Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. கண்ணும் உணவும் நம் தினசரி உணவுப் பழக்க வழக்க முறைகளிலேயே கண்களைப் பாதுகாக்கும் விஷயங்கள் அடங்கி உள்ளன, உதாரணமாக பச்சைக் காய்கறிகள் கண்கள் ஆரோக்கியத்திற்கு ஆற்றும் பணிகளைப் பற்றி நாம் சுருக்கமாக பார்ப்போம். பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. பார்வைக்கு தெரியும் ஒளியின் நீலமான பகுதிக்குத்தான் கண்களின் விழித்திரை அதிகமாக பாதிக்கப்படுகிறது, இது கண் விழித்திரைக்கு பின்பகுதியில் உள்ள ஆயஉரடய-வை சேதம் செய்யலாம். இந்தப் பகுதிதான் நம் கூர்மையான பார்வைக்கு உதவும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. பச்சைக் காய்கறிகளுள்ள வைட்டமின் சத்துகள் (ஆன்டி - ஓxஇடன்ட்ச்) Mஅcஉல -வை ஆரோக்கியமா…

    • 2 replies
    • 1.6k views
  2. நீரிழிவுக்கு தீட்டப்படாத கைக்குத்தல் அரிசி சனி, 21 ஜூலை 2007( 12:09 ஈஸ்T ) நீரிழிவு நோயாளிகள் தீட்டப்படாத புழுங்கல் அரிசியை உட்கொண்டால் நல்லது என்று மருத்துவர் மோகன் தெரிவித்துள்ளார். மெட்ராஸ் நீரிழிவு நோய் சிறப்பு மையத்தின் தலைவர் மருத்துவர் வி.மோகன் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைக் கூறினார். இந்தியாவில் 4 கோடி பேர் நீரிழிவு (சர்க்கரை) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை 2025-ம் ஆண்டு 7 கோடியை தாண்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். பெற்றோர்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் வருவது நிச்சயம் ஆனால் பெற்றோருக்கு இல்லாமலும் இப்போது உள்ள உணவு பழக்க வழக்கத்தினாலும் உடற்பயிற்சி இல்லாததாலும…

    • 2 replies
    • 2.9k views
  3. புருவங்கள் முகத்தின் சிறந்த அம்சங்களில் ஒன்று. புருவங்கள் அழகாக இருந்தால் கண்களில் அழகு கூடும். முகமே புது பொலிவு பெறும். ஆனால் புருவங்களை சரியாக வடிவமைப்பதே பலருக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. புருவங்களை முகத்துக்கு ஏற்ற விதத்தில் வடிவமைக்க சில குறிப்புகள்: தேவையான பொருட்கள்:- * டுவீஜர் (புருவத்தில் உள்ள தேவை இல்லாத முடிகளை அகற்ற) * புருவத்திற்கான பிரஷ் (பல் தேய்க்கும் பிரஷ் கூட உபயோகிக்கலாம்) * ஆஸ்ட்ரின்ஜென்ட் (சருமத்தை மிருதுவாக்கி, வலியை குறைக்க) * கண்ணாடி (அவசியம் தேவை) * சிறிய கத்தரிக்கோல் (புருவத்தின் முடியை சரி செய்ய) * ஐப்ரோ பென்சில் முதலில் புருவத்தை மேல் நோக்கி பிரஷ் செய்து விடவும். புருவத்தின் வளைவை விட நீட்டமாக உள்ள முடிகளை கத்தர…

    • 22 replies
    • 5k views
  4. மன அழுத்தம் : தவித்தலும், தவிர்த்தலும் May 7th, 2007 at 1:26 pm (மனஅழுத்தம், மன அழுத்தம்) ( இந்த வார தமிழ் ஓசை களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை முழு வடிவம் ) . இறுக்கமான சூழலில் சுழன்று கொண்டிருக்கிறது உலகம். எல்லா துறையிலும் எல்லா பணி நிலைகளிலும் அனைவரும் ஒருவிதமான மன இறுக்கத்துடனேயே உழன்று கொண்டிருக்கிறார்கள். மனிதனுக்கு வரும் நோய்களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்தமான சூழல் காரணமாக வருபவையே என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சித் தகவல் சொல்லியிருக்கிறது. இதுவே மன அழுத்தத்தைக் கையாள்வதன் தேவையை நமக்கு எடுத்துக் கூறுகிறது. சக மனிதன் மீதான கரிசனையும், ஆத்மார்த்தமான அக்கறையும் விலகி சுயநலச் சிந்தனைகள் விஸ்வரூபமெடுக்கும் போது இத்தகைய இறுக்கமான சூழல்கள் உருவ…

  5. முத்து முத்தாக பருக்கள் உள்ளதா? ''பருக்கள் தோன்றுவதற்கே முகத்தில் அதிகளவில் எண்ணெய் சுரப்பதுதான் காரணம். இதைத் தடுக்கவும் பருக்களை விரட்டவும் சில ஆலோசனைகள்.... துண்டுகளாக்கிய வெட்டிவேரை தண்­ரில் கொதிக்கவிட்டு, அந்த நீரினால் முகத்தை கழுவுங்கள். இது, முகத்தில் வடியும் அதிகப்படியான எண்ணெயை எடுத்து பருக்கள் மீண்டும் வராமல் தடுக்கும். புதினா, கொத்தமல்லி ஜூஸாலும் முகத்தை அலம்பலாம். டால்கம் பவுடரை பயன்படுத்தக் கூடாது. அப்சார்ப் (Absorb) என்ற பவுடரை (மருந்து கடைகளில் கிடைக்கும்) பயன்படுத்துங்கள். இது எண்ணெய் பசையை எடுத்துவிடும். அக்னில் (Acnil) என்ற மருத்துவ சோப்பை மட்டும் பயன்படுத்துங்கள். இது பருக்களால் ஏற்படும் அரிப்பை போக்கும். அரிப்பு ஏற்படும்போதெல்…

    • 23 replies
    • 6.8k views
  6. உடல் எடையைக் குறைக்கும் உணவு முறை! உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதிக புரோட்டீன் சத்து கொண்ட அதே நேரத்தில் குறைவான கொழுப்புச் சத்து கொண்ட உணவினை உட்கொண்டாலே போதும் உடல் எடை குறையும். ஆனால் அவற்றைக் கடைபிடிப்பது தான் கடினமான ஒன்றாகும். உடலில் இருந்து அதிக கலோரி சக்தி வெளிப்படக்கூடிய வகையில் உடற்பயிற்சி செய்யலாம். அல்லது மொத்த உணவில் உள்ள கலோரியின் அளவைக் குறைக்கலாம். இவை எல்லாமே சொல்வதற்கு மட்டும் தான் எளிது. ஒருபுறம் டயட்டில் இருக்கிறேன் என்று கூறிக் கொண்டு கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும்பட்சத்தில் உடல் குண்டுக்கு மேல் குண்டாக அதிகரித்துக் கொண்டே போகும். அமெரிக்காவில் சுமார் 64 சதவீதம் பேர் அதிக எடை கொண்டவர்களாக இருக்…

  7. உடலுக்குள் ஒரு அற்புத தொழிற்சாலை -------------------------------------------------------------------------------- உடலுக்குள் சுமார் ஒன்றரை கிலோ எடையுடைய கல்லீரல் தான் 500க்கும் மேற்ப்பட்ட ரசாயன இயக்கங்களை நிகழ்த்துகிறது. இரும்பு, மெக்னீசியம், செம்பு, ஜிங்க், கோபால்ட் என்று ஏகப்பட்ட உலோகங்கள் இங்கே இருக்கின்றன. உலகத்தில் உள்ள தலைசிறந்த நிபுணர்கள் ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும் உருவாக்க முடியாத ஓர் அற்புதமான தொழிற்சாலைத் தான் இந்த கல்லீரல். நாம் உண்ணும், உணவில் இருந்து இரைப்பை பிரித்தேடுக்கும் சக்தி இரத்தக்குழாய் மூலமாக முதலில் செல்லுமிடம் கல்லீரல். இந்தசக்தியை உடலில் இருக்கும் செல்களுக்கு தேவைப்படும் வகையில் மேலும் உடைத்து ரசாயன மாற்றம் நடத்தி இரத்தமூலமா…

  8. ஆரோக்கியமாக வாழ வேண்டுமானால், நம் உடலுக்குத் தேவையான சத்துக்கள் எவை தெரியுமா? கால்சியம்: எலும்பு வளர்ச்சிக்கு அவசியமானது. இது குறைந்தால் நடுத்தர வயது பெண்களுக்கு ஆஸ்ட்ரியோபொராஸிஸ் அதாவது எலும்பு தேய்மான நோய் வரும். பெண்களுக்கு வயது ஆகஆக கால்சியம் குறையும்! கொழுப்பு நீக்கிய தயிர், பால், பாலாடைக் கட்டி, ரொட்டி, காய்கறி, மீன் ஆகியவற்றில் கால்சியம் அதிகமாக உள்ளது. போலிக் ஆசிட்: அனீமியா என்ற ரத்தசோகை நோயை நீக்கும் ஆற்றல் உடையது. இது உடலில் குறைந்தால் இதய நோய் ஏற்படும். கீரை, முளைவிட்ட தானியங்கள், பச்சைக் கடலை, பீன்ஸ், இறைச்சி, ஈரல் ஆகியவற்றில் ஏராளமாக உள்ளது. இரும்புச்சத்து: தசைகளின் செயல்பாட்டிற்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைப்பதற்கு இரும்புச்சத்…

    • 1 reply
    • 6.7k views
  9. இருதய நோய் குணமாக... செம்பருத்திப்பூவில் தங்கச்சத்து உள்ளது. பூவின் மொத்த எடையில் 4ல் ஒரு பாகம் தங்கச்சத்து உள்ளது. செம்பருத்திப்பூக்களைப் பக்குவப்படுத்தி சாப்பிட்டால், தங்கச்சத்தின் பலனைப் பெறமுடியும். செம்பருத்திப்பூ உஷ்ண நிவாரணி. கல்லீரல், இருதயம், மூத்திரப்பை வியாதிக்கும் கணைச்சூடு, எலும்புருக்கி, மேகக்காரிகை, வெள்ளை, வெட்டை, ரத்தப் பிரமியம், நீர்க்கடுப்பு, எரிச்சல், கல்லீரல் வீக்கம் முதலியவற்றிற்குச் சிறப்பான நிவாரணியாகும். ஐந்து செம்பருத்திப் பூக்களை அரை லிட்டர் தண்­ரில் போட்டு கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி மூன்று வேளை சாப்பிட்டால், காய்ச்சல், நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் குணமாகும். செம்பருத்திப்பூக்களை நூறு எண்ணிக்கையில் சேகரித்து 1,250 மில்லி…

    • 0 replies
    • 1.7k views
  10. இரத்த அழுத்தத்திற்கு முதல் எதிரி சமையல் உப்பு [23 - Jஉல்ய் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] -கு.கணேசன்- உயர் இரத்த அழுத்த நோய்க்கு நவீன சிகிச்சைகள் பல இருந்தாலும் ஆரோக்கிய உணவின் மூலம் சரியான அளவில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதைப் பொதுமக்களுக்குப் புரிய வைப்பதே மருத்துவர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று உலக நலவாழ்வு நிறுவனம் வலியுறுத்தி வருகிறது. ஒரு சராசரி நபருக்கு 120/80 மி.மீ- பாதரச அளவு என்பது மிகவும் சரியான இரத்த அழுத்தம் , இளைஞரானாலும் சரி, முதியவரானாலும் சரி, ஒருவருக்கு 100/70 மி.மீ முதல் 140/90 மி.மீ வரை இரத்த அழுத்தம் இருந்தால் பாதிப்பு வராது. இதற்கு மேல் அளவு அதிகரித்தால் அதை உயர் இரத்த அழுத்தம் என்கிறோம். இந்நோ…

  11. ஆரோக்கியமான கூந்தலுக்கு ... தலை முடி ஆரோக்கியம் மாதம் ஒரு முறை மருதாணி இலைகளை அரைத்து தலைக்குத் தேய்த்தால் நல்ல குளிர்ச்சி கிடைத்து, தலை முடி ஆரோக்கியமாக இருக்கும். வாரத்தில் 2 முறைகள் ஆலிவ் ஆயிலை மயிர்க் கால்களில் படும்படி தேய்த்து, பின்பு சிகைக்காய் தூள் பயன்படுத்திக் குளித்தால் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும். தலை முடி வளர்ச்சி தினமும் சிறிகளவு வேப்பங் கொழுந்தை எடுத்து வாயில் மென்று சாப்பிட்டால் தலைமுடி நிறைய வளரும். ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்திப் பூவை அரைத்து நல்லெண்ணெயில் காய்ச்சி, வடிகட்டியபின் தலைக்குத் தேய்த்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும். வாரத்திற்கு 2 முறைகள் நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து வந்தால், முடி உதிராது. செம்பருத்…

    • 71 replies
    • 16.8k views
  12. உங்கள் குழந்தையை சரியான முறையில் எழுப்புங்கள். அப்போதுதான் அவள் நாள் முழுக்க உற்சாகமாக, பாதுகாப்பாக உணர்வாள். குழந்தைகள் இரவு முழுக்க நன்றாகத் தூங்கிய பின் நல்ல மூடில் இருப்பார்கள். 2 முதல் 5 வயதான குழந்தைகளுக்குக் குறைந்தது 8 முதல் 10 மணி நேரம் தடங்கல் இல்லாத தூக்கம் தேவை. சில குழந்தைகள் கொஞ்சம் அதிக நேரம் தூங்குவார்கள். எனவே பெற்றோர்கள் அவர்களை எழுப்ப வேண்டியிருக்கும். தூக்கத்திலிருந்து விழிப்பு நிலைக்கு மாறுவது என்பது யாருக்குமே குழப்பமான ஒரு தருணம்தான். குழந்தைகளுக்கு எப்படி இருக்கும் என்று சொல்லவே தேவையில்லை. இந்தத் தருணம் குழந்தைகளுக்கு நாளெல்லாம் மனதில் நிற்கும் வகையில் பெற்றோர்கள் அவர்களிடம் மிகவும் பாசத்தோடு, இரக்கத்தோடு, பரிவுடன் நடந்துகொள்ள வேண்டும். …

  13. கொண்டை அலங்காரம்...! 1. மயில் ஜடை முதலில் முன் பகுதியை சரி செய்யவும். பிறகு முடி எடுத்து போனி டைல்ஸ் போடவும். பிறகு சுற்றிலும் சுருள் மற்றும் நடுவில் ஒரு சுருள் போடவும் பிறகு மீதமுள்ள முடியில் சவுரி வைத்து பின்னல் போட்டு குஞ்சலம் வைத்து பின்னவும். பிறகு மயில் வடிவத்தை அதில் இணைக்க வேண்டும். 2. கதம்ப ஜடை நேர் வகிடு எடுத்து முன் பகுதியை சரி செய்து உச்சியில் முடி எடுத்து பில்லை செட் செய்யவும் பில்லை சுற்றி கதம்ப மலர் சுற்றி வைத்து கதம்ப இணைப்பை வைக்கவும். 3. மல்லிகை மற்றும் கோழிகொண்டை ஜடை முகத்திற்கு தக்கபடி வகிடு எடுக்கவும். பிறகு தேவையான நீளத்திற்கு பின்னல் போட்டு தேவையான நிறத்தில் குஞ்சலம் வைத்து கொள்ளவும். அதன் பின்னர் மல்லிகை மற்றும் கோழி கொண்டை பூ…

    • 51 replies
    • 20.1k views
  14. கண்களைச் சுண்டி இழுக்கும் வžகரமான ஆரஞ்சுப் பழம், நம் தேகத்துக்கும் வžகரத்தை அள்ளித் தரக்கூடியது, தெரியுமா? அவற்றில் சில..... கண்கள் ''ப்ளிச்'' ஆக... ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் ''ப்ளிச்'' ஆகிவிடும். தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்கவும் ஆரஞ்சு பயன்படுகிறது. ஜொலி ஜொலிக்க... தலையின் வறட்டுத் தன்மையைப் போக்கி, ஜொலி ஜொலிக்க வைக்கிறது ஆரஞ்சு தோல் சிகிச்சை. உலர்ந்த ஆரஞ்சு தோல், துண்டுகளாக்கிய வெட்டிவேர், சம்பங்கி விதை, பூலான் கிழங்கு, கடலை பருப்பு, பயந்தம் பருப்பு, கசகசா... …

    • 12 replies
    • 4.3k views
  15. உங்கள் பற்கள் பள பளக்க பற்களிள் இருக்கும் மஞ்சள் நிறத்தைப் போக்க எலுமிச்சம் பழச்சாறும் உப்பும் கலந்து பற்களை தேயுங்கள் உங்கள் முகத்தோல்லுக்கு தினமும் கரட் சாப்பிடவது தோல் அழகுக்கு நல்லது. உங்கள் முகத்தில் ரத்த ஓட்டம் குறைவாகவும் பொழிவாகவும் இல்லையா??பளிச்சென்ற வசீகரம் கிடைக்க வேண்டுமா??? ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி துளசிச்சாறு கலந்து தினமும் வெறும் வயிற்றில் குடியுங்கள். மூன்று மாதம் இதை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும் பி.கு இதை அனைத்தையும் கடைபிடியுங்கள், உங்கள் எதிர்காலம் மென்மையாக இருக்கும்!!!!!!! நம்பிக்கையில்லாதவர்கள் இதை செய்ய வேண்டாம்!!!!!

    • 92 replies
    • 18.6k views
  16. மைக்குரேவேவ் அவன்கள் குறுகிய காலத்தில் மிகப்பிரல்யம் ஆனதும் மட்டுமன்றி மனிதர்களை சோம்பேறியும் ஆக்கியது. இப்ப என்னடான்னா அந்த மைக்குரேவேவ் அவன்களின் பெருக்கம் தான் உடற்பருமன் ஆண்களிலும் பெண்களிலும் சிறுவர்கள் மத்தியிலும் அளவுக்கு அதிகமாக இருக்க காரணமாகியுள்ளது என்று பிரித்தானிய ஆய்வென்று கண்டறிந்துள்ளது..! உடற்பருமன் அதிகரித்தால் தெரியும் தானே தோன்றாத நோயெல்லாம் தோன்றிக் கொள்ளும்..! Microwaves may be to blame for kick-starting the obesity epidemic, a UK scientist suggests. http://news.bbc.co.uk/1/hi/health/6725775.stm

  17. செம்பருத்திப்பூவில் தங்கச்சத்து உள்ளது. பூவின் மொத்த எடையில் 4ல் ஒரு பாகம் தங்கச்சத்து உள்ளது. செம்பருத்திப்பூக்களைப் பக்குவப்படுத்தி சாப்பிட்டால், தங்கச்சத்தின் பலனைப் பெறமுடியும். செம்பருத்திப்பூ உஷ்ண நிவாரணி. கல்லீரல், இருதயம், மூத்திரப்பை வியாதிக்கும் கணைச்சூடு, எலும்புருக்கி, மேகக்காரிகை, வெள்ளை, வெட்டை, ரத்தப் பிரமியம், நீர்க்கடுப்பு, எரிச்சல், கல்லீரல் வீக்கம் முதலியவற்றிற்குச் சிறப்பான நிவாரணியாகும். ஐந்து செம்பருத்திப் பூக்களை அரை லிட்டர் தண்­ரில் போட்டு கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி மூன்று வேளை சாப்பிட்டால், காய்ச்சல், நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் குணமாகும். செம்பருத்திப்பூக்களை நூறு எண்ணிக்கையில் சேகரித்து 1,250 மில்லி நீரில் போட்டுக் காய்ச்சி 5…

    • 7 replies
    • 3.1k views
  18. கொழுப்பைக் கரைக்கும் தேங்காய்! தேங்காயில் உள்ள சத்துக்கள் என்ன? புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. தேங்காய் உள்பட தென்னை மரத்தின் வெவ்வேறு பாகங்களின் மருத்துவக் குணங்கள் என்ன? தேங்காய்ப் பால் உடல் வன்மைக்கு நல்லது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மரு…

  19. தமிழ் இலக்கியத்தில் சித்த மருத்துவம். சித்த வைத்தியம் தமிழ் வைத்தியமாகும். தொன்மையுள் தொன்மையான, நம் தமிழர்க்கே உரிய தனிச் சிறப்பு வாய்ந்தது. தமிழ் நாட்டுப் பண்டைச் சித்தர்கள் இதனைத் தமிழ் மொழியில் உருவாக்கித் தந்துள்ளார்கள். உண்மைத் தவநெறியில் பிறழாது உன்னத நிலையில் வாழ்ந்த சித்தர்கள் தங்கள் அருள் ஞான அறிவால் அதனை நன்குணர்ந்து மிகவும் துல்லியமாக கூறியுள்ளனர். அவர்கள் கூற்றுக்கள் அனுமானங்கள், அல்ல; மறுக்கமுடியாத அனுபவ உண்மைகள். நாளுக்கு நாள் மாறக்கூடியவைகள் அல்ல; நாள் எல்லைக்குள்ளும் நாழிகை வரையறைக்குள்ளும் தீர்க்கக் கூடியவை. இயற்கையில் கிடைக்ககூடிய எண்ணற்ற புல், பூண்டு,மரம்,செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, முதலியவைகளைத் கொண்…

    • 4 replies
    • 8.4k views
  20. பப்பாளி பழம் உடல் நலனுக்கு உகந்த சிறந்த பழம். இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இப்பழத்தை சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். வறண்ட மேல் தோலை அகற்றி, புதிய தோலை உருவாக்குகிற அற்புத சக்தி பப்பாளிக்கு உண்டு. முகம் பளபளப்பாக மாறணுமா? இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்! பப்பாளி பழத்தை வெட்டி கூழாக்கிக் கொள்ளுங்கள். இந்த கூழில் ஒரு டேபிள் ஸ்பூன் முல்தானி மட்டி- அரை டீஸ்பூன் கலந்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் மெதுவாகப்பூசி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு மிதமான சுடுநீரில் கழுவுங்கள். முகம் பளிச் என்று பிரகாசிக்கும். சில பெண்களின் முகம் கரடு முரடாகத்தெரியும். மென்மை கொஞ்சம் கூட இருக்காது. இதனால் சருமம் அழகற்றதாக மாறிவிடும். இந்த முரடான …

    • 14 replies
    • 6.8k views
  21. வயிற்றுவலி வந்தவுடன் சாப்பிட்டால் வலி உடனே நிற்கிறது என்ற விஷயம் சிந்தனைக்குரியது. உங்களுக்கு வயிற்றில் புண் இருப்பதற்கான அறிகுறியை இது வெளிப்படுத்துகிறது. சாப்பிட்ட உணவு ஜ“ரணமாகும் போது புண் சிறுகுடலின் முதல் பகுதியிலோ, நடுப்பகுதியிலோ இருந்தால் இரைப்பையிலிருந்து சிறுகுடலில் நுழையும் போது, இப்புண்ணில் படும்போது, சாப்பிட்ட உடன் நின்ற வலி மறுபடியும் வந்துவிடுகிறது. 18 வயதுக்குட்பட்டவருக்குப் பொதுவாக இந்த உபாதை ஏற்படுவதில்லை. உணவில் கட்டுப்பாடின்றி கண்டபடி தின்று கொண்டிருக்கும் வாலிப வயதினருக்கு அதிகமாய் இந்த உபாதை ஏற்படுகிறது. வயிற்றில் வாயு தடைபடாதிருக்கவும், இரைப்பை முதலியவற்றின் சவ்வின் மேல் பாதிப்பு ஏற்படாதிருக்கவும் மென்மை ஏற்படவும் நெய்ப்பு தேவைப்படுகிறது. எண்ணெய…

    • 4 replies
    • 4.1k views
  22. நீரிழிவு நோய் வராமல் தடுக்க வேண்டுமா? அப்படியானால், இளைய வயதில் இருந்தே யோகா செய்யுங்கள், எதுவும் உங்களை அண்டாது என்பதை ஏற்காதவர்கள் இல்லை. நமக்கு எல்லாமே, உள்ளூரில் சொன்னால், கடவுள், பூதம் என்று ஒதுக்கி விடுகிறோம்; ஆனால், மேற்கத்திய நாடுகளில் செய்வதை பார்த்து செய்யும் போது தான், அடடா! இது நம் பெரியவர்கள் கற்றுத்தந்த முறை தானே...' என்று புத்தி வருகிறது. அப்படித் தான் யோகா என்ற அற்புத உடற்பயிற்சி முறை, நம்மால் தோற்றுவிக்கப்பட்டது என்பது இப்போது தான் பலருக்கும் புரிகிறது. பதஞ்சலி என்ற மாமுனிவர், சிவனுக்கு கற்றுத்தந்தது தான் யோகக்கலை என்று தான் புராணங்கள் சொல்கின்றன. அந்த யோகா தான், இப்போது பலரை கோடீஸ்வரராக்கி உள்ளது. அந்த அளவுக்கு அது வியாபாரப் பொருளாகி விட்டது. பதஞ…

  23. உலகின் பல்வேறு நாடுகளில் கருஞ்žரகமும் அதன் எண்ணெய்யும் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதிலிருந்து கருஞ்žரகத்தின் மருத்துவப் பயன்களை எவராலும் மறுக்க முடியாது என்பதை உணர முடிகிறது. மனித உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கக் கூடிய ஆற்றல் பராகா (கருஞ்žரக) எண்ணெய்க்கு உண்டு, பராகா எண்ணெய்யை உண்டு. பராகா எண்ணெய்யை அரை டீஸ்பூன் எடுத்து அதே அளவுள்ள தேனுடன் கலந்து தினமும் சாப்பிட்டால் வாழ்நாள் முழுவதும் நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ முடியும். டாக்டரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. உடலுக்கு நோய் வந்துவிட்டால், நோயைக் கட்டுப்படுத்த பராகா (கருஞ்žரக எண்ணெய்) மிகவும் உதவும், நோய்க்கு ஏற்றாற்போல் வெந்நீர், பால், பழச்சாறு ஆகியவற்றுடன் இந்த எண்ணெய்…

    • 6 replies
    • 4.5k views
  24. உடல் கட்டுப்பாடு உடல் பருமனைக் குறைப்பது எப்படி? 1. கார்போஹைட்ரேட் அதிகமுள்ள கோதுமை, சோளம், பார்லி போன்றவற்றின் அளவை உங்கள் உணவில் அதிகப்படுத்தவும். 2. மைதா மற்றும் மைதா வகை உணவுகளான ரொட்டி, நூடுல்ஸ் போன்றவற்றை உங்கள் தினசரி உணவுகளிலிருந்து தவிர்க்கவும். 3. கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளை தவிர்க்கவும். அசைவ உணவுகளே பெரும்பாலும் கொழுப்பின் உற்பத்திக் காரணிகளாக விளங்குகின்றன. வெண்ணெய், நெய், வனஸ்பதி, தேங்காய் போன்றவற்றில் உள்ள கொழுப்பு அமிலங்களே நம் உடம்பில் கொழுப்பாகவும் வளர்சிதை மாற்றம் அடைகின்றன. 4. நீங்கள் உட்கொள்ளும் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும். 5. பச்சை காய்கறிகளையும், பழங்களையும் அதிகம் எடுத்துக் கொள்ளவும். இவை உங்களுக்குத் தேவை…

    • 36 replies
    • 5.4k views
  25. ‘‘பல்லுப் போனால் சொல்லுப் போச்சு!’’ என்பது பழைய மொழி! ‘‘பல்லுப் போனால் தன்னம்பிக்கை போச்சு!’’ என்பதுதான் உண்மையான ‘பல்’ மொழி! நல்ல, உறுதியான, சுத்தமான, வெண்மையான பல் வரிசை −ருந்தால், எங்கேயும் எப்போதும் புன்னகை அரசியாய், உற்சாகமாய் நீங்கள் வளைய வரலாம். நிறமிழந்த பற்களையும் டாலடிக்க வைக்கும் நவீன சிகிச்சைகள் பற்றித் தெரிந்து கொள்வோமா? ‘‘நான் நல்லாதான் பல் தேய்க்கிறேன். ஆனா பல் வரிசை பளிச்சுன்னு மின்ன மாட்டேங்குதே! −ப்ப ஏதோ புதுசா ப்ளீச்சிங் டெக்னிக் வந்துருக்காமே! அதை செஞ்சு விடுங்க டாக்டர்’’ என்று வரும் −ளம்பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிவிட்டது. எஸ்.. டூத் ப்ளீச்சிங் செய்தால், பற்களை அரை மணி நேரத்திலேயே முத்துப் போல பிரகாசிக்க செஞ்சுடலாம் தான். ஆனால்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.