம், கவிஞர் வைகறை, முனைவர் அரணமுறுவல், சி.அறிவுறுவோன், பொன்மாறன், வழக்கறிஞர்கள் ஜெயம்சூலியஸ், ஜெபர…
-
- 0 replies
- 326 views
-
-
கோடீஸ்வரர்களிடம் இல்லை, உங்களிடம் நிதி கேட்டு நிற்கிறேன்: தொண்டர்களுக்கு, கருணாநிதி கடிதம். சென்னை: தேர்தல் பணிக்காக தாரளமாக நிதி வழங்குமாறு கட்சி தொண்டர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, 2016-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தமிழக அரசின் பொதுத்தேர்தல் வரவுள்ளது. 5 ஆண்டு காலம் இந்த நாட்டு மக்கள் பட்ட துன்பங்களுக்கெல்லாம் விடிவு காலம் ஏற்படவிருக்கிறது. மக்கள் படும் வேதனைகளை எண்ணிப்பார்க்கும் போது, ஆளுங்கட்சிக்கு விடை கொடுத்து அனுப்பத் தயாராகி விட்டார்கள் என்ற போதிலும், "அவர்கள் இல்லாவிட்டால் நாம் தானே", என்ற மதமதப்போடு நாம் இருந்து விடக்கூடாது. எதிர்க்கட்சிகளிடம…
-
- 3 replies
- 417 views
-
-
இந்த ஆண்டு மார்ச் 15ஆம் தேதி முதல் மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கோ, கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்வதற்கோ மனிதர்களைப் பயன்படுத்தக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அரசிதழில் இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டின் மனிதக் கழிவுகளை மனிதர்களை வைத்து அகற்றுவதற்குத் தடைவிதிக்கும் சட்டத்தின் 7வது பிரிவின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதன்படி, தனி மனிதரோ, உள்ளூர் நிர்வாகமோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ கழிவு நீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யவும் அபாயகரமான கழிவுகளை அகற்றவும் மனிதர்களைப் பயன்படுத்தக்கூடாது. 2013ஆம் ஆண்டின் சட்டப்படி, இம்மாதிரியான பணிகளுக்கு மனிதர்களைப் பயன்படுத்தினால், ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டன…
-
- 1 reply
- 357 views
-
-
fe8f41296fa3dee9359f497cc2a0c593
-
- 15 replies
- 3.6k views
-
-
சென்னையில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் ஒருவர் இன்று பலியான சம்பவம் பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்ணின் பெயர் அமிர்தலட்சுமி என்பதாகும். இவர் எழும்பூர் கெங்குரெட்டி தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்வகுமாரின் மனைவியாவார். கடந்த சிலதினங்களுக்கு முன்னர் திடீரென காய்ச்சலால் பாதிகப்பட்டார். இதையடுத்து அமிஞ்சிகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அமிர்தலட்சுமிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி காணப்பட்டதால் அதற்கான சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் முடிவில் அமுதலட்சுமிக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது கடந்த 4 ஆம…
-
- 0 replies
- 239 views
-
-
இந்திய எல்லையை தாண்டி ஸ்ரீலங்கா கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காரைக்கால் மாவட்ட மீனவர்களின் கூட்டத்தில் இந்த புதிய கட்டுப்பாடுகள் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், காரைக்கால் மீனவர்கள் இந்திய எல்லைக்குட்பட்ட கடற்பகுதியில் மாத்திரமே மீன்பிடியில் ஈடுபடவேண்டும். இந்திய எல்லையை தாண்டி ஸ்ரீலங்காவிற்குள் செல்லக்கூடாது எனவும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், அத்துமீறி ஸ்ரீலங்கா கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு ஒரு மாதம் தொழிலில் ஈடுபட தடை விதிக்கப்படவுள்ளது. இதேவேளை, ஸ்ரீலங்கா கடற்பகுதிக்கு சென்று மீன்பிடிய…
-
- 1 reply
- 503 views
-
-
'சாந்தி' திரையரங்கம் இடிக்க முடிவு - நடிகர் பிரபு சென்னையில் உள்ள சிவாஜிகணேசனின் சாந்தி தியேட்டர் இடிக்கப்பட்டு வணிகவாளமாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் இன்று இந்த செய்தியை உறுதிப்படுத்தினார் நடிகர் பிரபு. இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியபோது, சாந்தி திரையரங்கம் இடிக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் அங்கு அக்ஷ்யா நிறுவனத்துடன் சேர்ந்து புதிய வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளது. அதில் நவீன தரத்துடன் கூடிய சாந்தி தியேட்டர் அமைக்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தார். தினமணி Info: சென்னையின் முதல் ஏ.சி தியேட்டர் 'சாந்தி' என பெருமை பெற்றது!
-
- 5 replies
- 3k views
-
-
கேரளா மாநிலத்துக்கு சுற்றுலா சென்ற ஆத்தூரைச் சேர்ந்த மாணவிகள் 260 பேர், நான்கு பஸ்சில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். பஸ் தமிழக எல்லையை தொட்டபோது, மாணவி ஒருவர் தனக்கு வயிறு வலிப்பதாக சொல்கிறார். உடனடியாக அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பஸ் நிறுத்தப்படுகிறது. கழிப்பறை சென்ற மாணவி, அரை மணி நேரமாகியும் திரும்பவில்லை. திடீரென கழிப்பறையிலிருந்து அலறல் சத்தம் வர... அதிர்ந்த மாணவிகள் கழிப்பறை நோக்கி ஓடினர். அங்கு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார் மாணவி. அருகில் பச்சிளம் பெண் குழந்தை இறந்து கிடக்க, மாணவிகள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். அந்த மாணவிக்கு திருமணமாகவில்லை என்பதுதான் அதிர்ச்சியின் உச்சம். இந்த மாணவியும், இவரது பக்கத்து ஊரைச் சேர்ந்த வாலிபர் ஒருவரும் காதலித்து வந்…
-
- 1 reply
- 504 views
-
-
சென்னை ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது விமானத்தின் டயர் திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. உடனடியாக விமானத்தில் இருந்து பயணிகள் இறக்கி விடப் பட்டனர். அதன் பிறகே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். விமானி சமார்த்தியமாக செயலபட்டதால் விமானத்தில் இருந்து 150பயணிகளும் உயிர் தப்பினார்கள்.யாருக்கும் காயம் இல்லை http://www.dailythanthi.com/News/State/2015/02/26103939/Flight-tire-exploded-accident-150-passengers-survived.vpf
-
- 3 replies
- 386 views
-
-
இயன்முறை மருத்துவக் கூட்டமைப்பை உருவாக்கவும், அதற்குரிய நிதி ஒதுக்கவும் வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது.. மருத்துவ முன்னேற்றங்களும் நவீன கண்டுபிடிப்புகளும் நாளுக்கு நாள் வளர்ந்தாலும், புதிய புதிய நோய்களின் தாக்கமும் அதிகரித்தபடியேதான் உள்ளது. எத்தகைய நவீன மருந்துகளின் கண்டுபிடிப்பால்கூட டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இத்தகைய சூழலில் மருந்தோ, அறுவை சிகிச்சையோ இல்லாமல் எத்தகைய பாதிப்புகளையும் தடுக்கக்கூடிய சிறப்புவாய்ந்த இயன்முறை மருத்துவத்தைத் தமிழக அரசு பரவலான செயல்முறைக்குக் கொண்டுவர வேண்டும். இயன்முறை மருத்துவத்தின் தரத…
-
- 0 replies
- 370 views
-
-
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை குறித்த அறிக்கை தள்ளி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழர்களின் நம்பிக்கை குறைந்துபோயுள்ளது. இராஜபக்சேவுக்கு ஆதரவாக சிங்களக் கடும் போக்காளர்கள் பேரணியை நடத்தி மீண்டும் தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளனர். நடைபெறவிருக்கும் தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறுவது என்ற ஒற்றை நோக்கத்தோடு இப்போதைய இலங்கை அரசாங்கம் காய்களை நகர்த்தி வருகிறது. தமிழர்களைப் பற்றி அதிபர் மைத்ரிபாலாவும் கவலைப்படவில்லை. இரகசிய முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும், தம்…
-
- 0 replies
- 318 views
-
-
தமிழக முதல்வர்கள் இலங்கைக்கு செல்லாதது ஏன்? கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலில் கருணாநிதியும் ஜெயலலிதாவுமே ஆதிக்கம் செலுத்திவருகின்றனர்இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையில் நீடித்துவரும் தீஸ்தா நதி நீர் பிரச்சனை தொடர்பாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பேனர்ஜி இன்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பு சுமுகமாக இருந்ததாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்த விவகாரம் இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனை என்பதால், மாநில முதலமைச்சரான மமதா ஒப்பந்தங்கள் எதிலும் கையெழுத்திட முடியாது. ஆனால், ஏதாவது ஒரு மாநிலத்திற்கு அண்டை நாடு தொடர்பாக பிரச்சனை இருக்கும்போது பயணம் மேற்கொண்டால், அந்தப் பணயம் பிரச்சனையை தெளிவாகப் புரிந்த…
-
- 4 replies
- 584 views
-
-
ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வர வேண்டி கராத்தே வீரர் ஹூசைனி, தன்னைத்தானே சிலுவையில் அறைந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வர வேண்டி அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பால்குடம் எடுத்தல், மண் சோறு சாப்பிடுதல், அலகு குத்தி தேர் இழுத்தல், அக்னி சட்டி ஏந்துதல் என பலவிதமான வேண்டுதல்களை அரங்கேற்றி வருகின்றனர். அந்த வகையில் தனக்குத்தானே சிலுவையில் அறைந்து கொண்டு வேண்டுதலில் ஈடுபடப்போவதாக பிரபல கராத்தே வீரர் ஹூசைனி அறிவித்திருந்தார். அதன்படி சென்னை பெசன்ட்நகரில் உள்ள தனது இல்லத்தில் வேன்டுதலை தொடங்கினார். இதற்காக எட்டு அடி உயரம், ஆறு…
-
- 2 replies
- 1.6k views
-
-
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய படை - மத்திய அரசு பரிசீலிக்க உத்தரவு! கேரளா மனு தள்ளுபடி! டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய படையை நிறுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அணையில் 142 அடியாக உயர்த்தும் தீர்ப்புக்கு விளக்கம் கோரிய கேரளாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று முல்லை பெரியார் அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டது. ஆனால் அப்படி உயர்த்த முடியாது என கேரளா அவசர சட்டம் நிறைவேற்றியது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ள தமி…
-
- 0 replies
- 268 views
-
-
திருப்பதி: இலங்கை அதிபர் பாலசிறிசேன வருகையின்போது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்க கதவின் பூட்டை திறக்க முடியாமல்போனதால் உடைக்கப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூலவர் அறையின் கதவு தங்கத்தால் செய்யப்பட்டவை. இந்த கதவு தினமும் அதிகாலை திறக்கப்பட்டு சுப்ரபாத சேவை செய்யப்படும். இந்நிலையில் இலங்கை அதிபர் பாலசிறிசேன, அவரது குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள் என 42 பேருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இன்று அதிகாலை 2.30 மணிக்கு வந்தார். அப்போது, மூலவர் அறையின் தங்க கதவு பூட்டை திறக்க முயன்றனர். ஆனால், அந்த பூட்டை திறக்க முடியவில்லை. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வெல்டிங் செய்து பூட்டு அகற்றப்பட்டு சுப்ரபாத சேவை செய்யப்பட்டது.…
-
- 2 replies
- 475 views
-
-
ஸ்ரீரங்கம்: ஜெயலலிதாவை பின்னுக்கு தள்ளி வளர்மதி சாதனை! திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் வளர்மதி சுமார் 96,516 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான ஜெயலலிதாவை விட அதிக வாக்குகள் வாங்கி வளர்மதி சாதனை படைத்துள்ளார். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் இளைஞணி அமைப்பாளர் ஆனந்த், அ.தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் வளர்மதி, பா.ஜ.க சார்பில் இன்ஜினீயர் சுப்பிரமணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் அண்ணாதுரை மற்றும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்ளிட்ட 25 சுயேச்சைகளுடன், களத்தில் மொத்தம் 29 பேர் போட்டியிட்டனர். இந்த தொகுதிக்கு கடந்த 13ஆம் தேதி…
-
- 0 replies
- 536 views
-
-
ராமநாதபுரம்: நாம் தமிழர் கட்சி இப்போதும் தனது தலைமையில்தான் செயல்பட்டு வருவதாக அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியில் சமீபத்தில் பிளவு ஏற்பட்டது. அந்த அமைப்பின் முன்னணி தலைவர்கள் சிலர், சீமானை நாம் தமிழர் கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்தனர். இந்நிலையில், கடந்த 2008ம் ஆண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடரப்பட்ட வழக்கு ராமநாதபுர்ம மாவட்டம் முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக சீமான் இன்று ராமநாதபுரம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'நாம் தமிழர் கட்சி இப்போதும் என் தலைமையில் தான் செயல்பட்டு வருகிறது கட…
-
- 0 replies
- 329 views
-
-
மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ, இன்று மாலை 4.45 மணிக்கு, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் அவர்களுடன் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ‘டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் அளித்துள்ள தீர்ப்பு, இந்திய ஜனநாயகத்தின் மதிப்பை உலக அளவில் உயர்த்தி இருக்கின்றது. சாதாரண மனிதனும் அதிகார லகான்களைக் கையில் ஏந்த முடியும் என்பது நிரூபணம் ஆகி இருக்கின்றது. உங்கள் கட்சியின் சின்னமான துடைப்பம் பாரதிய ஜனதா கட்சியை அதிகாரத் தாழ்வாரத்தில் நடமாட விடாமல் ஒதுக்கி ஓரம் கட்டி விட்டது. இந்திய ஜனநாயகத்தின் மாண்பை உயர்த்துகின்ற விதத்தில், உங்கள் நடவடிக்கைகள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். உங்கள் வெற்றியை வரவேற்று ந…
-
- 1 reply
- 495 views
-
-
உலகின் தலைசிறந்த ஜனநாயக நாடு இந்தியா என்பது 1977 க்குப் பின்னர் மீண்டும் இப்போது டெல்லி மாநில வாக்காளர்களால் நிரூபிக்கப்பட்டுவிட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி இமாலய வெற்றி பெற்றுள்ளது. டெல்லி மாநில வாக்காளர்கள் பாசிச இந்துத்துவ வெறிபிடித்த நரேந்திர மோடி அரசுக்குப் பாடம் புகட்டுகின்ற வகையில், பாரதிய ஜனதா கட்சியை விளக்குமாற்றால் விரட்டி, படுதோல்வி எனும் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார்கள். உலக உத்தமர் காந்தியாரை பிரார்த்தனைக் கூட்டத்தில் சுட்டுக் கொன்ற கொலைகாரப் பாவி நாதுராம் விநாயக் கோட்சே எனும் நச்சுப்பாம்பைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடி, சிலையும் எழுப்ப முற்பட்ட இந்துத்துவ சக்திகளுக்கும், அதற்கு வெண்சாமரம் வீசிய நரேந்திர மோடி அரசுக்கும் வாக்காளர்கள் …
-
- 3 replies
- 505 views
-
-
வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன மனைவி: 591 நாட்கள் கழித்து கண்டுபிடித்து கண்ணீர் விட்ட கணவன்! உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன மனைவியை 591 நாட்கள் கழித்து கணவர் கண்டுபிடித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள பிகம்புரா கிராமத்தை சேர்ந்தவர் விஜேந்திர சிங். இவர் அங்குள்ள சுற்றுலா பேருந்து நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். அந்நிறுவனம் செய்த ஏற்பாட்டின் படி கடந்த யூன் 2013 ஆண்டு 30 சுற்றுலா பயணிகளையும், தனது மனைவி லீலாவையும் பேருந்தில் ஏற்றிக்கொண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத்துக்கு சுற்றுலா சென்றார். பத்ரிநாத்தில் உள்ள புகழ்பெற்ற ஆன்மீக தலமான சர் தாம் கோயிலுக்கு அவர்கள் சென்ற அவர்கள் அங்கு தங…
-
- 9 replies
- 766 views
-
-
சென்னையில் உள்ள கல்லுாரிகளிலேயே, அதிகமான முனைவர்களை உருவாக்கும் பெருமை, சென்னை மாநில கல்லுாரிக்கு உண்டு. அதில், ஆண்டுக்கு சராசரி 30 முனைவர்களை உருவாக்கும், இயற்பியல் துறைக்கு சென்றோம். ஆய்வு மாணவர்கள் சிலரைசந்தித்தோம். அவர்களின் சிறுசிறு ஆய்வு முடிவுகள் சில, அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பாக இருக்க, தாவரங்கள் வேண்டும் என, சூழலியல் ஆய்வாளர்கள் கூவிக்கொண்டிருக்கும் வேளையில், சில தாவரங்களை அழித்தே ஆக வேண்டும் என, பேசி வரும், பேராசிரியர், ஆர்.சாமுவேல் செல்வராஜிடமும் பேசினோம். அவர் கூறியதாவது:இப்போது, உலகம் முழுவதும், வெப்பமயமாதலை பற்றி பேசி கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில், காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சும் தாவரங்களை பற்றி பேச வேண்டியது, அவசியம்…
-
- 0 replies
- 346 views
-
-
உலகளவில் அழிந்துவரும் அரிய உயிரினங்களைப் பாதுகாக்கும் பொருட்டு சுவிட்சர்லாந்தில் 1948-ம் ஆண்டு பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (IUCN) என்ற அமைப்பு நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தில் 140 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர் களும் உறுப்பினர்களாகப் பணி புரிகின்றனர். சிவப்புப் பட்டியலில் 15 உயிரினங்கள் ஆண்டுதோறும் அழிந்துவரும் மற்றும் ஆபத்தில் உள்ள உயிரினங்களை சிவப்புப் பட்டியல் (Red List) என்ற பெயரில் ஐ.யு.சி.என். வெளியிட்டு வருகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த வரையாடு, சிங்கவால் குரங்கு, புனுகுப் பூனை, பிணந்தின்னிக் கழுகு, உள்ளான் பறவை, பாறை எலி, சிஸ்பாரா பல்லி, பாண்டிச்சேரி சுறா, அழுங்காமை, ஆனைமலை தவளை, தேரைத் தோல் தவளை, கிரெய்ட் ப…
-
- 0 replies
- 412 views
-
-
01167b2705ddca8c6cb7d929fe59bfb3
-
- 1 reply
- 801 views
-
-
கொழும்பு துறைமுக நகர திட்டத்தை செயல்படுத்த சீனாவுக்கு இலங்கை அனுமதி: இந்தியா கடும் அதிருப்தி கொழும்பு துறைமுக நகரத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதி. (கோப்புப் படம்) கொழும்பு துறைமுக நகர திட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ள சீனாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் இந்திய வட்டாரங்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் அதிபர் ராஜபக்ச ஆட்சியின்போது கொழும்பு துறைமுக நகர திட்டத்தை செயல் படுத்த இலங்கை, சீனா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. சீன அதிபர் ஜி ஜின்பிங் திட்டத்தை தொடங்கிவைத்தார். கடந்த ஜனவரியில் நடந்த அதிபர் தேர்தலின்போது எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட்ட மைத்ரிபால சிறிசேனா, அவர…
-
- 0 replies
- 337 views
-
-
கொழும்பு: ' சீனாவின் கூட்டுடன் துறைமுக நகர் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்வோம்' என, இலங்கை அதிபர் தேர்தலில் கூறிய எதிர்க்கட்சி ஆளுங்கட்சியான பிறகு அத்திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது. கொழும்பு துறைமுகம் அருகே 233 எக்டேர் பரப்பில், சீனாநிதியுதவியுடன் துறைமுக நகர் அமைய உள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான அனுமதியை பெறவில்லை என்று கூறி, ஆட்சிக்கு வந்தால், இத்திட்டத்தை ரத்து செய்வோம் என எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கே முழங்கினார். இந்நிலையில், எதிர்க்கட்சி பொது வேட்பாளரான மைத்ரிபாலா சிறிசேன, வெற்றி பெற்று, இலங்கை அதிபரான நிலையில், துறைமுக நகருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை உறுதி செய்த இலங்கை அமைச்சரவை செய்தி தொடர்பாளர் ரஜிதா சேனரத்ன, "இலங்கை அரசு அறி…
-
- 2 replies
- 454 views
-