தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
இலங்கை விவகாரத்தை வைத்து காங்கிரஸ் உறவை முறிக்குமா திமுக? Published: Friday, March 1, 2013, 9:27 [iST மா.ச.மதிவாணன் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசை பகிரங்கமாக திமுக விமர்சிக்கத் தொடங்கியிருப்பதால் அனேகமாக ஆளும் கூட்டணி அரசிலிருந்து அந்த கட்சி வெளியேறக் கூடும் என்று கூறப்படுகிறது. இலங்கை போர்க் குற்றம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக அண்மைக்காலமாக திமுக கருத்துகளைத் தெரிவித்து வருகிறது. மகிந்த ராஜபக்சேவை இந்தியாவுக்குள் அனுமதிக்க எதிர்ப்புத் தெரிவித்து அண்மையில் திமுக மிகப் பிரம்மாண்ட போராட்டத்தை நடத்தியது. பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்து அறிக்கை வெளியிட்ட போதும் மத்திய அரசை விமர்சிக்க கருணாநிதி தயங்கவில்லை. இதைவிட பெரிய போர்க் …
-
- 6 replies
- 1.1k views
-
-
இலங்கை விவகாரம் : இந்திய ஜனாதிபதியின் உரை தமிழர் உணர்வை பிரதிபலிக்கவில்லை :திமுக தலைவர் கருணாநிதி இலங்கைப் பிரச்சனை தொடர்பாக இந்திய ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் கூறிய விடயங்கள் தமிழர்களின் இதய வேதனையை எதிரொலிப்பதாக இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.உலக நாடுகள் “ராஜபக்ஷ ஒரு சர்வதேசப் போர்க் குற்றவாளி” என்று கடுமையாகக் கண்டிக்கவும் தண்டிக்கவும் முற்படுகின்ற வேளையில், இந்திய அரசு மட்டும் அவரைப் பற்றிய உண்மை விகாரங்களை இன்னமும் புரிந்து கொள்ளாமல், “இலங்கையுடனான உறவு மேம்பட்டு வருகிறது” என்று குடியரசுத் தலைவரின் உரையிலே குறிப்பிட்டிருப்பது ஏன் என்று புரியவில்லை என்று கேட்டுள்ளார் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி. இலங்கை அதிபர் ராஜபக்ஷ அவர்கள் …
-
- 0 replies
- 469 views
-
-
ராஜபட்சேவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரி, கண்டனப் பேரணியும் பொதுக்கூட்டமும் வேதாரண்யத்தில் நடைபெற்றது. இன்று காலை பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய சாலைகளில் சென்ற பேரணி, பின்னர் மீண்டும் பேருந்து நிலையத்துக்கே வந்தது. அங்கு உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. இந்தப் பேரணையில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டுவருகின்றனர். http://dinamani.com/latest_news/article1495821.ece
-
- 0 replies
- 658 views
-
-
இன்று காலை வட இந்திய தொலைக்காட்சியான என்.டி.டி.விக்கு பேட்டியளித்த குஷ்பு, இலங்கை வீரர்களுக்கு தடை விதிப்பது விளையாட்டுத்தனமானது. விளையாட்டை விளையாட்டாகத்தான் பார்க்க வேண்டும். தமிழக அரசின் முடிவு தனக்கு வருத்தமளிப்பதாக பேட்டியளித்துள்ளார். இதனால் குஷ்புவுக்கு எதிராக கடும் கண்டனம் எழுந்துள்ளது. இலங்கை தமிழர்களுக்காக போராடுவதற்கு டெசோ போன்ற அமைப்புகளை நடத்திவரும் திமுகவில் இருந்து கொண்டு, இம்மாதிரியான கருத்தை கூறியது குஷ்புவின் அரைவேக்காட்டுத்தனத்தை காட்டுவதாக திமுகவின் பெயர் கூற விரும்பாத முக்கிய தலைவர் ஒருவர் கூறியுள்ளார். தமிழில் நடித்து கோடிகோடியாக சம்பாதித்தும், சுந்தர்சியை திருமணம் செய்து தமிழகத்தின் மருமகளாகிவிட்டும் இலங்கையில் கொல்லப்பட்ட த…
-
- 20 replies
- 1.9k views
-
-
சென்னை: இலங்கை நாட்டு வீரர்கள் பங்கேற்பதால் 20-வது ஆசிய தடகளப் போட்டிகளை தமிழக அரசால் நடத்த முடியாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் 20-வது ஆசிய தடகளப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் தமிழக அரசின் ஒத்துழைப்புடன் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போட்டிகளில் 44 நாடுகளின் வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ரூ40 கோடியை தமிழக அரசு ஒதுக்கியிருந்தது. இந்நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் 12 வயதே ஆன சிறுவன் பாலச்சந்திரனை கைது செய்து இலங்கை அரசு கோரமாகப் படுகொலை செய்திருக்கிற புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. இது இலங்கையின் அப்பட்டமான போர்க் குற்றம் என்று நேற்று தமிழக முதல்வர் ஜெய…
-
- 16 replies
- 1.3k views
-
-
25 JAN, 2024 | 11:03 AM இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவித்திடவிரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் மீன்பிடிப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் 22-1-2024 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சமீப காலமாக தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது கவலையளிப்பதாக உள்ளது என்றும் இத்தகைய போக்கு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதால் இதில் ஒன்றிய அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டிய அ…
-
- 0 replies
- 420 views
- 1 follower
-
-
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது: பிரதமருக்கு முதல்வர் கடிதம் Published By: RAJEEBAN 23 MAR, 2023 | 03:36 PM பாக் ஜலசந்தி பகுதியில் தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி உரிமையைப் பறிக்கும் வகையிலான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைக் கடற்படையினரால் இன்று (23-3-2023) 12 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது இரண்டு விசைப்படகுகளுடன் (IND-TN-08-MM-1802 மற்றும் IND-TN-08-MM-65) கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தினை இந்தி…
-
- 0 replies
- 452 views
- 1 follower
-
-
இலங்கைக் கடற்படையினர்... தாக்குதல் நடத்துவதை நிறுத்த, நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலின் வலியுறுத்து! தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி கோடியக்கரை கடற்பகுதியில் பதிவு செய்யப்பட்ட படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாகி சூடு நடத்தினர். இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் குறிப்பாக கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டு மீனவர்களின் …
-
- 0 replies
- 377 views
-
-
காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கடந்த சில தினங்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், இலங்கைக்கு சொந்தமான சரக்கு கப்பல் காரைக்கால் துறைமுகத்திற்கு வந்துள்ளது. அந்த கப்பலை காரைக்கால் மார்க் துறைமுகத்திற்குள் அனுமதித்த இந்திய அரசையும், துறைமுக நிர்வாகத்தையும் கண்டித்து துறைமுக வாயிலில் காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள்கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். மாவட்ட செயலாளர் எம்.நைனாமுஹம்மது தலைமை யேற்க, மாவட்ட தலைவர் ஐ.அப்துல்ரஹீம், மாவட்ட த.மு.மு.க செயலாளர் எம்.முஹம்மது நஜிமுதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராகவும், தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்ப…
-
- 0 replies
- 565 views
-
-
அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படுகின்றது என்று தெரிவித்து சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை நேற்று முற்றுகையிட முயன்ற 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகின்றது என்றும், போர்க் குற்றச்சாட்டு தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபை மேற்கொண்ட விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்கும் கால வரையறை நீடிக்கப்பட்டமைக்கு அமெரிக்காதான் முற்றுமுழுதாக காரணம் என்றும் வலியுறுத்தியே இந்த முற்றுகை நடவடிக்கை இடம் பெற்றுள்ளது. மேலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி, மற்றும் மே 17 இயக்கம் உள்ளிட்ட அமைப்புக்களே இம்முற்றுகை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன. http://onlineuthayan.com/News_More.php?id=390603919215147987#
-
- 1 reply
- 430 views
-
-
இலங்கைக்கு இந்தியா இந்த ஆண்டு ரூ. 500 கோடியை இலவசமாக வழங்குகிறது. இது முந்தைய ஆண்டை காட்டிலும் ரூ. 210 கோடி கூடுதலாகும். இந்தியா அதன் அண்டை நாடுகளுக்கு உதவி செய்கிறது. அதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ரூ. 5,550 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் இலங்கைக்கு ரூ. 500 கோடி மானியமாக வழங்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில் ரூ. 290 கோடி வழங்கப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டில் ரூ. 181.84 கோடியே வழங்கப்பட்டது. ஆகவே கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக ரூ. 210 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்களை மறுகுடியமர்வு செய்ய இலங்கை அரசு பயன்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு தமிழக கட்…
-
- 2 replies
- 703 views
-
-
"இலங்கைக்கு எதிரா எதுவும் செய்ய முடியாது!' ""இலங்கைக்கு பொருளாதார தடையெல்லாம் விதிக்க முடியாதுன்னு, மனசுல பட்டதை பட்டுன்னு சொல்லிட்டார் பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அன்வர்பாய். ""யாருங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.""காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் தான்... பார்லிமென்ட் கூட்டத் தொடரின் போது, தமிழகத்தை சேர்ந்த எம்.பி., க்கள் சிலரோட, ராகுல், இலங்கை தமிழர்கள் பிரச்னை தொடர்பா ஆலோசனை நடத்தினாரு... அப்ப, "இலங்கை தமிழர்களுக்கு தேவையான உதவிகளை, காங்கிரஸ் ஆட்சி தான் செய்துருக்கு... இலங்கை தமிழர்களுக்கு, நேரு, இந்திரா, ராஜிவ் ஆட்சிக் காலத்துல இத்தனை உதவிகளை செஞ்சிருக்காங்க'ன்னு, எல்லா உதவிகளையும், அப்படியே பட்டியலிட்டு சொன்னாரு... கூடவே, "தனி ஈழம் கோரிக்கையை ஆதரிக்க…
-
- 2 replies
- 703 views
-
-
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று டி.ராஜேந்தர் கண்டன ஆர்ப்பாட்டம் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் வலியுறுத்தினார். இலங்கை அரசை கண்டித்து லட்சிய திமுக தலைவர்டி.ராஜேந்தர் தலைமையில் வள்ளுவர் கோட்டம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ‘‘பாலசந்திரனை கொன்னீங்களடா பாவி, உங்க பாவங்களை மன்னிக்காதுடா ஆவி!, ராஜபக்ச நீ செய்த பாவமெல்லாம் நிக்குதய்யா லைனா, உன்ன தண்டிக்காம விடாது ஐநா! இந்திய அரசே இலங்கைக்கு வால் பிடிக்காதே!, நம்மளவன் நடிக்கிறான், அதான் சிங்களவன் அடிக்கிறான்! தமிழினமே தூங்காதே, ஈழத்தமிழர் இதயம் தாங்காதே! இரக்கமில்லா காங்கிரஸ் …
-
- 0 replies
- 558 views
-
-
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி ஒரு வீடியோவை சனல் 4 என்ற தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது. இதனை தற்போது ஆரம்பமாகியுள்ள ஐ.நா வின் மனித உரிமைகள் மாநாட்டில் திரையிடுவதற்கும் குறிப்பிட்ட தொலைக்காட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்ஷயை எதிர்த்து தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்கும் போது மனித நேயத்தைப் பரப்பும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாத்திரம் இதற்காக குரல் கொடுக்காதது ஏன்? என்று உணர்வு வார இதழின் வாசகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைப்பின் மாநிலத் தலைவரும் பிரபல பேச்சாளருமான பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் எக்காரணம் கொண்டும் ஐ.நாவில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க முடியாது என்…
-
- 0 replies
- 689 views
-
-
சென்னை: இனப்படுகொலை நிகழ்த்திய இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமா? ஆதரிக்காதா? என்ற கேள்விகள் ஒருபக்கம்.. இலங்கை நட்பு நாடு என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் விளக்கம் இன்னொரு பக்கம்.. உச்ச கட்டமாக தமிழக மாணவர்கள் போராட்டம்.. இந்நிலையில் 22-ந் தேதி நல்ல செய்தி வரும் என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ப.சிதம்பரத்தின் 'சைலன்ட்' ரோல் 'லாபி' ரோல் எப்போதுமே உண்டு. இலங்கை இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் சுப. வீரபாண்டியன், கனிமொழி வழியே ப.சிதம்பரத்தின் மூலமாக மத்திய அரசுடன் பேச்சு நடத்தியதாகவும் சொல்லப்படுவது உண்டு. தற்போது மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தின் குக்கி…
-
- 4 replies
- 1.2k views
-
-
இலங்கைக்கு எதிராக ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சதீவில் போராட்டத்திற்கு முஸ்தீபு (ஆர்.யசி) இந்திய தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்திலும், கச்சத்தீவு ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் மீறுவதை கண்டித்தும் ராமேஸ்வரம் மீனவர்கள் இம்மாதம் 23 ஆம் திகதி தமது மீன்பிடி விசைப்படகுகளில் கறுப்புக் கொடி ஏற்றி கச்சத்தீவு நோக்கி சென்று போராட்டம் நடத்தவுள்ளதாக ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்கம் அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் காரைநகர் கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 26 இந்திய இராமேஸ்வரம் மீனவர்களை நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதிமன்றம் வி…
-
- 1 reply
- 739 views
-
-
இலங்கைக்கு எதிரான ஐ.நா.தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்- ப சிதம்பரம் இலங்கை இறுதிக்கட்ட போரின்போது தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசை பொறுப்பேற்க வைக்கும் தீர்மானம் ஒன்று ஐ.நா.வில் நாளை (திங்கட்கிழமை) வாக்கெடுப்புக்கு வருகிறது.தங்கள் நாட்டுக்கு எதிரான இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என இந்தியா உள்ளிட்ட நாடுகளை இலங்கை அரசு கேட்டுக்கொண்டு உள்ளது. இதை ஏற்று இந்தியாவும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். …
-
- 0 replies
- 578 views
-
-
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை பரிசீலிக்காது நிராகரித்தமைக்கு பாஜக கண்டனம் இலங்கைக்கு எதிரான தமிழக சட்டமன்ற தீர்மானத்தை மத்திய அரசு பரிசீலிக்காமல் நிராகரித்ததற்கு பாரதிய ஜனதா கட்சி கண்டனம் தெரிவிப்பதாக இல.கணேசன் கூறினார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசன் நேற்று சேலத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக சட்டமன்றத்தில் இலங்கைக்கு எதிராக முதல்வர் கொண்டுவந்த 3 தீர்மானத்தை மத்திய அரசு பரிசீலனை கூட செய்யாமல் நிராகரித்துள்ளது. இதனை வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அறிவித்துள்ளார். ஒரு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம், அம்மாநில மக்களின் எண்ணம். அதனை இந்த மைனாரிட்டி காங்கிரஸ் அரசு, நிர…
-
- 5 replies
- 1.3k views
-
-
இலங்கைக்கு எதிரான போராட்டம் தமிழக சிறைகளுக்கும் பரவியது! [saturday, 2013-03-16 09:06:54] இலங்கைக்கு எதிராக, ஐ.நா., வில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டி, கோவை மத்திய சிறையில், நேற்று கைதிகள், ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இலங்கையில் நடந்த போரில், இனப் படுகொலையில் ஈடுபட்ட ராஜபக்ஷேவை, சர்வதேச குற்றவாளியாக அறிவித்து, தண்டிக்க வேண்டும்; இலங்கைக்கு எதிராக, ஐ.நா.,வில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டும். இலங்கை மீது, இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உண்ணாவிரதம், மறியல், முற்றுகை, பேரணி, மனிதசங்கிலி உட்பட, பல போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில…
-
- 0 replies
- 536 views
-
-
இலங்கைக்கு கஞ்சா கடத்தினாரா யூடியூபர்? 270 கிலோ மூட்டைகள் சிக்கிய பின்னணி என்ன? பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, நாகை கடலோர பகுதியில் ஃபைபர் படகில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகளுடன் சுங்கத்துறை அதிகாரிகள் நாகையில் இருந்து பைபர் படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருந்த 270 கிலோ கஞ்சா, நாகை மாவட்ட சுங்கத்துறை அதிகாரிகளால் பைபர் படகுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 'நாகை மீனவன்' யூடியூப் பக்கத்தை நடத்தி வரும் குணசீலன் உட்பட நான்கு சந்தேக நபர்களை சுங்கத்துறை அதிகாரிகள்…
-
- 0 replies
- 674 views
- 1 follower
-
-
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த துப்பாக்கிகளுடன் கைதான தமிழக பெண்ணுக்கு விளக்கமறியல்! இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்ட தமிழக பெண் உள்ளிட்ட நால்வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் நால்வரையும் நேற்று (திங்கட்கிழமை) ராமநாதபுரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ராமநாதபுரம் – உச்சிப்புளி அருகே உள்ள கிராமத்தில் வள்ளி (42) என்ற பெண் நேற்…
-
- 0 replies
- 443 views
-
-
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த.. கிருமி நாசினி பொலிஸாரினால் பறிமுதல்! தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு அண்மைகாலமாக மஞ்சள், கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருவதும் பொலிஸார் அவற்றை சுற்றி வளைத்து பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் கியூ பிரிவு பொலிஸார் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர்கள் வேல்ராஜ், ஜீவமணி தர்மராஜ், சுரேஷ் கந்தசாமி,சிறப்பு உதவி ஆய்வாளர் மாரி, தலைமை காவலர் ராமர், முதல்நிலைக் காவலர் இருதய ராஜ் குமார் உள்ளிட்டோர் தூத்துக்குடி வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திரேஸ்புரம் கடற்கரையில் இன்று (புதன்கிழமை) காலை தீவிர ரோ…
-
- 0 replies
- 193 views
-
-
இலங்கைக்கு கடத்தவிருந்த பெருமளவிலான கஞ்சா மீட்பு : ஒருவர் கைது இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த பெருந்தொகையான கஞ்சா போதைப்பொருளுடன் கடத்தலில் ஈடுபட்ட நபரொருவரை இராமநாதபுரம் சுங்கத்துறையினர் கைதுசெய்துள்ளனர். இலங்கைக்கு கடத்தவிருந்த பத்து இலட்சம் ரூபாமதிப்பிலான 150 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை இராமநாதபுரம் சுங்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இராமநாதபுரம் அருகே நொச்சியூராணி கடற்கரை பகுதியில் வைத்து குறித்த கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கார்த்தி என்பவரை கைதுசெய்துள்ள இராமநாதபுரம் சுங்கத்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சம்பவத்து…
-
- 0 replies
- 294 views
-
-
இலங்கைக்கு கடல்வழியாக கடத்தவிருந்த கேரள கஞ்சா மீட்பு : கடத்தல்காரர்கள் தப்பியோட்டம் மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 30 இலட்சம் ரூபா மதிப்பிலான கஞ்சா மற்றும் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய சொகுசு காரை பறிமுதல் செய்த மண்டபம் பொலிஸார் தப்பியோடிய கடத்தல்காரர்களை தனி படை அமைத்து தேடி வருகின்றனர். மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு படகுமூலம் கேரளா கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்த இருப்பதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனையடுத்து மண்டபம் பொலிஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராமேஸ்வரம் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அரியமாண் கடற்கரை அருக…
-
- 0 replies
- 278 views
-
-
எஸ்.றொசேரியன் லெம்பேட் பல நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தியமை தொடர்பில் வெளிநாட்டவர் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அருகே உள்ள தாள முத்து நகர் முத்தரையர் கடற்கரை பகுதியில் வெளிநாட்டைச் சேர்ந்தவர் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றி வருவதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு நேற்று (11) மாலை தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து கியூ பிரிவு பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு சுற்றிக் கொண்டு இருந்த வெளிநாட்டவரை மடக்கிப் பிடித்து கியூ பிரிவு பொலிஸார் அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதன்போது குறித்த நபர் இங்கிலாந்து பாஸ்போர்ட் மற்றும் இந்திய, இலங்கை பணத்தை வைத்திருந்தமை தெரியவந்தது. மேலு…
-
- 3 replies
- 693 views
-