தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10250 topics in this forum
-
ஒற்றையாட்சியை திணிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்குமானால், மீண்டுமொரு ஈழ விடுதலைப் போராட்டம் ஏற்படும் ––அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை.- இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் மீது ஒற்றையாட்சி முறையைத் திணிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சிக்குமானால், மீண்டுமொரு ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு அது வழி வகுக்கும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே, தற்போதைய அரசாங்கம், ஈழத் தமிழர்களுக்கு அர்த்தமுள்ள சுயாட்சியுடன் கூடிய கூட்டாட்சி அமைப்பை உறுதி செய்யவேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஈழத் தமிழ் அரசியல் கட்சிகளின் சில தலைவர்கள், ஒற்றையாட்சி முறையை வலுப்படுத்தும் நோக்கில் அரசியலமைப்புத் திருத்தங்களைத்…
-
- 1 reply
- 132 views
-
-
10 ஆம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் தோல்வி 10 ஆம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் தோல்வி அடைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பதிவு: ஜூன் 19, 2020 12:06 PM சென்னை கொரோனா தொற்றில் இருந்து மாணவ-மாணவிகளை காக்கும் வகையில், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், மாணவர்களின் வருகைப்பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்…
-
- 1 reply
- 575 views
-
-
மக்கள் நீதி மய்யத்தின் ‘நாமே தீர்வு’ வலைத்தளம்: ஜி.வி.பிரகாஷ் தொடங்கி வைத்தார்; ஒரே நாளில் 54,000க்கும் அதிகமான அழைப்புகள் மக்கள் நீதி மய்யம் கரோனா நிவாரணப் பணிக்காக தொடங்கியுள்ள "நாமே தீர்வு" என்கிற இயக்கத்துக்காக அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக வலைதளத்தை ஜிவி பிரகாஷ் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கரோனா நிவாரணப் பணிக்காக திமுக, 'ஒன்றிணைவோம் வா' எனும் திட்டத்தைத் தொடங்கி செயல்பட்டு வருகிறது. இதேபோன்று மக்கள் நீதிமய்யம் சார்பில் நாமே தீர்வு என்கிற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. நாமே தீர்வு இயக்கத்தின் மூலம் சேவைப் பணியை ஒருங்கிணைக்க உள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன…
-
- 0 replies
- 510 views
-
-
வாட்டாள் நாகராஜ்... யாருடைய எதிரி? பொதுமக்கள் நலனுக்காக, ரத்தம் சிந்தி தங்கள் சுயநலனை தியாகம் செய்த தலைவர்களை வரலாற்றில் பார்த்திருக்கிறோம். காந்தி, நேரு, காமராஜ் என்று உதாரணங்களும் வைத்திருக்கிறோம். சுயநலனுக்காக பொதுமக்களை ரத்தம் சிந்த வைத்து, அந்த ரத்தத்தின் கதகதப்பில் ஏறி அமர்ந்து குளிர் காய்கிறவர்களை இன்றைய அரசியலில் பார்க்கிறோம். முன்னதை விட, பின்னதில் உதாரணம் காட்ட நபர்களின் எண்ணிக்கை மிக அதிகம். சட்டென்று சொல்லவேண்டுமென்றால், வாட்டாள் நாகராஜ் பெயரை தேர்ந்த உதாரணமாகச் சொல்லலாம். ‘‘கர்நாடகா வாழ் தமிழர்கள் கூடிய சீக்கிரம் தமிழ்நாடு திரும்ப வேண்டியிருக்கும்...’’ - நெருப்பை அள்ளிக் கொட்டுகிற வகையில் பேசியிருப்பதன் மூலம், மீண்ட…
-
- 0 replies
- 1.7k views
-
-
அப்போலோவில் ஒரு மாதம்- முதல்வருக்கு வந்திருக்கும் நோய் இதுதானா? இன்றோடு ஒரு மாதமாகிறது!. 1984ல் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அப்போலோவில் ஒரு மாதம் வரை சிகிச்சைக்காகத் தங்கி இருந்தார். அவருக்கு அடுத்து நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெரும் தமிழக முதல்வர் ஜெ., தான். கடந்த செப் 22ல் அப்போலோவின் விவிஐபி-க்களுக்கான அறை எண் 2008ல் அவர் அனுமதிக்கப்பட்டார். அது தொடங்கி, அவருக்கு காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு, நாட்பட்ட சர்க்கரை வியாதி, நாட்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி, சுவாசப் பிரச்னை, இதயம் சார்ந்த நோய் என்று பல்வேறு செய்திகளைத் தன் அறிக்கை வழியாகப் பகிர்ந்து வருகின்றது அப்போலோ. அது தொடர்பான சிகிச்சைகளுக்காக லண்டன், சிங்கப்பூர் மற்றும் டெல்லியிலிருந்…
-
- 0 replies
- 476 views
-
-
இலங்கைக்கு இந்தியா இந்த ஆண்டு ரூ. 500 கோடியை இலவசமாக வழங்குகிறது. இது முந்தைய ஆண்டை காட்டிலும் ரூ. 210 கோடி கூடுதலாகும். இந்தியா அதன் அண்டை நாடுகளுக்கு உதவி செய்கிறது. அதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ரூ. 5,550 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் இலங்கைக்கு ரூ. 500 கோடி மானியமாக வழங்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில் ரூ. 290 கோடி வழங்கப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டில் ரூ. 181.84 கோடியே வழங்கப்பட்டது. ஆகவே கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக ரூ. 210 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்களை மறுகுடியமர்வு செய்ய இலங்கை அரசு பயன்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு தமிழக கட்…
-
- 2 replies
- 695 views
-
-
மநாதபுரம் வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் இலங்கையில் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொடூரமான முறையில் சுட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை கொலை குற்றவாளியாக அறிவிக்க கோரியும், ஐ.நா.சபையில் ராஜபக்சேவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியும் 2 நாட்களாக வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் 08.03.2013 வெள்ளிக்கிழமை காலையில் ராமநாதபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் சங்க உதவி தலைவர் சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வங்க முன்னாள் தலைவர்கள் குணசேகரன், தமிழரசு, வக்கீல்கள் கருணாகரன், சேக் இபுராகீம், உது மான், ஹாலித், முருகேசன், முருகபூபதி, அர்சத…
-
- 1 reply
- 396 views
-
-
சென்னை: இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," 25.3.2013 அன்று சென்னையில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தில், “இனப் படுகொலையை நடத்தி, தமிழ்ஈழ மக்களையே அழித்தொழிக்க முயன்ற இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பது எவ்விதத்திலும் பொருத்தமானதோ, ஏற்கக் கூடியதோ அல்ல. எனவே, அம்மாநாட்டை எக்காரணம் கொண்டும் அங்கு நடத்திடக் கூடாது என்று காமன் வெல்த் தலைமையை இக்கழகச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது”” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்ற கருத்தை திராவிட முன்னேற்றக் கழகமும், ‘டெசோ’ …
-
- 0 replies
- 362 views
-
-
வைகோ ஆரம்பித்த கூட்டணி.. அவராலே உடைகிறதா? ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவின் முழுமையான, அயராத முயற்சியால் உருவானது மக்கள் நலக்கூட்டணி. வைகோ உருவாக்கிய இந்தக் கூட்டணி வைகோவாலேயே உடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றிணைந்து 'மக்கள் நலக் கூட்டு இயக்கம்' என்ற இயக்கத்தை ஆரம்பித்து, 'மக்கள் நல பிரச்னைகளில் இணைந்து செயல்படுவோம்' என்று அறிவித்தனர் அதன் தலைவர்கள். அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு மாற்றாக ஒரு புதிய அணி உருவாகிறது என்று மக்கள் எதிர்பார்த்தனர். அதுபோலவே, ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருந்த இந்த 4 கட்சிகளும், 'மக்கள் நலக் கூட்டு இயக்கம்' என்பதை 2016-ம…
-
- 0 replies
- 390 views
-
-
திண்டுக்கல் :: மாட்டுப் பொங்கலை போல குதிரை பொங்கல்.! திண்டுக்கல் அருகே மலைப்பகுதியில் அமைந்துள்ளது சிறுமலை கிராமம் இங்கு பழையூர், புதூர், வேளாம்பண்ணை, தாளக்கடை, கடமான்குளம், அகஸ்தியர் புரம், தென்மலை, உள்ளிட்ட ஏராளமான மலைக் கிராமங்கள் உள்ளது இந்த மலை கிராமங்களில் சாலைவசதி கிடையாது. இங்கு உள்ள விளை நிலங்களில் வாழை, எலுமிச்சை, அவரை, காப்பி, ஏலக்காய், பலாப்பழம் போன்றவற்றைப் பயிரிடப்படுகிறது. மலைப்பகுதியில் விளையும் காய்கறி மற்றும் பழங்களை நகர்ப் பகுதிக்கு எடுத்துவர இக்கிராம மக்கள் குதிரைகளைப் பயன்படுத்துகின்றனர். குதிரையின் முதுகில் மூட்டையாகக் கட்டி காய்கறிகளை எடுத்து வந்து விற்பனை செய்வது அவர்களது வழக்கம். இதனால் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்த பட்சம் இரண்டு குதிரையாவத…
-
- 0 replies
- 733 views
-
-
"நடராஜனை வரவேற்று விழா நடத்தக்கூடாது!"- ஏன் தடை போடுகிறது தமிழக அரசு?! எம்.விஜயகுமார் நடராஜன் | #AUSvIND ( Tertius Pickard ) ஒரே தொடரில் மிகப்பெரிய உயரத்தைத் தொட்டிருக்கும் நடராஜன் இன்று மாலை தனது சொந்த ஊரான சேலம், சின்னப்பம்பட்டிக்கு வருகிறார். நடராஜனை வரவேற்க நண்பர்கள் பலரும் சிறப்பு ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில் முதன்முறையாகக் களமிறங்கிய நடராஜன், இத்தொடரில் முதல்முறையாக பவர்ப்ளே ஓவரில் விக்கெட் எடுத்த பெளலர் என்கிற பெருமையைப் பெற்றார். லாபுசேன், அஷ்டன் அகார் என இரண்டு முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார். டி…
-
- 0 replies
- 699 views
-
-
ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆளுநரின் நம்பிக்கை! - எம்.பிக்கள் கூட்டத்தில் உறைந்த சசிகலா பிரதமருக்குத் தொடர் கடிதம், அரசியல் கட்சித் தலைவர்கள் சந்திப்பு என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உற்சாகத்தோடு வலம் வரத் தொடங்கிவிட்டார். 'குடியரசு தினத்தில் ஓ.பி.எஸ் கொடியேற்றுவார் என ஆளுநர் அலுவலகம் கொடுத்த உத்தரவும் ஜெயலலிதா மரணம் குறித்து அளிக்கப்பட்ட மனுவை பணியாளர் நலத்துறைக்கு ஒப்படைத்ததையும் அதிர்ச்சியோடு கவனிக்கிறார் சசிகலா' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக பதவியேற்ற சசிகலா, 'ஜனவரி 2-ம் தேதி முதல்வராக பதவியேற்பார்' என நிர்வாகிகள் பேசி வந்தனர். அதன்பிறகு, 'ஜனவரி 12-ம் தேதி முதல்வர் ஆவார்' என்றனர். அதையொட்டி, அமைச்சர்கள் …
-
- 2 replies
- 684 views
-
-
சென்னை:தமிழகத்தையே புரட்டிப் போட்ட ஜல்லிக்கட்டு போராட்டத்தின் நோக்கத்தை சிதைக்க, விஷமிகள் சதி செய்வதாக, பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாரம்பரியத்தை மீட்டெடுக்க, தன்னெழுச்சி யாக திரண்டுள்ள மாணவர் கூட்டத்தை, திசை திருப்பும் வேலைகளில், தேச விரோத சக்திகள் களம் இறங்கியுள்ளதாக, தீவிர ஜல்லிக்கட்டு ஆர்வலரும், இசை அமைப்பாளருமான, 'ஹிப் ஹாப்' தமிழா ஆதி கூறியுள்ளார். அதனால், 'சூழ்ச்சி வலையில் விழ வேண்டாம்' என, மாணவர்களுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளார். பொங்கல் பண்டிகைக்கு முன், கிராமம், நகரம் என்ற வேறுபாடு இல்லாமல், அனைவரின் உதடுகளும், ஜல்லிக்கட்டு என்ற வார்த்தையை உச்சரிக்க கருவியாக இருந்தது, 'ஜல்லிக்கட்டு... ஜல்லிக்கட்டு..'என்ற ஆல்…
-
- 0 replies
- 308 views
-
-
நம்பிக்கை ஓட்டெடுப்பில் விதிமீறல்கள் அரசுக்கு சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்பு சட்டசபையில், முதல்வர் இடைப்பாடி பழனிசாமி, நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரிய போது, பல்வேறு விதிமீறல்கள் நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளால், ஆட்சிக்கு சிக்கல் வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, சட்டசபை செயலக அதிகாரிகள் சிலர் கூறியதாவது: சட்டசபை விதிகளின்படி, சபை காவலர்களாக, சப் - இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ளவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவர். ஆனால், இம்முறை சட்டசபையில் இருந்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்ற, சப் - இன்ஸ்பெக்டர் சீருடையில், துணை கமிஷனர் அந்தஸ்திலான அதிகாரிகள் வந்திருந்தனர். சட்டசபைக்க…
-
- 0 replies
- 849 views
-
-
தமிழகம்: இன்று முதல் புது கட்டுப்பாடுகள்: முழு விவரம்! மின்னம்பலம் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் இன்று முதல் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது தமிழக அரசு. கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில் ஊரடங்கைக் கடுமையாக்க வேண்டும் என்று விவாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், “15.05.2021 காலை 4 மணி முதல் 24.05.2021 காலை 4 மணி வரை ஏற்கெனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகளுடன் பின்வரும்…
-
- 0 replies
- 623 views
-
-
முந்தய அடுத்து சென்னை, ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு, தினகரன் கோஷ்டியினர் பணம் பட்டுவாடா செய்தது தொடர்பான முக்கிய ஆவணத்தை, வருமான வரித்துறையினர் வெளியிட்டுள்ள னர். இதன் மூலம், தேர்தலுக்காக எவ்வளவு பணம், யாரால் கொடுக்கப்பட்டது என்ற பட்டியல் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கரிடம், வருமான வரித்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் தான், ஆட்சி அதிகாரத்தில் தொடர முடியும் என்ற கட்டாயத்தில், தினகரன் அணியினர் உள்ளனர். அதனால், வாக்காளர்களுக்கு, தலா, 4,000 ரூபாய் பட்டுவாடா செய்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் புகார்கள் குவிந்தன. பணம்…
-
- 2 replies
- 360 views
-
-
சென்னை: பிரபல அரசியல் கட்சி தலைவர் மீது அக்கட்சியின் பெண் நிர்வாகி பாலியல் புகார் தெரிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தலைவர் பன்முகம் கொண்டவர். சென்னையில் பிரபலமான கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். டிவி வைத்திருக்கிறார். பத்திரிக்கை வைத்திருக்கிறார். இவர் மீதுதான் இந்தப் பரபரப்பான புகார் எழுந்துள்ளது. அவர் மீது குற்றம் சாட்டியிருப்பவர் அக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் ஆவார். இவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர். மீனவர் சமுதாயத்தைச் சார்ந்தவர். தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார். 2011 ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கூட தூத்துக்குடி மாநகராட்சி மேயர் வேட்பாளராக இவர் போட்டியிட்டாராம். அந்த கட்சி தலைவருக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்ட அந்த பெ…
-
- 0 replies
- 328 views
-
-
நள்ளிரவில் நடந்த ரகசியப் பேச்சு! பன்னீர்செல்வம்- பழனிசாமி அடுத்த மூவ் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்- முதல்வர் பழனிசாமி அணியினர் நள்ளிரவில் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். தினகரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இரு அணி தரப்பினர் நடத்திய பேச்சுவார்த்தை சசிகலா ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க மூன்றாக உடைந்தது. சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி, தீபா அணி எனப் பிரிந்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து இரட்டை இலைச் சின்னம் கேட்டு இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கைவைத்தனர். இருதரப்பினரின் வாதத்துக்குப் பின்னர் அ.தி.மு.க பெயரையும், இரட்டை இலைச் சின்னத்தையும் தேர்தல…
-
- 0 replies
- 331 views
-
-
அதிமுக எம்.எல்.ஏ, எம்.பி.,க்கள் கூட்டம் தொடங்கியது: முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா? அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் எம்.பி.,க்கள் கூட்டம் |படம்: க.ஸ்ரீபரத் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் எம்.பி.,க்கள் கூட்டம் |படம்: க.ஸ்ரீபரத் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக எம்.எல்.ஏ, எம்.பிக்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (திங்கள்கிழமை) நடக்கிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. அதிமுகவில் ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் இணைந்துள்ள சூழ்நிலையில் தினகரன் தரப்பினர் தணி அணியாக செயல்பட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கூடிவரும் நிலையில் இருத…
-
- 5 replies
- 1.8k views
-
-
கொடைக்கானல் மச்சூர் வனப்பகுதியில்... 3-ஆவது நாளாக, கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீ ! திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியில் மூன்றாவது நாளாக காட்டுத்தீ கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது. குறித்த காட்டுத்தீயால், சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான மரங்கள், அரியவகை மூலிகை செடிகள் தீயில் கருகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த்யு காட்டுத்தீயை அணைக்க வனத்துறையினர் முயற்சிக்கு செய்துவரும் அதேவேளை காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாக பரவிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காட்டுத்தீ காரணமாக தோகைவரை, மச்சூர் உள்ளிட்ட பகுதிகள் புகைமண்டலமாக காட்சியளிக்கிறன. https://athavannews.com/2022/1271622
-
- 0 replies
- 220 views
-
-
நெல்லை: திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே 400 அடி கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுவன் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டான். மாலை 4 மணிக்கு சிறுவன் மீட்பு மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறப்பு எந்திரம் (ரோபோ) மூலம் சிறுவன் மாலை 4 மணிக்கு பத்திரமாக மீட்கப்பட்டான். மீட்கப்பட்ட சிறுவன் உடனடியாக சங்கரன்கோவில் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டான். சிறுவன் மீட்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கருணாகரன், "மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறப்பு எந்திரம் மூலம் சிறுவன் மீட்கப்பட்டான். தீயணைப்புத்துறையினர், மருத்துவக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மீட்புப்பண…
-
- 5 replies
- 1.7k views
-
-
சென்னை: சென்னையில் மேம்பால சுவற்றில் மாநகர பேருந்து மோதிக்கொண்ட விபத்தில் பயணிகள் 15 பேர் படுகாயம் அடைந்தனர். ஐயப்பன்தாங்கலில் இருந்து வள்ளலார்நகருக்கு இன்று பிற்பகல் 3 மணிக்கு 37ஜி பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை தேவராஜன் என்பவர் ஓட்டி வந்தார். கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் மேம்பாலத்தில் பேருந்து வந்து கொண்டிருந்தபோது பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுவற்றி்ல் மோதியது. இதில், பயணிகள் 15 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து மோதிய வேகத்தில் பயணி ஒருவரின் கால் முறிந்தது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுநர் செல்…
-
- 0 replies
- 556 views
-
-
அதிமுக அலுவலகத்துக்கு சீல்: நீதிமன்றத்தை நாடிய எடப்பாடி மின்னம்பலம்2022-07-12 அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நேற்று வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே அதிமுக தலைமை அலுவலகத்தில் பன்னீர் செல்வம் ஆதரவாளர்களும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் ஒருவரை ஒருவர் மோதிக் கொண்டனர். தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். அலுவலகம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை முடிவு செய்ய வர…
-
- 0 replies
- 231 views
-
-
ஸ்டாலினை விமர்சித்த நிலையில் கருணாநிதியை சந்தித்தார் அழகிரி! ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க டெபாசிட் இழந்த நிலையில், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த மு.க.அழகிரி, இன்று தி.மு.க தலைவர் கருணாநிதியை திடீரென சந்தித்துப் பேசியது, அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க அரசு, மத்திய அரசின் பினாமி அரசு என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவதோடு, மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக்கூட அரசு செய்வதில்லை என்றும் கூறுகின்றன. ஆளும்கட்சிக்கு எதிராக மக்கள் கடும் அதிருப்தியில் இருந்துவரும்நிலையில், நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க வெற்றிபெறும் என்றிருந்த நிலையில், யா…
-
- 0 replies
- 449 views
-
-
யானை-மனித எதிர்கொள்ளல்: பாதுகாப்பில் பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருவது ஏன்? பி.சுதாகர் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES யானை ஒரு நாளைக்கு சராசரியாக 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை நடக்கும். தினமும் 250 கிலோ வரை உணவு எடுத்துக்கொள்ளும். 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். ஒரு இடத்தில் சாப்பிட்ட உணவின் மூலம், சாணத்தில் இருக்கும் விதைகளுக்கு உயிர்கொடுத்து புது செடிகளையும், மரங்களையும் மற்றொரு இடத்தில் வளர்க்கும் என்று சொல்லப்படுகிறது. யானைகளைக் குழந்தையைப் போல அன்பானது மற்றும் குறும்புத்தனம் கொண்டது என்று சொல்வதுண்டு. இன்று உலக யானைகள் …
-
- 2 replies
- 348 views
- 1 follower
-