Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நெல்லை: இலங்கை முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலை சம்பவத்தை நினைவுப்படுத்தும் வகையில் தஞ்சையில் அமைய உள்ள நினைவேந்தல் முற்றத்துக்கான நினைவு சுடர் பயணத்தில் ஈடுபட்டவர்களை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது. ஈழ தமிழர் படுகொலை சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் தஞ்சையை அடுத்த விளார் என்ற இடத்தில் நினைவேந்தல் முற்றம் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இந்த பணிகள் முடிவடைந்து வரும் 8 ஆம் தேதி அதனை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு தமிழ் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் முயற்சியில் அமைக்கப் பெற்றுள்ள இந்த நினைவிடத்திற்கு நினைவுச் சுடரை கொண்டு செல்லும் பயணம் இன்று தொடங்கியது. இந்த சுடர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, நினைவிடம் அமைந்துள்ள இடத்…

  2. இசைப்பிரியா படுகொலையில் இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை தேவை: ராமதாஸ் இசைப்பிரியா படுகொலையில் இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை தேவை என்று கூறியிருகிறார் பாமக நிறுவுனர் ராமதாஸ். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், விடுதலைப்புலிகள் இயக்கத் தொலைக்காட்சியின்செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டது குறித்த காணொலி காட்சியை சேனல்-4 தொலைக்காட்சிவெளியிட்டிருக்கிறது. அதில் இடம்பெற்றுள்ள காட்சிகள் நெஞ்சத்தை பிளக்கும் வகையிலும், இதயத்தை உலுக்கும் வகையிலும் உள்ளன. சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள காணொலியில், சகதி நிறைந்த குளத்தில் கிடக்கும் இசைப்பிரியாவை சிங்களப் படையினர் அழைத்து வருகின்றனர். அவர் மீது ஒரு வீரர் வெள்ளைத் துணியை போர்த்து…

  3. தமிழீழத்தின் தளபதிகளில் ஒருவராகவும், அரசியல் தலைவராகவும் இருந்து தமிழர்களின் வாழ்வில் விடிவைப்பெற்றுத்தர துடியாய் துடித்து உலகெலாம் ஓடித்திரிந்த நமது அன்புக்குரிய பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட மாவீரர்கள் வீரச்சாவைடைந்து 6 ஆண்டுகள் கடந்த விட்டன. அன்னாரின் வீரவணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. செந்தமிழன் சீமான் சிறப்புரையாற்றினார். பெருந்திரளானோர் அகவணக்கம் செலுத்தினர். நாம் தமிழர் கட்சி (முகநூல்)

  4. 1st November 2013 சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ள காங்கிரஸ் உயர்மட்ட குழு அனுமதியளித்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தமிழக மக்களின் உணர்வுகளை மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் அனைவரும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்று வேண்டுகோள் வைத்தும், தமிழக சட்டமன்றத்திலே வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றிய பிறகும், பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளலாம் என்ற முடிவை பார்க்கும்போது, 2011–ம் ஆண்டு காமன்வெல்த் மாநாட்டில் அடுத்த மாநாட்டை இலங்கையில் நடத்துவத…

  5. Thirumurugan Gandhi அன்பான தோழர்களே, தொடர்ச்சியான அரசியல் பணிகளை முன்னெடுத்து வருகிறது மே17 இயக்கம். கோரிக்கைகளை காப்பதே நெருக்கடியான வரலாற்று காலத்தில் ஆகப்பெரும் முக்கியப்பணியாக இருக்கிறது. இதில் எம்மால் இயன்றப் பணிகளை செய்து வருகிறோம். தொடர்ச்சியாக புற நகர்வினை புரிந்து செயல்படுவதற்கும் ஏனைய தமிழர் பிரச்சனைகளில் பங்கேற்று கருத்துப்பரப்பல், போராட்டம் ஆகியவற்றினை நட்த்துவதில் அனைவரும் கைகோர்ப்பதும் அவசியம் நம்புகிறோம். இவையெல்லாம் ஏதோ ஒரு சிலர் மட்டுமே செய்வதும், செய்யக்கடமைப்பட்டவர்கள் என்பதும் ஒரு பொழுதும் நமக்கு வெற்றியை அளிக்கப்போவதில்லை. இனிவரும் காலத்தில் சோர்வினை அளிக்கும் நிகழ்வுகளாக நமக்கு இருக்கப் போகும் விடயம் நமது பங்கேற்பு அரசியல் சார்ந்த்தாகவே…

  6. பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதாக காங்கிரஸ் உயர்மட்டக் குழு எடுத்துள்ள முடிவு உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரியில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்திய அரசு பங்கேற்கக் கூடாது என ஒட்டு மொத்த தமிழ் சமுதாயமும் வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பில் தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் உயர்மட்ட குழு பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்ற முடிவை எடுத்துள்ளது. இதுபெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. …

  7. காமன்வெல்த் மாநாட்டுக்கு செல்லக்கூடாது: பிரதமரிடம் வாசன் வலியுறுத்தல்! புதுடெல்லி: இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று பிரதமரை நேரில் சந்தி்த்து மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். இலங்கையில் வரும் 15ஆம் தேதி காமன்வெல்த் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 33க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன. கனடா இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளது. இதனிடையே, காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க காங்கிரஸ் உயர்நிலைக் குழு நேற்று ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார். அப்போது, காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று வலியுறுத்தியுள…

  8. திமுக தலைவர் கலைஞர் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் உயர் நிலைக் குழுவில்; இலங்கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள முடிவெடுத்திருப்பதைப் போல செய்திகள் வந்திருக் கிறதே; அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? தமிழ்நாட்டில் உள்ள தமிழ் உணர்வு படைத்த எல்லா கட்சிகளும் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு பிரதமர் செல்லக் கூடாது என்று வலியுறுத்திக் கூறியும் கூட, பத்திரிகைகளில் இன்று வந்துள்ள செய்தியைப் பார்க்கும்போது பிரதமர் செல்லக் கூடுமென்று யூகிக்கக் கூடிய வகையில் உள்ளது. அப்படி தமிழர்களை வேட்டையாடிய சிங்கள வெறியர்கள் நடத்துகின்ற காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டால், அதனுடைய விளைவுகளை அவர்கள் சா…

  9. திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனும் நடிகரும் பாடகருமான முக முத்து உடல்நலக்குறைவு காரணமாக இன்று புதுவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மு.க. முத்து, திருவாரூரில் இருந்து சென்னை வந்துகொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை புதுச்சேரி பத்மாவதி மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார். கருணாநிதி குடும்பத்தினரும் நலம் விசாரித்தனர். விரைவில் மு.க. முத்து, சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட உள்ளதாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார். http://tamil.oneindia.in/news/tamilnadu/mk-muthu-hosp…

    • 10 replies
    • 6.4k views
  10. தமிழ் தேசிய இனம் இந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை மறந்துவிட முடியாது முள்ளிவாய்க்காலில் இழந்த உயிர்களின் நினைவுகளையும் முத்துக்குமார் தொடங்கி தங்கள் உயிரினை தமிழிற்காக கொடுத்தவர்களின் படங்கள் அங்கே வைக்கப்பட்டுள்ளது முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்கள் கொத்துக்குண்டுகளுக்கும் நச்சுக் குண்டுகளுக்கும் எவ்வாறு பலியானார்கள் என்பதை எடுத்துக்காட்டும் சிற்பங்கள் அங்கு காணப்படுகின்றது . தஞ்சையில் எவ்வாறு மன்னர்கள் கட்டிய கோயில்கள் அடையாள சின்னமாக காணப்படுகின்றதோ அவ்வாறு தமிழ் தேசியஇனத்தின் ஒரு துயரஅடையாளமாக ஒருதேசிய இனம் தனது விடுதலைக்காக எவ்வளவு முழு ஈடுபட்டுடன் தன்உயிரினையும் முன்னிறுத்தி போராடியுள்ளது என்பதை இந்த முள்ளிவாய்க்கால் முற்றம் விளக்கி இருக்கின்றது. இந்த திறப்பு ந…

  11. இனப் படுகொலை நாடான சிறீலங்காவில் பொதுநல நாடுகள் மன்ற மாநாட்டை நடத்தாதே என்று வலியுறுத்தி இன்று காலை 10.00 மணியளவில் சாசுத்திரி பவன் மற்றும் இங்கிலந்து துணைத் தூதரகம் முற்றுகைப் போராட்டத்தை மே பதினேழு இயக்கம் ஒருகிணைப்பாளர் தோழர் திருமுருகன் தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு மல்லை சத்தியா தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தொழிலாளர்கள் அணி பொதுச் செயலாளர் சைதை சிவா மனிதநேய மக்கள் கட்சி மாணவரணி மாநிலச் செயலாலர் தோழர் அனிஸ் சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா துணைப் பொதுச் செயலாளர் அம்சா தமிழக மக்கள் சனநாயக கட்சி மாநிலப் பொதுச் செயலாளர் ஆதிதிராவிடன் திராவிடர் விடுதலைக் கழகம் தலைமை நிலையச் செயலாள…

  12. சென்னை: தரமணியில் செயல்பட்டு வரும் செம்மொழி நூலகத்தில் இருந்து பல அரிய நூல்களும், ஓலைச் சுவடிகளும் காணாமல் போய் உள்ளது. இது தொடருமானால் செம்மொழித் தமிழாய்வு மையம் மூடுவிழாவை கண்டுவிடும்போல் உள்ளது என வைகோ ஆதங்கம் தெரிவித்துள்ளார். இது குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், உலக அளவில் செம்மொழித் தமிழுக்கென்று நிறுவப்பெற்ற உயர் ஆய்வு நிறுவனம். இது ஒரு தன்னாட்சி நிறுவனம் ஆகும். தமிழ்மொழி மேம்பாட்டு வாரியம், தமிழ்மொழி ஆய்வு, செம்மொழித் தமிழ் உயர் ஆய்வு மையம் என உட்பிரிவுகளை உருவாக்கி, பன்னிரெண்டு புலங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.…

  13. சென்னை: தேசிய அளவிலான 3வது அணியின் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டால் அது குறித்து திமுக செயற்குழு, பொதுக்குழுவில் கலந்து பேசி முடிவெடுப்போம் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை நான் வரவேற்கிறேன். இலங்கை தமிழர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் இன்றைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை போல இந்தியா முழுவதும் நிறைவேற்றினால் அது இலங்கையிலே உள்ள இலங்கை தமிழர்களுக்கு பெரிதும் ஆதரவாக அமையும். ஏற்காடு…

  14. டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிகவும் போட்டியிட உள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை வரும் 27-ந் தேதி விஜயகாந்த் டெல்லியில் அறிவிக்கிறார். இதுகுறித்து டெல்லி தே.மு.தி.க. மாநில செயலாளர் வி.என்.தட்சிணாமூர்த்தி கூறியதாவது: டெல்லியில் 12 லட்சம் தமிழர்கள் வசிக்கிறோம். பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள்தான். அவர்கள் தங்களது அடிப்படை வசதிகளுக்காக போராடி வருகின்றனர். ஆனால் எவரும் தமிழர்களின் குறைகளை கேட்பது இல்லை. டெல்லி மாநில அரசில் தமிழர்களின் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டிய அவசியம் இருக்கிறது. அதனால் டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். டெல்லி ஐந்தர்மந்தர் பகுதியில் வரும் 27-ந்தேதி நடைபெறும் தே.மு.தி.க. பொதுக்கூட்டத்தில் கட்சி …

  15. in அ.தி.மு.க, இதர கட்சிகள், இந்திய தரகு முதலாளிகள், ஈழம், ஊழல் - முறைகேடுகள் by வினவு, October 25, 2013 மன்னார்குடி மாபியாவின் காசில் தமிழர் வரலாற்றில் ஒரு திருப்புமுனையையே உருவாக்க முடியும் என்றால், மணல் மாபியாவின் பணத்தில் சீமானால் இனவுணர்வைக் கூட ஊட்ட முடியாதா என்ன? “வீழ்ந்துவிடாத வீரம்; மண்டியிடாத மானம்” என்று எதுகை மோனையுடன் பஞ்ச் டயலாக் பேசி முஷ்டியை முறுக்குகிறார் சீமான். கருணாநிதிக்கு எதிராக காது ஜவ்வு கிழிய கத்தும் சீமான், ஜெயலலிதா பெயரைச் சொன்னதும், மிஸ்ஸுக்குப் பயப்படும் பள்ளிக்கூட சிறுவன் மாதிரி பம்முகிறார். ஜெயலலிதா மட்டுமல்ல… இந்தப் பட்டியலில் பலர் உண்டு. சமீபத்திய உதாரணம், தன் திருமணத்தின்போது மனைவி சகிதமாக சசிகலாவின் கணவர் நடராஜன் காலில் விழுந்தா…

  16. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..... http://www.puthiyathalaimurai.tv/

    • 7 replies
    • 807 views
  17. சம்சங் நிறுவனம் கலக்ஸி நோட் 3 மற்றும் கலக்ஸி கியர் ஸ்மாட் கடிகாரத்தை இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் நேற்று வெளியிட்டுள்ளது. இந்த கலக்ஸி நோட் 3யை தமிழ் மொழியிலும் இயக்கலாம். இதன் முக்கிய சிறப்பம்சங்களில் இதுவும் ஒன்றாகும். சம்சங் கலக்ஸி நோட் 3யின் விலை 49 990 இந்திய ரூபாய் ஆகும். கலக்ஸி கியர் ஸ்மாட் கடிகாரத்தின் விலை 22 990 இந்திய ரூபாய் ஆகும். 5.7 இன்ஞ் 1080p சூப்பர் அமோலட் பனல் கொண்ட கலக்ஸி நோட் 3, 1.9GHZ எக்ஸ்னோஸ் அக்டா கோர் பிரசஸர் உடன் வந்துள்ளது. 13 மெகாபிக்சல் கமரா, 2 மெகாபிக்சல் Front கமெரா உள்ளன. அன்ரொய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ் கொண்டுள்ள கலக்ஸி நோட் 3யில் 3ஜிபி ரம் உள்ளது. கேலக்ஸி நோட் 3யில் 4K வீடியோக்களை படம்பிடிக்கலாம். இது 32 GB மற்றும் 64GB சேமிப்பு அளவுக…

  18. ”தெனாலி’ திரைப்படத்தின் அடிநாதம் இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் பற்றியதாகும். நான் அதைப் பூடகமாகச் சொன்னேன், ‘மெட்ராஸ் கஃபே’ திரைப்படம் அதன் ஒரு பக்கத்தை மட்டும் சொன்னது. நானே அதன் இன்னொரு பக்கத்தை பற்றி ஒரு திரைப்படம் எடுக்க முயன்றாலும் அதற்கு எனக்கு அனுமதி கிடையாது’ என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். ‘இலங்கைப் பிரச்சினையைப் பற்றி ஒரு திரைப்படமும் எடுக்க முயல முடியாது. இங்கே கருத்துரிமை கிடையாது. ஜெயகாந்தன், பெரியார் காலத்தில் அவர்கள் அனுபவித்த கருத்துச் சுதந்திரம் தற்போது ஒரு கலைஞர்களான எமக்கு கிடையாது’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். - See more at: http://newsalai.com/cinemas/?p=914#sthash.b0cAfpky.dpuf

  19. ஈழத் தமிழர் மேம்பாட்டுக்காக நிரந்தர நிதி ஒதுக்கீடு தேவை; திருமாவளவன் வலியுறுத்து ஈழத் தமிழர் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காக நிரந்தர நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். சிதம்பரத்துக்குச் சென்ற அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்:- தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்வது தொடர் கதையாகி விடுகிறது. இது தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக உள்ளது. இந்திய அரசு தீவிர முயற்சி எடுத்து இதற்கு நிலையான முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அவ்வாறு இல்லையயனில் தமிழக மீனவர்களின் நலன் குறித்து ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய பொறுப்பும், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறு…

  20. • கலைஞர் தத்தெடுத்த அகதி சிறுவன் எங்கே? • ஸ்டாலின் குடும்பத்தால் அந்த சிறுவன் கொல்லப்பட்டானா? • அகதி சிறுவனுக்கு நீதி, நியாயம் கிடைக்குமா? 1983களில் பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழ் அகதிகள் தமிழ்நாட்டிற்கு வந்தனர். அதில் ஒரு ஏழை அகதி சிறுவனை தான் தத்தெடுத்து வளர்ப்பதாக கலைஞர் கருணாநிதி அவர்கள் அறிவித்தார். அவருடன் அந்த சிறுவன் நிற்கும் படங்களும் பத்திரிகைகளில் வெளிவந்தன. ஆனால் தற்போது அந்த சிறுவன் குறித்து எந்த தகவலும் கலைஞர் குடும்பத்திலிருந்து வெளிவருவதில்லை. கலைஞருக்கு பல மனைவிகள். பல பிள்ளைகள். பல பேரப்பிள்ளைகள் என அவரின் குடும்பம் மிகப் பெரியது. இருந்தும் அவர் ஒரு ஏழை அகதி சிறுவனை தத்தெடுத்து தனது கருணை மனதை வெளிப்படுத்தினார். குறிப்பாக ஈழத் தமிழர்கள் மீது தான் …

  21. பள்ளிகளில் தமிழைப் பயிற்று மொழி மற்றும் கட்டாயப் பாடமாக மாற்ற புதிய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கேரள அரசு பணிகளில் சேருவதற்கு அதற்குத் தகுதியான வகுப்புகளில் மலையாளத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு அல்லது பட்டப் படிப்பில் மலையாளத்தை ஒரு பாடமாக படித்திருக்கா விட்டால் மலையாள மிஷன் நடத்தும் மலையாள பட்டயப் படிப்பை முடித்து தேர்ச்சி பெற்றால் தான் அரசு வேலையில் சேர முடியும் என்றும், அதற்கேற்ப விதிகளில் திருத்தம் செய்யப்படும் என்றும் கேரள முதல்வர் கூறியுள்ளார். ஆனால், தமிழகத்தின் நிலையோ இதற்கு நேர் எத…

  22. Started by jdlivi,

    அலோபதி: சொந்தமாகப் பெயர் கூட இல்லாத மருத்துவமுறை! ம.செந்தமிழன் சித்த மருத்துவம், மூலிகை மருத்துவம், இயற்கை மருத்துவம், ஆயுர்வேதம், ஓகமுறை மருத்துவம் (யோகா சிகிChickenpox/Pages/Treatment.aspx) அதாவது, ’அம்மையை குணமாக்க இயலாது. இதை உருவாக்கும் வைரஸ் கிருமி எந்த சிகிச்சையும் இல்லாமலேயே தம்மைத்தாமே அழித்துக் கொள்கிறது’ என்கிறது, அலோபதியின் தலைநகரம் போல் விளங்கும் பிரிட்டனின் அரசு. பிற அலோபதி வல்லுனர்களும் இதைத்தான் கூறுகிறார்கள். நம் மரபு மருத்துவம் இந்த உண்மையைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்ததால்தான், அம்மை தாக்கியவருக்கு மருந்து தராமல், சிகிச்சை அளிக்கும் முறையை உருவாக்கியது. கூடுதலாக, வேப்பிலையும் பத்திய உணவும் சேர்ந்து, விரைவில் நலமடைய உதவுகின்றன. சர்க்கரை நோ…

    • 0 replies
    • 484 views
  23. சென்னை: ஏற்காடு சட்டசபை இடைத் தேர்தலில் அண்ணா திமுக வேட்பாளரை ஆதரிப்பதாக மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் ஏற்காடு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் சி.பெருமாள் மரணம் அடைந்ததையொட்டி டிசம்பர் 4ந் தேதி அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நடைபெறவுள்ள இந்த இடைத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று அஇஅதிமுகவின் தலைமை கேட்டுள்ளது. மத்திய அரசின் நவீன தாராளமய …

  24. நாகப்பட்டினம்: கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தவேலு, செல்லத்துரை, அன்பழகன் ஆகியோருக்கு சொந்தமான 3 விசைப்படகுகள் மற்றும் பட்டினச்சேரியைச் சேர்ந்த பொன்னுசாமிக்கு சொந்தமான 1 விசைப்படகு ஆகியவற்றில் 32 மீனவர்கள் கடந்த 15ம் தேதி மாலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் நேற்று முன்தினம் கோடியக்கரை அருகே சர்வதேச கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். எல்லை தாண்டி மீன் பிடித்துக் கொண்டிருப்பதாகக் கூறி அவர்கள் 4 விசைப்படகுகளையும் சுற்றி வளைத்து 32 மீனவர்களையும் கைது செய்து இலங்கைக்கு கொண்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.