Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சென்னை: புகையிலையால் ஏற்படும் பல்வேறு வகையான புற்று நோய்களைத் தடுக்கும் வண்ணம், குட்கா, பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலைப் பொருட்களைத் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விநியோகம் செய்யவும், விற்கவும் தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப் பேரவை விதி 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில், "புகையிலை மற்றும் புகையிலைப் பொருட்கள் ஏற்படுத்தும் புற்று நோய்களை தடுக்கும் நோக்கத்துடன் மத்திய அரசின் உணவு கலப்படத் தடைச் சட்டம் Prevention of Food Adulteration Act 1954-ன் கீழ், மெல்லும் வகை புகையிலைப் பொருட்களை 19.11.2001 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு எனது அரசு தடை செய்து, அறிவிக்க…

  2. றைமலைநகர் அடிகளார் சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட அலுவலகம் உள்ளது. நேற்று நள்ளிரவு வந்த மர்ம கும்பல் கீற்று கொட்டகையிலான கட்சி அலுவல கத்திற்கு தீ வைத்து தப்பி ஓடி விட்டனர். காற்றின் வேகத்தில் தீ மளமளவென கொட்டகை முழுவதும் பரவி பற்றி எரிந்தது. தகவல் அறிந்ததும் மறைமலைநகர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் அலுவலகத்தில் இருந்த மேஜை, நாற்காலி, பேனர்கள் எரிந்து நாசமானது. கட்சி அலுவலகம் தீவைத்து எரிக்கப்பட்டது பற்றி அறிந்ததும் ஏராளமான விடுதலை சிறுத்தை பிரமுகர்கள் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. டி.எஸ்.பி. குமார், இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசி கட்சி அலுவலகத்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள்…

    • 0 replies
    • 336 views
  3. ம.தி.மு.க.வின் இருபதாம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் டாக்டர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது:- இந்த இயக்கம் கடந்த 19 ஆண்டுகளாக கடந்து வந்துள்ள பாதையை நினைத்து பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. நமக்கு உரிய இடத்தை தமிழக மக்கள் தந்துள்ளனர். தமிழக மக்கள் நம்மை அக்னி பரீட்சை கொண்டு பார்த்துள்ளனர். இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு பல துயர சம்பவங்கள், இழப்புகள் மற்றும் அடிகளை சந்தித்து வந்துள்ளது. தமிழகம் கொடிய வறட்சியின் பிடியில் இருக்கிறது. இது அழிவை தரக்கூடியது என்று ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு கூறுகிறது. தமிழகத்தில் காவிரி நீரை இ…

    • 0 replies
    • 344 views
  4. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:- மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் இணைந்து நடத்திய கூட்டத்தில், பா.ம.க. நிறுவனர் ராமதாசும், அக்கட்சியின் முன்னணித் தலைவர்களும் ஆற்றிய உரைகளும், அக்கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்களுக்கும், வழியே இருந்த தாழ்த்தப்பட்டோர் கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே நடந்த மோதலும், அது தொடர்பாக விசாரணை கோரி போராட்டத்தில் ஈடுபட்டபோது மருத்துவர் ராமதாஸ், பா.ம.க.தலைவர் கோ.க. மணி உள்ளிட்ட 400 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்துவரும் வன்முறை நிகழ்வுகளும் மிகுந்த கவலையளிக்கிறது. மாமல்லபுரம் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் இடையிலான வன்மு…

  5. நீங்க சொல்லுங்க விஜயகாந்த்

    • 0 replies
    • 776 views
  6. கூடங்குளம் வழக்கு, மதுரை ரஜினி ரசிகர்களை தாக்கிய வழக்கு உட்பட பழைய வழக்குகளெல்லாம் தூசி தட்டப்பட்டு ராமதாஸ் மீது போடப்படுவது, விழுப்புரம் நீதிமன்றம் வழங்கிய பிணையை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றம் சென்றது குறித்தெல்லம் பலருக்கும் பல கேள்விகள் இருக்கின்றன. பாமக கும்பல் கூடிய சீக்கிரத்தில் வெளியே வரக்கூடாது என்று ஜெயலலிதா இவ்வளவு தீவிரமாக இருப்பதற்கு காரணம் என்ன? மாமல்லபுரம் வன்னியர் சங்க கூட்டத்தில் நடந்த நாடகமொன்றில் ஜெயா, சசிகலா வேடமிட்டவர்கள் பேசிய பேச்சுதான் ஜெயாவின் கோபத்திற்கு முக்கிய காரணம் என்று சில ஊடகங்கள் எழுதுகின்றன. அப்படி கோபப்படும்படி அந்த நாடகத்தில் ஏதுமில்லை என்பதே உண்மை. அரசியலிலும், அறிக்கையிலும் கூட ஜெயலலிதாவை நேரடியாக கண்டிக்க முடியாதவர்கள் நாடக…

  7. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் காருக்கு முன்பு சட்டையைக் கழற்றி தனது கோரிக்கையை வலியுறுத்தி போராட முயன்ற நபரை பொலிஸார் மடக்கிப் பிடித்து அப்புறப்படுத்தினர். நேற்று முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டசபை கூட்டத்தை முடித்துக் கொண்டு கிளம்பினார். தலைமைச் செயலக வளாகத்தில் அப்போது முதல்வரிடம் மனு கொடுக்க பலர் காத்திருந்தனர். அவர்களை கயிறு கட்டி பொலிஸார் தடுத்து நிறுத்தியிருந்தனர். முதல்வர் காரில் ஏறி புறப்பட்டபோது திரண்டிருந்த அ.தி.மு.க.,வினர் அவரை வாழ்த்தி கோஷம் எழுப்பினர். அப்போது விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பிச்சையாண்டி என்பவர் திடீரென தன் சட்டையை கழற்றத் தொடங்கினார். அதிர்ச்சியடைந்த பொலிசார் அவரை சுற்றி வளைத்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். விசாரணை நடத்தியபோது, தீயினால் பாதிக்க…

  8. சென்னை: மரக்காணம் கலவரம் தொடர்பாக சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்த தமிழக அரசுக்கு உத்தர விட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வராகி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மாமல்லபுரத்தில் கடந்த 25ஆம் தேதி சித்திரை திருவிழா என்ற பெயரில் பா.ம.க. சார்பில் கூட்டம் நடத்தினார்கள். அப்போது, கலவரம் வெடித்தது. இதனால் பொது சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்கள் சேதம் அடைந்தன. இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண உதவிகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஏற்பட்ட கலவரம் காரணமாக ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பா.ம.க.வினரால் சேதப்படுத்தப்பட்டன. சில பேருந்…

  9. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராடி வரும், போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் பாஸ்போர்ட் மீண்டும் முடக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடி வரும் உதயகுமார் மீது பல்வேறு வழக்குகள் பதிவானதை தொடர்ந்து, அவரது பாஸ்போர்ட், சில மாதங்களுக்கு முன், முடக்கி வைக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர், ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். `சரியான காரணங்கள் இன்றி பாஸ்போர்ட்டை முடக்கி வைக்கக்கூடாது' என ஐகோர்ட் உத்தரவிட்டதால், பாஸ்போர்ட்டை அவரிடம் திரும்ப ஒப்படைத்தனர். அவர் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகள் தொடர்பாக, கைது வாரண்ட் உள்ளதாக, பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு, நெல்லை எஸ்.பி., தெரிவித்துள்ளார். இதையடுத்து `உங்கள் பா…

    • 0 replies
    • 325 views
  10. மத்தியில் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன். பட்டுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற கம்யூனிஸ்ட் தியாகிகள் இரணியன், ஆறுமுகம், சிவராமன் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த சிபிஐ விசாரணையில் மத்திய அமைச்சர்கள் தலையீடு இருப்பது தெரிய வந்துள்ளது. ரயில்வே அமைச்சரின் உறவினர் ரூ.90 லட்சம் லஞ்சம் பெற்றதாக அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவற்றுக்கெல்லாம் பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் ஒட்டு மொத்தமாக மத்திய அரசு ராஜினாமா செய்ய வேண்டும். தயாநிதி மாறன் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக…

    • 0 replies
    • 399 views
  11. புதுக்கோட்டையில் ம.தி. மு.க. 20-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக புதுக்கோட்டைக்கு வருகை தந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் முழு விபரம் இதுவரை தெரியவில்லை. ஆனால் கூடங்குளம் அணுஉலையை அகற்ற வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளாக அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நாட்டில் எந்த பகுதியிலும் இந்த அளவிற்கு தொடர் போராட்டங்கள் நடந்தது கிடையாது. ரஷ்ய நாட்டுடன் அணு உலை அமைப்பது தொடர்பாக ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட போதே அணுஉலை அம…

    • 0 replies
    • 315 views
  12. லோக்சபா தேர்தலில், மக்களிடம் அங்கீகாரம் பெற்ற அ.தி.மு.க.,வுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் என, அக்கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் தெரிவித்தார். ஈரோட்டில், இந்திய கம்யூ. மாநில செயலர் தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: நிலக்கரி இறக்குமதி ஊழலை விசாரித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் வழங்கிய ரகசிய வாக்குமூலத்தை, மத்திய அமைச்சர்கள் திருத்தியதை ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே, மத்திய அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். வரும் லோக்சபா தேர்தலில், காங்., தோற்கும் இடத்தில், பா.ஜ., வெற்றி பெறாது. மாநில கட்சிகள், ஜனநாயக கட்சிகளுடன், இடதுசாரிகள் அமைக்கும் கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளது. பா.ம.க.மாநாட்டில் ராமதாஸ் பேசிய பேச்சால், தமிழகத்தில் சமூக…

  13. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததாக விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை ஜாமீனில் விடுதலை செய்ய விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிலையில் மேலும் 6 வழக்கில் ராமதாஸ் கைது செய்யப்பட்டு உள்ளார். இதற்கிடையே ராமதாசுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி சத்தியநாராயணா முன்பு அரசு தலைமை குற்றவியல் வக்கீல் சண்முக வேலாயுதம் ஆஜராகி மனுதாக்கல் செய்ய முன்வந்தார். பிற்பகல் 2 மணிக்கு மனுவை தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதே நேரத்தில் பா.ம.க. சார்பில் வக்கீல்கள் கோபாலு, ரூபர்ட் பர்னபாஸ் ஆகியோர் நீதிபதியிடம் ராமதாசுக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ள…

    • 0 replies
    • 301 views
  14. மத்தியில் காங்கிரஸ், பா.ஜனதா அல்லாத 3-வது அணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி. கூறினார். திண்டுக்கல்லில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:- அகில இந்திய அளவில் காங்கிரஸ் அரசுக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. சுதந்திரம் அடைந்த பின்னர் பெரியஅளவில் ஊழல் காங்கிரஸ் அரசில் தான் நடந்துள்ளன. பிரதமர், மந்திரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. ரெயில்வே மந்திரியின் உறவினர் லஞ்சம் பெற்றுள்ளதால், மந்திரி பதவிவிலக வேண்டும். மக்கள் விரோத கொள்கைகளை மத்திய அரசு கொண்டுள்ளது. இதனால் நாடுமுழுவதும் கொந்தளிப்பு நிலை உருவாகி உள்ளது. இதில் பா.ஜ.க. அரசியல் ஆதாயம் த…

    • 0 replies
    • 393 views
  15. தமிழக மக்களுக்கு விரைவில் காவிரி நீர் கிடைக்க உதவிட வேண்டும் என்று மத்திய அரசை தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி - பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேள்வி:- குறைந்த விலையில் காய்கறி விற்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் துவக்கிவைக்கப் போவதாகவும், இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டு நுகர்வோர், விவசாயிகள் நேரடியாகப் பயன்பெறுவார்கள் என்றும் செய்தி வந்திருக்கிறதே?. பதில்:- குறைந்த விலையில் மக்களுக்கு காய்கறி விற்கப்பட வேண்டும் என்பதற்காகவே தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம்தான் உழவர் சந்தைகள் திட்டம். இந்தத் திட்டத்திலே பஸ்களிலே காய்கறிகளை ஏற்றிவருவதற்கான லக்கேஜ் கட்டணம் கிடையாது. விவசாயிக…

    • 0 replies
    • 285 views
  16. தனுஷ்கோடியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் 2 நாட்டுப் படகுகளில் கச்சதீவு அருகே இன்று மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர். இவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் சென்று மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களில் 125 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதாக கடந்த வாரம் ராஜ்யசபாவில் தெரிவிக்கப்பட்டது. http://www.dailythanthi.com/node/270794

  17. மத்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலின் மகன்கள் அமீத், மனீஷ் ஆகியோர் மீது சி.பி.ஐ.க்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளதால் எந்த நேரமும் சி.பி.ஐ அவர்களிடம் விசாரணை நடத்தலாம் என கூறப்படுகிறது. பவன்குமார் பன்சாலின் குடும்பம் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.152 கோடி சொத்து சேர்த்து உள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சரின் உறவினர் விஜய்சிங்லே என்பவர் பணி இடமாற்றத்துக்காக ரூ. 90 லட்சம் லஞ்சம் வாங்கியதாக சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 9 பேரை கைது செய்து உள்ளனர். இதில் ரெயில்வே மந்திரி பன்சாலுக்கும் தொடர்பு உள்ளது என்றும் அவர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்றும் பாரதீய ஜனதா, சமாஜ்வாதி, மற்றும் இடது சாரி கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இதனால் காங்கிரசுக்கு நெருக்…

  18. சென்னை: ம.தி.மு.க. 20ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை கட்சி அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. தி.மு.க.வில் இருந்து விலகிய வைகோ, ம.தி.மு.க. என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். கட்சி தொடங்கி இன்றுடன் 20 ஆண்டு ஆகிறது. இந்த நிலையில், 20 ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில், பொதுச்செயலாளர் வைகோ தாயகத்தில் கழகக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கி, பொதுமக்கள் முன்னிலையில் சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் கட்சி முன்னோடிகளும், தோழர்களும், முன்னணியினரும் கலந்து கொண்டனர் http://news.vikatan.com/article.php?module=news&aid=14564

  19. நான்கு நாட்களுக்கு முன்பு அத்துமீறி இந்திய கடல்பகுதியில் மீன்பிடித்தபோது 11 இலங்க‌ை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். மற்றொரு நாட்டு கடல் எல்லைக்குள் செல்கிறோம் என்ற அச்சம் சற்றும் இல்லாமல் இந்திய நாட்டு கடல் எல்லைக்குள் புகுந்து மீன் பிடித்த காரணத்தாலேயே இந்திய கடலோரக் காவல்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்திய கடலோரக் காவல்படையினர், இந்திய எல்லைக்குள் அத்து மீறி நுழைந்த இலங்கை மீனவர்களை காக்கிநாடா கடலோரப் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் கிழக்கு கோத‌ாவரி மாவட்டம் தும்முலபேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டினுள் காவல் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு இரண்டு போலீஸ்கார்கள காவலுக்கு இருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு மின் சப்ளை கட் ஆனதை தொடர்ந்து காற்று…

  20. ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த ரமணிதரன். அந்தியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அந்தியூர் அருகே அண்ணாமடுவு என்ற இடத்தில் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு அதிமுக எம்எல்ஏ ரமணிதரன் மாதத்தில் ஓரிரு நாட்கள் வந்து விட்டுபோவார். அதன்பிறகு உள்ளூர் அதிமுகவினர் அந்த அலுவலகத்தை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் 05.05.2013 ஞாயிற்றுக்கிழமை காலை அந்த கட்டிடம் உள்ள பகுதியில் விவசாய தோட்டத்திற்கு சென்ற தங்கவேலு என்பவர் அலுவலக கண்ணாடிகள் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அங்கு சென்றுள்ளார். அப்போது அலுவலகத்திற்குள் இருந்த பொருட்கள் எரிந்து கிடந்துள்ளது. உடனே விவசாயி தங்கவேல் உள்ளூர் விஏஓ மற்றும் காவல்நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளார். அத…

    • 0 replies
    • 478 views
  21. கச்சத்தீவு குறித்த தமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவினால் அண்மையில் கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீளப் பெற்றுக்கொள்ள வேண்டுமென சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் சரியானதே என பாரதீய ஜனதா கட்சியின் தேசிய பேரவை உறுப்பினர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.இந்திய மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மற்றுமொரு தீர்மானத்தையும் அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். கச்சத்தீவை மீளப் பெற்றுக்கொள்வது தொடர்பான முதல்வர் ஜெயலலிதாவின் தீர்மானம் தைரியமானது என அவர் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/…

  22. கோயம்பேடு அருகே நெற்குன்றம் ஜெயராம் நகரை சேர்ந்தவர் நாகநாதன். இவர் வில்லிவாக்கம் ஒன்றிய அண்ணா தொழிற் சங்க செயலாளராக இருக்கிறார். நேற்று இரவு வீட்டின் முன்பு தனது காரை நிறுத்தி விட்டு நாகநாதன் வீட்டுக்குள் தூங்கினார். நள்ளிரவில் சில மர்ம நபர்கள் நாகநாதன் வீட்டுக்கு வந்துள்ளனர். கோணி பையை பெட்ரோலில் நனைத்து காரின் முன்பக்கம் என்ஜின் பகுதியில் போட்டு தீவைத்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் கார் தீ பிடித்து கொளுந்து விட்டு எரிந்தது. அப்போது எதிர் வீட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் கார் எரிவதை பார்த்து கூச்சல் போட்டனர். வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்த நாகநாதனையும் எழுப்பினார்கள். எழுந்து வந்த நாகநாதன் கார் எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே தண்ணீர் ஊற்றி த…

    • 0 replies
    • 331 views
  23. சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் 30-வது வணிகர் தின விழா, உலக வர்த்தக ஒப்பந்த எதிர்ப்பு மாநாடு இன்று நடந்தது. பேரவை தலைவர் த.வெள்ளையன் தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் கே.வி.கந்தசாமி செட்டியார் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.வி.ரத்தினம், தலைமை நிர்வாக செயலாளர் சி.எல்.செல்வம், துணை பொதுச் செயலாளர்கள் பெருங்குடி எஸ்.சவுந்திரராஜன், ஜவருல்லாகான், சண்முகநாதன், பழனியப்பன், ஹபிபுல்லா, மாவட்ட தலைவர்கள் ப.தேவராஜ், வியாசை எம்.மணி, மணலி டி.ஏ.சண்முகம், வி.ஏ.கருணாநிதி, கோபால், திருவடி, நிதிக்குழு எஸ்.ஆர்.பி.ராஜன், என்.ஏ.தங்கதுரை, சாலமன், சையது அகமது, திருஞானம் முன்னிலை வகித்தனர். மாநில முதன்மை துணை தலைவர் டி.பாலகிருஷ்ணன், தேசிய கொடியேற்றினார். இரா.ரத்தினசாமி வணிக …

    • 0 replies
    • 347 views
  24. ரஷியா உதவியுடன் கூடங்குளத்தில் அதிநவீன அணுமின் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த அணுமின் நிலையம் பாதுகாப்பானதாக இல்லை. எனவே அங்கு மின் உற்பத்தி செய்ய தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் கே.எஸ். ராதா கிருஷ்ணன், தீபக்மிஸ்ரா ஆகியோரை கொண்ட பெஞ்ச்சில் இந்த வழக்கு விசாரணை கடந்த 3 மாதங்களாக நடந்தது. மின் உற்பத்திக்கு தடை விதிக்க கோருவதற்கு ஆதரவான கருத்துக்களை அணுமின் உற்பத்தி எதிர்ப்பாளர்கள் வைத்தனர். ஆனால் மத்திய அரசும், அணுமின் உற்பத்தி கழகமும் எதிர்ப்பாளர்களின் குற்றச்சாட்டுக்களை மறுத்தன. இயற்கை பேரழிவு ஏற்பட்டாலோ, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினாலோ கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எந்த பாதிப்பும் வராது என்று உறுதி கூறப்பட்டன. இந்த வ…

    • 0 replies
    • 518 views
  25. பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து வட மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. பஸ்கள் கல்வீசி தாக்கப்படுகின்றன. இந்த போராட்டம் காரணமாக கடந்த ஒரு வாரத்தில் தமிழ்நாடு முழுவதும் 513 பஸ்கள் சேதம் அடைந்துள்ளன. 13 அரசு மற்றும் தனியார் பஸ்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. இதனால் ரூ.2 கோடிக்கும் மேல் சேதம் ஏற்பட்டிருக்கும் என தெரிய வந்துள்ளது. இதுதவிர 20 புளியமரங்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. 160 மரங்கள் வெட்டப்பட்டு ரோடுகளின் குறுக்கே போட்டு வாகன போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தப்பட்டது. 4,700-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14456:13-bu…

    • 0 replies
    • 518 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.