நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
தயிர் ஓர் அருமருந்து !நமது பாரம்பரிய உணவுகளில் நிறைய மருத்துவமும் சேர்ந்திருந்தது என்பதை பல ஆய்வுகள் மூலம் அறிகிறோம். உணவே மருந்து என்ற முறைக்கு ஏற்றபடி பண்டைய தமிழர்களின் உணவு முறை இருந்தது. அப்படிப்பட்ட உணவுகளில் ஒன்றுதான் தயிர் என்பது. வெப்பப்பகுதியில் வாழும் நமக்கு இந்த தயிர் எத்தனை நன்மை பயக்கிறது என்பதை விரிவாக சொல்லும் காணொளி இது !நமது பாரம்பரிய உணவுகளில் நிறைய மருத்துவமும் சேர்ந்திருந்தது என்பதை பல ஆய்வுகள் மூலம் அறிகிறோம். உணவே மருந்து என்ற முறைக்கு ஏற்றபடி பண்டைய தமிழர்களின் உணவு முறை இருந்தது. அப்படிப்பட்ட உணவுகளில் ஒன்றுதான் தயிர் என்பது. வெப்பப்பகுதியில் வாழும் நமக்கு இந்த தய…
-
- 0 replies
- 332 views
-
-
உடல் மெலிவாக இருக்க வேண்டும் என்பதற்காக பட்டினி கிடந்த பல்வேறு நோய்கள் வர நாமே காரணமாக இருக்கிறோம். அதிலும் குறிப்பாக பட்டினி கிடப்பதால் அல்சர் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. விரைவு உணவுகள், ரெடிமேட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், செயற்கை வண்ண உணவுகள் என்று மேற்கத்திய உணவுக் கலாச்சாரம் நம்மிடம் புகுந்துகொண்ட பிறகு, காய்ச்சல், தலைவலி போல் அல்சர் தொல்லை ரொம்பவும் இயல்பாகிவிட்டது. இதற்கு தொடக்கத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். தடுக்க என்ன செய்யலாம்? * தினமும் திட்டமிட்டு தடுமாற்றம் இன்றி வேலைகளை செய்து முடிக்கவும். * சாப்பாட்டில் காரம் குறைக்கவும். * அசைவ உணவுகளை வாரத்தில் ஒருநாள் என்பது போல் தள்ளிப் போடவும். அப்படியே சா…
-
- 0 replies
- 684 views
-
-
படத்தின் காப்புரிமை NORRIE RUSSELL, THE ROSLIN INSTITUTE மரபணு மாற்றம் மூலம், மூட்டு வலி மற்றும் சில வகை புற்றுநோய்க்கு மருந்து தரும் முட்டைகளை இடும் கோழிகளை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்வதைக் காட்டிலும் இந்த மருந்துகளை முட்டையாக இடும்போது பல மடங்கு விலை மலிவானதாக உள்ளது. பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளை போன்று இந்தக் கோழிகள் துன்புறுத்தப்படமாட்டாது. மேலும் அவை அன்பாக கவனித்துக் கொள்ளப்படும். பெரிய பண்ணைகளில் வாழும…
-
- 0 replies
- 903 views
-
-
நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1 மற்றும் பி2 போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.கத்தரிக்காய் காய்கறியாக பாவிக்கப்பட்டாலும் உண்மையில் இது பழ வகையைச் சார்ந்ததாகும். இது வெள்ளை, ஊதா, கறுப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றது. மேலும் இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், நிறைந்துள்ளது. வைட்டமின் அதிகமாக இருப்பதால் நாக்கில் ஏற்படும் அலர்ஜியினைப் போக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று. கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லத…
-
- 0 replies
- 548 views
-
-
கொரோனாவை கட்டுப்படுத்த மருந்தாக எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் காரத்தன்மை உள்ள உணவுகள் வைரஸ் உடலுக்குள் வாழ்வதைத் தடுக்கும் என்று கூறப்படுகிறது. ஒட்டுமொத்த உலகையும் வீட்டுக்குள் கட்டிப்போட்டு வைத்திருக்கும் நுண்ணுயிரி! ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவி, தொற்றை ஏற்படுத்தும் இதன் தாக்கத்திலிருந்து தப்பிக்க தற்போது சமூக விலகலிலும் மற்றவர்களிடமிருந்து நம்மைத் தனிமைப்படுத்திக்கொள்வதிலும் கவனம் செலுத்திவரும் நாம் இந்த நேரத்தில் எடுத்துக்கொள்ளும் உணவுகளிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். "கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் அதனை எதிர்த்துப் போராட சத்து மிகுந்த உணவுகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டியது அவசியம். …
-
- 0 replies
- 505 views
-
-
கிராமங்களில் இன்றும் 'கருப்பட்டி' காபி என்றால் எக்ஸ்டிரா ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம், மருத்துவ குணம் அதிகம் இருக்கிறது. அதிலும் இனிப்புக்காக மட்டும் இதைப் பயன்படுத்த வில்லை. இந்த கருப்பட்டியில் கூடுதலான மருத்துவத் தன்மை இருப்பதாலும்தான் அதைப் பயன்படுத்தினார்கள். பனங்கருப்பட்டி யில் சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து தின்பண்டமாகவும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்படி உடல் நலனுக்கு மிகவும் உகந்தது என்பதால் இப்போது நகர மக்களிடையேயும் கிராக்கி அதிகரித்து வருகிறது. # இப்போது பரவலாகக் காணப்படும் டெங்கு நோயைக் குணப்படுத்த கரும்பு கருப்பட்டியும் சின்னவெங்காயமும் சிறந்த மருந்தாகும். என இலங்கை கரும்பு ஆராய்ச்சி ந…
-
- 0 replies
- 616 views
-
-
வாழையின் மகத்துவம்! இந்திய தேசத்தின் கலாச்சாரத்தில் வாழைக்கு முக்கிய பங்கு உண்டு. விழாக்களிலும் வாழை மர தோரணம்… வரவேற்பிலும் வாழைதான்… விருந்து உபசரிப்பிலும் வாழைதான். வாழையை நம் முன்னோர்கள் பெண்களாகவே எண்ணி வந்துள்ளனர். வாழையில்லாத வீடு பெண் இல்லாத வீட்டுக்கு சமம் என்று சொல்வார்கள். வாழையை வீட்டைக் காக்கும் பெண் தெய்வமாகவே பழக்காலத்தில் போற்றி வந்துள்ளனர். மங்கள நிகழ்ச்சியென்றால் வாழைக்குத்தான் அதிக பங்கு.வாழையின் அனைத்து பாகங்களுமே மனித ஆரோக்கியத்தை முன்னிருத்தியிருக்கின்றன. இடி தாங்கியாகவும் வாழையே விளங்குகிறது. வாழை அநேக மருத்துவப் பயன்களைக் கொண்டது. குறிப்பாக விஷப் பூச்சிகளின் தாக்குதலின்றி காக்கும் தன்மை வாழைக்கு உண்டு. இதனால்தான் சுபகாரியங்களில் வாழையை முதன…
-
- 0 replies
- 2.6k views
-
-
[size=4]இன்றைய அளவில்கூட கர்ப்பிணியின் மரணத்திற்கும், கருக் குழந்தையின் மரணத்திற்கும் முக்கியக் காரணமாக விளங்கும் நோய்களுள் மிகை இரத்த அழுத்தம் முதன்மை வகிக்கிறது எனலாம். சாதாரணமாக இரத்த அழுத்தத்தில் சுருங்கு இரத்த அழுத்தம் 120 மி.மீ. ஆகவும், விரிவு இரத்த அழுத்தம் 80 மி.மீ. ஆகவும்தான் இருக்கும். முதல் ஆறு மாத கர்ப்பக் காலத்தில் இரத்த அழுத்தம் சற்று குறைந்து காணப்படும். சுருங்கு இரத்த அழுத்தம் 100 ஆகவும், விரிவு இரத்த அழுத்தம் 70 ஆகவும் இருக்கக்கூடும். கடைசி மூன்று மாத காலத்தில்தான் இரத்த அழுத்தத்தின் அளவு அதிகரிக்கும். 24 வாரத்திற்குப் பிறகுதான் இரத்த அழுத்தம் அதிகமாக ஆரம்பிக்கிறது. விரிவு இரத்த அழுத்தம் 130 மி.மீட்டரைத் தாண்டினால் அதை இதயத்தால் தாங்க இயலாது. …
-
- 0 replies
- 532 views
-
-
எந்த உயிரினதுக்குமே... இயற்கை வழி "கரு" உருவாதலே சால சிறந்தது ! எல்லாத்தையும் சுலபமா கஷ்டம் இல்லாம, நோகாம நோம்பு கும்பிடனும்னு இன்னைக்கு எல்லோரும் செயற்கை கருவூட்டல் மூலம் சினை ஊசிய போட்டு மாட்டை சீரழிக்கிறோம் ! கண்ட கண்ட மாட்டு விந்து மூலம் உருவாகுற கரு நாளைக்கு எந்த குணத்துல வளரும்? அதுல பால் கறக்கும்போது பால் தூய்மையானதா இருக்குமா இல்ல கலப்பின இரத்தம் சேர்ந்ததா இருக்குமா? குடிக்கிற நம்ம மூளை தெளிவா இருக்குமா? மனுஷனோ மிருகமோ இனச்சேர்க்கை என்பது இயற்கை வழி மூலம் தான் அமையனும். அது தான் உடலுக்கும் மனதுக்கும் சிறப்பு. நம்மை விட அறிவு குறைவு என்பதால் உணர்ச்சிகள் அதற்கு இல்லாமல் போய்விடுமா என்ன? உணர்வுகள் என்பது எல்லோருக்கும் ஒன்னுதான். செயற்கை கருவூட்டலை…
-
- 0 replies
- 409 views
-
-
ஆஸ்பிரின் சாப்பிடுவதால் எந்த பயனும் இல்லை - ஆராய்ச்சியில் தகவல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES நல்ல உடல்நிலையிலுள்ள முதியோர்கள் ஒருநாளைக்கு ஒரு ஆஸ்பிரின் மாத்திரையை சாப்பிட்டால் கடும் உடல்நல பாதிப்புகள் ஏற்படுமென்று அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் முடிவில் தெரியவந்துள்ளது. மாரடைப்பாலோ அல்லது பக்க…
-
- 0 replies
- 571 views
-
-
பப்பாளி பழம் நல்ல சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், அதிகமான சத்துக்களையும் கொண்டுள்ளன. பப்பாளியில் அளவுக்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் ஏ,சி மற்றும் ஈ இருக்கிறது. இத்தகைய அதிகமான அளவு ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், அவை உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை கரைக்கின்றன. இந்த பழத்தில் இருக்கும் புரோட்டீனான பாப்பைன், செரிமான மண்டலத்தை சரியாக இயக்குகிறது. மேலும் இதில் இருக்கும் நொதிப் பொருள் செரிமானமாகாத புரோட்டீன்களை உடைத்து எளிதில் செரிமானமாக்கும் அமினோ ஆசிட்டுகளாக மாற்றி செரிமானத்தை விரைவுபடுத்துகிறது. அதிலும் பப்பாளியை சாப்பிட்டால் மலச்சிக்கல் இருந்தாலும் சரியாகிவிடும். பப்பாளியில் உடலில் ஏற்படும் அலர்ஜியை எதிர்த்து போராடும் பண்புகள் இருக்கின்றன. அத…
-
- 0 replies
- 414 views
-
-
பித்தப்பை புற்றுநோய்: எந்தெந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யக்கூடாது? யாருக்கு வரும் வாய்ப்பு அதிகம்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பித்தப்பை புற்றுநோய் அரிதானது. ஆரம்பக் கட்டத்தில் பித்தப்பை புற்றுநோய் கண்டறியப்பட்டால், குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் பெரும்பாலான பித்தப்பை புற்றுநோய்கள் தாமதமான கட்டத்தில் கண்டறியப்படுகின்றன, அப்போது நோயை சமாளிப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலேயே பித்தப்பை புற்றுநோய் அதிகம் ஏற்படுகிறது. இதற்கான காரணம் என்ன? பித்தப்ப…
-
- 0 replies
- 808 views
- 1 follower
-
-
மாரடைப்பும் இதய செயலிழப்புக்கும் என்ன வித்தியாசம் என்பதை மருத்துவர் விளக்கும் காணொளி இது.
-
- 0 replies
- 621 views
-
-
பெண்களை பாடாய்ப்படுத்தும் பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு தரும் பொருட்கள் தலையில் அழுக்குகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொடுகு சேர்ந்தால் பெரிய தொல்லைகளுக்கு வழிவகுக்கும். தலையில் அரிப்பு,கொப்புளம் என பிரச்சினைகள் தொடரும். அதுமட்டுமல்ல இந்த பாதிப்பு நீடித்தால் தலைமுடி அதிகமாக உதிரத் தொடங்கும். பெண்களைப் பாடாய்ப்படுத்தும் பொடுகு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெங்காயமும், நாட்டுக்கோழி முட்டையும் பொடுகைப் போக்குவதில் சிறப்பான பங்காற்றும். முதலில் நான்கைந்து சின்ன வெங்காயத்தை மையாக அரைத்து அதனுடன் நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கருவைச் சேர்த்து ஆம்லெட்டுக்கு அடிப்பதுபோல அடித்து அதைத் தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குள…
-
- 0 replies
- 962 views
-
-
கொரோனா தொற்று: 'லேசான பாதிப்பும் ஆண்களுக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும்' - ஆய்வில் தகவல் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இன்றைய நாளிதழ்கள், இணையதள பக்கங்களில் உள்ள முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து இங்கே வழங்குகிறோம். லேசான கொரோனா பாதிப்பு கூட ஆண்களின் குழந்தை பேறு திறனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று மும்பை ஐ.ஐ.டி. ஆய்வில் தெரியவந்துள்ளதாக தினத் தந்தி நாளிதழ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த அந்த செய்தியில், ''மும்பை ஐ.ஐ.டி., மும்பை ஜஸ்லோக் மருத்துவமனை ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஒரு ஆய்வில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸ், ஆண்களின் குழந்தை பேறு தி…
-
- 0 replies
- 215 views
- 1 follower
-
-
ரயில் நிலையம், பேருந்து நிலையம், ஹோட்டல் என எங்கு எடை பார்க்கும் மெஷின் இருந்தாலும் உடனே, உயரத்துக்கு ஏற்ற எடை இருக்கிறோமா என்று ஆர்வமாகப் பார்ப்போம். பார்த்த பிறகு, என்ன தோன்றும்? உடல் பருமன் முற்றிய நிலையில் தீர்வு காண்பது கடினம். ஆனால், ஆரம்ப நிலையிலேயே இதைத் தடுக்க முடியும். உடல் பருமனாவதைத் தவிர்த்து ஃபிட்டாக இருக்க லேப்ராஸ்கோப்பி மற்றும் உடல் பருமன் குறைப்பு அறுவைசிகிச்சை நிபுணர் சி.பழனிவேலு அளிக்கும் டிப்ஸ் இங்கே... சராசரியாக ஒரு நபருக்கு தினமும் 2,000 கலோரிகள் தேவைப்படுகிறது. அளவுக்கு அதிகமாக கலோரிகள் சேர்ந்து, அதை ஆரோக்கி யமான முறையில் செலவிடத் தவறும்போது உடல் பருமன் ஏற்படுகிறது. உடல் பருமன், அழகு சார்ந்த விஷயம் அல்ல, இது ஒரு நோய் என்பதை, முதலில் புரிந்து…
-
- 0 replies
- 523 views
-
-
மஹிமா ஜெயின் பிபிசிக்காக படத்தின் காப்புரிமை Brian Jannsen/…
-
- 0 replies
- 439 views
-
-
ஆயுளைக் குறைக்கும் உடல் பருமன்! நீங்கள் தின்பண்டங்களுக்கு அடிமையானவரா? உங்களின் உடல் எடை அதிகரித்தால் ஆயுளும் 10 ஆண்டுகளுக்கு மேல் குறையும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அதிக உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தினர். அதில், உடல் பருமன் என்பது புகைபிடித்தலை விட அதிக பாதிப்பைத் தருகிறது. அதாவது ஆயுளில் சுமார் 13 ஆண்டுகளைக் குறைத்து விடுகிறது என்று கண்டுபிடித்துள்ளனர். ''நமது சோம்பேறித் தனத்தினாலும், அவசரத்தினாலும் துரித உணவுகளைத் தேடுகிறோம். பற்றாக்குறைக்கு தின்பண்டங்களைச் ச…
-
- 0 replies
- 1.3k views
-
-
மூளைக்கு ஓய்வு ஆயுளுக்கு நீட்சி! மனிதர்களிலும் உயிரினங்களிலும் ஆயுள் என்பது வரையறை உடையது! இது எப்படி வரையறுக்கப் பட்டிருக்கிறது என்ற விளக்கம் தெரிந்தால் ஆயுளை நீட்டிக்கும் வல்லமை சாத்தியமாகும் என்ற கோணத்தில் தான் வயதாவது, ஆயுள் நீட்டிப்பு தொடர்பான ஆய்வுகள் நகர்கின்றன. ஏற்கனவே சில உயிரியல் காரணிகள் ஒரு உயிரினத்தின் வாழ்வுகாலத்தை தீர்மானிக்கும் காரணிகளாக இனங்காணப் பட்டிருகின்றன. விலங்குக் கூட்டத்தில், அனுசேப வீதம் (இது சக்தியை உடல் எரிக்கும் வேகம்) குறைந்த விலங்குகளான யானை, ஆமை போன்றவை அதிக அனுசேப வீதம் கொண்ட எலி, பூனை போன்றவற்றை விட ஆயுள் காலம் கூடியவை. இதை அடிப்படையாக வைத்து நடந்த ஆய்வுகளில், எலிகளில் கூட அவை உள்ளெடுக்கும் கலோரிகளை உணவுக் கட்டுப் பாட்டினால் குறைத்…
-
- 0 replies
- 917 views
-
-
தீய கொலஸ்ரோல் டெச்ட்தீய கொலஸ்ரோல் - குறைக்க முடியுமா? கொலஸ்ரோல் என்றால் என்ன? கொலஸ்ரோல் என்பது ஒரு மெழுகுத் தன்மை கொண்ட கொழுப்புப் போன்ற பொருளாகும். சாதாரண உடலியக்கங்களுக்கு இது சிறிய அளவில் இருந்தால் போதுமானதாகும். கொலஸ்ரோல் இயற்கையாகவே எமது எல்லா உடற்கலசுவர்களில் காணப்படுகின்றது. மூளை, நரம்பு, தசை, ஈரல், குடல், இதயம் ஆகிய எல்லாக கலங்களின் சுவர்களிலும் காணப்படுகின்றது. தினந்தோறும் சாதாரண உடலியக்கத்திற்கு தேவையான 100மிகி கொலஸ்ரோல் எமதுடலினால் உற்பத்தி செய்யப்படுகின்றது. எமதுடல் பல ஓமோன்களையும், விற்றமின் டி, கொழுப்பைச் சமிபாடடையச் செய்யும் பித்தநீர் போன்றவற்றை உற்பத்தி செய்ய கொலஸ்ரோலைப் பயன்படுத்துகின்றது. இதற்கு குருதியிலுள்ள மிகவும் சிறிய அளவான கொலஸ்ரோல் போது…
-
- 0 replies
- 2.7k views
-
-
நீரிழிவையும் இதயநோயையும் தரும் “பரோட்டா” பரோட்டா சாப்பிடுவதால், இதய நோயும், நீரிழிவு நோயும் வரும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பரோட்டா தமிழர்களின் அன்றாட உணவு என்று சொல்ல முடியாவிட்டாலும், அடிக்கடி உண்ணக் கூடிய உணவாக மாறிவிட்டது. பரோட்டாக்கள் மைதாவில் தயாரிக்கப்படுகின்றன. மைதாவை பதப்படுத்தும் போது சேர்க்கப்படும் இராசயனப் பொருட்கள் நீரிழிவு நோயையும், இதய நோயையும் ஏற்படுத்தவல்லவை என்பதால் மைதாவை தவிர்ப்பது சிறந்தது என்கின்றனர் மருத்துவர்கள். மரபணுக்கள் உடல்பருமனை தூண்டுகின்றன. Obesity எனப்படும் அதிகப்படியான உடல்பருமனுக்கு பின்னணியில் இருக்கும் குறிபிட்ட மரபணுக்களை லண்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். உலக அளவில் ஆற…
-
- 0 replies
- 386 views
-
-
எதுக்கு தங்க நகை - secret of gold தங்க நகை அணிவதால் என்ன நன்மை தங்க நகை அணிவதிலும் அதை வாங்குவதிலும் பெண்களுக்கு அலாதி ஆர்வம்தான். சவரன் எத்தனை ஆயிரம் விற்றாலும் பரவாயில்லை மாதத்திற்கு அல்லது வருடத்திற்கு இத்தனை பவுன் சேர்த்துவிடவேண்டும் என்பதில் குறியாக இருப்பார்கள். தங்க நகை அணிவது அழகுக்காக என்பதை விட அது ஆரோக்கியத்தோடும் தொடர்புடையது என்கின்றனர் நம்முன்னோர்கள். பழங்காலத்தில் இருந்தே தங்கம், வெள்ளி நகைகளை அணியவும், தாமிரம், பித்தளை பாத்திரங்களை உணவு சமைக்கவும் பயன்படுத்தியுள்ளனர். எகிப்து, இந்தியா, சுமேரியா நாகரீகங்களின் கால கட்டத்திலே தாமிரம், வெள்ளி, தங்கத்தின் பயன்பாடு அதிகமாக இருந்துள்ளதை வரலாற்றுச் சான்றுகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதனால்தான் இன…
-
- 0 replies
- 3.2k views
-
-
“இந்த டொக்டர்மாரோடை பெரும் தொல்லை. நார்ப்பொருளைச் சாப்பிடு சாப்பிடு எண்டு எங்கை பாத்தாலும் சொல்லிக் கொண்டிருக்கினம்.” சொன்னவர் ஒரு பெரியவர். வயதில் பெரியவர் அல்ல, எடையில் பெரீயவர். ‘நாங்கள் என்ன பொச்சு நாரையே தின்னுறது. பிரஸர் எண்டு போனாலும் சொல்லுகினம், முழங்கால்;வலி என்றாலும் சொல்லுகினம், வியர்க்கிறது எண்டாலும் நாரைத் தின் என்று சொல்லுகினம். இதென்ன இந்த நார்ப் பொருள்’ பொரிஞ்சு சொல்லாத குறையாக மன அவலத்தைக் கொட்டித் தள்ளினார். அண்மையில் (மார்ச் 2013) வெளியான ஒரு ஆய்வு உணவில் அதிகம் நார்ப்பொருளைச் சேர்;ப்பவர்களுக்கு பக்கவாதம் வருவதுற்கான சாத்தியம் குறைவு என்கிறது. இது ஏற்கனவே தெரிந்த விடயம் என நீங்கள் சொல்லக் கூடும். ஆனால் இந்த ஆய்வின் பிரகாரம் ஒருவர் தனது உணவில் த…
-
- 0 replies
- 1.5k views
-
-
சிறுநீரக தொற்று குறித்து விளக்கும், பெண்கள் சிறப்பு மருத்துவர் டாக்டர் கலைவாணி ராமலிங்கம்: 'இகோலை' என்ற கிருமிகள், எப்போதுமே குடலில் இருக்கும். சிறுநீர்ப் பாதையில் சுத்தமின்மை, தண்ணீர் போதிய அளவு குடிக்கவில்லை என்றால், அந்தக் கிருமிகள், கிட்னிக்கு உள்ளே போகிற அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சுகாதாரம் சரியில்லாத காரணத்தால், பெண்கள், சிறுமியர் சிறுநீர் கழிப்பதை தவிர்ப்பதால், 'யூரின் இன்பெக்ஷன்' ஏற்படுகிறது. உடல் ரீதியாக, ஆண்களின் சிறுநீர் பைக்கும், அது வெளியேறுகிற துவாரத்திற்குமான இடைவெளி, 15 செ.மீ., என்றால், பெண்களுக்கு அது வெறும், 4 செ.மீ., மட்டுமே. அதனால், மிகச் சுலபமாக கிருமிகள், பெண்களின் சிறுநீர் பையைத் தாக்குகின்றன. நம் உடலில் மிக முக்கியமான பகுதி சிறுநீரகம். ரத்தத்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
அறிகுறி இல்லாமல் கூட மாரடைப்பு வருமா? தமிழகத்தில் மாரடைப்பு வந்து இறப்பவர்களில் அதிகம் பேர் ஆண்களா? பெண்களா?
-
- 0 replies
- 376 views
-