தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10250 topics in this forum
-
அரக்கோணம்: திருவாலங்காடு ரயில் நிலையத்தில், சிவப்பு சிக்னலை கவனிக்காமல் சென்ற அரக்கோணம் மின்சார ரயில் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று பகல் அரக்கோணம் சென்ற மின்சார ரயில், திருவாலங்காடு ரயில் நிலையத்தில் நின்றது. அப்போது அதில் இருந்த பயணிகள் இறங்கினர். அந்த சமயத்தில் அங்கு சிவப்பு சிக்னல் இருந்துள்ளது. ஆனால் இதனை கவனிக்காத ஓட்டுனர், பயணிகள் இறங்கியதும் வழக்கம்போல் ரயிலை இயக்கி கொண்டு சென்றுள்ளார். இதனையடுத்து பதறிப்போன அந்த ரயில் நிலைய கார்ட் தகவல் அளித்ததும், ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த பாதையில் சிறிது நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே இது தொடர்பாக அந்த ரயில் ஓட்டுந…
-
- 1 reply
- 525 views
-
-
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு 10 நாட்களுக்கு முன்னதாகவே, மைசூரில் அவரை கொல்ல சதி முயற்சி நடந்ததாக கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா கூறினார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 22ம் ஆண்டு நினைவு நாள் நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, மைசூரில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா பேசியதாவது:- 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்னதாக மைசூரிலேயே அவரை கொல்ல சதி நடந்தது. பாராளுமன்ற தேர்தலுக்காக மைசூரில் அவர் பிரசாரம் செய்ய வந்தார். லலித் மஹால் பகுதியில் அவரது கார் சென்றுக் கொண்டிருந்தபோது, யாரு…
-
- 0 replies
- 668 views
-
-
இந்தியாவின் தமிழக மாநிலத்தில், இலங்கையர் ஒருவர் குடும்ப உறுப்பினர்கள் மூன்று பேரை கொலை செய்து, தாமும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தாய், மனைவி மற்றும் மகளை இவ்வாறு குறித்த இலங்கையர் கொடூராமன முறையில் படுகொலை செய்துள்ளார். மூன்று பெண்களும் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 48 வயதான சீ.சுந்தரேசன் என்பவரே இவ்வாறு மூன்று பேரைக் கொலை செய்து தாமும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 30 ஆண்டுகளுக்கு முன்னர் குறித்த நபர் சென்னைக்கு சென்றிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடன் தொல்லை காரணமாக இவ்வாறு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tab…
-
- 1 reply
- 488 views
-
-
கடலூரில் தடையை மீறி கருத்தரங்கம் நடத்தி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடலூரில் இன எழுச்சிக் கருத்தரங்கம், பேரணி, பொதுக்கூட்டம் நடத்த போவதாக நாம் தமிழர் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பேரணி நடத்த சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. பொதுக் கூட்டம் நடத்த சில நிபந்தனைகளை விதித்தது. அந்த நிபந்தனைகளை மீறி தடை செய்யப்பட்ட இயக்க தலைவர் பிரபாகரன் படம் போட்டு டிஜிட்டல் பேனர்களை நாம் தமிழர் கட்சியினர் வைத்ததால் பொதுக்கூட்டத்துக்கு போலீசார் தடை விதித்தனர். இதையடுத்து கருத்தரங்கம் மட்டும் கடலூர் டி.வி.எம். திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் காலையில் நடந்தது. ஆனால…
-
- 1 reply
- 772 views
-
-
ஐ.பி.எல். கிரிக்கெட் ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டம் தொடர்பாக டெல்லி போலீசார் நேற்று மேலும் 3 பேரை கைது செய்தனர். அவர்களில் அஜித் சண்டிலாவுடன் நெருங்கிய தொடர்புள்ள மணிஷ் குதேவாவும் ஒருவர். மணிஷ் குதேவா, 2003-2005ல் ரஞ்சி கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர். நாக்பூரை சேர்ந்த சுனில் பாட்டியா, கிரண்டோலே ஆகிய தரகர்களும் இவர்களுடன் கைதாகினர். அஜித் சண்டிலா ஒரே நேரத்தில் 4 தரகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக டெல்லி போலீசார் கூறினர். சூதாட்ட தரகர்களுடன் ஐ.பி.எல். வீரர்கள் நடத்திய சுமார் 100 மணிநேர செல்போன் உரையாடல்களை இடைமறித்து ஒட்டு கேட்டதன் மூலமாக இவ்விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததாகவும் போலீசார் கூறினர். மேலும், மும்பை, சண்டிகர், கொல்கத்தா, ஐதராபாத் போன்ற நகரங்களில் உள்ள ஓட்டல்களில…
-
- 0 replies
- 433 views
-
-
நாம் தமிழர் கட்சி சார்பில் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று (சனிக்கிழமை) இலங்கை முள்ளிவாய்க்கால் நினைவு தின கருத்தரங்கு, பேரணி மற்றும் பொதுக்கூட்டம் கடலூரில் நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. பேரணியின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்று கருதிய கடலூர் புதுநகர் போலீசார் இந்த பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பேரணிக்கு தடை விதித்து உத்தரவிட்டார். இந்த நிலையில் கட்சி நிர்வாகிகள் கடலூர் நகரின் முக்கிய இடங்களில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் மறைந்த பிரபாகரன் மற்றும் சீமான் ஆகியோர் படத்தை அச்சிட்டு 20 இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைத்தனர். இதை அறிந்த கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்த…
-
- 13 replies
- 896 views
-
-
கடலூரில் சீமான் தலைமையில் நடந்த கூட்டத்தில் போலீசாருக்கும் நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்கும் இடையே தள்ளு- முள்ளு ஏற்பட்டது. கடலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்கும் இன எழுச்சி கருத்தரங்கம், பேரணி-பொதுக்கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பேரணி நடத்த சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. பொதுக்கூட்டம் நடத்த சில நிபந்தனைகளை விதித்தது. இந்த நிலையில் நேற்று காலை கடலூர் டி.வி.எம். திருமண மண்டபத்தில் கருத்தரங்கு நடந்தது. இதில் கலந்து கொண்ட சீமான் அதே இடத்திலேயே திட்டமிட்டபடி இரவு 10 மணி வரை பொதுக்கூட்டம் நடக்கும் என்று கூறினார். ஆனால் கூட்டத்தை விரைந்து முடித்துவிட வேண்டும் என்று போலீசார் கூறினார்கள். அதையடுத்து …
-
- 0 replies
- 436 views
-
-
இலங்கை இனப்படுகொலையின் 4ஆம் ஆண்டு நினைவு: சேலம் மாணவர்கள் அனுசரிப்பு சேலம்: இலங்கை, முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலையின் 4ஆம் ஆண்டை நினைவு கூறும் வகையில் இன்று சேலம் அரசு கலைக்கல்லூரி மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் அரசு கலைக்கல்லூரி நுழைவாயிலில் நினைவு அஞ்சலி செலுத்தினார்கள். சேலம் தமிழ் ஈழத்திற்கான மாணவர் போராட்டக்குழுவினர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே இலங்கை, முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலையின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில், சேலம் கலைக்கல்லூரியிலிருந்து, போஸ் மைதானம் வரை ஊர்வலமாக வருவதற்காக சேலம் மாநகர காவல்துறையில் அனுமதி பெற்று அறிவிப்பு வெளியிட்டார்கள். ஆனால், திடீரென்று நேற்று காவல்துறை அனுமதியை ரத்து …
-
- 0 replies
- 438 views
-
-
16th May 2013 சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தி.மு.க. சார்பில் நேற்று தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டம் நடந்தது. சென்னை தங்கசாலை அருகில் நடந்த கூட்டத்துக்கு தி.மு.க. வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியதாவது:- சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெறுகிற இந்த எழுச்சி நாள் பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கிலே குழுமி உள்ள உங்களை காண்பதிலும், நீங்கள் அளிக்கின்ற உற்சாகமான ஆதரவை காண்பதிலும் நான் மிகுந்த மகிழ்ச்சியும் நம்பிக்கையும் பெறுகின்றேன். சேது சமுத்திர திட்டம் வருவதால் யாருக்கு என்ன பயன், திட்டத்தின் பலன் என்ன? பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை கிடைக்கும். இப்படி நடந்தால…
-
- 1 reply
- 355 views
-
-
15th May 2013 விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது கிச்சநாயக்கன்பட்டி. இங்கு மீனாட்சி பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இங்கு சுற்று பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர். ஒரு அறையில் தொழிலாளர்கள் பென்சில் வெடிக்கு முனை மருந்து தடவி கொண்டு இருந்தனர். அப்போது திடீர் என்று பட்டாசில் தீப்பிடித்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த அறையில் இருந்த பட்டாசுகள் வெடித்து தீப்பிடித்தது. அப்போது காற்று வேகமாக வீசியதால் தீ அருகில் இருந்த மேலும் 2 அறைகளுக்கும் பரவியது. அங்கு குவிக்கப்பட்டு இருந்த பட்டாசுகளும் வெடித்தன. பட்டாசுகள் தொடர்ந்து வெடிப்பதால் 3 அறைகளிலும் தீ கொளுந்து விட்டு எரிகிறது. …
-
- 0 replies
- 468 views
-
-
13th May 2013 திருவாரூர் கொரடாச்சேரி பகுதியில் உள்ள பிஎம்எச் காலனியைச் சேர்ந்தவர்களான மதன் (23). ராஜா ஸ்ரீதர் (19) ஆகிய சகோதரர்கள் இருவரை முன்விரோதம் காரணமாக இதே பகுதியை சேர்ந்த ஹாஜி முகம்மது தலைமையிலான கும்பல் கொடூரமாக வெட்டியது. இருசக்கர வாகன பழுது பார்ப்பில் ஏற்பட்ட சண்டை காரணமாக விரோதம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் மிதந்த இருவரையும் திருவாரூர் அரசு பொது மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் இருவரும் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டனர். இந்த சம்பவம் நள்ளிரவு ஒரு மணி அளவில் நடந்துள்ளது. இந்த இச்சம்பவம் குறித்து கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். விசாரணையில் இறந்த ஒருவர் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஆவார். h…
-
- 0 replies
- 512 views
-
-
கோவை: வணிக வளாகம் கட்ட ரூ20 லட்சம் செலவில் 35 அடி தூரம் செயற்கையாக நகர்த்தப்பட்ட வீடு. கோவை: கோவையில் பெரிய பங்களா வீட்டை பாதியாக பிரித்து, அதில் ஒரு பாதியை 35 அடி தூரத்திற்கு நகர்த்தி தனியார் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. கோவை, சாய்பாபா காலனியில் உள்ள மூன்று தலைமுறை பழமையான மாடி வீடொன்று அதன் உள்ளே உள்ள அனைத்து பொருட்களுடனும் 35 அடி தூரம் நகர்த்தி வைக்கப்பட்டது. வீட்டை நகர்த்தும் இம்முயற்சியை ஹரியானாவைச் சேர்ந்த கட்டுமானக் கம்பெனி ஒன்று வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. இது குறித்து அவ்வீட்டின் உரிமையாளரின் தந்தை ஆறுச்சாமி கூறியதாவது, ‘ கோவை மேட்டுப்பாளையம் சாலையில் எனது மகன் தங்கவேலுக்கு சொந்தமாக 2400 சதுர அடி பரப்பளவில் முதல் தளத்துடன் கூடிய வீடு உள்ளது. கடந…
-
- 1 reply
- 677 views
-
-
சென்னை: "சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்த் தாய் சிலை அமைக்கப்படும்" என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது: திராவிட மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாகவும், சீரிளமை குன்றாத மொழியாகவும், வளமையும் தூய்மையும் மிக்க மொழியாகவும், மொழிக்கு மட்டுமல்லாமல் வாழும் நெறிக்கும் இலக்கணம் வகுத்த மொழியாகவும், உலக மொழிகள் அனைத்திலும் தொன்மை மிக்க மொழியாகவும் விளங்குகின்ற தமிழ் மொழிக்கு பெருமை சேர்ப்பதிலும், அதனை உலகெங்கும் பரப்புவதிலும் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பெருமை வாய்ந்த தமிழ் மொழியை சிறப்பிக்கும் வண்ணம், …
-
- 8 replies
- 863 views
-
-
முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்த மலிவு விலை உணவக திட்டத்தில், கூடுதலாக பொங்கல் சாம்பார் 5 ரூபாய்க்கும், மதிய உணவின் போது எலுமிச்சை சாதம் அல்லது கருவேப்பிலை சாதம் 5 ரூபாய்க்கும், மாலை வேளைகளில் இரண்டு சப்பாத்தி மற்றும் பருப்பு கடைசல் அல்லது குருமா 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்ட சபையில் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருப்பதாவது, வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மலிவு விலையில் வயிறார உணவு உண்ணும் வகையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் மலிவு விலை உணவகங்களை நான் திறந்து வைத்துள்ளேன் என்பதை மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.…
-
- 0 replies
- 513 views
-
-
இந்தியப் பெருங்கடலின் மீதான மூலோபாய கவனிப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தென்னிந்தியாவில் தனது அதிசக்தி வாய்ந்த சுகோய் போர் விமானங்களை நிறுத்தும் திட்டத்தை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. வரும் 27ம் நாள் தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூரில், புதிய விமானத்தளத்தை இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி திறந்து வைக்கவுள்ளார். சுகோய் போர் விமான அணி ஒன்றின் (ஸ்குவாட்ரன்) உறைவிடமாக அமையவுள்ள இந்தத் தளத்தில், விமானத் தரிப்பிடங்கள், எரிபொருள் குதங்கள், உள்ளிட்ட எல்லா உட்கட்டமைப்பு வசதிகளும் அடுத்த சில ஆண்டுகளில் செய்யப்படவுள்ளன. இந்த அணியில் சுமார் 16 தொடக்கம் 18 வரையான சுகோய் போர் விமானங்கள் இடம்பெறவுள்ளன. தஞ்சாவூர் ஓடுதளம் அமைக்கப்பட்டதில் இருந்து வழக்கமான போர் விமானங்கள் ம…
-
- 6 replies
- 833 views
-
-
2000வது ஆண்டில் பிளஸன்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தருமபுரியில் வன்முறையில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் பேருந்துக்கு தீவைத்து 3 மாணவிகளை உயிருடன் எரித்துக் கொன்றனர். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே அடக்குமுறைகள் அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட வரலாறு ஆகும். எதிர்க்கட்சிகள், அரசு ஊழியர்கள், ஊடகத்துறையினர் உள்ளிட்ட அனைவரும் இத்தகைய அடக்கு முறைகளுக்கு ஆளாகியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, பா.ம.க. மீது பழிபோட்டு, அது ஒரு வன்முறைக்கட்சி என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 14.05.2013 செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கைய…
-
- 1 reply
- 534 views
-
-
தமிழ்நாடு என்றதும் அதன் வரலாறு, பழமையான கோயில்கள், வானளாவிய கோபுரங்கள், மசூதிகள், தேவாலயங்கள் அரண்மனைகள், கோட்டைகள் என அதன் பழமையும் பெருமையும் நினைவுக்கு வந்தாலும், அவற்றை எல்லாம் விட்டு,தமிழ்நாட்டைக் கேலி செய்ய விரும்புகிறவர்கள், அதிலும் குறிப்பாக சிங்களவர்கள் தமது கையில் எடுக்கும் ஆயுதம் இந்திய நகரங்கள் எல்லாவற்றிலும் காணப்படும் அழுக்கு, குப்பை, கண்ட இடத்திலும் காணப்படும் மலம், சிறுநீர் கழிவுகளைத் தான். தமிழ்நாட்டின் நவீன கட்டிடங்கள் கூட துப்புரவாக இருப்பதில்லை, கட்டப்பட்டு முதல் சில மாதங்கள் துப்புரவாக அழகாக இருக்கும் அதன் பின்னால் பழைய குருடி கதவைத் திறவடி தான். அதற்கென்று துப்ப…
-
- 8 replies
- 1.9k views
-
-
இந்தியாவில் எந்தவொரு அரசியல் கட்சி மீதும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே உண்டு, அரசுகளுக்கு அல்ல என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். சட்டமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, பொது அமைதியைக் காக்கவேண்டி பாமகவைத் தடை செய்யவும் தனது அரசு தயங்காது என எச்சரித்திருந்தார், ராமதாஸின் கைதிற்குப் பின்னர் பாமக பல்வேறு வன்முறைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ராமதாஸ், பேருந்துகள் மீதான கல்வீச்சு, பெட்ரோல் குண்டு வீச்சு, பொதுச் சொத்துக்களையும் தனியார் சொத்துக்களையும் சேதப்படுத்தல், மரங்களை வெட்டிச் சாய்த்தல் …
-
- 0 replies
- 318 views
-
-
மே -17, 2009 : இன அழிப்புப் போரில் உயிர் நீத்த அனைத்து ஈழத் தமிழருக்கும் எமது நினைவஞ்சலி! இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்சே கும்பலை தண்டிக்க நூரம்பர்க் போன்ற போர்க்குற்ற விசாரணைக்கு குறைவாக எதையும் ஏற்க மறுப்போம்! மே 17, 2013 அன்று தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் சென்னையில் இடம்: வள்ளுவர்கோட்டம், நேரம் : காலை 11 மணி மாணவர்களே அணிதிரண்டு வாரீர்! அன்பார்ந்த மாணவர்களே – உழைக்கும் மக்களே! 2009 மே 17 -ல் ஈழ விடுதலைப் போர் மிகக் கொடிய பேரழிவைச் சந்தித்துக் கசப்பானதொரு முடிவை எட்டியது. முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிகட்டப்போரில் மே 17-ம் தேதி விடுதலைப்புலிகளின் அமைப்பு ஏறத்தாழ அழித்தொழிக்கப்பட்டது. இதோடு சேர்த்து மே-18,19 தேதிகளில் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களும்…
-
- 0 replies
- 1k views
-
-
சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட உள்நாட்டுமுனைய மேற்கூரை இடிந்து விழுந்தது.சென்னையில் நேற்று இரவு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்நிலையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கடந்தமாதம் திறக்கப்பட்ட உள்நாட்டு முனையத்தின் மேற்கூரை இன்று அதிகாலை 4 மணிக்கு இடிந்து விழுந்தது. அந்த நேரம் எந்த விமானமும் தரையிறங்காததால், புறப்படாததால் பயணிகள் தப்பினர். ஆனால் ஒப்பந்த தொழிலாளர்கள் 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்த விபத்தை அடுத்து ஹெச்1 மற்றும் ஹெச்2 நுழைவாயில்கள் மூடப்பட்டுள்ளன. மேற்கூரை இடிந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக விமான நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். http://seithy.com/breifNews.php?newsID=82591&am…
-
- 3 replies
- 425 views
-
-
கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு எதிராக மே 15ல் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மீனவர்கள் ஸ்டிரைக் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் படகில் சென்று மீனவ கிராமங்களில் ஆதரவு திரட்டி வருகிறார். இதற்கிடையே இடிந்தகரையில் தாமஸ் மண்டபம் அருகே இன்று திடீரென போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு எதிராக 2 ஆண்டுகளுக்கும் மேலாக இடிந்தகரை மற்றும் சுற் றுப்புற கிராம மக்கள் போராடி வருகின்றனர். கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில் கூடங்குளம் அணுமின்நிலையம் இயங்குவதற்கு தடை யில்லை என்று அறிவித் தது. இதையடுத்து இன் னும் ஓரிரு வாரங்களில் கூடங்குளத்தில் அணுமின்உற்பத்தி நடைபெறும் …
-
- 0 replies
- 541 views
-
-
திருச்சி மத்திய சிறை வாசலில் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மாமல்லபுரத்தில் முறையான அனுமதி பெற்று விழாவை நடத்தினோம். ஆனால் விடுதலை சிறுத்தை கட்சியினர் குண்டர்கள் ஆதரவோடு திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தினர். விழாவிற்கு வந்த 4 ஆயிரம் வாகனங்களை திருப்பி அனுப்பினர். 100-க்கும் மேற்பட்ட வாகனங்களை கல்வீசி தாக்கினர். இதற்கு போலீசும் உடந்தை. பா.ம.க.வினருக்கோ, வன்னியர்களுக்கோ இதில் எந்தவித சம்மந்தமும் இல்லை. இதைகண்டித்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த சென்றேன். அங்கு சென்ற பிறகுதான் போலீசார் இங்கு பேசக்கூடாது என்று தடுத்து கைது செய்தனர். டெல்லியில் பிரதமர் வீட்டு முன்பும், சோனியா வீட்டு முன்பும், மந்திரிகள் வீட்டு முன்பும் அணுமதி இ…
-
- 0 replies
- 1.4k views
-
-
மரக்காணம் கலவரம் தொடர்பாக விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த வழக்கில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி உள்பட ஏராளமானோரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கு, ரஜினி ரசிகர்கள் தாக்கப்பட்ட வழக்கு உள்பட 5 வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாசுக்கு ஏற்கனவே நான்கு வழக்குகளில் ஜாமீன் கிடைத்துவிட்ட நிலையில் இன்று மற்றொரு வழக்கிலும் நெல்லை மாவட்டம் வள்ளியூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதற்கான கோர்ட்டு உத்தரவு இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் திருச்சி மத்திய சிறையில் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது மகன் அ…
-
- 0 replies
- 546 views
-
-
கச்சதீவு அருகே, இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு இலக்கானதில் தொண்டி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொண்டி அருகே நம்புதாளை படையாச்சி தெருவை சேர்ந்த மீனவர்கள் ஆறு பேர், கடந்த சில தினங்களுக்கு முன்பு, கச்சதீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ஆறு பேரையும் தாக்கியதோடு அவர்களின் மீன்பிடிவலைகளையும் சேதப்படுத்தி, பிடித்து வைத்திருந்த மீன்களையும் கடலில் வீசினர். இந்த சம்பவத்தில், மீனவர் காந்தியின் கை எலும்பு முறிவு ஏற்பட்டு புதுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மீனவர்கள் கூறுகையில், ``இலங்கை கடற்படை எங்களை தரக்குறைவாக பேசி தாக்குகிறது. கச்சதீவ…
-
- 1 reply
- 453 views
-
-
கும்பகோணத்தில் பார்வையற்ற மாணவர் சாதனை கும்பகோணத்தில் பார்வையற்ற மாணவர் ஒருவர் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 1200-க்கு 1121 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். கும்பகோணம் சிறியமலர் மேனிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் ராமகோபாலன் பள்ளி அளவில் முதலிடமும், மாற்றுத்திறனாளிகள் வரிசையில் மாவட்டத்தில் முதலிடமும் பிடித்துள்ளார். இவர் தமிழில் 177 மதிப்பெண்கள் உட்பட மொத்தம் 1121 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ராமகோபாலன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விலும் 500க்கு 465 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று, நாட்டு மக்களுக்கு ஊழல் அற்ற நிர்வாகம் மூலம் சிறப்பான பணி செய்வதே தமது லட்சியம் என்கிறார் இராமகோபாலன். ht…
-
- 0 replies
- 363 views
-