Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற தந்தை: குத்திக் கொன்ற 17 வயது மகள் - வழக்குப் பதியாத விழுப்புரம் காவல்துறை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, சித்தரிக்கும் படம் தமது தந்தையே மது போதையில் தன்னிடம் தவறாக நடக்க முற்பட்டபோது, தன்னை தற்காத்துக்கொள்ளத் தந்தையை கொலை செய்த 17 வயது சிறுமி. தற்காப்பிற்காக கொலை செய்ததால் இந்திய தண்டனைச் சட்ட விதிப்படி சிறுமி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று விழுப்புரம் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அவலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்புறையூர் கிராமத்தைச் சார்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு 40 வயதாகிறது. …

  2. முன்னாள் நீதிபதி கர்ணன் கோவையில் கைது கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தேடப்பட்டுவந்த முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன், மேற்கு வங்க காவல்துறையினரால் கோவையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். படத்தின் காப்புரிமைTWITTER Image captionமுன்னாள் நீதிபதி கர்ணன் கோயம்புத்தூரில் கைது கோயம்புத்தூர் - பொள்ளாச்சி சாலையில் மலுமிச்சம்பட்டி என்ற இடத்தில் ஒரு தனியார் கல்லூரிக்கு அருகில் தனியார் விடுதியில் தங்கியிருந்தபோது, செவ்வாய்க்கிழமை மாலை கர்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ், பிபிசி தமிழிடம் இதை உறுதி செய்தார். தமிழக காவல்துறையின் உதவியுடன் மேற்குவங்க காவல் துறை அவரைக் கைது செய்துள்ளது.…

  3. தினகரனுக்கு எம்.எல்.ஏ.,க்கள் மிரட்டல் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களுடன், தினகரன், நேற்று அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, அமைச்சர் பதவி கேட்டு, அவரது ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் மூவர், தினகரனுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். அ.தி.மு.க.,வில், ஜெயலலிதா மறைவுக்கு பின், முதல்வர் பழனிசாமி அணி, பன்னீர்செல்வம் அணி, தினகரன் அணி என, மூன்று அணிக ளாக, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் செயல்படு கின்றனர். ஜனாதிபதி தேர்தலில், மூன்று அணி களும், பா.ஜ., வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர். ஜனாதிபதி தேர்தல், சட்டசபை தொடர் முடிந்த பின், மாவட்ட சுற்றுபயணம் சென்று, கட…

  4. ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுவிக்க முடியாது! மத்திய அரசு திட்டவட்டம் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுவிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராஜீவ் கொலைவழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தங்களை விடுவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2012ல் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுவில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வருவதாக அவர்கள் கூறியிருந்தனர். ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் 14 ஆண்டுகளிலேயே விடுதலை செய்யப்படுவதால் தங்களை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீ…

  5. எழுத்தாளர் அம்பைக்கு 2021 இற்கானஆண்டுக்கான இந்திய சாகித்ய அகாடமி விருது ஜனவரி 1, 2022 2021-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்படுகிறது. ‘சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ சிறுகதைத் தொகுப்புக்காக அம்பை இந்த விருதைப் பெறுகிறார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட இந்நூல், அம்பையின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு ஆகும். 13 கதைகள் கொண்ட இத்தொகுப்பின் பல கதைகள் பிரசுரம் ஆகாதவை. சி.எஸ்.லட்சுமி எனும் இயற்பெயர் கொண்ட அம்பை, புனைவெழுத்தில் பெண் இருப்பைக் காத்திரமாகப் பதிவுசெய்த எழுத்துக்குச் சொந்தக்காரர். ‘சிறகுகள் முறியும்’, ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ போன்ற சிறுகதைத் தொகுப்புகளின் வழியே இலக்கிய உலக…

  6. அ.தி.மு.க அணிகள் இணைப்பு: அதிமுக-வின் மூன்று அணிகளும் தனித்தனியே ஆலோசனை #LiveUpdate *ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தங்கள் அணியினருடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். *முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடம் ஆலோசனை நடத்தி வருகிறார். ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. *இதனிடையே டிடிவி தினகரன் சென்னை அடையாறு இல்லத்தில், தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று பிற்பகல் 2.30 மணியளவில் அமைச்சர்கள் சென்னை மெரினாவில் இருக்கும் ஜெயலலிதா நினைவிடம் சென்று விட்டு, பின்னர் பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது…

  7. ஸ்லீப்பர் செல்லில் அமைச்சர் நடராஜன்? : சசிகலா புகழ்பாடும் மொபைல் பேச்சு அம்பலம் திருச்சி: 'சசிகலாவை எல்லாம் பதவியை விட்டு எடுக்க மாட்டோம்' என, அமைச்சர் நடராஜன் மொபைல் போனில் பேசியது, 'லீக்' ஆகியுள்ளதால், அவர், தினகரனின், 'ஸ்லீப்பர் செல்'களில் ஒருவரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. திருச்சியைச் சேர்ந்தவர், சுற்றுலா துறை அமைச்சர் நடராஜன். சமீபத்தில், தினகரனை கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து, இவரது மாவட்ட செயலர் பதவியை பறிப்பதாக, தினகரன் அறிவித்தார். இந்நிலையில், சசிகலாவுக்கு ஆதரவாக மொபைல் போனில், தினகரன் ஆதரவாளருடன் நடராஜன் பேசியது, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதன் விபரம…

  8. தமிழக நகர் புற உள்ளூராட்சி தேர்தல் : பிரசார நடவடிக்கைகள் நிறைவு! தமிழக நகர் புற உள்ளூராட்சி தேர்தலை ஒட்டி நடைபெற்ற பிரசார நடவடிக்கைகள் நேற்று (வியாழக்கிழமை) மாலையுடன் நிறைவுப்பெற்றன. இதனையடுத்து மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஆயிரத்து 824 வாடர்டுகளிலும், பேரூராட்சி பகுதியில் 7 ஆயிரத்து 411 வார்டுகளிலும், நாளைய தினம் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலின் போது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஒரு இலட்சம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தமிழக பொலிஸாருடன் தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் இராணுவத்தினரும், ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1267574

  9. உள்வாங்கிய கடல் - அச்சத்தில் மீனவர்கள்! ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுக கடல் பகுதி வழக்கத்தை விட இன்று (15) காலை உள் வாங்கி உள்ளதால் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் தரைதட்டி உள்ளதோடு, அடிக்கடி கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசால் அறிவித்துள்ள மீன்பிடி தடை காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று (14) மாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மீன் பிடிக்க சென்ற ஒரு சில மீன்பிடி விசைப் படகுகள் மீன் பிடித்து விட்டு இன்று (15) காலை மீன் களை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்கு எடுத்து வந்தனர். இந்நிலையில் மீன் பிடித்து வந்த மீ…

  10. "செஸ் ஒலிம்பியாட்" விளம்பரத்தில், பிரதமரின்... படத்தை சேர்க்க வேண்டும்- நீதிமன்றத்தில் மனு. மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெறும் விழாவில், பிரதமர் மோடி கலந்துகொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஆரம்பித்து வைக்க உள்ளார். இந்த போட்டிக்கான விளம்பர பேனர்களில் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் இடம்பெறாதது பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. ஒரு சில இடங்களில் இந்து முன்னணியினர் முதலமைச்சரின் படத்திற்கு மேலே பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஒட்டிச் சென்றனர். சென்னை அடையாறு பகுதியில் இருந்த பேனர்களில் பாஜகவினர் பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஒட்டிச் சென்றனர். இதையடுத்து அங்கு வந்த பெரியார் …

  11. திவாகரன் தனிக்கட்சி! - பின்னணியில் எடப்பாடி ‘‘நான் எவ்வளவுதான் அமைதியாகச் சென் றாலும், என்னையும், என் மகனையும் டி.டி.வி.தினகரன் ஒதுக்கியே வைக்கிறார். மரியாதை இல்லாத இடத்தில் நாம் இருந்து என்ன செய்ய முடியும்? இப்போதும் என்னிடம் எட்டு அமைச்சர்கள் தொடர்பில் இருக்கிறார்கள். நாம் நமக்கான வழியைப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்’’ என மன்னார் குடியில் தனக்கு நெருக்கமான ஆதரவாளர்கள் மத்தியில் கர்ஜனை செய்திருக்கிறார் திவாகரன். விரைவில் தனிக்கட்சி ஆரம்பிக்கும் மனநிலையில் திவாகரன் இருப்பதாக, அவருக்கு நெருக்கமானவர்கள் கிசுகிசுக்கிறார்கள். இதன் பின்னணி யில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகச் சொல்லப்படுவதால், பரபரக்கத் தொடங்கியுள்ளது மன்னார்குடி வட்டாரம். …

  12. `சசிகலா உத்தரவுக்கு தலை வணங்கிய திவாகரன்..!' உறவுக்கு வேட்டு வைத்த அந்த வார்த்தை ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலாவும் துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் அறிவிக்கப்பட்டபோது சசிகலா குடும்பம் மொத்தமும் அதை ஏற்றுக்கொண்டது. ஜெயலலிதாவுக்குப் பிறகு அ.தி.மு.க-வை சசிகலா சுவீகரித்ததை மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள். சசிகலாவால் முதல்வர் என்று அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி திடீர் விரோதியாகி ஓ.பன்னீர்செல்வம் முகாமுக்கு மாறிய பிறகுதான் சசிகலா குடும்பத்தில் மோதல்கள் உருவானது. ''ஆட்சி அதிகாரத்தில் இனி கோலோச்ச முடியாது; டி.டி.வி.தினகரன், ரத்த சொந்தங்களுக்கு அரசியல் முக்கியத்துவம் தருவது இல்லை'' என்று அரசல் புரசலாக சசிகலா …

  13. தமிழகத்துடன் குமரி இணைந்த நாள்: 01 - 11 - 1956 கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத் துடன் இணைந்து 58 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இன்று 59-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம், தாய் தமிழகத்துடன் இணைப்புக்காக நடைபெற்ற திருத்தமிழர் போராட்டத்தில் ஈடுபட்டு, சிறைக்குச் சென்ற தியாகி கொடிக்கால் ஷேக் அப்துல்லா (80), அந்த நாள் நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். கன்னியாகுமரி, திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்த போது நிலவிய சூழ்நிலை என்ன? அப்போது உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தது. குடியானவர்களுக்கு 2 இடங்குழி அரிசி (3 கிலோ) கன்ட்ரோல் துணி (மலிவான துணி) 2 ராத்தல் மரவள்ளி கிழங்கு (3 கிலோ) இவைதான் வாழ்க்கை. குறிப்பிட்ட நாள் இடைவெளியில் அரிசியும…

  14. பொங்கி வரும் காவிரி.. ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை. கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் அதிகளவில் வருவதால் தருமபுரி ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தற்போது கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 35,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலம் வயநாடு, மடிகேரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிகவும் அதிகமாக மழை பெய்து வருகிறது. இதனால் கபினி அணை வேகமாக நிறைந்தது. நேற்று நீரின் அளவு 37,000 கனஅடியானது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. …

  15. "குழந்தைக்கான நல்லுணவு தேடல் என் வாழ்வை மாற்றியது" இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் பட்டதாரி பெண் பட மூலாதாரம்,ANURADHA NATARAJAN படக்குறிப்பு, இயற்கை விவசாயி அனுராதா கட்டுரை தகவல் எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம் பதவி,பிபிசி தமிழ் செய்தியாளர் 1 ஏப்ரல் 2023, 10:11 GMT புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர் குழந்தைக்கான நல்லுணவுத் தேடலே என்னை இயற்கை விவசாயி ஆக்கியது என்கிறார் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியைச் சேர்ந்த பட்டதாரிப் பெண்ணான அனுராதா. அதற்காக கல்யாண நகைகளை விற்று நிலம் வாங்கிய போது பரிகாசம் செய்…

  16. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நளினி முருகன் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன் பதவி,பிபிசி தமிழுக்காக 18 மே 2023 இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து விட்டு நீதிமன்ற உத்தரவின்பேரில் விடுதலையான நளினி, தனி முகாமில் உள்ள தமது கணவரும் இலங்கையை சேர்ந்தவருமான முருகனுடன் அவரது தாய்நாட்டுக்கு செல்வாரா என்பது குறித்து பிபிசி தமிழுக்கு சிறப்புப் பேட்டியளித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நளினிக்கு முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பிறகு அது ஆயுள் தண்டனையாக குற…

  17. பட மூலாதாரம்,MK STALIN FB/GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 9 ஜூன் 2023, 10:19 GMT புதுப்பிக்கப்பட்டது 36 நிமிடங்களுக்கு முன்னர் மேகேதாட்டு அணை விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்திருக்கிறது கர்நாடக மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் அரசு. இது தமிழ்நாட்டில் மிகப் பெரிய அரசியல் புயலை ஏற்படுத்தியுள்ளது. மேகேதாட்டு அணை விவகாரத்தின் பின்னணி என்ன? கர்நாடக மாநிலத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையில் காவிரி நீரைப் பகிர்ந்துகொள்வது குறித்த பிரச்னை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட பிறகு ஓரளவுக்கு ஓய்ந்தது. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தி…

  18. டெல்லி திகார் சிறையில் கைதிகளை தாக்கியமை – 53 தமிழக காவல்துறையினர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு October 17, 2018 1 Min Read டெல்லி திகார் சிறையில் கைதிகளை தாக்கிய சம்பவம் தொடர்பாக தமிழக காவல்துறையினர் 53 பேர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது . கடந்த வருடம் நவம்பர் 21ம் திகதி உயர் பாதுகாப்பு சிறையில் உள்ள 18 கைதிகளிடம் கைத்தொலைபேசி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பதாக கிடைத்த தகவலினையடுத்து தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி மற்றும் 52 காவல்துறையினர் இணைந்து உயர் பாதுகாப்பு அறையில் சோதனை நடத்தினர். இதன்போது அங்கிருந்த கைதிகளுக்கும் காவல்துறையினருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கலவரமாக மாறியதில…

  19. யூடியூப் பகிர்வு: கருணாநிதி 92 | அரிய காட்சிகள் அடங்கிய சிறப்பு கருப்பு - வெள்ளை வீடியோ தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்பவர் திமுக தலைவர் கருணாநிதி. அவரது நெடுந்தூர வாழ்க்கைப் பயணத்தின் காலம் ஒரு நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கிறது. | வீடியோ இணைப்பு கீழே | எத்தனையோ பெரும் அரசியல் தலைவர்கள் பலரையும் கடந்து வந்தவர் அவர். ஆனாலும் இன்னும் அவரது குரல், அரசியல் வெளியில் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. முத்துவேலர் அஞ்சுகம் தம்பதியருக்குப் பிள்ளையாய் 1924-ல் பிறந்த கருணாநிதி இலக்கியம், அரசியல், நாடகம், திரை வசனம் என பல்துறை வித்தராய் வருபவர். இவரின் மேடைப் பேச்சுக்கும் சினிமா வசனங்களுக்காகவும் அன்றே தங்கள் இதயங்களைப் பறிகொடுத்தவர்கள் பலர் அவரை அடியொற்றி அரசிய…

  20. புதுச்சேரி: புதுச்சேரியில் மாயமான 9 வயது சிறுமி, வீட்டின் அருகே உள்ள வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிறுமி மாயம்: புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்த தம்பதியரின் இரண்டாவது மகளுக்கு 9 வயது. அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே கடந்த 2-ம் தேதி பிற்பகல் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த நிலையில் சிறுமி திடீரென மாயமானார். மாயமான சிறுமியை பெற்றோரும், உறவினர்களும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் நாராயணன் புகார் அளித்தார். போலீஸார்…

  21. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கர்நாடகா மற்றும் கேரளாவைப் போன்று, சூழல் சுற்றுலாவின் கீழ் பாதுகாப்பான முறையில் மலையேற்றம் அழைத்துச் செல்லும் திட்டத்தை ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு வனத்துறை துவங்க உள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாடு வனத்துறை 12 மாவட்ட வனப்பகுதிகளில், 40 இடங்களில் சுற்றுலா பயணிகளை மலையேற்றம் அழைத்துச் செல்லும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ள இந்த மலையேற்றம், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய காடுகளில் நடத்தப்படவுள்ளது. வனம், காட்டுயிர்கள் தொ…

  22. சீமான் கைது எப்போது? SelvamJul 13, 2024 09:20AM நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை உடனடியாக கைது செய்ய வேண்டும் என திமுகவின் முக்கிய நிர்வாகிகள் தலைமையிடம் வற்புறுத்தி வருகின்றனர். நடந்து முடிந்த விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது… நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து மேடையில் முதல் வரிசையில் சீமான் அமர்ந்திருக்க, கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் ஒரு கூட்டத்தில் பேசினார். அப்போது, திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சர் ஆன மறைந்த கலைஞர் பற்றி ஹனீஃபா பாடிய பிரபலமான பாடலை தழுவி கலைஞரை மிகக் கடுமையாக விமர்சித்து வார்த்தைகளை மாற்றி பாடினார். அது மட்டுமல்ல அமைச்சர் உதயநிதியை புகழ்ந்து தற்போது திமுக மேடை…

  23. `மிசோரத்தில் உள்ளதை எடுங்கள். இந்தி மொழிக்கு இருக்கும் சிறப்பு அந்தஸ்தை எடுக்க வேண்டும்.'' ''நாம் தமிழர் கட்சியை ஏற்றுக்கொள்வதும் கொள்ளாததும் மக்களின் முடிவு. ஆனால், தொடர்ந்து களத்தில் நிற்பதுதான் எங்களது கொள்கை. அதனால்தான் அனைத்துத் தேர்தலிலும் போட்டியிடுகிறோம்'' என்று வேலூர் தேர்தல் முடிவு பற்றி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். சீமான் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ''தி.மு.க, அ.தி.மு.க தேர்தலை எந்த அளவுக்கு நேர்மையாகச் சந்திக்கிறது என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். பல கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்கிறது பெரும்…

  24. நாமக்கல் அரசுப் பள்ளியில் வளாகத்திலேயே மது அருந்தியதாக 4 மாணவிகள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு உயர்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் 4 மாணவிகள் தேர்வு அறையில் மது அருந்திய நிலையில் இருந்ததால் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர். அந்த மாணவிகளுடன் இருந்த மேலும் 3 மாணவிகள் இது குறித்து ஆசிரியர்களிடம் தெரிவிக்காமல் மறைத்ததால் நீக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கடந்த 21-ம் தேதி நடந்துள்ளது. திருச்செங்கோடு அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளது. இப்பள்ளியில் மொத்தம் 2,500 மாணவிகள் பயில்கின்றனர். பள்ளியில் கடந்த 16-ம் தேதி தேர்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கனமழை காரணமாக அன்று தேர்வு ஒத…

  25. இசை கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார் ADDED : டிச 16, 2024 12:19 AM புதுடில்லி: அமெரிக்காவில் வசித்து வந்த பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன், 73, உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன், சிறு வயது முதலே பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இந்திய இசை உலகில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் புகழ்பெற்றவர். வெளிநாடுகளிலும் பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். கடந்த, 40 ஆண்டுகளாக அமெரிக்காவில் வச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.