Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை – உடன் அமுலுக்கு வரும் சட்டம். ஒடிசா மாநிலத்தின் கட்டாக் நகரில் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் துணை முதல் மந்திரி பிராவதி பரிடா பங்கேற்றார். அப்போது உரையாற்றிய அவர், மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் ஒருநாள் விடுமுறை வழங்கப்படும் என அறிவித்தார். இத்திட்டம் உடனே அமலுக்கு வருகிறது எனவும் குறிப்பிடடுள்ளார். அரசு பெண் ஊழியர்களுக்கு மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களும் மாதவிடாய் நாட்களில் முதல் அல்லது 2வது நாளில் இந்த விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கேரளா, பீகாரில் மாதவிடாய் விடுமுறை அமலில் உள்ளது. தற்போது இந்தப் பட்டி…

    • 7 replies
    • 524 views
  2. காஷ்மீரில் நடைபெற்ற, பயங்கரவாத தாக்குதல்களுக்கு... பொறுப்பேற்றது, புதிய அமைப்பு! ஜம்மு காஷ்மீரில் 9 இராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட நிலையில், குறித்த சம்பவத்திற்கு புதிய பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாசிசத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற பெயரில் குறித்த பயங்கரவாத அமைப்பு வெளியிட்டுள்ள காணொலியில் ஒக்டோபர் 11 ஆம் திகதி இராணுவத்தினர் சென்ற வாகனத்தை கண்காணித்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காஷ்மீர் மாநிலத்தில் இஸ்லாமியர்கள் அல்லாத மேலும் பல படுகொலைகளை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், காஷ்மீரில் பாதுகாப்பு பணிகளை பலப்படுத்தவும், தீவிரவாதிகளை ஒழிக்கவும் இராணு…

  3. இந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து திரிணமூலுக்கு திரும்பிய முகுல் ராய் புகழாரம் பாஜகவின் தேசிய துணைத் தலைவரான முகுல் ராய், தாய்க் கட்சியான திரிணமூல் காங்கிரஸில் இன்று இணைந்தார். மேற்கு வங்கம் மற்றும் இந்தியாவின் ஒரே தலைவர் மம்தா பானர்ஜி என்று அவர் புகழாரம் சூட்டினார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அடுத்த நிலையில் பொதுச் செயலாளராக இருந்தவர் முகுல் ராய். இவருக்கும் மம்தாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு முற்றியது. இதனால் கட்சி நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த முகுல்ராய், கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கட்சியில் இருந்து விலகினார். அத்துடன் மாநிலங்களவை எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தவர், பாஜகவ…

  4. ரபேல் விமானம்: என்ன தேவை? இந்தியா கடைசியாக வாங்கியது சுகோய் விமானம். ரஷ்யாவிடமிருந்து 1996-ல் வாங்கியதுதான் கடைசி. அதன் பிறகு போர் விமானங்களே வாங்கவில்லை. உள்நாட்டிலேயே போர் விமானம் தயாரிப்பது என்னும் திட்டப்படி, 2001-ல் தேஜஸ் எனப்படும் இலகு ரகப் போர் விமானம் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. ஆனால் உற்பத்தியில் தாமதமாகி 2016-ல்தான் விமானப் படையில் இது சேர்க்கப்பட்டது.இதற்கிடையில் போர் விமானங்களின் தேவை உணரப்பட்டதால் புதிய போர் விமானங்கள் வாங்க முடிவெடுக்கப்பட்டது. மன்மோகன் சிங் ஆட்சியில், 2007-ல் 126 பல்நோக்கு போர் விமானங்கள் வாங்குவதற்கான டெண்டர் கோரப்பட்டது. அதில் பங்கேற்ற பல நாட்டு நிறுவனங்களில் பல்வேறு பரிசீலனைகளுக்குப் பிறகு பிரான்ஸ் நாட்டின் தஸ்ஸோ நிறுவனத்தின…

  5. பாலியல் உறவுக்கு பேரம்: தடயம் கிடைக்காத இரட்டை பெண்கள் கொலையில் சந்தேக நபரை போலீஸ் பிடித்தது எப்படி? கட்டுரை தகவல் எழுதியவர்,பார்கவ் பாரிக் பதவி,பிபிசி குஜராத்திக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் குஜராத்தின் ஆமதாபாத் அருகே கன்பா கிராமத்தில் விறகு வெட்டிய இரு பெண்கள் கத்தியால் குத்தி கொல்லப்பட்டனர். ஆற்றுப் படுகைகளில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டபோதும், சுற்றியிருந்த புதர்களில் பிறரின் காலடிச் சுவடுகள் தென்படவில்லை. மோப்ப நாய், தடயவியல் நிபுணர்கள் ஆய்விலும் எந்த தடயமும் சிக்கவில்லை. எனவே தொழில்நுட்ப ஆய்வு சாத்தியமற்றுப் போனது. வழக்கமாக குளித்த ஐந்தே நிம…

  6. அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்டவாரியத்தின் செய்தித் தொடர்பாளரும், முஸ்லிம் மத குருவுமான மவுலானா கலீல்-உர்-ரஹ்மான் சாஜித் நொமானி மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், ’பெண்களை கல்லூரிக்கு துணையில்லாமல் அனுப்பாதீர்கள். பர்தா அணிந்தும் கூட தனியாக அனுப்பாதீர்கள். மாதிரிப்படம் அப்படி அனுப்புவது பாவமான செயல். பெண்களை கல்லூரி மற்றும் கோச்சிங் சென்டருக்கு துணையில்லாமல் அனுப்பும் பெற்றோரை அல்லா நகரகத்திற்கு அனுப்புவார்’ என்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இது குறித்து, இந்திய ஜனநாயக மதச்சார்பற்ற முஸ்லிம் அமைப்பாளர் ஜாவேத் ஆனந்த் அளித்த பேட்டியில், `நோமானியின் கற்பனையான ஆல…

  7. இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிப்பு – பிரதமர் புலிகளின் எண்ணிக்கை ஐந்தாண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, புலிகள் பாதுகாப்பாக வாழ்வதற்கு உகந்த இடமாக இந்தியா மாறியுள்ளதாக குறிப்பிட்டார். சர்வதேச புலிகள் தினம் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் உள்ள புலிகளின் எண்ணிக்கை தொடர்பாக கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு விபரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் வெளியிட்டார். அதன் பின்னர் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த 2014ஆம் ஆண்டில் 1400ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது 2,977 ஆக அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டிய மோடி…

  8. மக்கள் கரோனா வைரஸின் பிடியில் சிக்கி இருக்கும்போது தேர்தல் வெற்றியைக் கொண்டாடுவதற்கு இது உகந்த நேரம் இல்லை. இது மக்களின் வெற்றிதான் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். கேரளாவில் நடந்த 140 தொகுதிகளுக்கான தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி தலைமையிலான எல்டிஎப் கூட்டணி 99 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 41 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. தர்மடம் தொகுதியில் போட்டியி்ட்ட முதல்வர் பினராயி விஜயன் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றிக்குப்பின் முதல்வர் பினராயி விஜயன் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந…

  9. இந்தியா - சீனா - நேபாளம் மும்முனை முரண்... பின்னணியில் கயிலாயத்தைக் கைப்பற்றும் பா.ஜ.க-வின் திட்டமா? சீனாவைச் சுற்றியுள்ள மங்கோலியா, தென்கொரியா, ஜப்பான், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளுடனான உறவை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது இந்தியா. பிரீமியம் ஸ்டோரி இந்திய - நேபாள எல்லையில், இந்திய நிலப்பரப்புக்குள் 335 சதுர கிலோமீட்டர் பரப்புக்குச் சொந்தம் கோரும் வரைபடத்துக்கான சட்டத்திருத்தத்துக்கு ஜூன் 13-ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது நேபாள நாடாளுமன்றம். அடுத்த இரு நாள்களில் இந்திய - சீன எல்லையில் இருதரப்பு ராணுவ வீரர்களுக்குள் கலவரம் வெடித்து, உயிர்ப்பலிகள் ஏற்பட்டுள்ளன. இன்னொரு பக்கம், `நேபாளத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைச் சரிவரச் செய்…

  10. இந்தியாவில் இனிமேல் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது. பட்டாசு மற்றும் தீபாவளி அன்று உபயோகப்படுத்தப்படும் பல்வேறு வெடிப்பொருட்களால் நாடு முழுவதும் காற்று மாசுபடுவதாகவும் மக்களுக்கு இதனால் பல்வேறு சுவாசப் பிரச்சனைகள் வருவதாகவும் கூறி பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனையை தடை செய்ய வேண்டுமென பொதுநல வழக்கொன்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று ஏ கே சிக்ரி மற்றும் அஷோக் பூஷன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பளித்த நீதிபதிகள் “தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். குறிப்பிட்ட பொது இடங்களில் மட்டுமே வெடிக்க வேண்டும். கிறிஸ்துமஸ…

  11. இஸ்லாமிய பயங்கரவாதமே உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தல் – ட்ரம்ப் இஸ்லாமிய பயங்கரவாதம்தான் உலகின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இதில் இருந்து நாடுகளை பாதுகாக்க இணைந்து பணியாற்றுவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இரண்டு நாள் விஜயமாக இன்று (திங்கட்கிழமை) இந்தியா வருகை தந்துள்ள ட்ரம்ப் அகமதாபாத் கிரிகெட் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், இந்தியாவிற்கு எப்போதும் உண்மையான நட்பு நாடாக அமெரிக்க விளங்கும் என உறுதியளித்தார். இந்தியாவை அமெரிக்க நேசிக்கிறது எனவும், இந்தியா மீது அமெரிக்க மதிப்புகொள்வதாகவும் தெரிவித்த ட…

  12. இந்திய கடற்படைத் தளங்களை உளவு பார்க்கும் சீனக் கப்பல்! இந்திய கடற்படைத் தளங்களை உளவு பார்ப்பதற்காக சீனக் கப்பலொன்று அந்தமான் நிகோபார் தீவுகள் அருகே ஊடுருவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் கடற்பரப்பில் புகுந்த அந்தக் கப்பல் அங்கேயே சில தினங்கள் தங்கியிருந்து உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அந்தமான்- நிகோபார் தீவுகளின் அருகே காணப்படுகின்ற இந்திய கடற்படையின் தளத்தை உளவுபார்க்க குறித்த கப்பல் அனுப்பி வைக்கப்பட்டதாக இந்திய உளவுத்துறையினர் மத்திய அரசுக்கு தகவல் அனுப்பியுள்ளனர். சீனாவின் அதிநவீன உளவு கப்பல் இந்திய கடல்பகுதியில் ஊடுருவியிருப்பது பாதுகாப்பு தொடர்பான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகி…

  13. ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கே சவால் விட்ட கிராமத்து பெண்கள்: பள்ளிக்கே செல்லாமல் வங்கி தொடங்கிய கதை கட்டுரை தகவல் எழுதியவர்,அம்ருதா துர்வே பதவி,பிபிசி மராத்தி 28 ஜனவரி 2023, 09:40 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் வங்கி என்பது அனைவருக்கும் பொதுவானது. ஆனால், பெண்களாகவே தொடங்கி, பெண்களுக்காகவே நடத்தப்படும், பெண்களுக்கு மட்டுமே கடன் வழங்கும் வங்கியைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளீர்களா! அப்படியொரு வங்கி மகாராஷ்டிரா மாநிலத்தில் செயல்பட்டு வருகிறது. மான் தேஷி மகிளா கூட்டுறவு வங்கி என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்த வங்கியைத் தொடங்கியது படிப்பறிவில்லாத…

  14. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போதை விருந்துகளில் போதைக்காக பாம்பு விஷம் பயன்படுத்தப்பட்டதாக யூடியூபர் எல்விஷ் யாதவ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி குஜராத்தி குழு பதவி,ㅤ 5 நவம்பர் 2023 போதை விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பாம்பு விஷத்தை வினியோகித்ததாக யூடியூபரான எல்விஷ் யாதவ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மீது இது தொடர்பாக புகார் ஒன்றும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை அடுத்து, எல்விஸ் மற்றும் அவருடன் சேர்த்து ஏழு பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த விருந்து நிகழ்ச்சியில் பாம்பு விஷம் கொடுத்ததற்காக இந்த முதல் தகவல் அறிக…

  15. பாராளுமன்ற தேர்தல் திகதி இன்று அறிவிப்பு – ராணுவ வீரர்களின் புகைப்படங்கள் பயன்படுத்த தடை March 10, 2019 2019 பாராளுமன்ற தேர்தல் திகதியின் இன்று மாலை தேர்தல் ஆணையகம் அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்புக்கு தேர்தல் ஆணையகம் ஏற்பாடு செய்துள்ள நிலையில் அதன் போது 2019 பாராளுமன்ற தேர்தல் திகதியை அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒடிசா மற்றும் சிக்கிம் மாநில சட்டசபை தேர்தலுக்கான திகதியும் அறிவிக்கப்பட இருக்கிறது. தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறாமல் உள்ள 21 தொகுதிகளுக்கான திகதியும் அறிவிக்கப்படும் எனவும் பாராளுமன்ற தேர்தல் 7 அல்லது 8 கட்டங்களாக நடத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இத…

  16. மோடியின் பட்டப்படிப்பு விபரம் அவசியம் இல்லை! கேட்டவருக்கு அபராதம்! இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு விபரங்களை வெளியிட குஜராத் பல்கலைக்கழகத்திற்கு விடுக்கப்பட்ட உத்தரவை அந்த மாநில மேல் நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது. அத்துடன் இந்த விபரங்களை கேட்டதற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் உயர்நீதிமன்றம் 25ஆயிரம் ரூபாவை அபராதமாக விதித்துள்ளது. இந்த அபராத பணத்தை கெஜ்ரிவால் குஜராத் மாநில சட்ட சேவைகள் ஆணையத்தில் வைப்புச் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக 2016ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் முதுகலை பட்டம் குறித்த தகவல்களை அளிக்குமாறு குஜராத் பல்கலை…

  17. படத்தின் காப்புரிமைFACEBOOK பப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட சசீந்திரன் முத்துவேல் பதவியேற்றுள்ளார். பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடைப்பட்ட நீர்ப்பரப்பில் அமைந்துள்ள 16 தீவு நாடுகளில் மிகப் பெரிய நாடாக விளங்கும் பப்புவா நியூ கினியின் மத்திய அமைச்சராக பதவியேற்கும் முதல் தமிழர் மட்டுமல்ல முதல் இந்தியரும் சசீந்திரன் முத்துவேல்தான். மத்திய அமைச்சராக ஜூன் 7ஆம் தேதி பதவியேற்பதற்கு முன்புவரை, இவர் அந்நாட்டிலுள்ள நியூ வெஸ்ட் பிரிட்டன் மாகாணத்தின் ஆளுநராக ஆறாண்டுகளாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பட்டாசுக்கு பெயர்போன சிவகாசியில் பிறந்து, தமிழ்வழியில் பள்ளிக் க…

    • 1 reply
    • 518 views
  18. இலங்கையின் அரசியல் மாற்றம் குறித்து அவதானம்: இந்திய வெளியுறவுத்துறை இலங்கையில் ஏற்பட்டுவரும் அரசியல் மாற்றங்கள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் பிரதமர் பதவி தொடர்பான சர்ச்சைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைகள் குறித்து இந்திய அரசு தொடர்ந்தும் அவதானித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் இவ்விடயம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறையின் பேச்சாளர் ரவீஷ்குமார் தெரிவிக்கையில், ”இலங்கை நெருங்கிய அயல்நாடு என்ற வகையில், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு செயல்முறைகள் மதிக்கப்படும் என்று நம்புகிறோம். இலங்கை மக்…

  19. குற்றப்பின்னணி உடையவர்களை வேட்பாளர்களாக தெரிவு செய்தது ஏன்? – நீதிமன்றம் கேள்வி! : Krushnamoorthy Dushanthini குற்றப்பின்னணி உடையவர்களை வேட்பாளர்களாக தெரிவு செய்ததன் காரணத்தை வெளியிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குற்றப்பின்னணி வேட்பாளர்கள் தொடர்பான தகவலை வெளியிடும்படி 2018-ல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் ஆணையம் செயற்படுத்தவில்லை எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போது குற்றப்பின்னணி உடைய வேட்பாளர்களின் எண்ணிக்கை கடந்த 4 பொதுத்தேர்தல்களில் அபாயகரமான அளவு உயர்ந்…

  20. இந்திய பிரதமர் மோடிக்கு அமைதிக்கான மகாத்மா காந்தி விருது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ‘தூய்மை இந்தியா’, ‘மேக் இன் இந்தியா’ போன்ற திட்டங்களுக்காக அமைதிக்கான ‘மகாத்மா காந்தி’ விருது தென்கொரிய அரசு சார்பில் வழங்கப்படுகின்றது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (வியாழக்கிழமை) தென்கொரியா சென்றடைந்த பிரதமர் சியோலில் உள்ள புகழ்பெற்ற யொன்சி (Yonsei) பல்கலைக்கழக்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு நிறுவப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை மோடி மற்றும் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் மற்றும் ஐ.நா சபை முன்னாள் பொதுச்செயலாளர் பான் கி மூன் ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் கலந்து பேசிய பிரதமர் மோடி, மகாத்மா காந்தியின் 150ஆவது …

  21. கொரோனாவுக்குப் பிந்தைய பிறப்பு விகிதம்: இந்தியா முதலிடம்! மின்னம்பலம் யுனிசெஃப் அறிக்கையின்படி, இந்த ஆண்டு மார்ச் முதல் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் பெரிய அளவில் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. யுனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஆண்டின் மீதமுள்ள மாதங்களில் 20 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பிறக்கும் என்று கூறுகிறது. "இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் பெரும்பாலானவை தொற்றுநோய்க்கு முன்பே அதிக குழந்தை பிறந்த இறப்பு விகிதங்களைக் கொண்டிருந்தன. மேலும் இந்த அளவுகள் கோவிட்-19 நிலைமைகளுடன் அதிகரிப்பதைக் காணலாம்," எனக் கூறியுள்ளது. ஒப்ப…

  22. "எல்லைக்கு அப்பால் சீனா கட்டுமானம் செய்ய முயன்றது, தடுத்ததால் தாக்கியது" - இந்திய அரசு பதில் Getty Images மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலேயே தங்கள் பகுதியில் சீனா கட்டுமானம் மேற்கொள்ள முயன்றது என்றும், ஒப்பந்தத்தை மீறும் இந்த முயற்சியை முறியடித்ததால் சீனத் தரப்பு வன்முறைத் தாக்குதலைக் கையில் எடுத்தது என்றும் கல்வான் பள்ளத்தாக்கு மோதல் குறித்து இந்திய வெளியுறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது. லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15ம் தேதி இரவு இந்திய - சீன எல்லைப்புறத்தில் இருநாட்டுப் படையினர் இடையே நடந்த கைகலப்பில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டனர். சீனத் தரப்பு சேதாரம் பற்றி அதிகாரபூர்வத் தகவல் இல்லை. இந்த மோதல் சம்பவத்தில் நடந்தது என்ன என்ப…

    • 1 reply
    • 516 views
  23. இந்தியாவில் பறவைக்காய்ச்சல் அபாயம் இந்தியாவில் பல மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பரவி வருகிறது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் சில பகுதிகளில் ஏராளமான காக்கைகள் உயிரிழந்துள்ளன. இதையடுத்து, சுகாதாரத் துறையினர் நடத்திய பரிசோதனையில், அவற்றுக்கு பறவைக் காய்ச்சல் இருந்தது தெரியவந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு நோய் ஆராய்ச்சி நிலையத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 8 மாதிரிகளில் 5 மாதிரிகளில் பறவைக்காய்ச்சல் (H5N8) தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. நோய்தாக்கம் உள்ள பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, வெளி இடங்களில் இருந்து வாத்துகள் மற்றும் தீவனங்கள் அப்பகுதிக்கு வரவும், அங்கிருந்து வெளியே எடுத்துச் செல்லவும் தட…

  24. ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லட்சுமி தேவி புகைபடம் வேண்டும்… அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் ரூபாய்களில் மகாத்மா காந்தி புகைப்படத்துடன் சேர்த்து விநாயகர் மற்றும் லட்சுமி தேவியின் புகைப்படங்களையும் அச்சிட வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தோனேசிய நாட்டின் ரூபாய் நோட்டுகளில் விநாயகர் படம் அச்சிடப்பட்டு இருப்பதாகவும், அதுபோல் இந்திய ரூபாயில் மாற்றம் வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு நாளை அல்லது நாளை மறுநாள் கடிதம் எழுத உள்ளதாகவும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார நிலையை சீர்படுத்தப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கையுடன் சேர்த்த…

  25. திருப்பதி கோவில் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் – சதி கொள்கைக்கு அனுமதிய முடியாது என்கிறது காங்கிரஸ். ஆந்திர மாநிலத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் திருப்பதி கோவில் லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தியதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இருப்பினும், அதற்கான வாய்ப்பே கிடையாது என முன்னாள் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த ஆட்சி காலத்தில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாமிச கொழுப்பு, மீன் எண்ணெய், பாமாயில் ஆகியவை கலந்திருந்தது உண்மைதான் என்பதற்கான ஆய்வக ஆதாரத்தை தெலுங்கு தேசம் கட்சி நேற்று மாலை வெளியிட்டது. இதனால் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஏழுமலையானின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.