அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3273 topics in this forum
-
காலமானார் ராம்விலாஸ் பாஸ்வான் மின்னம்பலம் மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவன தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் இன்று அக்டோபர் 8ஆம் தேதி மாலை டெல்லி தனியார் மருத்துவமனையில் காலமானார். 74 வயதான ராம்விலாஸ் பாஸ்வான் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சராக பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களாகவே இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட பாஸ்வான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்த நிலையில்... இன்று மாலை அவர் காலமாகி விட்டதாக பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தலித் தலைவர்களில் குறிப்பிடத்தக்க தலைவராக உருவெடுத்த…
-
- 0 replies
- 605 views
-
-
விவசாயிகள் போராட்டத்தின் ஊடாக ஒரு பயணம் தடித்த பனிச் சுவர்களைத் தலைகொண்டு மோதி மோதி நடந்தால் ஏற்படும் சில்லிடும் உணர்வைத் தருகிறது டெல்லியின் அதிகாலை. காலை வேலைக்குக் கிளம்புபவர்கள் பஜார் சாலையின் ஓரத்திலேயே நெருப்பை உருவாக்கி ரொட்டி சுட்டுக்கொண்டிருக்கிறார்கள். குளிரைக் குறைப்பதற்காக ஆங்காங்கே நெருப்பை எரியவிட்டு அதன் வெப்பத்தில் ஏழை முதியவர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். பால் வாங்க வந்த எஜமானர்களுடன் குளிருக்குக் கதகதப்பாக ஸ்வெட்டர் அணிந்து கம்பீரமாக நம்மை வேடிக்கை பார்த்தபடி செல்லும் வளர்ப்பு நாய்களையும் காலையிலேயே பார்க்க முடிகிறது. சென்னையில் காணப்படும் நாய்களைவிட இரண்டு மடங்கு தடிமன் கொண்டு போஷாக்காகத் தெரிகின்றன புதுடெல்லி நாய்கள். அதிகா…
-
- 0 replies
- 347 views
-
-
பிச்சை எடுத்தோ, திருடியோ, கடனுக்கோ ஆக்சிஜன் வாங்குங்கள்; மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு கொரோனாவின் இரண்டாவது அலை நாடு முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தலைநகர் டெல்லியில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லாமல் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. டெல்லியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் போதுமான ஆக்சிஜன் இல்லாததன் காரணமாக நோயாளிகள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனால் உயிரிழப்பும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக, வழக்கு ஒன்றை விசாரித்த டெல்லி ஐகோர்ட் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொண்டிருந்தது. …
-
- 1 reply
- 539 views
-
-
இந்திய இராணுவ முக்கிய அதிகாரிகள் பயணித்த கெலிக்கொப்டர் விபத்து : 7 பேர் உயிரிழப்பு ? இந்திய இராணுவ முக்கிய அதிகாரிகள் பயணித்த கெலிக்கொப்டர் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. குறித்த விபத்து இந்தியாவின் தமிழ்நாடு குன்னூர் நீலகிரி மாவட்டம் காட்டேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தி இராணுவ உயர் அதிகாரிகள் சென்றதாகக் கூறப்படும் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான கெலிக்கொப்டரே இவ்வாறு இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. வெலிங்டன் இராணுவ கல்லூரி ஆய்வுக்காக கோவையிலிருந்து இரு ஹெலிகொப்டர்கள் புறப்பட்டுச் சென்றன. இந்த கெலிகொப்டரில் ஒன்று குன்னூர் அருகே விபத்தில் சிக்கியது. விபத்தில் சிக்கிய இந்த ஹெலிகாப்டரில் முப்படைத் த…
-
- 105 replies
- 6.3k views
- 1 follower
-
-
சிக்கிம் பகுதியில் இராணுவ வாகனம் விபத்து: உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி- பிரதமர் இரங்கல்! இந்தியாவின் வடக்குப் பகுதியில், இந்திய-சீன எல்லைக்கு அருகே உள்ள சிக்கிம் மாநிலத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இராணுவ வீரர்கள் 16 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தனர். இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சிக்கிமில் நடந்த வீதி விபத்தில் இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்த செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த…
-
- 0 replies
- 110 views
-
-
அதானி என்றால் அதானி அல்ல முன்பெல்லாம் கார்ப்பரேட் முதலாளிகளின் ஆசீர்வாதம் பெற்ற கட்சி ஊடகங்களால் முன்னிறுத்தப்பட்டு தேர்தலில் வெல்லும். காங்கிரஸுக்கு அப்படி புரவலர்களாக முதலாளிகள் இருந்தார்கள். பெரும் பணத்தை காங்கிரஸ் தலைமை தன் குடும்பத்துக்குள்ளும் வைத்துக்கொண்டது. அதைத் தக்க வைக்கவே வாரிசு அரசியலைப் பண்ணியது. ஆனால் பாஜக புரட்சிகரமாக ஒரு மாற்றத்தை செய்தது - அதுவே கார்ப்பரேட் முதலீட்டியமாகியது. அதுவே தேசிய வங்கிகளின் பணத்தை எடுத்து வியாபாரம் பண்ணி, கட்டமைப்புத் திட்டங்களை தானே எடுத்துப் பண்ணி, பொருளாதார முடிவுகளை, வெளிநாடுகளுடனான ஒப்பந்தங்களை தனக்கேற்ப அமைத்துக் கொண்டு மிகக்குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து உலகின் முதல் பத்து…
-
- 2 replies
- 557 views
- 1 follower
-
-
பிரதமர் மோடியின் அருணாச்சல் விசிட்டுக்கு சீனா கடும் கண்டனம்! அருணாச்சல பிரதேசத்தில் பல்வேறு திட்டப் பணிகளை துவக்கி வைக்க பிரதமர் மோடி பயணம் செய்ததற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 1962-ல் சீனாவுடன் யுத்தம் முடிந்த பிறகும் அருணாச்சல் பிரதேசத்தில் இந்திய - சீன எல்லைப் பகுதியில் இன்னும் சச்சரவு நீடிக்கிறது. 2017-ல் இந்திய எல்லைக்குள் சீனா ஊடுவ இருநாட்டு படைகளும் குவிக்கப்பட்டு பதற்றம் ஏற்பட்டது. அப்போது சீனாவுடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தப்படி சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் இந்தியா எந்த புதிய திட்டங்களையும் துவங்கக் கூடாது என்று சீனா வலியுறுத்தியிருந்து. இந்நிலையில் இன்று அருணாச்சலப் பிரதேசத்தில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி துவங்கி வை…
-
- 0 replies
- 620 views
-
-
பாகிஸ்தானுக்கு செல்கின்ற நீரை நிறுத்திவிட இந்திய பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளதாக இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி ட்விட்டர் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் கிழக்கு பகுதியிலுள்ள ஆறுகளில் இருந்து தண்ணீரை திருப்பி ஜம்மு - காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மக்களுக்கு விநியோகிக்க முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 634 views
-
-
இந்தியாவில் 28 சதவீதம்பேர் அலுவலக நேரத்தில்தான் செல்ஃபோனை பயன்படுத்துவதாக ஆய்வு அறிக்கையில் தெரிவந்துள்ளது. இன்றையக் காலகட்டத்தில் ஆன்லைனில் தகவல்களும் நிகழ்ச்சிகளும் அதிகரித்துவிட்டன. இந்நிலையில். டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், பூனே, அகமதாபாத், ஜெய்பூர், லூதியானா, பானிபட், நாக்பூர் மற்றும் மதுரை என 16 நகரங்களில் 1,458 நபரிடம் ஆய்வு நடத்தப்படுள்ளது. அதில், கிட்டத்தட்ட 87 சதவீதம் பேர் தகவல்களை செல்ஃபோன் மூலமாகவே தெரிந்துகொள்வதாகவும், அதில் 28 சதவீதம்பேர் அலுவலக நேரத்தில்தான் செல்ஃபோனை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். பெரும்பான்மையான வேலைக்குச் செல்லும் இந்தியர்கள் அலுவலக நேரமான 10 - 6 வரை வேலைகளுக்கு நடுவே அதிகமாகப் படம் பார்ப்பதாக கருத்துக் க…
-
- 0 replies
- 402 views
-
-
ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்காமல் தவிர்க்க முடிவு! ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்காமல் தவிர்க்க முடிவு செய்துள்ளாகவும் அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா செல்வதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையில் 80வது பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் 9ஆம் திகதி நியுயோர்க்கில் ஆரம்பமாகிற நிலையில் கூட்டத்தொடரில் உயர்மட்ட பொது விவாதம் 23ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடக்க உள்ளது. முதல் பாரம்பரிய பேச்சாளரான பிரேசில் தலைவர் பேச்சை தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் உறையாற்றவுள்ளார். இதேவேளை, இந்த பொதுச்சபைக் கூட்டத்தில் இந்தியாவும் பங்கேற்கிறது. அமெரிக்காவின் வரி விதிப்பால் அந்நாட்டுக்கு எதி…
-
- 0 replies
- 94 views
-
-
கொரோனா வைரஸ் மருந்திற்கான ஆய்வு: இந்தியா எப்படி பெரிய பங்கு வகிக்கிறது தெரியுமா? சௌதிக் பிஸ்வாஸ் பிபிசி Getty Images அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து, கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்தும் மருந்தை உருவாக்க பணியாற்றி வருவதாக நேற்று இரவு, அமெரிக்க உள்துறை அமைச்சரான மைக் பாம்பே கூறினார். இது முற்றிலும் ஆச்சரியம் அளிக்கும் வகையிலான தகவல் இல்லை. ஏன் தெரியுமா? கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, நோய்களுக்கு மருந்து உருவாக்கும் ஒரு கூட்டு திட்டத்தை இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செய்து வருகின்றன. டெங்கு, இன்புளூவென்சா, காசநோய் ஆகியவற்றை குணப்படுத்த இவர்கள் இணைந்து செயல்பட்டுள்ளனர். டெங்குவிற்கான மருந்தை சோதித்து பார்க்கும் திட்டமும் வருங்காலத்தில…
-
- 0 replies
- 397 views
-
-
4 மாதங்களில் 2 கோடி பேர் வேலையிழப்பு – ராகுல் காந்தி கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கக் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் நாடுமுழுவதும் கடந்த 4 மாதங்களில் ஏறக்குறைய 2 கோடி பேர் வேலையிழந்துள்ளனர் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், “முடக்கம் காரணமாக ஏப்ரல் தொடக்கம் ஜூலை மாதம் வரையில் சம்பள ஊழியர்கள் ஒரு கோடியே 89 இலட்சம் பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஒரு கோடியே 77 இலட்சம் பேருக்கும் கூடுதலாக மே மாதத்தில் 1 இலட்சம் பேருக்கும் ஜூன் மாதத்தில் 39 இலட்சம் பேருக்கும் ஜூலையில் 50 இலட்சம் பேருக்கும் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 310 views
-
-
அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்கள்: தி.மு.க. பலவீனமாக இருக்கிறது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி தி.மு.க. பலவீனமாக இருப்பதால் அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார். பதிவு: அக்டோபர் 22, 2020 04:36 AM சென்னை, தி.மு.க.வை பொறுத்தவரை அக்கட்சி பலவீனமாக இருக்கிறது. எனவே தான் அடிக்கடி ஆலோசனை கூட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இன்றைக்கு (நேற்று) கூட ஆலோசனை கூட்டம் நடத்தி இருக்கிறார்கள். இது அக்கட்சியின் பலவீனத்தைத்தானே உணர்த்துகிறது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை நாங்கள் வலுவாகவே இருக்கிறோம். ஆரம்ப கட்டத்தில் இருந்தே மக்களோடு மக்களாக பயணிக்கிறோம். தேர்தல் நேரத்தில் தைரியமாக தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெறுவோம். த…
-
- 0 replies
- 374 views
-
-
இந்தியாவிடம் இருந்து 3 பகுதிகளை மீட்போம் – மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய நேபாள பிரதமர் இந்தியாவிடம் இருந்து 3 பகுதிகள் மீட்கப்படும் என்று நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, மீண்டும் சர்ச்சையான கருத்தை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள காலாபானி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய 3 பகுதிகளை தங்களுக்கு சொந்தமானது என்று நேபாளம் உரிமை கோரி வருகிறது. இந்த மூன்று பகுதிகளையும் தங்கள் நாட்டுடன் இணைத்து புதிய வரை படத்தை நேபாள பிரதமர் கே.பி.சர்மாஒலி வெளியிட்டார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனாலும் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை கே.பி.சர்மா ஒலி கூறி வந்தார். இதற்கிடையே நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்கு நாடாளுமன்றம் மு…
-
- 0 replies
- 368 views
-
-
``உங்களை நீங்களே சூப்பர் ஹீரோ என்று நினைத்துக்கொள்ளாதீர்கள்!'' - மருத்துவரின் கண்ணீர் கோரிக்கை ஆ.சாந்தி கணேஷ் மருத்துவர் திருப்தி ``இந்த இரண்டாவது அலையில் இளைஞர்கள்கூட கொரோனா தொற்றால் உயிரிழந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எங்களால் உதவி செய்ய முடியவில்லை. நோயாளிகளின் நிலைமையைப் பார்க்கிற மருத்துவர்கள் நாங்கள் மிகுந்த மன அழுத்தத்துடன் இருக்கிறோம்". ``இதற்கு முன்னால் இப்படி ஒரு நிலைமையை நான் பார்த்ததே இல்லை" என்று மும்பை பெண் மருத்துவர் கண்ணீர் மல்க வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களைப் பதற வைத்துக்கொண்டிருக்கிறது. corona தொற்றுநோய் மருத்துவரான அவர் பெ…
-
- 0 replies
- 416 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 10 டிசம்பர் 2023 இந்தியப் பெருங்கடலில் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்க, அந்தப் பகுதியின் அனைத்து நாடுகளையும் இணைத்து, கோஷ்டி பூசல்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று மாலத்தீவில் அதிபர் முகமது முய்சு தலைமையில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு கூறியுள்ளது. மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தியப் பெருங்கடல் பிராந்திய கூட்டமைப்பில் (Indian Ocean Region Forum) மாலத்தீவின் துணை அதிபர் ஹுசைன் முகமது லத்தீப் இதனைத் தெரிவித்தார். இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் செல்வாக்கைக் குறைக்கும் நோக்கத்தில் சீனா இந்த கூட்டமைப்பை உருவாக்கியதாக நம்பப்படுகிறது. …
-
- 2 replies
- 226 views
- 1 follower
-
-
கேரளா இனி கேரளம் ஆகிறது. தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளா மாநிலம் “கேரளம்” என்று அழைக்கப்பட வேண்டும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தற்கமைய, அதற்கான தீர்மானம் அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள் மற்றும் கருவூல துறை இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதால் ஒருமனதாக தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் இதே தீர்மானம் கொண்டு வரப்பட்டிருந்தது. அப்போது தொழில்நுட்ப காரணத்திற்கான தடைப்பட்டதால் தற்போது மீண்டும் கொண்டு வரப்பட்டது. “மொழி அடிப்படையில் கடந்த 1956-ம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதி மாநிலங்கள் உருவாகின. அதனடிப்படையில் கேரளா மாநிலம் உருவா…
-
- 0 replies
- 254 views
-
-
மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை – உடன் அமுலுக்கு வரும் சட்டம். ஒடிசா மாநிலத்தின் கட்டாக் நகரில் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் துணை முதல் மந்திரி பிராவதி பரிடா பங்கேற்றார். அப்போது உரையாற்றிய அவர், மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் ஒருநாள் விடுமுறை வழங்கப்படும் என அறிவித்தார். இத்திட்டம் உடனே அமலுக்கு வருகிறது எனவும் குறிப்பிடடுள்ளார். அரசு பெண் ஊழியர்களுக்கு மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களும் மாதவிடாய் நாட்களில் முதல் அல்லது 2வது நாளில் இந்த விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கேரளா, பீகாரில் மாதவிடாய் விடுமுறை அமலில் உள்ளது. தற்போது இந்தப் பட்டி…
-
- 7 replies
- 531 views
-
-
இலங்கை தமிழ் அகதிகளுக்கு, குடியுரிமை கேட்டு.. நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய மேற்கு வங்க எம்பி இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை தர வேண்டும் என நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அகமத் ஹசேன் வலியுறுத்தி பேசினார். இலங்கையில் நடந்த உள்நாட்டு போரினால் வாழ்விடத்தைவிட்டு வசிப்பிடமாக தமிழகம் நோக்கி அகதியாக வந்தார்கள் இலங்கை தமிழ் மக்கள். அவர்கள் தமிழகத்தின் செங்கல்பட்டு, மண்டபம், உள்பட பல்வேறு இடங்களில் வசித்து வருகிறார்கள்.பல ஆண்டுகளாக இங்கேயே வசித்து வரும் அவர்களுக்கு இந்திய அரசு இதுவரை குடியுரிமை வழங்கியதில்லை. இந்நிலையில மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தின் போது திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அகமத் ஹூசைன் இலங்கை தமிழ் அகதிகளுக்காக குரல் எழுப்பி பே…
-
- 0 replies
- 312 views
-
-
''பிராமணர்கள் எப்போதும் உயர்பொறுப்பில் இருக்க வேண்டும்'' - கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சிதம்பரேஷ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGODONG Image captionகோப்புப் படம் முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - "பிராமணர்கள் எப்ப…
-
- 11 replies
- 1.4k views
- 1 follower
-
-
இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிப்பு – பிரதமர் புலிகளின் எண்ணிக்கை ஐந்தாண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, புலிகள் பாதுகாப்பாக வாழ்வதற்கு உகந்த இடமாக இந்தியா மாறியுள்ளதாக குறிப்பிட்டார். சர்வதேச புலிகள் தினம் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் உள்ள புலிகளின் எண்ணிக்கை தொடர்பாக கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு விபரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் வெளியிட்டார். அதன் பின்னர் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த 2014ஆம் ஆண்டில் 1400ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது 2,977 ஆக அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டிய மோடி…
-
- 0 replies
- 523 views
-
-
பாபர் மசூதி இடிப்பு -அயோத்தி கோயில் நில விவகாரத்தில் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரப்படும் என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் இன்று தெரிவித்துள்ளது. ஒரு மாதத்திற்குள் மறு ஆய்வுமனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கரை ஒரு கோவிலுக்கு ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் மசூதிக்கு 5 ஏக்கர் நிலத்தை முக்கிய இடத்தை வழங்க உத்தரவிட்டதையும் குறிப்பிட்டு “மசூதிக்கு பதிலாக எந்த நிலத்தை வழங்கினாலும் ஏற்க முடியாது” என்று சட்ட வாரியம் இன்று தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை சவாலாக எடுத்து செய்யப்போவதில்லை. மாறாக சன்னி வக்ஃப் வாரியத்திற்கு இந்த நிலம் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வழக்கறிஞர்கள் மறு ஆய்வு மனுவை விரும்புக…
-
- 0 replies
- 240 views
-
-
படத்தின் காப்புரிமை MANAN VATSYAYANA/getty images மலேசியப் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக மகாதீர் மொஹம்மத் அறிவித்துள்ள நிலையில், அவரது ராஜிநாமாவை மலேசிய மாமன்னர் ஏற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து நாட்டின் இடைக்கால பிரதமராக நீடிக்கும்படி அவர் மகாதீரைக் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் மாமன்னர் அடுத்து ஆட்சியமைக்குமாறு யாரை அழைக்கப் போகிறார்? எனும் கேள்வி எழுந்துள்ளது. மலேசிய நாடாளுமன்றத்தில் 222 இடங்கள் உள்ளன. ஆட்சியமைக்க 112 எம்பிக்களின் ஆதரவு தேவை. இந்நிலையில் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு 102 எம்பிக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் எதிர்க்கட்சிகளைக் கொண்ட தேசிய முன்னணி (பாரிசான் நேஷனல்) …
-
- 0 replies
- 370 views
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்திய ராணுவ தளபதி உபேந்திர துவிவேதி 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஆபரேஷன் சிந்தூர் பற்றி இந்திய ராணுவ தளபதி உபேந்திர துவிவேதி சமீபத்தில் பேசியிருந்த நிலையில் பாகிஸ்தான் அதற்கு எதிர்வினையாற்றியுள்ளது, "நமது அண்டை நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பு ஆக்கிரமிப்பு மேற்கொள்ள காரணங்களைத் தேடிவருகிறது" என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்பு பிரிவு இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர், ராணுவ தளபதி மற்றும் விமானப் படை தளபதியின் கருத்துக்களை தனது அறிக்கையில் மேற்கோள்காட்டியுள்ளது என பிபிசி உருது சேவை தெரிவிக்கிறது. அதில், "பாகிஸ்தானை வரைபடத்திலிருந்து துடைத்தெறியும்" நோக்கம் இருந்தால் இந்தியா ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். …
-
- 0 replies
- 96 views
- 1 follower
-
-
ஒடிசா பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை நடக்குமா? தடைஉத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரும் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை கோப்புப்படம் புதுடெல்லி உலகப்புகழ்பெற்ற ஒடிசா பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை கரோனா வைரஸ் பரவல் காரணமாக நடத்துவதற்கு தடைவிதித்து பிறப்பித்த தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் ெசய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இந்த இரு மனுக்களும் உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ரவிந்திர பாட் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது. ஒடிசா மாநிலத்தின், கடற்கரை நகரான பூரியில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜெகந்நாதர் கோயில் புகழ்பெற்றது. இங்கு மூலவர்களாக பாலபத்ரா, அவரின்…
-
- 0 replies
- 415 views
-