Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் உள்ள இந்தோ- திபெத் எல்லையில் பாதுகாப்பு படை வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயணப்பூர் மாவட்டத்தில் இந்தோ-திபெத் பாதுகாப்புப் படை வீரர்களுக்கான 45வது பட்டாலியன் கேத்னார் முகாம் உள்ளது. இந்த பகுதியில் காலை சரியாக 9 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக, அப்பகுதியின் காவல் ஆய்வாளர் கூறுகைகையில், பாதுகாப்பு படை வீரர்களில் ஒருவர் துப்பாக்கியை எடுத்து தனது சக வீரர்களை சரமாரியாக சுட்டதாக தெரிவித்தார். இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதன் பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்திய வீரரும் சுட்டுக்கொல்லப்பட்டதா…

    • 0 replies
    • 289 views
  2. பிரான்சிடம் இருந்து 26 ரபேல் விமானங்களை வாங்கும் இந்தியா! பிரான்சிடம் இருந்து 26 ரபேல் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ரபேல் விமானங்களை இந்தியா ஏற்கனவே வாங்கியுள்ளது. விமானப்படையில் 36 ரபேல் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது கடற்படைக்கும் ரபேல் விமானங்களை வாங்க மத்திய அரசு பேச்சு வார்ததை நடத்தி வருகின்றது. இந்நிலையில், பிரான்சிடம் இருந்து இந்திய பெறுமதியில் 63,000 கோடி ரூபாய் செலவில் 26 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. அந்தவகையில் ஒற்றை இருக்கை கொண்ட 22 விமானங்கள், இரண்டு இருக்கை கொண்ட 4 விமானங்கள் என மொத்தம் 26 ரபேல் விமானங்களை இந்தியா வாங்…

  3. லாக் டவுனில் சிக்கித் தவிப்பவர்கள் சொந்த ஊருக்குச் செல்லலாம்: நிபந்தனைகளுடன் உள்துறை அமைச்சகம் அனுமதி பிரதிநிதித்துவப் படம். புதுடெல்லி நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் பிற நபர்கள் சில நிபந்தனைகளுடன் அந்தந்த இடங்களுக்குச் செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த மார்ச் 24 முதல் நாடு தழுவிய லாக் டவுன் அறிவிக்கப்பட்ட பின் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் முக்கியமான நகரங்கள், தங்கள் பணியிடங்களிலிருந்து சொந்த ஊருக்குச் செல்ல முயன்றனர். சிலர் கிடைத்த வாகனங்களிலும் சிலர் நடைபயணமாகவே சொந்த ஊரைச் சென்றடைந்தனர். எனினும் லட்சக்கணக்கான மக்…

  4. மும்பையில் கொரோனா பாதிப்பு உறுதியான 70 பேரை காணவில்லை; அதிர்ச்சி தகவல் மும்பையில் கொரோனா பாதிப்பு உறுதியான 70 பேரை காணவில்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பதிவு: ஜூன் 23, 2020 16:51 PM மும்பை, நாட்டில் கொரோனா பாதிப்பில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது. 1 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. 61 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து சென்றுள்ளனர். மராட்டியத்தில் 6 ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மராட்டியத்தின் மும்பை மாநகரில் மலாட் பகுதியில் வடக்கு வார்டில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்த…

  5. அதிவேக ஏவுகணை வாகனம் ; வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக அறிவிப்பு! ஹைபா்சோனிக் தொழில்நுட்பத்திலான ஏவுகணை செலுத்து வாகனம் நேற்று (திங்கட்கிழமை) வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒலியின் வேகத்தைவிட சுமாா் 6 மடங்கு வேகத்தில் ஏவுகணையை ஏவும் திறன் கொண்ட குறித்த வாகனம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் கண்டுப்பிடிக்கப்பட்டதாகும். இந்த ஏவுகணை வாகனம் நீண்ட தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்குகளைத் தாக்கி அழிக்கவல்ல ஏவுகணைகளைச் செலுத்துவதற்கு பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் பரிசோதனையின்போது எந்தவித குறைபாடுகளுமின்றி ஹைபா்சோனிக் வாகனம் இயங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்…

  6. நீர்மூழ்கிக் கப்பலை... தாக்கி அழிக்கும், விமானம் இந்தியா வருகை! நீர்மூழ்கிக் கப்பலை தாக்கி அழிக்கவல்ல பி-8ஐ போர் விமானம் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘கடந்த 2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2ஆவது போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிப்பதோடு மட்டுமல்லாமல், பேரிடர் மீட்புப் பணிகளிலும் பி-8ஐ போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. போர் விமானங்களை இயக்குவதில் இந்திய கடற்படையினருக்கு போயிங் நிறுவனமே பயிற்சி அளித்து வருகிறது. அந்தப் போர் விமானங்களுக்குத் தேவையான உபகரணங்கள், பராமரிப்பு சேவைகள் உள்ளிட்டவற்றையும…

  7. இலங்கைக்கு இந்தியா 10 பில்லியன் டொலரை கடனாக வழங்க வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தல் Colombo (News 1st) இலங்கைக்கு இந்தியா 10 பில்லியன் டொலரை கடனாக வழங்க வேண்டும் என பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்கள் அவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இந்து சமுத்திரத்தில் நட்பு நாடாக இந்தியா நீண்ட காலமாக தொடர வேண்டுமாக இருந்தால், தவணை அடிப்படையிலான 10 பில்லியன் டொலரை ராஜபக்ஸ அரசாங்கத்திற்கு இந்தியா வழங்க வேண்டும் என அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இல்லாவிட்டால், சீனாவிற்கு மற்றுமொரு இளைய பங்காளர் கிடைக்கும் நிலை ஏற்படும் என சுப்பிரமணியன் சுவாமி இந்திய பிரதமருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பல்வேறு சர்வதேச கொள்கைகளில் மோடி அரச…

  8. மியான்மரை ஒட்டியுள்ள வங்கதேச பகுதியில் அமைந்திருக்கும் ரோஹிங்கியா அகதி முகாம்களிலிருந்து சுமார் 1 லட்சம் அகதிகள், வங்கதேசத்தின் கடல் பகுதியில் அமைந்திருக்கும் பாஷன் சர் என்ற தீவுப்பகுதிக்கு மாற்றப்பட இருக்கின்றனர். வங்காள விரிகுடா கடல் பகுதியில் 2006 ஆண்டு முதல் தென்படும் இத்தீவு, இதுவரை மனிதர்கள் வாழ்ந்திராத தீவுப்பகுதியாகும். இது புயல் மற்றும் மழைக்காலங்களில் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியாகவும் இருந்து வருகின்றது. தற்போது, இத்தீவுப்பகுதியில் அகதிகளுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா வரும் அக்டோபர் 3 அன்று திறந்து வைக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதைத்தொடர்ந்து, மழைக்காலம் தொடங்கும் முன்னர் படிப்படியாக ரோஹிங்கியா அகதிகள் …

  9. இந்தியா ஒரு முறை தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 முறை தாக்குதல் நடத்தப்படும் – பாகிஸ்தான் : October 14, 2018 இந்தியா தங்கள் நாட்டின் மீது ஒரு முறை துல்லிய தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 துல்லிய தாக்குதல்கள் நடத்தப்படும் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியப்பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் 30ம் திகதி வானொலி நிகழ்ச்சியில் பேசிய பொழுது, நமது நாட்டின் அமைதிக்கும், வளர்ச்சி சூழலுக்கும் பங்கம் ஏற்படுத்தும் முயற்சிகளில் யார் இறங்குகிறார்களோ, நமது ராணுவத்தினர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பார்கள் என பாகிஸ்தானை மறைமுகமாக குறிப்பிட்டு பேசியிருந்தார். இந்த நிலையில் பிரித்தானியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி குவாமர் ஜா…

  10. போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைது! சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று(வெள்ளிக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிபிஐ அமைப்பில் லஞ்ச ஊழல் தொடர்பான மோதல் உச்சகட்டத்தை எட்டியதையடுத்து, சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரும் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டனர். ரபேல் ஒப்பந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை அலோக் வர்மா சேகரித்து வந்த நிலையில், அவர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சுமத்தி வருகின்றது. அத்துடன் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுமுறையில் அனுப்பியத…

  11. 15 AUG, 2023 | 10:02 AM புதுடெல்லி: தமிழர்கள் தம் தாய்மொழியான தமிழுடன் சேர்த்து இந்தியையும் கற்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி உள்ளார். குஜராத்தின் அகமதாபாத்திலுள்ள இந்திய ஆசிரியர்கள் கல்வி நிறுவனத்தின் (ஐஐடிஇ) பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த 2010-ல் குஜராத்தின் முதல்வராக இருந்த நரேந்திரமோடி, காந்திநகரில் சிறப்பு பல்கலைகழகமாக ஐஐடிஇயை நிறுவினார். இதன் பட்டமளிப்பு விழாவில் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா கலந்து கொண்டார்.மொத்தம் 2,927 மாணவர்கள் இந்த விழாவில் பட்டம் பெற்றனர். இந்த விழாவில் உள்துறை அமைச்சர் பேசியது: நான் ஆங்கிலத்துக்கு எதிரானவன் அல்ல. ஏனெனில், எந்தவகையிலான…

  12. Image caption இந்த பெண்ணும், அவரது நான்கு குழந்தைகளும் அவர்களது வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றுக்குள் இறந்து கிடந்தனர். சூனியக்காரர்கள் என குற்றஞ்சாட்டப்பட்ட தாயையும், அவரது நான்கு குழந்தைகளையும் கொலை செய்தது தொடர்பாக சந்தேக நபர்களை ஒடிசா மாநில போலீசார் தேடி வருகின்றனர். இந்தியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இந்த சம்பவத்தில் இன்னும் அதிகமானவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸ் நம்புகிறது. மான்கிரி முண்டா என்ற பெண் மற்றும் அவரது நான்கு…

  13. இந்திய விமானி என நினைத்து பாகிஸ்தான் வீரர் அடித்துக்கொலை! இந்திய விமானி எனத் தவறாக நினைத்து சொந்த மக்களால் பாகிஸ்தானிய விமானி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தியர் எனத் தவறாகக் கருதி சொந்த மக்களால் பாகிஸ்தானின் எப் 16 ரக ஜெட் விமானத்தின் விமானியே இவ்வாறு அடித்து கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. லண்டனைச் சேர்ந்த சட்டத்தரணியான காலித் உமர் என்பவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் எப் 16 ரக ஜெட் விமானம் இந்திய இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டபொழுது அது ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விழுந்துள்ளது. அதன்போது குறித்த விமானத்தின் விமானி ஷாஜாஸ் உத்தீன் படுகாயமடைந்திருந்த நிலையில் இருந்துள்…

  14. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நாம்தேவ் கட்கர் பதவி, பிபிசி மராத்தி 5 மே 2024 ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை வழக்கில் தெலங்கானா காவல்துறை தாக்கல் செய்த இறுதி விசாரணை அறிக்கை வெளிவந்துள்ளது. இந்த விசாரணை அறிக்கையின்படி, "ரோஹித் வெமுலாவின் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை” என்றும் ”ரோஹித் வெமுலா ஒரு தலித் அல்ல” என்றும் கூறப்பட்டுள்ளது. தெலங்கானா காவல்துறை தாக்கல் செய்த இந்த விசாரணை அறிக்கையால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையில் உள்ள 'ரோஹித் வெமுலா தலித் அல்ல', 'ரோஹித் தற்கொலை வழக்கில் யாரும் குற்றவாளிகள் அல்ல' என்ற முடிவுகள் அரசியல் களம் மற்றும…

  15. ‘அவன் கையில் ஆயுதம் இருக்கவில்லை’ - வங்கதேசப் போராட்டத்தின் முகமாக மாறிய சுட்டுக் கொல்லப்பட்ட மாணவர் பட மூலாதாரம்,SHARIER MIM படக்குறிப்பு,சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு புகைப்படம், வங்கதேசக் காவல்துறையை எதிர்கொள்ளும் போது, அபு சயீத் தனது கைகளை உயர்த்துவதைக் காட்டுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், அக்பர் ஹுசேன் மற்றும் தரேகுஸ்ஸமான் ஷிமுல் பதவி, பிபிசி வங்காள மொழிச் சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் வங்கதேசத்தில் நடந்துவரும் மாணவர் போராட்டத்தின் முகமாக மாறியுள்ளார் அபு சயீத். போராட்டத்தில் இரண்டு மாணவர் குழுக்கள் ஒன்றையொன்று செங்கற்கள் மற்றும் மூங்கில் கம்புகளால் தாக்கிக் கொண்டன. நாடு முழ…

  16. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு 2 யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டது முதல், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவிவருகிறது. இதனால் காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் பாகிஸ்தான் எல்லையோரப் பகுதிகளில் அதிகமான பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் காஷ்மீர் சிறப்புச் சட்டப்பிரிவு 370 பற்றி நாட்டு மக்களிடம் உரையாடிய பிரதமர் மோடி, ``சிறப்புச் சட்டப்பிரிவு 370, 35A-வை ஆயுதமாகப் பயன்படுத்தி காஷ்மீரில் உள்ள மக்களின் மனதில் எதிர்ப்பை விதைக்கப் பாகிஸ்தான் முயற்சி செய்யும். சட்டப்பிரிவு நீக்கத்தினால் எதுவும் நடக்கப்போவதில்லை. ஆனால் பிரிவினைவாதம், பயங்கரவாதம், ஊழல் போன்றவை முற்றிலும் தடுக்கப்படும்” எனப் பேசியிருந்தார். …

    • 0 replies
    • 540 views
  17. ஹரியானா மாநிலம் குருகிராமில் மாநில போக்குவரத்து போலீஸார் புதிய மோட்டார் வாகன சட்டப்படி, வாகன ஓட்டி ஒருவருக்கு 23,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இந்த மாதத் தொடக்கத்திலிருந்து மத்திய அரசு கொண்டு வந்த புதிய மோட்டார் வாகன சட்டம் நாடு முழுக்க அமலுக்கு வந்துள்ளது. இச்சூழலில், புதிய சட்டத்தின்படி, போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதத் தொகை பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நேற்று திங்கள்கிழமை காலை சுமார் ஒரு மணியளவில் ஓட்டுநர் உரிமமின்றி,…

  18. தெலங்கானாவில் கள்ளநோட்டு கும்பலிடம் இருந்து சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கம்மம் மாவட்டம் சத்திப்பள்ளி பகுதியை சேர்ந்த மாதர் என்பவன் தலைமையிலான கும்பல், 80 லட்சம் ரூபாய் கொடுத்தால், அதற்கு பதிலாக ஒரு கோடி ரூபாய் தருவதாக கூறி, பலரிடம் மோசடி செய்துள்ளது. பணக்கட்டுகளுக்கு மேலேயும் கீழேயும் மட்டும் உண்மையான ரூபாய் நோட்டுகளை வைத்து இடையில் கள்ள நோட்டுகள் மற்றும் வெற்று காகிதங்களை வைத்து கொடுத்து இந்தக் கும்பல் மோசடி செய்துள்ளது. ஏமாற்றப்பட்டவர்கள் யாரும் காவல்துறையினரை நாடாத நிலையில் ஒருவர் மட்டும் புகார் செய்திருக்கிறார். அவரிடம் தகவல்களை பெற்ற அம்மாநில போலீசார் மாதர் என்பவனையும், அவனது கூட்டாளிகள் ஆறு பேரையும் கைது …

    • 0 replies
    • 328 views
  19. தெலுங்கானாவின் லொறி – பேருந்து ந‍ேருக்கு நேர் மோதி விபத்து; 20 பேர் உயிரிழப்பு, பலர் காயம்! தெலுங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் இன்று (03) காலை சரளைக் கற்களை ஏற்றிச் சென்ற லொறியொன்று, அரசு நடத்தும் வீதிப் போக்குவரத்துக் கழக பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த துயரச் சம்பவத்தில் மூன்று மாதக் குழந்தை உட்பட குறைந்தது 20 பேர் உயிரிழந்தனர். மற்றும் பலர் காயமடைந்தனர். 70 பயணிகளுடன் தந்தூர் டிப்போவைச் சேர்ந்த பேருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் மோதி இந்த விபத்து நிகழந்துள்ளது. மோதலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்ததால் லொறிரியன் சரளைக் கற்கள் பேருந்து மீது விழுந்து பல பயணிகள் கீழே சிக்கிக் …

  20. புட்டினின் இந்திய விஜயம்; மோடியுடன் விரிவான பேச்சுவார்த்தை இன்று! புது டெல்லிக்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான இருதரப்பு மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், அரசு முறைப் பயணமாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, புது டெல்லி விமான நிலையத்தில் ரஷ்ய ஜனாதிபதியை நேற்று (04) மாலை வரவேற்றார். பழைய நண்பரை உற்சாகத்துடன் கட்டிப்பிடித்து, இறுக்கமான கைகுலுக்கினார் மோடி. இன்று தனது பயணத்தின் இரண்டாம் நாளில் புட்டின், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்து மரியாதை செலுத்த உள்ளார். பின்னர், அனைத்து வருகை தரும் தலைவர்களைப் போலவே, அவர் மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டுக்குச் சென்று மரியாத…

  21. பாலியல் தொழில் பற்றி உச்ச நீதிமன்றம்: 'வயதுவந்த, சுய ஒப்புதலோடு இதில் ஈடுபடுவோர் மீது குற்ற நடவடிக்கை கூடாது' சுசித்ரா கே.மொகந்தி பிபிசி செய்திகளுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES வயதுவந்த, சுய ஒப்புதலோடு பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் விஷயத்தில் போலீஸ் தலையிடவோ, அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவோ கூடாது, அவர்கள் கண்ணியத்தோடு நடத்தப்படவேண்டும் குற்றவாளிகளைப் போல நடத்தப்படக்கூடாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. 2011ம் ஆண்டு கொல்கத்தாவில் பாலியல் தொழிலாளி ஒருவர் மீது வழக்குத் தொடரப்பட்டதை தாமாக முன்வந்…

  22. பிரசாந்த் சாஹல் உண்மை கண்டறியும் குழு, பிபிசி படத்தின் காப்புரிமை FACEBOOK பாலகோட்டில் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதியன்று இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் 200 தீவிரவாதிகள் உயிரிழந்ததை பாகிஸ்தான் கர்னல் ஒப்புக் கொண்டதை போன்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. …

  23. AICTE எனப்படும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான அனைத்திந்திய கவுன்சில் தொழில்நுட்ப படிப்புகளை முறைப்படுத்துகிறது தமிழ்நாட்டில் 4 பொறியியல் கல்லூரிகள் மூடுப்படலாம் என தகவல் இந்திய அளவில் நடப்பாண்டில் 75 பொறியியல் கல்லூரிகள் மூடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இதன்படி சம்பந்தப்பட்ட 75 கல்லூரிகளில் ஆள்சேர்க்கை நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பொறியியல் படிப்புகளை விருமபி தேர்வு செய்யாததுதான் இந்த நடவடிக்கைக்கு காரணமாக கூறப்படுகிறது. இவற்றில் பெரும்பாலான கல்லூரிகள் உத்தரப்பிரதேசத்தில் வருகின்றன. இந்த தகவலை AICTE எனப்படும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான அனைத்திந்திய கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர…

    • 0 replies
    • 293 views
  24. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது. முஸ்லிம் பெண்களை அவர்களுடைய கணவன்மார்கள், ‘தலாக்’ என்று உடனுக்குடன் 3 தடவை கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும் நோக்கத்தில், முத்தலாக் தடை சட்ட மசோதா, பிரதமர் நரேந்திர மோடியின் முந்தைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்ட மசோதா என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவின் சில அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. குற்றச்சாட்டுக்கு உள்ளான கணவன்மார்களுக்கு ஜாமீன் கிடையாது என்ற ஷரத்து நீக்கப்பட்டது. இதையடுத்து, மக்களவையில் மசோதா நிறைவேறியது. மாநிலங்களவையில், பா.ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லா…

    • 0 replies
    • 456 views
  25. இந்தியாவில் மத சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பாக இந்தியாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. குடியுரிமை சட்ட திருத்த மசோதா நடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு அதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, டெல்லியில் இந்தியா கேட் அருகே திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதேபோல், சட்ட திருத்தத்தை எதிர்த்து மேற்குவங்கத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பிரமாண்ட பேரணி நடத்தினார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல…

    • 0 replies
    • 192 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.