தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10246 topics in this forum
-
“மும்பையில் சிவாஜியை கொண்டாடுவது போல், தமிழ்நாட்டில் நாம் மன்னர்களை கொண்டாடுவதில்லை” - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து மதுரை, மன்னர் ராஜராஜ சோழனின் வரலாற்று பெருமைகளை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னம் அமைக்கக் கோரி தியாகராஜன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மராட்டிய மன்னர் சிவாஜியை மும்பையில் கொண்டாடுவது போல், தமிழ்நாட்டில் நாம் மன்னர்களை கொண்டாடுவதில்லை என்றனர். ஆயிரம் ஆண்டு பழமையான தஞ்சை பெரிய கோவிலை உருவாக்கிய ராஜ ராஜ சோழன் உள்ளிட்ட மன்னர்கள் கடல் கடந்து நாடுகளை வெற்றி கொண்டு பல சாதனை புரிந்ததை நாம் நினைவில் க…
-
- 0 replies
- 703 views
-
-
தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை! மின்னம்பலம் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 2021ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இது போன்ற இதர இடங்களில் வரும் 31ஆம் தேதி இரவு பொதுவாக நடத்தப்படும் ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களில், அதிகமான அளவில் பொதுமக்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது. இதேபோல அனைத்து கடற்கரைகளிலும், சாலைகளிலும் பொதுமக்கள் மிக அதிகமான அளவில் கூட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள, கரோனா நோய்த் தொற்றானது, அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் முதல்வர…
-
- 0 replies
- 354 views
-
-
காமன்வெல்த் நாடுகளின் அடுத்த சந்திப்பை இலங்கையில் நடத்தக் கூடாது என்று அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளை திமுக கேட்டிருக்கிறது. இது தொடர்பாக காமன்வெல்த் நாடுகளின் தூதர்களை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கள் சந்தித்து பேசியிருக்கின்றன. இலங்கையில் அல்லாமல் வேறு ஒரு இடத்தில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த வேண்டும் என்று திமுக குழுவினர் அந்த நாடுகளின் தூதுவர்களைக் கேட்டுள்ளனர். இளங்கோவன் மற்றும் டி. ஆர். பாலு ஆகியோர் தலைமையில் இரு குழுவினர் இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை மனித உரிமை நிலவரங்களைக் காரணம் காட்டி இந்த பிரச்சாரத்தை திமுக மேற்கொண்டு வருகிறது. http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/04/130424_dmkcommenwealth.shtml
-
- 1 reply
- 471 views
-
-
' சசிகலாவை விமர்சிக்க வேண்டாம்!' -உடன்பிறப்புகளுக்கு உத்தரவிட்ட தி.மு.க. அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்படுவதற்கு பொதுக்குழு ஒப்புதல் அளித்துவிட்டது.' இணையத்தளங்களிலோ பொதுவெளியிலோ உடன்பிறப்புகள் யாரும் சசிகலாவை விமர்சிக்க வேண்டாம்' என தி.மு.க தலைமைக் கழகத்தில் இருந்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை, வானகரத்தில் அ.தி.மு.கவின் பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது. 'என்ன நடக்கப் போகிறது' என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் நிலவி வந்தது. நேற்று அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் போட்டியிட விண்ணப்பம் கேட்கச் சென்றவர்கள் மீது தாக்குதல் நடந்தது. இன்று காலை பொதுக்குழு நடக்கும் இடத்தில் தகராறு நடந்துவிடாத அளவுக்குக் கட்ச…
-
- 0 replies
- 498 views
-
-
13th May 2013 திருவாரூர் கொரடாச்சேரி பகுதியில் உள்ள பிஎம்எச் காலனியைச் சேர்ந்தவர்களான மதன் (23). ராஜா ஸ்ரீதர் (19) ஆகிய சகோதரர்கள் இருவரை முன்விரோதம் காரணமாக இதே பகுதியை சேர்ந்த ஹாஜி முகம்மது தலைமையிலான கும்பல் கொடூரமாக வெட்டியது. இருசக்கர வாகன பழுது பார்ப்பில் ஏற்பட்ட சண்டை காரணமாக விரோதம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் மிதந்த இருவரையும் திருவாரூர் அரசு பொது மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் இருவரும் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டனர். இந்த சம்பவம் நள்ளிரவு ஒரு மணி அளவில் நடந்துள்ளது. இந்த இச்சம்பவம் குறித்து கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். விசாரணையில் இறந்த ஒருவர் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஆவார். h…
-
- 0 replies
- 512 views
-
-
ஓமந்தூரார் முதல் ஓ.பி.எஸ் வரை: தமிழக முதல்வர்களின் இயல்பும் பின்னணியும் எளிமையே உருவான காமராஜர்... கேட்போரை வசீகரித்துக் கட்டிப்போடும் பேச்சாற்றல் திறன் கொண்ட அண்ணா... திரைக்கதை வசனத்தில் அசத்தும் கருணாநிதி... பன்மொழி வித்தகர் ஜெயலலிதா என பல்வேறு விதமான, எண்ணற்ற திறமைகளை தன்னகத்தே கொண்ட முதல்வர்களை தமிழகம் இதுவரை கண்டுள்ளது. ஒவ்வொரு முதல்வருக்கும் ஒவ்வொரு பின்னணி, தனித்தனி இயல்பு உண்டு. பெரும்பாலும் இவர்கள் அனைவருமே பல்வேறு சந்தர்ப்பங்களில் அடிமட்டத்தில் இருந்து போராடி, படிப்படியாக முன்னேறி முதல்வர் பதவி வரை உயர்ந்தவர்கள். ஒரே நாளில் உச்சாணிக்கு வந்தவர்கள் அல்லர்... இந்தியா சுதந்திரமடைந்தது முதல் தற்போது முதல்வர் பதவியில் இருந்து விலகியிருக்கும் ஒ.பன்னீ…
-
- 0 replies
- 640 views
-
-
நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற வாய்ப்பில்லை: க.அன்பழகன் க.அன்பழகன் | கோப்புப் படம். நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற வாய்ப்பில்லை என்று திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று திருப்பூரில் செய்தியாளர்களிடம் க.அன்பழகன் கூறுகையில், ''நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற வாய்ப்பில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக யாருக்கும் ஆதரவளிக்காது. தமிழகத்தின் எதிர்காலம் திமுகவின் வெற்றியைப் பொறுத்தே அமையும்'' என்றார். வரும் 18-ம் தேதி பெரும்பான்மை வாக்கெடுப்புக்காக சட்டப்பேரவை கூட உள்ள நிலையில், க.அன்பழகனின் இந்தக் கர…
-
- 0 replies
- 363 views
-
-
மிஸ்டர் கழுகு: ஆடும் அரசு கழுகார் உள்ளே நுழைந்ததும் டேபிளில் இருந்த ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழை எடுத்து அவர் முன்னால் விரித்தோம். ‘‘காலையிலேயே பார்த்துவிட்டேன். தலைப்புச் செய்தியைப் பற்றித்தானே கேட்கிறீர்?” எனச் சிரித்தார். ‘ஆமாம்’ என்பதுபோல தலையாட்டினோம். ‘‘அ.தி.மு.க-வில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என முக்கியமான மூன்று அணிகள் இருப்பது மாதிரி, கண்ணுக்குத் தெரியாமல் இன்னொரு கோஷ்டியும் இருக்கிறது. அதுதான் ‘நமது எம்.ஜி.ஆர் மருது அழகுராஜ் கோஷ்டி’. தினமும் மருது அழகுராஜ் என்ன நிலைப்பாடு எடுக்கிறாரோ, அதுதான் அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளிதழான நமது எம்.ஜி.ஆரில் வெளிவருகிறது. அந்த நிலைப்பாடு விநோதமானது. தினகரனையும் எடப்பாடியையும் ஒரே நேரத்தில…
-
- 0 replies
- 1.2k views
-
-
எம் கோரிக்கைகள்தாம் எமது உயிர் - தோழர் தியாகு நேர்காணல் நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் சந்திக்கும் மாநாடு நடக்க இருக்கிறது. அப்பாவித் தமிழர்களை கொத்துக் கொத்தாக அழித்தொழித்த சிங்களப் பேரினவாத அரசுக்கு இந்த மாநாட்டை நடத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதில் இந்தியப் பிரதமரோ இந்திய அரசின் வேறொரு பிரதிநிதியோ கலந்துகொள்ளக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இவற்றில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசின் தமிழகக் கிளையும் அடக்கம். இம்மாநாட்டில் கலந்துகொள்வது குறித்து இந்திய அரசு இன்னும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் இலங்கையில் நடக்க இருக்கும் பொதுநலவாய மாநாட்டைப…
-
- 0 replies
- 394 views
-
-
ஜெயலலிதா என்னை அர்ச்சித்திருக்கிற வார்த்தைகளை எம்.ஜி.ஆர். கேட்டிருந்தால் கவலைப்பட்டிருப்பார் : கலைஞர். பல்நோக்கு சிறப்பு உயர் மருத்துவமனை மருத்துவர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு கிடையாதா? என்பது குறித்து, சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு சிறப்பு பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கலைஞர், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தொல்.திருமாவளவன், சுப.வீரபாண்டியன், ஜவாகிருல்லா எம்.எல்.ஏ., பேராயர் எஸ்ரா. சற்குணம் உட்பட பலர் பங்கேற்று உரையாற்றினர். கலைஞர் பேசும்போது, ’’காமராஜர் முதலமைச்சராக இருந்த போது அப்போது எதிர்க்கட்சியாக இருந்த எங்களை எப்படி நடத்தினார்? பக்தவச்சலம் கூட எப்படி நடத்தினார்? அவ்வளவு ஏன், என்னுடைய அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதலமை…
-
- 1 reply
- 687 views
-
-
இரட்டை இலை சின்னம் யாருக்கு?- தேர்தல் ஆணையம் அக்.31க்குள் இறுதி முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு உயர் நீதிமன்ற மதுரை கிளை | கோப்புப் படம். இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து தேர்தல் ஆணையம் அக்.31க்குள் இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ''அதிமுகவின் அதிகாரபூர்வ சின்னமாக 45 ஆண்டுகளாக இருந்து வரும் இரட்டை இலையை அக்கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக தேர்தல் ஆணையம் முடக்கியது. அதிமுக நிர்வாகக் குழு தேர்தல் நடத்தி அதில் வெற்றி பெறும் அணியிடம் இரட்…
-
- 0 replies
- 357 views
-
-
’நான் பிறந்ததுக்கான காரணத்தை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது!’ - கமல் சூளுரை நடிகர் கமல்ஹாசனின் 63 வது பிறந்தநாளான இன்று, புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய செயலி பற்றி விவரித்துப் பேசிய கமல், `இது வெறும் ஆப் மட்டும் அல்ல; இது, பொது அரங்கம்’ என்று குறிப்பிட்டுள்ளார். விழாவுக்குத் தாமதமாக வந்ததற்கு செய்தியாளர்களிடம் மன்னிப்புக் கோரி பேசத் தொடங்கிய கமல், அரசியல் கட்சித் தொடங்குவதற்கான ஆயத்த பணிகள்குறித்துப் பேசினார். ’காலம் வந்துவிட்டது..!’ 'அரசியலில் ஈடுபடுவதற்காக முன்னேற்பாடுகளைத் தீவிரமாகச் செய்துகொண்டிருக்கிறேன். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அனைத்துத் தரப்பு மக்களைப் பற்றித் தெரிந்து…
-
- 5 replies
- 1.2k views
-
-
ராஜீவ் கொலை மர்மம் உடைக்கும் ‘தடா’ ரவி! தனு... அனுஜா - பொய் சொன்ன சி.பி.ஐ - சிவராசனுக்கு உத்தரவிட்டது சி.ஐ.ஏ ‘இந்திய உளவுத்துறைகளின் கண்கள் அந்தப் ‘பொருளின்’ மீது விழுந்துவிட்டிருந்தது. ஆமாம், தமிழகத்துக்குள் இயங்கிக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் மூன்று வயர்லெஸ் கருவிகளில் இரண்டு செயலிழந்து போய்விட்டன. மிஞ்சியிருப்பது ஒன்றுதான். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உளவுப்பிரிவுத் தலைவரான பொட்டம்மானுடன் நான் நேரடியாகப் பேசிக்கொள்ள கொடுக்கப்பட்டிருந்த கருவி அது. அதன் வழியாகத்தான் இருவரும் தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருந்தோம். பேசி முடித்தவுடன் தொடர்புகளை அறுத்துக்கொண்டு வேறு இடத்துக்குக் கொண்டுபோய் பதுக்கிவிடுவேன். அவ்வப்போது வெளிப்படும் ‘சமிக்ஞை…
-
- 0 replies
- 3.5k views
-
-
மன்னவனூரில் வனத்துறை சார்பில், புதிதாக 4 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள டிரெக்கிங் பாதையை சுற்றிப் பார்க்கும் சுற்றுலா பயணிகள். டிரெக்கிங் செல்லும் சுற்றுலா பயணிகள் ஓய்வெடுக்க அமைக்கப்பட்டுள்ள குடில்கள் கொடைக்கானல் வனப்பகுதியில் 2006-ம் ஆண்டு நிறுத்தப்பட்ட டிரெக்கிங் (மலையேறும் நடைப் பயணம்) சுற்றுலா கோடை ஆப் சீசனில் மீண்டும் தொடங்கப்படுகிறது. இதற் காக வனத்துறை ரூ.37 லட்சம் மதிப் பீட்டில், புதிய டிரெக்கிங் மலையேற்றப் பாதைகளை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. சவால்கள் நிறைந்த சாகசம் இந்தியாவில் உள்ள 75 சிறந்த கோடை வாசஸ்தலங்களில் கொடைக் கானல் முக்கிய இடத்தைப் பெற் றுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில், ஓய்வு நேரங்களில் அந்நாட்டு அரசு அதிகாரிகள், ராணுவ அதிகார…
-
- 0 replies
- 585 views
-
-
சென்னை: கத்தி படத்துக்கு எதிரான போர்க்குரல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இன்று அந்தப் படத்தை எதிர்த்து கடுமையான வாசகங்களுடன் சுவரொட்டிகளை வெளியிட்டுள்ளனர் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினர். அதுவும் விஜய்யின் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்காகவே இந்த சுவரொட்டி அச்சிடப்பட்டுள்ளது. அந்த சுவரொட்டிகளில் இடம்பெற்றுள்ள வாசகங்கள்: அன்பார்ந்த நடிகர் விஜய்யின் மக்கள் இயக்க நண்பர்களே, ரசிகர்களே... மூன்றரை லட்சம் ஈழத் தமிழ் உறவுகளை திட்டமிட்டு இனப்படுகொலை செய்த சிங்கள இனவெறி இனப்படுகொலைக்காரன் ராஜபக்சே அரசுக்கு பொருளாதார ரீதியாக உதவிக் கொண்டிருக்கும் லைகா நிறுவனத்துக்கு, நீங்கள் 'கத்தி' திரைப்படம் மூலம் வருமானம் ஈட்டித் தரப் போகிறீர்களா? தொடர்ந்து கொண்டிருக்கும் இனப் பட…
-
- 5 replies
- 799 views
-
-
முதலமைச்சர் கான்வாயில் தொங்கியபடி பயணித்தது ஏன்? - சென்னை மேயர் பிரியா பதில் கட்டுரை தகவல் எழுதியவர்,நந்தினி வெள்ளைச்சாமி பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PRIYARAJAN DMK / FACEBOOK படக்குறிப்பு, சென்னை மேயர் பிரியா ராஜன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கான்வாயில் சென்னை மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் காரில் தொங்கிக்கொண்டு சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவ்வாறு தொங்கிக்கொண்டு சென்றது ஏன் என்று பிபிசி தமிழிடம் பிரத்யேகமாகப் பேசி…
-
- 3 replies
- 482 views
- 1 follower
-
-
மதிவண்ணன் ( த.பெ ) மதிவாணன் என்ற கைதி 12 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தும் சிறைத்துறையும் அரசும் தன்னை விடுதலை செய்யவில்லை என்பதால் மனவுளைச்சலால் இன்று அதிகாலை தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டார். அவர் எழுதிவைத்துள்ள கடிதத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் தண்டனை அனுபவித்து வந்தும் மனம் திருந்தி சமூகத்தில் சாதாரண மனிதர்களை போல் வாழ்வதற்கான உரிமையை மறுக்கும் மனித உரிமை மீறலில் ஈடுபடும் சிறைத்துறை மட்டும் தமிழக அரசின் மெத்தனப்போக்கால் ஏற்பட்ட மன உளைச்சல் தான் காரணம் என்றும் வேறு யாரும் காரணமில்லை என்று எழுதிவைத்துள்ளார். 12 ஆண்டுகள் தண்டனை முடித்த கைதிகளை விடுதலை செய்யவேண்டும். மதிவண்ணன் எழுதிவைத்த கடிதம் வெளியிடப்படவேண்டும் தமிழக முதல்வர் அக்கடிதத்தை பார்த்து நடவடிக்கை எடுக்…
-
- 1 reply
- 347 views
-
-
மிஸ்டர் கழுகு: ஆறு அமைச்சர்களுக்கு கல்தா? - அமாவாசையில் அதிரடி! கழுகார் உள்ளே வரும்போதே, ‘‘தி.மு.க., அ.தி.மு.க என இரண்டு கட்சிகளின் உள்கட்சி விவகாரங்கள்தான் இந்த வார ஹாட் டாபிக்’’ என்றார். முரசொலி அலுவலகத்தில் மு.க.ஸ்டாலின் நடத்திய தி.மு.க தென்மண்டல மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பற்றிய கட்டுரையைப் படித்தவர், ‘‘உமது நிருபர் லேட். இந்தக் கட்டுரை பிரசுரமாகி வெளியில் வருவதற்குள் மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன’’ என்றார். ‘‘ஆமாம்’’ என்றோம் சமாளிப்பாக. ‘‘மதுரையில்தான் இது சர்ச்சையாகியுள்ளது. மதுரை மாநகர் மாவட்டம் வடக்கு, தெற்கு என இரண்டாக இருந்ததை ஒன்றாக்கி, மாநகர் மாவட்டப் பொறுப்பாளராக கோ.தளபதி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு எழுந்து…
-
- 0 replies
- 1.1k views
-
-
வட மாநில தொழிலாளர்கள் சர்ச்சை: பொருளாதார ஏற்றத்தாழ்வு வடக்கு, தெற்கு மாநிலங்கள் இடையே அதிகரிப்பது தேசிய ஒருமைப்பாட்டை அச்சுறுத்துமா? சிவகுமார் ராஜகுலம் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு மாநிலங்களுக்கு இடையே அதிகரித்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வின் பக்க விளைவாக புலம்பெயர் தொழிலாளர் பிரச்னை உருவெடுத்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் புலம்பெயர் தொழிலாளர்கள், அவர்கள் பணிபுரியும் மாநிலங்களில் தாக்குதலுக்கு இலக்காவதாக எழும் கு…
-
- 0 replies
- 223 views
- 1 follower
-
-
தமிழக கூலி தொழிலாளர்கள் மீது ஆந்திர வனத்துறை அதிகாரிகள் கொடூர தாக்குதல் https://www.facebook.com/video/video.php?v=597332500395098
-
- 0 replies
- 455 views
-
-
நெல் கொள்முதல் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி - அரிசி விலை உயருமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் சன்ன ரகம் நெல்லுக்கு கடந்த ஆண்டை விட அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் தனியார் ஆலைகள் அதிக விலை கொடுத்து வாங்குவதால், அரசின் நெல் கொள்முதல் நிலையங்களில் தேவையான நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. ஆந்திரா, தெலங்கானாவில் நெல் விளைச்சல் குறைவாக இருப்பதா…
-
- 0 replies
- 1.5k views
- 1 follower
-
-
-
- 31 replies
- 3.1k views
- 2 followers
-
-
Exclusive: ஜெ., வழக்கில் அரசு வக்கீலாக சம்மதித்தது ஏன்? ... மனம் திறந்தார் ஆச்சாரியா பெங்களூரு: ஜெயலலிதா அப்பீல் மனு மீதான விசாரணையில் அரசு வக்கீலாக மீண்டும் காலடி எடுத்து வைத்துள்ளார் பி.வி.ஆச்சாரியா. பவானிசிங் அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டதை செல்லாது என்று அறிவித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக அரசு தரப்பு தனது வாதத்தை ஹைகோர்ட்டில் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்க அளித்த காலக்கெடு வெறும் ஒரே நாள்தான். இந்த ஒருநாளைக்குள், வழக்கு குறித்து படித்து, தண்டனையை உறுதி செய்ய கேட்டுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் கர்நாடக அரசு சிக்கியது. அப்போதுதான், ஆபத்பாண்டவராக கர்நாடக அரசின் கண்களுக்கு தெரிந்தார், ஆச்சாரியா. இவர் ஜெயலலிதா வழக்கு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டபோது, 2005ம் ஆண்டு முதல் …
-
- 0 replies
- 409 views
-
-
சட்டத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் இன்னும் சிறை கொட்டடியில் வாடுகின்றோம்; முருகன், ராபர்ட்பயஸ் தமிழக முதலமைச்சருக்கு கடிதம்; கால வரையறையற்ற உண்ணாவிரதம்! Published By: RAJEEBAN 01 FEB, 2024 | 11:14 AM திருச்சி சிறப்பு முகாமில் உரிமைகளும் உணர்வுகளும் பறிக்கப்படுவதாக கூறி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக முருகன் ராபர்ட் பயஸ் அகியோர் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். இந்த கடிதத்தில் இருவரும் தெரிவித்துள்ளதாவது, "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில்இ ஏறக்குறைய ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிம…
-
- 2 replies
- 578 views
- 1 follower
-
-
தமிழக மழை-வெள்ளச் சேதப் பாதிப்புகளை "தேசியப் பேரிடர்' ஆக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்! நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் [Thursday 2015-12-03 08:00] தமிழக மழை-வெள்ளச் சேதப் பாதிப்புகளை "தேசியப் பேரிடர்' ஆக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று மக்களவை, மாநிலங்களவையில் கட்சி வேறுபாடின்றி தமிழக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்."நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மழை சேத நிலவரம்' தொடர்பாக மக்களவையில் புதன்கிழமை பிற்பகலில் விதி எண் 193-இன் கீழ் விவாதிக்க மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அனுமதி அளித்தார். இதில் பங்கேற்று அதிமுக உறுப்பினர்கள் பேசினர். அதன் விவரம் வருமாறு: டி.ஜி.எஸ். வெங்கடேஷ் பாபு (வடசென்னை): மழை - வெள்ளப் பாதிப்புகளை சரிசெய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிய ந…
-
- 0 replies
- 177 views
-