யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். மேலதிக விளக்கங்களை / விதிகளை இங்கே பார்வையிடலாம்.
71 topics in this forum
-
ஆரோக்கிய நிகேதனம் -------------------------------------- இன்று இலவசமாக வழங்கப்படும் ஆலோசனைகளில் அதிகமாக முதலாவதாக முன்னுக்கு நிற்பது ஆரோக்கிய வாழ்விற்கான வழிகாட்டல்களே. அதற்குப் பின்னால் மகிழ்ச்சியுடன் வாழ்வது, வெற்றியுடன் வாழ்வது, அன்புடன் வாழ்வது, அறத்துடன் வாழ்வது, அமைதியுடன் வாழ்வது, தமிழுடன் வாழ்வது இப்படியான இலவச ஆலோசனைகளின் வரிசை அசோகவனத்தில் அனுமார் வால் நீண்டது போல நீண்டு வாசிப்பவர்களை பதறவைக்கும். சமூக ஊடகங்களினூடாக இவை வழங்கப்படும் போது, ஒரு லைக்கை வாசிக்காமலேயே போட்டுவிட்டுத் தப்பிவிடும் வசதி இருக்கின்றது. நேரில் வழங்கப்படும் போதும் தான் திக்குமுக்காட வேண்டியிருக்கின்றது. இங்கு ஒருவரின் வீட…
-
-
- 8 replies
- 1.6k views
- 1 follower
-
-
பாம் ஸ்பிறிங் பயணத்தின் போது இரு நாட்கள் இந்த தேசிய பூங்காவுக்கும் போனோம்.இந்த தேசிய பூங்கா 795000 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது.முழுக்க முழுக்க பாலைவனமாகவே காட்சியளிக்கிறது. ஒரு வருடத்துக்கு 6 அங்குல நீர்வீழ்ச்சியே கிடைக்கிறது.எனவே தண்ணீரில்லாமல் வளரக் கூடிய ஜோசுவா என்கிற மரமே 90 வீதம் நிற்கிறது.இந்தமரம் ஏறத்தாள எமது ஊர் தாளமரம் மாதிரியே இருந்தது. ஜோசுவா மரம் இந்தமரத்திலிருந்து வரும் பழங்களை கூடுதலாக மிருகங்களும் எஞ்சியிருக்கும் சிலதை அங்குள்ளவர்களும் உண்ணுகிறார்கள்.ஒரு வருடத்துக்கு 1-3 அங்குலம் தான் வளருகிறது.ஆனாலும் நீண்ட ஆயுள் உள்ளதாக சொல்கிறார்கள்.ஏறத்தாள 150-200 வயதுவரை வாழக் கூட…
-
- 0 replies
- 172 views
- 1 follower
-
-
இலையுதிர் காலம் எங்கும் உள்ளது தான். நாட்டுக்கு நாடு இது எந்த மாதங்கள் என்பதில் தான் ஒரு மாறுதல் இருக்கும். கொட்டோ கொட்டென்று கொட்டும், அள்ளிக் கொண்டே இருக்க வேண்டியது தான். கொட்டுவதும், பின்னர் துளிர்ப்பதுமாக மரங்கள் இருக்கும். உயிர்களும் போவதும், பின்னர் புதியன வருவதுமாக தெருக்களும் இருக்கின்றன. ** இலை என்றால் உதிரும் -------------------------------------- என்ன அழகு என்று தினம் மாறும் வர்ணங்கள் பார்த்து நிற்க இலைகள் கொட்ட ஆரம்பித்தன வாசல்களும் தெருக்களும் விழுந்த இலைகளால் நிரம்பி வழிந்தன …
-
-
- 8 replies
- 849 views
-
-
அண்மையில் Plam Spring California என்ற இடத்தில் போய் 4 நாட்கள் தங்கியிருந்தோம். இந்த தேசம் முழுவதும் பாலைவனமாக காட்சியளிக்கிறது. ஒரு இடத்தில் நன்றாக காற்று வீசக் கூடிய இடத்தில் Windmills Farm என்று சிறிய காற்றாலைகளில் இருந்து பெரிய பெரிய காற்றாலைகள் வரை பூட்டி மின்னுற்பத்தி பண்ணுகிறார்கள். ஒருநாள் இதைப் பார்க்க போயிருந்தோம். அவர்களின் உத்தரவுடன் வாகனத்திலேயே பயணித்தபடி பார்வையிடலாம். அவர்களின் அலுவலகத்துக்குள் போனால் காற்றாலை எப்படி இயங்குகிறது.எவ்வளவு மின்சாரத்தை பெற முடியும்.காற்றே இல்லை என்றால் எப்படி மின்சாரம் வழங்குவது. மிக முக்கியமாக இதில் பிரச்சனை வரும்போது எப்படியெல்லாம் திருத்த வேலைகள் செய்யலாம்.உள்ளே போவதற்கு எப்படி போவது. இது…
-
-
- 6 replies
- 877 views
- 1 follower
-
-
மழைப் பாடல்கள் ---------------------------- மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் ..... என்று சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் ஆரம்பித்திருப்பார். மங்கல வாழ்த்தில் திங்களையும் ஞாயிறையும் போற்றிய பின், மழையைப் போற்றி, பின் சிலம்பின் காப்பியம் கதையை ஆரம்பிக்கும். இங்கு இப்பொழுது ஒவ்வொரு திங்களில் இருந்து ஞாயிறு வரையும் விடாமல் பெய்து கொண்டிருக்கும் மாமழை கண்டு, இளங்கோவடிகள் இப்பொழுது இருந்திருந்தால், அவரே சலித்துப் போய் 'மாமழை போதும், மாமழை போதும்' என்று பாடியிருப்பார். உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. இங்கு தினமும் …
-
- 2 replies
- 667 views
-
-
முடிவிலி ------------- சமீபத்தில் இங்கே ஒரு பாதிரியாருக்கு பெரிய மாரடைப்பு வந்து கொஞ்ச நேரம் இறந்து போய்விட்டார். பின்னர் அவருக்கு உயிர் திரும்பவும் வந்துவிட்டது. இப்படித்தான் வைத்தியசாலையில் சொன்னார்கள். இது செய்திகளிலும் வந்து இருந்தது. பாதிரியாரும் இடைப்பட்ட, அவர் இறந்திருந்த, நேரத்தில் அவர் வேறு ஒரு இடத்திற்கு போய் வந்ததாகச் சொன்னார். இதை Near Death Experience (NDE) என்று சொல்கின்றனர். இந்த வாழ்வின் முடிவில் இருந்து சாவின் விளிம்பு வரை போய் வருதல். அடிக்கடி உலகில் எங்காவது நடக்கும் ஒரு நிகழ்வு இது. பொதுவாக இந்த அனுபவம் பெற்றவர்கள் அநேகமாக வெளிச்சமான, பிரகாசமான, பூந்தோட்டங்கள் நிறைந்த, வாசனைகள் பரவும், ஒளி சுற்றிச் சுழலும், தெரிந்த…
-
-
- 6 replies
- 795 views
-
-
ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்து இருந்தேன். என்ன பார்ட்டி இது,? எதுக்கு அப்பா இதை ஏற்பாடு செய்கிறார்? அப்பா ஏன் ரிஸ்க் எடுக்கிறார்? இது கொஞ்சம் வேறு மாதிரி மாறிவிடும் அல்லவா? என்று மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டாலும் அப்பா சரியாக செய்து முடிப்பார் என்று பார்ட்டிக்கு ஏற்பாடு செய்தார்கள். அப்பாமாருக்கு பிடித்த சாப்பாடுகள் மற்றும் குடிவகைகள் அனைத்தும் மேசையில் இருக்கவேண்டும் என்றும் சொல்லியிருந்தேன். எனது மக்கள் மருமக்களுடன் மருமக்களின் தகப்பனார்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம் என்று கண்டிப்பாக சொல்லி விட்டிருந்தேன். அவரவர் மாமனார்களை அழைத்து வரவேண்டியது அந்தந்த மக்களின் வேலை என்றும் பிரித்துக் கொடுத்து இருந்தேன். பார்ட்டி ஆரம்பிக்கும் நேரம் எல்லோரும் வந்து அம…
-
-
- 10 replies
- 1.4k views
- 1 follower
-
-
இந்தின் இளம்பிறை -------------------------------- ஒரு உறவினர்களின் திருமண விழா மெக்ஸிக்கோவில் உள்ள ஒரு இடத்தில் நடந்தது. இப்பொழுது சில பிள்ளைகள் வேறு தேசம் ஒன்று போய், அங்கு விழா வைப்பதையே விரும்புகின்றனர். திருமண விழா முடிந்து அடுத்த நாளும் நான் அந்த விழா நடந்த இடத்திற்கு போயிருந்தேன். அன்று அந்த இடம் மிகவும் பரிதாபமாக இருந்தது. ஆதலால், நான் அந்த இடத்தை இரண்டு படங்கள் எடுத்தேன், இன்று நானாவது எடுப்போமே என்று. நேற்று ஒரு சோடி செருப்பு அங்கே காணாமல் போயுள்ளது, அதைக் கண்டால் எடுத்து வரவும் என்ற தகவலையும் கையோடு வைத்திருந்தேன். கடலோர மணல் மேல் போட்டிருந்த மேடை இன்னமும் அங்கேயே இருந்தது. ஆனால் கடற்கரை வெள்…
-
-
- 12 replies
- 1.2k views
- 1 follower
-
-
ஆதி அறிவு ------------------- இப்பொழுது வரப்போகும் புகைவண்டி மூன்றாவது தடத்தில் வந்து கொண்டிருக்கின்றது. முதலாவது மேடையில் நிற்பவர்கள் மேம்பாலத்தில் ஏறி அடுத்த பக்கம் போகவும் என்ற அறிவிப்பு தலைக்கு மேலேயிருந்து வந்து கொண்டிருந்தது. அங்கு முதலாவது தடம், இரண்டாவது தடம், மூன்றாவது தடம், முழு நிலையத்திற்கும் சேர்த்து நான் ஒருவனே முதலாவது மேடையில் நின்று கொண்டிருந்தேன். மனிதர்களின் குறுக்கீடுகள் எதுவும் இல்லாமல், இது செயற்கை நுண்ணறிவு கொண்ட ஒரு இயந்திரம் செய்யும் அறிவிப்பாகக் கூட இருக்கலாம். சுற்றிவர மெல்லிய இருட்டு கவிழ்ந்து கொண்டிருந்தது. இப்பொழுது திடீரென ஒருவர் முன்னால் தோன்றி, எனக்கு ஏதாவது சில்லறைகள் கொடு என்று கேட்கக்கூடும். கேட்பதை…
-
-
- 9 replies
- 1.2k views
-
-
புலி வாழ்ந்த மண்.. யாழ்ப்பாணத்தின் மண்டைகாய்கள்.. இப்படி எல்லாம் பெருமைப்பட்டுக் கொண்ட பூமி தான் வல்வை. அண்மையில் அந்தப் பூமிக்குப் போன போது.. வல்லை வளைவை வளைஞ்சு எடுத்தது இந்தளவு தான். அதிலும் வடமராட்சி மக்களின் அன்புடனான வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அதன் பின்னர் ஆஞ்சநேயர் தான் வரவேற்றார் வல்லை சந்தியில்.. தலைவர் வாழ்ந்த வீட்டுப் பக்கம் காப்பெட் எட்டியும் பார்க்கல்ல.. அவர் வாழ்ந்த வீடு காடுபத்திப் போய் கிடக்கு. முன்னால் எம் ஜி ஆர் பாவம் சிலை கூட இல்லை திருவுருவப்படமாகவே நிற்கிறார். வல்வை முதல்.. காங்கேசந்துறை செல்லும் கடற்கரை வீதியும்.. கொஞ்சம் கார்பெட்.. மிகுதி இல்லை. என்னடா கார்பெட் என்று பார்த்தால்.. இருமருங்கும் சொறீலங்கா.. இரா…
-
-
- 12 replies
- 1.4k views
- 1 follower
-
-
உ மயிலம்மா. நினைத்தால் இனிக்கும் மோகனம் .....! மயிலிறகு ....... 01. அந்தக் இரும்பாலான வெளிக்கதவின் கொழுக்கியைத் தூக்கிவிட்டு வீதியில் இருந்து உள்ளே வருகின்றாள் கனகம். அவளுடன் சேர்ந்து வீட்டுக்குள் வர முன்டிய பசுமாட்டை மீண்டும் வீதியில் துரத்தி விட்டிட்டு படலையைக் கொழுவிக் கொண்டு வீட்டுக்குள் வரு…
-
-
- 66 replies
- 5.3k views
- 2 followers
-
-
ஆண்டவன், ஆள்பவன், ஆளப்போகிறவன். இப்படிச் சொன்னாலே மூன்று காலங்களும் வந்துவிடும். ஆனால் நாங்கள் என்னவோ முக்காலத்திலும், கடந்த காலத்து ஆண்டவர்களைத்தான் தேடுகிறோம். கோயில் கட்டி வணங்குகிறோம். பொங்கல் படைக்கிறோம். காணிக்கை தருகிறோம். காவடி தூக்குகிறோம். தேரில் வைத்து இழுக்கிறோம்…இன்னும் என்னென்னவோ செய்கிறோம். நாங்கள் தமிழர்கள் என்பதால், எங்களை ஆண்டவர்கள் கந்தசாமி, சண்முகம், கதிரேசன், ஆறுமுகம், முருகன்,…. என்னும் பெயர்களுடன் இருக்கிறார்கள். நான் இரண்டாம் வகுப்பு படித்த போது, எனது சமயம் சைவசமயம் எனத்தான் படித்தேன். இப்பொழுது எனது சமயம் என்ன என்று கேட்டால் இந்து சமயம் என்றுதான் குறிப்பிடுகிறேன். என் சமயத்தையே என்னைக் கேட்காமல் மாற்றிவிட்டார்கள். ஆண்டவர்களில…
-
-
- 7 replies
- 1.3k views
-
-
உச்ச அளவாம் வெப்ப உயர்வு.. 1.5 பாகை செல்சியஸ் தொட்டாச்சு 2040 இல் வர வேண்டியது 2023 இல் வந்தாச்சு.. பூமித் தாய்க்கும் அடிக்குது குலப்பன்.. யாருக்கென்ன கவலை..!! விண்ணில கொஞ்சம் வி(வீ)ணாகுது நிலவில கொஞ்சம் குப்பையாகுது உக்ரைனில் கொஞ்சம் உருகிப் போகுது காசாவில் கொஞ்சம் கரி(ரு)கிப் போகுது இப்படி யாகுது டொலர் கணக்கு யாருக்கென்ன கவலை..!! கார் ஓட்டமும் குறையல்ல காற்றில கலந்த அந்த சுவட்டுக் காபனும் குறையல்ல.. கக்கும் புகைக்கு வரிதான் வருகுது கரியமிலையின் அளவுக்கோ வீழ்ச்சியில்லை யாருக்கென்ன கவலை...!! மின்சாரத்தில் இயக்கினால் வரி விலக்கு என்டாங்கள் மின்…
-
-
- 8 replies
- 1.2k views
-
-
யாழில் பதியப்பட்டிருந்த ஷோபா சக்தியின் ‘சித்திரப் பேழை’ வாசித்தேன். 2014இல் யேர்மனியில் நடந்த ஒரு சம்பவத்தை அவரது கதை எனக்கு நினைவூட்டியது. அதைத்தான், “அப்பா அது நீதானா?” என இங்கே தந்திருக்கிறேன் இதற்குமேல் படுக்கையில் புரண்டு கொண்டிருக்க முடியாது என்று அன்றியாவுக்கு புரிந்து விட்டது. ஆனாலும் படுக்கையில்தான் இருந்தாள். அன்றியாவுக்கு அதிகம் பிடித்த இரவுகள் என்றால் அது ஞாயிறு இரவுகள்தான். அந்த இரவுகளில்தான் அடுத்தநாளின் சுமைகள் இல்லாமல் அன்றியா அதிகமாகத் தூங்குவாள். திங்கட் கிழமைகளில், ஏறக்குறைய நண்பகலை பொழுது நெருங்கும் நேரத்தில்தான் படுக்கையைப் பிரிந்து அவள் எழுந்து வருவாள். இந்தத் திங்கட்கிழமை மட்டும் அவளுக்கு சுகமானதாக இருக்கவில்லை. திங்கட்கிழமை…
-
-
- 6 replies
- 1.9k views
-
-
சிந்திப்போம் செயல்படுவோம் களியாட்டத்தில் கலாட்டாவா அனைவருக்கும் வணக்கம். அண்மையில் யாழ்நகரில் நடைபெற்ற நிகழ்வின் பொழுது நடந்த ஒர் அசம்பாவிதத்தை பற்றி பல வாத பிரதிவாதங்கள் இடம் பெறுவதை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். இந்த அசம்பாவிதத்தை ஊதி பெருப்பித்த பெறுமை நெட்டிசன் மாரை சேரும் .அதாவது சமுக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவு செய்யும் நபர்கள்..அநேகமான நபர்கள் தங்களுக்கு அதிக பார்வையாளர்கள்,மற்றும் லைக் வேணும் என்ற காரணத்தால் கவர்ச்சிகரமான தலையங்கங்களை எழுதி தங்களது கற்பனைக்கு எட்டியவற்றை கூறினார்கள் ..அவர்களில் அனேகமானவ்ர்கள் போட்ட படம், அதாவது சனம் தடுப்பு கம்பிகளை உடைத்து கொண்டு முன்னுக்கு செல்லும் காட்சி...இந்த ஒரு காட்சியை ஏதோ ஒரு மூலத்தில் கொப்பி பண்ண…
-
-
- 9 replies
- 1.2k views
-
-
2007, நான் அத்தொழிற்சாலையில் இணைந்து கிட்டத்தட்ட ஒருவருடம் ஆகியிருந்தது. என்னைப்போலவே இங்குவந்து, தம்மை நிலைநிறுத்திக்கொள்ள பல இந்தியர்களும், இலங்கையர்களும் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காலம். வெள்ளை நிறத்தவரின் தொழிற்சாலை, வேலைத்தளத்தில் அணியின் மேலாளர்களில் இருந்து அதியுயர் நிர்வாகத் தலைவர்கள் எல்லோருமே வெள்ளை நிறத்தவர்கள். அவர்களுடன், அவர்கள் பேசும் மொழியினையும், பேசும் சங்கேத வார்த்தைகளும் விளக்கமேயின்றிக் கேட்டுக்கொண்டு, அருகில் இருப்பவன் சிரித்தால், நாமும் சிரித்துக்கொண்டு, வேலைத்தளத்தில் சமூகப் படிகளில் நாம் ஏறலாம் என்று நினைத்திருந்த காலம். எனது வேலைத்தள அணியில் 20 பேர் இருந்தோம். எமது மேலாளர் ஒரு வெள்ளையினத்தவர். சுவிட்ஸர்லாந்தில் பிறந்து, …
-
-
- 32 replies
- 2.9k views
- 1 follower
-
-
இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024 இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இந்த வருடம் நடக்க இருப்பதாக கூறுகிறார்கள்.இந்த தேர்தலுக்காக சிங்கள கட்சிகள் இப்போதிருந்தே ஆயத்தமாகத் தொடங்கிவிட்டன. ஐக்கிய தேசிய கட்சி ராஜபக்ச கட்சி சார்பாக ரணிலும் ஐக்கிய மக்கள் கூட்டணியில் சயித் பிரேமதாசவும் மக்கள் விடுதலை முன்னணி சார்பாக அனுர குமாரவும் அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.இனிவரும் காலங்களில் இன்னும் புதிதாக யார் வேண்டுமானாலும் களமிறங்கலாம். இதுவரை இலங்கையில் நடந்த எந்த ஒரு தேர்தல்களிலும் நான் வாக்குச் செலுத்தவில்ல…
-
-
- 11 replies
- 1.5k views
- 1 follower
-
-
(எழிலன்): - முதலாளி இன்றைக்கு லீவு தாங்கோ? எனக்கு காய்ச்சலா இருக்கு உடம்பும் நடுங்குகிறது (எழிலன்) முதலாளி:- இன்றைக்கு லீவு கொடுக்க இயலாது இன்று ஞாயிற்றுக்கிழமை கன சனம் கடைக்கு வரும் நீயும் லீவு எடுத்தால் நான் யாரைக்கொண்டு கடையை நடத்துற வேலை செய்யுற என்று சொன்னார் முதலாளி முதலாளி:- இல்லை ஐயா எனக்கு நிற்க கூட முடியல அதுதான் லீவு கேட்கிறன் முதலாளி:- சரி லீவு இல்ல கணக்கை பார்த்து காசை மொத்தமா வாங்கிட்டு போ இனி வேலைக்கும் வராத என்றார் முதலாளி. (எழிலன்): உடலைப்பார்த்தால் தான் நாளைக்கு வேலை செய்யலாம் என காசை தாங்கோ என கேட்க முதலாளி:- எத்தனை நாள்? (எழிலன்): 15 நாள் ஐயா 15000…
-
-
- 18 replies
- 1.9k views
-
-
பொருநைக் கரையினிலே - 1 - சுப.சோமசுந்தரம் காவ்யா பதிப்பக நிறுவனர் பேரா.சு.சண்முகசுந்தரம் அவர்கள் தமது புதினங்களான பொருநை, கூவம் இவற்றில் முறையே தமது நெல்லை, சென்னை வாழ்க்கையினைச் சொல்லோவியமாய் வரைந்துள்ளார். இத்தலைப்புகளால் ஈர்க்கப்பட்ட அடியேன், "என் வாழ்க்கையைச் சித்தரிக்கப் பெரிதாக ஏதுமில்லையெனினும், பொருநைக் கரையிலேயே அநேகமாக வாழ்நாள் முழுதும் கழிக்கும், களிக்கும் பேறு பெற்ற நான் இங்கு கற்றதையும் பெற்றதையும் குறைந்தபட்சம் ஒரு கட்டுரையாய் அல்லது கட்டுரைத் தொடராய்ப் பதிவு செய்யலாமே என எண்ணியதன் வெளிப்பாடே இந்த என் எழுத்து. அ…
-
-
- 8 replies
- 1.5k views
- 2 followers
-
-
அழகானது மட்டுமல்ல அமைதியையும் பழமையையும் பேணிக் காக்கும் ஒரு நகரம்தான், யேர்மனியில் இருக்கும் ஸ்வேபிஸ் ஹால் நகரம். இரண்டாம் உலகப் போரில் குண்டுகளுக்குத் தப்பியது மட்டுமல்லாமல் போர் நடந்து கொண்டிருந்த போது யேர்மனியின் பல நகரங்களுக்கு உணவுகளை வழங்கிய பெருமையையும் இந்த நகரம் தனக்குச் சேர்த்துக் கொண்டுள்ளது.. கோடை என்றில்லை குளிர் காலங்களிலும் பல சுற்றுலாப் பயணிகள் இந்த நகரத்துக்கு வந்து போவார்கள். இரவு நேரத்தில் தேவாலயப் படிக்கட்டுகளில் நடக்கும் நாடகங்களைப் பார்ப்பதற்கு என்றே வெளி நகரங்களில் இருந்து பலர் வருவார்கள். எனக்கு, ஸ்வேபிஸ்ஹால் நகரம் பிடித்துப் போனதால்தான், ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளாக நான் இந்த நகரத்திலேயே வாழ்கிறேன். இது எனது தாயகத்தில் நான் வாழ்ந்ததை விட அ…
-
-
- 37 replies
- 3.4k views
- 2 followers
-
-
அக்காவின் அக்கறை அன்பாய் என்னை அருகிலிருத்தி வலிக்காமல் தலைவாரி வகிடெடுத்த பின்னாலே சித்திரமாய் திலகமிட்டுடுவாள் தந்தையே தடியெடுத்திடினும் தானோடி வந்து தாவியெடுத்தென்னை தன்னோடணைத்து தான் அடிவாங்கி என்துயர் போக்கிடுவாள் முழுபாவாடையை முன் இடுப்பில் சொருகி எட்டுக்கால் கோட்டில் எம்பி எம்பி ஆடுகையில் பின் எல்லோரையும் தள்ளி விட்டு எஞ்ஞான்றும் அவளே ஜெயித்திடுவாள் கபடி விளையாடுகையில் கிளிபோலப் பறந்து பறந்து காலாலே கலங்கடித்து காளையரையும் விரட்டிடுவாள் எதிர் வீட்டு முகுந்தனிடம் மட்டும் எப்போதும் சண்டையும் சச்சரவும் கேலிசெய்து கொண்டு அவ…
-
-
- 12 replies
- 1.6k views
- 1 follower
-