Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம்| கோப்புப் படம். கிரானைட், மணல் குவாரிகள் தொடர்பாக ஆய்வு நடத்த அமைக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் தலைமையிலான குழுவுக்கு தடை கோரிய தமிழக அரசு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் செயல்படும் கிரானைட், மணல் குவாரிகள் உள்ளிட்ட கனிம குவாரிகள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 11-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 16-ம் தேதி) மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. தமிழக அரசின் மனுவில்: "தமிழ்நாட்டில் நடந்த கிரானைட், மணல் கொள்ளை தொடர்பாக தமிழக அரசு வழக்குகள் பதி…

  2. திருப்பூர் ஆயத்த ஆடை தொழிற்சாலை (ஆவணப்படம்) இந்தியாவில் பனியன் போன்ற உள்ளாடைகளைத் தயாரிப்பதில் முன்னணியில் இருக்கும் தமிழக மாவட்டமான திருப்பூரில், நைஜீரியாவைச் சேர்ந்தவர்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இவர்கள் அனைவருமே பனியன் ஏற்றுமதி தொழிலிலும், வர்த்தகத்திலும் ஈடுபட்டிருக்கின்றனர். ஆனால், சமீபகாலமாக திருப்பூரில் இருக்கும் வர்த்தக சங்கங்கள் இவர்களை திருப்பூரை விட்டு வெளியேற்ற வேண்டுமெனக் கோரிவருகின்றன. இந்த நிலையில் திருப்பூரில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் நைஜீரியர்களை வெளியேற்ற வேண்டுமெனக்கோரி திருப்பூர் காதர்பேட்டிலிருக்கும் திருப்பூர் இரண்டாம் தர பனியன் ஏற்றுமதி முதலாளிகள் சங்கம் போராட்டம் ஒன்றையும் செவ்வாய்க்கிழமையன்று நடத்தியது. இதுபோன்ற …

    • 5 replies
    • 1.1k views
  3. பிரச்சனை ஆரம்பித்த இடத்திலேயே தானே அந்தப் பிரச்சனைக்கும் தீர்வு இருக்கும். அப்படித்தான் தீர்வுக்காக லண்டனிலிருந்து மெனக்கிட்டு வந்திருந்தார் ‘கத்தி’ படத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அல்லிராஜா. பிரஸ்மீட் நடந்த ஹோட்டலுக்கு உள்ளேயும், வெளியேயும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. குறிப்பாக சுபாஸ்கரன் அல்லிராஜா உள்ளிட்ட லைகா தலைவர்களை பவுன்சர்கள் பாதுகாத்தனர். அவர் ஒரு ஈழத்தமிழர் என்பதையும் தாண்டி இலங்கை அதிபர் ராஜபக்‌ஷேவின் நெருங்கிய தொழில் கூட்டாளி என்பது தான் அவர்மீது தமிழ் ஆர்வலர்களால் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. அதற்கு பதிலளித்த அவர் “எங்களுக்கு எதிராக சில விஷமிகள் வேண்டுமென்றே ஆதாரமற்ற தகவல்களை பரப்பியதால், அதை தெளிவுபடுத்த வேண்டியது எங்கள் கடமை ஆகிறது. எனக்…

  4. சென்னை வந்துள்ள ஹொலிவூட் நடிகர் ஆனல்ட், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வரின் அலுவலகத்தில் இன்று பிற்பகல் 2.45 மணிக்கு இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், விக்ரம் - எமி ஜக்ஸன் நடித்துள்ள ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக வந்துள்ளார். ஆனல்ட் ஷ்வார்ஸ்நெகர் ஒரு நடிகர் மட்டுமல்ல. கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநராக இரு முறை (2003 - 2011) பதவி வகித்தவர். சர்வதேச அளவில் புகழ்பெற்ற பிரமுகர். அந்த வகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இன்று அவர் சந்தித்தார். பிற்பகல் 2.45 மணிக்கு இந்தச் சந்திப்பு நடந்தது. தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த…

  5. “எனக்கும், கருணாநிதிக்கும் மோதலா?” என்பதற்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பாக பதில் அளித்துள்ளார். தி.மு.க. முப்பெரும் விழாவில், அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தகராறா? பேரறிஞர் அண்ணாவுக்கு பிறகு, இந்த இயக்கத்தை அழிக்க பலர் சூழ்ச்சி வலை பின்னினார்கள். ஆனால், வலை பின்னியவர்கள்தான் அதில் சிக்கி அழிந்துபோனார்கள். அப்போது சிலர் சம்பத்தை பிரித்து தனி கூடாரம் அமைத்தார்கள். அதனால் தி.மு.க. அழிந்துபோய்விடவில்லை. அதன்பிறகு கலைஞரிடம் இருந்து நாவலரையும், எம்.ஜி.ஆரையும் பிரித்தார்கள். அப்போதும் தி.மு.க. அழிந்துவிடவில்லை. அதன்பிறகு வைகோவை பிரித்தார்கள். அப்போதும் அழிந்துபோய்விடவில்லை. என்றைக்கும் தி.மு.க. கம்பீரமாக நிற்பதற்கு தலைவர் கலைஞர்தான் காரணம். சில பத்திரிகைகள் தொட…

  6. மீனவர் பிரச்னையில் நிரந்தரத் தீர்வுக்காக பாஜக போராடி வருகிறது: தமிழிசை செளந்தரராஜன் தமிழக மீனவர் பிரச்னையில் நிரந்தரத் தீர்வு காண்பதற்காக பாஜக தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார். தூத்துக்குடியில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் ஆளுங்கட்சியினரால் மிரட்டப்பட்டு வருகின்றனர். மிரட்டலையும் மீறி 80-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் ஆணையம் நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும் எனத் தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். பல்வேறு அசாதாரணச் சூழல் உருவாகியுள்ளதால் உள்ளாட்சி இடைத்தேர்தலை ரத்து செய்து, …

  7. பெங்களூரு: விடுதலைப்புலிகள் மற்றும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான விவகாரத்தில் அச்சுறுத்தல் இருப்பதால், சொத்துக்குவிப்பு வழக்கு நீதிமன்றத்தை மாற்றக்கோரி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், விசாரணை முடிவடைந்த நிலையில் வரும் வரும் 20 ஆம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தீர்ப்பளிக்க உள்ளார். இந்த தீர்ப்பையொட்டி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா உள்பட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், விடுதலைப்புலிகள் மற்றும் முல்லைப் …

  8. திருச்சியில் பிறந்த அல்லது படித்த பிரபலங்கள் : சி.வி. ராமன், ஏபிஜே அப்துல் கலாம்,M R ராதா திருச்சியில் வசித்தார்கள் டி.ஏ. மதுரம் திருச்சியில் 1918ஆம் ஆண்டு ஒரு கலைக்குடும்பத்தில் பிறந்தவர்.டி.ஏ. மதுரம் (1918 -1974) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகையும் பாடகியும் ஆவார்.. வாலி- ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட வாலி பிறந்து, வளர்ந்தது திருவரங்கத்தில்(ஸ்ரீரங்கம்). தன் நண்பர்களின் துணையுடன் ‘நேதாஜி” என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார் சுஜாதா- ஸ்ரீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார்.அப்துல் கலாம், சுஜாதா இருவரும் ஒரே வகுப்பில் படித்தார்கள். கல்கி- அவர்க…

  9. இலங்கை அகதிகளின் 112 முகாம்களின் இணைப்பாளர்கள் ஒன்று கூட கியூ பிரிவு பொலிஸார் அனுமதி மறுப்பு:- 14 செப்டம்பர் 2014 தமிழகத்தில் 112 முகாம்களில் தங்கியுள்ள இலங்கை அகதிகளின் நலன் பேணும் இணைப்பாளர்கள்; ஓரிடத்தில் சந்திப்பதற்கு கியூ பிரிவு பொலிஸார் அனுமதி மறுத்துள்ளதாக அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில் சுமார் 1600 பேர், லெணாவிலக்கில் 1500 பேர் மற்றும் அழியா நிலையில் 800 பேர் என மொத்தம் 3900 பேர் உள்பட தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 112 முகாம்களில் 66491 பேர் வசித்து வருகின்றனர். தமிழத்தில் உள்ள முகாம் மக்களை ஒருங்கிணைத்து ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் இங்குள்ள முகாம் மற்றும் இலங்…

  10. நரேந்திர மோடி தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் அரசு அமைந்த பிறகு இந்தி மொழித் திணிப்பை தீவிரப்படுத்துவதுபோல, மத்திய அரசின் நடவடிக்கைகள் இருக்கின்றன. சமூக வலைதளங்களில் இந்தி மொழியில் பதிவுகள் இட வேண்டும் என்ற உத்தரவு, ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் என்று கொண்டாட வேண்டும் என்ற அறிவிப்பு, சமசுகிருத வாரம் கடைபிடிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் ஆகியவை மொழிப் பிரச்சினையில் மத்திய அரசின் அணுகுமுறை எப்படி இருக்கிறது என்பதை தெளிவாக உணர்த்தியது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ஆட்சிமொழி அலுவல் துறை எல்லா வகையிலும் இந்தி மொழியைத் திணிப்பதற்கு மூர்க்கத்தனமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களிலும், பட்டப் படிப்புகளில் ஆங்கிலத்துடன் இந்தி மொ…

  11. திருமணத்திற்கு முன் மணமக்களுக்கு மருத்துவ பரிசோதனை! - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு. [sunday 2014-09-14 09:00] திருமணத்திற்கு முன்பு மணமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்வது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை அளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விவகாரத்து வழக்குகள் அதிகரிப்பதால், திருமணத்துக்கு முன் ஆணுக்கும், பெண்ணுக்கும் மருத்துவ பரிசோதனையை கட்டாயமாக்குவது தொடர்பான வழக்கின் சிறப்பு விசாரணை விடுமுறை தினமான நேற்று ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதி கிருபாகரன் முன் நேற்று நடந்தது. அப்போது மூத்த வக்கீல்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர், பெற்றோர், பாதிக்கப்பட்டோர் என பல தரப்பினரும் ஆஜராகினர். அப்போது வக்கீல்கள், நீதிபதிகளிடம் கூறியதாவது: பிரான்ஸ், ஐக்கிய அரபு எமி…

  12. 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் தமிழர் பேரணி! நாள்: செப்டம்பர் 24, 2014 பேரணி தொடங்கும் இடம்: இராஜரத்தினம் விளையாட்டரங்கம் எதிரில், எழும்பூர், சென்னை நேரம்: மாலை சரியாக 3 மணி பேரணி நிறைவடையும் இடம்: மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் மாளிகை எதிரில், எழும்பூர், சென்னை. மத்திய அரசை வலியுறுத்தும் 5 அம்ச கோரிக்கைகள்; 1. இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை ஐ.நா. மன்றத்தில் பேச அனுமதிக்காதே! : 2. இந்திய அரசே! ஐ.நா. மனித உரிமை ஆணைய புலனாய்வு விசாரணைக் குழுவை இங்குள்ள ஈழத் தமிழரிடம் விசாரணை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்! 3. சிங்களப் படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்து!. வங்கக் கடலில் பாரம்பரிய மீன்பிடியை மீட்டுக் கொடு! …

  13. தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை: தமிழக அரசை தீவிரவாதிகளின் நண்பன் என்று கூறுவதா? தமிழ்நாட்டு சட்டவிரோதி சுப்பிரமணியன் சுவாமியை உடனே கைது செய்க!! தமிழ்நாடு மற்றும் ஈழம் வாழ் தமிழர்களின் உரிமைகளுக்கான குரல் கொடுத்து மிகச் சரியான போற்றுதலுக்குரிய நகர்வுகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தலைமையிலான தமிழ்நாட்டு அரசை தீவிரவாதிகளின் நண்பன் என்று தமிழினத் துரோகி சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழகத்தின் வாழ்வுரிமைகளுக்கான அனைத்துவித நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள். காவிரி நதிநீர், முல்லைப் பெரியாறு பிரச்சனைகள…

  14. மதுரை: மதுரை திருமங்கலத்தில் கல்லூரி மாணவிகள் இரண்டு பேர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் ஆசிட் வீசிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருமங்கலத்தில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரி ஒன்றில் சின்னப்பூலம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாணவிகள் மீனா, அங்காள ஈஸ்வரி படித்து வருகின்றனர். மீனா பி.ஏ. முதலாமாண்டும், அங்காள ஈஸ்வரி பி.ஏ. இரண்டாமாண்டும் படிக்கின்றனர். இந்நிலையில், இன்று பிற்பகல் 2 மணிக்கு கல்லூரி முடிந்து ஊருக்கு செல்வதற்காக மாணவிகள் இரண்டு பேரும் பேருந்து நிலையம் வந்து கொண்டிருந்தனர். அப்போது, 35 வயது மதிக்கத்தக்க ஒருவர், மாணவி மீனா முகத்தில் ஆசிட் வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அந்த நபர் வீசிய வேகத்தில் அ…

  15. சென்னை: எதற்கெடுத்தாலும் என் தலைமை, என் ஆட்சி, என் அரசு என்று நான், நான், நான் என்று சொல்லும் முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழகம் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி அடைந்ததற்கு முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசின் புள்ளியியல்துறை 2012–13ஆம் ஆண்டு இந்தியாவிலுள்ள மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது என்பது தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பின்தங்கிய மாநிலங்களாக கருதப்படும் மாநிலங்கெல்லாம் பொருளா…

  16. ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் | கோப்புப் படம் கிரானைட் முறைகேடு மற்றும் கனிம மணல் கொள்ளை குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து, சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், அதிகாரி சகாயம் தலைமையிலான விசாரணைக் குழு தனது அறிக்கையை 2 மாதங்களுக்குள் அளித்திட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் கனிம மணல் கொள்ளை மற்றும் கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக விரிவான விசாரணை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், மதுரை மாவட்ட ஆட்சியராக சகாயம் இருந்தபோது, கிரானைட் முறைகேடு விவகாரத்தில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறி…

  17. பாகிஸ்தான் உளவாளியான இலங்கைத் தமிழர் சென்னையில் கைது?! பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக இலங்கையைச் சேர்ந்த அருள் செல்வராஜன் என்பரை தேசியப் புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.) சென்னையில் புதன்கிழமை கைது செய்தனர். அவரிடமிருந்து பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தூண்டுதலின் பேரில் இலங்கையைச் சேர்ந்த சிலர் உளவு பார்ப்பதற்காக தென்னிந்தியாவில் குறிப்பாக, தமிழகத்துக்குள் ஊடுருவி இருப்பதாகவும் அவர்கள் பாகிஸ்தானுக்காக உளவு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தேசியப் புலனாய்வு அமைப்புக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தமிழக போலீஸôர் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. கடந்த மே மாதம் இலங்கையில் இருந்து வந்த முகமது …

  18. தமிழிசை சவுந்தரராஜன் | கோப்புப் படம் “அதிமுகவுக்கு எதிரிகளே இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். இதோ நாங்கள் இருக்கிறோம் என்று நிரூபித்துவிட்டோம்’’ என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பலரும் சொல்லி வைத்ததுபோல ஒரே நேரத்தில் வாபஸ் பெற்றனர். நெல்லை மேயர் வேட்பாளர் வெள்ளையம்மாள், கடைசி நேரத்தில் தனது மனுவை வாபஸ் பெற்றதால், அங்கு அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். வேட்பாளர்கள் மிரட்டப்பட்டதாக கூறப்பட்டாலும் பல இடங்களில் அவர்கள் பணத்துக்கு விலை போனதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனிடம் பேசினோம். அவரது பேட்டி: பல இடங்களில் உங்…

  19. நாகப்பட்டினம்: தமிழக கடல் பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்து, கடல் வளம் சுரண்டப்படுவதை தடுக்க, அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் 1076 கி.மீ., நீளமுடைய கடலோரத்தில் 13 கடலோர மாவட்டங்களில், 591 மீனவ கிராமங்கள் அமைந்துள்ளது. 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர். தமிழக கடல் பரப்பில் ஆயிரக்கணக்கான படகுகள் மீன்பிடிப்பதால், மீன் வளத்தை காக்க ஏப்ரல், மே மாதங்களில் 45 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு, கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு அரசு வழிவகுக்கிறது.மேலும், கடல் வளத்தை பாதிக்கும் இரட்ட…

  20. ஐ .நா. பொதுச் சபையில் மகிந்த ராஜபக்ஸ பங்கேற்று உரையாற்றுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ அவர்களின் தலைமையில் சென்னையில் நடைபெற்றுள்ளது. இன்று காலை வள்ளுவர் கோட்டம் அருகில் திரண்ட ம.தி.மு.க தொண்டர்கள் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் மகிந்தவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதில் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், ஓவியர் வீரசந்தானம் உள்ளிட்ட உணர்வாளர்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியுள்ளதுடன் கண்டன அறிக்கை ஒன்றும் வெளியிட்டுள்ளார்கள். http://www.sankathi24.com/news/_837/58/article

  21. ஜனநாயகத்தின் நான்காவது தூண், சமயத்தில் நான்கு தூண் பாரத்தையும் சுமப்பதாக காட்டிக் கொள்ளும். அவ்வகையில் ஊடகங்கள் மக்கள் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் போல நேரடி நடவடிக்கைகள் எடுத்து தமது கீர்த்தியை பறைசாற்றுவார்கள். இந்த நடவடிக்கைள் பெரும்பாலும் சாலை பள்ளம், விளக்கு பழுது, தேங்கிய குப்பை போன்ற ஆபத்தில்லாத விசயங்களில் இருக்கும். கொஞ்சம் விறுவிறுப்பு வேண்டுமென்றால் பாலியல் பிரச்சினைகளுக்காகவும் சாதாரண நபர்கள், சிறு குற்றவாளிகள் மீது நடவடிக்கைகள் எடுத்து ஆக்சன் ஹீரோவாக காட்டிக் கொள்வார்கள். இதற்கெல்லாம் அதிகார மற்றும் போலீஸ் வர்க்கத்திடம் சில தொடர்புகள் இருந்தால் போதும். செய்திக்கு செய்தி, நடவடிக்கைக்கு நடவடிக்கை என வாசகர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். ஆனால் இந்த ஊடக புலிகள் எ…

  22. தேனி: தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வை எதிர்த்து, வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடர் முழக்க பட்டினிப் போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இயற்கைக்கு மிக நெருக்கமான, விவசாயம் அதிகம் நிறைந்த செழித்த பகுதியான தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையோரமான தேவாரம் அருகே உள்ள பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வுக் கூடப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தேனியில் நடந்த கூட்டத்தில், அக்டோபர் 5ஆம் தேதி தொடர் முழக்க பட்டினிப் போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "நியூட்ரினோ சம்பந்தப்பட்ட ஆய்வை மேற்கொள்…

  23. சென்னை: பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி மீது முதல்வர் ஜெயலலிதா சென்னை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை மாநகர அரசு வழக்கறிஞர் ஜெகன், சென்னை அமர்வு நீதிமன்றத்தில் பா.ஜனதா தலைவர்களின் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி மீது அவதூறு வழக்கு இன்று தொடர்ந்துள்ளார். அதில், கடந்த 4ஆம் தேதி பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்த சுப்பிரமணிய சுவாமி, மீனவர்கள் பிரச்னையில் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து கடிதங்கள் எழுதி வருகிறார் என்றும், இதனால் எந்த பயனும் ஏற்படபோவதில்லை என்றும் கூறியுள்ளார். இதேபோன்று முல்லைப் பெரியாறு பிரச்னையிலும் முதல்வர் ஜெயலலிதா இவ்வாறு நடந்து கொள்கிறார் என்றும் தெரிவித்துள்ளார். சுப்பிரமணிய சுவாமியின் இந்த …

  24. துல்லியமாக கணித்தார் பிரபாகரன்!” விகடன் மேடை - கி.வீரமணி பதில்கள் வாசகர் கேள்விகள் கா.சரவணன், உடன்குடி. ''பிரபாகரன் உள்ளிட்ட ஈழப் போராளித் தலைவர்களுடனான திராவிடர் கழகத்தின் பிணைப்பு என்ன?'' ''விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ்நாட்டில் தங்கியிருந்தபோது, முக்கியமான முடிவுகள் எடுக்கும் முன் அவர்களின் நலம்விரும்பிகளான சகோதரர் பழ.நெடுமாறன் மற்றும் என்னைப் போன்ற வர்களிடம் கலந்து கருத்து அறியத் தவற மாட்டார். விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் ஒப்புவமையற்ற ஆற்றலைத் தொடக்கத்தில் இருந்தே சரியாகக் கணித்த இயக்கம் திராவிடர் கழகம் என்பதால், அவருக்கு அவ்வளவு நம்பிக்கை எங்களிடம். 1986-ம் ஆண்டு நடைபெற்ற சார்க் மாநாட்டில் கலந்துகொள்ள பெங்களூரு வந்திருந்தார் அப்போதைய …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.