தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10291 topics in this forum
-
காவிரி கரையில் ராஜபக்சே, சோனியா காந்தி, சுப்பிரமணிய சுவாமி ஆகியோர் படங்களுக்கு மாலை போட்டு திதி கொடுக்கும் போராட்டத்தை தமிழீழ ஆதரவு மாணவர்கள் கூட்டமைப்பை சார்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் நடத்தினர். காவிரி கரையில் ஒன்று திரண்ட மாணவர்கள் மூவரின் படங்களுக்கு பூ மாலைப் போட்டு, வாழை இலையில் தேங்காய், வாழைப் பழம், பொட்டுக்கடலையுடன் படையல் வைத்தார்கள். தொடர்ந்து, அர்ச்சகர் வேடத்தில் இரண்டு மாணவர்கள் ஓமக் குண்டத்தை உருவாக்கி வேதம் ஓதினார்கள். சோனியா, சுப்பிரமணிசாமி, ராஜபக்சே உறவினர்கள் போல மாணவர்களே வேடம் தரித்து மந்திரம் ஓதி, ஈமச்சடங்கு செய்து, ஒருவருக்கொருவர் கட்டிப் பிடித்து கதறி அழுதார்கள். பின்பு அவர்கள் நெருப்பு குண்டத்தில் இருந்த அஸ்தியை காவிரி ஆற்றில் கரைத்த…
-
- 0 replies
- 516 views
-
-
அருமையான ஒரு காணொளி....கண்டிப்பாக எல்லோரும் பாருங்கள்....உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து இன்று நடக்கும் போராட்டத்துக்கு வலுசேர்க்க உங்களால் முடிந்த பங்களிப்பை செய்யுங்கள்....... https://www.facebook.com/photo.php?v=546805748675751&set=vb.140033692837649&type=2&theater
-
- 6 replies
- 989 views
-
-
-
- 0 replies
- 565 views
-
-
ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அதிரடி உத்தரவு! (படங்கள்) சென்னை: விஷவாயு வெளியேறியதையடுத்து தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியி்லுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தமிழகத்தில் போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 23ம் தேதியன்று தூத்துக்குடியில் விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதற்கு ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியான கந்தக வாயுவே காரணம் என்று கூறிய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆலையை மூடக்கோரி முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் நிறுவனத்தில் இருந்து வெளியான சல்பர் டை ஆக்சைடு கா…
-
- 3 replies
- 1.5k views
-
-
இலங்கை தமிழர்களுக்கு தனி தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாவட்ட சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர் மன்றத்தினர் நாளை பிரமாண்ட உண்ணாவிரதம் நடத்துகின்றனர். சுதந்திர தமிழ் ஈழத்துக்கான போராட்டம் வரலாறு காணாத அளவில் தமிழகத்தில் நடந்து வருகிறது. மாணவர்கள் முன்னெடுத்த இந்தப் போராட்டம் மக்கள் போராட்டமாக வடிவம் பெற்றுள்ளது. குறிப்பாக, இதுவரை ஈழப் பிரச்சினை குறித்து பாராமுகமாக இருந்த ஐடி பணியாளர்கள், அரசு ஊழியர்கள் எல்லாம் வீதிக்கு வந்து போராடுகின்றனர். தனித் தமிழ் ஈழம் மலர வேண்டும், உலகெங்கும் பரவிக் கிடக்கும் உறவுகள் சுதந்திர ஈழத்தில் ஒன்று சேர வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. நடிகர்களின் ரசிகர…
-
- 4 replies
- 1.1k views
-
-
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது குறித்து மாணவர்கள் தெரிவிக்கையில் : இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் எந்த மாநிலத்திலும் சிங்களவர்கள் வந்து விளையாடக் கூடாது. இதனை அடிப்படையாக வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மேலும், பூந்தமல்லி சிறப்பு முகாமை உடனே இழுத்து மூட வேண்டும். உடனடியாக முகாமில் உள்ள மக்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். திருச்சியில் மாணவர்களை தாக்கிய காங்கிரஸ் குண்டர்களை கைது செய்ய வேண்டும். மாணவர்களை தாக்குமாறு ஏவிவிட்ட காங்கிரஸ் தலைவர்களையும் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து…
-
- 0 replies
- 618 views
-
-
விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற மாணவர்கள் மீது காங்கிரஸ் கட்சியினர் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர். https://www.youtube.com/watch?feature=player_embedded&v=p9nqbYCLYbc
-
- 13 replies
- 851 views
-
-
"எங்களை தனிமைப்படுத்த சதி நடக்கிறது" ஈழத்தமிழர்களின் உரிமைகளை நிலைநிறுத்த மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறுகையில், காங்கிரஸ் கட்சியை தனிமைப்படுத்த சதி நடப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இலங்கை வாழ் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட இந்திய அரசு பல கோடிகளை கொடுத்து உதவி வருகிறது. இவர்கள் சம உரிமை பெற இந்தியா முழு முயற்சி எடுத்து வருகிறது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நீர்த்து போக செய்து விட்டது என்பது தவறானது. இது உண்மையல்ல. இந்தியா முழு முயற்சி எடுத்து தீர்மானத்தை நிறைவேற்ற உதவி செய்தது. மாணவர்களின் உணர்வுகள் மதிக்கப்படும். இந்த உணர்வுகளை பிரதமரிடம் அழுத்தமாக தெரிவிப்போ…
-
- 2 replies
- 654 views
-
-
திருவாரூர்: ஆற்றின் குறுக்கே பாலம் கட்டக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார் திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன். உண்ணாவிரத போராட்டத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழியும் கலந்து கொண்டதால் பரபரப்பு பற்றிக் கொண்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் திருவாரூர் தொகுதிக்குட்பட்ட கொரடாச்சேரி மக்கள் வெட்டாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்று 50 ஆண்டுகாலமாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். எந்த அரசாங்கமும் இவர்களின் கோரிக் கைக்கு செவிசாய்க்காத நிலையில், தி.மு.க. சார்பில் வாங்கிவிடப்பட்ட இரண்டு படகுகள் மூலம் இக்கரைக்கும் அக்க ரைக்கும் போய் வந்து கொண்டிருக்கிறார்கள் மக்கள். இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் கருணாநிதிக்காக ஓட்டுக் கேட்டு வந்த அவ…
-
- 11 replies
- 1.3k views
-
-
திருச்சியில் 27.03.2013 அன்று மாணவர்களைத் தாக்கிய காங்கிரசுக் குண்டர்களைக் கைது செய்ய வலியுறுத்திக் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் 28.03.2013 அன்று தஞ்சை பனகல் கட்டடம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்குத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு தலைமை தாங்கினார். தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் திரு.அய்யனாபுரம் சி.முருகேசன், அரசுப் போக்குவரத்துக் குடந்தைக் கோட்டச் செயலாளர் தோழர் துரை.மதிவாணன் ஆகியோர் கண்டன உரையாற்றினார். த.தே.பொ.க.தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை முழக்கங்கள் எழுப்பினார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் க.காமராசு…
-
- 1 reply
- 477 views
-
-
தொடர்ச்சியான இந்த போராட்டம் ஜாதி, மதம், இனம் கடந்து மாணவர்களை ஒரு வர்க்கமாய் ஒன்றிணைத்துள்ளது. அமைப்பாக இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தியது. சமூக பிரச்சினையின்பால் கவனத்தையும், அக்கரையும் கொள்ள செய்தது. ஜெனிவாவில் கூட இருந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வர இருக்கும் தீர்மானத்தை முன்னிட்டு சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர். போராட்டத்தின் மூன்றாவது நாள் அவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மாணவர்களின் போராட்டமும் கைவிடப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை துவக்கினர். அதன் ஒரு பகுதியாக கோவை சட்டக்கல்லூரி மாணவர்களும் …
-
- 0 replies
- 795 views
-
-
தமிழீழத்துக்கு எதிரான அரசியல் கட்சிகளை புறக்கணிக்கப் போவதாகவும், ஜெனீவா தீர்மானத்தில் இலங்கைக்கு சாதகமாக இருந்த நாடுகளின் பொருட்களை புறக்கணிக்க போவதாகவும் இனப்படுகொலைக்கு எதிரான மாணவர் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இனப்படுகொலைக்கு எதிரான மாணவர் கூட்டமைப்பின் சார்பில் கோவையில் கருத்தரங்கம் நடைபெற்றது. கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கில் இலங்கையில் தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற சட்ட மன்ற தீர்மானதிற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தனி தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு மற்றும் இலங்கை அரசுக்கு பொருளாதார தடை விதிக்க வே…
-
- 0 replies
- 477 views
-
-
சிறைப்பிடிக்கப்பபட்ட 19 பேரை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரத்தில் நாளை மீனவர்கள் ரயில் மறியல். பிரிவு: தமிழ் நாடு இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 19 பேரை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். கடந்த 13ஆம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர். மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை, ஏப்ரல் 11ஆம் தேதி வரை காவலி்ல் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று 15வது நாளை எட்டியுள்ளது. இந்த …
-
- 0 replies
- 462 views
-
-
சுப்பிரமணியசாமி உருவ பொம்மை எரிப்பு சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று சுப்பிர மணியசாமி கருத்து தெரிவித்து இருந்தார். அவரது கருத்துக்கு தமிழ் திருநாடு நிலத்தரகர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சங்க மாநில தலைவர் வி.என்.கண்ணன் தலைமையில் விருகம்பாக்கத்தில் சுப்பிரமணியசாமியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் சுப்பிரமணிய சாமியின் உருவ பொம்மை மற்றும் படங்களை தீவைத்து எரித்தனர். போராட்டத்தில் மாநில பொருளாளர் வேணுகோபால், பொதுச் செயலாளர் சரவணன், சையது அலி, ஜெகந்நாதன், சுந்தர்ராஜன், பழனி, ராஜபாண்டியன் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் அனை வரும் கைது செய்யப்பட்டனர். http…
-
- 0 replies
- 624 views
-
-
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய 50 காங்கிரஸார் மீது வழக்கு பதிவு. திருச்சியில் நேற்று முன்தினம் சட்டக்கல்லூரி மாணவர்களை தாக்கிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 50 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மாணவர்களின் புகாரின் பேரில் முன்னாங் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகர் உட்பட 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13667:trichy-congeras&catid=36:tamilnadu&Itemid=102
-
- 0 replies
- 613 views
-
-
வை.கோ வை கைது செய்யுமாறு சுப்ரமணியம் சுவாமி கோரிக்கை 29 மார்ச் 2013 மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வை.கோ வை கைது செய்யுமாறு ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம்சுவாமி கோரியுள்ளார்.இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசத்திற்கு எதிராக வை.கோ மோசமான விமர்சனத்தை வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்திய குற்றவியல் சட்டத்தின் 124ஏ மற்றும் 125 சரத்துக்களின் அடிப்படையில் வைகோவின் கருத்துக்கள் தண்டனைக்குரிய குற்றமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.வைகோவை உடனடியாக கைது செய்து அவருக்கு எதிராக வழக்குத் n;தாடர வேண்டுமென அவர் கோரியுள்ளார்.வடக்கு இந்தியர்களை தமிழக மக்கள் மீது கிளர்ச்சியடையச் செய்யும் வகையில் இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் கார…
-
- 0 replies
- 591 views
-
-
தமிழகத்தில் மாணவர்களின் போராட்டத்தை புதிய தலைமுறை தூண்டியதா? சிபிஐ விசாரணை என்று அச்சுறுத்திய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்... 27-03-2013 அன்று நேர்படப்பேசு நிகழ்ச்சியில் நடந்தது என்ன...? காணொளி: http://puthiyathalaimurai.tv/evks-elangovan-threats-to-puthiyathalaimurai-tv
-
- 7 replies
- 1.2k views
-
-
தமிழக தீர்மானம்: இந்திய அரசை ஏற்றுக்கொள்ளச் செய்யும் ஆற்றல் மாணவரிடமே உள்ளது! - ருத்ரகுமாரன் தமிழக முதல்வர் அவர்களால் முன்மொழியப்பட்ட தீர்மான வாக்கியங்கள் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் நிலைப்பாட்டையும் சிறிலங்கா அரசின் தமிழின விரோதப் போக்கையும் அனைத்துலகப் பொறிமுறை குறித்த புரிதலையும் நன்கு உள்வாங்கி தயாரிக்கப்பட்ட ஒரு சிறந்த அரசியல் ஆவணமாக அமைந்துள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். அத்துடன், இது முதல்வர் அவர்களின் அரசியல் முதிர்ச்சியினையும் ஆளுமையினையும் வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ள அவர், இத்தகையதொரு சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றித் தந்தமைக்காக முதல்வர் அவர்களை நாம் மனமுவந்து பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளா…
-
- 2 replies
- 615 views
-
-
நாங்கள் வெளியே வந்ததால், இலங்கை தமிழர்களுக்கு என்ன நடந்து விட்டது? கருணாநிதி கேள்வி சென்னை: இலங்கை விவகாரத்தில், மத்திய அரசிலிருந்து தி.மு.க., வெளியே வந்துள்ளதால், இலங்கை தமிழர்களின் நிலையில், எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மத்திய அரசிலிருந்து தி.மு.க., வெளியே வந்ததற்காக கட்சியினர் கவலைப்படவேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார். தி.மு.க., தலைவர் கருணாநிதி தனது கட்சியினருக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட சிலரின் ஆசைப்படி நாங்கள் மத்திய அரசிலிருந்து வெளியே வந்து விட்டோம். இப்போது என்ன நடந்து விட்டது? ஈழத்தமிழர்களின் பிரச்னைகள் தீர்ந்து விட்டதா? அல்லது அமெரிக்க தீர்மானத்தின் மீது ஐ.நா., மனித உரிமை கவு…
-
- 49 replies
- 3.8k views
-
-
நா இப்ப பேச போறது தமிழிழம் கேடகினும்னு கிடையாது, ஒரு லட்சத்து அம்பதாயர்துகும் மேல தமிழ் மக்களை கொலை செய்த ராஜ பக்செவுக்கு தண்டனை வந்கிதரனும்னு கிடையாது. இல்ல மாணவர்கள் வைத்துள்ள மற்ற ஒன்பது கொள்கைகளை பத்தியும் பெசபோவது கிடையாது. இல்ல நம்ம ஊர் அரசியல் வாதிகளை பற்றியோ, மத்திய அரசை பற்றியோ பேச போவது கிடையாது. ஒரு வருஷம் ஆகுது என் கல்லூரி படிப்பு முடிச்சி. இந்த ஒன்பது கோரிக்கைகளையும் மாணவர்கள் பாத்துப்பாங்க. இந்தியாவுல தமிழ்நாட்ல இந்தியனா பொறந்த்தால எனக்கு கிடைத்த நன்மைகளையும் தீமைகளையும் பத்தி சொல்ல இருக்கிறேன். அப்துல் கலாம் எங்க காலேஜ்க்கு வந்த அப்ப நா இந்தியனா பிறந்த்தை நினைத்து பெருமை பட்டேன். எனக்குள் ஒரு சபதம் செய்து கொண்டேன் அப்துல் கலாம் அம…
-
- 0 replies
- 1k views
-
-
மதுரையில் மத்திய அரசின் EBF அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் கைது (படங்கள் ) மதுரை அனைத்து கல்லூரி மாணவர்கள் சார்பில் இன்று மத்திய அரசின் EBF அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் இதில் திருச்சியில் மாணவர்களை தாக்கிய காங்கிரஸ் தொண்டர்களை கைது செய்ய கோரியும் ,ஈழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு, இனப்படுகொலைக்கு எதிரான பன்னாட்டு விசாரணை, இலங்கை மீது பொருளாதாரத் தடை போன்றவற்றை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தினர். . போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13665:madurai-ebf&catid=36:tamilnadu&Itemid=102
-
- 1 reply
- 517 views
-
-
இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு பல கோரிக்கைகளை நடுவண் அரசுக்கும் சன் குழுமத்திற்கும் வைத்துள்ளது . முதல் கட்டமாக சன் தொ.கா. வின் உரிமையாளரின் அணியான ஐதராபாத் ஐ பி எல் அணியில் இருந்து இலங்கை ஆட்டக் காரர்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் , வரும் வெள்ளிக் கிழமை இரவிற்குள் சன் குழுமம் இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும், அப்படி இலங்கை விளையாட்டாளர்களை வெளியேற்றாத பட்சத்தில் மாணவர்கள் தமிழகமெங்கும் உள்ள சன் குழும அலுவலகங்களை முற்றுகையிடுவதாக தெரிவித்தனர் . மேலும் நடுவண் அரசுக்கு சில கோரிக்கைகளை மாணவர்கள் முன்வைத்தனர் 1. தமிழக சட்டமன்ற தீர்மானத்திற்கு அமைவாக இலங்கை உடனான ராஜதந்திர உறவுகளை இந்திய இத்துடன் முறித்துக் கொள்…
-
- 0 replies
- 548 views
-
-
தமிழீழம் அமைந்தால் அதுபோல 5000 நாடுகள் உருவாகும் , ஐநா ஒரு சந்தை போல ஆகிவிடும் இந்நாட்டில் முக்கிய பொறுப்பில் இருக்கும் சிலர், 5000 நாடுகள் என்ன 10000 நாடுகள் கூட வரட்டுமே ?? உங்களுக்கு என்ன நட்டம் ?? உங்க அப்பன் வீட்டு சொத்தா போகுது? அந்தந்த இனமக்கள் அவர்கள் விருப்பம் போல வாழ தானே நாடு என்ற ஓன்று உருவாக்கப்பட்டது ?? அதற்காக சிங்களவன் செய்யும் கொடுமைகளை பொறுத்துக்கொள் என்று சொல்ல நீ யார்? என்னை அடி வாங்கு என்று சொல்ல நீ யார்??? எங்களை சிங்களவர்களுடன் தான் சேர்ந்து வாழ வேண்டும் என்று சொல்ல யாருக்கும், எந்த நாட்டிற்கும் உரிமை இல்லை.. கிளிக்கு தங்கத்திலேயே கூண்டு கட்டி வைத்தாலும் அதில் தங்குவதா வேண்டாமா என்று முடிவு செய்யும் உரிமை அந்த கிளிக்குத்தான் இருக்கிறது. …
-
- 5 replies
- 1.2k views
-
-
ஸ்டெர்லைட் ஆலை முற்றுகைப் போராட்டம்: வைகோ உள்பட 5000 பேர் கைது. [படங்கள்] தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இன்று காலை நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில், வைகோ, நல்லக்கண்ணு, கொளத்தூர் மணி உள்ளிட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டக் குழுவினர் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்தனர். தூத்துக்குடியில் உள்ள தாமிர உருக்கு ஆலை நிறுவனமான ஸ்டெர்லைட் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனை மூடக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சமூக ஆர்வலர்கள் பலரும் பல ஆண்டுகளாக போராடிவருகின்றனர். நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு தீர்ப்பினை எதிர்நோக்கியுள்ளது. இந்த நிலையில் சில தினங்களுக்கு ஆலையில் இருந்து வெளியான வ…
-
- 0 replies
- 577 views
-
-
"http://youtu.be/wCkZ_gfVFmE" http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=95376
-
- 1 reply
- 712 views
-