தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10255 topics in this forum
-
ராமேஸ்வரம்: மீன் இனப்பெருக்கத்திற்காக 45 நாள் மீன்பிடிப்பதற்கான தடைகாலம் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியது. இதனால் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சகணக்கான மீனவர்கள் வேலையிழந்துள்ளனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் உருவாகும் கடல்பகுதி வங்காள விரிகுடாவின் மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரினை பகுதிகளாகும். திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதி தொடங்கி கன்னியாகுமரியின், நீரோடி கிராமம் வரை உள்ள இந்த கடல்பகுதியில் ஆண்டுதோறும் இடைவிடாது மீன்பிடி தொழில் நடக்கும். இதனால் கடந்த பல வருடங்களாக இப்பகுதியில் உள்ள கடல்வளம் குறைய தொடங்கியது. இதன் விளைவாக கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கம் குறைந்து போனது. ‘இதேநிலை நீடித்தால் ஒரு கட்டத்தில் மன்னார் வளைகுடா…
-
- 0 replies
- 520 views
-
-
எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில் முடிவு * தீபா அறிவிப்பு ''எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில், என் முடிவை அறிவிப்பேன்,'' என, ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தெரிவித்தார். அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நியமிக் கப்பட்டதற்கு, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் எல்லாம், 'கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும்' என, ஜெ., அண்ணன் மகள் தீபாவை வலியுறுத்தி வருகின்றனர். தி.நகரில் உள்ள அவரது வீட்டின் முன், தினமும் ஏராளமான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். நேற்று மாலை, தொண்டர்களிடம் தீபா பேசுகை யில், ''வரும், 17ல், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவை, அனைவரும் கொண்டாட வேண்ட…
-
- 0 replies
- 529 views
-
-
சென்னை: விருதுநகர் சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. மா.ஃபா.பாண்டியராஜன் இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியது அக்கட்சியினர் இடையே பெரும் அதி்ர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவை ஏற்கனவே தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் அருண் பாண்டியன் (பேராவூரணி), மிக்கேல் ராயப்பன் (ராதாபுரம்), சுந்தர்ராஜன் (மத்திய மதுரை), தமிழ் அழகன் (திட்டக்குடி), சுரேஷ்குமார் (செங்கம்), சாந்தி ராஜமாணிக்கம் (சேந்தமங்கலம்) ஆகியோர் சந்தித்து தங்களின் தொகுதி பிரச்னை குறித்து மனு கொடுத்தனர். இதனிடையே, தே.மு.தி.க. தலைமை மீது அதிருப்தியில் இருந்த பாண்டியராஜன், கட்சி நிகழ்ச்சிகளையும் புறக்கணித்து வந்தார். இந்த நிலையில், இன்று விருதுநகர் சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. எம்.…
-
- 0 replies
- 801 views
-
-
ஓரளவுக்குதான் பொறுமை; செய்ய வேண்டியதை செய்வோம்! கார்டனில் சசிகலா ஆவேசம் ஓரளவுக்கு மேல்தான் நாம் பொறுமையை கையாள முடியும். அதற்கு மேல் நாம் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டியதை செய்வோம் என்று போயஸ் கார்டனில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஆவேசமாக பேசினார். முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா இன்று போயஸ் கார்டனில் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது, அவர் கூறுகையில், "ஒன்றரைக்கோடி தொண்டர்களை ஜெயலலிதா என்னிடம் விட்டுச் சென்றிருக்கிறார். இந்த கட்சியையும், இந்த ஆட்சியையும் வழி நடத்த வேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது. தொண்டர்களின் துணை எனக்கு இருக்கும்போது ஒருசிலரின் ஆட்டங்கள் இங்கே ஒன…
-
- 11 replies
- 1.6k views
-
-
சீமானும் கொஞ்சம் சொத்து வைத்திருக்கிறார்.
-
- 11 replies
- 1.2k views
- 1 follower
-
-
சிறையில் உள்ள சசிகலாவுடன், டி.டி.வி.தினகரன் சந்திப்பு சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த நான்கு ஆண்டு சிறைத்தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து சசிகலா உள்பட மூன்று பேரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். முதல்வராக பதவியேற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அறையில் பணியைத் தொடங்கினார். இதனிடையே, அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று பெங்களூரு சென்றார். சிறையில் உள்ள சசிகலாவை அவர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, கட்சியின் செயல்பாடு குறித்து பேசியத…
-
- 0 replies
- 387 views
-
-
எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் தலைமையிலான கூட்டணிக்கு வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக் கொண்டார். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள தனியார் கல்லூரியில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பரப்புரை கூட்டத்தில், இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். திருக்கோவிலூர் விஷ்ணுவும் சிவனும் அமைந்த சிறப்பான இடம் என்று குறிப்பிட்டு தனது உரையை தொடங்கினார் அவர். "இந்த தேர்தலை பாரதிய ஜனதா கட்சி நடத்தவில்லை, தேர்தல் ஆணையம் நடத்துகிறது. ஏப்ரல் 6 என்பது பாஜக நிறுவப்பட்ட நாள், அந்நாளில் தேசிய ஜனநாயக கூட்டணியானது இந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெறும். …
-
- 3 replies
- 620 views
-
-
மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனால் தனது நாக்கை அறுத்து உண்டியலில் போட்டுக் கொள்வதாக பெண் ஒருவர் வேண்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை விட கூடுதல் இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றிருப்பதால் தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் ஸ்டாலின் வெற்றி பெற்று வரும் 7ம் தேதி முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பொதுவகுடியைச் சேர்ந்த கார்த்திக் மனைவி வனிதா (32) இவர் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனால் தனது நாக்கை அறுத்து உண்டியலில் போட்டுக் கொள்வதாக வேண்டியுள்ளார். அதன்படி இன்று காலை பரமக்குடி முத்தாலம்மன் கோவில் வாசலில் முன்பு தனது நா…
-
- 6 replies
- 898 views
-
-
‘‘அக்காவுக்கு துரோகம் செய்தவர்களை.....?!" சசிகலா மன்னிப்பு கேட்ட நாள் இன்று ஜெயலலிதாவின் ஆட்சியை சசிகலா குடும்பம் இப்போது பங்கு போட்டுக்கொண்டிருக்கிறது. 2011-ம் ஆண்டிலும் இதேபோல சதித் திட்டம் தீட்டப்பட்டதால் சசிகலா உள்பட அவரது குடும்பத்தினரைக் கட்சியில் இருந்து ஜெயலலிதா கட்டம் கட்டினார். 2011 டிசம்பர் 19-ம் தேதி இது அரங்கேறியது. மூன்று மாதங்களில் சசிகலாவை மட்டும் ஜெயலலிதா சேர்த்துக்கொண்டார். அந்த நேரத்தில், அதாவது 2012 மார்ச் 28-ம் தேதி சசிகலா வெளியிட்ட அறிக்கை, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. ‘'அரசியல் ஆசை இல்லை... கட்சிப் பதவிக்கு வர விரும்பவில்லை... எம்.பி. எம்.எல்.ஏ-வாக வேண்டும் என்ற எண்ணம் இல்லை... அமைச்சர் பதவி வேண்டாம்'' என்றெல்லாம் அந்த அறிக்க…
-
- 0 replies
- 402 views
-
-
பிணையில்... விடுதலையானார், பேரறிவாளன்! முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் இன்று (வெள்ளிக்கிழமை) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சைகளுக்காக பிணைக்கோரி அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், குறித்த கோரிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியிருந்தார். இதற்கமைய இன்று அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதன்படி புழல் சிறையில் இருந்து வேலூர் மத்தியச் சிறைக்கு அழைத்து செல்லப்படும் பேரறிவாளன் அங்கிருந்து ஜோலார்போட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1218778
-
- 1 reply
- 655 views
-
-
எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழுமா? எம்எல்ஏ-க்களின் கூட்டல், கழித்தல் கணக்கு! அ.தி.மு.க. அம்மா அணியில் ஏற்பட்டுள்ள பிளவால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது, சசிகலா, டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க-விலிருந்து ஓரங்கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதால், அவர்களது விசுவாசிகளின் ஆதரவு எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்குக் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரண்டு துருவங்களாக இருந்து செயல்பட்டுவருகின்றனர். சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டு அணிகள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனைக்குப் பிறகு, ஓ…
-
- 0 replies
- 366 views
-
-
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் இந்த உலகமே அறிந்தது. அப்பாவி மக்களை மேலும் தம் சொந்த நாட்டு மக்களை போர் என்ற பெயரில் லட்சக்கணக்கில் கொன்று குவித்தது ராஜபக்சே அரசு. இதை உணர்ந்த அனைத்து நாடுகளும் இலங்கையைக் கண்டித்து வரும் நிலையில் இந்தியா மட்டும் உறவை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதாக கனடா நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் அறிவித்துள்ளார். தமிழர்கள் மீது அக்கறை கொண்டு இந்தியா காமன்வெல்த் மாநாட்டு புறக்கணிப்பு முடிவை எடுப்பது, அங்கே வாழும் தமிழர்கள் மீது மேலும் கவனத்தையும், பாதுகாப்பையும் அதிகரிக்கும் என்பது உறுதி. எனவ…
-
- 1 reply
- 458 views
-
-
கோயில்களில் மோதியின் நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்கு சீமான் கண்டனம் இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பிரதமர் மோதியின் நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். நவம்பர் ஐந்தாம் தேதியன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத்தில் ஆதிசங்கரர் சிலையைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சி தமிழ்நாட்டில் சில கோயில்களில் மின்னணு திரை மூலம் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டது. இதில் பா.ஜ.கவின்மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், இந்த நிகழ்வுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் …
-
- 0 replies
- 365 views
-
-
சென்னை: முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்க உத்தரவிட்டுள்ள ஜெயலலிதாவின் செயலுக்கு பாவ மன்னிப்பே கிடையாது. அவரைப் பார்த்து உலகத் தமிழர்கள் காரித் துப்புவார்கள். முள்ளிவாய்க்கால் முற்றம் என்ன அவரது போயஸ் தோட்ட வீடு என்று நினைத்துக் கொண்டாரா என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாகப் பேசியுள்ளார். இலங்கையில் நடந்த போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டப்பட்டது. உலக தமிழ் பேரமைப்பு சார்பில் கடந்த 8-ம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெற்ற விழா கடந்த 10-ம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று காலை 500க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன் நினைவு முற்றம் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது. இந்த முள்ளிவாய்க்கால் நினைவு…
-
- 1 reply
- 359 views
-
-
திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள அங்கீகாரமாக நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் உள்ளன என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான மாநகராட்சிகளிலும் பேரூராட்சிகள், நகராட்சிகளிலும் மாநிலத்தில் ஆளும் திமுக முன்னிலை பெற்றுள்ளது. இறுதி முடிவுகளை மாநிலம் தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், இதுவரை வந்த முடிவுகளின்படி ஆளும் திமுக கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் திமுகவின் வெற்றி உறுதியாகியிருக்கிறது. இந்த விலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், பெண்களுக்கு அதிக அதிகாரம் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த தேர்தலை திமுக எதிர்கொண்டது…
-
- 9 replies
- 706 views
- 1 follower
-
-
வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தனித்துப் போட்டியிட காங்கிரஸ் தயாராக இருப்பதாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார். கிராமம் தோறும் காங்கிரஸ், இல்லந்தோறும் கை சின்னம் என்ற முழக்கத்தோடு தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் அரும்பாக்கம், புரசைவாக்கம் ஆகிய பகுதிகளில் காங்கிரஸ் கொடியேற்றும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. எம்.எம்.டி.ஏ. காலனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் கொடியேற்றினார். மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ரங்கபாஷ்யம் உள்ளிóட்டோர் அதில் பங்கேற்றனர். அப்போது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியது: காங்கிரஸ் கட்சியை…
-
- 2 replies
- 363 views
-
-
விருதுநகர்: மதிமுக வேட்பாளர் வைகோ, அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர். அப்போது இரு கட்சியினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இரு கட்சியினரும் மாறி மாறி கண்டன கோஷங்கள் எழுப்பினர். விருதுநகரில் பா.ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுகிறார். அதுபோல் அதிமுக சார்பில் சிவகாசி முன்னாள் யூனியன் சேர்மன் ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இந்நிலையில் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை இருவரும் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி கோரியிருந்தனர். இதையடுத்து வைகோவுக்கு காலை11 மணிக்கும், அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு …
-
- 0 replies
- 610 views
-
-
மறைந்த கவிஞர் இன்குலாப்புக்கு சாகித்ய அகாடமி விருது; யூமா வாசுகிக்கு மொழிபெயர்ப்புக்கான விருது மறைந்த கவிஞர் இன்குலாப் எழுதிய 'காந்தள் நாட்கள்' கவிதைத் தொகுப்புக்காக 2017ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சாகித்ய அகாடெமி எனும் மத்திய அரசின் இலக்கிய அமைப்பு வருடந்தோறும் இலக்கியத்தில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. 2017ஆம் ஆண்டுக்கான தமிழ்ப் படைப்பாளிகளுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கவிஞர் இன்குலாப் மறைந்து ஓராண்டு ஆனநிலையில் 'காந்தள் நாட்கள்' கவிதை நூலுக்…
-
- 1 reply
- 652 views
-
-
'எஞ்சாய் எஞ்சாமி' பாடலுக்காக பல உறக்கமில்லாத இரவுகளை கடந்தேன்: தெருக்குரல் அறிவு 37 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,THERUKURAL/INSTAGRAM தான் எழுதி, உருவாக்கிய 'எஞ்சாய் எஞ்சாமி' பாடல் தொடர்பாக தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது தொடர்பாக 'தெருக்குரல்' அறிவு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான துவக்க விழா கடந்த ஜூலை 28ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. அப்போது பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில் தெருக்குரல் அறிவு எழுதி, உருவாக்கிய Enjoy Enjaami பாடல், பல்வேறு இசைக் கலைஞர்கள், நடனக் கலைஞர்களால் நிகழ்த்தப்பட்டது. விழாவில்…
-
- 38 replies
- 1.5k views
- 1 follower
-
-
கோவை வெள்ளலூர் பேருந்து நிலைய திட்டம் தொடருமா? மாநகராட்சியின் திடீர் நிலைப்பாடு 4 மணி நேரங்களுக்கு முன்னர் கோவை மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த வெள்ளலூர் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்வதாக தகவல் வெளிவந்த நிலையில், அந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறியிருக்கிறது மாநகராட்சி நிர்வாகம். என்ன நடக்கிறது இந்த விவகாரத்தில்? கோவை மாவட்ட ஆட்சியர் ஜீ.சமீரன் கோவை மாவட்டம் வெள்ளலூரில் கட்டப்பட்டு வந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ஏதுவான வேறு இடத்திற்கு மாற்றப்படும் என தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து வெள்ளலூர் பேருந்து நிலைய இடமாற்ற விவகாரம் பேசு பொருளானது. தமிழக எதிர்கட்சி தலைவர் எட…
-
- 0 replies
- 460 views
- 1 follower
-
-
"எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு!" நீதிபதியின் உறுதி ``18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், விரைவில் தீர்ப்பு வழங்கப்படும்'' என்று உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும், ``இந்த வழக்குத் தொடர்பாக ஏதாவது, தனி கோரிக்கை இருந்தால் அதை வழக்காகத் தாக்கல் செய்யுங்கள்'' என்று வக்கீல் குமாஸ்தா தேவராஜனுக்கு உத்தரவிட்டுள்ளார். சசிகலா குடும்பத்துக்கு எதிராகத் தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வமும் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அரசியல் செய்த எடப்பாடி பழனிசாமியும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி ஒன்றுசேர்ந்தனர். அன்று மாலையே வித்யாசாகர் ராவ் (அன்றைய தமிழகப் பொறுப்பு கவர்னர்) ம…
-
- 0 replies
- 543 views
-
-
பிரதமர் நரேந்திர மோதி குறிப்பிட்ட உத்திரமேரூர் கல்வெட்டின் முக்கியத்துவம் என்ன? கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 31 ஜனவரி 2023, 02:40 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாதிரி படம் "உலகையே வியப்பில் ஆழ்த்திய உத்திரமேரூர் கல்வெட்டு" என்று தனது 'மனதில் குரல்' நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி குறிப்பிட்டிருக்கிறார். உத்திரமேரூர் கல்வெட்டின் முக்கியத்துவம் என்ன? அந்தக் கல்வெட்டு சொல்லும் செய்தி என்ன? ஞாயிற்…
-
- 0 replies
- 885 views
- 1 follower
-
-
வைகோவுடன் திருமாவளவன் சந்திப்பு - இலங்கை தமிழர் தொடர்பான சர்ச்சை பேட்டி குறித்து நேரில் விளக்கம் Published By: RAJEEBAN 12 MAR, 2023 | 12:44 PM மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்துப் பேசினார். அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், தமிழகத்தில் உள்ள தலைவர்கள் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அரசியல் செய்தனர் என்று விமர்சித்து இருந்தார். இது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதுதொடர்பாக மதிமுக, விசிகவினரிடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டன. மேலும், திருமாவளவன் மீது வருத்தம் தெரிவித்து மதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நில…
-
- 2 replies
- 839 views
- 1 follower
-
-
சேலம்-சென்னை எழும்பூர் ரயிலின் மேற்கூரை துளையிடப்பட்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சொந்தமான பணம் கொள்ளையடிக்கப்பட்ட கொள்ளை வழக்கில் ஈடுபட்ட இரு குற்றவாளிகள் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையால் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 12) சென்னையில் கைது செய்யப்பட்டனர். இரண்டு வருடங்களுக்கு முன்பு இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆகஸ்டு மாதம் 8ஆம் தேதி இரவு சேலம்-சென்னை எழும்பூர் விரைவு ரயிலின் மூலம் ரூபாய் 342 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் சேலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலிருந்து சென்னை ரிசர்வ் வங்கி கிளைக்கு எடுத்து செல்லப்பட்டது. பணம் வைக்கப்பட்டிருந்த வி.பி.எச்-08831 பெட்டி இணைக்கப்பட்ட இரயிலானது 8ஆம் தேதி இரவு 11 மணியளவில் சேலம் சந்திப்பிலிருந்து புறப்பட்…
-
- 0 replies
- 459 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 15 டிசம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் ஐபிஎஸ் அதிகாரி ஜி. சம்பத் குமாருக்கு 15 நாள் சிறை தண்டனை விதித்துள்ளது. தோனி தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தையும் சென்னை உயர் நீதிமன்றத்தையும் இழிவுபடுத்தும் வகையில் சம்பத் குமார் கருத்துகளைத் தெரிவித்ததாகக் குற்றம் சாட்டியிருந்தார். நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த வழக்கில், …
-
- 0 replies
- 317 views
- 1 follower
-