Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கரூர் பேருந்து நிலையத்தில் ஜன. 27-ம் தேதி பள்ளிச்சீருடை அணிந்த நிலையில் போதையில் மயங்கிகிடந்த மாணவர் பள்ளியில் இருந்து நேற்று நீக்கப்பட்டார். கரூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படித்துவந்த வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த பிளஸ் ஒன் மாணவர் கடந்த ஜன.27-ம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். போதையில் நண்பர்களுடன் கரூர் பேருந்து நிலையத்துக்குள் செல்ல முயன்றார். நண்பர்கள் சாலையைக் கடந்து பேருந்து நிலையத்துக்குள் சென்றுவிட போதை உச்சத்தில் இருந்த மாணவர் பேருந்து நிலைய நுழைவாயில் பகுதியில் மயங்கி கீழே விழுந்துவிட்டார். பள்ளிச்சீருடை அணிந்த நிலையில் மாணவர் போதையில் மயங்கி விழுந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் மாணவர் மீது தண்ணீர் தெளித்து எழுப்பமுயன்றனர். ஆனால்…

  2. தஞ்சை: 'கார்த்தி சிதம்பரமே... கட்சியை விட்டு வெளியேறு!' என தஞ்சாவூரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தேர்தலின் தோல்விக்கு பிறகு கட்சியை பலப்படுத்தும் வேலையை தொடங்கியுள்ளது. கட்சி உறுப்பினர்கள் அடையாள அட்டையில் காமராஜர் படத்தையும், மூப்பனார் படத்தையும் நீக்க வேண்டும் என கட்சி தலைமை சொன்னதாக செய்தி வெளியானது. இதனால் கோபமடைந்த ஜி.கே.வாசன் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். இந்த சமயத்தில் "காமராஜரை தூக்கி ஓரமாக வையுங்கள், அவர் பெயரை சொல்லி கட்சியை இனிமேல் வளர்க்க முடியாது!" என கார்த்தி சிதம்பரம் கூறியதாக செய்திகள் வெளியானது. இதை அவர் மறுத்தாலும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியிலும் கடும் சலசலப்பை ஏற…

  3. பெரம்பலூர்: விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய எண்ணெய் லாரி டிரைவர், கிளீனரை காப்பாற்றாமல், லாரியில் இருந்து கொட்டிய எண்ணெய்யை பொதுமக்கள் பிடித்து சென்ற சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு சென்னையிலிருந்து தனியார் டேங்கர் லாரி ஒன்று பாமாயில் எண்ணெய்யை ஏற்றிக் கொண்டு, திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி பெரம்பலூர் மாவட்டம், துறைமங்களம் அருகே வந்துக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து. நெடுஞ்சாலைத்துறை டிவைடரில் ஏறி, தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், டிரைவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் கைகளிலும் காயம் ஏற்பட்டது. அதேபோல், கிளீனருக்கும் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. இருவரும் …

  4. கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் ஸ்ரீரங்கத்தில் இறக்கும் அதிமுக... அசந்து நிற்கும் திமுக! சென்னை: போடுங்கம்மா ஓட்டு... நம்ம சின்னத்தைப் பார்த்து... என்று கையில் பதாகை ஏந்தி வாக்கு கேட்டு போனால் ஒரு சுற்று சுற்றி முடித்த பின்னர் டீ கடையில் வடையும் டீயும் வாங்கித்தருவார்கள். வேட்பாளர் வசதியாக இருந்தால் டொரீனோ கலரோ, பவன்டோ கலரோ கிடைக்கும். அந்தக்காலமெல்லாம் மலையேறிப் போச்சு... தலைக்கு 300 ரூபா பிரியாணி பொட்டலம் கொடுத்தால் வர்றோம்... இல்லையா வேற ஆளைப் பார் என்கிற காலம் வந்துவிட்டது. ஆனாலும் அசராமல் ‘கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் பயன்படுத்தி' ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு ஆள் பிடித்து அசத்துகின்றனர் அதிமுகவினர். விட்டுருவோமா நாங்க பொதுத்தேர்தலுக்கே…

  5. தாளவாடி கர்நாடகாவுக்கே சொந்தம்” – புது பூதத்தைக் கிளப்பும் வாட்டாள் நாகராஜ் ஈரோடு மாவட்டம், தாளவாடியை கர்நாடகாவுடன் இணக்க வேண்டும் என்று தமிழக எல்லையில் கன்னட சலுவளிக் கட்சியின் மாநிலத் தலைவர் வாட்டாள் நாகராஜ் போராட்டம் நடத்தினார். அககட்சியின் மாநிலத் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் 300 க்கும் மேற்பட்ட அக்கட்சியின் தொண்டர்கள் கர்நாடக - தமிழக எல்லையான புளிஞ்சூர் சோதனைச் சாவடிக்கு புதன்கிழமை வந்தனர். அவர்கள் சத்தி - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அக்கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் செய்தியாளர்களிடம் பேசும்போது, " தமிழகத்தில் கன்னட மொழி பேசுவோர் 15 லட்சம் பேர் உள்ளனர். கர்நாட…

  6. திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்காக அதிமுக சார்பில் நடத்தப்படும் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும், வாக்குசேகரிப்பிலும் பங்கேற்கும் நபர்களுக்கு பிரியாணி மற்றும் தலா 300 ரூபாய் பணமும் வழங்கப் படுவதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. அதிமுக சார்பில் இடைத் தேர்தல் பணிக்குழுவில் உள்ள 30 அமைச்சர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட 50 பேரும் திருச்சியில் முகாமிட்டுள்ளனர். திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 6 வார்டுகளைக் கவனிக்கும் அமைச்சர்கள் மட்டும் ஹோட்டல்களில் தங்கியபடியும் , மற்றவர்கள் அனைவரும் அந்தந்த பகுதியிலேயே தங்கியும் தேர்தல் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள முக்கிய பகுதிகள் அல்லது அருகில் உள்ள பகுதிகளில் காலியாக உள்ள வீடுகள் அமை…

  7. கிரானைட் கொள்ளையர்களுக்கு எதிரான போரில் சகாயம் செல்ல வேண்டிய திசை எது? மலையை அப்புறப்படுத்த முயன்ற முட்டாள் கிழவனின் கதையை சீனத் தலைவர் மா சே துங் சொல்லி, அந்தக் கதை சீனப் பள்ளிகளில் பாடமாகக்கூட வைக்கப்பட்டுள்ளது. தன்னுடைய சொந்த ஊரிலிருந்து அடுத்த ஊருக்கு மலையைச் சுற்றிக்கொண்டு வெகுதூரம் செல்ல நேர்ந்ததால், ஒரு கிழவன் தினசரி அந்த மலையைத் தன்னுடைய சிறிய உளியைக் கொண்டு வெட்ட முயன்றான். அதைப் பார்த்தவர்களெல்லாம் அவனைக் கேலி செய்தார்கள். ஆனாலும், அவனது விடாமுயற்சியைப் பார்த்த கடவுள் ஒரு நாள் அந்த மலையை அங்கிருந்து அகற்றிவிட்டதாகச் சொல்லப்பட்ட பழைய சீனக் கதையைச் சிறிது மாற்றி, மா சே துங் அங்கே கடவுளுக்குப் பதிலாக மக்கள் சக்தியால் வென்றதாகப் புதிய கதையை எழுதியிருந்தார். …

  8. காங்கிரஸ் மேலிடம் மீது கடும் அதிருப்தியில் இருக்கும், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், த.மா.கா., தலைவர் வாசனை ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல் பரவி உள்ளது. அதனால், த.மா.கா.,வில் அவர் சேரலாம் என்றும் வதந்திகள் உலாவரத் துவங்கி உள்ளன. கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்த பின், கட்சியில் பெரும் மாற்றம் ஏற்படும் என, சிதம்பரம் எதிர்பார்த்தார். அத்துடன், கட்சியின் தேசிய ஊடக பிரிவு தலைவர் அல்லது பொருளாளர் பதவி, தனக்கு கிடைக்கும் என நம்பினார். ஆனால், காங்., தலைவர் சோனியாவும், துணைத் தலைவர் ராகுலும், சிதம்பரத்திற்கும் பதவி கொடுக்க விரும்பவில்லை. இதனால், அதிருப்தியில் இருந்த சிதம்பரம், தன் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கும், தமிழக காங்கிரசில் முக்க…

  9. பெங்களூரு: எம்.ஜி.ஆருக்கு தொண்டர்கள் பரிசு பொருட்கள் வழங்கியது போல் ஜெயலலிதாவுக்கு தொண்டர்கள் பரிசு பொருட்கள் வழங்கவில்லையா? என கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடந்து வருகிறது. 11வது நாளாக இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, எம்.ஜி.ஆருக்கு தொண்டர்கள் பரிசு பொருட்கள் வழங்கியது போல் ஜெயலலிதாவுக்கு தொண்டர்கள் பரிசு பொருட்கள் வழங்கவில்லையா ? என்றும், எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின் அவரது செல்வாக்கு ஜெயலலிதாவுக்கு கிடைத்ததா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ஜெயலலித…

  10. தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் மலைப்பாதையில் இருந்து பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. தர்மபுரி மாவட்டம், பொம்மிடியிலிருந்து ஒகேனக்கல் வழியாக 65க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அஞ்செட்டிக்கு மலைப்பாதை வழியாக இன்று அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து மதியம் 1 மணியளவில் ஒகேனக்கல் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு அடுத்து உள்ள கொண்டை ஊசி திருப்பத்தில் திரும்பும்போது சுமார் 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 ஆண்கள், 2 பெண்கள், இரண்டு குழந்தைகள் என மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பேருந்து ஓட்டுனர் உள்பட மற்ற அனைத்து பயணிகளும் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத…

  11. மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி அப்பல்லோவில் அனுமதி. நன்றி தற்ஸ் தமிழ். ***

  12. ஜெயிட்லி -ஜெயலலிதா சந்திப்பு குறித்து அரசியல் சர்ச்சை சர்ச்சையில் சிக்கிய ஜெயிட்லி ஜெயா சந்திப்பு ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு, தனது பதவியை இழந்த முதல் முதல்வரான ஜெயலலிதாவை, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சந்தித்தது பற்றி தமிழ்நாட்டில் அரசியல் வட்டாரங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தேவை ஏன் ஏற்பட்டது என்று தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். ஜெயலலிதா மற்றும் அருண் ஜெட்லி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற இந்த சந்திப்பு குறித்து திமுக தலைவர் கருணாநிதி கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார். அவரது அதிகாரப்பூர்வ சமுக வலைதளங்களிலும் வெளியாகியுள்ள இந்த விமர்சனத்தில், "மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம்; கங்கையே சூதகமானால், எங்கே போவது?" என்கிற வா…

  13. சென்னை: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணுக்குப் பிறந்த 3வது குழந்தையின் உடலிலும் அவ்வப்போது தீப்பிடித்து வரும் மர்மத்தால் டாக்டர்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். தற்போது அந்த பச்சிளம் குழந்தை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளது. குழந்தையை டாக்டர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள நெடிமோழியனூர் கிராமத்தை சேர்ந்தவர் கருணா. கூலித்தொழிலாளியான இவரது மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதியருக்கு நர்மதா (3), ராகுல் (2) என இரு குழந்தைகள் உள்ளனர். முதல் தீக்குழந்தை ராகுல் இதில், ராகுல் பிறந்த சில தினங்களில் அவ…

  14. தமிழும் இந்தியும் இந்தி உட்பட மற்ற இந்திய மொழிகளை வெறுப்பவர்கள் அல்லது காழ்ப்புணர்வோடு பேசுபவர்கள் பொதுவாக‌ தமிழகத்தை விட்டு வெளியே சென்றவர்கள் இல்லை என்பதை கவனிக்கலாம். வேலைக்காகவோ அல்லது சுற்றுல்லாவிற்காக‌வோகூட‌ இந்தியாவின் பிற பாகங்களுக்கு செல்லாதவர்கள்தான் இந்த நிலைப்பாட்டை உடையவராக இருப்பார்கள். வேறு சிலர் அரசியல் மேடைப் பேச்சிலிருந்து இக்கருத்தை பெற்றிருப்பார்கள். சில காரணங்களுக்காக வெளியே சென்றவர்கள இந்திய மொழிகளை குறிப்பாக இந்தியை வெறுப்பதில்லை. இந்தி எதிர்ப்பு நிலையை கொண்டவர்கள் கூட‌ அப்படி தமிழகத்தை விட்டு வெளியே வந்ததும் அந்த நிலை மாறுவதையும் கவனிக்க முடியும். நானும் அப்படி மாறியவனே. ஏன் இந்திமொழியை வெறுக்க வேண்டும்? அது திணிக்கப்படுகிறது அல்லது தம…

  15. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பதவி வகித்து வந்த ஸ்ரீரங்கம் தொகுதிக்கான இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளராக பெண் ஒருவரை நிறுத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி, சிறை தண்டனை பெற்றதை அடுத்து, தன் முதல்வர் பதவியையும், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ பதவியையும் இழந்தார். இதனால் காலியாக இருக்கும் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ., பகுதிக்கும் வரும் பிப்ரவரி 13ம் தேதி வாக்குப் பதிவு நடத்தப்படும் என்றும், வக்கு எண்ணிக்கை 16ம் தேதி நடைபெறும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையாளர் வி.எஸ் சம்பத் இரு தினங்களுக்கு முன் அறிவித்தார். இதனை அடுத்து மறுநாளே, இந்த தேர்தலில், தி.மு.க., …

  16. சென்னை, நடிகை குஷ்பு உத்திராட்ச மாலையில் தாலி அணிந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். திருமணத்துக்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்ற கருத்தை வெளியிட்டு குஷ்பு முதன் முதலாக சர்ச்சையில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். தமிழ் அமைப்புகள் மற்றும் மகளிர் அமைப்புகள் நாடு முழுவதும் குஷ்புவை கண்டித்து போராட்டங்கள் நடத்தின. அவர் மீது அழுகிய முட்டை, தக்காளிப் பழங்கள் வீசப்பட்டன. கோர்ட்டுகளிலும் பல வழக்குகள் தொடரப்பட்டன. அதைத் தொடர்ந்து ஒரு சினிமா படவிழாவில் அவர் பங்கேற்றபோது மேடையில் வைத்திருந்த அம்மன் சிலை முன்பு செருப்பு அணிந்தபடி கால்மீது கால்போட்டு அமர்ந்திருந்தார். இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. குஷ்புவுக்கு எதிராக கண்டன ஆர்ப்ப…

  17. முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா மரணத்தின் பின்னணியில் ஐ.பி.எல். முறைகேடுகள் காரணமாக இருக்கலாம் என்று திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது டெல்லி பொலிசார் சுனந்தா கொலை செய்யப்பட்டார் என்று அறிவித்த நிலையில், ஐ.பி.எல். முறைகேடுகளை பத்திரிகையாளர்களிட அம்பலப்படுத்த இருந்ததால் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு ஜனவரி 14-ந் திகதியன்று சுனந்தாவும் சசி தரூரும் கேரளாவில் இருந்து டெல்லி திரும்பியுள்ளனர். டெல்லி விமான நிலையத்தில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சுனந்தாவை இழுத்து காரில் தள்ள சசி தரூர் முயற்சிக்க அப்போது சுனந்தா அறைந்ததை பலர் பார்த்துள்ளனர். பின்னர் சசி தரூர் மட்டு…

  18. 'ராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை!' பகீர் கிளப்பும் டெல்லி பத்திரிகையாளர் 24ஆண்டுகளான பிறகும் இன்னும் விலகாத மர்மக் கதையாகத் தொடர்கிறது ராஜீவ் காந்தியின் கொலைச் சம்பவம்! குற்றம்சாட்டப்பட்டு தண்டனை பெற்றவர்களும் இந்தக் குற்றத்தை விசாரித்தவர்களும் இப்போது அளித்துவரும் வாக்குமூலங்கள் மூல வழக்கையே மொத்தமாக மாற்றிவிடக் கூடியவை. ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வழங்கிய மரண தண்டனை தீர்ப்பு, இப்போது உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக இருக்கிறது. கொலைச் சதி சம்பந்தமாக விசாரிக்க அமைக்கப்பட்ட பல்நோக்கு ஆணையம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தன்னுடைய விசாரணை காலக்கட்டத்தை நீட்டித்துக்கொண்டே போகிறது. ஜெயின் கமிஷன் குற்றம்சாட்டிய நபர்கள் இன்னம…

    • 18 replies
    • 11.7k views
  19. மேலூர்:மதுரை மாவட்டம் மேலூரில் 48 கி.மீ., நீளத்தில் கிரானைட் கற்களை அடுக்கி 'கிரானைட் கோட்டை' அமைத்தது ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் விசாரணையில் நேற்று அம்பலமானது. கிரானைட் முறைகேடு குறித்து ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் நேற்று மதுரை மாவட்டம் இடையபட்டியில் விசாரணை நடத்தினார். 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியசூரியனேந்தல் கண்மாயில் 2009 முதல் 2011 வரை மீன் பிடிக்க பி.கே.மூர்த்தி என்பவர் ரூ.30 ஆயிரத்துக்கு டெண்டர் எடுத்தார். மீன் குஞ்சுகள் விடப்பட்ட நிலையில், கண்மாயையொட்டி கிரானைட் குவாரி தனியாரால் துவக்கப்பட்டது. கண்மாயில் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்து கண்மாயை மூடிவிட்டனர். இடையபட்டி கல்லாங்குத்து கண்மாய் அருகே ஒருவர் இரண்டு ஏக்கர் பட்டா நிலத்தில் கிரானைட் கற்கள் அறுக்க 1995ல் அனுமத…

  20. இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வியுற்றது குறித்து திமுக தலைவர் கலைஞர் அறிக்கை: ’’இன்னொரு நாட்டில் நடைபெற்ற தேர்தலில் ஒருவர் தோல்வியடைவது கண்டு, மகிழ்ச்சி கொள்வது நாம் பின்பற்றி வரும் நாகரிகத்திற்கு ஏற்புடையதல்ல எனினும், நமது தொப்புள் கொடி உறவுகளாம் ஈழத் தமிழர்களை மிருகத்தனமாக வேட்டையாடிய ராஜபக்ஷேயின் தோல்வி நமக்கு ஒருவகை நிறைவையே தரு கிறது என்பதால் வரவேற்கலாம். இந்தத் தோல்வியின் மூலம் இயற்கை நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது. இனப் படுகொலைக்கும், மனித உரிமை மீறல் களுக்கும், போர்க் குற்றங்களுக்கும் தக்க தண்டனை தரப்படும்போது தான் இயற்கை நீதி முழுமை பெறும். கடந்த காலங்களில் எல்லா சர்வாதிகாரிகளுக்கும் நேர்ந்த தவிர்த்திட இயலாத முடிவு சரித்திரத்தின் சாகாத படிப்பினையா…

  21. ஜெயலலிதா, சசிகலா மீதான வழக்கு வாபஸ்! ஜெயலலிதா மீதான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதது குறித்த வழக்கை திரும்பப் பெறுவதாக எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 2 ஆண்டுகள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதது குறித்து ஜெயலலிதா மற்றும் சசிகலா மீது வருமான வரித்துறையினர் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில், சுமார் 18 ஆண்டுகள் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில், ஜெயலலிதாவும், சசிகலாவும் அபராதம் செலுத்த தயார் என்று கூறி அபராதத் தொகையை வருமான வரித்துறைக்கு அனுப்பியிருந்தனர். இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் அபராதம் செலுத்திவிட்டதால், சமரசம் ஏற்பட்டதை அடுத்து வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்வதாக வருமான வரித்துறை இன்று நீதிமன்றத…

  22. ராஜபக்சேவுக்கு தண்டனை பெற்றுத் தரும் வரை போராடுவோம்! தமிழர் வாக்குகளால் வென்ற மைத்ரிபால சிறிசேனா பொதுவாக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும்! இலங்கையின் அரச தலைவர் தேர்தலில் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழ் சொந்தங்களைப் படுகொலை செய்த 21-ம் நூற்றாண்டின் மிகப் பயங்கர கொடுங்கோலன் இனப்படுகொலையாளன் ராஜபக்சே வீழ்த்தப்பட்டுவிட்டான். ராஜபக்சேவின் இன ஒடுக்குமுறைக்கு எதிராக அமைதி வழியில் தமிழர் தாயகப் பிரதேசத்தில் தங்களது வாக்குகளை செலுத்தி சர்வதேச சமூகத்துக்கு தமிழர் தரப்பின் நிலைப்பாடு இதுவே என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் புதிய அரச தலைவராக மைத்ரிபால சிறிசேன பொறுப்பேற்க இருக்கிறார். அரச தலைவர் தேர்தலில் வென்றுவிட்டாலும் ராஜபக்சேவுக்கும் மைத்ரிபாலவுக்கும் பெரிய வேறுபாடு எதுவு…

    • 0 replies
    • 1.1k views
  23. என்றாவது ஒருநாள் அறம் வெல்லும்; அநீதி அழியும்’ என்பதே, தொன்றுதொட்டு வரும் தமிழர்களின் நம்பிக்கை. அக்கூற்றினை மெய்ப்பிக்கின்ற வகையில், தமிழ் இனக் கொலைகாரன்-சிங்கள இனவாத ராஜபக்சே தோற்கடிக்கப்பட்டு இருக்கின்றான். ஜெனீவா நெறிகளைக் குழிதோண்டிப் புதைத்து, உலகம் தடை செய்த குண்டுகளை வீசி, பச்சிளம் குழந்தைகள்,பாலகர்கள், தாய்மார்கள், வயது முதிர்ந்தோர், ஆயுதம் ஏந்தாதோர் என இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை, ஈவு இரக்கம் இன்றிக் கொன்று குவித்த குற்றவாளி ராஜபக்சே. ‘இலங்கைத் தீவில் தமிழர் என்ற இனம்’ என்பதே கிடையாது என்று கூறி, தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களை அதிகரித்து, சிங்கள இராணுவத்தையும், காவல்துறையையும் அங்கு நிறுத்தி, தமிழர் தாயகத்தை இட்லரின் வதை முகாமைப் போல ஆக்கினா…

    • 0 replies
    • 590 views
  24. Out of media player. Press enter to return or tab to continue. கருத்துச் சுதந்திரத்திற்கு வரையரை வேண்டும் – மனுஷ்யபுத்திரன் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பாரிஸ் நகரில் நையாண்டி இதழான, " ஷார்லி எப்தோ" அலுவலகத்தில் இருந்தோர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தாம் கண்டிப்பதாகத் தெரிவித்த எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், அதே நேரம் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மக்களின் நுண்ணுணர்வுகளை புண்படுத்துவதும் தவறு என்றார். இஸ்லாமிய நம்பிக்கைகள் குறித்து இஸ்லாத்துக்குள்ளும், வெளியிலிருந்தும் பல விமர்சனங்கள் வருகிறது என்று கூறும் மனுஷ்யபுத்திரன், ஆனால் முகமது நபியை உருவகப்படுத்துவது மிகவும் உணர்வுப்பூர்வமான விடயம் என்கிறார். முகமது நபியை மிகப் புனிதமாக முஸ்லீம்கள் கருதுவதால் அது குறித்து …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.