அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3273 topics in this forum
-
கொரோனா இருப்பதாக கூறி ஓடும் பஸ்சில் இருந்து இளம் பெண் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பேருந்தில் பயணம் சென்று கொண்டிருந்த இளம்பெண் திடீரென வெளியே தூக்கி வீசப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார். பதிவு: ஜூலை 10, 2020 11:43 AM புதுடெல்லி டெல்லியில் இருந்து ஷிகோகாபாத்திற்கு பேருந்து ஒன்று சென்றது. அதில் தாயுடன் 19 வயது இளம்பெண் அன்ஷிகா யாதவ் பயணம் செய்தார். இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் அப்பெண்ணிடம் இருந்ததாக சக பயணிகள் சந்தேகமடைந்துள்ளனர். இதுபற்றி ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் பேருந்தை நிறுத்தி ஓட்டுநரும், நடத்துநரும் சேர்ந்து அப்பெண்ணை வெளியே தூக்க…
-
- 0 replies
- 420 views
-
-
அரியானா, பீகார், காஷ்மீரில் தீவிரமடைந்த விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டம் புதுடெல்லி, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணி நடத்தி நாடு முழுவதும் கவனம் ஈர்த்தனர். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்ற பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நாடு முழுவதும் 4 மணி நேர ரெயில் மறியல் போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளையும் அவர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து நாடு முழுவதும் ரெயில் சேவையை உறுதி செய்ய ரெயில்வே அதிகாரிகள் …
-
- 0 replies
- 419 views
-
-
இஸ்லாமாபாத்: இந்திய படைகளுக்கு எதிராக ஆசாத் காஷ்மீர் மக்கள் புனிதப் போர் புரியக்கூடாது என்றும், அது பாகிஸ்தானின் நலன்களுக்கு எதிரானதாகும் எனவும் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்ததை தொடர்ந்து, இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தொடர்ந்து தலையிட்டு வந்த பாகிஸ்தானில், தீபாவளி திருநாளான நேற்று காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. அதில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் மக்கள் பேரணியில் ஈடுபட்டும், போராட்டம் மேற்கொண்டும் இந்தியாவுக்கு எதிரான தங்களின் கருத்தை வெளிப்படுத்தினர். இதை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் இ…
-
- 2 replies
- 419 views
-
-
ரஸ்யா ஜனாதிபதி- இந்திய பிரதமர் சந்திப்பு! ரஸ்யா ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தியா – ரஷ்யா பங்கேற்கும் 12 ஆவது உச்சி மாநாடு, தலைநகர் புதுடெல்லியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஸ்யா ஜனாதிபதி விளாடிமிர் புதின் நேற்று (வியாழக்கிழமை) மாலை இந்தியாவைச் சென்றடைந்தார். புதுடெல்லி விமான நிலையத்தச் சென்றடைந்த புட்டினை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேரடியாகச் சென்று வரவேற்றார். இதன்போது, அவருக்கு இராணுவ மற்றும் செங்கம்பள வரவேற்றுபு அளிக்கப்பட்டது. இதனை அடுத்து, விளாடிமிர் புட்டின் புதுடெல்லியில் அமைந்துள…
-
- 0 replies
- 419 views
-
-
லிவ்-இன் உறவில் இருந்த பெண்ணை கொன்று உடலை ஃப்ரிட்ஜில் வைத்ததாக ஒருவர் கைது - டெல்லியில் இன்னொரு கொடூரம் 48 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,CASPAR BENSON / GETTY IMAGES 'லிவ் - இன்' உறவில் இருந்த பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, அவரது உடலை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்ததாக, உணவக (தாபா) உரிமையாளர் ஒருவரை நேற்று, செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 14, 2023) காவல்துறையினர் கைது செய்ததாக, ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவிக்கிறது. டெல்லி ஒட்டிய நஜஃப்கர், மித்ரோன் கிராமம் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக வழ…
-
- 0 replies
- 419 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ரஜினி வைத்தியநாதன் பதவி,பிபிசி நியூஸ் இருந்துகாக்ஸ் பஜார், வங்கதேசம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மொக்கா புயல் அதிதீவிர புயலாக மாறி தற்போது வங்கதேசம் மற்றும் மியான்மரின் கடலோரப் பகுதிகளை தாக்கி வருகிறது. மொக்கா புயல் அச்சுறுத்தலால் தென்கிழக்கு வங்கதேசத்தில் சுமார் 5 லட்சம் பேர் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறியுள்ளனர். இந்த புயலின் தாக்கம் மிக மோசமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மொக்கா புயல் கரையைக் கடக்கும் போது 170 கி.மீ. வேகத்தல் பலத்த காற்று வீசும், வங்கக்கடலில் 12 அடி உயரம் வரை அலை எழு…
-
- 4 replies
- 419 views
- 1 follower
-
-
சபரிமலைக்கு சென்ற பெண்களின் பாதுகாப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தில் விசாரணை… January 18, 2019 சபரிமலைக்கு சென்ற இரு பெண்களும் தங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கக்கோரி கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை மேற்கொள்கின்றது. சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கடந்த வருடம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதனையடுத்து அதனை அமுல்படுத்த கேரள அரசு தீவிரம் காட்டி வரும் அதேவேளை அதற்கெதிராக கேரளாவில் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு மத்தியில் கேரளாவைச் சேர்ந்த இரு பெண்கள் பலத்த பாதுகாப்புடன் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபட்ட நிலையில் இவர்கள் இருவரும் மாநில அரசின் பாதுகா…
-
- 0 replies
- 419 views
-
-
மொபைல் கேம்களின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இன்று PUBG இல்லாத ஸ்மார்ட் போனே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கேமிங் மீதான இந்த ஆர்வம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. எந்த அளவுக்கு என்றால் இந்திய விமானப் படையே INDIAN AIR FORCE - A CUT ABOVE என்ற ஒரு புதிய மொபைல் கேம் ஒன்றை வடிவமைக்கும் அளவுக்கு. இதற்கான முன்னோட்டத்தை இந்திய விமானப் படை தனது யூடியூப் பக்கத்தில் வெளிட்டுள்ளது. ஒரு விமானி போர் விமானத்தோடு நிற்பதுபோல் விரிகிறது காட்சி. அந்த விமானி வேற யாரும் இல்லை; புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்து பிரபலமான ராணுவ வீரர் அபிநந்தன்தான். தன் கம்பீர மீசையோடு கெத்தாக நிற்கிறார் அபிநந்தன். இந்தியப் போர் வ…
-
- 0 replies
- 419 views
-
-
ஏர் இந்தியாவை வாங்கிய டாடாவுக்கு முன்னுள்ள சவால்கள் என்ன? சல்மான் ராவி பிபிசி செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES உப்பு தயாரிப்பிலிருந்து உயரே பறப்பது வரை அனைத்தும் சாத்தியம் என்று மீண்டும் ஒரு முறை மார்தட்டிக்கொள்ளலாம் டாடா குழுமம். ஏர் இந்தியாவின் சின்னமான மஹாராஜா மீண்டும் அதிகாரப்பூர்வமாக டாடா நிறுவனத்திடம் வந்துள்ளது இந்தியாவின் தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியாவை அதிகத் தொகைக்கு வாங்கிய டாடா சன்ஸ் நிறுவனம் இப்போது மீண்டும் அதன் அதிகாரப்பூர்வ உரிமையாளராகிறது. ஜே ஆர் டி டாடா-வால் உருவாக்கப்பட்ட ஏர் இந்தியாவை மீண்டும் உரிமை கொள்வதில் …
-
- 0 replies
- 419 views
- 1 follower
-
-
நேபாளத்தை இந்து நாடாக அறிவிக்கக்கோரி போராட்டம்! நேபாளத்தை மீண்டும் இந்து நாடாக அறிவிக்குமாறு வலியுறுத்தி காத்மாண்டுவில் வலதுசாரி அமைப்புகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. நேற்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது. ராஷ்ட்ரீய பிரஜாதந்ரா கட்சி உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் இந்து நாடாக நேபாளத்தை அறிவிக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதையடுத்து பொலிஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் வன்முறையில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். இந்தச் சம்பவத்தால் நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மன்னராட்சி இருந்த காலத்தில் உலகின் ஒரேயோரு இந்து நாடாக நேபாளமே இருந்தது. மன்னரா…
-
- 0 replies
- 418 views
-
-
டெல்லியில் இந்திய குடியரசுத் தின கொண்டாட்டம்! January 26, 2023 இந்தியாவின் 74வது குடியரசுத் தினத்தையொட்டி டெல்லி கர்தவ்ய(கடமை) பாதையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ தேசிய கொடியை ஏற்றினார். ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தினத்தையொட்டி வெளிநாட்டு தலைவர் ஒருவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்றனர். முன்னதாக, சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளான ஜன…
-
- 2 replies
- 418 views
- 1 follower
-
-
தமிழகம் டாப், கேரளா பூஜ்யம்... கோவிட் தடுப்பூசிகள் வீணாவதை கேரளா எப்படி தடுக்கிறது? Guest Contributor கொரோனா தடுப்பூசி நமது அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தடுப்பூசி வீண் செய்யப்படும் சதவிகிதம் என்பது பூஜ்யமாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாடோ, இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கும் மாநிலங்களில் முதன்மையாக இருக்கிறது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தடுப்பூசி வீண் செய்யப்படும் சதவிகிதம் என்பது பூஜ்யமாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாடோ, இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கும் மாநிலங்களில் முதன்மையாக இருக்கிறது. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, தடுப்பூசியின் பயன்களை தெரியப்படுத்துவதன் மூலமும், தடுப்பூசி மேலாண்மை குறித்த…
-
- 0 replies
- 417 views
-
-
இந்திய இராணுவம் காஸ்மீரில் அரச பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என பாக்கிஸ்தானின் இராணுவதளபதி குற்றம்சாட்டியுள்ளார். பாக்கிஸ்தான் இராணுவம் அனைத்து வகையான தியாகங்களிற்காகவும் தயாராக உள்ளது என தெரிவித்துள்ள குயுமார் ஜாவிட் பஜ்வா பாக்கிஸ்தான் இராணுவம் காஸ்மீர் மக்களை ஒருபோதும் கைவிடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். காஸ்மீர் தொடர்பான ஐநா தீர்மானங்களின் அடிப்படையில் பாக்கிஸ்தான் இராணுவம் காஸ்மீர் மக்களின் சுயநிர்யண உரிமைக்கு ஆதரவை வழங்கும் எனவும் பாக்கிஸ்தான் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தான் அவர்களை கைவிடாது என்ற உறுதிமொழியை நான் காஸ்மீர் மக்களிற்கு வழங்க விரும்புகின்றேன்,பாக்கிஸ்தான் மக்களினதும் காஸ்மீர் மக்களினதும் இதயங்களும் ஒன்றாக துடிக்கின்றன…
-
- 0 replies
- 417 views
-
-
புதுடெல்லி: உபா சட்டத்தின் கீழ் லோரன்ஸ்பிஷ்னோய் மற்றும் கோல்டி பிரார் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ). அதோடு லாரன்ஸ் பிஷ்னோயின் குழுவை தாவூத் இப்ராஹிமின் டி-கம்பெனி உடன் என்ஐஏ ஒப்பிட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு லாரன்ஸ் பிஷ்னோய் குழு பொறுப்பேற்றது. அவரது குழு இந்தியாவில் 11 மாநிலங்களில் சுமார் 700 துப்பாக்கி பயிற்சி பெற்ற ஷூட்டர்களை கொண்டு இயங்குவதாக என்ஐஏ தெரிவித்துள்ளது. சிறிய அளவில் தொடங்கி அவரது குழு மிகப்பெரிய அளவில் விரிவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதன் மூலம் வட இந்தியாவில் தனது ஆதிக்கத்தை செலுத்தி …
-
- 1 reply
- 417 views
- 1 follower
-
-
கோவிட் 19 எந்தளவுக்கு பேரழிவுகளை ஏற்படுதும் என்பதற்கு இந்தியா உதாரணம் -WHO 24 Views கோவிட் 19 வைரஸால் எந்தளவுக்கு பேரழிவுகளை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இந்தியா தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலை உணர்த்துவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் உலகில் முன்னொருபோதும் இல்லாத வகையில் 3 இலட்சத்து 46 ஆயிரத்து 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதே காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 2,624 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று குறித்து கருத்து தெரிவித்துள…
-
- 0 replies
- 417 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான விவகாரத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலலை கைது செய்துள்ளது அமலாக்கத்துறை. இந்த வழக்கில் ஏற்கெனவே மணீஷ் சிசோடியா, சத்யேந்திர குமார் ஜெயின் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அரவிந்த் கேஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு என்பது என்ன? அதன் பின்னணி குறித்து விளக்குகிறது இந்தக் கட்டுரை. சிபிஐ விசாரணையின் பின்னணி என்ன? பட மூலாதாரம்,@AAP/TWITTER டெல்லி தலைமைச் செயலாளர் நரேஷ் குமாரின் அளித்த அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ பதிவு செய்த எஃப்ஐஆரின் நகல…
-
- 2 replies
- 417 views
- 1 follower
-
-
``உங்களை நீங்களே சூப்பர் ஹீரோ என்று நினைத்துக்கொள்ளாதீர்கள்!'' - மருத்துவரின் கண்ணீர் கோரிக்கை ஆ.சாந்தி கணேஷ் மருத்துவர் திருப்தி ``இந்த இரண்டாவது அலையில் இளைஞர்கள்கூட கொரோனா தொற்றால் உயிரிழந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எங்களால் உதவி செய்ய முடியவில்லை. நோயாளிகளின் நிலைமையைப் பார்க்கிற மருத்துவர்கள் நாங்கள் மிகுந்த மன அழுத்தத்துடன் இருக்கிறோம்". ``இதற்கு முன்னால் இப்படி ஒரு நிலைமையை நான் பார்த்ததே இல்லை" என்று மும்பை பெண் மருத்துவர் கண்ணீர் மல்க வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களைப் பதற வைத்துக்கொண்டிருக்கிறது. corona தொற்றுநோய் மருத்துவரான அவர் பெ…
-
- 0 replies
- 416 views
-
-
சூடுபிடித்துள்ள நாடாளுமன்ற தேர்தல் களம் – தற்போதைய நிலைவரம்! இந்தியவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 542 பேரை தெரிவு செய்வதற்கான தேர்தல் நிறைவடைந்த நிலையில், தற்போது வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இந்நிலையில், தற்போதைய நிலைவரப்படி 17 தொகுதிகளில் பா.ஜ.க 9 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் முன்னிலை வகிப்பதுடன், மதசார்பற்ற ஜனதா தளம் ஒரு தொகுதியிலும் முன்னணி வகிக்கிறது. அத்துடன் சிவ சேனா ஒரு தொகுதியிலும், தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியிலும், மிசோ தேசிய முன்னணி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன. http://athavannews.com/சூடுபிடித்துள்ள-நாடாளு-6/
-
- 2 replies
- 416 views
-
-
பாகிஸ்தானில் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த பாடசாலை அதிபருக்கு 105 ஆண்டுகள் சிறை : October 31, 2018 1 Min Read பாகிஸ்தானில் பாடசாலையில் 18 வயதுக்குட்பட்ட மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு ஒன்று தொடர்பில் பாடசாலை அதிபருக்கு 105 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பெஷாவரை சேர்ந்த அத்தாவுல்லா மார்வத் என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.18 வயதுக்குட்பட்ட மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து அவற்றை ரகசியமாக வீடியோ எடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டு அவர் கடந்த 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார். அவர் மீதான வழக்கு நீதிமன்றில் நடைபெற்று வந்தநிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு வழக்…
-
- 1 reply
- 416 views
-
-
இந்தியாவில் சமூக இடைவெளி சாத்தியமா? இந்தியாவில் சமூக இடைவெளி சாத்தியமா? சீனாவை மையமாகக் கொண்டிருந்த கரோனா தற்போது ஐரோப்பாவைத் தனது கேந்திரமாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் கரோனா பாதிப்பு இதுவரை குறைவாக உள்ள இந்தியா அடுத்த கட்டத்தை நோக்கி நகராமல் இருப்பதற்கு தனிமனித இடைவெளி பரிந்துரைக்கப்பட்டது. இதுகுறித்த விவாதங்களில் பலரும் ஒரு பிழையான ஒப்பீட்டைச் செய்துவிடுகிறார்கள். அது சீன மக்கள்தொகையுடன் இந்திய மக்கள்தொகையை ஒப்பிடுவது. 143 கோடியுடன் உலகிலேயே மக்கள்தொகை அதிகமாகக் கொண்ட நாடு சீனா. அதன் பரப்பளவு 95,96,961. ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 145 பேர் வசிக்கிறார்கள். இந்தியாவின் பரப்பளவோ சீனாவுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு. 2018-ன் க…
-
- 1 reply
- 415 views
-
-
பாகிஸ்தானில் இந்து வைத்தியர் மீது மத அவமதிப்பு வழக்கு-கடைகளுக்கு தீ வைப்பு பாகிஸ்தானில் அண்மைக் காலங்களில் மத அவமதிப்பு தொடர்பாக பலர் நெருக்கடிகளுக்கு உள்ளாகினர். இதன்போது ஆசியா பீபி என்ற பெண் கூட நாட்டை விட்டு வௌியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இந்தநிலையில், தற்போது மத அவமதிப்பு மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்ட இந்து வைத்திய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் உள்ள புலாடியான் நகரை சேர்ந்த ரமேஷ்குமார் என்ற வைத்தியர் இந்து மதத்தை சேர்ந்தவராவார். இவர் கால்நடை வைத்தியராக பணிப்புரிந்து வருகிறார். இவர் மத அவமதிப்பு செய்வதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது. குறித்த பகுதியை சேர்ந்த தலைமை மதகுருவான மவுலவி இசாக் நோக்ரி என்…
-
- 0 replies
- 415 views
-
-
மூன்று, வேளாண் சட்டங்களையும்... திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவிப்பு! மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி குருநானக் ஜெயந்தியை ஒட்டி பல்வேறு விவகாரங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றியிருந்தார். இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், மத்திய அரசு கொண்டு வந்த சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாகவும், விவசாயிகளிடம் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார். அதேநேரம் தொடர்ந்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் வீடுகளுக்கு செல்ல வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த அவர், 2014 ஆம…
-
- 5 replies
- 415 views
- 1 follower
-
-
ஒடிசா பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை நடக்குமா? தடைஉத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரும் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை கோப்புப்படம் புதுடெல்லி உலகப்புகழ்பெற்ற ஒடிசா பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை கரோனா வைரஸ் பரவல் காரணமாக நடத்துவதற்கு தடைவிதித்து பிறப்பித்த தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் ெசய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இந்த இரு மனுக்களும் உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ரவிந்திர பாட் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது. ஒடிசா மாநிலத்தின், கடற்கரை நகரான பூரியில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜெகந்நாதர் கோயில் புகழ்பெற்றது. இங்கு மூலவர்களாக பாலபத்ரா, அவரின்…
-
- 0 replies
- 415 views
-
-
ஜி.எஸ்.டியை எளிமைப்படுத்துவது குறித்து நிர்மலா சீதாராமன் ஆலோசனை! ஜி.எஸ்.டியை எளிமைப்படுத்துவது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தியுள்ளார். குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று (சனிக்கிழமை) டெல்லியில் இடம்பெற்றது. இதன்போது ஜி.எஸ்.டி.யை தாக்கல் செய்பவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பற்றி எடுத்து கூறப்பட்டது. மேலும் குறிப்பிட்ட நிகழ்கால வருமானத்தை தாக்கல் செய்வது மற்றும் அதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் பற்றியும் கூட்டத்தில் கவலை வெளியிடப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி. வரியை மேலும் எளிமைப்படுத்தவும் குறைகளை களைய உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். http://athavannews.com/ஜி-எஸ்-டியை-எள…
-
- 0 replies
- 415 views
-
-
நக்சலைட்டுகளின் வெடிகுண்டு தாக்குதல் – அமைச்சர் உட்பட நால்வர் உயிரிழப்பு! சதீஸ்கர் மாநிலம் தாண்டேவாடா பகுதியில் நக்சலைட்டுகளின் வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஷியாமாகிரி மலைப்பகுதியில் இருந்து குவக்குண்டா நோக்கி சென்றுகொண்டிருந்த அமைச்சர் பீமா மாண்டவியின் வாகனம் மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அமைச்சர் பீமா மாண்டவி மற்றும் 4 பாதுகாப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியில் பாதுகாப்பு வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தாண்டேவாடாவில் இம்மாதம் 11ஆம் திகதி முதற்கட்ட வாக்குபதிவுகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் இச்சம்பவம் குறித்த பகு…
-
- 0 replies
- 414 views
-