அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3316 topics in this forum
-
தினத்தந்தி: "எந்த பொத்தானை அழுத்தினாலும் பா.ஜனதாவுக்குதான் ஓட்டு விழும்" - பா.ஜ.க வேட்பாளர் ஹரியாணா மாநில சட்டசபைக்கு இன்று (திங்கள்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அங்குள்ள கர்னால் மாவட்டத்தில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் பக்ஷிஷ் சிங் விர்க் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் அவர் பேசும்போது, 'இன்று நீங்கள் ஒரு தவறு செய்தால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு துயரப்படுவீர்கள். நீங்கள் யாருக்கு ஓட்டளிக்கிறீர்கள் என்பது எங்களுக்கு தெரியும். மோடிஜியும், மனோகர்ஜியும் (முதல்-மந்திரி) மிகவும் உஷாரானவர்கள். வாக்குப்பதிவு எந்திரத்தி…
-
- 0 replies
- 319 views
-
-
லடாக் எல்லை பிரச்சினை: ஜூன் 6 ஆம் தேதி இந்தியா, சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை இந்திய லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடந்த மாதம் முதல் வாரத்தில் கைகலப்பும், மோதலும் ஏற்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. 20 ஆண்டுகள் பேச்சுவார்த்தைகள் நடந்துவந்தாலும் இருநாடுகளும் தங்களது 3,500 கி.மீ எல்லைய பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முடியவில்லை மற்றும் ஒருவருக்கொருவர் வசம் உள்ள தொலைதூரப் பகுதிகளின் பெரிய பகுதிகளுக்கு உரிமை கோர முடியவில்லை. அதுபோல் சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் மற்றும் தைவான் நீரிணைப்புகளில் அமெரிக்க கடற்படை தனது ரோந்துப் பணிகளை மேற்கொண்டதன் மூலம் அமெரிக்காவுடனான சீனாவின் இராணுவ மோதல் அதிகரித்து வருகிறது. அமெரிக…
-
- 1 reply
- 366 views
-
-
தாகா; நேபாளத்தை தொடர்ந்து, வங்கதேசத்தையும் தன் வலையில் வீழ்த்துவதற்கான முயற்சி யில் சீனா இறங்கியுள்ளது. வர்த்தக துறையில், வங்க தேசத்துக்கு பல வரிச்சலுகைகளை சீனா அறிவித்து உள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்துக்கு, சில சலுகைகளையும், திட்டங்களையும் அறிவித்த சீனா, அந்த நாட்டை, சிறிது சிறிதாக தங்களுக்கு ஆதரவாக திருப்பியுள்ளது. இதையடுத்து, சீனாவின் பார்வை, மற்றொரு அண்டை நாடான வங்கதேசத்தை நோக்கி திரும்பி உள்ளது.வங்கதேசத்திலிருந்து, சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும், 97 சதவீத பொருட்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக, சீன அரசு தெரிவித்து உள்ளது. இதன்படி, வங்கதேசத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும், 8,526 பொருட்களுக்கு சீனாவில் வரி விதிக்கப்படாது.இது குறித்து, சீன வரி ஆணைய…
-
- 2 replies
- 685 views
-
-
தற்சார்பு இந்தியா போன்ற கொள்கைகள் கடந்த காலத்தில் பலனளிக்கவில்லையே; மேக் இன் இந்தியாவின் மறுவடிவம்தானே: ரகுராம் ராஜன் கருத்து உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்க வேண்டும் எனும் நோக்கில் கொண்டுவரப்பட்ட ஆத்மநிர்பார் பாரத் (தற்சார்பு இந்தியா) வெளிநாட்டு வர்த்தகத்தில் சிக்கலை ஏற்படுத்திவிடக்கூடாது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். ஐசிஆர்ஐஇஆர் நிறுவனம் சார்பில் பொருளாதாரம் சார்ந்த கருத்தரங்கு காணொலியில் நேற்று நடந்தது. இதில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: ''கரோனா வைரஸால் ஏற்பட்ட பிரச்சினையிலிருந்து விடுபட வளர்ந்து வரும் நாடுகள் அதிகமா…
-
- 0 replies
- 263 views
-
-
15-ந் தேதி பேச்சுவார்த்தையில் பங்கேற்போம்: சுப்ரீம் கோர்ட்டு அமைத்த குழு முன் ஆஜராக மாட்டோம் - விவசாய அமைப்புகள் அறிவிப்பு சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. அதே நேரத்தில் இந்த சட்டங்களை ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்கு ஒரு குழுவையும் சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ளது. இது குறித்து டெல்லியில் சிங்கு எல்லையில் விவசாய அமைப்புகளின் தலைவர்கள், பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள், சுப்ரீம் கோர்ட்டு அமைத்துள்ள குழு உறுப்பினர்கள், அரசுக்கு ஆதரவானவர்கள் என்பதால், அவர்கள் முன்னிலையில் ஆஜராக மாட்டோம் என அறிவித்தனர். இதுபற்றிய விவசாய அமைப்புகளின் தலைவர்கள் கருத்துகள் வருமாறு:- …
-
- 1 reply
- 316 views
-
-
இந்தியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்தது -நேபாள அரசு! இந்தியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்துள்ளதாக நேபாள பிரதமர் சர்மா ஒலி தெரிவித்துள்ளார். எல்லைப் பிரச்சினைக் குறித்து சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘இந்தியாவுடன் உள்ள எல்லை பிரச்சினைக்கு வரலாற்று ஒப்பந்தங்கள், வரைபடங்கள், மற்றும் உண்மை ஆவணங்கள் வாயிலாக தீர்வு காணப்படும். எங்களுக்கும், இந்தியாவிற்கும் இடையே தவறான புரிதல்கள் காரணமாக சில பிரச்சினைகள், கருத்து வேறுபாடுகள் இருந்தன. அவற்றுக்கு தீர்வு காணப்பட்டதுடன், எதிர்கால இலக்கை நோக்கி, நாங்கள் ஒற்றுமையுடன் பயணிக்கிறோம். அண்டை நாடுகள், தங்கள…
-
- 0 replies
- 352 views
-
-
தலிபான்களின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் : கேள்விக்குறியாகும் இந்திய அரசின் முதலீடுகள்! ஆப்கானிஸ்தானின் காபூல் நகரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், இந்தியா அந்நாட்டில் மேற்கொண்டுள்ள முதலீடுகள் குறித்த கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சி வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானுடனான உறவை இந்திய அரசு தொடர்ந்து வலுப்படுத்தி வந்தது. அந்நாட்டில் ஏராளமான முதலீடுகளை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. அணைகள், சாலைகள், பாடசாலைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளை இந்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றம், கிரிக்கெட் விளையாட்டு மைதானம் ஆகியவையும் இந்திய அரசின் உதவியுடன் கட்டப்படன. அதேநேரம் ஆப்கானிஸ்தானுடன் எளிதில் தொடர்பு கொள்ளும…
-
- 8 replies
- 712 views
- 1 follower
-
-
கிருமி ஆயுதம்: 1933ல் இந்தியாவில் நடந்த ஜமீன்தார் கொலை - உலகம் கவனித்த வழக்கு செளதிக் பிஸ்வாஸ் பிபிசி இந்தியா செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, அமரேந்திர பாண்டே 1933 நவம்பர் 26ஆம் தேதி மதியம், உருவத்தில் சிறிய மனிதர் ஒருவர், ஓர் இளம் ஜமீன்தாரை கொல்கத்தா (அன்று கல்கத்தா) ரயில் நிலையத்தில் சட்டென உரசிச் சென்றார். 20 வயதான அமரேந்திர சந்திர பாண்டேவின் வலது கையில் ஊசி குத்தியது போல ஒருவித வலி ஏற்பட்டது. காதி ஆடை அணிந்திருந்த அந்த மனிதர் ஹவுரா ரயில் நிலையத்தில் கூட்டத்தோடு கூட்டமாக கரைந்து போனார். "யாரோ என்னைக் குத்தி இருக்கிறார்கள்" என ஆச்சர்…
-
- 0 replies
- 211 views
- 1 follower
-
-
ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தில் வாக்களிக்காத இந்தியா… காரணம் என்ன உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வி அடைந்தது. இந்த தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்கவில்லை. இதற்கான காரணங்கள் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய படைகள் உக்ரைன் மீது 3ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவிவருகிறது. உக்ரைன் தலைநகரான கீவ்-வை நெருங்கியுள்ள ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நட…
-
- 5 replies
- 435 views
-
-
சுதந்திர தின உரையில் பிரதமர் மோதி பட்டியலிட்ட 5 உறுதிமொழிகள் என்னென்ன? 15 ஆகஸ்ட் 2022, 02:08 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவின் 76வது சுதந்திர தினம் இன்று, ஆக. 15 நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோதி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றினார். பின்னர் 4 ஹெலிகாப்டர்களில் இருந்து தேசியக் கொடிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக அவர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோதி, அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா, வளர்ந்த நாடாக வேண்டும் என்றும் அதற்கு மக்கள் 5 உறுதிமொழிகளை ஏற்க வேண்டும் என்றும…
-
- 7 replies
- 621 views
- 1 follower
-
-
டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு தேடுதல் நோட்டீஸ்: “எங்கு வரவேண்டும் என சொல்லுங்க மோதிஜி” என பதில் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்துள்ளதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், குற்றம் சாட்டப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உட்பட 13 பேருக்கு எதிராக சிபிஐ தேடுதல் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி வெளியானவுடன், மணிஷ் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோதியை விமர்சித்து பதிவிட்டுள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் புதிய மதுபானக் கொள்கை குறித்து விசாரிக்குமாறு நேரடியா…
-
- 0 replies
- 262 views
- 1 follower
-
-
இந்தியாவுக்கு மிகப்பெரிய அவமானம் : இன்போசிஸ் தலைவர்! Nov 16, 2022 09:14AM IST ஷேர் செய்ய : இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் மூலம் காம்பியாவில் குழந்தைகள் உயிரிழந்திருப்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அவமானம் என்று இன்போசிஸ் தலைவர் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் மரணம் அடைந்ததற்கு இந்தியாவில் தயாரான 4 இருமல் மருந்துகளுக்குத் தொடர்பு இருப்பதாகச் சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது. இந்த குற்றச்சாட்டுக்கு ஆளான மருந்து நிறுவனம் ஹரியானாவில் உள்ள மைய்டன் ஃபார்மாசூட்டிகல் நிறுவனம் ஆகும். இதுகுறித்து நேற்று (நவம்பர் 15) பெங்களூருவில் நடைபெற்ற இன்ஃபோசிஸ் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் ப…
-
- 0 replies
- 220 views
-
-
ரூ.70500 கோடி மதிப்பில் ஆயுதங்கள் கொள்முதல் - இந்திய பாதுகாப்புத் துறை ஒப்புதல் Published By: RAJEEBAN 17 MAR, 2023 | 10:25 AM இந்தியபாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.70500 கோடி மதிப்புக்கு மேலான ஆயுதங்களை கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு நேற்று ஒப்புதல் அளித்தது. இதன்படி ராணுவத்துக்கு 307 நவீன பீரங்கிகள் (ஏடிஏஜிஎஸ்) ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்திடம் (டிஆர்டிஓ) வாங்கப்படவுள்ளன. கடற்படை பயன்பாட்டுக்கு 200 பிரம்மோஸ் ஏவுகணைகள் ரூ.56000 கோடி மதிப்பில் ஹெலிகாப்டர்கள் மற்றும் எலக்ட்ரானிக் போர் கருவிகள் வாங்கவும் ஒப்புதல…
-
- 2 replies
- 465 views
- 1 follower
-
-
அமைதிப் பேச்சுவார்த்தை: பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்றது இந்தியா இந்தியா - பாகிஸ்தான் இடையே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்க வலியுறுத்தி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விடுத்த கோரிக்கையை இந்தியா ஏற்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி கூறும்போது, ''இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் மக்தூம் ஷா மஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை நடக்கும். இந்தச் சந்திப்பு நியூயார்க்கில் ஐ.நா. சபைக்கூட்டத்தில் நடைபெறும்'' என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்றது ம…
-
- 1 reply
- 414 views
-
-
தேர்தலை முன்னிட்டு இந்தியா தாக்குதல் நடத்தலாம்: இம்ரான் கான் தேர்தலை முன்னிட்டு இந்தியா மற்றுமொரு தாக்குதலை நடத்தலாம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். மேலும், தம்மை சூழ்ந்திருக்கும் ஆபத்து இன்னும் நீங்கவில்லை என்றும் இந்தியாவில் தேர்தல் முடியும்வரை தம்மை சூழ்ந்துள்ள நெருக்கடி அப்படியேதான் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்கு முன்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நிர்வாகம் தம்மீது தாக்குதல் நடத்தலாம் என தெரிவித்தார். அந்தவகையில், இதனை எதிர்கொள்வதற்கு அனைத்து வகையிலும் தாம் தயாராக இருக்கின்றோம் எனக் கூறினார். புல்வாமா தாக்குதலை முன்னிட்டு இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பதற்றம் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றமை …
-
- 1 reply
- 366 views
-
-
வாரணாசியில் இருக்கும் கங்கை நதியில் வரலாறு காணாத அளவுக்கு நீர்மட்டம் குறைந்து, ஆற்றின் அகலம் வழமையான 70-80 மீட்டரிலிருந்து 30-35 மீட்டராக குறைந்துள்ளது. கங்கையில் தண்ணீர் ஓட்டம் அதிகமாக இருக்கும்போது, அங்கிருக்கும் குப்பைகள் வெளியே தெரிவதில்லை. ஆனால், தற்போது வெப்பத்தின் காரணமாக, நீர்மட்டம் குறைந்திருப்பதால், கங்கையின் யதார்த்த நிலை தெரியவந்துள்ளது. அத்துடன், ஆற்றின் கரைகளிலும் குப்பைகள் நிறைந்து கிடைக்கின்றன. https://tamil.news18.com/photogallery/trend/record-drop-in-gangas-water-level-what-is-the-reason-1499663-page-3.html ************** மோடிஜீ வேற தன்னை கங்கா தேவி மகனாக தத்து எடுத்து விட்டார் என்று தேர்தலிற்கு முன்னும்…
-
- 0 replies
- 376 views
-
-
இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு உண்டான தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகிவிட்டதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்தியா முழுவதும் 52 இடங்களில் மட்டுமே வென்றது. ஒட்டுமொத்த இடங்களில் 10%ஐ விடவும் கூடுதல் இடங்களில் வெல்லவில்லை என்பதால் காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் பிரதான எதிர்க் கட்சி அந்தஸ்தும் கிடைக்கவில்லை. 2014இல் நடந்த மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் 44 இடங்களில் மட்டுமே வென்றது என்பதால் அப்போதும் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு தர முடியாது என்று நரேந்திர மோதி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தெரிவித்த…
-
- 2 replies
- 835 views
-
-
ஜமாத் உத் தவா தலைவர் ஹஃபீஸ் சயீத் பாகிஸ்தானில் இன்று காலை கைது செய்யப்பட்டார். பஞ்சாப் மாகாண பயங்கரவாத எதிர்ப்புத் துறை பதிந்த வழக்கு ஒன்றில் முன் ஜாமீன் பெறுவதற்காக குஜ்ரன்வாலா நோக்கி சென்றுகொண்டிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டார். தடை செய்யப்பட்ட ஜமாத் உத் தவா அமைப்பின் மேல்மட்டத் தலைவர்களான ஹஃபீஸ் சயீத், அப்துல் ரெஹ்மான் மக்கி உள்ளிட்டோர் மீது பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்தது, நிதி முறைகேடு உள்ளிட்ட சுமார் இரண்டு டஜன் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்குகள் 1997-ம் ஆண்டின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டன. https://www.bbc.com/tamil/global-49017111
-
- 1 reply
- 386 views
-
-
புதுடெல்லி: ஹரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மாலை 4.30 மணி நிலவரப்படி 50 தொகுதிகளில் வெற்றியை நெருங்குவதால் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் இண்டியா கூட்டணி 50 தொகுதிகளை நெருங்குவதால் உமர் அப்துல்லா தலைமையில் அங்கு கூட்டணி அரசு அமைய உள்ளது. ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: ஹரியானா சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், 68% வாக்குகள் பதிவாகி இருந்தன. மொத்தமுள்ள 2 கோடியே 3 லட்சத்து 54 ஆயிரத்து 350 வாக்காளர்களில் ஒரு கோடியே 38 லட்சத்து 19 ஆயிரத்து 776 வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்குப் பிந்தைய பல்வேறு கருத்துக்கணிப்புகள், ஹரியானாவில் ஆட்சி …
-
- 1 reply
- 216 views
- 1 follower
-
-
முத்தையா முரளீதரனின் நிறுவனத்திற்கு காஷ்மீரில் இலவசமாக நிலம் ; வெடித்தது புதிய சர்ச்சை 09 Mar, 2025 | 12:51 PM இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளீதரனின் சிலோன் பெவெரேஜர்ஸ் நிறுவனத்திற்கு காஷ்மீரில் இலவசமாக 25 ஏக்கர் நிலத்தை மாநில அரசாங்கம் ஒதுக்கியுள்ளமை குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யுனிஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் யூசுவ் தரிகாமி இந்த விடயம் குறித்து சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார் ஒரு பைசா கூட பெறாமல் இலங்கையின் முன்னாள் வீரர் ஒருவருக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். தரிகாமியின் கரிசனையை பகிர்ந்துகொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குலாம் அஹமட் இத…
-
- 0 replies
- 221 views
-
-
நேபாளத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 47 பேர் உயிரிழப்பு! நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதுடன் நேபாளத்தின் பிற இடங்களிலும் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் சிக்குண்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வீதிகள் சேதம் அடைந்ததால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மீட்பு பணிகளுக்காக நேபாள இராணுவம் வானூர்திகளை அனுப்பியுள்ளதுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோரை இராணுவத்தினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். இருப்பினும், குறித்த மோசமான வானிலை காரணமாக, தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு நடவடிக்கைகள் தடைபட்ட…
-
- 0 replies
- 78 views
-
-
விவசாயிகளின் டிராக்டர் பேரணி அனுமதிக்கு டெல்லி காவல்துறை தான் முடிவு செய்யவேண்டும் - உச்ச நீதிமன்றம் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், டெல்லி எல்லையில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாகவும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிலுவையில் உள்ளன. கடந்த 12-ந் தேதி அந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், வேளாண் சட்டங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க 4 நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்தது. இந்த நிபுணர்களில் ஒருவரான பாரதீய கிசான் சங்க தேசிய தலைவர் பூபிந்தர்சிங் மான், குழுவில் இருந்து திடீரென விலகிக்கொண்டார். குட…
-
- 4 replies
- 666 views
-
-
75% விலை உயர்ந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள், விநியோகத்திலும் சிக்கல்... எங்கே சறுக்கியது இந்தியா? Guest Contributor A COVID-19 patient wearing oxygen mask ( AP Photo/Ajit Solanki ) படுக்கை இருந்தால் ஆக்சிஜன் இல்லை, ஆக்சிஜன் இருந்தால் நோயாளிகளுக்குப் படுக்கைகள் இல்லை என்பதுதான் பல இடங்களில் கள நிலவரமாக இருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழலில் ஆக்சிஜன் சிலிண்டர்களும், மருத்துவமனை படுக்கைகளும்தான் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் மக்களின் பிரதான தேவையாக இருக்கின்றன. சமீபமாக, மக்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வேண்டியும், படுக்கைகள் வேண்டியும் சமூகவலைதளங்களில் அதிகளவில் பதிவிட்ட…
-
- 7 replies
- 747 views
-
-
பிகாரில் தோல்வியடைந்ததா பாஜகவின் 'மகாராஷ்டிரா உத்தி'? - என்ன நடந்தது? எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 9 ஆகஸ்ட் 2022, 10:47 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, பிகார் முதல்வர் பதவியில் இருந்து விலகிய நிதிஷ் குமாரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்டுள்ள நிதிஷ்குமார், இன்று மாலை 4 மணிக்கு ஆளுநர் பாகு செளஹானை சந்தித்து தமது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். பதவி விலகிய கையோடு ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவை அவரது வீட்டுக்கே …
-
- 0 replies
- 273 views
- 1 follower
-
-
இம்ரானின் பதவியேற்பு விழாவில் சித்து – பாஜக கடும் விமர்சனம் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்கும் நிகழ்வில் கலந்துகொண்ட இந்திய முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பாக்கிஸ்தானின் இராணுவ தளபதியை கட்டியணைத்ததை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. நவ்ஜோத் சிங் சித்துவின் இந்த செயல் வெட்கக்கேடானது என பஞ்சாபின் பாஜக தலைவர் சுவைத் மலிக் வர்ணித்துள்ளார். மேலும் பாக்கிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஸ்மீரின் பிரதம அதிகாரிக்கு அருகே சித்து அமர்ந்திருந்தது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார் பாக்கிஸ்தானினால் இந்திய வீரர்கள் கொல்லப்படும்போது பாக்கிஸ்தான் இராணுவதளபதியை கட்டியணைத்ததன் மூலம் சித்து அவரிற்கு நன்றி தெரிவித்தாரா எனவும் அவர் …
-
- 2 replies
- 401 views
-