தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10250 topics in this forum
-
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 90வது பிறந்த நாள் விழா தென் சென்னை மாவட்ட திமுக சென்னையில் பொதுக் கூட்டத்துடன் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்து வருகிறது. திமுக தலைவர் கருணாநிதிக்கு 90வது வயது ஜூன் 3ம் தேதி பிறக்கிறது. இதையொட்டி ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை தாங்குகிறார். கட்சி பொதுச்செயலாளர் க.அன்பழகன் பாராட்டுரை வழங்குகிறார். கருணாநிதி கலந்து கொண்டு ஏற்புரை வழங்கி பேசுகிறார். இதில் திமுக முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசுகிறார்கள். மேலும், கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி ஐந்தாம் பாகம் மற்றும் சிறுகதைப் பூங்கா நூல்கள் வெளியீட்டு விழா வருகிற 2-ந்தே…
-
- 7 replies
- 809 views
-
-
திருச்சியில் நடந்த ம.தி.மு.க. பிரமுகர் இல்லத்திருமண விழாவில் கலந்துகொண்டு வைகோ பேசியதாவது:- திருச்சி தீரர்களின் கோட்டையாக விளங்கி வருகிறது. அண்ணாதுரை முதல் பல தலைவர்களும் கட்சி சார்ந்த முக்கிய முடிவுகளை திருச்சியில் தான் அறிவித்துள்ளனர். அந்த வகையில் ம.தி.மு.க. வும் முக்கிய முடிவுகளை திருச்சியில் இருந்து அறிவித்துள்ளது. மது அருந்துவோரின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலை நீடித்தால் வளமான தமிழகம் என்பது கேள்விக்குறியாகி விடும். இதுபோன்ற தொலை நோக்கு சிந்தனையில்தான் தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று ம.தி.மு.க. பல்வேறு போராட்டங்கள், நடை பயணம் போன்றவற்றை நடத்தி வருகிறது. இதை சிலர் கேலி செய்து வருகின்றனர். இலங்கையில் பொத…
-
- 0 replies
- 511 views
-
-
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து கேன் குடிநீர் நிரப்பும் நிறுவனங்கள் தரச்சான்றிதழ் பெற்றுள்ளனவா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு பதிலளிக்க தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் தரமற்ற வகையில் குடிநீரை கேன்களில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக பத்திரிகையில் செய்தி வெளியானது. இதையடுத்து, பத்திரிக்கை செய்தியை அடிப்படையாக கொண்டு பசுமை தீர்ப்பாயம் தானாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதைத் தொடர்ந்து தரமற்ற குடிநீர் நிரப்பும் நிறுவனங்களை மூட மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை, புறநகர் பகுதிகளில் தரமற்ற 200க்கும் மேற்பட்ட குடி…
-
- 0 replies
- 400 views
-
-
இலட்சியத்திற்கான பயணத்தில் எதிரிகளை வீழ்த்துவதற்காகவோ, அல்லது சுரணையற்ற சமூகத்தில் ஒரு எழுச்சியை ஏற்படுத்துவதற்காகவோ, ஒருவர் தம் உயிரையே அர்ப்பணிப்பாரெனில் அவரைத் தற்கொலைப்படைப் போராளி என்கிறோம். தற்கொலைப் போராளிகளின் தொடக்கம் இரண்டாம் உலகப் போரில்தான் என்கிறது எழுதப்பட்ட வரலாறு. ஜெர்மனிக்கும், ஜப்பானுக்கும் இடையே நீர்மூழ்கிக் கப்பலில் நடைபெற்ற யுத்தத்தில் ஜப்பானிய வீரர்களின் தற்கொலைப் போராட்டமே இதற்கான தொடக்கமாகக் கருதப்படுகிறது. ஆனால் இரண்டாம் உலகப்போர் நடைபெறுவதற்கு 150 ஆண்டுகளுக்கு முன்னரே, பிரிட்டிஷாரை எதிர்த்துத் தமிழ் மண்ணில் நடைபெற்ற போர்க்களத்தில்தான் முதன்முதலாக 'தற்கொலைப் போராளி' உருவானார் என்பது நாம் அறியாதது. அந்த போராளி வீரமங்கை யின் பெயர்தான் குயிலி. 1776ம்…
-
- 4 replies
- 1k views
-
-
Sunday 26th May 2013 கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி அணுஉலை எதிர்ப்பாளர்கள் இடிந்தகரையில் தொடர் உண்ணாவிரதம் நடத்தி வருவது மட்டுமின்றி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அணுஉலை எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் கேரள மாநிலத்தின் 14 மாவட்டங்களை சேர்ந்த பிரதிநிதிகள் குழு இன்று இடிந்தகரைக்கு வந்துள்ளது. பையனூர் ராமச்சந்திரன் என்பவரின் தலைமையில் வந்துள்ள இந்த குழுவில் பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என 130பேர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவை சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் இடிந்தகரையில் தொடர் உண்ணாவிரதம் நடந்துவரும் பந்தலில் இன்றுகாலை “கூடங்குளம் தொடர்வண்டி”…
-
- 0 replies
- 488 views
-
-
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் தேர்வை தமிழில் எழுதக்கூடாது என்றும், ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்றும் எந்த உத்தரவும் இதுவரை அரசிடம் இருந்து கல்லூரி கல்வி இயக்குனரகத்திற்கு வரவில்லை என்று கல்லூரி கல்வி இயக்குனர் பேராசிரியை டி.செந்தமிழ்ச்செல்வி தெரிவித்தார். தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், நெல்லை மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்த பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. மொத்தம் 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 133 அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளும், 438 சுயநிதி கலை, அறி…
-
- 0 replies
- 499 views
-
-
சிம்மக் குரலோன் டி.எம்.செளந்தரராஜன் உடலுக்கு இசைஞானி இளையராஜா மலர் அஞ்சலி செலுத்தினார். நேற்று மாலை டிஎம்எஸ்மரணமடைந்தார். அவருக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், பல்துறையினர், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எம்.ஜி.ஆர்., சிவாஜியின் மறைவுக்குப் பின்னர் டி.எம்.எஸ்ஸின் மரணம் உலகத் தமிழர்களை ஒட்டுமொத்தமாக பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. டி.எம்.எஸ்ஸின் வீட்டுக்கு இசையமைப்பாளர் இளையராஜா சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், டி.எம்.சவுந்தரராஜன் குரல் மாதிரி இன்னொருத்தர் வரமுடியாது. தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய குரல். அவர் பாடலை கேட்காத கிராமங்கள் கிடையாது. எவ்வளவு புதியதாக பாடல்கள் வந்தாலும், அவருடைய பாடல்களை கேட்டு, ரசிக…
-
- 0 replies
- 748 views
-
-
கும்ப கோணம் அருகே உள்ள ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட 1000 வருடங்கள் பழமைவாய்ந்த கோவில் இடிக்கப்படுவதை நிறுத்துமாறு கேட்டு கையொப்பமிடுங்கள். http://www.change.org/petitions/stop-demolishing-the-1000-year-old-temple? (முகநூல்)
-
- 0 replies
- 601 views
-
-
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் கடந்த ஒருவாரமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை பார்க்க யாரையும் அனுமதிக்க வில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதி தன் சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி.யை அனுப்பி உடல்நலம் பற்றி விசாரித்தார். இந்த நிலையில் கனிமொழி எம்.பி. நேற்று பகலில் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டர் ராமதாஸ் உடல்நலம் பற்றி விசாரித்தார். அவர் ராமதாசின் மகளுடன் சுமார் 10 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தார். அதே நேரத்தில் மு.க. ஸ்டாலினும் ராமதாசை பார்க்க ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவரும் ராமதாசின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார். ரா…
-
- 0 replies
- 554 views
-
-
புதுடில்லியில் விரைவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி நிச்சயம் அமையும். எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அது வெளிப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை சென்னையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுதின நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே பாண்டியன் இதனைத் தெரிவித்தார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுமிக்க ஆட்சியொன்று புதுடில்லியில் வெகுவிøரவில் அமையும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. அதன் மூலம் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வினை விரைவாக எட்டுவதற்கான அழுத்தத்தை இலங்கை அரசுக்கு கொடுக்க முடியும் என்றும் பாண்டியன் தனது உரையில் குறிப்பிட்டார். முள்ளிவாய்க்காலில் காவு கொள்ளப்ப…
-
- 1 reply
- 414 views
-
-
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேள்வி:- இந்தோனேசியாவில் சிக்கியுள்ள தன் மகனை மீட்க உதவி கோரி, அவருடைய தாயார் குசலகுமாரி என்பவர் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்திருப்பதாகச் செய்தி ஒன்று வந்துள்ளதே? பதில்:- 2009ஆம் ஆண்டு இலங்கையில் உச்சக்கட்ட போர் நடந்தபோது, தன் மகன் துஷ்யந்தனை (வயது 26) இந்தோனேசியாவிற்கு அவருடைய தாய் குசல குமாரி அனுப்பி வைத்திருக் கிறார். அங்கிருந்த அவருடைய மகன் பத்திரமாக இந்தோனேசியாவிற்கு வந்துவிட்டதாகவும், அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகில் கூடவந்த ஒன்பது தமிழர்களுடன் செல்லவிருப்பதாகவும் தொலைபேசியில் தெரிவித்திருக்கிறார். அதற்குப் பிறகு நான்காண்டுகளாக எந்தச் செய்தியும் மகனிடமிருந்து கிடைக்கவி…
-
- 0 replies
- 398 views
-
-
போலீஸ் ஏட்டு பெயர் தியாகராஜன் (வயது 45). இவர், கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீசில் பணியாற்றுகிறார். ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகளை கண்காணிக்கும் பணியில் இவர் ஈடுபட்டுள்ளார். ஏட்டு தியாகராஜன் நேற்று மாலை 3.30 மணியளவில் சென்னை ராயப்பேட்டை செல்லம்மா தோட்டம் குடிசை பகுதியில் குற்றவாளிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அதே பகுதியில் விமல் என்ற விமல்ராஜ் (20) என்ற ரவுடி வசித்து வந்தார். இவர் பட்டப்பகலில் வீடு புகுந்து திருடுவதில் பலே குற்றவாளி. இவர் போதைப்பழக்கத்துக்கு அடிமையானவர். வீடு புகுந்து திருடிய வழக்கில் ஐஸ் அவுஸ் போலீசார் இவரை கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்திருந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி அன்று இவர் ஜெயிலில் இருந்து விடுதலை ஆனார…
-
- 4 replies
- 581 views
-
-
சென்னை: "வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீனவ அமைப்புகள் ஒன்றுபட்டு நின்று நமது பலத்தை வெளிப்படுத்த வேண்டும்" என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறினார். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்தை மூடக் கோரி ஓராண்டுக்கு மேலாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில், கூடங்குளம் அணு உலையை மூடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அணுஉலை இயக்குவதற்கு உச்ச நீதிமன்றம் பச்சை கொடி காட்டியது. இதைத் தொடர்ந்து, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு உவரியில் மீனவ அமைப்புகள் மற்றும் பொதுமக்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில், அடுத்தகட…
-
- 0 replies
- 900 views
-
-
போலீஸ் ஸ்டேஷனில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்ததாக கடமலைக் குண்டு இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.தேனி பெரியகுளம் வடகரையை சேர்ந்தவர் ரமா (27, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி ஒரு வழக்கு விசாரணைக்காக கடமலைகுண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட் டார். அன்று இரவில் ஸ்டேஷனில் ரமாவை பாலியல் பலாத்காரம் செய்ததாக இன்ஸ்பெக்டர் இமானுவேல் ராஜ்குமார், எஸ்ஐ அமுதன் ஆகியோர் மீது புகார் கூறப்பட்டது. பின்னர் திருட்டு வழக்கில் போலீசார் ரமாவை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும், வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்கவும் உத்தரவிடக்கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் ரமா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக…
-
- 0 replies
- 610 views
-
-
புதன், 22 மே 2013 மரக்காணம் கலவரம் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராக செயல்பட்டதாக நாங்கள் நினைக்கவில்லை, உணரவில்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். வன்முறையில் ஈடுபடும் அரசியல் கட்சிகளை தடை செய்யவும், ஒடுக்கவும் இந்த அரசு தயங்காது என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி பா.ம.க. நிறுவனர் ராமதாசை விடுதலை செய்ய வேண்டும் என்று அப்போது கூறினார். மேலும் மரக்காணம் கலவரம் தொடர்பாக கருணாநிதி கண்டன அறிக்கை எதுவும் விடாதது விடுதலை சிறுத்தைகள் தரப்பில் அதிருப்தி ஏற்பட்டது. இது குறித்து திருமாவளவன் கூறுகையில்: ஆளுங்கட்சியை விமர்சிப்பது எதிர்கட்சியின் கடமை. அந்த அடிப்படையில…
-
- 3 replies
- 798 views
-
-
புதன், 22 மே 2013 கர்நாடக மாநிலத்தில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் காவிரிப் பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் இழைப்பதே வாடிக்கை ஆகி விட்டது. காவிரிப் பிரச்சனையில் ஒன்றுபட்டுக் குரல் எழுப்புவோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், கர்நாடக மாநிலத்தில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் காவிரிப் பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் இழைப்பதே வாடிக்கை ஆகி விட்டது. கர்நாடகத்தில் புதிய முதல்வராகப் பதவி ஏற்று உள்ள சித்தராமையாவும் இதற்கு விதி விலக்கு அல்ல. தமிழ்நாட்டுக்குக் காவிரி நீரைத் திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்திரவைச் செயல்படுத்த, பாஜக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் முயன்றபோது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சித…
-
- 0 replies
- 416 views
-
-
காஞ்சிபுரம்: கல்பாக்கத்தில் இனிமேல் புதிய அணுஉலை திறக்கக்கூடாது என ஏற்படுத்தப்பட்டுள்ள கையெழுத்து இயக்கத்தில் சமூக ஆர்வலர் மேதா பட்கர் இன்று கையெழுத்திட்டார். சுமார் 30 வருடமாக கல்பாக்கத்தில் அணுஉலை இயங்கி வருகிறது. 2 அணுஉலைகள் இயங்கி வரும் நிலையில் தற்போது மேலும் 'பாவினி' என்ற ஒரு அணுஉலையை கட்டி வருகிறார்கள். இந்த அணுஉலையைத் தொடர்ந்து, மேலும் புதிய அணுஉலைகள் கட்டக்கூடாது எனக்கூறியும், கல்பாக்கத்தைச் சுற்றி சதுரங்கபட்டினம், புதுப்பட்டினம், வெங்கம்பாக்கம், குன்னத்தூர், மனமை, நல்லாத்தூர், வாயலூர், கொக்கிலமேடு போன்ற சுமார் 16 கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். அணுஉலைக்கு சொந்தமான பள்ளிகளில் இடம் வழங்க வேண்டும். வேலைவாய்ப்பில் சுற்றுவட்டா…
-
- 0 replies
- 449 views
-
-
மதுரை ரயில்வே நிலையம் அருகே விக்டோரியா ராணியால் உருவாக்கப்பட்ட எட்வர்டு மன்றத்தில், அரசு ஊழியர் மற்றும் வழக்கறிஞர்களும் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இந்த மன்றத்தின் தலைவர் மாவட்ட ஆட்சியர். கடந்த சில ஆண்டு சில ஆண்டுகளாக இந்த மன்றத்தில் சிலர் மதுபானம் அருந்துவதாக மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலத்துக்கு புகார்கள் குவிந்தன. இந்த நிலையில் 22.05.2013 புதன்கிழமை இரவு 50க்கும் மேற்பட்ட போலீசார் மன்றத்தை சுற்றி வளைத்தனர். உள்ளே மது அருந்தியதாகவும், மது அருந்தும் கூடம் அனுமதியின்றி வைத்திருந்தாகவும் 41 பேரை பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவருமே மத்திய மாநில அரசு ஊழியர்கள், வழக்கறிஞர், காவல்துறை அதிகாரிகளாவர். முன்னாள் மதுரை காவல்துறை உதவி கண்காண…
-
- 0 replies
- 388 views
-
-
இந்தியாவில் பிணை வழங்கப்பட்ட ஒரு பெண் கைதி, சிறையிலிருந்து 19 ஆண்டுகளுக்குப் பின்னரே விடுதலை செய்யப்பட்ட நிகழ்ச்சி குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர். வட இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட விஜய் குமார் என்ற பெண், கர்ப்பமாயிருந்த நிலையில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். தான் குற்றமற்றவர், தவறாகக் குற்றம் சாட்டப்பட்டவர் என்று கூறியிருந்தார். அவரது கணவர் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு செய்திருந்தார். ஆனால் அவரது மனைவிக்கு ஒரு சிறிய ஜாமின் தொகை கட்டி பிணையில் வெளியில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் இந்தத் தொகை கட்டப்படவில்லை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். விஜய் குமார் இதற்கிடைய…
-
- 0 replies
- 318 views
-
-
அரக்கோணம்: திருவாலங்காடு ரயில் நிலையத்தில், சிவப்பு சிக்னலை கவனிக்காமல் சென்ற அரக்கோணம் மின்சார ரயில் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று பகல் அரக்கோணம் சென்ற மின்சார ரயில், திருவாலங்காடு ரயில் நிலையத்தில் நின்றது. அப்போது அதில் இருந்த பயணிகள் இறங்கினர். அந்த சமயத்தில் அங்கு சிவப்பு சிக்னல் இருந்துள்ளது. ஆனால் இதனை கவனிக்காத ஓட்டுனர், பயணிகள் இறங்கியதும் வழக்கம்போல் ரயிலை இயக்கி கொண்டு சென்றுள்ளார். இதனையடுத்து பதறிப்போன அந்த ரயில் நிலைய கார்ட் தகவல் அளித்ததும், ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த பாதையில் சிறிது நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே இது தொடர்பாக அந்த ரயில் ஓட்டுந…
-
- 1 reply
- 525 views
-
-
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு 10 நாட்களுக்கு முன்னதாகவே, மைசூரில் அவரை கொல்ல சதி முயற்சி நடந்ததாக கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா கூறினார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 22ம் ஆண்டு நினைவு நாள் நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, மைசூரில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா பேசியதாவது:- 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்னதாக மைசூரிலேயே அவரை கொல்ல சதி நடந்தது. பாராளுமன்ற தேர்தலுக்காக மைசூரில் அவர் பிரசாரம் செய்ய வந்தார். லலித் மஹால் பகுதியில் அவரது கார் சென்றுக் கொண்டிருந்தபோது, யாரு…
-
- 0 replies
- 668 views
-
-
இந்தியாவின் தமிழக மாநிலத்தில், இலங்கையர் ஒருவர் குடும்ப உறுப்பினர்கள் மூன்று பேரை கொலை செய்து, தாமும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தாய், மனைவி மற்றும் மகளை இவ்வாறு குறித்த இலங்கையர் கொடூராமன முறையில் படுகொலை செய்துள்ளார். மூன்று பெண்களும் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 48 வயதான சீ.சுந்தரேசன் என்பவரே இவ்வாறு மூன்று பேரைக் கொலை செய்து தாமும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 30 ஆண்டுகளுக்கு முன்னர் குறித்த நபர் சென்னைக்கு சென்றிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடன் தொல்லை காரணமாக இவ்வாறு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tab…
-
- 1 reply
- 488 views
-
-
ஐ.பி.எல். கிரிக்கெட் ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டம் தொடர்பாக டெல்லி போலீசார் நேற்று மேலும் 3 பேரை கைது செய்தனர். அவர்களில் அஜித் சண்டிலாவுடன் நெருங்கிய தொடர்புள்ள மணிஷ் குதேவாவும் ஒருவர். மணிஷ் குதேவா, 2003-2005ல் ரஞ்சி கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர். நாக்பூரை சேர்ந்த சுனில் பாட்டியா, கிரண்டோலே ஆகிய தரகர்களும் இவர்களுடன் கைதாகினர். அஜித் சண்டிலா ஒரே நேரத்தில் 4 தரகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக டெல்லி போலீசார் கூறினர். சூதாட்ட தரகர்களுடன் ஐ.பி.எல். வீரர்கள் நடத்திய சுமார் 100 மணிநேர செல்போன் உரையாடல்களை இடைமறித்து ஒட்டு கேட்டதன் மூலமாக இவ்விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததாகவும் போலீசார் கூறினர். மேலும், மும்பை, சண்டிகர், கொல்கத்தா, ஐதராபாத் போன்ற நகரங்களில் உள்ள ஓட்டல்களில…
-
- 0 replies
- 433 views
-
-
கடலூரில் தடையை மீறி கருத்தரங்கம் நடத்தி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடலூரில் இன எழுச்சிக் கருத்தரங்கம், பேரணி, பொதுக்கூட்டம் நடத்த போவதாக நாம் தமிழர் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பேரணி நடத்த சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. பொதுக் கூட்டம் நடத்த சில நிபந்தனைகளை விதித்தது. அந்த நிபந்தனைகளை மீறி தடை செய்யப்பட்ட இயக்க தலைவர் பிரபாகரன் படம் போட்டு டிஜிட்டல் பேனர்களை நாம் தமிழர் கட்சியினர் வைத்ததால் பொதுக்கூட்டத்துக்கு போலீசார் தடை விதித்தனர். இதையடுத்து கருத்தரங்கம் மட்டும் கடலூர் டி.வி.எம். திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் காலையில் நடந்தது. ஆனால…
-
- 1 reply
- 772 views
-
-
கடலூரில் சீமான் தலைமையில் நடந்த கூட்டத்தில் போலீசாருக்கும் நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்கும் இடையே தள்ளு- முள்ளு ஏற்பட்டது. கடலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்கும் இன எழுச்சி கருத்தரங்கம், பேரணி-பொதுக்கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பேரணி நடத்த சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. பொதுக்கூட்டம் நடத்த சில நிபந்தனைகளை விதித்தது. இந்த நிலையில் நேற்று காலை கடலூர் டி.வி.எம். திருமண மண்டபத்தில் கருத்தரங்கு நடந்தது. இதில் கலந்து கொண்ட சீமான் அதே இடத்திலேயே திட்டமிட்டபடி இரவு 10 மணி வரை பொதுக்கூட்டம் நடக்கும் என்று கூறினார். ஆனால் கூட்டத்தை விரைந்து முடித்துவிட வேண்டும் என்று போலீசார் கூறினார்கள். அதையடுத்து …
-
- 0 replies
- 436 views
-