Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 19 JUN, 2025 | 03:33 PM விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படத்தை பயன்படுத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்க கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் எல்.கே.சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள சீமான், கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கு இடையிலான சண்டையின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனை, போர் முனையில் சந்தித்து பேசியதாகவும், அதன் பிறகு ஏகே 47 ரக துப்பாக்கியால் போர் பயிற்சி எடுத்ததாகவும் தமிழகத்தில் பரப்புரை மேற்கொண்டு வருக…

  2. படக்குறிப்பு, உயிரிழந்த காவலாளி அஜித் குமார் கட்டுரை தகவல் பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 30 ஜூன் 2025, 04:32 GMT புதுப்பிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நகை திருட்டு புகாரின் பேரில் தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்தார். சனிக்கிழமை இரவு அஜித்குமார் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினரிடம் போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் கடுமையாக தாக்கியதே அஜித்குமார் உயிரிழக்கக் காரணம் என்று குற்றம்சாட்டி அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மடப்புரம் கிராம மக்கள் காவல் நிலைய முற்றுகையிலும் ஈடுபட்டனர். இது தொடர்பாக 6 தனிப்படை காவலர்கள் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்க…

  3. ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிடும் திமுகவின் சிம்லா முத்துசோழன் யார்? சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக சார்பில் சிம்லா முத்துசோழன் போட்டியிடுகிறார். ஆர்.கே.நகர் தொகுதியில் தமிழக முதல்வர் மீண்டும் போட்டியிடுகிறார் என்று அறிவிப்பு வெளி வந்ததில் இருந்தே, அவரை எதிர்த்துப் போட்டியிடப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் இன்று மாலை திமுக தலைமை வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில், ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக சிம்லா முத்துசோழன் போட்டியிடுகிறார் என்று அறிவிப்பு வெளியானது.இதனையடுத்து சிம்லா முத்துசோழன் யார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிம்லா முத்துசோழன் முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியனின் மருமக…

  4. 'ஆப்ரேஷன் அ.தி.மு.க.' - அமித் ஷா வகுத்த பி.ஜேபி. வியூகம்! மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசு, தமிழக அரசுக்கு எதிராக சாட்டையைச் சுழற்றி வருகிறது. அதன் ஒரு கட்டம்தான், தேர்தல் நேரத்தில் பறக்கும் படை ரெய்டு நடத்தி கைப்பற்றும் பணக்குவியல்கள். இதுவரை இந்தியாவிலேயே முதல்முறையாக தேர்தல் கமிஷன் அதிகாரிகளுடன் வருமானவரித்துறை அதிகாரிகளும் இணைந்தே ரெய்டு நடத்த களத்தில் இறங்கியுள்ளனர். இந்த மாதத்தில் இதுவரை 55 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். கணக்கு காட்ட முடியாத பணம் இவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் 125 ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளை தமிழகத்துக்கு அனுப்பியுள்ளது மத்திய நிதித்துறைச் செயலகம். இவர்களின் தலைமையின் கீழ் சுமார் 300 அதிகாரிகள் களத்தில் உள்ளனர். இவர்கள…

  5. 'வைகோவை இப்போதுதான் புரிந்து கொண்டேன்!' - வீரலட்சுமியின் ஆதங்கம் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகும் முடிவை அறிவித்திருக்கிறார் தமிழர் முன்னேற்றப்படையின் தலைவர் வீரலட்சுமி. ' வைகோவிடம் கொள்கை முரண்பாடு ஏற்பட்டதால் விலகுகிறோம். அவரைப் பற்றி இப்போதுதான் புரிந்து கொண்டோம்' என்கிறார் வீரலட்சுமி. ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவின் முயற்சியால், தமிழர் முன்னேற்றப்படையும் மக்கள் நலக் கூட்டணிக்குள் அங்கம் வகித்தது. ஒரே ஒரு சட்டமன்றத் தொகுதியை ஒதுக்கினார் வைகோ. பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்ட வீரலட்சுமி, 20 ஆயிரம் ஓட்டுக்களைப் பெற்று தோல்வியைத் தழுவினார். இந்நிலையில், இன்று தன்னுடைய முகநூல் பக்கத்தில், ' மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகுகிறோம்' எ…

    • 1 reply
    • 923 views
  6. அப்போலோ வளர்ந்த கதையும், ஜெயலலிதா மருத்துவச் செலவும்...! "அரசாங்க ஹாஸ்பிடல் வேண்டாம், என்ன செலவானாலும் சரி, பெஸ்ட் டிரீட்மென்ட் வேணும்ன்னு வர்றவங்களுக்காக வெளிநாட்டுல இருந்து விலை உயர்ந்த கருவிகள் வரவழைக்கப் போறோம். டாக்டர்கள் கூட வெளிநாட்டுல இருந்து வரப் போறாங்க. இதன் மூலமா வெளிநாட்டுப் பயணக் கட்டணம்,நேர விரயம்,மொழிப் பிரச்னை ஏதும் இல்லாம சிகிச்சையைக் குறைந்த செலவுல எடுக்கலாம் " 33 ஆண்டுகளுக்கு முன்பு அப்போலோ ஆரம்பிக்கப்பட்ட போது பிரதாப் ரெட்டி சொன்ன வார்த்தைகள்தான் இவை. ஆந்திர மாநிலம் சித்தூரை பூர்வீகமாகக் கொண்ட ரெட்டி படித்தது சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில். 1983-ம் ஆண்டு சிற…

  7. இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்இ இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. இவர்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிம்புவும் மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இன்று சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் பந்தலுக்கு சென்ற சிம்புஇ அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடுஇ மனதை தளரவிடாமல் தைரியமாக இருங்கள் என ஆறுதலும் கூறியுள்ளார்…

  8. தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ பன்னீர்செல்வம் பதவியேற்றார்! தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ பன்னீர்செல்வம் பதவியேற்றார். சென்னை: தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானதைத் தொடர்ந்து புதிய முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவால் 75 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். திங்கள்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் ஜெயலலிதா காலமானதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியாவதற்கு சற்று முன்னதாக நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அதிமுக சட்டசபை கட்சித் தலைவராக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தம…

  9. நிரப்ப முடியாத இடைவெளியில் நீடிக்கப்போவது யார் ? ஜெய­ல­லி­தா­வுக்கு அடுத்து அ.தி.­மு.­க.வின் தலைமை யார் ..-? எதிர்­பார்ப்­புடன் நாடே காத்­தி­ருக்­கின்­றது. ஜெய­ல­லி­தாவின் வெற்­றி­டத்தை நிரப்ப கூடிய வகையில் அ.தி.மு.க.வில் எவரும் இல்­லாத போதிலும் அதன் அடுத்த தலை­மையை ஜெய­ல­லி­தாவின் நிழ­லா­கவும் உற­வா­கவும் கடை­சி­வரை இருந்த அவ­ரது தோழி சசி­கலா கைப்பற்­றக்­கூடும் என்­பதே அனை­வ­ரது ஊக­மா­கவும் உள்­ளது. ஆயினும் , அ.தி.மு.க. தலைமை அரி­ய­ணையில் ஜெய­ல­லி­தாவின் தோழி சசி­கலா அமர்த்­தப்­ப­டு­வாரா அல்­லது நிரா­க­ரிக்­கப்­ப­டு­வாரா என்ற விவாதம் வீதி­தோறும் நடை­பெற்­று­வ­ரு­கின்­றது. அ.தி.மு.க.வில் தன்­னி­க­ரில்லா தலை­வ­ராக விளங்­கிய ஜெய­ல­லி­தாவின் மறை­வ…

  10. ஆயிரம் கோடிகளை அள்ளுவது எப்படி? ரெய்டில் வெளியான 'சகல சந்தோஷங்கள்'! சென்னையில் சிங்கிள் டீக்கு வழியில்லாமல் அலைந்த சேகர் ரெட்டியின் உறவினர் ஒருவருக்கு இன்று பல கோடி மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாக ரகசிய தகவல்கள் வெளியாகி உள்ளன. தொழிலதிபர் சேகர்ரெட்டியைத் தொடர்ந்து முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீடு, அலுவலகங்கள் உள்பட 13 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. சோதனையில் நகை, பணம், டைரி, ஆவணங்கள் சிக்கின. அந்த டைரியில் ராம மோகன ராவிடம் நெருக்கமானவர்களின் விவரங்கள் உள்ளன. அதன்அடிப்படையில் வருமான வரித்துறையின் அடுத்தகட்ட அதிரடியை தொடங்கவுள்ளது. இந்நிலையில் வெளியுலகத்துக்குத் தெரியாமல் சேகர் ரெட்டியின் உறவினர் ஒருவர் சென்னையை அடுத்த ஆவடியில் கோல…

  11. 27 ஏப்ரல் 2013 விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகில் 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அதே பகுதியைச் சேர்ந்த 7 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார்பட்டியை சேர்ந்த தொழிலாளி ஒருவரின் மகளான 3 வயது சிறுமி, நேற்று மாலை தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தாள். அந்த சிறுமி திடீரென காணாமல் போனாள். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடினர். அப்போது அவர்களது பக்கத்து வீட்டில இருந்து சிறுமியின் அழுகுரல் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டுக்குள் அதிரடியாக சென்று பார்த்தனர். அப்போது அங்கு 7 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது பள்ளி மாணவன் சிறுமிய…

  12. * அ.தி.மு.க., ஆதரவுக் கூட்டத்தை அழைத்து வர...ரூ.200!:* எதிர்ப்பாளர்களைச் சமாளிக்க 'படியளப்பு' தீவிரம் அ.தி.மு.க.,வில், ஆதரவுக் கூட்டத்தை அழைத்து வர, தலைக்கு, 200 ரூபாய் பட்டுவாடா செய்யப்படும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. சசிகலா தலைமைக்கு, தொண்டர்களிடமும், மக்களிடமும் எழுந்துள்ள எதிர்ப்புகளை சமாளிக்க, 'படியளப்பு' ஏற்பாடுகளில், நிர்வாகிகள் தீவிரம் காட்ட துவங்கி உள்ளனர். அ.தி.மு.க., பொதுச்செயலராக நியமிக்கப்பட்டுள்ள சசிகலா, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள, கட்சி தலைமை அலுவலகத்தில், மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இரண்டாவது நாளாக நேற்று, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், சேலம், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளை, அவர் சந்தித்தா…

  13. தமிழகத்தில் அசாதாரண சூழல் நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு சென்னை:''தமிழகத்தில் இப்போது நிலவும் அசாதாரண அரசியல் சூழ்நிலையில், சோ கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும்,'' என்று சென்னையில் நேற்று நடந்த 'துக்ளக்' ஆண்டு விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பேசினார். 'துக்ளக்' வார இதழின், 47வது ஆண்டுவிழா, சென்னையில் நேற்று நடந்தது. பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது;சோ இல்லாத இந்த மேடையில் உரையாற்ற வேண்டி வரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. அவர் மருத்துவமனையில் இருந்த பொழுது சென்று பார்த்தபோது மிகவும் கஷ்டமாக இரு…

    • 1 reply
    • 648 views
  14. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்பட்டு, தமிழக அரசை ``மாற்றாந்தாய்'' மனப்பான்மையுடன் நடத்தும் மத்திய காங்கிரஸ் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க. செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.இது குறித்து செயற்குழு நிறைவேற்றிய தீர்மானம் வருமாறு:- கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடனும் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு கண்டனம்! தமிழ் நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பொது விநியோகத் திட்டத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தினை நிறைவேற்ற முயற்சித்தல் சர்க்கரை ஆலைகளின் மீதான கட்டுப்பாட்டை தளர்த்துதல்; குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவையை அளிக்கும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் கொள்முதல் செய்யும் டீசல…

    • 0 replies
    • 400 views
  15. திமுக ஆசைகாட்டியதா?- ஓ.பி.எஸ்.ஸுக்கு சசிகலா கேள்வி அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா | படம்: வி.கணேசன். "திமுகவைச் சேர்ந்த துரைமுருகன் சட்டமன்றத்தில் பேசியது போல், கருத்து வேறு வகையிலும் பரிமாறப்பட்டதா? ஆசைகாட்டப்பட்டதா?" என்று பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அதிமுகவினரை பிரிக்கும் ஆற்றல் யாருக்கும் இல்லை என்றும், மக்கள் மத்தியில் எழுப்பப்படும் குழப்பங்களை உரிய நேரத்தில் நான் தீர்த்து வைப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்ப்புப் போக்கின் தொடர்ச்சியாக, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவசர ஆலோசனைக் கூட்டம்…

  16. கத்திக் குத்து, கலவரம், அதிகாலை 4 மணி! - ஆர்.கே.நகரில் படரும் ‘திடீர்’ அபாயம் #VikatanExclusive அ.தி.மு.க அம்மா அணியின் வேட்பாளர் டி.டி.வி.தினகரனின் பிரசார செயல்பாடுகளை, அதிர்ச்சியோடு கவனித்து வருகின்றன தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்.' அதிகாலை நான்கு மணிக்குத்தான் பண விநியோகத்தைத் தொடங்குகின்றனர் தினகரனின் ஆட்கள். நேற்று பண விநியோகத்தைத் தடுத்ததற்காக தி.மு.க மாணவர் அணியைச் சேர்ந்த இரண்டு பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. கலவர சூழலில் இருக்கிறது ஆர்.கே.நகர்" என்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்களே இருக்கின்றன. அ.தி.மு.க அம்மா அணியின் வேட்பாளர் தினகரன், அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா அணியின் மதுசூதனன…

  17. எம்.ஏ. பரணி தரன் பிபிசி தமிழ் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவசங்கர் பாபா என்று அழைக்கப்படும் சிவசங்கருக்கு எதிராக அவர் நடத்தி வரும் பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவிகள் அளித்துள்ள பாலியல் தொந்தரவு புகார்கள், நாளுக்கு நாள் புதிய சர்ச்சைகளை தோற்றுவித்து வருகின்றன. யார் இந்த சிவசங்கர் பாபா? இவருக்கு எதிராக வலுத்து வரும் சர்ச்சைகள் என்ன? திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் 1949ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி பிறந்தவர் சிவசங்கர். இவரது தந்தை நாராயண சர்மா, தாய் விஜயலட்சுமி. இவரது தந்தை பள்ளி ஆசிரியர். பள்ளிப்படிப்பை சொந்த ஊரிலேயே முடித்த இவர், வேதியியல் துறையில் பட்டப்படிப்பும், சரக்குகள், போக்குவரத்து கையாளல் பிரிவில் முதுகலை படிப்பும் படித்தார். கல்லூரி …

    • 7 replies
    • 1.4k views
  18. சென்னை: சுதந்திர தினத்தன்று சென்னை, கோவை, மதுரை ஆகிய தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கையை அடுத்து, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கும் கூடுதலாக பாதுகாப்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுதந்திர தினம் கொண்டாடப்படும் இடங்களில் தீவிர கண்காணிப்பு பணிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மக்கள் கூடும் பகுதிகளான விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகிய பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கவும் புலனாய்வுத்துறை அறிவுரை வழங்கியுள்ளது. பாகிஸ்தான் கட்டுப்பாட்டில்…

  19. மந்திரிகளின் நாளுக்கு ஒரு பேச்சு, செயலால் கடுப்பு தனித்து செயல்பட பன்னீர் அணியினர் முடிவு சசிகலா அணி அமைச்சர்களின் பேச்சு, நாளுக்கு ஒரு விதமாக இருப்பதாலும், அதற்கு மாறாக, அவர்களின் செயல்பாடுகள் உள்ளதாலும், இணைப்பு பேச்சு நடத்துவது பிரயோஜனமாக இருக்காது என, பன்னீர் அணியினர் கருதுகின்றனர். அதனால், தனி அணியாகவே செயல்பட முடிவு செய்துள்ளனர். அதற்கான ஆயத்த பணிகளையும் முடுக்கிவிட்டு உள்ளனர். அ.தி.மு.க.,வின் இரு அணிகளையும் இணைக்க, இருதரப்பிலும் சிலர் ஆசைப்பட்டனர். பன்னீர் அணியினரோ, 'சசிகலா குடும்பத்தை, முழுமையாக நீக்க வேண்டும்; ஜெ., மறைவில் உள்ள மர்மம் விலக, சி.பி.ஐ., விசாரணை வேண்டும்' என, நி…

  20. சென்னை நகரின் குடிநீர் தேவைகளை மேம்படுத்தும் நோக்கில் ஐந்தாவதாக நீர்த்தேக்கம் ஒன்றை அமைக்கும் பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது. ஒரு குடம் தண்ணீருக்கு காத்திருக்கும் மக்கள் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கண்ணன்கோட்டை மற்றும் தேர்வாய்கண்டிகை ஆகிய கிராமங்களில் இருக்கும் இரு பெரிய ஏரிகளை ஒன்றாக இணைத்து நீரைத் தேக்கி வைக்கும் திட்டம் 330 கோடி ரூபாய்கள் செலவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கத்தில் ஒரு டி எம் சி தண்ணீரை சேமித்து வைக்க முடியும் என்று அரச தரப்பு கூறுகிறது. இதன் மூலம் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் மேம்படும் எனவும் அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது. உபரி நீரைத் தேக்க உதவும் சென்னையில் குடிநீர் பிரச்சினை ஒரு தொடர…

  21. மிஸ்டர் கழுகு: “இனி உங்கள் சின்னம் தாமரை!” ‘‘ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் இருக்கும் அ.தி.மு.க-வின் தலைமை அலுவலகத்தை டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் இருக்கிற பிரதமர் அலுவலகத்துக்கு மாறிவிட்டார்கள் போலிருக்கிறது’’ என்றபடியே கழுகார் என்ட்ரி ஆனார். தான் போடும் அரசியல் புதிர் முடிச்சுகளை அவரே அவிழ்ப்பார் எனக் காத்திருந்தோம். ‘‘கடந்த வாரம் பிரதமர் மோடியை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துவிட்டு வந்தார். இந்த வாரம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் அலுவலகத்தில் அட்டெண்டன்ஸ் போட்டிருக்கிறார். நீட் தேர்வு விலக்கு, வறட்சி நிவாரணம் என பிரதமரைச் சந்திப்பதற்கு காரணங்கள் இருந்தாலும், தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத் திறப்பு, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு வி…

  22. நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய கட்சியோடு கூட்டணி வைத்து தமிழகஅரசியல் களத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி மிகப்பெரிய அங்கீகாரம் பெறும் என தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்தார்.சிதம்பரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நிறுவனர் தி.வேல்முருகன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:தமிழக வாழ்வுரிமை கட்சி தமிழகத்தில் மாபெரும் அரசியல் சக்தியாக வளர்ந்து வருவதை ஆண்ட கட்சி, ஆளும் கட்சி தெரிந்து கொள்ள கிராமங்களிலும், வீடுகள் தோறும் கொடிகள் ஏற்றி சுறு, சுறுப்பாக உழைக்க வேண்டும். த.வா.கவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. தமிழக வாழ்வுரிமை கட்சி மக்கள் சக்தியாக திகழும். …

  23. ’ஜெயலலிதா கைரேகை உண்மைத் தன்மை’: விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கைரேகையின் உண்மைத் தன்மை தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க தலைமைத் தேர்தல் ஆணைய முதன்மைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தபோது திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தது. அதில், வேட்பாளர்களுக்கு கட்சியின் சின்னத்தை ஒதுக்கக் கோரும் மனு ஜெயலலிதாவின் கையெழுத்துக்குப் பதிலாகக் கைரேகையுடன் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த தேர்தலில் அ.தி.மு.க. ச…

  24. 'டைம்' பட்டியலில் இடம்பிடித்த முருகானந்தம் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திலிருந்து வெளியாகும் ‘டைம்’ வார இதழ், உலகில் அதிக செல்வாக்கு மிக்க மனிதர்கள் என்ற 100 பேர் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்துவதற்கான நாப்கின்களை மலிவான விலையில் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அவருடன் சேர்ந்து இந்தியாவிலிருந்து பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். முருகானந்தம் ஒரு ‘சுகாதாரப் போராளி’ என்று அந்த இதழில் வர்ணிக்கப்பட்டுள்ளது. இவர் தன் ம…

  25. கூடங்குளம் அணு உலையில் விபத்து: 6 பேர் காயம் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 6 ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுஉலை 1ல் இருக்கும் டர்பைன் கட்டிடத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, அங்கிருந்த வால்வில் ஏற்பட்ட கசிவால், சுடு நீர் 6 பணியாளர்கள் மீது பட்டது. இன்று மதியம் சுமார் 12.10 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது. இவர்கள் அனைவரும் முதலில் கூடங்குளத்தில் அமைந்துள்ள அணு உலை மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு, நாகர்கோவிலில் உள்ள பார்வதிபுரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்த ஆறு பேரில் ராஜன், பவுல் ராஜ், செந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.